நாளை திரையுலக உண்ணாவிரதப் போராட்டம்.. அனைத்து சங்கங்களும் பங்கேற்கின்றன!

சென்னை: க்யூப், யுஎப்ஓ நிறுவனங்களுக்கு எதிராக திரையுலகினர் அறிவித்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைத்து சினிமா அமைப்புகளும் பங்கேற்கின்றன.

நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

All trade bodies will attend hunger strike against Qube, UFO

தமிழ்த் திரையுலகிற்கு மிகுந்த பொருளாதார சிரமத்தை கொடுத்து வரும் க்யூப், யு.எப்.ஓ மற்றும் பி.எக்ஸ்.டி போன்ற டிஜிட்டல் நிறுவனங்களிடம் அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறது.

தமிழ்த் திரையுலக உரிமைகளை மீட்டெடுக்க தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தவறாமல் கலந்துக் கொண்டு, ஒத்துழைப்பு தருமாறு தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.

நாளை நடக்கும் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து சங்கங்களும் போராட்டத்தில் பங்கேற்பதாகவும் அறிவித்துள்ளன.

 

மேக்கப் மேனுக்கு பல்சர் பைக் வாங்கிக் கொடுத்த அஜீத்!

தனது மேக்கப் மேனுக்கு பல்சர் பைக் வாங்கிக் கொடுத்து சந்தோஷப்படுத்தியுள்ளார் நடிகர் அஜீத்குமார்.

அஜீத் பலருக்கும் கல்வி, மருத்துவ உதவிகளைச் செய்து வருகிறார். இவை தவிர, மேலும் பல உதவிகளை சத்தமின்றி செய்து வருகிறார்.

Ajith presents pulser bike to makeup artist

சமீபத்தில் தன் வீட்டில் பணியாற்றுகிறவர்களுக்கு சென்னை அருகே நிலம் வாங்கி வீடுகள் கட்டி கொடுத்தார். தோட்டக்காரர், சமையல்காரர், டிரைவர் உள்ளிட்டோருக்கு இந்த வீடுகளை கட்டி கொடுத்தார். கிரகப்பிரவேசம் செய்து அந்த வீடுகளில் அவர்கள் குடியேறி இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து அஜீத் வீட்டுக்கு வந்து வேலை செய்துவிட்டுப் போக தனி வாகன வசதியும் செய்து தந்துள்ளார்.

தற்போது தனது மேக்கப் கலைஞர்களுக்கு புதிதாக பல்சர் பைக் வாங்கி கொடுத்துள்ளார். அப்படி பைக் பரிசு பெற்ற ஒரு மேக்கப்மேன் அந்த பைக் படத்தை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

 

இந்தியா பாகிஸ்தான் விமர்சனம்

-எஸ் ஷங்கர்

Rating:
3.0/5

நடிகர்கள்: விஜய் ஆன்டனி, சுஷ்மா, பசுபதி, ஜெகன், எம்எஸ் பாஸ்கர், மனோபாலா

ஒளிப்பதிவு: என் ஓம்

இசை: தீனா தேவராஜன்

தயாரிப்பு: பாத்திமா விஜய் ஆன்டனி

இயக்கம் என் ஆனந்த்

நான், சலீம் என இரு சீரியஸ் படங்களுக்குப் பிறகு விஜய் ஆன்டனி நடித்திருக்கும் முதல் காமெடிப் படம் இந்தியா பாகிஸ்தான். முதல் இரு படங்களைப் போலவே தனக்கான கதையைத் தேர்வு செய்ததில் வெற்றிப் பெற்றிருக்கிறார் விஜய் ஆன்டனி.

India Pakistan Review

இரண்டரை மணி நேரம் குற்றம் குறைகளைக் கண்டுகொள்ளாமல் பார்வையாளர்களைச் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

விஜய் ஆனந்தும் சுஷ்மாவும் வழக்கைத் தேடியலையும் வக்கீல்கள். ஒரு புதிய அலுவலகம் அமைக்க இடம் தேடி அலையும் இருவரும் புரோக்கர் ஜெகன் மூலம் ஒரு வீட்டைப் பிடித்து பாதி பாதியாகப் பிரித்துக் கொண்டு அலுவலகங்களை அமைக்கிறார்கள். அப்போதுதான் இருவருமே வக்கீல்கள் என்பதை ஒருவருக்கொருவர் தெரிந்து கொள்கிறார்கள். அங்கே ஆரம்பிக்கிறது முட்டலும் மோதலும். யாருக்கு முதலில் வழக்கு கிடைத்து வெற்றி பெறுகிறார்களோ, அவர்களுக்கே அந்த அலுவலகம் முழுசாக சொந்தம், மற்றவர் வெளியேறிவிட வேண்டும் என்பது பந்தயம்.

அப்போதுதான் பசுபதி - எம்எஸ் பாஸ்கரின் நிலப் பஞ்சாயத்து இந்த இருவரின் கைக்கும் வருகிறது. பசுபதிக்கு விஜய் ஆன்டனி வக்கீல். எம்எஸ் பாஸ்கருக்கு சுஷ்மா.

இருவரும் வழக்குக்காக மோதிக் கொள்ளும்போது, மெல்லியதாக காதல் பூக்கிறது. ஆனால் விஜய் ஆன்டனி சொதப்பிவிடுகிறார். மீண்டும் இருவருக்கும் மோதல். அப்போதுதான் ஒரு என்கவுன்டர் விவகாரம் இருவரையும் துரத்துகிறது. அதில் இவர்களின் க்ளையன்ட்களான பசுபதி, எம்எஸ் பாஸ்கர், அவர்களின் கோஷ்டிகளும் சிக்கிக் கொள்ள, எப்படி மீண்டார்கள், நாயகனும் நாயகியும் காதலில் சேர்ந்தார்கள் என்பது க்ளைமாக்ஸ்.

India Pakistan Review

விஜய் ஆன்டனி நகைச்சுவையாக நடிக்க முயன்றிருக்கிறார். ஆனால் முழு

வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் அந்தக் குறையை ஜெகனும் மனோபாலாவும் பசுபதியும் எம்எஸ் பாஸ்கரும், ஆமக்குஞ்சு யோகி பாபுவும், காளியும் சரிகட்டுகிறார்கள். டூயட் காட்சிகளில் பரவாயில்லை. வசன உச்சரிப்பில் ரஜினி ஸ்டைலையே இதிலும் தொடர்கிறார்.

சுஷ்மா நல்ல அறிமுகம். தமிழில் ஒரு சுற்று வர வாய்ப்பிருக்கிறது. விஜய் ஆன்டனியிடம் காதல் வயப்பட்டுப் பேசும் அந்த இரண்டு நிமிடங்களில் பலே நடிப்பு.

பசுபதி, எம்எஸ் பாஸ்கர், மனோபாலா உள்ளிட்ட நகைச்சுவைப் பட்டாளம் படத்தை ரொம்பவே லைவாக வைத்துக் கொள்கிறது.

ஓமின் ஒளிப்பதிவு ஓஹோ... ஆனால் அந்த ஓஹோவை தீனா தேவராஜின் இசைக்குப் போட முடியவில்லை. காமா சோமாவென பாடல் வரிகள் கடுப்பேற்றுகின்றன.

முதல் பிரேமிலிருந்து கடைசி காட்சி வரை ரசிகர்கள் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் இயக்குநரின் ஒரே நோக்கம் என்பது காட்சிகளில் தெரிகிறது. அதே நேரம் சில காட்சிகள் சவசவவென்று சாதாரணமாகப் போகின்றன.

ஒரு நிலத்தகராறு நீதிமன்றப் படியேறினால் எப்படி ஆயுள் முழுக்க இழுத்தடிக்கும் என்பதை போகிற போக்கில் சொல்வது சிறப்பு.

India Pakistan Review

அந்த மால் சேஸிங்கும், க்ளைமாக்ஸும் பக்கா சுந்தர் சி பாணி. கலகலப்பாக நகர்கின்றன. அந்த சிடியை வைத்துக் கொண்டு படு புத்திசாலித்தனமாக ஏதோ ஒன்றை செய்யப் போகிறார்கள் என்று பார்த்தால்.. புஸ்ஸாகிவிடுகிறது.

முதல் படத்திலேயே மக்களைச் சிரிக்க வைப்பதில் வெற்றி கண்டிருக்கிறார் இயக்குநர் ஆனந். அதற்காகவே குறைகளைக் கண்டும்காணாமல் படத்தை ரசிக்கலாம்!

 

நீ இல்லன்னா முழுமையடையாது.. ஹன்சிகா, வாம்மா 'அரண்மனை'க்கு!

சுந்தர் சியின் அரண்மனை 2 படத்திலும் பேயாக வருகிறார் ஹன்சிகா. இதன் மூலம் நான்காவது முறையாக சுந்தர் சி படத்தில் நடிக்கிறார் அவர்.

ஏற்கெனவே சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘தீயா வேலை செய்யனும் குமாரு', ‘அரண்மனை', ‘ஆம்பள' உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

Hansika joins with Aranmanai 2 team

இந்தப் படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட். ‘அரண்மனை' படத்தில் வினய், சந்தானம், ஹன்சிகா, லட்சுமிராய், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த ஆண்டு வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்த வெற்றியை தொடர்ந்து ‘அரண்மனை' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளார் சுந்தர். இதில் சித்தார்த் நாயகனாகவும் த்ரிஷா நாயகியாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஹன்சிகா இந்தப் படத்தில் இல்லை என்று கூறப்பட்டது.

ஆனால் இப்போது ஹன்சிகாவும் நடிக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்த ஹன்சிகா கூறுகையில், "நான்காவது முறையாக என் மனம் கவர்ந்த இயக்குனர் சுந்தர் சியுடன் இணைகிறேன். மீண்டும் அரண்மனை, மிகப்பெரிய ஸ்டார் டீம்' என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இவருக்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ள சுந்தர்.சியின் மனைவி குஷ்பு, 'நீ இல்லாமல் இப்படம் முழுமை அடையாது..,' என்று கூறியுள்ளார்.

 

அப்படியே அள்ளிச்சிருச்சாமே நிஜமா? பொய்யா?

இப்ப ரிலீஸ் அப்ப ரிலீஸ் என்று சொல்லிக்கொண்டே போகும் படத்தின் சேட்டிலைட் உரிமையை சூரிய தொலைக்காட்சி நிறுவனம் வாங்கியுள்ளதாம். நடிகருக்காக இல்லாவிட்டாலும் நடிகைக்காகவே அந்த படத்தின் சேட்டிலைட் உரிமம் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டதாம். படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று தெரியவில்லை. சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்கப்பா... இல்லைன்னா இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக திரைக்கே வராத படம் ஒளிபரப்பாகிறது என்று முன்னோட்டம் போட்டுவிடுவார்கள் என்று நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள் ட்விட்டர்வாசிகள்.

ஒளி நடிகரின் படத்தையும் வாங்கிருச்சாமே

ஒளி நடிகரின் மனைவியான ஒளி மயமான நடிகை சினிமாவிற்கு ரீ என்ட்ரி ஆகியுள்ள படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை அவரது கணவரே தயாரிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விசயமே. ஆனால் தெரியாத விசயம் இந்தப்படத்தையும் சூரிய தொலைக்காட்சியே வாங்கியுள்ளதாம். இந்த படத்தை வாங்க நட்சத்திர டிவி முட்டி மோதியது. ஆனால் சூரிய ஒளியோடு, ஒளி இயக்குநர் ஐக்கியமாகிவிட்டாராம். அதேபோல ஒளி நடிகர் தயாரிக்கும் கிங் இயக்குநரின் குழந்தைகள் படத்தையும் சூர்ய தொலைக்காட்சியே அள்ளிவிட்டதாம். எது எப்படியே ஒளி நடிகருக்கு டபுள் ட்ரீட் கிடைத்துவிட்டது. காரணம் எல்லாம் ஓசி ப்ரோமோதான் என்கின்றனர்.