மீடியாக்காரர்களை ஹன்சிகா ஏன் தவிர்க்கிறார் தெரியுமா?

சென்னை: பிரஸ் மீட், ஆடியோ விழா, பிரஸ் ஷோ... என எதிலுமே தலை காட்டுவதில்லை ஹன்சிகா. ஷூட்டிங் ஸ்பாட்டில் மீடியாக்காரர்களைப் பார்த்தால் கூட கேரவனுக்குள்ளேயே பதுங்கிவிடுகிறார் ஹன்சி.

ஏன்?

எப்போது பார்த்தாலும் சிம்புவுடான காதல் முறிவு பற்றியே அதிகம் கேள்விகள் கேட்கிறார்களாம் செய்தியாளர்கள்.

வாலு, வேட்டை மன்னன் ஆகிய படங்களில் நடிக்கையில் சிம்புவும், ஹன்சிகாவும் காதலித்தார்கள். படப்பிடிப்பு முடிவதற்குள் அவர்களின் காதல் முறிந்துவிட்டது. தான் ஏன் ஹன்சிகாவை பிரிந்தேன் என சிம்பு அறிக்கை வெளியிட்டார். ஆனால் இது குறித்து ஹன்சிகா எதுவும் கூறவில்லை.

மீடியாக்காரர்களை ஹன்சிகா ஏன் தவிர்க்கிறார் தெரியுமா?

இந்நிலையில் ஹன்சிகா பத்திரிக்கையாளர்களை சந்திக்கும்போது எல்லாம் அவரிடம் சிம்புவுடனான காதல் முறிவு பற்றிய கேள்விகள் கேட்கப்படுகிறது. அதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் இருந்த ஹன்சிகாவுக்கு புது தலைவலி வேறு ஏற்பட்டுள்ளது.

ஹன்சிகாவின் குளியலறை காட்சி வீடியோ இணையதளத்தில் வெளியானது. அந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல என்று ஹன்சிகா விளக்கம் அளித்துள்ளார். போலி வீடியோ பற்றி எதற்காக போலீசில் புகார் செய்ய வேண்டும் என்று ஹன்சிகா தெரிவித்துள்ளார்.

காதல் முறிவு, குளியல் வீடியோ கேள்விகளை எதிர்கொள்ளாமல் இருக்க வேண்டி ஹன்சிகா பத்திரிக்கையாளர்களை சந்திப்பதைத் தவிர்த்து வருகிறாராம்.

 

"ரஸ்க்" சாப்பிட ஆசைப்பட்டு "ரிஸ்க்" எடுக்க விரும்பாத நடிகர்...!

மும்பை: இந்திப்படப் பிடிப்பின் போது வாரிசு நடிகைக்கு முன்னணி நடிகர் ஒருவர் லிப் டூ லிப் தர மறுத்தது தான் பாலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

கரும்புத் தின்னக் கூலி கேட்கிறாரே... பிழைக்கத் தெரியாத மனுஷன் என ஒருபுறம் ஆதங்கங்களும், மறுபக்கம், திருமணமாகியது முதல் மனைவி சொல்லே மந்திரம் என வாழ்கிறார் என நடிகருக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. ஆனால், உண்மை நிலை இது இல்லை என்கின்றனர் விசயம் தெரிந்தவர்கள்.

திருமணத்திற்குப் பிறகு ஹீரோயினுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என ஹீரோ சொல்லி இருந்தது உண்மை தானாம். ஆனால், கதைக்கு இந்த முத்தக்காட்சி கட்டாயம் தேவை என இயக்குநர் சொன்னதால் நடிகர் சம்மதம் தெரிவித்திருந்தாராம்.

இந்நிலையில், சமீபத்தில் பிரபல நடிகை ஒருவர் ‘பிக் 'பீவரால் பாதிக்கப்பட்டார். இதனால் பாலிவுட்டில் பலரும் சற்று பீதியில்தான் இருக்கிறார்களாம். இந்த நிலையில்தான் இந்த முத்தப் பிரச்சினை சம்பந்தப்பட்ட நடிகருக்கு வரவே அவர் யோசித்துள்ளார். வாரிசு நடிகை ஆரோக்கியமாகத் தான் இருக்கிறார் என்றபோதும், "ரஸ்க்" சாப்பிட ஆசைப்பட்டு "ரிஸ்க்" எடுக்க விரும்பவில்லையாம் நடிகர்.

அதனால் தான் முத்தத்திற்கு நோ சொன்னாராம்!

 

இணையத்தைக் கலக்கும் இந்தப் பாட்டி யார் என்று தெரியுதா?

இந்தப் படத்தில் உள்ள பாட்டியைத் தெரிகிறதா... யெஸ்.. ராகவா லாரன்ஸ்தான்.

காஞ்சனா 2 படத்தில் அவர் போடும் கெட்டப்புகளில் இந்த சூனியப் பாட்டி வேடமும் ஒன்று.

வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள காஞ்சனா 2 படத்தின் பர்ஸ்ட் லுக் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

அடுத்த நாளே அந்தப் படத்தின் இன்னொரு ஸ்டில் வெளியானது. அதில் ராகவா லாரன்ஸ் மிக வித்தியாசமாக ஒரு சூனியக்கார கிழவி மாதிரி வேடத்தில் தோன்றி மிரட்டுகிறார்.

இணையத்தைக் கலக்கும் இந்தப் பாட்டி யார் என்று தெரியுதா?

இந்த போட்டோதான் இப்போது சமூக வலைத் தளங்களில் பரபரவென பரவிக் கொண்டுள்ளது.

காஞ்சனா படத்தில் நான்கு வேடங்களில் நடித்துள்ளார் ராகவா லாரன்ஸ். அவருக்கு ஜோடியாக டாப்சி நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் தோன்றுகிறார் அட்சலி.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ராகவா லாரன்ஸ். தெலுங்கிலும் தமிழிலும் ஒரே நேரத்தில் படம் வெளியாகிறது. தமிழுக்கு இணையாக தெலுங்கிலும் படத்துக்கு வியாபாரம் பேசப்பட்டு வருகிறது.

 

தடைகள் கடந்து மார்ச் 20-ல் 'இரவும் பகலும் வரும்'!

இரு வாரங்களுக்கு முன்பே வருவதாக அறிவிக்கப்பட்ட இரவும் பகலும் வரும் படம், வரும் மார்ச் 20 ம் தேதி வெளியாகிறது.

எஸ். தணிகைவேல் வழங்கும், ஸ்கை டாட் பிலிம்ஸ் பாலசுப்ரமணியம் பெரியசாமி அவர்களின் தயாரிப்பில், பாலா ஸ்ரீராம் இயக்கத்தில், "அங்காடி தெரு" மகேஷ் மற்றும் அனன்யா நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் "இரவும் பகலும் வரும்".

வில்லனாக ஏ.வெங்கடேஷ், மற்றும் நகைச்சுவைக்கு ஜெகன், சாமிநாதன் என பலர் நடித்துள்ளனர்.

தடைகள் கடந்து மார்ச் 20-ல் 'இரவும் பகலும் வரும்'!

படத்தின் இயக்குனர் பாலஸ்ரீராம் பிரபல இயக்குனர் ஏ.வெங்கடேஷ் அவர்களிடம் உதவி இயக்குனராக பல படங்களில் பணியாற்றியவர்.

பொறியியல் படிக்கும் ஒரு கல்லூரி மாணவன், எல்லோரும் மதிக்கும் வகையில் நன்முறையில் நடந்து கொள்ளும் நற்பண்புகளை கொண்டவன்.

தடைகள் கடந்து மார்ச் 20-ல் 'இரவும் பகலும் வரும்'!

காலையில் கல்லூரிக்கு செல்லும் கதாநாயகன், இரவில் மட்டும் திருடனாய் உலாவுகிறான். அவன் ஏன் திருடனானான்? எதற்காக திருடுகிறான் என்பதே "இரவும் பகலும் வரும்" படத்தின் கதை. தீனா இசையமைத்துள்ளார்.

இப்படம் திரையிடுவதை நிறுத்த கோரி தொடரப்பட்ட வழக்கில் வென்ற படத் தயாரிப்பு தரப்பு, வரும் மார்ச் 20ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் இப்படத்தை திரையிட முடிவுசெய்துள்ளது.

 

முதல் முறையாக பிரசாந்துக்கு ஜோடியாகிறார் த்ரிஷா

த்ரிஷா முதல் முதலில் நடிகையாக அறிமுகமானது பிரசாந்தின் ஜோடி படத்தில்தான். அதில் ஒரு சின்ன வேடத்தில் வந்தார். அதன் பிறகுதான் மவுனம் பேசியதே படம் நடித்தார்.

முதல் படம் பிரசாந்துடன் என்றாலும், அதில் அவருக்கு ஜோடியாக நடிக்கவில்லை த்ரிஷா. சிம்ரன்தான் ஜோடி.

முதல் முறையாக பிரசாந்துக்கு ஜோடியாகிறார் த்ரிஷா

கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பிரசாந்த் படத்தில் நடிக்கிறார் த்ரிஷா. இந்த முறை அவருடன் முதல் முறையாக ஜோடி சேருகிறார்.

பாலிவுட்டில் பெரும் பாராட்டுகளைக் குவித்த ஸ்பெஷல் 26 என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில்தான் இருவரும் இணைகிறார்கள்.

அக்ஷய்குமார்-காஜல் அகர்வால் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான படம் ஸ்பெஷல் 26. இப்படம் பாலிவுட்டில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இப்படத்தின் தென்னக உரிமையை இயக்குனரும், நடிகருமான தியாகராஜன் பெற்றுள்ளார். இதையடுத்து, இப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார்.

இப்படத்தின் தமிழ் பதிப்பில் நடிகர் பிரசாந்தும், தெலுங்கு பதிப்பில் ரவிதேஜாவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 'ஸ்பெஷல் 26' இந்தி படத்தில் காஜல் அகர்வால் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை த்ரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பத்து வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் த்ரிஷா, இதுவரை பிரசாந்துக்கு ஜோடியாக நடித்ததில்லை. இந்தப் படம் மூலம் முதல் முறையாக இருவரும் ஜோடி சேர்கின்றனர்.

த்ரிஷாவின் திருமணத்துக்கு முன்பே இந்தப் படத்தை முடித்துவிட தியாகராஜன் திட்டமிட்டுள்ளாராம்.

 

நாகார்ஜுனா- கார்த்தி படம்: க்ளாப் அடித்து தொடங்கி வைத்தார் சிவகுமார்

தமிழ் - தெலுங்கில் நாகார்ஜூனா, கார்த்தி இணைந்து நடிக்கும் புதிய படத்தை தொடங்கி வைத்தார் நடிகர் சிவகுமார்.

தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா, தமிழ் நடிகர் கார்த்தி இருவரும் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார்கள். வம்சி இயக்கும் இந்த இரு மொழிப் படத்தை பி.வி.பி. சினிமாஸ் தயாரிக்கிறது.

நாகார்ஜுனா- கார்த்தி படம்: க்ளாப் அடித்து தொடங்கி வைத்தார் சிவகுமார்

இப்படத்தின் தெலுங்கு பதிப்பின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் தொடங்கியது. இந்த படப்பிடிப்பு நாகர்ஜூனாவின் மனைவியும், நடிகையுமான அமலா கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், தமிழ் பதிப்பின் படப்பிடிப்பு ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது. பூஜையுடன் தொடங்கிய இந்த படப்பிடிப்பை கார்த்தியின் அப்பாவும், நடிகருமான சிவகுமார் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.

நாகார்ஜுனா- கார்த்தி படம்: க்ளாப் அடித்து தொடங்கி வைத்தார் சிவகுமார்

இந்த விழாவில் கார்த்தி பேசுகையில், "நான் சிறு வயதிலிருந்தே ரசித்து பார்த்த நாகர்ஜூனாவிடம் இணைந்து நடிப்பது என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இத்தனை நாட்களாக ஒன்றுக்கு மேற்பட்ட நடிகர்களுடன் இணைந்து நடிப்பதை தவிர்த்து வந்தேன். இந்த படத்தின் கதை எனக்கு பிடித்துப் போனதால் உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன்," என்றார்.

நாகார்ஜுனா- கார்த்தி படம்: க்ளாப் அடித்து தொடங்கி வைத்தார் சிவகுமார்

இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன், விவேக் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

 

50% நாம்தான்.. மீதமுள்ள 50% நாம் உருவாக்கியதுதான்.. ராதிகாவின் சபாஷ் பேச்சு!

சென்னை: உலகத்தின் சரி பாதி பெண்கள் தான், மீதமுள்ள பாதியும் அவர்கள் உருவாக்கியது தான் என நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

உலக மகளிர் தினத்தையொட்டி, மார்ச் 8ம் தேதி ரெயின் டிராப்ஸ் சாதனைப் பெண்கள் 2015 விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு துறைகளில் சாதனைப் புரிந்த பெண்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப் பட்டது.

50% நாம்தான்.. மீதமுள்ள 50% நாம் உருவாக்கியதுதான்.. ராதிகாவின் சபாஷ் பேச்சு!

நடிகை ராதிகா சரத்குமார், பாடகி வாணி ஜெயராம், ஏ.ஆர்.ரெஹானா, பவதாரிணி, சின்னப்பொண்ணு உள்ளிட்டோருக்கு இந்த விழாவில் விருது வழங்கப் பட்டது.

சாதனைப் பெண்கள் விருது பெற்றது தொடர்பாக ராதிகா சரத்குமார் பேசுகையில், ‘பெண்கள் தன்னம்பிக்கையை மட்டும் ஒருபோதும் விட்டு விடக் கூடாது. இந்த ௨லகத்தின் சரி பாதியே நாம் தான். மீதமுள்ள பாதி நாம் உருவாக்கியது தான், எனவே துணிச்சலாக இருங்கள், நம்மால் எதுவும் முடியும் நம்புங்கள் வெற்றி நம் கையில்' என்றார்.

 

ராஜதந்திரம்- விமர்சனம்

-எஸ் ஷங்கர்

Rating:
3.5/5

நடிப்பு: வீரா, ரெஜினா, அஜய் பிரசாந்த், தர்புகா சிவா, பட்டியல் சேகர், ஆடுகளம் நரேன், இளவரசு

ஒளிப்பதிவு: கதிர்

இசை: ஜிவி பிரகாஷ் குமார்

பின்னணி இசை: சந்தீப் சவுதா

தயாரிப்பு: செந்தில் வீராசாமி

இயக்கம்: ஏஜி அமீத்

சின்ன பட்ஜெட், கச்சிதமான - புத்திசாலித்தனமான திரைக்கதை இருந்தால் போதும், எந்தப் படமும் பெரிய படம்தான் என்பதை உணர்த்தியிருக்கிறது, அறிமுக இயக்குநர் அமித்தின் ராஜதந்திரம்.

வீரா, அஜய் பிரசாந்த், ஆஸ்டின் டி கோஸ்டா மூவரும் அவ்வப்போது சின்னச் சின்ன திருட்டுகளைச் செய்பவர்கள்.

[ராஜதந்திரம் படங்கள்]

திவாலான ஒரு பைனான்ஸ் கம்பெனி முதலாளியின் திட்டப்படி ஒரு பெரிய நகைக்கடையை கொள்ளையடிக்க முயல்கிறார்கள் (பைனான்ஸ் கம்பெனி திவாலாக இந்த நகைக் கடை முதலாளிதான் காரணம்).

ராஜதந்திரம்- விமர்சனம்

திருடப் போகும் அந்தக் கடையின் முதலாளியிடமே தங்கள் கொள்ளைத் திட்டத்தை விவரமாகச் சொல்கிறார்கள். அப்போது தொடங்கும் விறுவிறுப்பான ராஜதந்திர நகர்வுகளில் யார் வெல்கிறார்கள் என்பது மீதிக் கதை.

ஆரம்பத்திலிருந்தே நகைச்சுவையும் விறுவிறுப்பும் கலந்து கட்டி வரும் காட்சிகள் படத்தை கடைசி வரை சுவாரஸ்யமாக ரசிக்க உதவுகின்றன. இதுதான் படத்தின் மிகப் பெரிய ப்ளஸ். குறிப்பாக அந்த நகைக் கடை கொள்ளைத் திட்டம் அடேங்கப்பா ரகம். இது இயக்குநரின் அசல் சிந்தனை என்றால் அதற்கு நிச்சயம் ஒரு சபாஷ் போட வேண்டும்.

நாயகனாக நடித்துள்ள வீரா இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். ஒரு ஹைடெக் கொள்ளைக்காரனாகவே மாறியிருக்கிறார் படத்தில்.

ராஜதந்திரம்- விமர்சனம்

நாயகியாக வரும் ரெஜினாவுக்கு வாய்ப்பு குறைவாக இருந்தாலும், ஏற்ற வேடத்துக்கு பங்கமில்லாமல் நடித்துள்ளார்.

படத்தின் குறிப்பிடத்தக்க பாத்திரம் நகைக்கடை முதலாளியாக வரும் பட்டியல் சேகர்தான். மனிதர் அச்சு அசலாக நகைக் கடை முதலாளியைப் பிரதிபலிக்கிறார்.

வீராவின் நண்பர்களாக வருபவர்கள், பைனான்ஸ் கம்பெனி நடத்துபவராக வரும் நரேன், அவருக்கு உதவும் இளவரசு.. இப்படி அனைவருமே உணர்ந்து நடித்துள்ளனர்.

ராஜதந்திரம்- விமர்சனம்

படத்தின் சில குறைகள் இருந்தாலும் அவை கதையின் ஓட்டத்துக்கு தடையாக இல்லை என்பது இன்னொரு ப்ளஸ்.

காட்சிகளை பெரும்பாலும் நம்பகத் தன்மையோடு காட்டியவர்கள், போலீஸ் விஷயத்தில் மட்டும் ஏன் இத்தனை அலட்சியமாக காட்சிகளை அமைத்தார்கள்?

ராஜதந்திரம்- விமர்சனம்

அதேபோல, நகைக்கடை கொள்ளையடிக்கப் போவது தெரிந்து அந்த முதலாளி நடந்து கொள்ளும் விதம் அத்தனை புத்திசாலித்தனமாக இல்லையே..

ஆனால் முதலாளியின் மச்சான் இப்படித்தான் செய்வான் என கணிக்கும் நாயகனின் புத்திசாலித்தனம் ரசிக்க வைக்கிறது.

ராஜதந்திரம்- விமர்சனம்

சந்தீப் சவுதாவின் பின்னணி இசை காட்சிகளை மேலும் விறுவிறுப்பாக்குகிறது. ஜிவி பிரகாஷின் இசையில் பாடல்கள் அப்படி ஒன்றும் சிலாகிக்கும்படி இல்லை.

எஸ்ஆர் கதிரின் ஒளிப்பதிவு இந்தப் படத்துக்கு பெரிய பலம்.

திரைக்கதை, காட்சிகளை அமைத்த விதத்தில், இயக்குநர் அமித் முதல் படத்திலேயே வெற்றி பெற்றிருக்கிறார். தொடரட்டும்!

 

செல்லத்தின் மறைவால் துக்கம் நெஞ்சை அடைக்கிறது: ஷாருக்கான்

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தான் ஆசையாக வளர்த்த நாய் இறந்துவிட்டதால் கவலையில் உள்ளார்.

அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் ஷாருக்கான் தற்போது ஃபேன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் ஆசையாக வளர்த்த ஜப்பானைச் சேர்ந்த நாய் இறந்துவிட்டது. டாஷ் என்று பெயரிடப்பட்டிருந்த அந்த நாய் ஷாருக்கின் குடும்பத்தில் ஒருவராக இருந்தது. அதன் மீது அனைவரும் அதிக அன்பு வைத்திருந்தனர்.

செல்லத்தின் மறைவால் துக்கம் நெஞ்சை அடைக்கிறது: ஷாருக்கான்

டாஷின் பிரிவால் ஷாருக்கானின் குடும்பத்தார் கவலையில் உள்ளனர். டாஷ் இறந்துவிட்டதை நினைத்தால் தனக்கு நெஞ்சடைப்பதாக ஷாருக்கான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் ஷாருக் மட்டும் அல்ல பல நடிகர், நடிகைகள் தாங்கள் வளர்க்கும் நாய் மீது உயிரையே வைத்துள்ளனர். முன்னதாக சல்மான் கான் தனது உடல்நலம் பாதிக்கப்பட்ட நாயை பார்க்க படப்பிடிப்பையே ரத்து செய்தார்.

அண்மையில் நடிகர் ஷாஹித் கபூர் நாய் ஒன்றை வாங்கியுள்ளார். நடிகைகள் அனுஷ்கா சர்மா, பிபாஷா பாசு, சோனாக்ஷி சின்ஹா ஆகியோரும் நாய் வளர்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பாலாவின் தாரைதப்பட்டை படபிடிப்பில் விபத்து... ஹீரோ சசிகுமாருக்கு கை முறிந்தது!

இயக்குனர் பாலா எழுதி இயக்கி வரும் 'தாரை தப்பட்டை' படத்தில் எம் சசிகுமார், வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படபிடிப்பு சென்னையில் துவங்கி தொடர்ந்து தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுபுர இடங்களிலும் படமாக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக நடிகர் சசிகுமார் வில்லனுடன் மோதும் ஆக்ரோஷமான சண்டைக் காட்சி படமாக்கப்பட்டு வந்தது.

பாலாவின் தாரைதப்பட்டை படபிடிப்பில் விபத்து... ஹீரோ சசிகுமாருக்கு கை முறிந்தது!

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சண்டைக் காட்சியின் போது யாருக்கும் விபத்து ஏதும் நேர்ந்தால் உடனடியாக சிகிச்சை பெற மருத்துவர்கள் குழுவும், 2 ஆம்புலன்சும் தயார் நிலையில் இருந்தனர்.

இன்று படமாக்கப்பட்ட ஆக்ரோஷமான, அதிரடியான சண்டைக்காட்சி தொடர்ச்சியின் போது நடிகர் சசிகுமார் சற்றும் எதிர்பாரா வண்ணம் விபத்துக்குள்ளானார், அவரது இடது கை எலும்பு முறிந்தது.

உடனடியாக அங்கிருந்த மருத்துவ குழுவினர் உதவியோடு ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சைக்கு பின் M.சசிக்குமாரின் இடது கைக்கு மாவு கட்டு போடப்பட்டுபட்டது. சிறிது காலம் ஒய்வெடுக்கும் படி மருத்துவர்கள் சசிகுமாருக்கு அறிவுறுத்தியுள்ளதால் இயக்குனர் பாலா படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தியுள்ளார்.

சசிகுமார் ஒய்வெடுக்க மதுரை சென்றுள்ளார். படக்குழுவினர் சென்னை திரும்புகின்றனர்.

சசிகுமார் உடல்நலம் முழுமையாக குணமடைந்ததும் படப்பிடிப்பு துவங்கும்.

 

இயக்குநர் கே பாலச்சந்தர் பெயரில் அறக்கட்டளை.. ஆண்டு தோறும் சினிமா விருது

சென்னை: சமீபத்தில் மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தரின் பெயரில் அவரது குடும்பத்தினர் அறக்கட்டளை தொடங்கியுள்ளனர்.

இந்த அறக்கட்டளை மூலம், இனி ஆண்டு தோறும் அவர் பிறந்த நாளில் நாடக, சினிமா, தொலைக்காட்சி கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இதுகுறித்து இந்த அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும் பாலச்சந்தர் மகளுமான புஷ்பா கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

இயக்குநர் கே பாலச்சந்தர் பெயரில் அறக்கட்டளை.. ஆண்டு தோறும் சினிமா விருது

கடந்த வருடம் டிசம்பர் 23ம் தேதி இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் அவர்கள் அமரரான செய்தி கேட்டு பெருவாரியாக வந்து எங்கள் குடும்பத்தின் ஒரு அங்கத்தினராய் இணைந்து எனது தந்தைக்கு மரியாதை செலுத்தி வேண்டிய உதவிகள் செய்த பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எனது தந்தையின் தயாரிப்பு நிறுவனமான 'கவிதாலயா' விற்கு இத்தனைக்காலம் பெரும்பாலமாக இருந்து எங்களுக்கு ஆதரவு கொடுத்துவரும் உங்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி கூறவிழைகிறேன்.

எங்களது தந்தை கே. பாலசந்தர் அவர்களின் பெயரில் 'கே.பாலசந்தர் பவுண்டேஷன்' (K. Balachander Foundation) என்ற அறக்கட்டளை அமைப்பை ஏற்படுத்தியுள்ளோம்.

இந்த அமைப்பிற்கு கே.பியின் குடும்ப உறுப்பினர்களான ராஜம் பாலசந்தர், புஷ்பா கந்தசாமி, பிரசன்னா, கீதா கைலாசம், கந்தசாமி பரதன் இவர்களுடன் இயக்குனர் வசந்த் சாய் ஆகியோர் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இயக்குநர் கே பாலச்சந்தர் பெயரில் அறக்கட்டளை.. ஆண்டு தோறும் சினிமா விருது

இந்த அமைப்பின் மூலம் கீழ்கண்ட திட்டங்களை நாங்கள் விரைவில் முறையாக அனைத்து ஊடகங்களுக்கும் தகவல் அளித்துவிட்டு செயல்படுத்த உள்ளோம்.

1. கே.பி. அவர்களின் விருப்பபடி திரைப்படத் துறையைச் சேர்ந்த நலிந்த தொழிலாளிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவி.

2. ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரிகளில் Visual Communication துறையில் பயிலும் மாணவர்களில்சிறந்தவருக்கு கே பாலசந்தர் பெயரில் "Creative Excellence" விருது வழங்குதல்.

3. ஒவ்வொரு ஆண்டும் அவருடைய பிறந்த தினமான ஜுலை 9ல் விழா நடத்தி நாடகம், திரைப் படம், சின்னத் திரை ஆகிய மூன்று துறைகளில் சிறந்து விளங்கும் படைப்பாளிகளுக்கு விருது வழங்குதல்.

4. கே.பி அவர்களின் படைப்புகளை Digitize செய்து பாதுகாத்து அவரைப் பற்றிய எல்லா தகவல்களையும் ஆவனப்படுத்தி, எதிர்கால தலைமுறையினருக்கு பயன்தரக்கூடிய ஒரு கண்காட்சியகம் ஏற்ப்படுத்துதல்.

5. கே.பி அவர்களின் மகன் மறைந்த கைலாசம் அவர்கள் பெயரில் தொலைகாட்சித் துறையைச் சேர்ந்த ஒருவருக்கு சிறந்த படைப்பாளி விருது அளித்தல்.

6. கே.பி அவர்களைப் பற்றிய புத்தகங்களை வெளிக் கொணர்வது. அதில் முதல் புத்தகம் ஜுலை 9, 2015 அன்றுவெளிவர இருக்கிறது. இதை எழுதியவர் இயக்குனர் வசந்த் சாய்.

இது போன்ற பல பணிகளை மேற்கொள்ள உள்ளோம். எங்களது பணி சிறந்து விளங்கிட தங்களுடைய மேலானஒத்துழைப்பை வேண்டுகிறோம்.

-இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் புஷ்பா கந்தசாமி.

 

சங்கராபரணம் எனும் காவிய தரிசனம்...

-முத்துராமலிங்கன்

Muthuramalingan

சரியாய் முப்பத்தைந்து ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு நேற்று மீண்டும் ‘சங்கராபரணம்' படம் பார்த்தேன்.

படம் என்றா சொன்னேன்? மன்னியுங்கள் திருத்திக் கொண்டு இனி காவியம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறேன்.

'உங்களுக்கென்னய்யா பத்திரிகையாளர் காட்சிகளில் இலவசமாக சொகுசாக படம் பார்க்கிறீர்கள்?' என்று சீண்டும் நண்பர்கள் சிலர் எனக்குண்டு. கடந்த வாரம் எட்டுப் படம், இந்த வாரம் பதினோரு படம் என்று வருஷத்துக்கு சுமார் இருநூறு படங்கள் பார்ப்பதை, 'சொகுசாக' என்று சொல்பவர்கள், நண்பர்களாக இருந்தாலும் அவர்கள், நரகத்திற்குத்தான் போவார்கள்.

ஏனெனில் அந்த இருநூறு படங்களில் எண்பத்தைந்து சதவிகிதப்படங்கள் எங்களை அடித்துத் துவைத்து துவம்சம் பண்ணி கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி அழcவைப்பவை. 'இப்படத்தில் மிருகங்கள் எவையும் துன்புறுத்தப்படவில்லை' என்கிற உத்தரவாத அறிவிப்பு ஏனோ எப்போதும் மனிதர்களாகிய எங்களுக்கில்லை!

அவ்வகையான படங்களைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, பிரிவியூ தியேட்டரின் வாசலில் நிற்கும் இயக்குநர், நட்சத்திரங்களிடமிருந்து தப்பி பின்னங்கால் பிடறியில் பட ஓடும் அவஸ்தையை நீங்கள் என்றாவது அனுபவித்திருப்பீர்களா?' அதனால்தான் கண்டிப்பாக நீங்கள் நரகத்திற்குத்தான் செல்வீர்கள் என்று சொல்கிறேன்.

சினிமாக்காரன் சாலை 15: சங்கராபரணம் எனும் காவிய தரிசனம்...

காலம் எப்போதும் அப்படி கருணையற்றே இருப்பதில்லை என்பது போல நேற்று ‘சங்கராபரணம்' என்னும் காவியம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. 80-ல் தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட தென்னிந்தியா முழுமையும் தெலுங்கிலேயே ரிலீஸாகி திரையிட்ட இடங்களில் எல்லாம் ஓராண்டு காலம் ஓடிய படம் இது என்பது இன்றைய தலைமுறையினருக்கான செய்தி.

'என் வாழ்நாளில் நான் பாடி புண்ணியம் கட்டிக்கொண்ட படங்களின் பட்டியலில் முதன்மையான படம் என்று ‘சங்கராபரணம்' படத்தையே சொல்வேன்' என்பார் எஸ்.பி.பி. தற்போது மீண்டும் அத்தனை பாடல்களையும் எஸ்.பி.பியை பாடவைத்து, தமிழில் டப் செய்து வெளியிட்டிருக்கிறார்கள்.

படத்திரையிடலுக்கு முன்பாக...

'படத்தின் நீளத்தைக் கண்டிப்பாக குறைத்திருப்பார்கள்'

‘அப்ப ரசிச்ச படத்தை இப்ப ரசிக்க முடியுமா சார்?'

‘மியூசிக் ட்ரெண்ட் எங்கேயோ போயிருச்சி. கர்நாடக சங்கீதம், அதுவும் டஜனுக்கும் மேல பாட்டு....க்கூம் என்னத்தைச் சொல்ல?'

இப்படி சில ஆலாபனைகள் படம் பார்க்க வந்தவர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்தன.

ஆனால் துவங்கிய இரண்டாவது நிமிடமே என்னை சங்கர சாஸ்திரிகளிடம் இழுத்துக் கொண்டு போய் கட்டிப் போட்டார் இயக்குநர் கே.விஸ்வநாத். படம் ஓடிய 2 மணிநேரம் 23 நிமிடங்களும், நான் வாட்ஸ் அப் உலகின் மனிதன் என்ற நினைவு தப்பி, நான் 80 ஆம் ஆண்டு குட்டிப் பையனாய்த்தான் மாறிப் போனேன்.

சினிமாக்காரன் சாலை 15: சங்கராபரணம் எனும் காவிய தரிசனம்...

படத்தின் நடுவில் ஒரு கணம் குனிந்து பார்த்தபோது நான் என் ஸ்கூல் யூனிஃபார்மில் இருந்தேன். எனது பக்கத்து சீட்களில், பத்து ஆண்டுகளுக்கு முன்பே தவறிப்போன, எனது அம்மாவும் அப்பாவும் படம் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

இந்த அனுபவம் அலாதியானது அபூர்வமானது. இதை நீங்கள் நம்பவேண்டும் என்றோ புரிந்துகொள்ள வேண்டும் என்றோ நான் எதிர்பார்க்கவில்லை.

படத்தின் கதை குறித்து எழுதுவது அவசியம் என்று தோன்றவில்லை. அது ஒரு ஜீவநதியின் ஓட்டம் போலவே இருந்தது என்று மட்டும் சொல்லலாம்.

‘ஆச்சாரமாவது அனுஷ்டானமாவது' என்றபடி தேவதாசிப்பெண்ணான மஞ்சு பார்கவியை அக்ரஹாரத்துக்குள் அழைத்து வந்து சாஸ்திரிகள் சமைத்துப்போடச் சொல்லும்போது, தியேட்டரில் கரகோஷங்கள் உணர்ச்சிகரமாய்க் குவிந்தன. நேற்று படம் பார்க்க வந்திருந்தவர்கள் அனைவருமே எண்பதுகளின் மனிதர்கள். என்னைப்போலவே எல்லோரும் உணர்ச்சி வசப்பட்டவர்களாகவே படம் பார்த்துக் கொண்டதை அப்பட்டமாய் உணரமுடிந்தது.

நானெல்லாம் கல்நெஞ்சுக்காரன். ஆனால் நேற்று அடக்கvமாட்டாமல் பொங்கிவந்த கண்ணீரைத் துடைக்க கர்சீப்பை எடுத்தவன் படம் முடியும் வரை பாக்கெட்டில் வைக்கவே முடியவில்லை.

சாஸ்திரிகளுக்கும் மஞ்சு பார்கவிக்குமான உறவுதான் படமென்றாலும், கதையின் உயிர் மஞ்சு பார்கவியின் வாரிசான துளசிப் பையனிடம்தான் இருந்தது. ஒரு ஜமீன்தாரின் வன்புணர்ச்சிக்குப் பிறந்த அந்தக் குழந்தையை, அது பிறந்த விதத்தை ஒரே காட்சியில் மறக்கடித்து விட்டு, தேவதூதன் போல் அவனைச் சித்திரிக்க முடிந்த வித்தையே இந்தப்படத்தை காவியமாக்கியது என்று சொல்வேன்.

சினிமாக்காரன் சாலை 15: சங்கராபரணம் எனும் காவிய தரிசனம்...

சோமாயஜுலுவும், மஞ்சு பார்கவியும், ராஜலக்‌ஷுமியும் குறிப்பாக பொடியனாக நடித்த துளசியும் என்னமாய் வாழ்ந்திருக்கிறார்கள். பொடியனாக படம் பார்த்தபோது இந்த உணர்வு தோன்றவில்லை. நேற்று பார்க்கையில் காலத்தை ஒரு 35 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துப்போய், பேரழகி மஞ்சுபார்கவியின் காலடியில் விழுந்துகிடக்கத் தோன்றுகிறது.

கே.வி.மகா......தேவன்.

இயக்குநர் கே,விஸ்வநாத்தை மறுபடியும் மனசுக்குள் வணங்கிவிட்டு படம் முடிந்ததும், இதனை தமிழில் வெளியிடும் திரு.ரத்னம் அவர்களைச் சந்தித்து வாழ்த்துக் கூறினேன். டெல்லியில், ஜனாதிபதி விருதுக்கு அனுப்பட்டு, மறந்துபோன ஒரே ஒரு பிரிண்டை தேடிக் கண்டுபிடித்து, 'சங்கராபரணம்' எனும் பொக்கிஷத்தை மீண்டும் கண்டெடுத்த அனுபவத்தைச் சொன்னார்.

இன்றைய காலகட்டத்தில் தியேட்டரில் ஜனங்கள் குவிந்து வசூல் ஈட்டி லாபம் கொட்டப்போகும் எதிர்ப்பார்ப்பில் அவர் இப்படத்தை வெளியிடவில்லை என்பது அவரிடம் பேசியபோது தெரிந்தது.

சினிமாக்காரன் சாலை 15: சங்கராபரணம் எனும் காவிய தரிசனம்...

‘நீங்க எவ்வளவு செலவு பண்ணி இதை ரிலீஸ் பண்றீங்கன்னு தெரியாது. அந்தப் பணம் திரும்ப உங்களுக்கு வராமலே போகலாம். ஆனா என்னைப் போல சில ஆயிரம் பேர்களாவது உங்கள இருந்த இடத்துலருந்தே மனசார வாழ்த்துவாங்க சார்' என்றேன்.

பதிலுக்குப் புன்னகைத்தார். ‘அது போதும் சார். வேறென்ன வேணும்?' என்று அவர் சொன்னதாக அந்த புன்னகையை எடுத்துக்கொண்டேன்.

(தொடர்வேன்...)