திருமணத்துக்குப் பிறகு நல்ல கதைகள் அமைந்தால் நடிப்பேன்! - அமலா பால்

நல்ல கதை அமைந்தால் திருமணத்துக்குப் பிறகும் நடிப்பேன், என்று அறிவித்துள்ளார் நடிகை அமலா பால்.

நீண்ட காலமாக காதலித்து வந்த நடிகை அமலா பாலும், இயக்குநர் விஜய்ய்யும் வருகிற ஜூன் 12-ந் தேதி திருமணம் செய்து கொள்கிறார்கள்.

திருமணத்துக்குப் பிறகு நல்ல கதைகள் அமைந்தால் நடிப்பேன்! - அமலா பால்

பெற்றோர் சம்மதத்துடன் நடக்கும் காதல் திருமணம் இது. சென்னை சாந்தோம் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் இவர்களது திருமணம் நடக்கிறது.

தங்கள் திருமணம் குறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேச ஏற்கெனவே மூன்று முறை விஜய்யும், அமலா பாலும் திட்டமிட்டு, ரத்தானது.

இன்று ஒருவழியாக பிரஸ் மீட் வைத்துவிட்டனர்.

அமலாபால் பேசும்போது, ‘‘திருமணத்துக்கு பிறகு நடிக்க வேண்டாம் என்று என்னை விஜய் தரப்பில் வற்புறுத்தவில்லை. நல்ல கதைகள் அமைந்தால் நடிப்பேன்,'' என்றார்.

இருவரின் காதலுக்கும் விஜய் சொன்ன விளக்கம் பலே ரகம்... அதை தனி செய்தியாகத் தருகிறோம்!

 

நண்பர்களாதான் இருந்தோம்.. பத்திரிகைக்காரங்க கிசுகிசுவால காதலிச்சோம்! - இயக்குநர் விஜய்

ஆரம்பத்தில் நானும் அமலா பாலும் நண்பர்களாகத்தான் இருந்தோம். ஆனா தொடர்ந்து பத்திரிகைகாரர்கள் கிசுகிசுவா எழுதித் தள்ளினதால, நாங்க காதலிக்க ஆரம்பிச்சோம், என இயக்குநர் விஜய் தங்கள் காதலுக்கு பல விளக்கம் கூறினார்.

நண்பர்களாதான் இருந்தோம்.. பத்திரிகைக்காரங்க கிசுகிசுவால காதலிச்சோம்! - இயக்குநர் விஜய்

தெய்வத் திருமகள் படத்தில் நண்பர்களாதான் இருந்தோம்.. பத்திரிகைக்காரங்க கிசுகிசுவால காதலிச்சோம்! - இயக்குநர் விஜய்

தலைவா படத்தின் போது, இருவருக்கும் காதல் முற்றி, கல்யாணத்துக்கு வந்துவிட்டதை பத்திரிகையாளர்கள்தான் வெளியிட்டனர்.

இப்போது திருமண நாளும் உறுதி செய்யப்பட்டுவிட்டது. இதனை அறிவிக்க இன்று விஜய்யும் அமலா பாலும் சேர்ந்து நடத்திய பிரஸ் மீட்டில், நாங்க நண்பர்களா இருந்தோம், ஆனா பிரஸ்தான் காதலிக்க வைத்தது,' என்று பத்திரிகையாளர்களை கல்யாணத் தரகர்களாக்கிவிட்டனர்.

விஜய் கூறுகையில், "இந்தத் திருமணத்துக்கு ஒரு வகையில் பத்திரிகையாளர்களும்தான் காரணம். நீங்கள் அவ்வளவு எழுதினீர்கள் எங்களைப் பற்றி.

அமலாபாலும் நானும் முதலில் நண்பர்களாகத்தான் பழகினோம். எங்களுக்குள் ஆரம்பத்தில் காதல் இல்லை. ஆனால், பத்திரிகைகள்தான் எங்களுக்குள் காதல் என்று கிசுகிசுக்கள் எழுத ஆரம்பித்துவிட்டன. அதன்பிறகுதான் காதலிக்க ஆரம்பித்தோம்,'' என்றார்.

த்தோடா..!

 

மணிரத்னம் படத்தில் நடிப்பது உண்மைதான்- ஐஸ்வர்யா ராய்

மும்பை: மணிரத்னம் படத்தில் மீண்டும் நடிப்பது உண்மைதான் என்று தெரிவித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய்.

2011-ல் பெண் குழந்தை பிறந்ததிலிருந்து சினிமாவில் நடிக்காமல் இருந்தார் ஐஸ்வர்யா ராய். குழந்தையை வளர்ப்பதில் கவனம் செலுத்தினாலும், மீண்டும் ஒப்பனை அறைக்குள் நுழையும் தருணத்துக்காகக் காத்திருந்தார்.

மணிரத்னம் படத்தில் நடிப்பது உண்மைதான்- ஐஸ்வர்யா ராய்

இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். குழந்தை பெற்றதால் குண்டாகியிருந்த உடம்பை மீண்டும் மெலிய வைத்துள்ள ஐஸ்வர்யா, தான் இன்னும் அதே அழகுடன் இருப்பதை நிரூபிக்க, சமீபத்தில் கேன்ஸ் பட விழாவில் கவர்ச்சியாக போஸ் கொடுத்தார்.

தனது சினிமா மறுபிரவேசம் குறித்து ஐஸ்வர்யா ராயே இப்படி பேட்டியளித்துள்ளார்:

அடுத்து இரு முக்கியப் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளேன். அதில் ஒரு படத்தை இயக்கப் போகிறவர் மணிரத்னம்.

அவர் சிறந்த இயக்குநர். என்னை வைத்து இரு படங்களை ஏற்கனவே அவர் இயக்கியுள்ளார். மீண்டும் மணி ரத்னம் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தியில் சஞ்சய் குப்தா இயக்கும் புதிய படத்திலும் நடிக்கிறேன்.

-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

கோச்சடையான் படம் பார்த்தார் கமல்... சவுந்தர்யாவுக்கு பாராட்டு!

தன் நண்பர் ரஜினி நடித்த கோச்சடையான் படத்தை நேற்று மாலை பார்த்துப் பாராட்டினார் கமல் ஹாஸன்.

கோச்சடையான் படம் நாட்டிலேயே முதல் முறையாக மோஷன் கேப்சரிங் 3 டி தொழில்நுட்பத்தில் வெளியாகியுள்ளது.

இந்தப் படம் இந்தியத் திரையுலகின் அடுத்த கட்ட பயணத்துக்கான முதல் படியாகப் பார்க்கப்படுகிறது. புதிய முயற்சிக்கு ஆதரவு எப்படி இருக்குமோ என்று முதலில் திரையுலகினர் தயங்கினர். ஆனால் படம் வெளியானதும் கிடைத்த தாறுமாறான வரவேற்பு, அந்தத் தயக்கத்தை உடைத்தெறிந்தது.

கோச்சடையான் படம் பார்த்தார் கமல்... சவுந்தர்யாவுக்கு பாராட்டு!

உலகம் முழுவதும் இந்தப் படம் பெரும் வரவேற்பும் வசூலும் பெற்று ஓடிக் கொண்டுள்ள நிலையில், புதிய தொழில்நுட்பங்களின் காதலனான கலைஞானி கமல் ஹாஸன் இந்தப் படத்தைப் பார்க்க விரும்பினார்.

அவருக்காக தி நகரில் உள்ள ரியல் இமேஜ் அரங்கில் இந்தப் படத்தைத் திரையிட்டார் சவுந்தர்யா ரஜினி.

கமலும் கவுதமியும் இந்தப் படத்தை நேற்றுப் பார்க்க வந்தனர். அவர்களை வரவேற்று தியேட்டருக்கு அழைத்துப் போய், கோச்சடையானைத் திரையிட்டார் சவுந்தர்யா.

ஆர்வத்துடன் படம் பார்க்க கமல், படம் முடிந்ததும் சவுந்தர்யாவைப் பெரிதும் பாராட்டினார். படம் சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் வந்திருப்பதாகத் தெரிவித்து வாழ்த்தினார்.

 

நடிப்பில் பட்டையை கிளப்பிய நாய்க்கு கேன்ஸ் விழாவில் விருது…!

கேன்ஸ்: தன்னுடையை சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய காரணத்திற்காக பாம் டாக் என்ற நாய் ஒன்று விருது பெற்று அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஆண்டு தோறும் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா பிரசித்தி பெற்றது.

இந்த ஆண்டு கேன்ஸ் பட விழாவில் நாய்கள் தொடர்பான திரைப்படங்கள் அதிக அளவில் திரையிடப்பட்டன.

சிறந்த நடிப்பு:

இதில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நாய்க்கு பாம் டாக் என்னும் உயரிய விருதும் வழங்கப்பட்டது.

வெள்ளை கடவுள்:

இந்த ஆண்டுக்கான பாம் டாக் விருது அங்கேரிய டைரக்டர் கோர்னெல் முண்ட்ருசோ இயக்கிய பெஹர் இஸ்டென் அதாவது வெள்ளை கடவுள் என்ற படத்தில் நடித்த லேப் ராடர் ரகத்தை சேர்ந்த 'பாடி' என்னும் நாய்க்கு கிடைத்தது.

டை" கட்டிய பாம் டாக்:

பாடிக்கான விருதை அறிவித்த போது அந்த நாய் அழகாக அலங்கரிக்கப்பட்டு மேடைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அதன் கழுத்தில் டையும் அணிவிக்கப்பட்டு இருந்தது.

கரவொலியுடன் விருது:

நாயின் சார்பில் விருதை படத்தின் டைரக்டர் கோர்னல் முண்ட்ருசோ பெற்றுக்கொண்டார். அப்போது அங்கு கூடியிருந்த நாய் அபிமானிகளும், திரைப்பட விமர்சகர்களும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர்.

 

சேலம்: கோச்சடையான் திருட்டு டிவிடிகளைப் பறிமுதல் செய்த ரஜினி ரசிகர்கள்!

சேலம்: சேலத்தில் ஒரு கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கோச்சடையான் திரைப்பட திருட்டு டிவிடிக்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

ரஜினிகாந்த் ரசிகர்கள் அதிரடியாக கடைக்குள் புகுந்து டிவிடிக்கள் விற்பனை செய்யப்படுவதைக் கண்டறிந்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சேலம்: கோச்சடையான் திருட்டு டிவிடிகளைப் பறிமுதல் செய்த ரஜினி ரசிகர்கள்!

ரஜினியின் கோச்சடையான் திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியானது. இந் நிலையில், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள மெய்யனூர், ஆலமரக்காடு பகுதியில் உள்ள ஒரு டி.வி.டி. விற்பனைக் கடையில், கோச்சடையான் திரைப்பட திருட்டு டி.வி.டி.க்கள் விற்பனை செய்யப்படுவதாக ரஜினி ரசிகர்களுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் பழனிவேலு, நிர்வாகிகள் சித்தேஸ்வரன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் சனிக்கிழமை காலை சம்பந்தப்பட்ட கடைக்குச் சென்று கோச்சடையான் டி.வி.டிக்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா? என்று சோதனை போட்டனர்.

அங்கு சுமார் 500 கோச்சடையான் திரைப்பட டி.வி.டி.க்கள் இருந்தது தெரிய வந்தது.

ரஜினி ரசிகர்கள் வருவதை அறிந்ததும் கடை உரிமையாளர் பூபதி, விற்பனையாளர் மோகன் ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து பள்ளப்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த ஆய்வாளர் சரவணன், உரிமம் பெறாத டிவிடிக்களை பறிமுதல் செய்தார். மேலும், தலைமறைவான இருவரையும் கைது செய்யத் தேடி வருகிறார்.

 

நரேந்திர மோடி பதவிஏற்பு விழாவுக்கு விஜய்யும் போகலையாமே!

சென்னை: நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்கும் விழாவில் நடிகர் விஜய்யும் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிகிறது.

நரேந்திர மோடி தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய வந்தபோது, அவர் தங்கி இருந்த கோயமுத்தூருக்கே போய் சந்தித்து 'சினிமா' பற்றி பேசிவிட்டு வந்தவர் நடிகர் விஜய்.

தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, மோடி பிரதமராவது உறுதியானதும், வாழ்த்து அறிக்கையும் வெளியிட்டார்.

நரேந்திர மோடி பதவிஏற்பு விழாவுக்கு விஜய்யும் போகலையாமே!

இதைத் தொடர்ந்து மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு விஜய்க்கு அழைப்பு அனுப்பியது பாஜக.

அவரும் டெல்லிக்குப் போகத் தயாரானார். ஆனால், இந்த விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்வதால், தேமுதிக தவிர்த்த தமிழத்தின் அனைத்துக் கட்சிகளும் விழாவைப் புறக்கணிப்பதாக அறிவித்தன. தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

விழாவுக்கு அழைக்கப்பட்ட ரஜினியும் டெல்லி போகவில்லை. இந்த சூழலில் நாம் செல்வது சரியாக இருக்காது என்று விஜய்க்கு உடனிருந்தவர்கள் ஆலோசனை கூற, எடுத்த டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டார் விஜய் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

 

ஃபேஸ்புக்கில் போலி கணக்கு - இயக்குநர் ஹரி புகார்

சென்னை: தனது பெயரில் போலியாக ஃபேஸ்புக் கணக்கு தொடங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திரைப்பட இயக்குநர் ஹரி கோவை மாநகர காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஹரி. தற்போது விஷால், ஸ்ருதிஹாசன் நடிக்கும் "பூஜை' படத்தை இயக்கி வருகிறார். கோவையில் இதன் ஷூட்டிங் நடந்து வருகிறது.

இயக்குநர் ஹரி, கோவை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை வியாழக்கிழமை சந்தித்து புகார் ஒன்றை அளித்தார்.

ஃபேஸ்புக்கில் போலி கணக்கு - இயக்குநர் ஹரி புகார்

அதில், "நான் பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இயக்குநராகப் பணியாற்றி வருகிறேன். இதுவரை எனது பெயரில் நான் ஃபேஸ்புக் கணக்கு எதுவும் தொடங்கவில்லை.

திரைப்படத் துறையில் நான் பிரபலமாக உள்ள காரணத்தினால், இயக்குநர் ஹரி என்ற எனது பெயரில் ஃபேஸ்புக் கணக்கு தொடங்கி அதில் எனது விவரங்களை தவறாக வெளியிட்டுள்ளனர். அதை சிலர் தவறாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆகவே எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட ஃபேஸ்புக் கணக்கை தடை செய்து, இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

ராஜபக்சே விவகாரம்: மோடி பதவியேற்பு விழாவை புறக்கணிக்கும் ரஜினிகாந்த்

சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வருகையை கண்டித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கிறார்.

மோடி இன்று பிரதமராக பதவியேற்றுக் கொள்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்கிறார். முன்னதாக விழாவுக்கு ராஜபக்சேவை அழைத்ததற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

ராஜபக்சே விவகாரம்: மோடி பதவியேற்பு விழாவை புறக்கணிக்கும் ரஜினிகாந்த்

ராஜபக்சே வருகையை கண்டித்து ஜெயலலிதா மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கிறார். இந்நிலையில் ராஜபக்சே விவகாரம் தொடர்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளார். அவர் இன்று ஹைதராபாத்தில் லிங்கா படப்பிடிப்பில் இருப்பார்.

முன்னதாக தேர்தல் பிரச்சாரம் செய்ய தமிழகம் வந்த மோடி ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பின்னர் வெற்றி பெற்ற பிறகு பதவியேற்பு விழாவுக்கு வருமாறு அவர் ரஜினிக்கு அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.