மீண்டும் பெயர் மாற்றிய நடிகை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

படத்தில் நடிப்பதற்காக தனது சொந்த பெயரை ஸ்டைலாக நடிகைகள் மாற்றி வருகின்றனர். அப்படி பெயர் மாற்றிய நடிகைகளின் படங்கள் ªரும்பாலும் ஓடுவதில்லை. சமீபத்தில் 'சிந்து சமவெளிÕ படத்திற்காக அமலா பால் என்ற தனது பெயரை அனகா என்று மாற்றிக் கொண்டார். ஆனால் படமோ தோல்வி அடைந்துவிட்டது. இதனையடுத்து மீண்டும் தனது படிப்பை தொடங்கிய அமலா பால், படத்திற்காக அனகா என்ற பெயரை மீண்டும் அமலா பால்¢ என மாற்றிக்கொண்ட£ர் 'சிந்து சமவெளிÕ ஹீரோயின், தற்போது பிஏ இறுதியாண்டு படித்து வருகிறார்.


Source: Dinakaran
 

ஹீரோ காயம் ஷூட்டிங் நிறுத்தம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

'காந்தர்வன்’ பட ஷூட்டிங்கில் ஹீரோ கதிர் காயமடைந்தார். இது பற்றி இயக்குனர் சலங்கை துரை கூறியது: காட்சிப்படி காதலன் கதிரை ஏமாற்றுவதற்காக தனக்கு திருமணம் நிச்சயமாகி இருப்பதாக ஹனிரோஸ் கூறுவார். நண்பர்களுக்கு முன்பு தன்னை அவமானப்படுத்திவிட்டதாக கதிர் குமுறுவார். உடனே எதிரே இருக்கும் கண்ணாடியில் ஹனிரோஸ் முகம் தெரியும். கையால் கண்ணாடியை உடைக்க வேண்டும். இதில் சிதறிய கண்ணாடிகள், கதிரின் கைகளை குத்தி கிழித்தன. உடனடியாக அவரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு 12 தையல் போடப்பட்டது. இதனால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.


Source: Dinakaran
 

ஐஸ்வர்யாவுக்கு இன்று 37வது பிறந்த நாள்-குடும்பத்தினருடன் கொண்டாட்டம்

Aishwarya Rai
பாலிவுட் ராணி ஐஸ்வர்யா ராய் இன்று தனது 37வது பிறந்த நாளை தனது குடும்பத்தினருடன் எளிமையாக கொண்டாடினார்.
நேற்று நள்ளிரவிலிருந்தே ஐஸ்வர்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் குவியத் தொடங்கி விட்டதாம். இன்று காலை தனது மாமனார் அமிதாப் பச்சன், மாமியார் ஜெயா பச்சன், கணவர் அபிஷேக் பச்சன் ஆகியோர் புடை சூழ வீட்டிலேயே கேக் வெட்டிக் கொண்டாடினார் ஐஸ்வர்யா.
ஐஸ்வர்யா பிறந்த நாள் குறித்து அமிதாப் பச்சன் தனது பிளாக்கில், நாங்கள் வீட்டுக்குக் கிளம்பி விட்டோம் (நேற்று). நள்ளிரவாகி விட்டது. எனது மருமகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை இப்போது தெரிவித்துக் கொள்கிறேன். மருமகளே, இதுவரை நடந்த சாதனைகளை விட இன்னும் பல பெரிய சாதனைகளை புரிவாயாக என்று வாழ்த்துகிறேன் என்று கூறியிருந்தார் அமிதாப்.
இன்று மதியம் தனது கணவருடன் மதிய உணவு விருந்தில் கலந்து கொண்டார் ஐஸ்வர்யா. இந்தப் புகைப்படத்தையும் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார். நீல நிற உடையில் கையில் மெஹந்தியுடன் படு ஜோராக காணப்படுகிறார் ஐஸ்வர்யா.