ஒரு பாடலுக்கு ஆடும் ஹன்சிகா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஒரு பாடலுக்கு ஆடும் ஹன்சிகா?

9/19/2011 3:43:21 PM

தெய்வத்திருமகள் படத்திற்கு பிறகு விக்ரம் நடிக்கும் படம் ‘ராஜபாட்டை’. படுவேகமாக நடந்து வரும் ஷூட்டிங்கில் முக்கியமான பாடல் காட்சி ஒன்று பாக்கி உள்ளது. இந்தப் பாடலில் விக்ரமுடன் யாரை ஆட வைக்கலாம் என்று யோசித்து வருகிறார்கள். முன்னணி நடிகையாகவும் இருக்கணும், வேறு எந்தப் படத்திலும் ஒரு பாடலுக்கு அடியவராகவும் இருக்கக் கூடாது என்று ஏகப்பட்ட கண்டிஷன்கள் போட்டு தேடியதில் ஹன்சிகா அனைவருக்கும் பிடித்திருக்கிறார். ஹன்சிகா இந்த ஆஃபருக்கு இதுவரை ஒத்துக் கொண்டதாக சேதியில்லை.

 

சோனாவுக்கு மாரடைப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சோனாவுக்கு மாரடைப்பு

9/19/2011 3:55:01 PM

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகனும் தயாரிப்பாளர் மற்றும் பின்னணிப் பாடகருமான எஸ்.பி.சரண் மீது பாலியல் கூறி காவல் நிலையத்தில் புகார் தந்த நடிகை சோனா மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சோனாவின் புகாரைத் தொடர்ந்து பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் சரண் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக ஆரம்பம் முதலே பதற்றமாக இருந்தார் சோனா. திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரைப் ப‌ரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக‌த் தெ‌ரிவித்தனர்.

 

ரஜினியால் "ரா ஒன்" நம்பர்.1!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ரஜினியால் ‘ரா ஒன்’ நம்பர்.1!

9/19/2011 3:40:10 PM

ஷாரூக்கான் சூப்பர் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘ரா ஒன்’. ஷாரூக்கின் இந்த ரா ஒன் படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் எந்திரன் படத்தை நினைவுப்படுத்துவதாக செய்திகள் உலா வந்த நிலையில் எந்திரன் வேறு, ரா ஒன் வேறு. நாங்கள் ரஜினி மீது பெரும் மரியாதை வைத்துள்ளோம்.அவரை கவுரவிக்கும் விதத்தில் காட்சியும் வைத்துள்ளோம் என்று நேற்று முன்தினம் ஷாருக்கான் கூறியிருந்தார். தான் கூறியபடி, படத்தில் தன்னை ஆபத்திலிருந்து காப்பாற்றும் சூப்பர் பவர் பாத்திரமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல் அனிமேஷன் (அ) அவரை போல் உருவம் கொண்ட ஆட்களை வைத்து ஷூட்டிங்க ஷாரூக் திட்டுமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் ஷூட்டிங்க செய்த அந்த காட்சியை ரஜினியிடம் ஷாரூக் காண்பிக்க போவதாகவும், ரஜினி ஒப்புக் கொண்டால், மீண்டும் அந்த காட்சியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து ஷூட்டிங் செய்ய ஷாரூக் திட்டுமிட்டுள்ளதாக தெரிகிறது.

அப்படி ரஜினி ஒப்புக் கொண்டால் இதற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அடுத்த மாதம் (அக்டோபர்) 4ந்தேதி நடக்கிறது.

ஷாருக்கான் வில்லன்களிடம் சண்டை போடும் போது ஒரு கட்டத்தில் நிராயுதபாணியாக நிற்பார். அவர் உயிரை வில்லன்கள் பறிக்க ஆயத்தமாகும் தருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு சூப்பர் காரில் தனக்கே உரிய ஸ்டைலில் சர்ரென்று வந்து நிற்பார்.

அவரது கார் வில்லன்களின் ஆயுதங்களை தன்னுடன் ஈர்த்து ஷாருக்கானை காப்பாற்றும். அப்போது ஷாரூக்கின் உடனிருக்கும் கதாநாயகி கரீனா கபூர் யார் இவர் என்று ரஜினியை பார்த்து கேட்பார். உடனே ரஜினி தனக்கே உரிய பஞ்ச் வசனம் பேசியடி காரிலிருந்து இறங்குவாராம். அவரை ஷாரூக்கான் மிகுந்த மரியாதையுடன் அறிமுகப்படுத்துவது போன்று இக்காட்சி எடுக்கப்படுகிறதாம். தீபாவளிக்கு ராஒன் படம் ரிலீசாகிறது இது தமிழ், தெலுங்கிலும் டப்பிங் செய்யப்படுகிறது. இதுவரை இந்தப் படத்தை ரஜினியின் ரோபோ காப்பி என்று பேசி வந்த வட இந்திய ரசிகர்களோ, ரஜினியே நடிக்கிறார் என்று தெரிய வந்ததும் மிக ஆவலுடன் அந்த செய்தி உண்மையாகும் தருணத்துக்காக காத்திருக்கின்றனர்.

அதுதான் ‘ரஜினி மாஜிக்’!

வட இந்திய செய்தித் தாள்கள் மற்றும் இணையதளங்கள் இப்படித்தான் தொடர்ந்து சில தினங்களாக எழுதிவருகின்றன.

‘ரா ஒன் படத்தை நம்பர் ஒன்னாக்கிவிட்டார் ரஜினி’ என குறிப்பிட்டுள்ளது இந்துஸ்தான் டைம்ஸ். ‘ரா ஒன்னை ரெட் ஒன்னாக்கிவிட்டார் சூப்பர் ஸ்டார்’ என புகழாரம் சூட்டியுள்ளது. இன்னொரு பக்கம், விநியோகஸ்தர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர், ரஜினி நடிக்கிறாரா இல்லையா என்பதைப் பார்த்த பிறகு இந்தப் படத்தை வாங்க. ரஜினி நடித்தால் தென்னிந்திய உரிமை பெரும் விலைக்குப் போகும் என்பதால், படத்தை நேரடியாக ஈராஸின் துணை நிறுவனமான அய்ங்கரனே ரிலீஸ் செய்யத் தயாராக உள்ளது.

 

மல்ட்டி ஸ்டார் படத்தில் தொடர்ந்து நடிப்பேன்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மல்ட்டி ஸ்டார் படத்தில் தொடர்ந்து நடிப்பேன்!

9/19/2011 3:07:01 PM

'மல்ட்டி ஸ்டார் படத்தில் தொடர்ந்து நடிப்பேன்' என்று ஸ்ரீகாந்த் கூறினார்.   அவர் மேலும் கூறியதாவது: மலையாளத்தில் நான் நடித்த 'உப்புக்கண்டம் பிரதர்ஸ்' ரிலீசான பிறகு பல வாய்ப்புகள் வந்தது. அடுத்த ஆண்டு மீண்டும் மலையாளத்தில் நடிக்க இருக்கிறேன். இப்போது தெலுங்கில் 'நிப்பு' படத்தில் ரவிதேஜா, பிரகாஷ் ராஜுடன் இணைந்து நடிக்கிறேன். எனது தங்கையாக தீக்ஷா சேத் நடிக்கிறார்.
தமிழில் 'நண்பன்' படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். ஷங்கர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. அது நிறைவேறியுள்ளது. விஜய், ஜீவாவுடன் நடித்தது ஜாலியாக இருந்தது. இதுபோல் மல்ட்டி ஸ்டார் படத்தில் வாய்ப்பு அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன். அடுத்து 'எதிரி எண் 3' படத்தில் பூனம் பஜ்வாவுடனும், 'பாகன்' படத்தில் ஜனனியுடனும் நடிக்கிறேன்.

 

சமீரா, என் அக்கா மாதிரி : அமலா பால்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சமீரா, என் அக்கா மாதிரி : அமலா பால்

9/19/2011 2:59:07 PM

தமிழில், 'வேட்டை', 'முப்பொழுதும் உன் கற்பனைகள்', 'காதலில் சொதப்புவது எப்படி?', தெலுங்கில் நாக சைதன்யாவுடன் 'பேஜவாடா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அமலா பால். அவர் கூறியதாவது: லிங்குசாமி இயக்கும் 'வேட்டை' படத்தில் சமீரா ரெட்டியின் தங்கையாக நடிக்கிறேன். இதில் கிராமத்து பெண் வேடம். சமீராவுடன் நடித்தது நல்ல அனுபவத்தை கொடுத்தது. ஷூட்டிங் நாட்களில் நாங்கள் ஜாலியாக பொழுதை போக்குவோம். ஷூட்டிங் முடிந்த பின்னும் அவர் அக்கா போலவே பழக ஆரம்பித்தார். இப்போது அப்படியே எங்கள் நட்பு தொடர்கிறது. 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்தில் எனது கனவு வேடம் என்று சொல்லலாம். இதில் திறமையை நிரூபிக்க அதிக வாய்ப்புள்ளது. முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடிக்கிறேன். இதில் எனது வேடம் ஸ்டைலிஷாக இருக்கும். இந்த படத்தில் என்னை எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன். சமீபத்தில் ஆங்கில இதழில் வந்த எனது புகைப்படத்தை பார்த்துவிட்டு, 'நீ பிரியங்கா சோப்ரா மாதிரி அழகாக இருக்கிறாய்' என்று நயன்தாரா எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தார். அவரிடமிருந்து இப்படியொரு வாழ்த்தை எதிர்பார்க்கவில்லை. அவர் மாதிரி முன்னணி நடிகை யாரும் இப்படியொரு வாழ்த்தை அனுப்பியிருக்க மாட்டார்கள் என்று அவருக்கு நன்றி சொன்னேன்.

 

கிளாமருக்கு உடலமைப்பு முக்கியம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கிளாமருக்கு உடலமைப்பு முக்கியம்

9/19/2011 2:53:55 PM

சோனியா அகர்வால் கூறியது: திருமணத்துக்கு பிறகு நடிகைகள் மவுசு குறைவது சகஜம். சிலர் மீண்டிருக்கிறார்கள். அதில் நானும் ஒருத்தி. என் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்கள் எதிர்பாராதவை. மீண்டும் சினிமாவில் ஹீரோயின் வேடம் எதிர்பாராதது என்றாலும் எனது காத்திருப்புக்கு கிடைத்த பலன், 'வானம்' படத்தில் சிறிய வேடம். 'ஒரு நடிகையின் வாக்குமூலம்' படத்தில் ஹீரோயின். இதில் 4 மாறுபட்ட மேக் அப் அணிகிறேன். மானத்தை மறைக்க தாவணி வாங்கக்கூட முடியாமல் கஷ்டப்படும் கிராமத்து ஏழைப் பெண் பாத்திரம். இந்த காட்சி நெல்லூரில் படமானது. அடுத்து நகருக்கு வந்து சினிமா சான்ஸுக்காக  கம்பெனிகளில் வாய்ப்பு தேடும் தோற்றம். அடுத்து நடிக்க வாய்ப்பு கிடைத்து ஒரே நாளில் புகழின் உச்சிக்கு செல்கிறேன். அப்போது கிளாமர் தோற்றம். இதைத் தொடர்ந்து ஒரு தோற்றம் இருக்கிறது. அது சஸ்பென்ஸ். 'கிளாமராக நடிப்பது ஏன்?' என்கிறார்கள். கிளாமராக நடிக்க எல்லோருக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. அதற்கு அழகான உடலமைப்பு வேண்டும். மீண்டும் நடிக்க முடிவு எடுத்தவுடனே அதற்கு என்னை தகுதியாக்கிக் கொண்டேன்.

 

சார்மியை கலங்க வைக்கும் நாயகி!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சார்மியை கலங்க வைக்கும் நாயகி!

9/19/2011 2:48:38 PM

டோலிவுட்டில் மார்க்கெட் இழந்த நிலையில் பாலிவுட் சென்ற சார்மி, 'புட்டா ஹோகா தேரா பாப்' படத்தில் நடித்தார். அடுத்து  'ஜில்லா காசியாபாத்' படத்தில் நடிக்கிறார். இதில் சஞ்சய் தத், விவேக் ஓபராய் நடிக்கின்றனர். சார்மியை படத்திலிருந்து நீக்குவதற்கான ஏற்பாடுகளை விவேக் ஓபராய் செய்தாராம். அதையும் மீறி அவருக்கு வாய்ப்பு கொடுத்தார் இயக்குனர் அர்ஷத். இதே படத்தில் மற்றொரு ஹீரோயினாக நடிக்கிறார் மினிஷா. இப்போது சார்மிக்கு புதுஹீரோயினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி யூனிட்டார் கூறும்போது, 'ஹீரோயின் மினிஷாவின் நடிப்பு இயக்குனரை கவர்ந்துவிட்டது. மேலும் நெருக்கம் காட்டும் மினிஷாவின் நட்பில் இயக்குனர் சொக்கிப் போய்விட்டார். இதையடுத்து மினிஷாவுக்கு கூடுதல் காட்சிகளை இயக்குனர் சேர்த்திருக்கிறார்' என்றனர். ஏற்கனவே ஓபராயின் நடவடிக்கையால் நொந்துபோய் இருந்த சார்மி, தற்போது மினிஷாவால் கலங்கி போய் இருக்கிறாராம்.




 

இசைக்கு முக்கியத்துவம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

இசைக்கு முக்கியத்துவம்

9/19/2011 2:55:26 PM

இசை அமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன், நிருபர்களிடம் கூறியதாவது: 'பூ', 'களவானி' படங்கள் பெரிய புகழைப் பெற்றுக் கொடுத்தது. இசை அமைக்கும்போது கிடைத்த இடைவெளியில் படம் இயக்கிப் பார்க்கலாம் என்று 'தேனீர் விடுதி'யை இயக்கினேன். அந்தப் படம் மூலம் சினிமா உலகின் இன்னொரு முகத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது. படம் இயக்குவதிலும், தயாரிப்பதிலும் மும்முரமாக இருப்பதாக கருதிக் கொண்டு, இசை அமைப்புக்காக என்னை அணுக தயங்குகிறார்கள் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.  சினிமா இயக்கியதும், தயாரித்ததும், மாற்று முயற்சி. அவ்வளவுதான். இசைதான் எனது முக்கிய பாதை. யாருமே தராத இசையை தரவேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறேன். தற்போது 'ரதம்' என்ற படத்துக்கு இசை அமைத்திருக்கிறேன். அடுத்து 'லட்சுமி' என்ற படத்துக்கு இசை அமைக்கிறேன். இசையை பிரதானமாக கொண்ட படத்துக்கு இசை அமைத்து எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும் என்பதே இப்போதைய லட்சியம்.

 

காஞ்சனா இந்தி ‌ரீமேக்கில் லாரன்ஸ் இல்லை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

காஞ்சனா இந்தி ‌ரீமேக்கில் லாரன்ஸ் இல்லை

9/19/2011 3:52:38 PM

லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா படத்தின் இந்தி ‌ரீமேக்கில் சல்மான் கான் நடிக்கிறார். ஆனால் படத்தை லாரன்ஸ் இயக்கவில்லை. காஞ்சனா தமிழில் வெளியாகும் முன்பே இந்தப் படத்தை இந்தியில் ‌ரீமேக் செய்ய சல்மான்கான் ஆர்வமாக இருப்பதாக லாரன்ஸ் தெ‌ரிவித்திருந்தார். இதனை நேற்று சல்மான் தரப்பு உறுதி செய்தது. சல்மானின் சகோதரர் சோஸைல் கான் படத்தை இயக்குகிறார். காஞ்சனா ‌ரீமேக் மூலம் இந்திக்கு செல்லலாம் என்று லாரன்ஸ் எண்ணியிருந்தார். பிரபாஸ் நடிக்கும் ‌ரிபெல் படத்தில் பிஸியாக இருப்பதால் வாய்ப்பு கை நழுவியிருக்கிறது.

 

த்‌ரிஷா, ஸ்ரேயாவுக்கு பதினைந்து நாட்கள் கெடு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

த்‌ரிஷா, ஸ்ரேயாவுக்கு பதினைந்து நாட்கள் கெடு

9/19/2011 3:47:09 PM

தெலுங்கில் முன்னணியில் இருக்கும் இலியானா, த்‌ரிஷா, சினேகா, ஸ்ரேயா, தாப்ஸீ, ஜெனிலியா என யாரும் தெலுங்கு நடிகர் சங்கத்தில் உறுப்பினராகவில்லை. இவர்களுக்கு பதினைந்து நாட்கள் கெடு விதித்திருக்கிறார்கள். பதினைந்து நாட்களுக்குள் உறுப்பினராகாவிடில் தெலுங்கு‌ப் படங்களில் நடிக்க முடியாது என இவர்கள் எச்ச‌ரிக்கப்பட்டுள்ளனர்.

 

ஒஸ்தியில் தல வசனம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஒஸ்தியில் தல வசனம்!

9/19/2011 3:57:00 PM

யங் சூப்பர் ஸ்டார் சிம்பு தரணி இயக்கத்தில் நடிக்கும் படம் ‘ஒஸ்தி’. தல அஜீத்தின் தீவிர ரசிகரான சிம்பு தன்னுடைய ‘ஒஸ்தி’ படத்தில் தல வசனத்தை பேசியுள்ளாராம். பொதுவாக சிம்பு படங்களில் அ‌‌ஜீத்தை புகழும் வசனங்களும், காட்சிகளும் இடம்பெறுவதும் அனைவருக்கும் தெ‌ரிந்ததே. ஒஸ்தியில் என்ன ஸ்பெஷல் என்று கேட்பவர்களுக்கு இதோ… ஒரு அட்டகாசமான சேதி. மங்காத்தாவில் அ‌ஜீத் பேசும், எத்தனை நாளைக்குதான் நான் நல்லவனாகவே நடிக்கிறது என்ற வசனத்தை ஒஸ்தியில் வைத்திருக்கிறாராம் சிம்பு.

 

பொங்கல் ஸ்பெஷலாக வரும் 'நண்பன்'!


ஷங்கர் இயக்கும் படம் ஒன்று எந்த பரபரப்பும் இல்லாமல் இத்தனை அமைதியுடன், வேக வேகமாக படமாவது அநேகமாக நண்பனாகத்தான் இருக்கும்!

படம் ஆரம்பித்த போது, யார் ஹீரோ என்பதில் மட்டும் மகா குழப்பம் நிலவியது. விஜய்தான் ஹீரோ என்று முடிவான பிறகு, ஊட்டி, சென்னை என்று தமிழ்நாட்டுக்குள்ளேயே சுற்றிச் சுற்றிப் படமாக்கிய ஷங்கர், இதோ கிட்டத்தட்ட படத்தை முடித்தேவிட்டார்!

ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ், இலியானா என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இந்தப் படம், தெலுங்கிலும் டப் செய்யப்படுகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

வரும் பொங்கலுக்கு இந்தப் படத்தை பிரமாண்டமாய் ரிலீஸ் செய்யும் வேலைகளை இப்போதிலிருந்தே துவங்கிவிட்டார் ஷங்கர்.

இனி, விழுந்தடித்துக் கொண்டு ஷங்கர், விஜய், ஜீவா மீடியாக்களுக்கு பேட்டிகள் தரப்போகிறார்கள்!
 

ஏழாம் அறிவு ஆடியோ ரிலீஸ்... ஷாரூக்கான் வெளியிடுகிறார்?


சென்னை: சூர்யா, ஸ்ருதி ஹாசன் நடித்துள்ள ஏழாம் அறிவு படத்தின் இசை வரும் 22-ம் தேதி வெளியிடப்படுகிறது.

இந்த விழாவின் சிறப்பம்சமாக, பிரபல இந்தி நடிகர் ஷாரூக்கானை படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி வரவழைக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இந்த செய்தியை தயாரிப்பாளர் தரப்பில் உறுதிப்படுத்தவில்லை.

கஜினிக்குப் பிறகு ஏ. ஆர். முருகதாஸ், சூர்யா இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் ஏழாம் அறிவு. இந்த படத்தின் ஆடியோ வரும் 22-ம் தேதி சென்னை வர்த்தக மையத்தில் வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் தனக்கிருக்கும் ரசிகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க ரா ஒன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தை கௌரவ வேடத்தில் நடிக்க வைக்கும் முயற்சியில் உள்ள ஷாருக், தற்போது ஏழாம் அறிவு படத்தின் ஆடியோவை வெளியிட சென்னைக்கு வர சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

ரான் ஒன் தமிழிலும் டப் செய்யப்படுவதால் இது போன்ற ஆடியோ வெளியீட்டு விழாக்களில் கலந்து கொண்டால் விளம்பரம் கிடைக்கும் என்று நினைக்கிறார் ஷாருக்கான்.

இது தவிர ஆடியோ வெளியீட்டு அன்று நடிகை இஷா ஷெர்வானியின் நடனம் விழாவில் இடம்பெறும் என்கிறார்கள்.
 

இளம் தலைமுறையினரிடம் கற்றுக் கொள்கிறேன் - 'கலவரம்' சந்திப்பில் சத்யராஜ்


'இங்கே சத்யராஜ் வந்திருப்பதாகச் சொன்னாங்க... எங்கே அவர்?,' என்று ஏவிஎம் ஏசி அரங்கில் யூனிட் ஆள் ஒருவர் தேடிக் கொண்டிருக்க, அவருக்கு பக்கத்து சீட்டிலிருந்து எழுந்தார் ஒரு நபர். மகா இளமையான ஹேர்ஸ்டைல், கண்ணாடி, ஷார்ட் ஷர்ட், ஜீன்ஸில்... அட சத்யராஜ்தான்!

கவுண்டமணி சொல்வதுபோல, 'எந்த கெட்டப் போட்டாலும் அப்படியே பொருந்திப் போகும்' நடிகர்களில் முதலிடம் சத்யராஜுக்குத்தான்.

இந்த இளமை கெட்டப் 'கலவரம்' படத்துக்காக. படத்தின் ஆடியோ வெளியீட்டுக்குப் பின் நடந்த பிரஸ் மீட்டில்தான் இந்த கலாட்டா.

விஜயகாந்த் நடித்த உளவுத் துறை, அருண் விஜய் நடித்த ஜனனம் போன்ற படங்களை இயக்கும் டிஎஸ் ரமேஷ் செல்வன் இயக்கும் இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் சத்யராஜ். அவருடன் நான்கு இளம் ஜோடிகள் இந்தப் படத்தில் உள்ளனர்.

அஜய், குட்டி, யாசர், ராகவன் என நான்கு இளைஞர்கள் ஹீரோக்களாக அறிமுகமாகிறார்கள் இந்தப் படத்தில். ஹரிணி, லாவண்யா, ரியா, நிலா நாயகிகளாகவும் நடிக்கின்றனர். இவர்களில் நிலா மட்டும்தான் தெரிந்த முகம். தங்கர் பச்சானின் ஒன்பது ரூபாய் நோட்டு படத்தில் நடித்தவர் இந்த நிலா. சுஜிபாலாவும் படத்தில் உண்டு.

நேர்மையான போலீஸ் அதிகாரி சத்யராஜ். அவர் முன் நிரபராதிகளான நான்கு இளைஞர்கள் குற்றவாளிகளாய் நிற்கிறார்கள். அவர்களின் உண்மை நிலை அறிந்து அவர்களை வைத்தே உண்மைக் குற்றவாளிகளைப் பிடிக்கிறார் சத்யராஜ் என்ற போகிறது படத்தின் கதை.

இந்தப் படம் குறித்து சத்யராஜ் கூறுகையில், "படத்தை ஆரம்பித்து 10 நாள் கழிச்சிதான் என்னிடம் வந்தார்கள். ரமேஷ்செல்வன் படம் என்றதும் எனக்கு உளவுத்துறைதான் நினைவுக்கு வந்தது. அதனால் ஈகோ பார்க்காமல் நடிக்க ஒப்புக் கொண்டேன். நல்ல கதை. ஒரு குறிப்பிடத்தக்க படமாக 'கலவரம்' அமையும். இது வன்முறைப் படமல்ல. ஒரு கலவரத்தால் சமூகத்துக்கு ஏற்படும் நன்மைதான் இந்தப் படம்.

இந்த டீமே ரொம்ப இளமையான டீம். இவர்களிடம் நான் கற்றுக் கொண்ட விஷயங்கள் ஏராளம். என்னைப் போன்ற சீனியர் நடிகர்கள், இறங்கி வந்து இவர்களுடன் இணைந்து வேலை செய்தால்தான் பல நவீன விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும். இதில் ஈகோ பார்க்கக் கூடாது," என்றார்.

பிஎஸ் பைசல் இசையமைத்துள்ளார். விரைவில் வருகிறது இந்த சினிமா 'கலவரம்'!
 

ரூ 17 கோடி கேட்கும் அஜீத்!


பில்லா வெற்றிக்குப் பிறகு ஏகன், அசல் என தொடர்ந்து இரு தோல்விப் படங்களைக் கொடுத்தவர் அஜீத். அதன் பிறகு வந்த வெற்றிப் படம் மங்காத்தா.

இந்த ஒரு படம் மூலம் இழந்த தன் மார்க்கெட் செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டுள்ள அஜீத், தனது அடுத்த படத்துக்கு கேட்டுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா... ரூ 17 கோடி!

இந்த சம்பளம் இப்போது அவர் நடிக்கும் பில்லா 2 படத்துக்கு அல்ல. ஏஎம் ரத்னம் தயாரிப்பில் நடிக்கவிருக்கும் அடுத்த படத்துக்கானது. ஒருவேளை பில்லா 2 ஜெயித்துவிட்டால், அஜீத்தின் கால்ஷீட் ரேட் இன்னும் எகிறிவிடும் என்பதால், இந்தத் தொகையை உடனடியாகத் தர சம்மதித்தாராம் ரத்னம்.

இதற்கிடையே முதல் கட்டப்படப்பிடிப்பு மட்டுமே முடிந்துள்ள பில்லா 2 படத்தை ரூ 40 கோடிக்கு வாங்கிக் கொள்ள இரு நிறுவனங்கள் பேரத்தில் ஈடுபட்டுள்ளன. ஆனால் படத்தைத் தயாரித்துவரும் இந்துஜா குழுமமோ ரூ 50 கோடிக்கு மேல் எதிர்ப்பார்க்கிறார்களாம்.

யாரும் எதிர்பாராமல், இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸே வாங்கி வெளியிடவும் வாய்ப்பு உள்ளதாகச் சொல்கிறார்கள்!
 

துள்ளி எழுந்தது காதல்... பூமிகா - அனுஷ்காவுடன் 40 புதுமுகங்கள்!


ரோஜாக்கூட்டம் படத்தில் அறிமுகமாகி டோலிவுட் பாலிவுட் என கலக்கியவர் நடிகை பூமிகா. சமீபத்தில் இவர் தெலுங்கில் 'தகிட தகிடா' என்ற படத்தை தயாரித்தது மட்டுமின்றி, அப்படத்தில் கல்லூரி ஆசிரியை வேடத்திலும் நடித்தார். அனுஷ்காவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்தப் படம் அங்கே பெரிய வெற்றியைப் பெற்றது.

அந்தப் படத்தை 'துள்ளி எழுந்தது காதல்' என்ற பெயரில் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

படத்தின் நாயகன் ராஜா, சென்னை சூப்பர் கிங்ஸ் விளம்பரத்தில் வந்தவர். நாயகி ஹரிப்பிரியா இன்று தெலுங்கு, தமிழில் விறுவிறுவென வளர்ந்து வருபவர்.

படத்தில் நாகார்ஜுனாவும் ஒரு முக்கிய வேடத்தில் வருகிறார். சபேஷ் - முரளி இசை இரட்டையர்களில், சபேஷின் மகன் போபோ சசி இந்தப் படத்துக்கு இசையமைக்க, முரளியின் மகன் கார்த்தி நடிகராகக் கலக்கியுள்ளாராம்.

தமிழில் இந்தப் படத்தைத் தயாரித்திருப்பவர்கள் சென்னை பிலிம் ஸ்கூல் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் அஜிதா வேல்முருகன், ராஜகிருஷ்ணகுமார். ஸ்ரீஹரி நானு இயக்கியுள்ளார்.

'மாணவர்களுக்காக மாணவர்கள் தயாரிக்கும் படம்' என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார்கள் இந்தப் படத்துக்கு.

'மாணவர்களுக்காக மட்டும் எடுத்தால் போதாது... எல்லோரும் பார்க்கிற மாதிரியும் எடுக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு உருவாக்கியுள்ளோம்', என்கிறார் இயக்குநர் நானு. பார்க்கலாம்!
 

என் தொடையை இன்ஷ்யூர் செய்யவில்லை, ஆனால்...!: ரம்பா


நான் என் தொடையை இன்ஷ்யூர் செய்துள்ளதாக பலகாலமாக பேச்சு அடிபடுகிறது. ஆனால் நான் அது போன்று எதுவும் செய்யவில்லை. அப்படி இன்ஷ்யூர் செய்வதாக இருந்தால் என் தலைமுடியை இன்ஷ்யூர் செய்வேன் என்று நடிகை ரம்பா தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழர் இந்திரன் பத்மநாதனை திருமணம் செய்து கனடாவில் செட்டிலான ரம்பாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அதற்கு லான்யா என்று பெயர் வைத்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு திரையுலகை விட்டு விலகி இருக்கிறார். அவர் நடிக்கும் காலத்தில் ஊரெல்லாம் ஒரு பேச்சு பரவலாக இருந்தது. அது என்னவென்றால் ரம்பா தன் தொடையை இன்ஷ்யூர் செய்திருக்கிறார் என்பது தான். தொடையழகி என்றுதான் ரம்பாவை எல்லோரும் செல்லமாக கூப்பிடுவார்கள்.

தற்போது குழந்தை லான்யாவுடன் இந்தியா வந்திருக்கும் ரம்பாவிடம் இது குறித்து கேட்டதற்கு அவர் கூறியதாவது,

நெடுங்காலமாகவே நான் என் தொடையை இன்ஷ்யூர் செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன. நான் அப்படி எதுவும் செய்யவில்லை. இன்ஷ்யூர் செய்வதாக இருந்தால் என்து தலைமுடியை இன்ஷ்யூர் செய்யலாம் என்று இருக்கிறேன். தற்போது குழந்தை லான்யாவுடன் ஜாலியாக நேரத்தை செலவிடுகிறேன் என்றார்.
 

டர்ட்டி பிக்சர்ஸுக்காக சில்க்காகவே மாறிப் போன வித்யா பாலன்


நடிகை வித்யா பாலன் தி டர்டி பிக்சர் படத்திற்காக சிலக் ஸ்மிதாவாகவே மாறியுள்ளார். அந்த அளவுக்கு கேரக்டரோடு ஒன்றிப் போய் நடித்து வருகிறாராம்.

தி டர்டி பிக்சர் படத்தின் பாடலை படமாக்க வித்யா பாலன் அண்மையில் ஹைதராபாத் வந்தார். ஏற்கனவே அவருக்கு காய்ச்சல் இருந்தும் அதை பெரிதுபடுத்தாமல் நசீருத்தீன் ஷாவுடன் நடித்தார்.

அந்த பாடல் காட்சியை ஒரு தாமரைக் குளத்தில் படமாக்கினர். பாடலை 2 அல்லது 3 நாட்களில் முடிக்க வேண்டும் என்ற நிலை. அதனால் வித்யா குளத்தில் 4 முதல் 5 மணி நேரம் வரை காய்ச்சலோடு நடித்தார். இதில் முதல் நாளே அவருக்கு காய்ச்சல் அதிகமானது. இதையடுத்து அவரை ஓய்வெடுத்துக் கொள்ளுமாறு இயக்குனர் மிலன் கேட்டுக் கொண்டும் பரவாயில்லை என்று கூறி வித்யா நடித்துள்ளார்.

இந்த பாடல் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் மும்பையில் இருந்து ஹைதராபாத் வந்திருந்தனர். ஒரு நாள் படப்பிடிப்பு நடக்காவிட்டாலும் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்பதால் வித்யா நடித்துள்ளார்.

அடுத்து கர்நாடகாவில் படப்பிடிப்பு நடந்தபோது இயக்குனர் மிலன் வித்யாவிடம் பந்தயம் கட்டினார். படப்பிடிப்பை வேடிக்கைப் பார்க்கும் கூட்டத்திற்கு முன்பு சில்க் மாதிரி அறைகுறை ஆடையுடன் வந்து பேசவேண்டும் என்பது தான் பந்தயம். வித்யா அப்படி செய்யமாட்டார் என்ற நம்பிக்கை மிலனுக்கு.

அவரது நம்பிக்கை பொய்த்தது தான் மிச்சம். மிலன் சற்றும் எதி்ர்பாரா விதமாக கூடியிருந்த ஆண்களுக்கு முன்பு சில்க் போன்று படு கவர்ச்சிகரமாக உடையணிந்து தைரியமாகப் பேசினார் வித்யா. இதனால் மிலன் பந்தயத்தில் தோற்றுப்போனார்.

இதையடுத்து யாரும் வித்யா பாலனிடம் பந்தயம் கட்டாதீர்கள் என்று எச்சரித்தார் மிலன்.
 

மீண்டும் பிரீத்தி கற்பழிப்பு வழக்கு... கைதாவாரா மதுர் பண்டார்கர்?


நடிகை ப்ரீத்தி ஜெயின் கற்பழிப்பு வழக்கில் பிரபல இயக்குநர் மதுர் பண்டார்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆஜராகத் தவறினால் கைது செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேசிய விருது பெற்ற சாந்தினி பார், டிராபிக் சிக்னல் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் மதுர் பண்டார்கர். 1999 முதல் 2004-ம் ஆண்டு வரை ஆசை வார்த்தை கூறி தன்னை மதூர் பண்டார்சன் பல முறை கற்பழித்துவிட்டார் என இந்தி நடிகை பிரீத்தி ஜெயின் வழக்குத் தொடர்ந்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் பிரீத்தி ஜெயின் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று அறிக்கை அளித்துவிட்டனர். ஆனால் ப்ரீத்தி தன் வழக்கை வாபஸ் பெறவில்லை. 2009-ல் மீண்டும் இந்த வழக்கை விசாரிக்குமாறு நீதிமன்றத்தை நாடினார்.

நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட இவ்வழக்கு விசாரணை தற்போது மீண்டும் சூடு பிடித்துள்ளது.

மதூர் பண்டார்சன் வழக்கு விசாரணைக்காக அடுத்த மாதம் 18-ந்தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப அந்தேரியில் உள்ள நடமாடும் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். அவர் அன்றைய தினம் ஆஜராக தவறினால் கைது செய்து ஆஜர்படுத்தப்படுவார் என்று பிரீத்தி ஜெயின் வக்கீல் குஞ்சுராமன் தெரிவித்தார்.

மதுர் பண்டார்கர் மீது குற்றவியல் சட்டம் பிரிவு 376 மற்றும் 506 பிரிவு 2-ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பெண்களை செக்ஸ் பொம்மையாக நினைக்கும் மதுர் பண்டார்கர் போன்ற ஆண்களுக்கு இந்த வழக்கு மூலம் பாடம் கற்பிப்பேன் என்று ப்ரீத்தி ஜெயின் கூறியுள்ளார்.
 

மகனுக்காக சோனாவிடம் சமரசம் பேசிய எஸ்பி பாலசுப்பிரமணியன்!


கோடம்பாக்கத்தில் லேட்டஸ்ட் பரபரப்பு, நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கவர்ச்சி நடிகை சோனாவை, பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியன் சந்தித்துப் பேசியிருப்பதுதான்!

மங்காத்தாவுக்காக நடிகர் வைபவ் வைத்த மதுவிருந்தில் பங்கேற்ற நடிகை சோனாவின் ஆடைகளைக் களைந்து, பலாத்காரம் செய்ய முயன்றார் என எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்பிபி சரண் மீது நடிகை சோனா பகீர் புகார் கூறினார். இதனை போலீசில் புகாராகப் பதிவு செய்தார் சோனா. இதனைத் தொடர்ந்து அவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

போலீசார் எந்த நேரமும் சரணை கைது செய்யலாம் என்ற நிலையில், முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் சரண். அதில் இந்தப் பிள்ளையும் பீர் குடிக்குமா என்கிற மாதிரி, 'சோனாவை நான் தொடவே இல்லை. குடித்துவிட்டு என் மேல் விழுந்த சோனாவை பாலுணர்வை தூண்ட வேண்டாம் என எச்சரித்தேன்,' என்று கூறியிருந்தார். அவரது இந்த ஸ்டேட்மெண்ட்டைப் பார்த்து சினிமாக்காரர்களே சிரிக்க ஆரம்பித்துள்ளனர்.

இன்னொரு பக்கம், அந்த மானபங்க சம்பவம் நடந்த நேரத்தில் அருகிலிருந்து சண்டையை விலக்கிவிட்டதாகக் கூறப்படும் மங்காத்தா இயக்குநர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்டவர்களையும் விசாரிக்க போலீசார் முயற்சித்து வருகின்றனர். இந்த மூவரும் இப்போது இருக்குமிடமே தெரியவில்லையாம்!

மருத்துவமனையில் சந்திப்பு...

இந்த நிலையில், பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்த சரணின் தந்தை எஸ்பி பாலசுப்பிரமணியன், கைது, வழக்கு என தொடரவிருக்கும் அவமானங்களைத் தவிர்க்கும் பொருட்டு, சமாதானம் பேச முயன்றுள்ளார்.

நேற்று மாலை, சோனா தங்கி சிகிச்சைப் பெற்று வரும் மருத்துவமனைக்குச் சென்ற அவர், சோனாவை நலம் விசாரித்துள்ளார். உடம்பை பாத்துக்கோம்மா என்று அக்கறையாகச் சொன்ன எஸ்பிபி, நடந்த சம்பவங்களை முழுமையாகக் கேட்டுத் தெரிந்து கொண்டாராம். மேலும் சரண் தன்னிடம் அத்துமீறியதற்கு ஆதாரமாக தன்னிடம் உள்ள வீடியோ மற்றும் படங்களையும் சோனா காட்டியதாகவும், அவரது மோசமான நடத்தை மற்றும் மிரட்டல் தந்த மன உளைச்சல்தான் இந்த மாரடைப்புக்கு காரணம் என்றும் சோனா உருக்கமாகத் தெரிவித்தாராம்.

மகன் மீதுள்ள தவறைப் புரிந்து கொண்ட எஸ்பிபி, விரைவில் சரணை நேரில் அனுப்பி மன்னிப்பு கேட்க வைப்பதாகவும், பகிரங்கமாக மன்னிப்புக் கடிதம் தர வைப்பதாகவும் உறுதியளித்துள்ளாராம்.

ஏற்கெனவே எஸ்பிபி சரண் படம் தயாரித்து நஷ்டமடைந்ததன் விளைவாக, தனது ஸ்டுடியோவையே விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் எஸ்பி பாலசுப்பிரமணியம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்போது சோனாவைச் சந்தித்து சமாதானம் பேசும் நிலைக்கு அவரைத் தள்ளியுள்ளது சரணின் செயல் என்கிறார்கள் திரையுலகினர்.

இதற்கிடையே, சரணின் முன்ஜாமீன் மனு இன்று உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
 

ராஜபாட்டையில் விக்ரமுடன் ரீமா சென் & ஸ்ரேயா குத்தாட்டம்!!


விக்ரம் நடிக்க சுசீந்திரன் இயக்கும் அதிரடி ஆக்ஷன் படமான ராஜபாட்டையில் மேலும் இரண்டு நாயகிகள் இணைந்துள்ளனர்.

இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடி தீக்ஷா சேத். இவர் தெலுங்கில் பிரபலமான நடிகை. கவர்ச்சியில் கதிகலங்க வைப்பவர்.

இவரைத் தவிர, ரீமா சென் மற்றும் ஸ்ரேயாவையும் இந்தப் படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இந்த இருவருமே விக்ரமுடன் தூள், கந்தசாமி படங்களில் ஜோடியாக நடித்தவர்கள், விக்ரமுக்கு நெருக்கமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. யுவன் சங்கர் ராஜா உருவாக்கியுள்ள இந்தப் பாடல் படத்தின் முக்கிய ஹைலைட்டாக இருக்கும் என்கிறது ராஜபாட்டை யூனிட்.

இந்தப் படத்தில் ஜிம் பாய் எனப்படும் அடியாளாக வருகிறார் விக்ரம். பெரும் பொருள்செலவில் உருவாகி வருகிறது ராஜபாட்டை.

விக்ரம் தங்கியிருக்கும் ஒரு மேன்சன் போன்ற பகுதியை ரூ 40 லட்சம் செலவில் மோகன் ஸ்டுடியோவில் செட் போட்டு எடுத்துள்ளனர். இப்போதும் அருணாச்சலம் சாலைப் பக்கம் போகிறவர்கள், இது நிஜ மேன்சன்தானோ என்ற சந்தேகத்துடன் பார்த்துவிட்டுச் செல்கிறார்கள்.

பின்னி மில்லில் படமான ஒரு மார்க்கெட் சண்டைக் காட்சிக்காக ரூ 75 லட்சத்தை செலவழித்துள்ளனர்.

பிரசாத் வி பொட்லூரியின் பிவிபி சினிமாஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் பாடல் காட்சிகள் ஜப்பானில் படமாகின்றன. எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன், கமல் நடித்த ஜப்பானில் கல்யாண ராமனுக்குப் பிறகு ஜப்பானில் படமாகும் திரைப்படம் ராஜபாட்டைதான் என்கிறார்கள்!

வெறும் பில்டப்போடு நிற்காமலிருந்தால் சரி!
 

வந்தான் வென்றான் - விமர்சனம்


நடிப்பு: ஜீவா, நந்தா டாப்ஸி, சந்தானம்
இசை: தமன்
ஒளிப்பதிவு: பிஜி முத்தையா
இயக்கம்: ஆர் கண்ணன்
தயாரிப்பு: கேஎஸ் சீனிவாசன்

பிஆர்ஓ: ஜான்சன்

அருமையான லொகேஷன்கள், இளசுகளைக் கவரும் காதல் காட்சிகள், துடிப்பான இசை, குறிப்பாக விலாநோக வைக்கும் சிரிப்புக்கு கேரண்டி தரும் சந்தானம்… எல்லாம் இருந்தும், வந்தான்… வென்றானா?

குத்துச் சண்டை வீரரான ஜீவா, ஒரு சிக்கலான நேரத்தில் டாப்ஸிக்கு உதவ, காதல் பற்றிக் கொள்கிறது. ஆனால் தன் அப்பா சொன்னால்தான் காதல், கல்யாணத்துக்கெல்லாம் சம்மதிக்க முடியும் என கறாராகச் சொல்லிவிடுகிறார் டாப்ஸி.

ஆனால் மும்பை தாதாக்களுக்கு இடையில் நடக்கும் மோதலில் தவறுதலாக டாப்ஸியின் பணக்காரத் தந்தை கொல்லப்படுகிறார்.

தந்தையைக் கொன்றவனை பழிவாங்கினால்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என ஜீவாவிடம் டாப்ஸி சபதம் போட, வேறு வழியின்றி சம்பந்தப்பட்ட அந்த டான்களில் ஒருவரான நந்தாவைத் தேடிப் போய்ச் சந்திக்கிறார் ஜீவா.

அவரிடம் தனக்கும் டாப்ஸிக்குமான காதல் கதையைச் சொல்கிறார். இந்தக் காதலுக்கு குறுக்கே ஒரு பெரிய ரவுடி நிற்பதாகவும் அந்த தாதாவை சிறையில் தள்ள உதவுங்கள் என்றும் கேட்கிறார். ‘யார் அந்த தாதா?’ என்று நந்தா கேட்க, ‘நீதான்யா’ என்கிறார் ஜீவா.

பின்னர் ஜீவாதான் தனது தம்பி (ஒரே அம்மா… வேறு அப்பாக்கள்!) என்பதைத் தெரிந்து கொள்ளும் நந்தா, தம்பியின் காதலுக்காக உயிரைத் தியாகம் செய்கிறாரா? நந்தாவுக்காக டாப்ஸியை உதறினாரா ஜீவா? அல்லது ஜீவாவும் டாப்ஸியும் காதலில் இணைந்தார்களா… என்பது க்ளைமாக்ஸ்.

கதையாக எழுதும்போது உள்ள சுவாரஸ்யம், இந்தப் படத்தைப் பார்க்கும் போது இல்லை என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும். ஏக ப்ளாஷ்பேக்குகள், முன்பாதியில் தெளிவற்ற திரைக்கதை போன்றவற்றால் படம் பெரிதாக கவராமல் போகிறது. குறிப்பாக அண்ணனிடம் தன் காதல் கதையை ஜீவா சொல்லும் விதம் நம்மை களைப்படைய வைக்கிறது.

ஜீவா – டாப்ஸி காதல் காட்சிகள் நன்றாக உள்ளன. ஆனால், டாப்ஸியிடம் ஏதோ ஒன்று குறைவதாய் ஒரு உணர்வு. குறிப்பாக அவரது வசன உச்சரிப்பு. முக்கிய காட்சிகளில் நடிப்பு வர மறுக்கிறது இந்தப் பெண்ணுக்கு.

ஜீவாவும் கூட பெரிய ஈர்ப்புடன் இந்தப் படத்தை நடிக்கவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது அவர் தொடர்பான காட்சிகள்.

படத்தின் பெரிய ப்ளஸ் சந்தானம். அவரது காமெடி மனதில் பதிகிறதோ இல்லையோ, வெடிச்சிரிப்புக்கு உத்தரவாதம் தருகிறது.

நந்தாவை பெரிய மும்பை டான் என ஏற்க மட்டுமல்ல, நம்பவும் முடியவில்லை!

தமனின் இசையில் ‘காஞ்சன மாலா….’ மீண்டும் கேட்க வைக்கிறது. பிஜி முத்தையாவின் ஒளிப்பதிவு படத்துக்கு கூடுதல் மதிப்பைத் தருகிறது. பட்டுக்கோட்டை பிரபாகரின் வசனங்கள் ஜீவா – டாப்ஸி காதல் காட்சிகளில் டாப்!

காட்சிகள் சிறப்பாக அமைய வேண்டும் என்பதில் அத்தனை மெனக்கெட்ட இயக்குநர் கண்ணன், திரைக்கதையை இன்னும் தெளிவாக, சுவாரஸ்யமாக அமைக்கத் தவறியதுதான் பிரச்சினையே.

ஆனால் சந்தானம் காமெடி மற்றும் கண்களைச் சிறைப்படுத்தும் அழகிய காட்சியமைப்புகளுக்காக ஒருமுறை பார்க்கலாம்!

 

பலாத்காரம் செய்யவில்லை... எச்சரித்தேன்! - சொல்கிறார் எஸ்பிபி மகன்


சென்னை: மது விருந்தின்போது பாலியல் உணர்வை தூண்டியதால் நடிகை சோனாவை கடுமையாக எச்சரித்தேன். இதனால் என்மீது சோனா பொய் புகார் கொடுத்துள்ளார், என தனது முன்ஜாமீன் மனுவில் எஸ்.பி.பி.சரண் கூறியுள்ளார்.

‘மங்காத்தா’ படத்தில் நடித்த வைபவ் என்பவரது வீட்டில் செப்டம்பர் 14-ந் தேதி மது விருந்து நடந்தது. அப்போது தன் மேல் பாய்ந்த தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரண், ஆடைகளைக் களைத்து பாலியல் பலாத்காரம் செய்தார் என்று பாண்டிபஜார் போலீசில் நடிகை சோனா புகார் செய்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் எஸ்.பி.பி.சரண் மீது போலீசார் 4 வழக்குகளைப் பதிவு செய்தனர். இந்த புகாரில் குற்றத்துக்கான முகாந்திரம் இருப்பதாகவும் போலீசார் கருதுகின்றனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் எஸ்பிபி சரண் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “நான் அமெரிக்காவில் பி.பி.ஏ. பட்டம் படித்துள்ளேன். சினிமாவில் பின்னணி பாடகராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கிறேன். சமுதாயத்தில் மதிப்புள்ள குடும்பத்தை சேர்ந்தவன் நான்.

‘மங்காத்தா’ படத்தின் வெற்றியைகொண்டாட நடிகர் வைபவ் என்னை அழைத்தார். அதனால் அவரது வீட்டிற்கு சென்றேன். என்னைபோல் பலரும் அங்கு வந்திருந்தனர். எல்லாரும் இரவு 11 மணிக்கு மேல் மது அருந்தத் தொடங்கினோம்.

நடிகை சோனாவும் இந்த மது விருந்தில் கலந்து கொண்டார். அவர் சினிமாவில் கவர்ச்சி நடனம் ஆடக் கூடியவர். சினிமாவில் வெற்றி பெற முடியாத நிலையில், படங்களைத் தயாரித்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டு, கடன் பிரச்சினையில் சிக்கினார்.

சினிமாவில் என்னுடைய வெற்றி மற்றும் எனது குடும்ப பின்னணியை மனதில் வைத்துக்கொண்டு என்னிடம் சோனா உள்நோக்கத்துடன் நடந்துகொண்டார். கவர்ச்சியால் மயக்கி, பணத்தை பறித்து தன் கடன் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் உள்ளதாக தெரிகிறது.

அந்த எண்ணத்தோடு குடிபோதையில் என்னிடம் வந்து பேசினார். நல்ல போதையில் அவர் இருந்தார். மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, என்னிடம் பாலியல் உணர்வை தூண்டும் விதமாக நடந்துகொண்டார். எனவே நான் சோனாவை கடுமையாக எச்சரித்தேன்.

அவரை அனைவரது முன்பாகவும் நான் எச்சரிக்கை செய்ததால், அவருக்கு அவமானமாக போய்விட்டது. அதைத்தொடர்ந்து என்னிடம் மன்னிப்பு கேட்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். மறுநாள் போலீசில் என்மீது பொய்யான பாலியல் புகாரை கொடுத்துள்ளார்.

இந்த புகார் தொடர்பாக பாண்டிபஜார் போலீசார் என்னிடம் எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை. என்னை விசாரிக்காமலேயே வழக்குப்பதிவு செய்துவிட்டனர். நான் தவறு செய்யவில்லை. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்.

இன்று விசாரணை

இந்த மனுவை நீதிபதி ராஜசூர்யா விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வக்கீல் கஜிதா தீனதயாளன் ஆஜரானார். அரசு தரப்பில் வக்கீல் பாலசுப்பிரமணியம் ஆஜராகி, மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டார்.

அதைத்தொடர்ந்து விசாரணையை 20-ந் தேதிக்கு (இன்று) நீதிபதி தள்ளிவைத்தார்.

சோனாவின் புகார் வீடியோ

 

அப்பாவாகும் சந்தோஷத்தில் செல்வராகவன்!


அப்பாவாகப்போகும் சந்தோஷத்தில் மிதக்கிறார் இயக்குநர் செல்வராகவன். அவரது மனைவி கீதாஞ்சலி இப்போது கர்ப்பமாகியுள்ளார்.

செல்வராகவனுக்கும் கீதாஞ்சலிக்கும் கடந்த ஜூலையில் திருமணம் நடந்தது. இப்போது மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார் கீதாஞ்சலி.

முதல் குழந்தை பிறக்கும் சந்தோஷத்தில் உள்ளனர் தம்பதிகள் இருவரும். நேற்று நடந்த 'மயக்கம் என்ன' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில்தான், இந்த விஷயம் வெளியில் தெரிய வந்தது.

இப்போது மயக்கம் என்ன படத்தின் வெளியீட்டுப் பணிகளில் பிஸியாக உள்ளனர் செல்வராகவனும் கீதாஞ்சலியும் (மனைவி மட்டுமல்ல, இப்போது செல்வாவின் உதவி இயக்குநரும் கூட!). படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு மனைவியை ஓய்வெடுக்குமாறு கூறியுள்ளாராம் செல்வராகவன்.

மயக்கம் என்ன படத்துக்குப் பின் 'இரண்டாம் உலகம்' உள்பட இரு படங்களை இயக்குகிறார் செல்வராகவன் என்பது குறிப்பிடத்தக்கது.