ஷாருக்கான் சினிமாவுக்கு காங்கேயத்தில் தடை:மும்பையில் காங்கேயம் கோவில் ‘செட்’

Hindu Endonment Board Ban Sharuk Khan Film Shooting

காங்கேயம்: இந்தி நடிகர் ஷாருக்கான் நடிக்கும் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை படமாக்க தடை விதிக்கப்பட்டதால் காங்கேயம் கோவிலை மும்பையில் செட் அமைத்து தயாரிக்க படக்குழுவினர் முடிவு செய்து உள்ளனராம்.

இந்தி நடிகர் ஷாருக்கான் நடிக்கும் ‘சென்னை எக்ஸ்பிரஸ்' என்ற புதிய படம் ரூ.100 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

இது குறித்து சென்னை எக்ஸ்பிரஸ் படகுழுவினரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது,

காதல் சொல்லும் காட்சி...

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வட்டமலை முருகன் கோவிலில் ஷாருக்கான், தீபிகாபடுகோன் ஆகியோர் நடிக்கும் சில காட்சிகள் எடுக்கப்பட்டது. தீபிகாவிடம் ஷாருக்கான் தனது காதலை கூறும் காட்சி கோவிலின் உட்புற பகுதியில் படமாக்கப்பட்டது.

பெர்மிஷன் வாங்குனீங்களா...?

படப்பிடிப்பு நடத்த இந்து அறநிலையதுறையின் அனுமதி பெறாமல் கோவிலில் படப்பிடிப்பு நடத்தப்பட்டதால் அதிகாரிகள் அங்கு சென்று படப்பிடிப்பு நடத்த தடை விதித்தனர்.

பெர்மிஷன் வாங்கணும்...

சில காட்சிகள் எடுக்கப் படாமலேயே படப்பிடிப்பு ரத்து செய்யபட்டது. பின்னர், படப்பிடிப்பு குழுவினர் உரிய அனுமதி பெற்று மீதம் உள்ள காட்சிகள் படமாக்கப்படும் என்று அறிவித்தனர்.

தரமுடியாது....

இது குறித்து இந்துசமய அறநிலையத்துறை மற்றும் அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.

செட் போடப்போறோம்...

படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்காததால் வட்டமலை முருகன் கோவில்போல் செட் போட்டு மீதம் உள்ள காட்சிகளை படமாக்க திட்டமிட்டு உள்ளோம். வட்டமலை முருகன் கோயில் உட்புறம் அளவு கணக்கீடு செய்யப்பட்டு அதேபோல் மும்பையில் செட் போட்டு அடுத்த சில காட்சிகள் படமாக்கப்படும் என்று தெரிவித்தனர்.

அசுத்தம் செய்து விடுவர்...

இது குறித்து இந்து அறநிலைய துறை அதிகாரிகளை கேட்டபோது, ‘பொதுவாக கோவில்களில் படம் எடுக்க அனுமதி வழங்கப்படுவதில்லை. காரணம் படப்பிடிப்பு குழுவினர் கோவில்களை அசுத்தம் செய்து விடுகின்றனர்.

பக்தர்கள் எதிர்ப்பு...

இது பக்தர்களின் மனதை புண்படுத்துகிறது. சினிமா படம் எடுக்க பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் எந்த படம் எடுக்கவும் தமிழக கோவில்களில் அனுமதி வழங்கபடுவதில்லை என்று தெரிவித்தனர்.

 

கஹானி... 'கர்ப்பிணியான' நயன்தாரா!

Nayantara S Pregnancy Kahani

வித்யாபாலன் கர்ப்பிணியாக நடித்து இந்தியில் சூப்பர் ஹிட் ஆன படம் கஹானி. இந்தப் படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா கர்ப்பிணியாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்ப்பிணியாக இருந்தால் உடம்பில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும். அவர்கள் எப்படி எப்படி நடப்பார்கள் என்பது பற்றியெல்லாம் படத்திற்காக நயன்தாராவிற்கு விளக்கி பயிற்சி கொடுத்து வருகிறார்களாம்.

இதனால் கடந்த ஒரு வார காலமாக கர்ப்பிணி போன்றே தனது கெட்டப்பை மாற்றி அதுவாகவே வாழ்ந்து ரிகர்சல் பார்த்தவர், தற்போது அப்படத்தில் ஒன்றிப் போய் நடிக்கிறாராம்.

ஏற்னவே வித்யாபாலன் நடித்த தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தின் தமிழ், மலையாள ரீமேக் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். ஆனால் கஹானி படத்தின் கேரக்டர் தன்னை ரொம்ப பாதித்ததால் விரும்பி ஏற்று நடித்து வருகிறாராம்.

 

ரமணா ரீமேக்:தமன்னா,காஜல் வாய்ப்பை தட்டிப்பறிக்க பார்க்கும் இலியானா

Ileana Tries Get Chance Ramana Hindi Remake   

மும்பை: ரமணா இந்தி ரீமேக்கில் தமன்னா, காஜல் ஆகியோரை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தில் வாய்ப்பு பெற இலியானாவும் முயற்சி செய்து வருகிறாராம்.

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ரமணா படம் இந்தியில் கப்பார் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. படத்தை தெலுங்கு படமான வேதத்தை இயக்கிய கிரிஷ் இயக்குகிறார். விஜயகாந்த் கதாபாத்திரத்தில் ஆக்ஷன் ஹீரோ அக்ஷய் குமார் நடிக்கிறார். படத்தில் தமன்னா மற்றும் காஜல் அகர்வாலை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தெரிந்தும் படத்தில் ஒரு வாய்ப்பை பெற்றுவிட இலியானா முட்டிமோதிக் கொண்டிருக்கிறாராம். தெலுங்கு படங்களில் நடித்து வந்த இலியானா பர்ஃபி இந்தி படத்தோடு தமிழ், தெலுங்கு படங்களுக்கு குட்பை சொல்லிவிட்டு பாலிவுட்டில் செட்டிலாகி விட்டார்.

தமன்னாவும், காஜலும் இந்தி படங்களில் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

விஜய் அவர்ட்ஸ் 7குறும்படப் போட்டி… திரைப்படம் இயக்க வாய்ப்பு

இந்த ஆண்டிற்கானவிஜய் அவார்ட்ஸ் விழாவில் குறும்பட விருதும் அறிமுகம் செய்யப்படவிருக்கிறது. சிறந்த குறும்பட இயக்குநர்களுக்கு சிறப்பு விருதும் திரைப்படம் இயக்க வாய்ப்பும் வழங்க உள்ளது விஜய் டிவி.

விஜய் டிவி ஆண்டு தோறும் விருது வழங்கும் விழாவை நடத்தி வருகிறது. கடந்த ஆறு வருடங்களாக நடைபெற்று வரும் இந்த விழா ஏழாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது விஜய் அவர்ட்ஸ். இதற்கான அறிமுக விழா கடந்தவாரம் நடைபெற்றது.

இந்த ஆண்டு மே 11ம் தேதி சென்னையில் விழா நடைபெறுகிறது. தமிழ்த் திரைஉலகின் நட்சத்திரங்களும், இயக்குனர்களும், இசையமைப்பாளர்களும், தயாரிப்பாளர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் இந்த விழாவினை இதுவரை சிறப்பித்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

once a lifetime opportunity short film makers

இந்த ஆண்டு விஜய் அவார்ட்ஸ் விழாவில் புதிதாக குறும்பட விருதும் அறிமுகம் செய்யப்படவிருக்கிறது. ஒரு குறும்படத்தை 15 நிமிடங்களுக்கு மிகாமல் இயக்கி அதனை டி.வி.டியாக விஜய் டிவிக்கு அனுப்பிவைக்க வேண்டும். அவ்வாறு அனுப்பப்படும் குறும்படங்களில் சிறந்த படத்தை தேர்வு செய்து அதற்கு சிறந்த குறும்பட விருதை விஜய் டிவி வழங்குகிறது.

குறும்படங்களை தேர்வு செய்யும் நடுவர்கள்இயக்குனர்கள் கவுதம்மேனன், கற்றது தமிழ் ராம், ராஜேஷ் ஆகியோர் உள்ளனர். சிறந்த குறும்பட இயக்குனருக்கு விஜய் டி.வி மற்றும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் ஒரு படத்தை இயக்கவும் வாய்ப்பு அளிக்கப்படும்.