நான் ராஜாவாகப் போகிறேன்! - ஒரு விறுவிறு அரசியல் த்ரில்லர்!

Naan Rajavaagap Pogiren Political Thriller

நான் ராஜாவாகப் போகிறேன் - இது விரைவில் வரவிருக்கிற ஒரு படத்தின் தலைப்பு.

உதயம் வி.எல்.எஸ். சினி மீடியா சார்பில் கே.தனசேகர், வி.சந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்தில் நாயகனாக நகுல், நாயகியாக சாந்தினி நடிக்கின்றனர்.

நிஷாந்த், கவுரவ், மணிவண்ணன், சுரேஷ், ஏ.வெங்கடேஷ், ஜெயசிம்மா, முத்துராமன், சேத்தன், குமரவடிவேல், டெல்லிகணேஷ், மயில்சாமி, அவனிமோடி, கஸ்தூரி, ஆர்த்தி, வனிதா விஜயகுமார் என பெரிய பட்டாளமே இதில் உண்டு.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி பிருத்வி ராஜ்குமார் இயக்குகிறார். வின்னர் படத்தில் சுந்தர் சியுடன் பணியாற்றியவர். பின்னர் வெற்றிமாறன் கூட்டணியில் இணைந்து பொல்லாதவன் படம் செய்திருக்கிறார்.

படம் பற்றி இயக்குநர் பிருத்வி ராஜ்குமார் கூறுகையில், "இது ஒரு அரசியல் ஆக்ஷன், திரில்லர். பரபரவென இருக்கும் திரைக்கதை பார்ப்பவர்களை இருக்கை நுனிக்கே கொண்டுவந்துவிடும்.

கதையின் முடிச்சு இதுதான்... அடுத்த பதினைந்து வருடம் கழித்து மக்கள் பயனடையும் வகையில் தொலை நோக்கு திட்டங்களை நிறைவேற்றும்படி குரல் கொடுத்து பிரச்சாரம் செய்வர் மணிவண்ணன். அவர் கருத்துக்களை சாந்தினி பின்பற்றினார். இதனால் மணிவண்ணனுக்கு பிரச்சினைகள் உருவாகி அது சாந்தினியையும் பாதிக்கிறது.

சாந்தினியை காதலிக்கும் நகுலையும் பாதிக்கிறது. அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பது கதை. நகுல், ஐ.டி. படிக்கும் மாணவராகவும், சாந்தினி சட்டக் கல்லூரி மாணவியாகவும் வருகிறார்கள். மணிவண்ணனுக்கு மிக முக்கிய வேடம்.

இயக்குநராக இது எனக்கு முதல் படம். ரொம்ப வித்தியாசமான படம் என்றெல்லாம் சொல்லிக் கொள்ள விரும்பவில்லை. படம் பார்த்தால் வித்தியாசத்தை உணர்வீர்கள்.

இந்தப் படத்துக்கு வெற்றிமாறன் வசனம் எழுதித் தர விரும்பி ஒப்புக் கொண்டார். அது எனக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்தது.

ஜீவி பிரகாஷ் இசையமைக்கிறார், ஆர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருது பெற்ற கிஷோர் எடிட்டிங்கை கவனிக்கிறார்.. முதல் பட இயக்குநரான எனக்கு முன்னணி கலைஞர்கள், டெக்னீஷியன்கள் அமைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது," என்றார்.

 

கரிகாலன் - மாறினார் இயக்குநர்!

Gandhikrishana Takes Over Karikalan

விக்ரம் நடிக்கும் சரித்திரப் படம் கரிகாலன் பற்றி கொஞ்ச நாட்களாக சத்தத்தையே காணோம்.

விசாரித்ததில் ஒரு சின்ன வில்லங்கம் தெரிந்தது.

இந்தப் படத்தின் இயக்குநராக முதலில் ஒப்பந்தமானவர் எல் ஐ கண்ணன். இவர் மணிரத்னத்திடம் பணியாற்றியவர்.

படம் ஆரம்பித்த சில தினங்களில், ராஜசேகரன் என்பவர், படத்தின் தலைப்பும், கதையும் தன்னுடையது என கேஸ் போட, படம் அப்படியே நின்றது. சிக்கல் தீர்ந்து மீண்டும் படப்பிடிப்பு துவங்கவிருந்த நிலையில், படத்தின் இயக்குநர் மாறிவிட்டாராம்.

இப்போது படத்தை இயக்குபவர் கண்ணன் அல்ல... கதை வசனத்துக்கு சொந்தக்காரரான காந்திகிருஷ்ணா. செல்லமே, நிலாக்காலம் படங்களை இயக்கியவர் இவர்.

தயாரிப்பாளர்கள் அதே வாசன் மற்றும் பார்த்திதான். விக்ரம் ஜோடியாக ஜரின்கான் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

 

அதுல் குல்கர்னி நடிக்கும் சுழல் - இசை வெளியீடு!

Suzhal Audio Launched

தேசப்பற்றை மையப்படுத்தி உருவாகியுள்ள த்ரில்லர் படமான 'சுழல்' இசை வெள்ளிக்கிழமை வெளியானது.

ஆர் ஜெயக்குமார் இயக்கியுள்ள சுழல் படத்தில் பாரீஸ் என்ற இளைஞர் நாயகனாக அறிமுகமாகிறார். ரோஸின், சாரு, ஜோதி ஆகிய மூவரும் நாயகிகளாக அறிமுகமாகின்றனர்.

இந்தப் படத்தின் முக்கிய பாத்திரத்தில் சிறு இடைவெளிக்குப் பிறகு நடிக்கிறார் அதுல் குல்கர்னி. இவர், கமலின் ஹேராம் படத்தில் அறிமுகமாகி, லிங்குசாமியின் ரன் படத்தில் பரபர வில்லனாக அறியப்பட்டவர். அதன் பிறகு நிறையப் படங்கள் நடித்துவிட்டார். சின்ன இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் ஹீரோவுக்கு இணையாக துப்பறியும் வேடத்தில் நடிக்கிறார்.

எல்வி கணேஷ் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் நேற்று பிரசாத் லேப் திரையரங்கில் வெளியிடப்பட்டது.

தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கலைப்புலி எஸ் தாணு, பி எல் தேனப்பன், எடிட்டர் லெனின் ஆகியோர் பாடல்களை வெளியிட்டனர்.

இந்தப் படத்தின் இசைக்காக, 80 இசைக்கலைஞர்களை வைத்து லைவ்வாக வாத்தியக் கருவிகளை வாசிக்க வைத்து பதிவு செய்ததாக எல் வி கணேசன் குறிப்பிட்டார். அப்படி லைவ்வாக வாசித்த போதுதான் காட்சிகளுக்கு அதன் உண்மையான உணர்வைத் தர முடிந்ததாகவும் கூறினார்.

பரவாயில்லை... எப்படியோ தமிழ் சினிமா இசை கீபோர்ட்டை தாண்டிவிட்டதில் சந்தோஷமே!

 

பிரபல நடிகர் ராஜேஷ் கன்னா உடல்நிலை கவலைக்கிடம்!

Rajesh Khanna S Health Deteriorates Admitted Hospital

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் ராஜேஷ் கன்னா கவலைக்கிடமான நிலையில் மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களாகவே அவர் உடல் நலம் குன்றியிருந்தார். அவரால் உணவு உட்கொள்ள முடியவில்லை.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று ராஜேஷ் கன்னா ஓரளவு உடல் நிலை தேறினார். ஆனால் மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் இன்று மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்த தகவல் பரவியதும்,ஏராளமான ரசிகர்கள் ராஜேஷ் கன்னா அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை முன்னர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜேஷ்கன்னா 1960கள் மற்றும் 70களின் பாலிவுட் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்தவர். வெள்ளிவிழா நாயகன். அவருக்கு பல கோடி ரசிகர்கள் உலகெங்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

'திருநங்கை' ஜெயம் ரவி!

Jayam Ravi As Transgender

அமீர் தன் அடுத்த படமான ஆதி பகவனை எப்போது வெளியில் தரிசனம் காட்டுவார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது.

இப்போது அதற்கு விடைகிடைத்திருக்கிறது. ஒரு படம் குறித்து செய்திகள் லேசு பாசாக வெளி வர ஆரம்பித்துவிட்டாலே, படத்தை வெளியில் விட ஆயத்தமாகிறார்கள் என்று அர்த்தம்.

இப்போது ஆதிபகவன் செய்திகள் மீடியாவில் இடம்பெற ஆரம்பித்துள்ளன.

இந்தப் படத்தில் ஜெயம் ரவி - நீத்து சந்திரா ஜோடியாக நடிக்கின்றனர்.

ஜெயம் ரவி முதன் முறையாக இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். அதில் ஒருவேடம் திருநங்கை கேரக்டராம்.

ஆரம்ப காலப் படங்களில் விளையாட்டுப் பிள்ளை அல்லது பணக்கார இளைஞனாக நடித்து வந்த ஜெயம்ரவி 'பேராண்மை' படத்தில் ஆக்ஷன் வேடத்தில் நடித்தார். 'ஆதிபகவன்' படத்தில் நடிப்பில் தனது இன்னொரு பரிமாணத்தை காட்டப் போகிறார் என்கிறார்கள்!

பார்க்கக் காத்திருக்கிறோம்...!

 

சகுனி - சினிமா விமர்சனம்

Saguni Film Review

நடிப்பு: கார்த்தி, சந்தானம், ப்ரணிதா, பிரகாஷ் ராஜ், ராதிகா, கிரண், கோட்டா சீனிவாசராவ், மனோபாலா, நாசர்

இசை; ஜீவி பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு: பிஜி முத்தையா

பிஆர்ஓ; ஜான்சன்

தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன்

இயக்கம்: சங்கர் தயாள்


அரசியலை மையமாக வைத்து சடையர் வந்து நாட்களாகிவிட்டன. அப்படியே வந்தாலும் அவற்றில் பிரச்சார நெடி இருக்கும். ஆனால் கார்த்தி நடிப்பில் வந்துள்ள சகுனி, அந்தக் குறையைத் தீர்த்துவைத்துள்ளது. அரசியலை விமர்சித்த மாதிரியும் ஆயிற்று... பொழுதுபோக்குக்கு பொழுதுபோக்குமாயிற்று!

கதை ரொம்ப சிம்பிள். லாஜிக் கூட ஒப்புக் கொள்ளக்கூடியதுதான்... நடைமுறைக்கு சாத்தியமா என்ற கேள்வி இருந்தாலும், இப்படியெல்லாம் நடந்தாகூட நல்லாதான் இருக்கும் என்றே தோன்றுகிறது.

காரைக்குடியில் உள்ள கார்த்தியின் ஒரே சொத்து, ஒரு பூர்வீக வீடு. அதையும் ரயில்வே திட்டத்துக்காக இடிக்கப் பார்க்கிறது அரசு. இந்த வீட்டை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னை வரும் கார்த்தி, அமைச்சரிடம் மனு கொடுக்க, அது வழக்கம்போல 'போக வேண்டிய' இடத்துக்குப் போகிறது!

முதலமைச்சரிடம் போனால் நியாயம் கிடைக்கும் என்று போகிறார்... அங்கே உருவாகிறது பகை.

தன் வீட்டை மீட்க வேண்டுமானால் முதலில் முதல்வரை வீழ்த்த வேண்டும்... அதற்கான அரசியல் ஆட்டத்தை சகுனியின் சாமர்த்தியத்தோடும், கண்ணனின் மனிதாபிமானத்தோடும் ஆடுகிறார் கார்த்தி. ஆட்டத்தில் அபாரமாய் வெல்லும் அவர் கடைசியில் அரசியல்வாதியாகிறாரா? என்பது கிளைமாக்ஸ்.

விடலைத்தனமான லுக், தெனாவட்டான பேச்சு, எதிலும் விளையாட்டுத்தனம் என்றே இதுவரை கார்த்தியின் கேரக்டர்கள் அமைந்திருந்தன. முதல்முறையாக இதில் பக்குவமான, புத்திசாலித்தனமான ஆட்டம். அதை அவர் ஆடும் விதம் ரசிக்க வைக்கிறது.

குறிப்பாக இட்லிக்கார ரமணி ஆச்சியை மேயராக்குவதும், பீடி சாமியாரை நெல்லி சாமியாராக மாற்றும் விதமும், வீரத்தமிழன் முன்னேற்றக் கழக தலைவரை முதல்வராக்கத் தரும் ஐடியாக்களும் சுவாரஸ்யமானவை.

முகத்திலும்கூட ஒரு மெச்சூரிட்டி வந்திருக்கிறது கார்த்திக்கு. அவர் போடும் அரசியல் மாஸ்டர் பிளான்களை நம்ப வைப்பது அந்த மெச்சூரிட்டிதான்!

முதல் பாதியில் சந்தானத்தைப் பயன்படுத்திக் கொண்ட விதம், பின்பாதியில் அவருக்கான காட்சிகளை குறைத்து கார்த்தியை முன்னிலைப்படுத்தியிருப்பதும் இயக்குநரின் சாமர்த்தியத்தைக் காட்டுகிறது. நடனம், சண்டை என கிடைத்த வாய்ப்பிலெல்லாம் அழகாக ஸ்கோர் செய்திருக்கிறார் கார்த்தி!

சந்தானமும் கார்த்தியும் ரஜினி கமலாக அறிமுகமாகிறார்கள். சந்தானத்திடம், தான் சென்னைக்கு வந்த கதையை கார்த்தி சொல்லும் விதம் வித்தியாசம்.. நச்சென்று பதிகிறது.

என்ன... கதாநாயகியான ப்ரணிதாவின் பாத்திரம்தான் சுத்தமாகப் பதியவில்லை. உடன் படம் பார்த்த நண்பரின் கமெண்ட்தான் இதற்கு பொருத்தம்: "ஹீரோயின் அழகா இருக்காங்களா இல்லையான்னு கவனிக்கிறதுக்குள்ள அவங்க ரோல் முடிஞ்சு போச்சேண்ணே!"

பீடி சாமியாராக வரும் நாசரைப் பார்க்கும்போதே, சிரிப்பு எட்டிப் பார்க்கிறது. ஆன்மீகத்தை மார்க்கெடிங் செய்து அவர் சேர்த்த ரூ 1000 கோடியை தேர்தலில் இறைக்க வைத்து ஆட்சியைப் பிடிப்பது அட போட வைக்கிறது!

மோசமான முதல்வராக பிரகாஷ்ராஜ். நிஜ அரசியல் தலைவர்களின் தகிடு தத்தங்களை பிரகாஷ்ராஜ் மூலம் புட்டுப் புட்டு வைக்கிறார்கள். பாலம் கட்டுவதன் பின்னணி, பதவியை பங்கிடும் விதம் என எதிலும் குடும்பத்துக்குப் போகத்தான் மற்றவர்களுக்கு எனும் அந்தத் தலைவர் யாரை நினைவுபடுத்த என்பது தெரியாமல் இல்லை!

கோட்டா சீனிவாசராவ் வழக்கம்போல அருமை.

இட்லிக்கார ஆச்சி ராதிகா, மேயராக பதவி ஏற்க ஒவ்வொரு படிக்கட்டில் கால் வைக்கும்போதும், அவரது கடந்த காலம் நினைவில் வந்துபோவது சூப்பர். எல்லா அரசியல் தலைவரும் பதவி ஏற்கும்போதும், மோசமான உத்தரவுகளில் கையெழுத்திடும்போதும் இப்படி ப்ளாஷ்பேக் கொஞ்சம் எட்டிப்பார்த்தால், அவர்களின் மனசாட்சி சாகாமலாவது இருக்கும்!

ரசிக்கும்படி காட்சிகள் நிறைய இருந்தாலும், அவற்றை ஒரேயடியாகத் திணித்துவிட்டதுபோன்ற உணர்வு. நீளம் வேறு அதிகம். கொஞ்சம் கத்திரி போட்டு ஷார்ப்பாக்கி இருக்கலாம்.

கிரண் இறந்துவிட்டார் என்ற செய்தி வெளியாகும்போதே, அடுத்து என்ன நடக்கும் என்பது தெரிந்துவிடுகிறது.

ஜிவி பிரகாஷ் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கலாம். மனசெல்லாம் பாடலை படமாக்கியிருக்கும் விதம் ஜிலீர்... பிஜி முத்தையாவுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.

முதல் படத்தையே வித்தியாசமாகத் தரவேண்டும் என்ற முனைப்பில், அரசியல் என்ற ஒரு பெரிய கேன்வாஸுக்குள் விளையாடியிருக்கிறார் இயக்குநர் சங்கர் தயாள். சின்னச்சின்ன சறுக்கல்கள் இருந்தாலும், வெற்றி இலக்கைத் தொட்டுவிட்டார்!

-எஸ். ஷங்கர்

 

எனக்கும் ஆசை இருக்கு - ‘சின்னச்சின்ன ஆசை' தொகுப்பாளினி ஆர்த்தி!

Anchor Aarthi S Chinna Chinna Aasai

சலனப்படுத்தாத பேச்சு, துருதுரு செயல்பாடு, அழகான உச்சரிப்பு, எப்போதும் சிரித்த முகம். இவற்றுக்குச் சொந்தமானவர் சின்ன சின்ன ஆசை நிகழ்ச்சி தொகுப்பாளினி ஆர்த்தி. சின்னச் சின்ன ஆசை நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் சாட் பூட் த்ரி ஆடிக்கொண்டிருந்தார். தினந்தோறும் அடுத்தவரின் ஆசையை நிறைவேற்றும் ஆர்த்தியின் ஆசையை நாமும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

"நான் பாரதி கல்லூரியில் எம்.ஏ., பிசினஸ் எக்னாமிக்ஸ் படித்துக் கொண்டிருந்தபோது முழுக்கமுழுக்கத் தமிழில் தொகுத்து வழங்க தொகுப்பாளினி வேண்டும் என்ற மக்கள் தொலைக்காட்சி விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பித்தேன். என் திறமைகளுக்கு மதிப்பு அளித்து இந்த வாய்ப்பை அளித்தார்கள். ஆரம்பத்தில் படித்துக்கொண்டே தொகுத்து வழங்கி வந்த நான் தற்போது முழுநேர தொகுப்பாளினி. எனது கல்லூரி நாட்களில் நானே நாடகங்களை இயக்கி நடித்ததால் மேடை அச்சமின்றி பேசக்கூடிய திறமை உள்ளது. அந்தத் திறமை எனக்குப் பேருதவியாக உள்ளது

சின்னச் சின்ன ஆசை நிகழ்ச்சியை குழந்தைகள் தினத்தன்று வெறும் அரை மணிநேர நிகழ்ச்சியாக நாங்கள் தயாரித்த போதிலும், பார்வையாளர்களின் அதிக வரவேற்பு கிடைத்ததால் வாரந்தோறும் நிகழ்ச்சியாக மாறியது. இதன் மூலம் பெரும்பாலான குடிசைகளைச் சேர்ந்த குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றணும். என்னுடைய ஆசையை நிறைவேற்றவில்லை என்று ஒரு குழந்தைகூட சொல்லக்கூடாது என்பதில் எங்கள் தொலைக்காட்சி நிர்வாகத்தினர் உறுதியாக உள்ளனர்.

மற்ற நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் என்றால், பேசுவாங்களோ என்கிற தயக்கத்தோடு பார்க்கிற ரசிகர்கள், மக்கள் தொலைக்காட்சி தொகுப்பாளர்களை அவங்க குடும்ப உறுப்பினராகப் பாவிப்பதைக் கண்கூடாக காண முடிகிறது. சமீபத்தில் ஒரு நீதிபதி என்னிடம், ‘உன்னை மாதிரி ஒரு பொண்ணைத்தான் என் மகனுக்குத் தேடிக்கொண்டிருக்கேன்'னு சொன்னது மக்களிடையே எனக்குக் கிடைத்த நன்மதிப்பைக் காட்டியது.

தமிழ்தாங்க நம்முடைய தாய்மொழி. அதில் பேசுவதுதான் நமக்கு அழகு. அதுதான் நமக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தும். அந்நிய உணர்வு இல்லாம பக்கமா இருக்கிற மாதிரியான உணர்வை தமிழால்தான் ஏற்படுத்த முடியும்.

நிகழ்ச்சி தொகுப்பு தவிர நிறைய புத்தகம் படிப்பேன். இதற்காக எங்கள் அலுவலகத்தில் ஊழியர்களுக்காகத் தனி நூலகமே அமைத்திருக்கிறார்கள். எத்தனை நிகழ்ச்சிகள் செய்து வந்தாலும், எதிலும் என் தனி அடையாளத்தைப் பதிவு செய்யத் தவறக்கூடாது என்பதுதான் என்னுடைய எதிர்கால ஆசை," என்று சொல்லி அதே டிரேட் மார்க் சிரிப்போடு நன்றி சொன்னார் ஆர்த்தி.

 

டிஸ்கவரி சேனலில் போராட்டக்களத்தில் சிக்கியவர்களின் கதை

I Shouldn T Be Alive

வாழ்க்கையே ஒரு போர்க்களம் என்பார்கள். போராட்டம் மிகுந்த இந்த வாழ்க்கை சூழலில் உயிருக்கு ஆபத்தான சூழலில் சிக்கிக்கொண்டு போராடி மீண்டு வந்தவர்களின் உண்மைக் கதைகளை காட்சிப்படுத்துகிறது டிஸ்கவரி சேனல்.

தினமும் இரவு ஒன்பது மணிக்கு டிஸ்கவரியில் ஒளிபரப்பாகும் `ஐ ஷுட் நாட் பி அலைவ்' நிகழ்ச்சியில் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் முடிவெடுத்தாக வேண்டும் என்ற கட்டாய நிலையில் அவர்கள் எதிர்கொண்ட அனுபவகள் ஆகியவற்றை நேரடியாக தெரிந்து கொள்ளலாம்.

பனி படர்ந்த கிர்கிஸ்தான் காடுகளில் ராட்சஸ பனிப்புயலுடன் நடக்கும் போராட்டம், கோஸ்டா ரிக்காவில் சுறாக்கள் நிறைந்த தண்ணீரில் நடக்கும் பயணம், மான்ட்டனா மலைகளில் கரடிகளின் தாக்குதல்கள், ஆப்பிரிக்காவில் காட்டு விலங்குகளின் தாக்குதல்கள் என பல்வேறுபட்ட ஆபத்தான சூழல்களையும், அவற்றை சமாளிப்பது பற்றியும் விளக்குகிறது, தொடர்.

இதன் ஒவ்வொரு அத்தியாயமும் மனிதர்களின் தாங்குசக்தியை நிரூபிக்கிறது. அசாதரணமான ஆபத்தை எதிர்கொண்டு வெற்றிகரமாக மீண்டவர்கள் தங்கள் அனுபவங்களை மிகத் துல்லியமாக விவரிப்பதை காணலாம்.

கடந்த வாரங்களில் நியூசிலாந்தில் நடைபயணம் மேற்கொள்ளும் இருவரின் கதை ஒளிபரப்பானது. ஒரு பனிச்சுவரை சுற்றி பயணம் மேற்கொள்ளும் இவர்கள் நிலையற்ற ஒரு பாறையின் விளிம்பில் பத்து நாட்கள் சிக்கிக் கொள்கிறார்கள். ஹவாயில் உள்ள 3 லட்சத்து முப்பதாயிரம் ஏக்கர் தேசிய பூங்காவில் பயணம் மேற்கொள்ளும் டூவி, பாதை தவறி ஐந்து நாட்களுக்குப் பின்னர் உயிருடன் திரும்புகிறார். மலை உச்சியில் இருந்து விழும் ஜோர்டான் நிகுரிட்டி நான்கு நாட்களுக்கு காணாமல் போவதையும், நண்பர்கள் கேரி மற்றும் டேவ் பயணம் செய்த எளிய ரக விமானம் கோளாறு ஆனதால் கரடிகள் மிகுந்த அலாஸ்காவில் சிக்கிக்கொள்வதையும் அதிலிருந்து அவர்கள் எவ்வாறு மீண்டனர் என்பதையும் ஒளிபரப்பினார்கள்.

நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் தங்களின் வீர சாகசங்களினால் பார்வையாளர்களை கட்டிப்போடுவதுதான் நிகழ்ச்சிக்கு சிறப்பம்சமாகும்.

 

'ஷேர் ராக்கெட்' : செந்திலின் அதிரடி 'தில்லுமுல்லு'!

Vasanth Tv Comedy Seriyal Thillu Mu

ரியல் எஸ்டேட் விற்பனை வந்தாலும் வந்தது அதை வைத்து காமெடி செய்பவர்கள் அதிகரித்து விட்டனர். பத்திரிக்கைகளில் ரியல் எஸ்டேட் காமெடி பக்கம் பக்கமாக வர ஆரம்பித்து விட்டது. இதனிடையே புது சீரியல் மூலம் ரியல் எஸ்டேட் பிஸினசை பிரித்து மேய களம் இறங்கியுள்ளார் நகைச்சுவை நடிகர் செந்தில்.

வசந்த் தொலைக்காட்சியில் திங்கட்கிழமை தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் காமெடித் தொடர் தில்லுமுல்லு. நடிகர் செந்தில் நடிக்கும் இந்த தொடரில் ஒவ்வொரு வாரமும் ஏதாவது பிஸினஸ் மூலம் ஏமாற்றுபவர்களை அடையாளம் காட்டுபவராக வருகிறார் நடிகர் செந்தில்.

இந்த வாரம் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்பவராக வரும் செந்தில், நகர நெருக்கடியில் வீடு வாங்க பிரியப்படாத ஒருவரிடம் `சந்திரமண்டலத்தில் 2 கிரவுண்டை வாங்கிப் போடுங்கள்' என்கிறார். `சந்திர மண்டலத்திலா?' என்று அதிர்ந்து போகும் அந்த நபரிடம், `எப்படி பூமிக்கு வந்து போவது என்ற பயத்தில் தானே இப்படி கேட்கிறீர்கள். இங்கே சென்னையில் தெருவுக்கு தெரு ஷேர்ஆட்டோ ஓடுவது போல் சந்திரனில் இருந்து அடிக்கடி சென்னைக்கு `ஷேர் ராக்கெட்' வரப்போகிறது. அதில் வந்து சென்னை கோயம்பேட்டில் காய்கறி வாங்கி விட்டு திரும்பிப் போகலாம். எனவே போக்குவரத்து பிரச்சினை இல்லை, என்று நம்ப வைக்கிறார். எப்போதுமே பரபரப்பான தி.நகரில் இடம் கேட்பவருக்கு பக்கத்தில் உள்ள பனகல் பூங்காவை பத்திரம் எழுதி கொடுக்கிறார்.

இந்த ரியல் எஸ்டேட் பிசினஸ் அவரை எங்கே கொண்டு போகிறது என்பதை நகைச்சுவைக் காட்சிகளுடன் இயக்கி இருக்கிறார், ஜெயமணி. செந்திலின் தில்லு முல்லு ரசிகர்களை ரசிக்கவைக்கத்தான் செய்கிறது

 

அடுத்து சகலகலா வல்லவனை ரீமேக் பண்றாங்களாம்... ஹீரோ சூர்யா!

Next Remake Kollywood Is Sakalakala

ரஜினியின் மெகா ஹிட் படமான முரட்டுக்காளையை ரீமேக் செய்து மூக்குடைபட்டதைக் கூட அதற்குள் மறந்துவிட்டு, அடுத்து சகலகலா வல்லவனை ரீமேக் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.

இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கவிருப்பவர் சூர்யா!

1982-ம் வருடம் ஏ.வி.எம். தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் கமல் நடித்து வெளிவந்த படம் சகலகலா வல்லவன். இப்படத்தில் கமல் கிராமத்துவாசி, பட்டணத்துவாசி என இரு வேடங்களில் அசத்தியிருந்தார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அம்பிகா நடித்திருந்தார்.

கதை ஒன்றும் புதிதில்லை. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் - சரோஜாதேவி நடித்த பெரிய இடத்துப் பெண் படத்தைத்தான் சகலகலா வல்லவனாக்கியிருந்தார்கள்.

ஆனால் படத்தின் பெரிய பலம் இசைஞானி இசை. தமிழ் சினிமாவில் எந்த மசாலா படத்துக்கும் அமைந்திராத அளவு மெகாஹிட் பாடல்கள்.

இப்படத்தின் ரீமேக்கில் நடிக்க சூர்யா விருப்பம் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து இப்படத்தை தாங்களே ரீமேக் செய்வதாக ஏவிஎம் அறிவித்துள்ளது.

இதுபற்றி அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளனர் ஏவிஎம் நிறுவனத்தினர்.

தமிழ் சினிமாவில் இந்த அளவுக்கா கதைப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது?!!

 

குழந்தை பிறந்தா குண்டாவது இயற்கை... அதுக்காக ஏடாகூடமா ஏதும் செய்துக்கக் கூடாது! - ஐஸ்வர்யா

Aishwarya Says Life Has Become Quie

குழந்தைப் பெற்ற பெண்கள் குண்டாகத்தான் செய்வார்கள், ஆனால் அதற்காக ஏதும் ஏடா கூடமாக செய்து கொள்ளக் கூடாது. அதை நான் விரும்பவும் இல்லை என்கிறார் ஐஸ்வர்யா ராய்.

இந்திய சினிமாவின் உச்ச நடிகையாகத் திகழ்ந்த ஐஸ்வர்யா ராய், குழந்தை பெற்றபின் குண்டாகிவிட்டார். இதனால் சினிமாவில் நடிப்பதையும் நிறுத்தி விட்டார். எப்போதும் குழந்தையுடனேயே செலவிடுகிறார். வெளியில் செல்லும்போதும் குழந்தையை எடுத்துச் செல்கிறார்.

சமீபத்தில் லண்டனில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கும் கணவர் - குழந்தையோடு சென்றார்.

அப்போது அவரது தோற்ற மாறுதல் குறித்து கேட்டனர்.

ஐஸ்வர்யா கூறுகையில், "குழந்தை பெற்றபின் என் வாழ்க்கையே மாறிவிட்டது. தாயானபின் உடல் அழகிலும் ஆரோக்கியத்திலும் அக்கறை செலுத்துவது இயற்கையாகவே குறைந்து விடுகிறது. அதற்காக நான் கவலைப்படவில்லை. உடல் எடையை குறைப்பதற்காக ஏடாகூடமாக எதுவும் செய்ய விரும்பவில்லை.

பெண்களுக்கு நான் சொல்வதெல்லாம் மன அழுத்தமின்றி சுதந்திரமாக இருங்கள். மனதை வருத்தும் விஷயங்களை பற்றி சிந்திக்காதீர்கள். குடும்பம் முக்கியம். அவர்களுக்காக வாழுங்கள். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் தன்னம்பிக்கை இருக்கும்.

புதுமாதிரியான உணர்வுகள் மனதை ஆக்கிரமித்துள்ளன. தாய்மையின் உன்னதம் பற்றி அறிந்து கொண்டேன். எப்போதும் குழந்தையுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை மேலோங்கி நிற்கிறது.

வெளியே போகும்போதும் குழந்தையை தூக்கிச் செல்ல விரும்புகிறேன். குழந்தை பெற்றதும் நான் குண்டாகி விட்டதாக விமர்சிக்கின்றனர். இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.

என்னை பொறுத்தவரை நல்ல கேரக்டர் மற்றும் கதைகள் அமைந்தால் மட்டுமே மீண்டும் சினிமாவில் நடிப்பேன்," என்றார்.

 

விஸ்வரூபம் பட தலைப்புக்கு திடீர் எதிர்ப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கமலின் 'விஸ்வரூபம் பட தலைப்பை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கமல் நடிக்கும் படங்களின் தலைப்புக்கு அவ்வப்போது சர்ச்சை எழுவது வழக்கம். 'சண்டியர் என்ற பெயர் வைத்தபோது அதை மாற்ற வேண்டும் என்று போராட்டம் நடந்தது. இதையடுத்து 'விரும £ண்டி என பெயர் மாற்றப்பட்டது. 'வசூல் ராஜா எம்பிபிஎஸ் தலைப்பு வைத்தபோது டாக்டர்கள் தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. தற்போது 'விஸ்வரூபம் தலைப்பை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்து மக்கள் கட்சியை சேர்ந்த கண்ணன் என்பவர் இது குறித்து கமலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வாழ்கிறீர்கள். பேரும் புகழும் தமிழ் படங்கள் மூலமே உங்களுக்கு கிடைத்துள்ளது. பிறகு தமிழ் மொழியை கண்டுகொள்ளாதது ஏன்? விஸ்வரூபம் என்பது சமஸ்கிருத வார்த்தை. அதை மாற்றி நல்ல தமிழ் பெயராக வைத்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். எங்களது எண்ணங்களை கமல் புரிந்துகொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழ் மொழி மீதான அக்கறையால் இதை தெரிவிக்கிறோம். தமிழில் பெயர் வைக்காத நிலையில் அதற்கு அரசின் கேளிக்கை வரி சலுகையும் கிடைக்க வாய்ப்பில்லை. இவ்வாறு கண்ணன் கூறி உள்ளார்.


 

ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்க மாட்டேன்: கிஷோர்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'பொன்மாலை பொழுது' படத்தில் ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கிறார் கிஷோர். இதுபற்றி அவர் கூறியதாவது: ஹீரோவுக்கு அப்பாவாக நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தேன். காரணம் அந்த அளவுக்கு எனக்கு வயதாகவில்லை. ஒரு படத்தில் அப்பாவாக நடித்து அது வெற்றிபெற்றுவிட்டால் தொடர்ந்து அப்பா கேரக்டர்களாகவே வரும் என்பதால் மறுத்தேன். ஆனால், 'பொன்மாலை பொழுது' படத்தின் அப்பா கேரக்டர் ரொம்பவே பவர்புல். ரயில்வேயில் வேலை பார்க்கும் சாதாரண ஊழியன் தன் மகனுக்காக எப்படியெல்லாம் காம்ப்ரமைசோடு வாழ்கிறார் என்கிற கேரக்டர். வழக்கமான சினிமா அப்பாவாக இல்லாமல் யதார்த்தமாக இருந்ததால் நடிக்க சம்மதித்தேன். இனி, ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்க மாட்டேன்.


 

கவுதம் படத்தில் நடிக்காதது ஏன்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கவுதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் ஜெய் நடிக்கும் படம், 'தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்'. இதில் அபிநயா ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது. ஆனால், இப்போது ரிச்சா கங்கோபாத்யாய் நடிக்கிறார். இப்படத்தில் நடிக்காதது ஏன் என்று அபிநயாவிடம் கேட்டபோது, அவரது தந்தையும், நடிகருமான ஆனந்த் வர்மா கூறியதாவது: முதலில் கவுதம் கம்பெனியில் இருந்து பேசினார்கள். சில மாதங்களுக்கு முன் ஸ்கிரீன் டெஸ்ட் மற்றும் போட்டோசெஷனில் அபிநயா கலந்துகொண்டார். இப்போது வேறொரு ஹீரோயின் நடிக்கிறார் என்று தகவல் வந்துள்ளது. அபிநயா ஏன் தேர்வாகவில்லை என்ற காரணம் தெரியவில்லை. தமிழில் 'மேளதாளம்', மலையாளத்தில் 'ரிப்போர்ட்டர்', தெலுங்கில் 'சந்துருடு', வெங்கடேஷ் மற்றும் மகேஷ்பாபு தங்கையாக 'சீத்தம்மா வாகிட்லோ ஓ ஸ்ரீமல்லிசெட்டு' படங்களில் அபிநயா நடித்து வருகிறார்.


 

நடிகைகளுக்கு சிபாரிசா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நடிகர் அஜ்மல், இந்த நடிகைதான் தன்னுடன் நடிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்வதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது கூறியதாவது: இது தவறான தகவல். நான் யாரையும் சிபாரிசு செய்வதில்லை. சில இயக்குனர்கள் என்னிடம் கதை சொல்லும்போது எனக்கு ஜோடியாக உள்ள கேரக்டர் பற்றியும் சொல்வார்கள். அப்போது இந்த கேரக்டருக்கு இந்த நடிகை நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்ற என் கருத்தைச் சொல்வேன். அதை வற்புறுத்தமாட்டேன். அவர்கள் வேறு யாரை நடிக்க வைத்தாலும் வருத்தமும் படமாட்டேன். ஹீரோயினுக்கு மட்டுமல்ல, மற்ற கேரக்டர்களுக்கும் இவரைப் போட்டால் நன்றாக இருக்கும் என்று கூறுவேன். அதை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் விருப்பம். தற்போது நடித்து வரும், 'வெற்றிச்செல்வன்' படத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் வேடம். யதார்த்தமான கேரக்டர். நானே டாக்டருக்கு படித்தவன் என்பதால் என் மாணவக்கால பருவத்தை பிரதிபலித்திருக்கிறேன். 'கருப்பம்பட்டி' படத்தில் அப்பா, மகன் என்ற இரு வேடத்தில் நடிக்கிறேன். 'கோ' படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த டீம் மாறிப்போனதால் வாய்ப்பும் கைவிட்டுப்போனது.


 

ஆன்மீகத்தில் மூழ்கினார் மனீஷா

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
குடும்ப பிரச்னையில் சிக்கிய மனீஷா கொய்ராலா, ஆன்மீகத்தில் மூழ்கியதால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வன், இந்தியன், பாபா என பல்வேறு தமிழ் மற்றும் ஏராளமான இந்தி படங்களிலும் நடித்திருப்பவர் மனீஷா கொய்ராலா. கடந்த ஒரு வருடத்துக்கு முன் நேபாளத்தை சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். இதையடுத்து நடிப்புக்கு முழுக்குபோட முடிவு செய்தார். இதற்கிடையில் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக வேதனை அடைந்தார். கணவரை விவாகரத்து செய்யப்போவதாக டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார். இது சர்ச்சையானதால் உடனடியாக அந்த தகவலை டுவிட்டர் பக்கத்திலிருந்து அகற்றியதுடன் கணவருடன் எந்த பிரச்னையும் இல்லை என்று அறிவித்தார். ஆனாலும் மும்பை திரும்பிய அவர் சமீபகாலமாக நள்ளிரவு பார்ட்டிகளுக்கு செல்ல ஆரம்பித்ததுடன் குடித்துவிட்டு தன்னிலை மறக்கத் தொடங்கினார். தள்ளாடியபடி அவர் நள்ளிரவு பார்ட்டியிலிருந்து வெளியேறிய காட்சிகளை படம் பிடித்து மும்பை பத்திரிகை, இணை தளங்களில் வெளியானது. மதுப்பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்ற மனிஷாவுக்கு கமல்ஹாசன் அறிவுரை கூறினார். மேலும் திரையுலக நண்பர்கள் சிலர் அறிவுரை வழங்கினார்கள். அதன்படி ஆன்மீகத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலுக்கு ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் சென்று சாமி கும்பிடுகிறார். பின்னர் கோயில் வளாகத்திற்குள் தனிமையில் அமர்ந்து தியானம் செய்கிறார். சென்னையில் உள்ள பிரபல தியான மையத்திற்கும் அடிக்கடி வருகிறார். ஆன்மிக வகுப்பிலும் அவர் சேர்ந்து பயிற்சி பெறுகிறார். இப்போது தன் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறாராம்.


 

பால் வியாபாரம் போலதான் சினிமாவும்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வெள்ளித்திரை டாக்கீஸ் சார்பில் முஜீப், ஏ.ஆர்.சூரியன் தயாரிக்கும் படம் 'முதல் தகவல் அறிக்கை'. ராயன், கல்பனா ஜெயம் என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ராஜபார்த்திபன் ஒளிப்பதிவு. ரவிராகவ் இசை அமைத்துள்ளார். பா.ராஜகணேசன் இயக்கி உள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குனர் பாலுமகேந்திரா பாடல்களை வெளியிட்டு பேசியதாவது: சினிமாவில் வியாபார படங்கள், கலைப் படங்கள் என்ற வித்தியாசமெல்லாம் கிடையாது. எல்லாமே வியாபார படங்கள்தான். வெற்றி பெற்ற படங்கள் அனைத்துமே வியாபார படங்கள்தான். சினிமா வியாபாரம் என்பது பால் வியாபாரம் போன்றது. கன்றுக்குட்டி குடிக்க வேண்டிய பாலை கறந்து விற்க துணிந்து விட்ட பிறகு அது வியாபாரம் தான். அந்த பாலில் ஒரு சொட்டு தண்ணீர் கூட கலக்காமல் வியாபாரம் செய்யாமல், சரிக்கு சரி தண்ணீர் கலந்து வியாபாரம் செய்யலாம். தண்ணீரில் பாலை கலந்து வியாபாரம் செய்யலாம். அது மாதிரிதான் சினிமாவும். அதில் எந்த அளவுக்கு தண்ணீர் கலக்குகிறீர்கள் என்பதை பொறுத்து அதன் தரம் நிர்ணயம் செய்யப்படும். குறைந்த அளவு தண்ணீர் கலந்து வியாபாரம் செய்யுங்கள்; அது நியாயமான வியாபாரமாக இருக்கும். வணிக சினிமாவுக்குள் இருந்து கொண்டே அற்புதங்களை படைக்கலாம். அதற்கு இளைஞர்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். வினியோகஸ்தர்கள் சங்க செயலாளர் கலைப்புலி சேகரன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். முன்னதாக, படத்தின் இயக்குனர் ராஜகணேசன் வரவேற்றார் முடிவில் தயாரிப்பாளர் ஏ.ஆர்.சூரியன் நன்றி கூறினார்.


 

கிளாமர் காட்டாவிட்டால் ஏற்பார்களா? டாப்ஸி கேள்வி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கிளாமர் காட்டாவிட்டால் ரசிகர்கள் ஏற்பார்களா? என கேட்கிறார் டாப்ஸி. 'ஆடுகளம், 'வந்தான் வென்றான் படங்களில் நடித்தவர் டாப்ஸி. அவர் கூறியதாவது: இந்த ஆண்டு எனக்கு இதுவரை 'தருவுÕ என்ற ஒரு தெலுங்கு படம் மட்டும்தான் ரிலீஸ் ஆகி இருக்கிறது. ஆனாலும் ஓய்வில்லாமல் ஷூட்டிங்கில் கலந்துகொள்கிறேன். இதன் பிறகு வரிசையாக 5 படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. வரும் ஆகஸ்ட் மாதம் 'சஷ்மே பத்தூர்Õ இந்தி படம் ரிலீஸ் ஆகிறது. தமிழ், தெலுங்கில் நடித்துள்ள 'மறந்தேன் மன்னித்தேன்Õ பட ரிலீஸை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். இதில் கிளாமர் காட்டாமல் நடித்திருக்கிறேன். இதை ரசிகர்கள் ஏற்பார்களா? அவர்கள் இதை எப்படி ஏற்பார்கள் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன். இதற்கிடையில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் Ôமதகஜ ராஜாÕ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறேன். இதன் ஷூட்டிங் காரைக்குடியில் தொடங்கியது. தொடர்ந்து பொள்ளாச்சியில் நடக்க¤றது. இது அச்சு அசல் சுந்தர்.சி முத்திரையுடன் கூடிய படமாக இருக்கும். என்னுடைய சொந்த குணாதசியங்களை உள்ளடக்கிய கேரக்டராக இது அமைந்திருக்கிறது. நேரடி தமிழ் பட ஷூட்டிங்கில் நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பிறகு கலந்துகொள்கிறேன். இதனால் கொஞ்சம் நடுக்கமாக உள்ளது. பட குழுவில் உள்ள அனைவருக்கும் தமிழ் நன்றாக தெரியும். தமிழ் தெரியாத ஒரே ஆள் நான்தான். விரைவில் தமிழ் கற்றுக்கொள்வேன். சுந்தர் சி., விஷால், வரலட்சுமி என செட்டில் இருப்பவர்கள் ஜோக் ¢அடித்து பேசும்போது அதை புரிந்துகொள்வேன் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு டாப்ஸி கூறினார்.


 

கல்யாணம் பற்றி கேட்காதீர்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'என் சொந்த வாழ்க்கை பற்றி எதுவும் கேட்காதீர்கள்' என்று ஆவேசப்பட்டார், அனன்யா. அவர் மேலும் கூறியதாவது: என் திருமணம் பற்றி கேட்காதீர்கள். ரசிகர்களுக்கு என் சொந்த வாழ்க்கையைப் பற்றி சொல்ல வேண்டியது இல்லை. நான் நடிக்கும் படங்கள் பற்றி தெரிவிக்க வேண்டியது கடமை. திருமணம் எப்போது நடந்தாலும், பகிரங்கமாக நடக்கும். நானே மீடியாவிடம் சொல்வேன். தமிழில் நடிக்கவில்லை. கன்னடத்தில் நடித்த 'கோகுல கிருஷ்ணா' ரிலீசுக்கு தயார். மலையாளத்தில் பல படங்களில் நடிக்கிறேன். 'ரத்த ரக்ஷக்' படத்தில், முதல்முறையாக அக்கா, தங்கை என இரட்டை வேடத்தில் நடிக்கிறேன். ஒரு வேடம், பேய். தினமும் இரவு ஒரு மணிக்கு மேல் ஷூட்டிங் நடக்கும். இரண்டு மணி நேரத்துக்கு மேல் எனக்கு மேக்கப் போடுவார்கள். சைக்கோ த்ரில்லரான இப்படம், கண்டிப்பாக விருது பெற்றுத் தரும். இதில் 4 கிளைமாக்ஸ் காட்சிகள் இடம்பெறுகிறது.


 

ரூ100 கோடி வசூலில் டாப் யார்? பாலிவுட் நடிகர்கள் கடும் போட்டி

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
குடும்ப பிரச்னையில் சிக்கிய மனீஷா கொய்ராலா, ஆன்மீகத்தில் மூழ்கியதால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வன், இந்தியன், பாபா என பல்வேறு தமிழ் மற்றும் ஏராளமான இந்தி படங்களிலும் நடித்திருப்பவர் மனீஷா கொய்ராலா. கடந்த ஒரு வருடத்துக்கு முன் நேபாளத்தை சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். இதையடுத்து நடிப்புக்கு முழுக்குபோட முடிவு செய்தார். இதற்கிடையில் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக வேதனை அடைந்தார். கணவரை விவாகரத்து செய்யப்போவதாக டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார். இது சர்ச்சையானதால் உடனடியாக அந்த தகவலை டுவிட்டர் பக்கத்திலிருந்து அகற்றியதுடன் கணவருடன் எந்த பிரச்னையும் இல்லை என்று அறிவித்தார். ஆனாலும் மும்பை திரும்பிய அவர் சமீபகாலமாக நள்ளிரவு பார்ட்டிகளுக்கு செல்ல ஆரம்பித்ததுடன் குடித்துவிட்டு தன்னிலை மறக்கத் தொடங்கினார். தள்ளாடியபடி அவர் நள்ளிரவு பார்ட்டியிலிருந்து வெளியேறிய காட்சிகளை படம் பிடித்து மும்பை பத்திரிகை, இணை தளங்களில் வெளியானது. மதுப்பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்ற மனிஷாவுக்கு கமல்ஹாசன் அறிவுரை கூறினார். மேலும் திரையுலக நண்பர்கள் சிலர் அறிவுரை வழங்கினார்கள். அதன்படி ஆன்மீகத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலுக்கு ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் சென்று சாமி கும்பிடுகிறார். பின்னர் கோயில் வளாகத்திற்குள் தனிமையில் அமர்ந்து தியானம் செய்கிறார். சென்னையில் உள்ள பிரபல தியான மையத்திற்கும் அடிக்கடி வருகிறார். ஆன்மிக வகுப்பிலும் அவர் சேர்ந்து பயிற்சி பெறுகிறார். இப்போது தன் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறாராம்.


 

மீண்டும் கைகோர்க்கும் ஷாருக் – ஃபராகான்

Shahrukh Khan Is Not The Only One

பெண் சூப்பர் இயக்குநர் ஃபராகானும், இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கானும் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். படத்துக்கு தலைப்பு ‘ஹேப்பி நியூ இயர்' இந்தப் படம் தொடங்குவதற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

ஃபரா கான், ஷாருக்கான் இணைந்து உருவாக்கிய மே ஹூன் நா, ஓம் ஷாந்தி ஓம் படங்கள் சூப்பர்ஹிட். அதன் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஷாருக்கை தவிர்த்து வேறு ஹீரோக்களை நாடினார் ஃபரா கான். இருவரும் இனி இணைய மாட்டார்கள் என்று நம்பிக் கொண்டிருந்த வேளையில் இதோ மீண்டும் ஒன்றாக படம் எடுக்கின்றனர். ஃபராகானின் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிப்பதாலும், இதுவரை நடித்த படங்களிலிருந்து இப்படத்தின் கதை முற்றிலும் வித்தியாசமாக இருப்பதாலும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார் ஷாருக்.

இந்தாண்டு இறுதியில் தொடங்க உள்ள இந்தப் படத்தை ஷாருக்கானே தயா‌ரிக்கிறார், ஹேப்பி நியூ இயர் படத்தில் மொத்தம் ஐந்து ஹீரோக்களாம். இந்த திரைப்படத்தில் ஒரு புதுமுகத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்பது ஃபரா கானின் ஆசை.

இந்த திரைப்படத்தில் ஷாருக் தவிர்த்து பொம்மன் இரானியை மட்டுமே உறுதி செய்திருக்கிறார் ஃபரா கான். மற்ற மூன்று பேர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. அபிஷேக் பச்சன் நடிக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.