தென்னிந்தியாவின் சக்திவாய்ந்த பெண்மணி ஜெயலலிதா - நடிகர் சுமன்

Jayalalithaa Is The Brave Lady South Says Actor Suman

சென்னை: தென்னிந்தியாவின் சக்தி வாய்ந்த பெண்மணி தமிழக முதல்வர் ஜெயலலிதாதான் என்றார் நடிகர் சுமன்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சுமன்.

தெலுங்கில் 99-வது படமாக 'கன்னிகா பரமேஸ்வரி' என்ற பக்தி படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தெரிவிக்க செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "நிறைய படங்களில் விதவிதமான வேடங்களில் நடித்துவிட்டேன். அன்னமய்யா (அன்னமாச்சார்யா) என்ற படத்தில் ஏழுமலையானாக நடித்தது எனக்கு பெருமையாக உள்ளது. ஏழுமலையானாகவே பலர் என்னை பார்க்கிறார்கள்.

அரசியலில் எனக்கு ஆர்வம் உண்டு. தலைசிறந்த முதல்வர் என்றால் ஜோதிபாசுவைதான் சொல்வேன். எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் சாலையில் நடந்து சென்ற ஒரே முதல்வர் அவர்தான்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா தென் இந்தியாவின் சக்திவாய்ந்த பெண்மணி. அவரை பாராட்ட வார்த்தையே இல்லை. ஏழைகள் நலனுக்காகவே அவர் பல திட்டங்கள் போட்டு செயல்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் மலிவு விலையில் மிகத் தரமான உணவகத்தை சென்னையில் தொடங்கி உள்ளார். தற்போதைய விலைவாசி உயர்வில் மலிவு விலையில் உணவு வழங்கி ஏழைகளின் பசியை போக்கி உள்ளார். யாருக்கும் வராத இந்த யோசனையை அவர் செயல் படுத்தியுள்ளது பாராட்டத்தக்கது.

ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கி வருகிறார். அரிசி கொடுத்தாலே போதும். அதை சமைத்து உப்பு போட்டு சாப்பிட்டால் பசி போயிடும். இப்படி ஏழைகளை மனதில் வைத்தே அவர் திட்டம் தீட்டுகிறார். அவர் ஒரு பெண் என்பதால் தாய்மை உள்ளத்துடன் அனைத்து திட்டங்களையும் போடுகிறார்," என்றார்.

 

மணிரத்னத்திடம் நான் பணத்தை கேட்க மாட்டேன் - இயக்குநர் லிங்குசாமி

Lingusamy Wont Ask Compensation Kadal Loss

கடல் பட நஷ்டத்துக்காக மணிரத்னத்திடமிருந்து நான் பணத்தை திரும்பக் கேட்கமாட்டேன் என்று இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கிய கடல் படத்தை கோவை, மதுரை, சென்னை ஆகிய மூன்று ஏரியாக்களில் வெளியிட்டது லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ். இந்த உரிமையை 6 கோடி கொடுத்து வாங்கியிருந்தார்கள்.

படம் வெளிவந்த பிறகு ஒரு கோடி மட்டுமே வசூலானதாகவும், ரூ 5 கோடி நஷ்டம் ஏற்பட்டதால் அதை மணிரத்னம் திருப்பித் தரவேண்டும் என லிங்குசாமியின் தம்பி சுபாஷ் சந்திர போஸ், போலீஸ் கமிஷனரை சந்தித்து மனு கொடுத்தார். இது பரபரப்பைக் கிளப்பியது. இந்த நிலையில் அதை மறுத்து லிங்குசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கை:

கடல் திரைப்படத்தின் விநியோக உரிமையை சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று ஏரியாக்களுக்கு வாங்கி வெளியிட்டது எங்களது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்.

இந்தப் படத்தை வாங்கியவர்கள் மணிரத்தினத்திடம் நஷ்ட ஈடு கேட்டு வருவதாக தொடர்ந்து செய்திகள் அடிபட்டு வருகிறது.

ஒரு படம் வெற்றி பெறுவது, தோல்வி அடைவது, லாபம், நஷ்டம் எல்லாம் நம் கையில் இல்லை.

மணி சார் மிகப்பெரும் கலைஞன். எனக்கு மானசீக குரு. அவருடைய பல படங்கள் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்துள்ளது. அவரிடம் போய் உங்கள் படத்தை வாங்கினேன் நஷ்ட ஈடு கொடுங்கள் என்று சொல்லி எந்த சூழ்நிலையிலும் கேட்க மாட்டேன்.

இது சார்பாக நானோ என் அலுவலகத்தில் இருந்தோ யாரும் போக மாட்டோம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு லிங்குசாமி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

 

அமெரிக்க மாப்பிள்ளை தயார்... திருமணத்துக்குத் தயாராகும் அசின்?

Asin Marry Us Citizen   

அமெரிக்காவில் செட்டிலாகியுள்ள கோடீஸ்வர இந்திய இளைஞரை அசின் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்யத் தயாராகி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கோலிவுட்டில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த அசின், மும்பையில் செட்டிலாகிவிட்டார். 6 இந்திப் படங்களில் இதுவரை அவர் நடித்துள்ளார். அவற்றில் நான்கு படங்கள் ரூ 100 கோடிக்கும் மேல் வசூலித்தவை.

ஆனாலும் அசின் புதிய படங்கள் எதையும் இப்போது ஒப்புக் கொள்ளவில்லை. தமிழில் மட்டும் ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் அவரை நடிக்க வைக்க பேசி வருகிறார்கள்.

இதற்கிடையே அசின் கிட்டத்தட்ட மாதத்துக்கு ஒரு முறையாவது அமெரிக்கா சென்று வருவது வழக்கமாகிவிட்டது.

அங்குதான் அசினின் உள்ளம் கவர்ந்த இளைஞர் இருக்கிறாராம். அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும், புதிய படங்களை அசின் ஒப்புக் கொள்ளாமல் தவிர்ப்பதன் ரகசியம் இதுதான் என்கிறார்கள் பாலிவுட்டில்.

கடைசியாக தமிழில் ஒரு படம் நடித்துவிட்டு திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகிவிட திட்டமிட்டிருக்கிறார் அசின் என்கிறார்கள்.

 

சென்சார் குழுவை மாபியா என்பதா? - அமீர் மீது போலீஸில் புகார்

Censor Board Member Files Complaint On Ameer

திரைப்பட தணிக்கை குழுவை மாபியா கும்பல் என்று கூறிய டைரக்டர் அமீர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மத்திய திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் புகார் தெரிவித்துள்ளார்.

அமீர் இயக்கி, சமீபத்தில் திரைக்கு வந்த ‘ஆதி-பகவன்' படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அமீர், யு சான்றிதழ் பெற தணிக்கை குழுவினர் கட்டணம் வசூலிக்கிறார்கள் என்றும், ஒரு மாபியா கும்பல் போல் தணிக்கைக் குழு செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

அமீரின் இந்த கருத்து சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மத்திய திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் ஆர்.என்.அமிர்தராஜா என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், "5-2-2013 அன்று திரைப்பட இயக்குனர் அமீர், ஆதி-பகவன் திரைப்படத்தை தணிக்கை செய்வதற்கு சமர்ப்பித்தார். அந்த படத்தை தணிக்கை செய்தபோது அதில் அதிகமாக ஆபாச காட்சிகள் இருந்ததால் ஏ சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும் என்று குழுவின் சார்பாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு இயக்குனர் அமீர், அந்த காட்சிகள் இருந்தால்தான் எனது திரைப்படம் தியேட்டர்களில் நல்ல நிலையில் வெற்றிகரமாக ஓடும் என்றும், அதை அனுமதிப்பதற்கு உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் நான் தர தயார் என்றும் பேசினார்.

அதற்கு அவரை கண்டித்து உறுப்பினர்கள் மறுத்துவிட்ட நிலையில் சில காட்சிகளையாவது எடுத்துவிடுகிறேன் ஏ சான்றிதழ் இல்லாமல் தாருங்கள் என்று கேட்டார்.

அதற்கும் தணிக்கை குழு மறுத்துவிட்டு, உங்கள் படத்திற்கு ஏ சான்றிதழ் மட்டுமே வழங்க முடியும் என்று கூறி ஏ சான்றிதழ் வழங்கிவிட்டோம். அதன்பிறகு இயக்குனர் அமீர், நான் யார் என்று தமிழ்நாட்டிற்கே தெரியும். நீங்கள் எனது படத்திற்கு யு சான்றிதழ் வழங்கவில்லை என்றால் தணிக்கை குழுவினரைப் பற்றி அவதூறான செய்திகளை பத்திரிகைகளில் வெளியிடுவேன் என்றும், பல பத்திரிகைகளின் பேட்டிகள் மூலம் உங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவேன் என்றும் மிரட்டினார்.

நாங்கள் அவர் மிரட்டலுக்கு எல்லாம் அடிபணியாமல் ஆதி-பகவன் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளோம். அதன்பிறகு திரைப்படம் தியேட்டரில் வெளியான பிறகு இயக்குனர் அமீர் திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர்களை கேவலமாக திட்டியும், மிரட்டியும் உள்ளார்.

தற்போது இந்திய திரைப்பட தணிக்கை குழு ஒரு மாபியா கும்பல் போல் செயல்படுகிறது என்றும், மேலும் எல்லாம் படத்திற்கும் பணம் கொடுத்தால்தான் சான்றிதழ்கள் வழங்குகிறார்கள் என்றும் தவறான செய்தியை தெரிவித்துள்ளார்.

இதனால் இந்திய அரசின் மத்திய தணிக்கைக்குழுவின் நற்பெயரையும், புகழையும் களங்கப்படுத்தி, என்னை போன்ற மத்திய தணிக்கை குழு உறுப்பினர்களுக்கு தீராத மன உளைச்சலையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளார்.

எனவே, இந்திய அரசின் மத்திய தணிக்கை குழு உறுப்பினர்கள் பற்றி எந்தவித அடிப்படை ஆதாரமுமின்றி அவதூறாக பேசிய இயக்குனர் அமீர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, அவரிடம் இருந்து எங்களுக்கு மிரட்டல் வந்துள்ளதால் தகுந்த பாதுகாப்பு அளிக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.

ஏற்கெனவே விஸ்வரூபம் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கியதில் பணம் விளையாடியிருக்கிறது என்று நீதிமன்றத்திலேயே தமிழக அரசு குற்றம் சாட்டியது நினைவிருக்கலாம்.

 

கை தூக்கி 'நெகிழ' விட்டு இசை நிகழ்ச்சிக்கு வந்தவர்களை நெளிய வைத்த மரியா கேரி

அட்லாண்டா: அட்லாண்டாவில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிரபல பாடகி மரியா கேரி, அவர் கைகளை மேலே தூக்கியபோது டிரஸ் மேலே தூக்கி மார்புகள் வெளியே தெரியும் நிலை ஏற்பட்டது.

முக்கியப் பிரபலங்கள் குறிப்பாக நடிகைகள் அணியும் டிரஸ் சில நேரங்களில் எக்குத்தப்பாக கழன்று அல்லது லூஸாகி பொது இடத்தில் அவர்களை சங்கோஜப்படுத்துவது வழக்கம். இது இப்போது பரவலாகியும் வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்க பாடகி மரியா கேரியும் இப்படிப்பட்ட டிரஸ் சிக்கலில் மாட்டித் தவித்தார். ஆனால் அவர் பெரிதாக கவலைப்படவில்லை. அட்லாண்டாவில் பிப்ரவரி 28ம் தேதி அவர் ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அப்போது அவர் போட்டிருந்த ஆடை சற்றே நெகிழ்ந்து அவரது மார்பு காம்புப் பகுதி லேசாக வெளியே தெரிந்து விட்டது. அது லைவ் ஷோ என்பதால் பலரும் இதைப் பார்க்க நேரிட்டது.

mariah carey wardrobe malfunction

மேடையில் அவரும் ரேப்பர் ஜெர்மைன் துப்ரியும் சேர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தபோதான் இந்த நிப்பிள் காட்சி... மரியா தனது இரு கைகளையும் மேலே தூக்கியபோது அவரது ஸ்டிராப் இல்லாத டிரஸ் சற்றே மேலே தூக்கிக் கொண்டது. இதையடுத்து அவரது மார்புகள் லேசாக வெளியே தெரிந்து விட்டது. அப்படியும் கையை கீழே இறக்காமல், தூக்கியபடியே வைத்திருந்தார் கேரி.

ஒவ்வொருத்தருக்கும் ஒரு பிரச்சினை.. மரியா போன்ற பெருந்தன்மையான மனசு கொண்டவர்களுக்கு இப்படிப் பிரச்சினை.

 

வரலாறு படத்தில் அஜீத்துக்கு பதில் விஜய் நடித்திருந்தால்? ஒரு கற்பனை

What If Vijay Acted Ajith S Varalaru

சென்னை: அஜீத் குமார் நடித்த வரலாறு படத்தில் இளைய தளபதி விஜய் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் அஜீத் குமார் மூன்று வேடங்களில் நடித்த படம் வரலாறு. 2006ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் அஜீத் அசின், கன்னிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அப்பா அஜீத் பரதநாட்டியக் கலைஞராக வந்து கலக்கி இருப்பார். அவரிடம் ஒரு மகனும்(அஜீத்), அம்மா கனிகாவிடம் ஒரு மகனும் (அதுவும் அஜீத்தே) வளர்வார்கள். அதில் பெண் போன்று நளினத்துடன் நடக்கும் தன்னைப் போன்று தன் மகனும் வந்துவிடக்கூடாது என்று அப்பா அஜீத் வீல் சேரிலேயே இருப்பார்.

இந்த படத்தில் டான்ஸில் கலக்கும் விஜய் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை. விஜயுடன் ஒப்பிடுகையில் அஜீத் டான்ஸ் சுமார் தான். ஆனாலும் டான்ஸ் பின்னணி இல்லாத அஜீத் வரலாறு படத்தில் பரத நாட்டியக் கலைஞராக அற்புதமாக நடித்திருந்தார். இது அஜீத் நடித்தற்காக சொல்லவில்லை. அதே கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருந்தால் அஜீத் அளவுக்கு நன்றாக வந்திருக்குமா என்று தெரியவில்லை.

மேலும் விஜய்க்கு பரத நாட்டிய உடை அணிந்து முக பாவனைகள் செய்வது, நடையில் நளினம் காட்டுவது போன்றவை அவருக்கு வந்திருக்கும் என்றாலும் அது அஜீத் அளவுக்கு நிச்சயமாக இருந்திருக்காது.

இன்னொரு விஷயம் என்னவென்றால் விஜய்க்கு அவ்வளவாக அழ வராது. அவர் கண் அருகே கைகளை கொண்டு சென்றால் அவர் அழுகிறார் என்று அர்த்தம் செய்து கொள்ள வேண்டும். அதனால் அழுகிற காட்சிகளில் விஜய் அழுதால் இன்னும் கொஞ்ச ப்ளீஸ் இந்த தடவையாவது கொஞ்சம் அழுங்க என்று சொல்லத் தோன்றும்.

அசினை காதலிக்கும் அஜீத் கதாபாத்திரம் விஜய்க்கு பொருந்தியிருக்கும். கனிகாவுடன் இருக்கும் மகன் அஜீத் மற்றும் பரத நாட்டியக் கலைஞர் அஜீத் கதாபாத்திரங்கள் விஜய்க்கு அவ்வளவாக பொருந்தியிருக்காது.