ஹாலிவுட், பாலிவுட் சினிமாக்காரர்கள் விரும்பும் புதுச்சேரி!

Tags:



புதுச்சேரி எனும் பாண்டிச்சேரியில் சினிமா எடுத்தால் ஓடாது என்று ராசி பார்த்து வந்தது ஒரு காலம்.

ஆனால் இன்று நிலைமை தலைகீழ். பெரும்பாலான படங்களின் ஒரு காட்சியாவது புதுச்சேரியில் எடுக்கப்படுவது வழக்கமாக உள்ளது. தமிழ் சினிமாவை விடுங்கள்… பாலிவுட், ஹாலிவுட் என சர்வதேச சினிமாக்கள் எடுக்கப்படும் இடமாக மாறியுள்ளது புதுச்சேரி.

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் மூன்று ஹாலிவுட் படங்களின் படப்பிடிப்பு இங்கு நடைபெற்றுள்ளது.

இந்தி நடிகர் அமீர்கான், நடிகை கரீனாகபூர் நடிக்கும் புதிய படத்தின் படிப்பிடிப்பும் சமீபத்தில் இங்கு தொடங்கியது. இந்த படத்தில் நடிகர் அமீர்கான் கிரைம் பிராஞ்ச் போலீஸ் அதிகாரியாகவும் அவருக்கு ஜோடியாக கரீனா கபூரும் நடிக்கின்றனர். இன்னொரு ஜோடியாக நடிகை ராணிமுகர்ஜி நடிக்கிறார். புதுவை அண்ணாமலை ஓட்டல், எழில் மிகுந்த பகுதிகளான ஊசுடு ஏரி, பிள்ளையார்குப்பம், புதுவை கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

இந்தப் படம் தவிர, ஏராளமான தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்கள் புதுவையில் படமாகின்றன. புதுச்சேரியில் படப்பிடிப்பு நடத்துவோருக்கு ஏராளமான சலுகைகள் தரப்படுவதால், இங்கு படப்பிடிப்பு நடத்துவதையே அனைவரும் விரும்புகிறார்கள்.

இதைத் தொடர்ந்து புதுவையிலேயே படம் தயாரிப்பதற்கான ஸ்டுடியோ உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தரவும் அரசு முடிவு செய்துள்ளது.

 

மாவீரன்... ஒதுங்கியது ரெட் ஜெயன்ட்?

Tags:



சிரஞ்சீவி மகன் ராம் சரண் தேஜா நடித்து தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் மகதீரா.

இந்தப் படம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் மாவீரன் என்ற பெயரில் வெளியாகிறது.

ஆரம்பத்தில் இந்தப் படத்தை கலைப்புலி தாணு வாங்கி, கே பாக்யராஜை வசனம் எழுத வைத்து டப் செய்தார். பின்னர் படத்தைப் பார்த்த உதயநிதி ஸ்டாலின் இந்தப் படத்தை தானே வெளியிடுவதாகக் கூறி நல்ல விலைக்கு வாங்கினார். படத்தின் விளம்பரங்கள், ட்ரெயிலர்களிலும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் வழங்கும் என்று போடப்பட்டிருந்தது.

ஆனால் இப்போது அனைத்து விளம்பரங்களிலும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ரெட்ஜெயன்ட் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

கீதா ஆர்ட்ஸ், அல்லு அரவிந்த் வழங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறாரா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து விசாரிக்கையில், படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனமே நேரடியாக மே 27-ம் தேதி வெளியிடுவதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் உதயநிதி தரப்பில் எதுவும் சொல்லப்படவில்லை. ரெட் ஜெயன்ட் பெயர் இல்லாமல் வருவதுதான் இப்போதைக்கு ஸேஃப் என்று நினைத்துவிட்டார்கள் போலிருக்கிறது, சிரஞ்சீவி தரப்பில்.

எல்லாம் அரசியல்!!

 

ரஜினியைப் பார்க்க பெங்களூரிலிருந்து வந்த 200 ரசிகர்கள்!

Tags:



சென்னை: உடல்நலக் குறைவால் ராமச்சந்திரா மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினியைக் காண 20 வேன்களில் 200 ரசிகர்கள் பெங்களூரிலிருந்து வந்துள்ளனர்.

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் ரஜினி கடந்த 13-ந் தேதி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினியின் உடல்நிலை நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ரஜினியின் உடல்நிலை குறித்து வெளிவரும் வதந்தியால் ரசிகர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

அவர்கள் கோவில்களில் சிறப்பு பூஜை, அங்க பிரதட்சணம், மண்சோறு சாப்பிட்டும் வருகிறார்கள். தினமும் ஏராளமான ரசிகர்கள் ரஜினி அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை முன்பு அவரை பார்க்க வருகிறார்கள். இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர்கள் யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை.

இந்த நிலையில் ரஜினியின் உடல்நிலை குறித்து அறிந்த பெங்களூர் ரசிகர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர், வேன்-ரெயில்களில் சென்னை வந்தனர். அவர்கள் ரஜினி சிகிச்சை பெற்று வரும் ராமச்சந்திர மருத்துவமனை முன்பு திரண்டு உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரி முன்பு ரஜினி நலம் பெற வேண்டும் என கோஷமிட்டனர். அப்போது கையில் ரஜினி மன்ற கொடியும், பதாகைகளும் வைத்து இருந்தனர். பெங்களூரை சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருவர் கூறுகையில், “எங்கள் தலைவர் ரஜினி நலமுடன் இருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். அவரை பார்க்கும் ஆசையில் பெங்களூர் சேஷாத்திரி நகர், அல்சூர், ஏர்போர்ட் சாலை பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் இன்று சென்னை வந்து உள்ளோம்.

ஆனால் ரஜினியை பார்க்க மருத்துவமனை உள்ளே அனுமதிக்கவில்லை. இது வருத்தமாக உள்ளது. எப்படியோ, அவர் குணம் அடைந்தாலே போதும்,” என்றார்.

 

உதவிக்கு ஆண் செவிலியர்களை அனுப்பச் சொன்ன ரஜினி!

Tags:



சென்னை: ராமச்சந்திரா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவரும் ரஜினி, தனக்கு உதவ பெண் செவிலியர்களுக்கு பதில் ஆண் செவிலியர்களை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.

ரஜினிக்கு அமெரிக்க டாக்டர்களின் ஆலோசனைப்படி, தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோய்த் தொற்றைத் தவிர்க்க அவரை பார்ப்பதற்கு விவிஐபி பார்வையாளர்கள் உள்பட யாரையுமே அனுமதிப்பதில்லை மருத்துவமனை நிர்வாகம்.

டயாலிசிஸ் சிகிச்சைக்குப் பிறகு அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துமனை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டாக்டர்களின் ஆலோசனைப்படி, தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அவரைப் பார்ப்பதற்கு பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் மட்டும் அந்த அறைக்குள் அனுமதிக்கப்படுகிறார். வேறு யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.

நேற்று அவரை படுக்கையில் உட்கார வைப்பதற்கு பெண் செவிலியர்கள் உதவ வந்தார்கள். அவர்களிடம், “ஆண் செவிலியர்கள் வரச்சொல்லுங்கள்” என்று ரஜினி கேட்டுக் கொண்டார். ஆண் செவிலியர்கள் வந்து அவரை படுக்கையில் உட்கார வைத்தார்கள்.

அமெரிக்காவில் இருந்து மருத்துவ ஆலோசனை கூறிவரும் டாக்டர்கள் அநேகமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு இன்று அல்லது நாளை வரவழைக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

திருநாவுக்கரசர்

முன்னாள் மத்திய அமைச்சர் சு.திருநாவுக்கரசர் நேற்று ராமச்சந்திரா மருத்துவமனைக்கு வந்தார். ரஜினிகாந்தை பார்ப்பதற்கு அவர் அனுமதிக்கப்படாததால், அவருடைய உதவியாளர் சுப்பையாவிடம் உடல்நலம் விசாரித்துவிட்டு, ரஜினிகாந்த் விரைவில் உடல் நலம் பெற திருநாவுக்கரசர் வாழ்த்து தெரிவித்தார்.

டாக்டர்கள் அறிக்கை

ரஜினிகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருடைய இதய துடிப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு ஆகியவை சீராகியுள்ளதாகவும் மருத்துவமனை நேற்று தனது செய்திக் குறிப்பில் தெரிவித்திருந்தது.

ஐஸ்வர்யா பேட்டி

ரஜினிகாந்தின் உடல்நிலை பற்றி நேற்று அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா கூறும்போது, “அப்பாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. அவர் விரைவாக குணம் அடைந்து வருகிறார். ஆண்டவனின் அருளும், ரசிகர்களின் பிரார்த்தனைகளும்தான் இதற்கு காரணம்,” என்றார்.

சரத்குமார் பங்கேற்பு

ரஜினிகாந்த் விரைவில் பூரண குணம் அடைய வேண்டி, தமிழ்நாடு முழுவதும் அவருடைய ரசிகர்கள் கோவில்களில் விசேஷ பூஜைகளும், பிரார்த்தனைகளும் செய்து வருகிறார்கள். ஆவடியில், நடிகர் ராகவேந்திரா லாரன்ஸ் கட்டியுள்ள ராகவேந்திரர் கோவிலில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணிக்கு கூட்டு பிரார்த்தனை நடக்கிறது. அதில், நடிகர் சங்க தலைவர் சரத்குமாருடன் ராகவேந்திரா லாரன்சும் கலந்துகொள்கிறார்.

7 நாட்கள் அன்னதானம்

தொடர்ந்து 7 நாட்கள் கூட்டு பிரார்த்தனையும், தினமும் ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்க ராகவேந்திரா லாரன்ஸ் ஏற்பாடு செய்துள்ளார். அதில், நடிகர்-நடிகைகள் பங்கேற்கிறார்கள்.

சென்னை அமைந்தகரை பொன்னுவேல் பிள்ளை தோட்டத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில், ரஜினிகாந்த் பரிபூரண குணம் அடைய வேண்டி சிறப்பு யாகமும், பூஜையும் நடத்தப்பட்டது. ரசிகர்கள் சார்பில் அன்னதானமும் நடந்தது.

 

இசபெல் மருத்துவமனையில் ரஜினிகாந்த்: புகைப்படம் வெளியிட்டார் தனுஷ்

Tags:



ரஜினி நலமுடன் உள்ளார் என்று எத்தனையோ முறை செய்தியாக வெளியிட்டும் கூட ரசிகர்களுக்கு ஒரு சின்ன உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. காரணம், அவரது திருமுகத்தை ஒருமுறையாவது புகைப்படமாக, வீடியோவாகப் பார்க்க வேண்டும் என்பதால்.

இந்த நிலையில் ரஜினியின் மருமகன் நடிகர் தனுஷ், அவரைச் சந்தித்தபோது தனது மொபைலில் எடுத்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்தப் படம்தான் நீங்கள் இங்கே பார்ப்பது. மூத்த மகள் ஐஸ்வர்யாவுடன் கட்டை விரலை உயர்த்திக் காட்டி, நான் நலமுடன் இருக்கிறேன் என்று கூறுவது போல அவர் போஸ் கொடுத்துள்ளார்.

ரஜினி ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி வெளியானதால் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளனர். இஸபெல் மருத்துவமனையில் இரண்டாம் முறை அவர் அனுமதிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படம் இது.

இருப்பினும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் எடுக்கப்பட்ட புதிய படங்களை விரைவில் தருவதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.

 

'எனது பிரியமான ரஜினி விரைவில் குணமடைய வேண்டும்!'- ஷாருக் உருக்கம்

Tags:



மும்பை: “எனது பிரியமான ரஜினி விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று பாலிவுட் நடிகர் தேவ் ஆனந்த் கூறியுள்ளார்.

பாலிவுட் நடிகர் நடிகைகள் மற்றும் கலைஞர்கள் ரஜினி குணமடைய பிரார்த்தனை செய்தும் வாழ்த்துக்கள் கூறியும் வருகின்றனர்.

பழம்பெரும் நடிகர் தேவ் ஆனந்த், “‘எனது பிரியமான ரஜினி விரைவில் குணம் அடைய பிரார்த்திக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

நடிகர் ஸாரூக்கான் தனது ‘ட்விட்டர்’ தளத்தில், “கிரிக்கெட் போட்டியிலிருந்து நான் திரும்பியபோது, ரஜினி சாருக்கு உடல்நிலை சரியில்லை என்று அறிந்து கவலைப்பட்டேன். அவர் எங்கள் சூப்பர் ஹீரோ. கடவுள் அருளால் அவர் விரைவில் குணம் அடைவார்’ என்று ஷாருக்கான் எழுதி உள்ளார்.

ரஜினி விரைவில் குணம் அடைய பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமிதாப் பச்சன்

ரஜினியின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவரான அமிதாப் பச்சன் ரஜினி நலம் பெற பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “ரஜினியின் உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்பது அவரது அன்பர்கள் அனைவரையும் மிகவும் பாதித்துள்ளது. அவரிடம் நான் பேசினேன். அவர் மனைவி லதாவிடம் தொடர்ந்து பேசிக் கொண்டுள்ளேன். ரஜினி குணமடைந்து வருவதாக லதா என்னிடம் கூறினார். மிக விரைவில் அவர் நலம்பெற்று வரவேண்டும் என பிரார்த்திக்கிறேன்,” என்றார்.

 

ரஜினியை நேரில் காண சரத்குமாருக்கு அனுமதி மறுப்பு

Tags:



சென்னை: ரஜினியை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க மருத்துவமனைக்குப் போன நடிகர் சரத்குமாருக்கு அனுமதி தரப்படவில்லை. எனவே அவர் ரஜினியின் மனைவி லதாவிடம் நலம் விசாரித்துவிட்டு திரும்பினார்.

ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்தைச் சந்தித்து நலம் விசாரிப்பதற்காக அவர் வெள்ளிக்கிழமை பிற்பகல் போரூர் சென்றார், நடிகர் சங்கத் தலைவரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார்.

நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாக்கவும், நுரையீரல் பாதிப்புக்கு உரிய சிகிச்சையை அளிக்கவும் தீவிர சிகிச்சைப் பிரிவில் ரஜினி அனுமதிக்கப்பட்டுள்ளதால், பார்வையாளர்கள் யாரும் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை.

இதற்கு முன் ரஜினியைப் பார்க்கச் சென்றவர்களில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பத்திரிகையாளர் சோ மட்டுமே ரஜினியை நேரில் சந்தித்துப் பேசியதாக தெரிவித்தனர்.

விஜயகாந்த், விஜயகுமார் இருவரும் ரஜினியைப் பார்க்க வந்தபோது, அவர் தூங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்பட்டதால், லதாவிடம் நலம் விசாரித்துவிட்டுச் சென்றனர்.

இதேபோல சரத்குமாரும் ரஜினியை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க முடியவில்லை.

எனவே ரஜினிகாந்த்தின் உடல் நிலை குறித்து அவர் மனைவி லதாவிடம் கேட்டறிந்த பின் புறப்பட்டுச் சென்றார் சரத்குமார்.

 

ரஜினிக்காக பிரார்த்தனை செய்யும் ஹன்ஸிகா!

Tags:



திரையுலகின் புகழ்மிக்க மனிதரான ரஜினி விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக நடிகை ஹன்ஸிகா மோத்வானி தெரிவித்தார்.

‘மாப்பிள்ளை’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. தற்போது விஜய்யுடன் ‘வேலாயுதம்’ படத்தில் நடித்து வருகிறார்.

ரஜினி உடல்நலமில்லாமல் இருப்பது மிகுந்த வேதனை தருவதாக அவர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “தனுசுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது. போனில் தொடர்பு கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்.

அப்போது தனுஷ் என்னிடம் மிகவும் வருத்தமாய் பேசினார். ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருப்பதால் தேசிய விருது சந்தோஷத்தை கொண்டாட முடியவில்லை என்றார்.

ரஜினி திரையுலகில் புகழ் பெற்ற மனிதர். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என தனுஷிடம் கூறினேன். நானும் ரஜினிக்காக பிரார்த்திக்கிறேன்,” என்று கூறியுள்ளார்.

 

ஹீரோயின்... முழு நிர்வாணமாகும் ஐஸ்வர்யா ராய்!

Tags:



ஹீரோயின் என்ற படத்துக்காக ஆடையில்லாமல் முழு நிர்வாணத்துடன் நடிக்கிறாராம் நடிகை ஐஸ்வர்யா ராய்.

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பச்சன் முன்பு பெங்காலி படத்தில் அரை நிர்வாணமாய் நடித்து பரபரப்பூட்டினார். பின்னர் அது தாசி எனும் பெயரில் தமிழில் வெளியானது.

இந்நிலையில் ‘ஹீரோயின்’ எனும் படத்தில் ஆடையில்லாமல் முழு நிர்வாணமாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராய் என செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரபல இயக்குநர் மதுர் பண்டார்கர் இயக்கும் இந்தப் படத்தில், நிர்வாண காட்சியில் நடிக்க முதலில் தயங்கிய ஐஸ், பின்னர் படத்தின் கதையை முழுமையாக கேட்ட பிறகு, கணவரின் சம்மதத்துடன் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

முழுக்க முழுக்க ஒரு நடிகை சினிமா உலகில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள எப்படி எல்லாம், யார் யாரையெல்லாம் அனுசரித்து போக வேண்டி இருக்கிறது என்பதைப் பற்றிய கதை இது.

பொதுவாக மதுர் பண்டார்கள் படம் என்றால் பரபரப்புக்கும் சர்ச்சைக்கும் பஞ்சமிருக்காது. நடிகையை மையப்படுத்தி வரும் இந்தப் படத்தில் என்னென்ன சர்ச்சைகளை கிளப்பப் போகிறாரோ மதுர் பண்டார்கர், என்கிறார்கள் பாலிவுட் வட்டாரத்தில்.