எஸ்ஏசிக்கு ஒத்துழைப்பு இல்லை - அதிருப்தி கோஷ்டி பிடிவாதம் - நாளை போட்டி பொதுக்குழு!

சென்னை: தயாரிப்பாளர் சங்கத் தலைவராக எஸ் ஏ சந்திரசேகர் இருக்கக் கூடாது என்பதில் தயாரிப்பாளர் சங்கத்தின் போட்டி நிர்வாகிகள் மிகத் தீவிரமாக உள்ளனர்.

இப்ராகிம் ராவுத்தர் தலைமையில் செயல்படும் இவர்கள் நாளை போட்டி பொதுக்குழுவை ராதா பார்க் இன் ஹோட்டலில் கூட்டியுள்ளனர்.

ஆனால் இதனை சட்டவிரோதம் என அறிவித்துள்ள எஸ் ஏ சந்திரசேகரன், இந்தப் பிரச்சினை சுமூகமாகிவிடும் என முன்பு கூறியிருந்தார். நாங்கள் அண்ணன் தம்பிகள் மாதிரி, நாளை சரியாகிவிடுவோம் என்றும் சொல்லியிருந்தார்.

ஆனால் அவர் நினைப்பு தவறு என்று கூறியுள்ளனர் அதிருப்தி கோஷ்டியினர்.

இன்னொரு பக்கம், அதிருப்தியாளர்களில் கணிசமானோரை தன்பக்கம் இழுக்கும் முயற்சியில் எஸ் ஏ சி வெற்றி பெற்றுவிட்டார் என்கிறார்கள்.

பிஎல் தேனப்பன் போன்ற முக்கியப் பிரமுகர்களை தன் பக்கம் இழுப்பதில் வெற்றிகண்டுள்ளார் எஸ் ஏ சந்திரசேகரன்.

அதிருப்தியாளர்கள் அறிவித்துள்ள நாளைய பொதுக்குழு கூடுமா... கூடினாலும் வெற்றி பெறுமா? நாளை தெரிந்துவிடப் போகிறது!

இதற்கிடையே பெப்சியுடன் பேச்சு நடத்த உள்ள உயர்மட்ட குழு பற்றிய விவரத்தை வெளியிட்டுள்ளார் எஸ் ஏ சந்திரசேகரன். இந்த குழுவில் கோவைத் தம்பி, கலைஞானம், ஏ.எல். அழகப்பன், கே.டி. குஞ்சு மோன், ஆர்.வி. உதயகுமார், அமுதா துரைராஜ், சங்கிலி முருகன், சந்திரபிரகாஷ் ஜெயின், மாதேஷ், எம். கபார், ராமராஜன், ராதாரவி, சீனிவாசன் உள்ளிட்ட 15 பேர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் எஸ்ஏ சந்திரசேகரன் தலைமையில் இன்னுமொரு பொதுக்குழு கூட உள்ளது. இதற்கு போலீஸ் பாதுகாப்பு கேட்க முடிவு செய்துள்ளாராம் அவர்.
 

அடுத்த படத்துக்கு தயாராகும் ஐஸ்வர்யா - ஹீரோ தனுஷ் இல்லை!


கொலைவெறி புகழ் 3 படத்தையடுத்து, புதிய படத்தை இயக்கும் பணிகளில் மும்முரமாக உள்ளார் ஐஸ்வர்யா.

இந்தப் படம் முழுக்க முழுக்க கலகலப்பான காதல் நகைச்சுவைப் படமாக அமையும் எனத் தெரிகிறது.

ரஜினிகாந்தின் முதல் மகள் ஐஸ்வர்யா தனுஷ் தனது முதல் படம் 3 ஐ சமீபத்தில் வெளியிட்டார்.

தனுஷின் ஒரே மாதிரி பாத்திரத் தேர்வு மற்றும் நெகடிவான விமர்சனங்கள் காரணமாக படம் சுமாராகத்தான் போவதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், அடுத்த படத்தை எடுக்க தயாராகிவிட்டார் ஐஸ்வர்யா. ஆனால் இந்த புதிய படத்தில் தனுஷ் நடிக்கவில்லை.

"எனது அடுத்த படத்தை எடுக்க நான் காத்திருக்க விரும்பவில்லை. சும்மாவே உட்கார்ந்திருக்க எனக்குப் பிடிக்கவில்லை. பணியாற்றுவது எனக்குப் பிடித்துள்ளது. என் தாயாரும் மாமியாரும் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதால், இயக்குநராகப் பணியாற்றுவது சுலபமாக உள்ளது," என்கிறார் ஐஸ்வர்யா.
 

அஜீத்துடன் போட்டியா? - விஜய் பதில்


அஜீத்துக்கும் எனக்கும் சினிமாவில் நீயா நானா போட்டி இருந்தாலும், நிஜத்தில் அப்படி எதுவும் இல்லை என்றார் நடிகர் விஜய்.

ரஜினி, கமல் படங்களுக்குள் போட்டி இருப்பதுபோல் விஜய், அஜீத் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவர் படங்களும் ரிலீசாகும்போது அவரவர் ரசிகர்கள் போட்டி போட்டு கொடி தோரணங்கள், கட் அவுட்கள் என அமைப்பதோடு, சமயத்தில் எல்லை மீறி அடிதடி வரை போகின்றனர்.

அஜீத் உங்களுக்கு போட்டியா? என்று விஜய்யிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், "அஜீத்தும் நானும் தொடர்பில் இருக்கிறோம். நிறைய விஷயங்கள் பற்றி ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கிறோம். இருவர் படங்கள் குறித்தும் பேசுவோம்.

அவர் என் வீட்டுக்கு வருவார். நான் அவரது வீட்டுக்கு செல்வது உண்டு. எங்கள் இருவரது குழந்தைகளும் ஒரே பள்ளிக்கு செல்கின்றனர்.

சினிமாவில் எங்களுக்குள் லேசாக நீயா நானா போட்டி இருக்கலாம். திரையுலகில் ஆரோக்கியமான போட்டி இருப்பது நல்லதுதானே. ஆனால் நிஜத்தில் நல்ல நண்பர்கள்," என்றார்.

இப்போது துப்பாக்கி படத்தில் நடித்து முடித்துள்ள விஜய், அடுத்து கவுதம் மேனனின் 'யோஹன் அத்தியாயம் ஒன்று' என்ற படத்தில் நடிக்கிறார்.
 

பில்லா - 2 விற்பனையில் சாதனை!


அஜீத் நடித்துள்ள பில்லா 2 திரைப்படம், ரிலீசுக்கு முன்பே வர்த்தகத்தில் புதிய சாதனைப் படைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமை, வெளியீட்டு உரிமை, வெளிநாட்டு உரிமை என ஒவ்வொன்றுமே பெரும் விலைக்கு பேசப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சமீபத்தில் இந்தப் படத்தின் இரு ட்ரையிலர்களை வெளியிட்டனர். யு ட்யூபில் வெளியான இந்த டிரைலர்களுக்கு ஏக வரவேற்பு.

வெளியான ஒரு நாளைக்குள் பல லட்சம் பேரால் பார்க்கப்பட்ட இந்த ட்ரைலர்களைப் பாராட்டி கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.

ட்ரைலருக்கே இப்படி என்றால், படம் வெளியாகும்போது எப்படி இருக்கும்...

'இது ச்சும்மா ட்ரைலர்தானம்மா... மெயின்பிக்சர் பாருங்க மிரண்டு போவீங்க' என்று ரஜினி ஸ்டைலில் மகிழ்ச்சியுடன் கமெண்ட் அடித்து வருகின்றனர், அஜீத் ரசிகர்கள்.
 

என்னை ஹீரோவா ஏத்துக்கிட்டதுக்கு தேங்க்ஸ்! - உதயநிதி



ஒரு கல் ஒரு கண்ணாடி ஜெயிக்கும் என்று நம்பியிருப்பார்கள்... ஆனால் இந்த அளவு மிகப்பெரிய வவேற்பு கிடைக்கும், அதுவும் முதல் ஒரு வாரத்துக்கு டிக்கெட் கிடைக்காத அளவுக்கு என்று உதயநிதி எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்.

படத்தைப் பார்க்காமலே, சந்தானம் கலக்குகிறார், அவர்தான் ஹீரோ என்றெல்லாம் சொல்லி வந்தவர்கள், இப்போது உதயநிதியின் நடிப்பை ஓஹோவெனப் புகழ ஆரம்பித்துள்ளனர்.

அறிமுக ஹீரோ என்று சொல்ல முடியாத அளவுக்கு நகைச்சுவை, ரொமான்ஸ், பாட்டு என பட்டையைக் கிளப்பிவிட்டார் உதயநிதி என விமர்சனங்கள் வர ஆரம்பித்துள்ளன.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், "மக்கள் ரொம்ப ரசிச்சிப் பார்க்கிறார்கள். சந்தானத்தின் பஞ்ச் டயலாக்குகளுக்கு அப்படியொரு வரவேற்பு. வெள்ளிக்கிழமை ஏ பி சி என எல்லா வகுப்பு ரசிகர்களுடனும் படம் பார்த்துவிட்டோம். எல்லோருமே எங்களை திகைக்க வைக்கும் அளவு ரசிக்கிறார்கள், படத்தை.

நான் நிஜமாவே இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்ப்பார்க்கவில்லை. வெளிநாடுகளிலிருந்து நிறைய போன்கால்கள்.

இந்தப் படத்தின் வெற்றிக்கான பங்கு இயக்குநர் ராஜேஷ் மற்றும் சந்தானத்தைச் சேரும். ஹாரிஸ் ஜெயராஜ் அருமையான இசை தந்தார். பாடல்களுக்கு செம ரெஸ்பான்ஸ்.. என்னையும் ஹீரோவா ஏத்துக்கிட்டதுக்கு ரசிகர்களுக்கு நன்றி. எனக்கேத்த கதை என்றால் நடிப்பேன். இல்லாவிட்டால் பொருத்தமான கதைக்கு காத்திருப்பேன்," என்றார்.
 

மோகன்லால் மகனாக மம்மூட்டி மகன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'போக்கிரி ராஜா', 'சீனியர்ஸ்' ஆகிய மலையாள படங்களை இயக்கியவர் வைஷாக். தற்போது 'மல்லுசிங்' என்ற படத்தை இயக்கி வருகிறார். மலையாள கமர்சியல் பட இயக்குனரான இவரது அடுத்த படத்தில் மோகன்லால் ஹீரோவாக நடிக்கிறார். இன்னொரு ஹீரோவாகவும், மோகன்லாலின் மகனாகவும் மம்மூட்டி மகன் தல்குவார் சல்மான் நடிக்கிறார். முதலில் மம்மூட்டிதான் இந்தப் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் சொந்த மகனுக்கு தந்தையாக நடிக்க, மம்மூட்டி மறுத்துவிட்டதால் அந்த கேரக்டரில் மோகன்லால் நடிக்கிறார். இருவரும் இணையும் இந்தப் படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அடுத்து பிரியதர்ஷன் இயக்கும் படத்திலும் மோகன்லாலும் தல்குவார் சல்மானும் இணைந்து நடிக்கிறார்கள்.


 

காமெடி கலந்த காதல் திருவிழா: எழில்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சிவகார்த்திகேயன், ஆத்மியா ஜோடியாக நடிக்கும் படம், 'மனம் கொத்திப் பறவை'. ஒலிம்பியா மூவீஸ் சார்பில் எஸ்.எழில், அம்பேத்குமார், ஏ.ரஞ்சீவ் மேனன் இணைந்து தயாரிக்கின்றனர்.  படத்தை இயக்கும் எஸ்.எழில் நிருபர்களிடம் கூறியதாவது: சிவகார்த்திகேயன் தன்னை முழுமையான ஹீரோவாக நிலைநிறுத்திக் கொள்ளும் படமாக இது அமையும். ஒவ்வொரு காட்சியையும் புதுமையாக அமைத்திருக்கிறேன். படம் தொடங்கியது முதல் முடியும்வரை, காமெடி கலந்த காதல் திருவிழாவாக இருக்கும். எனது படங்களில் மென்மையான காதல் வலுவாக இருக்கும். இதில் சிவகார்த்திகேயனுக்கும், ஆத்மியாவுக்குமான காதல் இனிமையாகவும், இயல்பாகவும் இருக்கும். ஏற்கனவே நான் எழுதிய ஸ்கிரிப்ட் இருந்தாலும், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டால், நடிகர்களுக்கு ஏற்ப அத்தனையும் மாறிவிடும். அது சிறப்பாகவே இருந்ததால், அவர்களை நடிக்கவிட்டு படமாக்கினேன். எடிட்டிங்கில் பார்த்தபோது, எதிர்பார்த்ததை விட காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. ஷூட்டிங் முடிந்து விட்டது. விரைவில் ரிலீசாகிறது. இவ்வாறு எழில் கூறினார். பேட்டியின்போது சிவகார்த்திகேயன், ஆத்மியா, சிங்கம்புலி, சூரி, கிஷோர், ஸ்ரீநாத், சாம்ஸ், அம்பேத்குமார், இமான், யுகபாரதி உடனிருந்தனர்.


 

அண்ணன் இயக்கத்தில் விக்ராந்த்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தனது அண்ணன் சஞ்சீவ் இயக்கும் படத்தில் நடிக்கிறார், விக்ராந்த். இதுகுறித்து அவர் கூறும்போது, ''சாமி மற்றும் தெலுங்கு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியிடம் உதவியாளராக இருந்தவர், என் அண்ணன் சஞ்சீவ். அவர் தமிழில் இயக்கும் படத்தில், ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கிறேன். விரைவில் ஷூட்டிங் தொடங்குகிறது. இதையடுத்து மலையாளப் படம் ஒன்றில் நடிக்கிறேன். கண்ணன் என்பவர் இயக்குகிறார்'' என்றார்.


 

இந்தி, தெலுங்கில் உடும்பன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'உடும்பன்' இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் ஆவதாக அதன் இயக்குனர் எஸ்.பாலன் கூறினார். அவர் மேலும் கூறும்போது, ''தனியார் கல்வி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்துக்கு வரவேற்பு கிடைத்தது. இது இந்தியா முழுவதுக்குமான பிரச்னை என்பதால் தெலுங்கில் மனதேசம் மூவீஸ் என்ற நிறுவனம் ரீமேக் செய்கிறது. இந்தியில் ஏவி.மோகன் மூவீஸ் நிறுவனம் ரீமேக் செய்கிறது'' என்றார்.


 

வழக்கு எண்ணில் மனீஷா ஊர்மிளா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பாலாஜி சக்திவேல் இயக்கியுள்ள 'வழக்கு எண் 18/9' படம், அடுத்த வாரம் ரிலீசாகிறது. இதில் ஹீரோயின்களாக மனீஷா யாதவ், ஊர்மிளா மகந்தா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். நிருபர்களிடம் மனீஷா கூறும்போது, ''20 முறைக்கு மேல் ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்த பிறகு இந்தப் படத்துக்கு இயக்குனர் தேர்வு செய்தார்.   படத்தில் மிதுன் முரளி ஜோடி. பிளஸ் டூ மாணவியாக நடிக்கிறேன். இதையடுத்து தெலுங்கில் எம்.எஸ்.ராஜு தயாரித்து, இயக்கும் 'துனிஹா துனிஹா' படத்தில், அவர் மகன் சுமந்த் அஸ்வின் ஜோடியாக நடிக்கிறேன்'' என்றார்.

ஊர்மிளா மகந்தா கூறும்போது, ''பூனா பிலிம் இன்ஸ்டிடியூட்டில் நடிப்புப் பயிற்சி பெற்றேன். கோவா பிலிம் பெஸ்டிவல் நடந்தபோது, பாலாஜி சக்திவேலை சந்தித்தேன். இதில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.  வீட்டு வேலைக்காரி வேடம். வசனங்கள் குறைவு. நடிப்புக்கு நிறைய ஸ்கோப் உள்ள கேரக்டர். சிறப்பாக நடித்துள்ளதாக படம் பார்த்தவர்கள் கூறினார்கள்'' என்றார். பேட்டியின்போது ஸ்ரீ, மிதுன் முரளி, பாலாஜி சக்திவேல் உடனிருந்தனர்.


 

கிளாமருக்கு மாறியது ஏன்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சுந்தர்.சி இயக்கும், 'மசாலா கபே' படத்தில் அஞ்சலியுடன் இணைந்து கிளாமராக நடித்துள்ள ஓவியா கூறியதாவது: குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்துவந்தேன். இமேஜை மாற்ற வேண்டும் என்று கிளாமராக நடிக்க முடிவு செய்தேன். அதன்படி 'மசாலா கபே', வாய்ப்பு வந்தது. இது என்னை வேறொரு கோணத்தில் வெளிப்படுத்தும். பாடல் காட்சியில் கிளாமராக ஆட வேண்டும் என்று கேட்டனர். சரி என்று நடித்தேன். மாடர்ன் கேரக்டரில் நடிக்கும்போது, இப்படி தோன்றுவதை தவிர்க்க முடியாது.


 

கருணாஸ் நடிக்கும் சந்தமாமா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கிளாசிக் சினிமாஸ் சார்பில் முரளி, உன்னி கிருஷ்ணன் இணைந்து தயாரிக்கும் படம், 'சந்தமாமா'. கருணாஸ் ஹீரோ. ஸ்வேதா பாசு ஹீரோயின். மற்றும் இளவரசு, எம்.எஸ்.பாஸ்கர், மோகன்ராம் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஆனந்தகுட்டன். இசை, ஸ்ரீகாந்த் தேவா. பாடல்கள், வைரமுத்து. வசனம், ராம்நாத். கதை, திரைக்கதை எழுதி ராதா கிருஷ்ணன் இயக்குகிறார். அவர் கூறும்போது, 'சந்தானகிருஷ்ணன் என்ற சாதாரண மனிதன், தனது எழுத்தாற்றல் மற்றும் கற்பனைத்திறன் மூலம் எப்படி சந்தமாமா ஆகிறான் என்பது கதை. காமெடி மற்றும் குடும்ப சென்டிமென்டுடன் உருவாகிறது. முதற்கட்ட ஷூட்டிங் பாண்டிச்சேரியில் நடந்தது. தற்போது சென்னையில் ஷூட்டிங் நடந்து வருகிறது' என்றார்.


 

கோச்சடையானுக்கு 4 பாலிவுட் மாஸ்டர்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'கோச்சடையான்' படத்துக்கு 4 பாலிவுட் நடன இயக்குனர்கள் நடனம் அமைக்கிறார்கள் என்றார் இயக்குனர் சவுந்தர்யா. ரஜினிகாந்த் நடிக்கும் 'கோச்சடையான்' ஷூட்டிங் சமீபத்தில் லண்டனில் தொடங்கியது. இதில் சரத்குமார், ஆதி, தீபிகா படுகோன், ஷோபனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். மோஷன் கேப்சர் முறையில் இதன் ஷூட்டிங்கை சவுந்தர்யா படமாக்கி வருகிறார். இப்படத்தின் ஸ்டார் அந்தஸ்து நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. பிரபல நடிகர்கள் பலர் நடிப்பதுபோல் பிரபல டான்ஸ் மாஸ்டர்களும் இதில் பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். சரோஜ் கான், ராஜு சுந்தரம், சின்னி பிரகாஷ், ஷோபி ஆகியோர் நடனம் அமைக்கின்றனர். இதுபற்றி சவுந்தர்யா கூறும்போது, 'சரோஜ் கான், சின்னி பிரகாஷ், ராஜு சுந்தரம், ஷோபி ஆகிய பிரபலமான 4 நடன மாஸ்டர்களுடன் பணியாற்றுவது வியப்பும் மகிழ்ச்சியும் அளிக்கிறது. அதற்காக கடவுளுக்கு நன்றி' என்றார்.


 

ஷாரூக்கானுக்கு அவமரியாதை - மன்னிப்பு கோரியது அமெரிக்க தூதரகம்!


 

அண்ணன் தம்பிக அடிச்சிப்போம்... நாளை கூடிப்போம்! - எஸ்ஏசி