வாக்காளர்களை சபித்து பேச்சு-நடிகை குஷ்பு மீது கர்நாடகா அதிமுக வழக்கு

Tags: zwnj

சென்னை: த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை தேர்தல் முடிவு பற்றி விமர்சன‌ம் செ‌ய்த ‌நடிகை குஷ்பு மீது கர்நாடக அ.தி.மு.க அவதூறு வழக்கு தொடர்‌ந்து‌ள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவு குறித்து கருத்து நடிகை கு‌ஷ்பு கருத்து தெரிவிக்கையில், இது தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்வி அல்ல, மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி. இதற்காக மக்கள் கஷ்டப்படுவார்கள் என்று கருத்து கூறியிருந்தார்.

நடிகை குஷ்புவின் இ‌ந்த பேச்சு வாக்குரிமைக்கு எதிரானது எனக் கூறி சென்னை எழும்பூர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் கர்நாடக மாநில அ.இ.அ.தி.மு.க. செயலாளர் புகழேந்தி இன்று அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த வழக்கு விசாரணை வரு‌ம் ஜூன் 16 ம் தேதி நீதிபதி கிள்ளிவளவன் முன்பு விசாரணைக்கு வருகிறது.

நடைபெற்ற சட்ட மனறத் தேர்தலில் நடிகை குஷ்பு திமுகவிற்கு ஆதரவாக பட்டி தொட்டி எங்கும் சென்றும் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடதக்கது.

அயன் வசூலை முறியடித்தது கோ!

Tags:

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான அயன் படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது ஆனந்த் இயக்கி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கோ.

ஜீவா, கார்த்திகா, பியா, அஜ்மல் ஆகியோரது அட்டகாசமான நடிப்பில் வெளியாகி, கே.வி.ஆனந்த் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜின் மயக்கும் பாடல்களில் உருவாகிய கோ படம் திரையிட்ட இடங்களிலெல்லாம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

50 நாட்களைத் தொட்டுள்ள கோ படம், தற்போது அயன் படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளதாம். அனைத்து இடங்களிலும் வெற்றிகரமாக ஓடி வரும் கோ படத்தில் ஜீவா போட்டோ ஜர்னலிஸ்ட் ஆக நடித்துள்ளார். முன்னாள் ஹீரோயின் ராதாவின் மகள் கார்த்திகா அவருக்கு ஜோடியாக, பத்திரிக்கையாளராக அசத்தலாக நடித்துள்ளார்.

நல்லவனாக நடித்து வஞ்சகமாக ஏமாற்றும் போலி அரசியல்வாதியாக அஜ்மல் வித்தியாசமான ரோலில் அருமையாக நடித்துள்ளார்.

இப்படம் தெலுங்கில் ரங்கம் என்ற பெயரில் வெளியாகி அங்கும் வெற்றி பெற்றுள்ளது.

கோ படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. குறிப்பாக என்னமோ ஏதோ பாடல் அத்தனை பேரின் வாயிலும் முனுமுனுப்பை ஏற்படுத்தி விட்டது.

படம் மாபெரும் வெற்றி பெற்றிருப்பதால் படத்தில் நடித்தவர்களும் சரி, ஆனந்த்தும் சரி பெரும் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் உள்ளனர்.

ரஜினி நலம் பெற திருச்சூர் கோயிலில் 101 தேங்காய் உடைத்த இஸ்லாமிய ரஜினி ரசிகர்!

Tags:

திருவனந்தபுரம் : ரஜினிகாந்த் நலம் பெற்றுத் திரும்ப வேண்டும் என்று வேண்டி, திருச்சூர் கோவிலில் ஒரு இஸ்லாமிய ரஜினி ரசிகர் 101தேங்காய்களை உடைத்து வேண்டினார்.

படையப்பா முபாரக்

கேரள மாநிலம் திருச்சூர் ஓடக்காடு பகுதியை சேர்ந்துர் முபராக். இவர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். லாட்டரி சீட்டு விற்பனை செய்து வரும் முபராக் ரஜினிகாந்த் மீதுள்ள திரைப்பற்று காரணமாக தனது பெயரை படையப்பா முபராக் என்று மாற்றிக் கொண்டதுடன் தனது லாட்டரி கடைக்கும் ரஜினிகாந்த் நடித்த படப்பெயரான பாபா பெயரை வைத்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிகாந்தை நேரில் சந்தித்த படையப்பா முபராக் அவரிடம் இருந்து உதவிகளை பெற்றுள்ளார். இதனால் ரஜினிகாந்த் மீது மிகுந்த மரியாதையும், அன்பும் கொண்டவராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் உடல் நிலை பாதிப்பால் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கும் தகவல் படையப்பா முபராக்கை பெரிதும் பாதித்தது. அவர் பள்ளி வாசலுக்கு சென்று ரஜினிக்காக தொழுகை நடத்தினார்.

மேலும் கடந்த 21ம்தேதி திருச்சூர் வடக்க நாதர் கோயிலுக்கு சென்ற படையப்பா முபராக் ரஜினிகாந்த பூரண நலம் பெற வேண்டி 101 தேங்காய்களை உடைத்தார்.

நேற்று இரண்டாவது முறையாக வடக்கநாதர் கோயிலுக்கு சென்ற அவர் 101 தேங்காய்களை உடைத்ததுடன் சிறப்பு வழிபாடுகளையும் நடத்தினார்.

டாப்ஸி மீது தயாரிப்பாளர் புகார்

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

டாப்ஸி மீது தயாரிப்பாளர் புகார்

6/2/2011 3:36:34 PM

தெலுங்கில் ‘ஜும்மண்டி நாதம்’ படம் மூலம் அறிமுகம் ஆனவர் டாப்ஸி. இப்படத்தை மஞ்சு லட்சுமி தயாரித்தார். இப்போது தான் தயாரிக்கும் படத்தில் நடிக்க டாப்ஸியை லட்சுமி கேட்டிருக்கிறார். இதில் நடிக்க மறுத்துவிட்டாராம் டாப்ஸி. ஏற்கனவே லட்சுமியின் படத்தில் நடிக்க டாப்ஸி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தெலுங்கு நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தில் டாப்ஸி மீது லட்சுமி புகார் அளித்திருக்கிறார். எப்படியும் டாப்ஸியை இதில் நடிக்க வைப்பதென அவர் முடிவு செய்துள்ளாராம். இதுவரை தெலுங்கு நடிகர் சங்கத்தில் உறுப்பினராக டாப்ஸி சேரவில்லை. இப்ப¤ரச்னை காரணமாக நடிகர் சங்கத்தின் தயவு தேவைப்படுவதால் அவர் சங்கத்தில் உறுப்பினராக சேர முடிவு செய்துள்ளாராம். ‘கால்ஷீட் பிரச்னை காரணமாகவே லட்சுமியின் படத்தில் நடிக்கவில்லை’ என டாப்ஸி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

டெய்சி திடீர் திருமணம்

Tags: nbsp

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

டெய்சி திடீர் திருமணம்

6/2/2011 3:32:57 PM

‘சக்கரவியூகம்’ படத்தில் நடித்தவர் டெய்சி போபண்ணா. பிரியதர்ஷனின் ‘கரம் மசாலா’ இந்தி படம் மூலம் சினிமாவுக்கு வந்தவர், தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்தார். அதன் பின் தமிழுக்கு வந்தார். பட வாய்ப்புகள் இல்லாததால் மும்பைக்கு திரும்பினார். இந்நிலையில் திடீரென தனது காதலனை கரம் பிடித்திருக்கிறார் டெய்சி. பிரியங்கா சோப்ராவின் மேனேஜராக இருந்தவர் பிரகாஷ் ஜாஜு. பிரியங்காவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவரிடமிருந்து விலகினார். பிரகாஷ் ஜாஜுவின் மகன் அமித். இவரும் இந்தி சினிமாவில் பிஆர் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தார் டெய்சி. சமீபத்தில்  திடீரென இந்தூரில் இவரை திருமணம் செய்து கொண்டார் டெய்சி. இந்த திருமணத்தில் சினிமா உலகை சேர்ந்த யாரும்  அழைக்கப்படவில்லை. இரு குடும்பத்தார் மட்டுமே பங்கேற்றனர். இது பற்றி டெய்சி கூறும்போது, “இது ரகசிய திருமணம் கிடையாது. குடும்பத்தார் மட்டுமே பங்கேற்ற விழா. திருமணம் என்பது எனது சொந்த விஷயம். அதனால்தான் அமித்துடன் காதல் என்பதை வெளியே சொல்லவில்லை” என்றார்.

காதலித்து ஏமாற்றி விட்டார் : இயக்குநர் சீமான் மீது நடிகை பரபரப்பு புகார்!

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

காதலித்து ஏமாற்றி விட்டார் : இயக்குநர் சீமான் மீது நடிகை பரபரப்பு புகார்!

6/2/2011 3:28:08 PM

இயக்குநர் சீமான் மீது போலீஸ் கமிஷனரிடம் நடிகை புகார் செய்துள்ளார். ‘பிரண்ட்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. பின்னர் ‘கலகலப்பு’, ‘ராமச்சந்திரா’, ‘மிலிட்டரி’, ‘சூரி’, ‘எஸ் மேடம்’, ‘வாழ்த்துக்கள்’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படங்களில் நடித்து பிரபலமானார். கன்னடம், தெலுங்கு படங்களிலும், டிவி சீரியல்களிலும் விஜயலட்சுமி நடித்திருக்கிறார். இந்நிலையில், நடிகை விஜயலட்சுமி நேற்று மதியம் சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், “நானும் இயக்குநர் சீமானும் காதலித்தோம். தற்போது திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறிவிட்டார். அதனால், போலீஸ் விசாரணை நடத்த வேண்டும்” என்று கூறியிருப்பதாக தெரிகிறது. இதுதொடர்பாக நடிகை விஜயலட்சுமியின் செல்போனை தொடர்பு கொண்டால் அவர் எடுக்கவில்லை. அவரது சகோதரி பேசினார். அவரிடம் கேட்டால், “அக்காவுக்கு உடல்நிலை சரியில்லை; தூங்கிக் கொண்டு இருக்கிறார். எனது அக்காவும் இயக்குநர் சீமானும் காதலித்து வந்தனர். திருமணம் செய்வதாக கூறினார். இந்நிலையில் திடீரென சீமான் அக்காவை திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டார். அக்காவை விட்டு சில நாட்களாக அவர் ஒதுங்கி செல்கிறார். மேற்கொண்டு என்னால் எதுவும் சொல்ல முடியாது” என்று கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

பிரியங்கா பி.ஏ மகனை மணந்தார் டெய்சி போபண்ணா

Tags:

பிரியங்கா சோப்ராவின் முன்னாள் செயலாளர் பிரகாஷ் ஜாஜுவின்மகன் அமீத்தை மணந்தார் நடிகை டெய்ஸி போபண்ணா.

தமிழில் வெளியான சக்கரவியூகம் என்ற படத்தில் நடித்தவர் இந்த டெய்ஸி. நட்டு என்கிற நடராஜ் ஹீரோவாக நடித்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் டெய்ஸி.

கர்நாடகத்தைச் சேர்ந்தவரான டெய்ஸி, ஏராளமான கன்னடப் படங்கள் தவிர இந்தி, தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார்.

இவருக்கும் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் முன்னாள் செயலாளர் பிரகாஷ் ஜஜுவின் மகன் அமீத்துக்கும் திருமணம் நடந்து முடிந்தது.

இந்தூரில் வைத்து இந்தக் கல்யாணம் நடந்தது. டெய்ஸிக்கு பெரிய அளவில் திரைப்பட வாய்ப்புகள் இல்லாததால் கல்யாணத்திற்கு சம்மதித்து அமீத்தை மணந்துள்ளார்.

இருப்பினும் அமீத்தின் தந்தைக்கு திரையுலகில் நல்ல அனுபவம் உள்ளதால் தனது மருமகளை இந்தித் திரையுலகில் பெரிய நடிகையாக்க கடுமையாக முயற்சிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
காதலித்து ஏமாற்றியதாக சீமான் மீது விஜயலட்சுமி பரபரப்பு புகார்!

Tags:

நாம் தமிழர் இயக்கத் தலைவர் இயக்குநர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பரபரப்பு புகாரை சுமத்தியுள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்தவர் நடிகை விஜயலட்சுமி. ஆரம்பத்தில் கன்னடப் படங்களில் நடித்து வந்த விஜயலட்சுமி பிரண்ட்ஸ் படம் மூலம் தமிழுக்கு வந்தவர். அப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழ்ப் பெண்ணான விஜயலட்சுமி கடைசியாக பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு அண்ணியாக நடித்திருந்தார்.

சென்னையில் தனது குடும்பத்தோடு வசித்து வரும் விஜயலட்சுமி நேற்று மாலை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜே.கே.திரிபாதியை சந்தித்து ஒரு புகார் கொடுத்தார்.

அதில், இயக்குநர் சீமான் 3 ஆண்டுகளாக என்னைக் காதலித்தார். திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருங்கிப் பழகினார். இருப்பினும் தற்போது என்னைத் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். இதுகுறித்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயலட்சுமி கூறியுள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடத்தும்படி வளசரவாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜீவானந்தத்திற்கு தென் சென்னை இணை ஆணையர் சண்முகராஜேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.

விஜயலட்சுமி இவ்வாறு பரபரப்புப் புகார் கூறுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நடிகை ராதிகா தயாரித்த ஒரு கேம் ஷோவில் தொகுப்பாளராக விஜயலட்சுமி பணியாற்றி வந்தார். அப்போது அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் மீதும் இதுபோல புகார் கூறினார் என்பது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது அவர் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சீமான் மீதான புகார் குறித்து நடிகை விஜயலட்சுமி வீட்டில் போலீஸ் விசாரணை

Tags:

சென்னை: இயக்குநர் மற்றும் நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான் மீது கொடுத்துள்ள மோசடிப் புகார் தொடர்பாக நடிகை விஜயலட்சுமியின் வீட்டில் இன்று போலீஸார் விசாரணை நடத்தினர்.

இயக்குநர் சீமான் தன்னை 3 ஆண்டுகள் காதலித்ததாகவும், பின்னர் திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டதாகவும் கூறி சீமான் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார் நடிகை விஜயலட்சுமி. இதுகுறித்து விசாரணை நடத்துமாறு வளசரவாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இன்றுகாலை சாலிகிராமத்தில் உள்ள விஜயலட்சுமியின் வீட்டுக்குச் சென்ற போலீஸ் குழுவினர், அங்குள்ள விஜயலட்சுமியின் குடும்பத்தாரிடம் நடந்தது என்ன என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

ரூ. 5 கோடி கேட்டு வழக்கு தொடரப்படும்-சீமான் வக்கீல்

இதற்கிடையே, சீமான் மீது அவதூறாகப் புகார் கொடுத்துள்ள நடிகை விஜயலட்சுமி மீது ரூ. 5 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என்று சீமானின் வழக்கறிஞர் சந்திரசேகரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

கடந்த 2 ஆண்டுகளாக ஈழத் தமிழர்களின் துயரங்களை கண்டு மன வேதனை அடைந்த சீமான், அதனை தடுக்க பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார். இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து சீமான் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளார்.இரண்டு முறை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறைக்கு சென்றார். சுமார் ஓராண்டிற்கு மேலாக சிறையிலேயே அவர் காலத்தை கடத்தி உள்ளார்.

இந்த நிலையில் சீமான் காதல் கத்திரிக்காய் செய்யும் மனநிலையில் இருந்ததில்லை. விஜயலட்சுமியை சீமான் உண்மையில் காதலித்து கல்யாணம் செய்து கொள்ள மறுத்திருந்தால் முதலில் விஜயலட்சுமி என்னிடமோ, சீமானின் நல விரும்பிகளிடமோ, நண்பர்களிடமோ அல்லது அவரது பெற்றோரிடமோ புகார் தெரிவித்திருக்க வேண்டும். அதை விடுத்து போலீசாரிடம் சென்று சீமான் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்து விட்டதாக புகார் தெரிவித்துள்ளார். இதிலிருந்தே சீமானுக்கு எதிராக திட்டமிட்டு யாருடைய தூண்டுதலின் பேரில் விஜயலட்சுமி பொய் புகார் கொடுத்துள்ளார்.

இலங்கையில் போர்க் குற்றம் புரிந்த ராஜபக்சேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்த வலியுறுத்தி உலக நாடுகளின் ஆதரவை திரட்டும் பணியில் சீமான் ஈடுபட்டுள்ளார். இதனை தடுக்கும் வகையில் மத்திய உளவுத்துறையினரும், தேர்தலில் சீமானின் பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் தூண்டுதலின் பேரில் இந்த சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதனை நாங்கள் விரைவில் முறியடிப்போம். சீமானின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய் புகார் கூறிய விஜயலட்சுமியிடம் ரூ.5 கோடி கேட்டு மானநஷ்ட ஈடு வழக்கு தொடர உள்ளோம் என்றார் அவர்.
 
மதி கெட்டான் சாலை!

Tags:

மதி கெட்டான் சாலை. இது ஒரு தமிழ்ப் படத்தின் பெயர். வித்தியாசமான காதல் கதையுடன் கூடியதாக இப்படத்தை உருவாக்கியுள்ளாராம் படத்தின் இயக்குநர் ஜி.பட்டுராஜன்.

முற்றிலும் இளைஞர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இது, ஒரு தலைக் காதலைச் சொல்லும் கதையாகும். படத்தின் நாயகன் ஆதர்ஷ். நாயகியாக நடித்திருப்பவர் திவ்யா நாகேஷ். இவர் ஏற்கனவே பாசக்கார நண்பர்கள் படத்தில் நாயகியாக நடித்து அறிமுகமானவர்.

இதுபோக கவர்ச்சிக்காக பிரத்யேகமாக அனுஷாவை சேர்த்துள்ளனர். படத்தின் ஆடியோ வெளியீட்டின்போது படு கவர்ச்சிகரமாக வந்திருந்தார் அனுஷா. இதன் மூலம் தனது கொள்கையை அவர் வெட்ட வெளிச்சமாக்கிக் காட்டியிருந்தார். படத்தில் அவருக்கு கவர்ச்சி காட்ட போதுமான சீன்களை வைத்துள்ளாராம் இயக்குநர் பட்டுராஜன்.

அனுஷாவுக்கு இந்தப் படம் போக கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம் என்ற படமும் கையில் உள்ளதாம். கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம் என்றாலும் கூட அனுஷாவிடம் நிறைய கவர்ச்சி உள்ளது என்பதும் சொல்லியாக வேண்டிய விஷயம்.

படத்தின் நாயகி திவ்யா நாகேஷுக்கு ஹீரோயினாக இது 2வது படமாக இருந்தாலும் குழந்தை நட்சத்திரமாக 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளாராம். படத்தை வித்தியாசமான லொகேஷன்களில், வித்தியாசமான காட்சியமைப்புடன் சிறப்பாக உருவாக்கியுள்ளதாக கூறும் பட்டுராஜன், பாடலுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதாகவும் கூறுகிறார்.

வழக்கமான ஒரு தலைக் காதலாக இல்லாமல் இது வித்தியாசமானதாக இருக்கும், ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவம் கிடைக்கும் என்கிறார் நம்பிக்கையுடன் ராஜன்.
 
உடல் எடையை குறைக்கும் அ‌‌ஜீத்

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

உடல் எடையை குறைக்கும் அ‌‌ஜீத்

6/2/2011 11:52:36 AM

மங்காத்தா படத்தை முடித்துவிட்டு தனது அடுத்தப் படமான பில்லா இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தவுள்ளார் அ‌‌ஜீத். வெங்கட்பிரபு இயக்கத்தில் அ‌ஜீத் நடித்திருக்கும் மங்காத்தா படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது. இதில் ஹாலிவுட் நடிகர் ஜார்‌ஜ் குளூனியின் கெட்டப்பில் அ‌ஜீத் நடித்துள்ளார். இந்த கெட்டப்பை அ‌ஜீத்துக்கு ப‌ரிந்துரைத்தவர் வெங்கட்பிரபு.
அஜீத்தின் அடுத்தப் படம் பில்லா இரண்டாம் பாகம். இதில் சாதாரண இளைஞன் எப்படி பில்லாவாக மாறினான் என்பதை காண்பிக்க இருக்கிறார்கள். அதாவது பில்லா அ‌ஜீத்தின் இளமைக்காலம்தான் இந்த பில்லா இரண்டாம் பாகம். முதல் பாகத்தைவிட இளமையாக‌த் தெ‌ரிய வேண்டும் என்பதற்காக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் அ‌ஜீத். அடுத்த மாதம் 20ஆம் தேதி படப்பிடிப்பை தொடங்கவும் திட்டமிட்டுள்ளனர். ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என தெ‌ரிகிறது.

ஜூன் 10 முதல் ஆரண்ய காண்டம்

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஜூன் 10 முதல் ஆரண்ய காண்டம்

6/2/2011 11:39:09 AM

எஸ்.பி.‌‌பி.சரணின் சர்ச்சைக்கு‌ரிய படமான ஆரண்ய காண்டம் வரும் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது. தியாகராஜன் குமாரராஜா இயக்கியிருக்கும் இப்படத்தின் வன்முறை மற்றும் ஆபாச வசன‌க் காட்சிகள் காரணமாக சென்சார் 52 இடங்களை வெட்டி எறிந்தது. பிறகு படத்தை டெல்லிக்கு அனுப்பி மறு சென்சார் செய்தனர். அப்படியும் படத்தின் பல இடங்கள் சென்சா‌ரிள் கத்தி‌ரிக்கு இரையாயின. சம்பத், ஜாக்கிஷெராப் நடித்திருக்கும் ஆரண்ய காண்டத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

தெலுங்கில் அவன் இவன்

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தெலுங்கில் அவன் இவன்

6/2/2011 11:45:38 AM

பாலாவின் பிதாமகன் ஆந்திராவில் பிரமிப்பை ஏற்படுத்தியது. பாலா படத்தைப் பார்க்க தெலுங்கு ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். மேலும், திமிரு, சண்டைக்கோழி படங்களின் மூலம் விஷாலும் அங்கு பிரபலம். இந்த விவரங்கள் எல்லாம் வேறொன்றுக்குமில்லை. அவன் இவன் தெலுங்கிலும் வெளியாகிறது. வாடு வீடு என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இன்று ஹைதராபாத்தில் வாடு வீடுவின் இசை வெளியீட்டு விழா. பாலா, விஷால் உள்ளிட்ட அவன் இவன் டீம் ஹைதராபாத் சென்றுள்ளது. இம்மாதம் இரண்டாவது வாரத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி!

Tags:

ராணா படத்துக்காக ரஜினிகாந்த்துக்கு ரூ. 24 கோடி சம்பளம் தரபப்ட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த சம்பளத்தை ஒரே செக்காக ரஜினிக்கு ஏற்கனவே தந்து விட்டார்களாம்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார் ரஜினிகாந்த். இதற்கு முன்பு பல ஆண்டுகளுக்கு முன்பும் கூட அவருக்கு உடல் நலப் பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் அப்போது இருந்ததை விட இப்போது ரஜினியின் ரசிகர்கள் பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர்.

அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று கிட்டத்தட்ட உலக நாடுகள் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவிலும் கூட அத்தனை மாநிலங்களிலும் ஆங்காங்கு ரஜினி ரசிகர்கள் பிரார்த்தனைகள், வழிபாடுகள் என மும்முரமாக உள்ளனர்.

இந்த நிலையில் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்குவது ரஜினிதான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் சூப்பர் ஸ்டார். அவர் தற்போது நடிக்க ஒப்புக் கொண்டுள்ள ராணா படத்திற்காக அவருக்கு ரூ. 24 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். வழக்கமாக படத்தை முடித்து விட்டு சம்பளம் வாங்கும் ரஜினி இந்த முறை முதலிலேயே அந்த சம்பளத்தை வாங்கி விட்டாராம்.

இப்படத்தின் தயாரி்ப்பாளர்களில் ரஜினியின் மகள் செளந்தர்யாவும் ஒருவர் என்பதால் அந்த வகையிலும் ரஜினிக்கு ஒரு பங்கு வரும் என்கிறார்கள். எனவே இந்தியாவிலேயே அதிக அளவில் சம்பளம் வாங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிதான் என்பதை மீண்டும் அவர் நிரூபித்துள்ளார் என்கிறார்கள் திரையுலகில்.

ரஜினி விரைவில் குணமடைந்து வந்த பின்னர் ராணா படப்பிடிப்பு முழு வீச்சில் தொடரும் என்ற நம்பிக்கையில் ராணா படக் குழுவினரும், திரையுலகினரும், ரஜினி ரசிகர்களும் உள்ளனர்.