சிரஞ்சீவி மகன் ஜோடியாக நடிக்க தீபிகா தயக்கம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சிரஞ்சீவி மகனுக்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோன் தயக்கம் காட்டி உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக 'கோச்சடையான் படத்தில் நடிக்கிறார் பாலிவுட் ஹீரோயின் தீபிகா படுகோன். இந்நிலையில் அமிதாப்பச்சன், ஜெயா பச்சன் ஜோடியாக நடித்த 'சன்ஜீர் படத்தை இந்தி, தெலுங்கில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதில் அமிதாப்பச்சன் ஏற்று நடித்த ஆவேசமான போலீஸ்காரர் வேடத்தை ராம் சரண் தேஜா ஏற்று நடிக்க உள்ளார். அமிதாப் ஜோடியாக ஜெயா பச்சன் நடித்தார். அந்த வேடத்தில் தீபிகா படுகோனை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் ராம் சரணுடன் தீபிகா நடிக்க தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

இதுபற்றி தீபிகா தரப்பில் கூறும்போது, 'நிறைய தென்னிந்திய படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. ஆனால் தமிழில் கோச்சடையான் படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்க மட்டுமே ஒப்புக்கொண்டிருக்கிறார். மேலும் இந்த மாதம் முதல் ஜவானி திவானி மற்றும் மணாலி ஆகிய படங்களின் ஷூட்டிங்கில் பங்கேற்கிறார்Õ என்றனர். ராம் சரண் இந்திக்கு புதியவர். புதுமுகத்துடன் நடிப்பதா என தீபிகா தயக்கம் காட்டுவதாலேயே அப்படத்தில் நடிப்பது பற்றி பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.



 

தடை சம்பவத்தால் எதையும் எதிர்க்க துணிந்தேன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை : தர்ஷன் விவகாரத்தில் நடிக்க தடை விதிக்கப்பட்ட பின் எதையும் எதிர்கொள்ள துணிச்சல் வந்துவிட்டது என்றார் நடிகை நிகிதா. கன்னட நடிகர் தர்ஷனுக்கும் அவரது மனைவிக்கும் சில மாதங்களுக்கு முன் பிரச்னை ஏற்பட்டது. தர்ஷனுடன் ஹீரோயின் நிகிதா தொடர்பு வைத்திருப்பதுதான் கணவன், மனைவிக்குள் பிரச்னை ஏற்பட காரணம் என்று கூறப்பட்டது. இதையடுத்து கன்னட தயாரிப்பாளர்கள் சங்கம் நிகிதாவுக்கு கன்னட படத்தில் நடிக்க தடை விதித்தது.  இது பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்த சம்பவத்துக்கு பிறகு நிகிதா பிரபலம் ஆனார். தமிழில் முரண் படத்தில் நடித்த அவர் தற்போது கார்த்தி நடிக்கும் 'அலெக்ஸ் பாண்டியன் படத்தில் நடிக்கிறார்.
நிகிதா கூறியதாவது: செய்யாத தவறுக்காக நான் தண்டிக்கப்பட்டேன். இது என்னை துணிச்சல்மிக்கவளாக மாற்றிவிட்டது. எந்த பிரச்னையையும் இனி தைரியமாக எதிர்கொள்வேன். கன்னட பட தயாரிப்பாளர்கள் சங்கம் என் மீது வலுக்கட்டாயமாக எடுத்த முடிவால் தேசிய அளவில் மீடியாக்களின் கவனத்தை கவர்ந்துவிட்டேன். திரையுலகம் எனது நடிப்பு திறனை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுத்திருக்கிறது. ஷூட்டிங்கில் இருக்கும்போது எப்போதும் நடிப்பின் மீதே கவனமாக இருப்பேன். 200 சதவீதம் எனது ரோலை நிறைவு செய்ய முயல்வேன். மற்ற எந்த விஷயத்திலும் ஈடுபாடு காட¢ட மாட்டேன். ஏற்கனவே நடந்தவற்றை பற்றி மீண்டும் ஆராய்ந்துகொண்டிருப்பதில் அர்த்தமில்லை. எதிர்காலத்தை பற்றித்தான் இனி யோசிப்பேன்.
இவ்வாறு நிகிதா கூறினார்.