அபிஷேக்கை தொடர்ந்து அமிதாப்புக்கு காயம்: விலா எழும்பில் அடி


டிபார்ட்மென்ட் படப்பிடிப்பின்போது அமிதாப் பச்சனுக்கு மார்பு, விலா எழும்பில் அடிபட்டது.

அமிதாப் பச்சன் தற்போது டிபார்ட்மென்ட் என்னும் இந்திப் படத்தில் நடித்து வருகிறார். நேற்றைய படப்பிடிப்பின்போது ஆக்ஷன் காட்சி படமாக்கப்பட்டது. இதில் அமிதாப் பச்சனுக்கு மார்பு, விலா எழும்பில் அடிபட்டது. இதையடுத்து படக்குழுவினர் பதறிப்போனார்கள்.

இது குறித்து அமிதாப் டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது,

ஆக்ஷன் காட்சியில் நடிக்கையில் சின்ன விபத்து ஏற்பட்டது. அதில் மார்பு, விலா எழும்பில் உள்காயம் ஏற்பட்டுள்ளது. மூச்சு விடுகையில் வலி உள்ளது. ஆனால் தாங்கக்கூடியது தான் என்று கூறியுள்ளார்.

இதைப் பார்த்தவுடன் அமிதாப்புக்கு போன் மேல் போன், மெசேஜ் மேல் மெசேஜ் பறந்தது. அமிதாப்ஜி என்னாச்சு, இப்பொழுது எப்படி இருக்கிறீர்கள் என்று அத்தனை நலவிசாரிப்புகள். உடனே அமிதாப் யாரும் கவலைப்பட வேண்டாம். பெரிய அடி ஒன்றும் இல்லை என்று டுவீட் செய்துள்ளார்.

நான் வழக்கமாக டுவீட் செய்வது போல் தான் இந்த விபத்து பற்றியும் குறிப்பிட்டேன். ஆனால் ஊடகங்கள் இதைப் பெரிதுபடுத்திவிட்டன. நான் நாளைக்கே ஷூட்டிங் போகப்போகிறேன். அதனால் யாரும் கவலைப்பட வேண்டாம் என்று டுவீட் செய்துள்ளார்.

அண்மையில் தான் போல் பச்சன் படப்பிடிப்பில் அபிஷேக் பச்சனுக்கு அடிபட்டு 6 தையல் போட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராம் கோபால் வர்மா தயாரித்து இயக்கி வரும் டிபார்ட்மென்ட் படத்தில் ராணா டக்குபதி, சஞ்சய் தத், நசீருத்தீன் ஷா, கங்கனா ரனோத், ரவீனா டாண்டன் ஆகியோர் நடிக்கின்றனர்.
 

சொந்த மகனைப் போல பாசம் காட்டிய ஜெயலலிதா! - அஜீத் உருக்கம்


சொந்த மகனைப் போல என்மீது பாசம் காட்டினார் முதல்வர் ஜெயலலிதா என்று கூறியுள்ளார் நடிகர் அஜீத் குமார்.

சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ஜெயலலிதாவுடனான தனது சந்திப்பு குறித்து அவர் பேசுகையில், "அம்மா என் கல்யாணத்துக்கு வந்து வாழ்த்தியதை எப்போதும் மறக்கவே மாட்டேன்.

அம்மாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு நானும் ஷாலினியும் போயிருந்தோம். சொந்த மகனைப்போல அப்போ பாசம் காட்டினாங்க அம்மா!," என்று கூறியுள்ளார்

திரையுலக விழாவில் எதிர்த்துப் பேசியதற்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவரை மிரட்டியதாகக் கூறப்பட்டது குறித்த கேள்விக்கு, "ஜனநாயகப் பண்புகளை நம்புறவன் நான். அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எப்பவும் அதிகபட்ச மரியாதை கொடுப்பேன். என் மனசுல பட்டதை விழாவில் பேசினேன். அதுல எந்த உள்நோக்கமும் இல்லை. என் திருமணத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அய்யா நேரில் வந்து வாழ்த்தினார். அது எப்பவும் என் மனசில் நீங்காமல் இடம் பிடிச்சிருக்கும்!," என்று கூறியுள்ளார்.

என் சாவுக்கு கூடும் கூட்டம்....

மேலும் அவர் கூறுகையில், "எனக்கு இப்போ 40-வயசாகுது. இன்னும் 20-வருஷம் உயிரோட இருப்பேனானுகூடத் தெரியாது. ஒவ்வொரு மனுஷனும் எப்படி வாழ்ந்தான் என்கிற அடையாளம், அவன் சாவுக்குக் கூடுற கூட்டத்தில்தான் தெரியும்னு சொல்வாங்க. என் சாவுக்குக் கூடுற கூட்டம், அஜீத்குமார் யார்னு நிச்சயமா இந்த உலகத்துக்கு எடுத்துக்காட்டும்," என்று தெரிவித்துள்ளார்.
 

படிக்கப் போகிறார் பத்மப்பிரியா


நிறையப் பேருக்கு இவரை மறந்தே போயிருக்கும். அந்த அளவுக்கு இப்போது சுத்தமாக தமிழில் நடிப்பதையே விட்டு விட்டார் பத்மப்பிரியா. மாறாக மலையாளத்தில்தான் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்காலிகமாக நடிப்புக்கு டாடா காட்டி விட்டுப் படிக்கப் போகிறாராம் பத்மப்பிரியா.

தமிழில் சாமி இயக்கிய மிருகம் படப்பிடிப்பின்போது இவருக்கும், சாமிக்கும் இடையே கடும் மோதலாகி விட்டது. இது பின்னர் பெரும் பிரச்சினையாகி சாமிக்கு தடையும் விதித்தனர். அந்த சம்பவத்திற்குப் பின்னர் பதமப்பிரியாவை தமிழ் சினிமாவில் மெதுவாக ஒதுக்க ஆரம்பித்து விட்டனர். அவரும் அதைப் பற்றிக்கவலைப்படாமல் மலையாளக் கரையோரமாக ஒதுங்கிக் கொண்டார். அங்கு பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பத்மப்பிரியா தற்போது நயிகா என்ற புதிய படத்தில் நடித்துள்ளார்.

அந்தக் காலத்து அழகு நடிகை சாரதாவின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம். ஜெயராஜ் இயக்கத்தில் இப்படத்தில் நடித்துள்ளார் பத்மப்பிரியா. இந்தப் படத்தை முடித்து விட்ட அவர் விரைவில் அமெரிக்காவுக்குப் பறக்கப் போகிறார். அங்கு படிக்கப் போகிறாராம்.

அப்படியானால் மறுபடியும் நடிக்க மாட்டீர்களா என்று கேட்டால், சேச்சே, அப்படியெல்லாம் இல்லை. படிப்பு முடிந்ததும் மறுபடியும் நடிக்க வருவேன். நடிப்பை விட்டு விட மாட்டேன். இடையில் கிடைக்கும் விடுமுறை நாட்களிலும் கூட நடிப்பேன்.

நான் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளேன். நடிப்பில் நான் கற்க வேண்டியது நிறைய உள்ளது.

என்னைப் பொறுத்தவரை நல்ல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளதாக கருதுகிறேன். அதேசமயம், கிளாமராக நடிப்பதிலும் ஆட்சேபனை இல்லை. அப்படி வாய்ப்பு வரவில்லை. இதனால் பெரிய அளவில் நடிக்கவில்லை. ஆனால் அது கஷ்டமான விஷயமும் இல்லை.

கதைக்குத் தேவைப்பட்டால் நிர்வாணமாகக் கூட நடிக்கலாம் என்பதுதான் எனது பாலிசி. பெண்களை கவர்ச்சியை விட்டுத் தனித்துப் பார்க்க முடியாது. அதேசமயம், அவர்களை செக்ஸியாக மட்டுமே சித்தரிப்பது என்பதை என்னால் ஏற்க முடியாது என்கிறார் பத்மப்பிரியா.

பத்திரமாக போய் படிச்சுட்டு வந்து சேவையை தொடரட்டும் பத்மா...
 

இந்தி நடிகையாகிறார் பி்ன்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்


பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், நடிப்பு சேவையை துவக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

பிரபல பின்னணி பாடகியான ஸ்ரேயா கோஷல், தமிழ், கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி என பல மொழிகளில் சினிமா பின்னணி பாடல்களை பாடி பிரபலமடைந்தவர். பல மொழிகளிலும் 180க்கும் மேற்பட்ட படங்களில் பின்னணி பாடி, 4 தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

தமிழில் விண்ணை தாண்டி வருவாயா, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட படங்களில் பாடியதற்காக பல விருதுகளைக் குவித்தவர். கோஷல் பார்க்க சினிமா நடிகைகளைப் போலவே படு அழகாக இருப்பார். இதனால் அவரை நடிக்க வைக்க பலரும் முயன்றனர். ஆனால் அவர் ஜகா வாங்கிக் கொண்டே வந்தார்.

எல்லாருக்கும் 'நோ' என்ற பதிலை மட்டுமே கொடுத்து வந்த கோஷலும் இப்போது நடிப்பு வலையில் விழுந்து விட்டதாக தெரிகிறது. இயக்குநர் ஒருவர் கூறிய கதையைக் கேட்டு மெய்மறந்து போய் விட்டாராம். அந்தக் கதையில் நான் நடிக்கிறேன் என்று கூறியுள்ளாராம்.

ஏற்கனவே உள்ள ஒரு ஸ்ரேயா வழங்கும் 'நடிப்புச் சேவையில்' திளைத்து வரும் ரசிகர்களுக்கு கலை சேவையாற்ற இன்னோரு ஸ்ரேயா வருகிறார். 'டபுள் டிலைட்'தான். இனி நீங்க கவர்ச்சியா நடிப்பீங்களா, முத்தக் காட்சியில் நடிப்பீர்களா என்ற பழைய கேள்விகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு ஸ்ரேயா கோஷலும் தள்ளப்படுவார் என எதிர்பார்க்கலாம்.
 

நெனச்ச டிரஸ் போடமுடியலையே: தமன்னா கவலை


படத்தில் நடிக்கையில் இயக்குனர் சொல்லும் உடைகளைத் தான் அணிய வேண்டியிருக்கிறது. அதனால் தான் நினைத்தபடி உடைகள் அணிய முடியவில்லை என்று நடிகை தமன்னா கவலை அடைந்துள்ளார்.

இது குறித்து தமன்னா கூறியதாவது,

நான் சிறுபிள்ளையாக இருக்கும் போதே நிறைய படங்கள் பார்த்துள்ளேன். ஒவ்வொரு படத்தில் வரும் கதாபாத்திரங்களோடு என்னை ஒப்பிட்டுப் பார்ப்பேன். கல்லூரிக் கதை என்றால் எனக்கு ரொம்ப இஷ்டம். ஏனென்றால் நான் க்லலூரிக்கு சென்று படித்ததில்லை. நான் நடிக்கும் படத்தில் குறைந்தது ஒரு காட்சியாவது கல்லூரி பின்னணியில் இருக்குமா என்று தான் எதிர்பார்ப்பேன்.

உடைகள் மீது எனக்கு ஆர்வம் அதிகம். கதாநாயகியாக நடிக்கையில் நான் நினைத்த உடைகளை அணிந்து நடிக்க ஆசைப்படுவேன். ஆனால் காட்சி, லைட, கதாபாத்திரத்திற்கு ஏற்ப இயக்குனர் சொல்லும் உடைகளைத் தான் அணிய வேண்டும். நினைத்தபடி உடை அணிய முடியாதது ஏதோ தடைவிதித்தது போன்று இருக்கும். அதனால் வருத்தப்படுவேன்.

ஆனால் ஷூட்டிங் இல்லையென்றால் நான் இஷ்டப்பட்ட உடைகளைத் தான் அணிவேன். எனக்கு லைட் கலர் உடைகள் தான் ரொம்பப் பிடிக்கும் என்றார்.

ரசிகர்களுக்கு பிரைட் தமன்னாவைத்தான் பிடிக்கிறதாம்...
 

ஆண்டிப்பட்டி நீதிமன்றத்தில் குஷ்பு சரணடைய வேண்டும்: மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு


மதுரை: தேர்தல் விதிமீறல் வழக்கில் நடிகை குஷ்பு ஆண்டிப்பட்டி நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின்போது நடிகை குஷ்பு திமுக வேட்பாளர்களை ஆதரித்து ஊர், ஊராக பிரச்சாரம் செய்தார். அவர் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, பழனிச்செட்டிபட்டி ஆகிய ஊர்களிலும் பிரச்சாரம் மேற்கொண்டார்.

குஷ்பு, அனுமதி பெறாமலேயே ஆண்டிப்பட்டி, பழனிச்செட்டிபட்டியில் பிரச்சாரம் செய்ததாக அவர் மீது இரண்டு ஊர்களின் போலீசாரும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்தனர்.

ஆண்டிப்பட்டி போலீசார் தேனி நீதிமன்றத்தில் குஷ்பூ மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அப்போது குஷ்பு ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து குஷ்பூ முன்ஜாமீன் கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி குஷ்பு ஆண்டிப்பட்டி நீதிமன்றத்தில் சரணைடந்த பின்னர் ஜாமீ்ன் மனு தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.

பழனிச்செட்டிப்பட்டி போலீசார் பதிவு செய்த வழக்கிலும் முன்ஜாமீன் கேட்டு குஷ்பு மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி அவருக்கு ஜாமீன் வழங்கினார்.
 

திமுகவிலிருந்து நடிகர் தியாகு விலகல்!


சென்னை: திமுகவிலிருந்து விலகுவதாக நடிகர் தியாகு அறிவித்துள்ளார்.

நிருபர்களிடம் அவர் கூறுகையில், ஒவ்வொரு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் கிராமம் கிராமமாக, நகரம் நகரமாக கட்சிக்காக தீவிர பிரச்சாரம் செய்து வந்திருக்கிறேன். ஆனால் கட்சியில் அதற்குரிய அங்கீகாரம் கிடைக்கவே இல்லை. இதனால் மனவருத்தம் அடைந்துள்ளேன்.

எனக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் பதவி பெற்றுள்ளனர். கட்சியில் இல்லாதவர்கள் கூட திமுக தலைவரை துதி பாடியே பல்வேறு பதவிகளையும், வசதி வாய்ப்புகளையும் பெற்றுள்ளனர். ஆனால் 33 ஆண்டுகளாக திரையுலகில் இருந்தும் எனக்கு எந்த அங்கீகாரமும் கட்சியில் கிடைக்கவில்லை.

என்னுடைய தாத்தா ராஜமாணிக்கம் பிள்ளை மிகச் சிறந்த வயலின் வித்வான். மூப்பனார் போன்ற தலைவர்கள் இந்த குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள். என் தாத்தா நினைவாக தபால் தலை வெளியிடுவதாக கூறினீர்கள். அதற்கான ஏற்பாடு எதுவும் செய்யவில்லை. நானும் உங்களிடம் (திமுகவிடம்) அது பற்றி கேட்கவில்லை.

இதிலிருந்து நீங்கள் என்னை எந்த இடத்தில் வைத்துள்ளீர்கள் என்பது புரிந்து விட்டது. இதுவரை கட்சியில் இருந்தது தவறு என்று புரிந்து கொண்டுள்ளேன். எனவே கடந்த 19ம் தேதி முதல் கட்சியிலிருந்து விலகி கொண்டுள்ளேன். எனது விலகல் கடிதத்தை கட்சியின் தலைவருக்கும், பொதுச் செயலாளருக்கும் அனுப்பி வைத்துள்ளேன். அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விரைவில் அறிவிப்பேன்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். தேர்தல் வாக்குறுதிகளாக சொன்னவற்றையெல்லாம் நிறைவேற்றி வருகிறார் என்றார்.
 

'தல' குனிய வச்சிட்டீங்களே! - வருத்தத்தில் அஜீத்


மங்காத்தா தண்ணி பார்ட்டியில் சோனாவை பலாத்காரம் செய்துவிட்டார்கள் என ஊரெங்கும் பேச்சாய் கிடப்பது, படத்தின் நாயகன் அஜீத்தை வருத்தப்பட வைத்துவிட்டதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது மங்காத்தா மூலம் அஜீத்துக்கு.

ஆனால் இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்த இயக்குநர் வெங்கட் பிரபு, அவர் தம்பி பிரேம், படத்தில் நடித்த மகத், வைபவ் என எல்லோருமே மது விருந்து கொண்டாடிய லட்சணம், படத்தின் வெற்றிக்கே கரும்புள்ளி போலாகிவிட்டதே என பெரிதும் வருத்தப்படுகிறாராம் படத்தின் ஹீரோவான அஜீத்.

ஏற்கெனவே ஜோசியம், ஜாதகம் போன்றவற்றில் ஏக நம்பிக்கை கொண்டவர் அஜீத் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பார்ட்டியில் அஜீத்தும் கலந்து கொண்டார் என்றாலும், அவர் வந்த வேகத்தில் எல்லோருக்கும் ஒரு ஹாய் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாராம்.

'தல' போனபிறகுதான், தண்ணியில் கவிழ்ந்து தலை கால் புரியாமல் சோனா பலாத்காரம் வரை போய்விட்டதாம் நிலைமை. அடுத்தநாள் சோனா போலீசில் புகார் கொடுத்த பிறகுதான் விவரம் தெரிய வந்ததாம் அஜீத்துக்கு. விளைவு, மதுவிருந்து வைத்தவர், அதில் அத்துமீறியவரின் நண்பர் என அனைவரையும் கூப்பிட்டு, 'என்னங்க இது... தல தலன்னு சொல்லி தல குனிய வச்சிட்டீங்களே... இனி இதை மங்காத்தா பார்ட்டின்னு வெளிய சொல்லாதீங்க," என்று சொன்னதாக கிசுகிசுக்கிறார்கள்.

'பெரிய நட்சத்திரங்களுக்கு வரும் வழக்கமான சங்கடங்களில் இதுவும் ஒன்று. ஆனா ரசிகர்களுக்கு 'தல'யைப் பத்தி தெரியும்... விடுங்க', என்கிறார்கள் அஜீத்துக்கு நெருக்கமானவர்கள்!
 

ரூ.5 கோடி கேட்டு நடிகர் விவேக் ஓபராய்க்கு ப்ளாக்மெயில்!


மும்பை: ரூ 5 கோடி கேட்டு தன்னை ஒரு தாதா மிரட்டுவதாக நடிகர் விவேக் ஓபராய் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய், மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், ஜுகு போலீஸ் நிலையத்திலும் எழுத்து மூலம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

தாதா ரவி பூஜாரியின் குழுவைச் சேர்ந்தவன் என்று கூறிக்கொண்டு, ஒருவன் தன்னிடம் ரூ.5 கோடி கேட்டு போனில் மிரட்டல் விடுத்து வருவதாக அதில் அவர் கூறியுள்ளார்.

பைனான்சியர் ஜவஹர்லால் அகிச்சா கட்டளைப்படி, இந்த மிரட்டல் விடுக்கப்படுவதாக அவர் கூறியிருந்தார்.

விவேக் ஓபராய் மீது காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தவர் அகிச்சா என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இக்குற்றச்சாட்டை அகிச்சாவின் வக்கீல் மறுத்துள்ளார்.

சோஹைல் கானுக்கும் மிரட்டல்

மேலும் நடிகர் - தயாரிப்பாளர் சோஹைல் கான், மற்றொரு தயாரிப்பாளர் ரிதேஷ் சி்த்வானி ஆகியோரும் தாதா ரவி பூஜாரி மிரட்டியதாக புகார் செய்துள்ளார்.
 

மதுபான விளம்பரம்... நடிக்க மறுத்த ஸ்ரேயா


மதுபான விளம்பரப் படம் ஒன்றில் நடிக்க வந்த அழைப்பை நிராகரித்து புருவம் உயர்த்த வைத்துள்ளார் நடிகை ஸ்ரேயா.

இன்றைக்கு சினிமாவை விட அதிக பணம் கொட்டுவது விளம்பரப் படங்கள் மூலம்தான்.

ஒரு நாள் அல்லது இரண்டு நாளில் ஷூட்டிங்கிலோயே ஒரு பெரிய படத்தில் கிடைப்பதை விட அதிக சம்பளம் கிடைத்துவிடும்.

ஸ்ரேயாவுக்கு ஒரு படத்துக்கான சம்பளம் அதிகபட்சம் ரூ 50 லட்சம்தான். ஆனால் சமீபத்தில் ரூ 1 கோடி சம்பளத்தில் மதுபான விளம்பரம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் இந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம் ஸ்ரேயா. "பணம் மட்டுமே முக்கியமல்ல. மனசாட்சிக்கு விரோதமான, மக்களுக்குப் பிடிக்காத எந்த விளம்பரத்திலும் நான் நடிக்க மாட்டேன்," என்று காரணம் கூறினாராம் ஸ்ரேயா.

கிரேட்!
 

எஸ்பிபி சரண் செய்த பாலியல் பலாத்தாரம்: கமிஷனரைச் சந்தித்து வீடியோ ஆதாரம் கொடுத்தார் நடிகை சோனா!


சென்னை: சென்னை மாநகர போலீஸ் கமிஷனரைச் சந்தித்து, எஸ்பிபி சரண் தன்னை எப்படியெல்லாம் பலாத்காரம் செய்தார் என்பதற்கான வீடியோ ஆதாரம் கொடுத்தார் நடிகை சோனா.

தயாரிப்பாளரும் நடிகருமான எஸ்.பி.பி. சரண் மது விருந்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாண்டி பஜார் போலீசில் நடிகை சோனா புகார் அளித்திருந்தார். போலீசார் விசாரணை நடத்தினர். எஸ்.பி.பி. சரண் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

எனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் சரண் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். பணம் பறிக்கும் நோக்கில் சோனா பாலியல் உணர்வை தூண்டும் விதமாக நடந்து கொண்டார் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் தனக்கு சரண் கொலை மிரட்டல் விடுப்பதாகக்கூறி அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று சோனா எதிர்த்தார்.

இந்த நிலையில் சோனா இன்று காலை எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு கூடுதல் கமிஷனர் அபய்குமார் சிங்கை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.

பின்னர் சோனா நிருபர்களிடம் கூறுகையில், "எஸ்.பி.பி. சரண் என்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஏற்கனவே போலீசில் புகார் அளித்துள்ளேன். இன்று கமிஷனரை சந்தித்து அதற்கான வீடியோ ஆதாரங்களையும் கொடுத்தேன்.

வீடியோவை எனது லேப்டாப் கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்திருந்தேன். அதனை கமிஷனரிடம் ஒப்படைத்து விட்டேன். நான் பணத்துக்கு ஆசைப்பட்டும் விளம்பரத்துக்காகவும் சரண் மீது பாலியல் புகார் கூறுவதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. அதற்கு இந்த வீடியோ ஆதாரம் பதில் சொல்லும். இந்த ஆதாரத்தை வைத்து சரண் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் கேட்டுக் கொண்டேன்," என்றார்.

அவரிடம், "இயக்குனர் வெங்கட் பிரபு உங்களுடன் சமரச பேச்சில் ஈடுபட்டாரா?" என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு சோனா, "இரண்டு முறை சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது நடந்த சம்பவத்துக்காக வருத்தம் தெரிவிக்கிறோம் என்று அறிக்கை விடுமாறு சரண் தரப்பில் என்னிடம் வற்புறுத்தப்பட்டது. நான் ஏன் வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்று கேட்டேன். இதனால் சமரச பேச்சு வெற்றி பெறவில்லை. சரண் என்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லா விட்டால் நான் விடமாட்டேன்," என்றார்.

"வீடியோ ஆதாரம் மது விருந்தில் எடுக்கப்பட்டதா?" என்று கேட்டபோது, "அது பற்றி இப்போது எதுவும் சொல்ல இயலாது. பத்து நாட்களுக்குள் சரண் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தேன். இன்றுடன் ஒன்பது நாட்கள் ஆகிறது. நாளை பார்ப்போம்," என்றார் சோனா.
 

நடிகர் கரணின் தந்தையிடம் வீடுபுகுந்து சங்கிலி பறிப்பு


சென்னை: சென்னையில் நடிகர் கரணின் தந்தையிடம் வீடுபுகுந்து கத்திமுனையில் செயின் பறித்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

பிரபல நடிகர் கரணின் தந்தை கேசவன் (வயது 80). இவரும் சில படங்களில் நடித்து உள்ளார். இவர், சென்னை கோயம்பேடு வடக்குமாட வீதியில் தனியாக வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலையில் கேசவன் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டு கதவு தட்டப்பட்டது. கேசவன் கதவை திறந்தார். வெளியில் நின்ற மர்ம நபர் ஒருவன், கேசவனை தள்ளிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான்.

பின்னர் கத்திமுனையில் கேசவனை மிரட்டி, அவர் அணிந்திருந்த 4 சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அந்த நபர் தப்பி ஓடிவிட்டான். இந்த சம்பவம் தொடர்பாக கேசவன் நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு போலீசில் புகார் கொடுத்தார்.

போலீசார் அந்த ஆசாமியைத் தேடி வருகிறார்கள்.

 

மது விருந்தின்போது உல்லாசத்துக்கு அழைத்தார்: எஸ்பிபி சரணுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது - சோனா மனு


சென்னை: மது விருந்தின்போது உல்லாசத்துக்கு எஸ்.பி.பி.சரண் அழைத்தார். அதற்கு உடன்படாததால் பொது இடத்தில் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகை சோனா மனு தாக்கல் செய்துள்ளார்.

மங்காத்தா படத்தில் நடித்த வைபவ் என்பவரது வீட்டில் செப்டம்பர் 14-ந் தேதி மது விருந்து நடந்தது. அப்போது தன்னை பாலியல் ரீதியாக சினிமா தயாரிப்பாளரும் நடிகருமான எஸ்.பி.பி.சரண் தாக்கினார் என்று அவர் மீது பாண்டி பஜார் போலீசில் நடிகை சோனா புகார் செய்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் எஸ்.பி.பி.சரண் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

அதே நேரம் இப்பிரச்சினையை சுமூகமாக முடிக்க சரணின் தந்தை எஸ்பி பாலசுப்பிரமணியம் உள்ளிட்டவர்கள் முயற்சித்து வந்தனர்.

இதற்கிடையே இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். அதில் ,”கவர்ச்சியால் என்னை மயக்கி, பணத்தை பறித்து தன் கடன் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று சோனா முயற்சிசத்தார். பணம் பறிக்கும் எண்ணத்தோடு குடிபோதையில் என்னிடம் வந்து பேசினார். பாலியல் உணர்வை தூண்டும் விதமாக நடந்துகொண்டார். எனவே நான் சோனாவை கடுமையாக எச்சரித்தேன். மறுநாள் போலீசில் என் மீது பொய்யான பாலியல் புகாரை கொடுத்துள்ளார்,” என்று கூறியிருந்தார்.

சோனா மனு தாக்கல்

இந்த மனுவை நீதிபதி ராஜசூர்யா விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வக்கீல் கஜிதா தீனதயாளன் ஆஜரானார். அரசு தரப்பில் வக்கீல் பாலசுப்பிரமணியம் ஆஜரானார்.

சரணின் இந்த குற்றச்சாட்டு சோனாவை கடும் கோபத்தில் ஆழ்த்தியது. அவர் எந்த சமரச முயற்சிக்கும் தயாராக இல்லை என அறிவித்துவிட்டு, சரண் போட்டுள்ள முன்ஜாமீன் மனுவை எதிர்த்து மனு தாக்கல் செய்தார்.

இது தொடர்பாக நடிகை சோனா சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு:

நான் நடிகை மட்டுமல்ல, சினிமா தயாரிப்பாளராகவும் இருக்கிறேன். கட்டிடங்களின் உள்அலங்காரம் அமைப்பது சம்பந்தப்பட்ட நிறுவனத்தை நடத்தி வருகிறேன். முன்ஜாமீன் கேட்டு சரண் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ள அனைத்து கருத்துகளும் பொய்யானவை.

சரணுடன் முன்விரோதம்

சினிமா இயக்குனர் வெங்கட் பிரபுவின் ‘கால்ஷீட்’டை நான் வாங்கி வைத்திருக்கிறேன். சில நாட்களுக்கு முன்பு என்னை சந்தித்த சரண், நான் வாங்கி வைத்திருந்த வெங்கட் பிரபுவின் கால்ஷீட்டை தனக்குத் தரும்படி கேட்டார். ஆனால் அதற்கு நான் மறுத்துவிட்டேன். இதனால் எங்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் ‘மங்காத்தா’ படத்தின் வெற்றியை கொண்டாடுவதற்காக நடிகர் வைபவ், தியாகராயநகர் யோகாம்பாள் தெருவில் உள்ள அவரது வீட்டில் மது விருந்து அளித்தார். அதில் நானும் கலந்துகொண்டேன். அந்த விருந்துக்கு இரவு 9 மணியளவில் சரண் வந்தார்.

தொடக்கூடாத இடங்களில் கையால் தொட்டார்

அங்கிருந்த என்னை மிகக்கேவலமாக பேசினார். எல்லா நடிகைகளும் ‘கால் கேர்ள்’தானே, இன்றைய இரவை என்னுடன் பகிர்ந்துகொள்கிறாயா? என்று கேட்டார். இதைக் கேட்டதும் நான் கடுமையாக அதிர்ச்சி அடைந்தேன். இப்படி கேட்டு என்னை தொடக்கூடாத இடங்களில் கையால் தொட்டார். உடனே நான் அவரிடம் இருந்து தப்பித்து, அந்த இடத்தில் இருந்து வெளியேறிவிட்டேன்.

இந்த சம்பவத்துக்கு எனது தோழி வரலட்சுமியும், கார் டிரைவர் அமரனும் சாட்சி. சரணின் இந்த செயல் எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. என்னை பழிவாங்க வேண்டுமென்று நன்றாக திட்டமிட்டே சரண் அப்படி நடந்துகொண்டார். இதன் மூலம் என்னிடமிருந்த வெங்கட் பிரபுவின் கால்ஷீட்டை வாங்க நினைத்தார்.

கொலை மிரட்டல் – முன்ஜாமீன் கூடாது

இதுபற்றி போலீசில் புகார் கொடுத்தேன். அதனடிப்படையில், அவர்மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த புகாரை வாபஸ் வாங்கிக் கொள்ளும்படி என்னை சிலர் மிரட்டுகின்றனர். இதனால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே சரணுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது. இந்த வழக்கில் என்னையும் இணைத்து விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இன்று விசாரணை

சோனா தரப்பில் வக்கீல் தங்கசிவன் இந்த மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜசூர்யா, வழக்கு விசாரணையை 22-ந் தேதிக்கு (இன்று) தள்ளி வைத்தார்.

 

சினிமாவானது மெரீனா சிறுவர்களின் வாழ்க்கை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சினிமாவானது மெரீனா சிறுவர்களின் வாழ்க்கை

9/21/2011 11:30:59 AM

மெரீனா சிறுவர்களின் வாழ்க்கையை 'மெரீனா' என்ற பெயரில் இயக்கி உள்ளார் பாண்டிராஜ். படம்பற்றி அவர் கூறியதாவது: 'பசங்க' படத்தில் கிராமத்து சிறுவர்களின் வாழ்க்கையை பதிவு செய்தது போன்று நகர்புறத்து சிறுவர்களின் வாழ்வை பதிவு செய்யும் முயற்சியே இந்தப் படம். இதற்காக பல மாதங்கள் சென்னையில் பெசன்ட் நகர் முதல் துறைமுகம் வரையிலான கடற்கரையில் அலைந்து கதைக்கான கேரக்டர்களை கண்டுபிடித்தேன். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து இங்கு வாழும் சிறுவர்களின் சந்தோஷத்தையும், துக்கத்தையும் படமாக்கியிருக்கிறேன்.

குழந்தை தொழிலாளர்களின் வாழ்க்கையை சொல்வதால் படத்தின் சுவைக்காக, மெரீனாவின் முக்கிய அங்கமான காதலை¬யும் சொல்கிறோம். சிவகார்த்திகேயன், ஓவியா காதலர்கள். மெரீனாவுக்குள் நுழையும்போது சந்தோஷமாக நுழைபவர்கள், சண்டையிட்டுக்கொண்டே திரும்புவார்கள். இவர்களுக்கும் சிறுவர்களுக்குமான தொடர்பில் சுவாரஸ்யங்கள் இருக்கும். படம் முழுவதும் சென்னை நகரின் கடற்கரைகளில் படமாக்கப்பட்டுள்ளது. கவுதம், பக்கோடா பாண்டி, அசோக் என்ற குழந்தை நட்சத்திரங்களோடு 15 மெரீனா சிறுவர்களையும் நடிக்க வைத்திருக்கிறேன்.




 

கவுதம் படத்திலிருந்து ராம் விலகியது ஏன்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கவுதம் படத்திலிருந்து ராம் விலகியது ஏன்?

9/21/2011 11:39:48 AM

தமிழ், தெலுங்கு, இந்தியில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படம், 'நீதானே என் பொன்வசந்தம்'. தமிழில் ஜீவா, தெலுங்கில் ராம், இந்தியில் ஆதித்யா ராய் கபூர் ஹீரோக்களாக நடிப்பதாக இருந்தது. மூன்று மொழிக்கும் சமந்தா ஹீரோயின். இதன் ஷூட்டிங், ஒரே நாளில் மூன்று மொழிக்கும் நடந்து வந்தது. இந்நிலையில் தெலுங்கு ஹீரோ ராம், படத்தில் விலகி கொள்வதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே சில நாட்கள் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் ராம் வெளியேறியது கவுதம் மேனனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபற்றி ராம் தரப்பில் விசாரித்தபோது, ''கவுதம் படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கப் போவதாகத்தான் முதலில் சொன்னார். இதனால் கால்ஷீட்டை அட்ஜஸ்ட் செய்து கொடுத்தார் ராம். திடீரென்று மனம் மாறிய கவுதம் மூன்று மொழிகளில் இயக்கப் போவதாக சொன்னார். அப்படியென்றால் மேலும் சில மாதங்கள் கால்ஷீட் தேவைப்படும் என்பதால், ராம் மறுத்தார். ஏற்கனவே அவருக்கு தெலுங்கு பட கமிட்மென்ட் இருப்பதை சொல்லி சமாதானமாகவே இருவரும் பிரிந்தனர். மற்றபடி அவர்களுக்குள் பிரச்னை இல்லை' என்று தெரிவித்தனர். இதற்கிடையே, இந்தப் படத்தை தெலுங்கில் தயாரிக்கும் பெல்லம்கொண்டா சுரேஷூக்கும் ராமுக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவே ராம் விலகியதாகக் கூறப்படுகிறது.




 

கொள்ளைக்காரன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கொள்ளைக்காரன்

9/21/2011 11:36:48 AM

பிரசாத் சினி ஆர்ட்ஸ் சார்பில் கே.வி.பிரசாத் தயாரிக்கும் படம், 'கொள்ளைக்காரன்'. விதார்த் ஹீரோ. அவர் ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி. மேலும் ரவிசங்கர், செந்தி, தாஸ், கிரேன் மனோகர், செல்வம் உட்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, யுவராஜ். இசை, ஜோகன். பாடல்கள், வைரமுத்து. தமிழ்ச்செல்வன் இயக்குகிறார். 'ஒருவன் செய்யும் சின்னச்சின்ன தவறுகள், மற்றவர்களால் கவனிக்கப்படாமலோ அல்லது தண்டனைக்கு உட்படுத்தப்படாமலோ போனால், எதிர்காலத்தில் அது பூதாகரமாகி, அவனுக்கு எதிராக செயல்படும். அந்த சூழ்நிலையை விதார்த் எப்படி சமாளிக்கிறார்' என்பது கதை' என்றார் இயக்குனர்.




 

விக்ரமுடன் ஸ்ரேயா, ரீமா ஒரு பாடலுக்கு டான்ஸ்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
விக்ரமுடன் ஸ்ரேயா, ரீமா ஒரு பாடலுக்கு டான்ஸ்!

9/21/2011 11:44:30 AM

'ராஜபாட்டை' படத்தில் விக்ரமுடன் ஸ்ரேயா, ரீமா சென் இணைந்து ஒரு பாடலுக்கு ஆடுகிறார்கள். இந்தப் பாடல் காட்சி ஜப்பானில் படமாக்கப்படுகிறது. சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம், தீக்ஷா சேத் நடிக்கும் படம், 'ராஜபாட்டை'. பி.வி.பி சினிமா புரொடக்ஷன்சுக்காக பிரசாத் வி.பொட்லாரி தயாரிக்கிறார். இதில், 'அனல் முருகன்' என்ற ஜிம்பாய் கேரக்டரில் விக்ரம் நடிக்கிறார். ஐ.டி பெண்ணாக தீக்ஷா சேத். பிரமாண்டமான கமர்சியல் மசாலா கதையை கொண்ட இந்தப் படம் ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு ஆட, பிரபல ஹீரோயின்களிடம் பேசி வந்தனர். கடைசியாக ஸ்ரேயாவும் ரீமா சென்னும் சம்மதித்துள்ளதாகத் தெரிகிறது. 'கந்தசாமி'யில் ஸ்ரேயாவும் 'தூள்' படத்தில் ரீமா சென்னும் விக்ரமுடன் நடந்திருந்தனர். 'ஜப்பானில் கல்யாணராமன்' படத்துக்குப் பிறகு அங்கு  ஷுட் பண்ணும் தமிழ்ப்படம் இது என்கின்றனர்.