பிரியங்கா சோப்ராவுக்கு அம்மாவாக நடிக்க மறுத்த தபு

மும்பை: பாலிவுட் நடிகை தபு பிரியங்கா சோப்ராவுக்கு அம்மாவாக நடிக்க மறுத்துவிட்டாராம்.

நடிகை தபுவுக்கு 42 வயதாகிறது. அவர் சல்மான் கான் நடித்த ஜெய் ஹோ படத்தில் அவருக்கு அக்காவாக நடித்தார். இந்நிலையில் ஜோயா அக்தர் பிரியங்கா சோப்ராவை வைத்து எடுக்கும் இந்தி படத்தில் அவருக்கு அம்மாவாக நடிக்க ஒரு நடிகையை தேடினார்.

அவருக்கு தபு நினைவுக்கு வரவே அவரை அணுகினார். ஆனால் அவரோ பிரியங்காவுக்கு அம்மாவாக நடிக்க மறுத்துவிட்டார். அந்த கதாபாத்திரம் தனக்கு பொருத்தமாக இருக்காது என்று கூறி அந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார்.

பிரியங்கா சோப்ராவுக்கு அம்மாவாக நடிக்க மறுத்த தபு

இந்நிலையில் தபு குயீன் இயக்குனர் விகாஷ் பெஹ்ல் ஷாஹித் கபூரை வைத்து எடுக்கவிருக்கும் படத்தில் அவரது காதலியாக நடிக்கிறார். ஷாஹித் கபூர் பிரியங்காவின் முன்னாள் காதலர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

42 வயதாகும் தபுவை தன்னைவிட 11 வயதே குறைவான பிரியங்காவுக்கு அம்மாவாக அதுவும் வயதானவராக நடிக்க கேட்டால் எப்படி ஏற்றுக்கொள்வார்.

 

இந்தி நடிகர் வீட்டு நீச்சல் குளத்தில் டிரைவர் சடலம்: போலீசார் விசாரணை

மும்பை: மூத்த ஹிந்திப் பட வில்லன் நடிகரான ரஞ்சித் வீட்டு நீச்சல் குளத்தில் அவரது கார் டிரைவரின் சடலம் மீட்கப் பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஹிந்திப் படங்கள் பலவற்றில் வில்லனாக நடித்திருப்பவர் நடிகர் ரஞ்சித். கடந்த 30 ஆண்டுகளாக இவரது கார் டிரைவராக பணி புரிந்து வந்தவர் கர்நாடகாவைச் சேர்ந்த நாக்ராஜ் கவுடா(44) என்பவர். இவரது சடலம் நேற்று ரஞ்சித் வீட்டு நீச்சல் குளத்தில் மிதந்தது கண்டு பிடிக்கப் பட்டது.

இந்தி நடிகர் வீட்டு நீச்சல் குளத்தில் டிரைவர் சடலம்: போலீசார் விசாரணை

இது குறித்து ரஜ்சித் கூறுகையில், ‘நேற்றிரவு எங்கள் வீட்டு நீச்சல் குளத்தில் நாக்ராஜ் உடல் மிதப்பது தெரிய வந்தது. உடனடியாக நாக்ராஜின் உடலை நீரில் இருந்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால், முன்னதாகவே நாக்ராஜ் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்' எனக் கூறியுள்ளார்.

மேலும், நாக்ராஜ் எங்கள் குடும்பத்தில் ஒருவராக பழகி வந்தார். எங்களுக்கு இன்றும் புரியவில்லை இது தற்கொலை அல்லது விபத்தா என்று. மேலும், தனது சகோதரர் மற்றும் மகனுடன் அறையில் இருந்த நாக்ராஜ் எதற்காக அவர்களுக்குத் தெரியாமல் வெளியே வந்தார், எவ்வாறு தண்ணீரில் விழுந்தார் என்பது மர்மமாகவே உள்ளது' எனத் தெரிவித்துள்ளார் நாக்ராஜ்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நாக்ராஜின் மரணம் கொலையா, தற்கொலையா அல்லது விபத்தா என அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை கிடைத்த தகவலின் படி, உடல்நலக் கோளாறால் பாதிக்கப் பட்டிருந்த நாக்ராஜ், டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்ததாகத் தெரிகிறது.

சமீபத்தில் மற்றொரு பாலிவுட் நடிகர் வீட்டு நீச்சல் குளத்தில் சிசு ஒன்றின் உடல் கண்டெடுக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

 

பிறந்த நாளு, வயசையெல்லாம் தப்புத் தப்பா போடறாங்களே... - கவுண்டமணி

நேற்று என் பிறந்த நாள் என்று வந்த செய்திகளில் உண்மையில்லை. மே 25தான் என் பிறந்த நாள் என்று கவுண்டமணி கூறியுள்ளார்.

நகைச்சுவையில் தனக்கென்று புதிய பாணி வகுத்து, இன்றுவரை அதில் வெற்றிகரமாகத் திகழ்பவர் கவுண்டமணி.

இப்போது வாய்மை மற்றும் 49 ஓ படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.

பிறந்த நாளு, வயசையெல்லாம் தப்புத் தப்பா போடறாங்களே... - கவுண்டமணி

நேற்று மார்ச் 18-ம் தேதி அவருக்குப் பிறந்த நாள் என தகவல் பரவியது. தகவல் களஞ்சியமான விக்கிபீடியாவிலும் அவரைப் பற்றிய விவரங்களில், பிறந்த நாள் மார்ச் 18 என்றும், வயது 75 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் இந்த தகவல்களை மறுத்துள்ளார் கவுண்டமணி.

இவை அனைத்துமே பொய்யான தகவல்கள் என்றும், தான் பிறந்தது மே 25-ல் தான் என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல பிறந்த ஆண்டும் தவறானது. தனக்கு அவ்வளவு வயதாகிவில்லை என்றும் கூறியுள்ளார்.

'என்னய்யா இவனுங்க தொல்ல தாங்கலயேப்பா... வயசு, பிறந்த நாளையெல்லாம் தப்புத் தப்பா போட்டுட்டு, சினிமாகாரங்க பூ விசாரிக்கிற அளவுப் பண்ணிட்டாங்களே என்று வருத்தப்பட்டாராம் கவுண்டர்.

 

எனக்கு படங்களில் நடிக்க வேண்டிய அவசியமே இல்லை: வரலட்சுமி சரத்குமார்

சென்னை: தனக்கு படங்களில் நடிக்க வேண்டிய அவசியமே இல்லை என்று வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சிம்புவின் போடா போடி படம் மூலம் நடிகையானவர் நடிகரும், சமக தலைவருமான சரத்குமாரின் மகள் வரலட்சுமி. புதிதாக நடிக்க வருபவர்கள் எல்லாம் அடுத்தடுத்து படங்களில் நடிக்க வரலட்சுமியை ஆளையே காணவில்லை.

எனக்கு படங்களில் நடிக்க வேண்டிய அவசியமே இல்லை: வரலட்சுமி சரத்குமார்

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் மீண்டும் நடிக்கிறார். பாலா சசிகுமாரை வைத்து எடுக்கும் படத்தில் கரகாட்டக்காரியாக நடிக்கிறார். ஒரு படத்திற்கும், மற்றொன்றும் இவ்வளவு பெரிய இடைவெளியா விடுவது என்று வரலட்சுமியிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் கூறுகையில்,

எனக்கு படங்களில் நடிக்க வேண்டிய அவசியமே இல்லை: வரலட்சுமி சரத்குமார்

படங்களில் நடிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. எனக்கு பிடித்தால் மட்டுமே அந்த படத்தில் நடிப்பேன். இந்த காலத்திற்குள் இத்தனை படங்களில் நடிக்க வேண்டும் என்று எனக்கு நானே இலக்கு வைத்துக் கொள்வது இல்லை என்றார்.

 

தாரை தப்பட்டை.... இதான் பாலா பட தலைப்பு!

சென்னை: பாலா இயக்கும் புதிய படத்தின் தலைப்பு தாரை தப்பட்டை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இளையராஜா இசையமைக்கும் 1000வது படம் என்ற பெருமையும் இந்தப் படத்துக்குக் கிடைத்துள்ளது.

தாரை தப்பட்டை.... இதான் பாலா பட தலைப்பு!

சசிகுமார் - வரலட்சுமி நடிக்கும் இந்தப் படம் கரகாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது. இந்தப் படத்தில் நாதஸ்வரக் கலைஞராக சசிகுமாரும், கரகாட்டக் கலைஞராக வரலட்சுமியும் நடிக்கின்றனர்.

ஆரம்பத்தில் கரகாட்டம் என்ற தலைப்பு தற்காலிகமாக வைக்கப்பட்டது.

இப்போது படத்துக்கு தாரை தப்பட்டை என்று வைக்கப்பட்டுள்ளதாக பாலா தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமான தாரை தப்பட்டைக்காக 12 பாடல்களை உருவாக்கித் தந்துள்ளார் இசைஞானி. மதுரையைச் சேர்ந்த நாதஸ்வர கலைஞர்கள், தவில் வித்வான்களை பிரசாத் லேபுக்கு வரவழைத்து இந்தப் படத்துக்கு வாசிக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஊருக்கெல்லாம் 'தலைவர்'னா ரஜினி: ஆனால் தனுஷுக்கோ...

சென்னை: ஊருக்கெல்லாம் தலைவர் என்றால் ரஜினிகாந்த். ஆனால் அவரது மருமகன் தனுஷுக்கோ கவுண்டமணி தான் தலைவராம்.

ஊருக்கெல்லாம் 'தலைவர்'னா ரஜினி: ஆனால் தனுஷுக்கோ...

தலைவா படம் ரிலீஸானதில் இருந்து ரசிகர்கள் விஜய்யை தலைவா என்று அழைக்கிறார்கள். அதே சமயம் கோலிவுட் முதல் பாலிவுட் வரை உள்ளவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தான் தலைவர் என்று அன்போடு அழைக்கிறார்கள்.

ஆங்கில பத்திரிக்கைகளும் ரஜினியை தலைவர் என்றே குறிப்பிடுகின்றன. இப்படி ஊருக்கெல்லாம் 'தலைவர்' ரஜினியாக இருக்க அவரது மருமகன் தனுஷுக்கோ தலைவர் என்றால் அது கவுண்டமணியாம்.

கவுண்டமணியின் பிறந்தநாளையொட்டி தனுஷ் ட்விட்டரில் நேற்று தெரிவித்துள்ளதாவது,

எனது ஆல் டைம் பிடித்த நடிகர், என் தலைவர், தி ஒன் அன்ட் ஒன்லி கவுண்டமணி சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

 

'ஓட்டுப் போடுவது நம் கடமை’... விழிப்புணர்வு பிரச்சாரத்தில் அமீர்கான்

டெல்லி: நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் பிரச்சார விழிப்புணர்வு விளம்பரத்தில் பிரபல ஹிந்தி நடிகர் அமீர்கான் நடிக்க உள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற தனது 49வது பிறந்தநாள் விழாவில் பேசிய அமீர்கான், ‘நான் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பட்ட முறையில் ஆதரவு தெரிவிக்க மாட்டேன். அதற்கான பிரச்சாரக் கூட்டங்களிலும் பங்கேற்க மாட்டேன்' எனத் தெரிவித்திருந்தார்.

மேலும், வாக்களிக்கத் தகுதியான வயதுடையவர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் அப்போது வலியுறுத்தியிருந்தார்.

'ஓட்டுப் போடுவது நம் கடமை’... விழிப்புணர்வு பிரச்சாரத்தில் அமீர்கான்

இந்நிலையில் தேர்தலில் வாக்களிப்பதற்கான அவசியத்தை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் தயாரிக்கும் விழிப்புணர்வு விளம்பரத்தில் அமீர்கான் நடிக்க உள்ளார். ஏற்கனவே இந்த விளம்பரத்தில் நடிக்க பிரபல விளையாட்டு வீரர்களான செய்னா நெஹ்வால், டோணி மற்றும் மேரிகோம் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக அமீர்கான், சுற்றுலாத்துறை பிரச்சாரத்திலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றத் துறை பிரச்சாரத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்ராகிம் ராவுத்தர் தயாரிக்கும் 'புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்'

ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படத் தயாரிப்பில் இறங்கியுள்ளார் இப்ராகிம் ராவுத்தர். படத்துக்குப் பெயர் 'புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்'

விஜயகாந்த் நடித்த உழவன் மகன், புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், பூந்தோட்ட காவல்காரன் உள்பட பல படங்களை தயாரித்தவர் இப்ராகிம் ராவுத்தர்.

சில ஆண்டுகளுக்கு முன் புலன் விசாரணை 2 என்ற படத்தைத் தயாரித்தார். ஆனால் அந்தப் படம் வெளிவரவில்லை.

புதிய படம்

பின்னர் இரண்டு முகம் என்ற படத்தை தயாரித்தார். அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து இப்போது, ‘புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்' என்ற பெயரில் புதிய படத்தை தயாரிக்கிறார்.

கிரிஷ்

இந்தப் படத்தில் நடிகை சங்கீதாவின் கணவரும், பாடகருமான கிரிஷ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

சிருஷ்டி டாங்கே

மும்பை அழகி சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் விஜய்பாபு, புதுமுகங்கள் ஜானகி, ஹாரீஸ் மூசா, நித்திஷ் மற்றும் பலரும் நடித்து இருக்கிறார்கள்.

ரஹைனா

செந்தில் மாறன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரஹ்மானின் சகோதரி ரஹைனா இசையமைத்து இருக்கிறார். தம்பி செய்யது இப்ராகிம் டைரக்டு செய்து இருக்கிறார். ராவுத்தர் பிலிம்ஸ் சார்பில் படம் தயாராகிறது. மதுரை, தென்காசி, குற்றாலம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட இந்தப் படம் மே மாதம் வெளிவர இருக்கிறது.

மதுரை காதல்

படத்தை பற்றி இயக்குநர் தம்பி செய்யது கூறுகையில், "கத்திக்கும், ரத்தத்துக்கும் பெயர் போன கலவர பூமியான மதுரையில் நடைபெறும் ஒரு மென்மையான காதல் கதை இது. எல்லோருக்குமே தங்கள் முதல் காதலில் இயலாமை இருக்கும். அந்த இயலாமையை நான் யதார்த்தமாக சொல்லியிருக்கிறேன்.

உண்மைச் சம்பவம்

காமத்தின் அரும்புதான் காதல் என்று நிறைய பேர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். காதல் வேறு, காமம் வேறு என்பதற்கான தீர்வையும் இந்த படத்தில் சொல்லியிருக்கிறேன். நான் உணர்ந்த உண்மை சம்பவங்களையே திரைக்கதையாக்கி இருக்கிறேன்,'' என்றார்.

 

என்னை இழுக்காதீங்கப்பா... உச்ச நடிகரின் முன்னெச்சரிக்கை!

ஒரு முறை கொடுத்துப் பழகிட்டா... வாங்கினவங்க அத்தனை சீக்கிரம் விடமாட்டாங்க.. என்பது தமிழ் வழக்கு.

உச்ச நடிகர் படத்தில் ஒரு முறை நஷ்டம் ஏற்பட்டு விட்டுது விநியோகஸ்தர்கள் புலம்ப, என்னால யாருக்கும் நயா பைசா நஷ்டம் வேணாம். வாங்க வந்து நஷ்ட ஈட்டை வாங்கிட்டுப் போங்க என்று கூறி பணத்தைத் திருப்பித் தந்தார்.

அதுவாவது அவர் சொந்தப் படம். பணத்தைத் திருப்பித் தந்ததில் ஏதோ ஒரு வகையில் நியாயம் இருந்தது.

ஆனால் அவர் எந்த வகையிலும் சம்பந்தப்படாத இன்னொரு படத்துக்கும் கோடிக் கணக்கில் நஷ்ட ஈடு கேட்டு உண்ணாவிரதம், போராட்டம் என ஏக அமர்க்களம் செய்தார்கள் விநியோகஸ்தர்கள்.

அவரும் சில கோடிகளைக் கொடுத்து அப்போதைக்கு அந்தப் பிரச்சினையிலிருந்து வெளியேறினார்.

மீண்டும் இப்படியொரு சூழல் வந்துவிடக் கூடாது என்பதில் குறியாக உள்ள உச்ச நடிகர், இந்த தனது உருவத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள படத்தை நியாயமான விிலைக்கே விற்க வேண்டும் என்றும், படத்தின் விநியோகத்தில் ஏற்படும் லாப நஷ்டங்கள் எதுவாக இருந்தாலும் தன்னிடம் வரக்கூடாது என்பதைத் தெளிவாகச் சொல்லிவிட்டதோடு, அதை எழுத்துப்பூர்வமாகவே எழுதிக் கொடுத்துவிட்டாராம்.

 

நயன்தாரா என்னமா நடிக்கிறாங்க தெரியுமா? - ஜெயம் ரவி புகழாரம்

நயன்தாராவுடன் இணைந்து நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. அவர் மிகச் சிறந்த நடிகை என்றார் நடிகர் ஜெயம் ரவி.

நிமிர்ந்து நில் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் ஜெயம் ரவி பேசுகையில், "எனக்கு நடிகைகளில் மிகவும் பிடித்தவர் ஜெனிலியாதான். எந்தவித ஈகோவும் இல்லாமல் எல்லோரிடமும் சகஜமாக பழகக் கூடியவர்.

நயன்தாரா என்னமா நடிக்கிறாங்க தெரியுமா? - ஜெயம் ரவி புகழாரம்

தற்போது என்னுடைய அண்ணன் இயக்கத்தில் நயன்தாராவுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறேன்.

இப்படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஏப்ரல் மாதம் படம் வெளிவரும் என எதிர்பார்க்கிறேன். இதில் நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. என்னமா நடிக்கிறாங்க...

அவர் ஒரு திறமையான நடிகை. கதையை நன்றாக புரிந்துகொண்டு அதற்கேற்ற நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர்," என்றார்.

 

இனி என் படங்களில் சரக்கடிக்கும் காட்சிகளே இருக்காது - உதயநிதி

இனி என் படங்களில் சரக்கடிக்கும் காட்சிகளே இருக்காது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழ் சினிமாவில் கதை இருக்கிறதோ இல்லையோ... கண்டிப்பாக டாஸ்மாக்கில் அல்லது பாரில் சரக்கடிக்கும் காட்சி கட்டாயம் இருக்கும்.

இனி என் படங்களில் சரக்கடிக்கும் காட்சிகளே இருக்காது - உதயநிதி

குறிப்பாக காமெடி என்ற பெயரில் குடித்துவிட்டுக் கூத்தடிப்பதைத்தான் இன்றைய படங்களில் அதிகமாகப் பார்க்க முடிகிறது.

விஜய், அஜீத் உட்பட முன்னணி நடிகர்களை தங்கள் ஹீரோவாகப் பார்க்கும் ரசிகர்கள், அவர்கள் திரையிலும் திரைக்குப் பின்னாலும் நல்ல விஷயங்களை விட்டுவிட்டு, மோசமான விஷயங்களைப் பின்பற்ற ஆரம்பித்துவிடுகின்றனர்.

எனவே இந்த ஹீரோக்கள் மது அருந்துவது, புகை பிடிப்பது உள்ளிட்ட காட்சிகளை படங்களில் தவிர்க்க வேண்டும் எனறு பல்வேறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலி இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த இரண்டிலுமே மது அருந்தும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. குறிப்பாக ஒரு கல் ஒரு கண்ணாடியில் பெருமளவு இந்த மாதிரி காட்சிகள் இருந்தன.

ஆனால் இனி தான் நடிக்கும் படங்களில் மது அருந்தும் காட்சிகள் கண்டிப்பாக இடம்பெறாது என உதயநிதி ஸ்டாலின் உறுதி கூறியுள்ளார்.

'நான் பாரம்பரியமிக்க குடும்பத்தில் இருந்து வந்தவன். ஆகையால் சமூகத்திற்கு தவறான முன்னுதாரணமாக இருக்க கூடாது.

எனவே இனி என்னை வைத்து படம் இயக்கும் இயக்குநர்களிடம் இனிமேல மது அருந்துவது போன்ற காட்சியில் கண்டிப்பாக இனிநடிக்க மாட்டேன் என்பதை தெரிவித்துள்ளேன். இனி நான் நடிக்கும் படங்களில் மது அருந்தும் காட்சிகள் இருக்காது,' என்றார் உதயநிதி.