மீண்டும் மீனா... பிரகாஷ் ராஜுக்கு ஜோடியாக நடிக்கிறார்!

Meena Comeback Tamil Cinema   

திருமணமாகி குழந்தைப் பெற்று, குழந்தை கொஞ்சம் வளர்ந்ததும், 'வீட்டில் போரடிக்கிறதே... மீண்டும் நடிக்கப் போகலாமா' என யோசிப்பது நடிகைகள் வழக்கம்.

அப்படி நடிக்க வந்தவர்கள் பட்டியல் பெரிது. அந்த நீண்ட பட்டியலில் இடம்பிடித்துள்ளார் மீனா.

பெங்களூர் கம்ப்யூட்டர் எஞ்ஜினியரைத் திருமணம் செய்து கொண்ட மீனாவுக்கு, நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. குழந்தைக்கு இப்போது இரண்டு வயது.

இப்போது மீண்டும் நடிக்க ஏராளமான வாய்ப்புகள் வருகின்றனவாம் மீனாவுக்கு. ஏற்கெனவே அவர் திருமணத்துக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும நடிக்க வருவேன் என்று சொல்லியிருந்தார்.

இப்போது தெலுங்கில் ஸ்ரீவாசவி வைபவம் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழில் பிரகாஷ்ராஜுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன் என்று நான் சொல்லவில்லையே. நல்ல வாய்ப்புகள் வந்தன, ஒப்புக் கொண்டேன்," என்றார்.

 

சிமா விழாவில் 'தெள்ளத்தெளிவாக' ஆட்டம் போட்ட அமலா பால்!

Amala Paul Exoposes Her Assets Siima

அமலா பாலின் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக என்று டைட்டில் கார்டு போடாத குறையாக, படு கவர்ச்சிகரமான ஆட்டத்தை முதல் முறையாக பப்ளிக்காக அரங்கேற்றி அசத்தியுள்ளார், சமீபத்தில் துபாயில் நடைபெற்ற சிமா 2012 திரைப்பட விருதுகள் விழாவின்போது.

மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த இந்த மைனா நடிகை இதுவரை பெரிய அளவில் எங்குமே கவர்ச்சி காட்டியதில்லை. சினிமாவில் கூட 'பொத்துனாப்புல'தான் வந்து போயிருக்கிறார். திரைப்பட விழாக்களுக்குக் கூட பெரிய அளவில் கவர்ச்சிகரமாக அவர் வருவதில்லை. லேசுபாசான கவர்ச்சியைத்தான் கடைப்பிடித்து வருகிறார்.

இந்த நிலையில் முதல் முறையாக பப்ளிக்காக ஒரு விழாவில் படு கவர்ச்சிகரமாக ஆட்டம் போட்டு அடடா, நம்ம அமலா பாலா இது என்று அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளார் இந்த 'தெய்வத்திருமகள்'.

துபாயில் நடந்த சிமா 2012 திரைப்பட விழாவில்தான் இப்படி ஒரு கெட்ட ஆட்டம் போட்டுள்ளார் அமலா பால். குத்துப் பாட்டுக்கு கோலாகலமாக ஆடிய அமலா பால், முன்னழகை முக்கால்வாசி காட்டும் விதத்திலான உடையுடன் ஆடியதைப் பார்த்து ஆடியன்ஸெல்லாம் உற்சாகத்தின் உச்சிக்கே போய் விட்டார்களாம்.

அவர் மட்டுமா ஹன்சிகா மோத்வானியும் கூட பிரமிக்க வைக்கும் வகையில் பிரமாதமான கவர்ச்சி ஆட்டம் போட்டார்.இவர்களின் ஆட்டத்திற்கு என்ன காரணமாக கூறப்படுகிறது என்றால், தெலுங்குத் திரையுலகில் வாய்ப்பைப் பிடிக்கும் நோக்கத்தில்தான் இப்படி கவர்ச்சிகரமாக ஆட்டம் போட்டு தெலுங்குத் திரையுலகினரை கவர்ந்துள்ளதாக கூறுகிறார்கள். தெலுங்கில் கவர்ச்சிக்கு தனி 'கட்டிங்' என்பதால் யாருடைய கவர்ச்சி அசரடிக்கிறதோ அவர்களுக்கே 'டப்பு' ஜாஸ்தி என்பதாலும் போட்டி போட்டு பொளந்து கட்டியுள்ளனராம்.

இவர்கள் போக பிரியா மணி, ஸ்ருதி ஹாசன், சார்மி, பார்வதி ஓமனக்குட்டன் என பலரும் கலக்கலாக ஆடினர்.ஆனால் அமலா பால் மற்றும் ஹன்சிகா மீதுதான் அத்தனை பேரின் கண்களும் இருந்ததாம்.

உங்க கண் யார் மீதோ...?

 

பிள்ளைப் பாசத்தால் நயனதாராவின் காதலைத் துறந்த பிரபுதேவா...!

Why Prabudeva Dumped Nayanthara

பிள்ளைப் பாசத்தால்தான் தனது காதலையும், நயனதாராவையும் துறந்துள்ளார் பிரபுதேவா. இதை அவரே அவரது வாயால் கூறியுள்ளார்.

பிரபுதேவா நடிகராகவும், டான்ஸராகவும் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்த காலத்தில் தன்னுடன் நடனமாடி வந்த ரமலத்தை காதலித்து பரபரப்புக்கு மத்தியில் மணந்தார். ஆனால் அந்தக் காதலையும், கல்யாணத்தையும் பிரபுதேவா குடும்பத்தினர் கடைசி வரை ஏற்கவில்லை.இதனால் பிரபுதேவா, ரமலத் வாழ்க்கை ரகசியமாக கழிந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் திடீரென ரமலத், பிரபுதேவா வாழ்க்கையில் பெரும் புயல் வீசியது. புயலாக வந்து நுழைந்தவர் நயனதாரா. அவர் மீது கொண்ட முரட்டுக் காதலால், ரமலத்தைப் பிரிந்தார் பிரபுதேவா. பெரும் சட்டப் போராட்டம், உணர்வுகளின் போராட்டத்திற்கு இடையே விவாகரத்து செய்தார் மனைவியை.

அதன் பிறகு எப்போது நயனதாரா, பிரபுதேவா கல்யாணம் என்று அத்தனை பேரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் இந்தக் காதலும் திடீரென பிளந்து கொண்டது. இது அனைவரையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது. நயனதாராவுக்காகத்தானே தனது மனைவி, சொத்து பத்து அத்தனையையும் விட்டு வந்தார் பிரபுதேவா, பிறகு எதற்கு நயனதாராவை அவர் பிரிந்தார் என்பதே அனைவருக்கும் ஏற்பட்ட குழப்பம்.

ஆனால் இந்தப் பிரிவினைக்கு பிரபுதேவாவின் பிள்ளைப் பாசம்தான் காரணம் என்று இப்போது தெரிய வந்துள்ளது. எனக்கு என் பிள்ளைகள்தான் முக்கியம். அவர்களின் எதிர்காலம்தான் முக்கியம். அவர்களுக்காக எதையும் இழப்பேன் என்று முதல் முறையாக நயனதாராவைப் பிரிந்து வந்ததற்கான காரணத்தை 'இன்டைரக்டாக' அறிவித்துள்ளார் பிரபுதேவா.

ஏற்கனவே இதே காரணத்தைத்தான் மீடியாக்கள் செய்திகளாக வெளியிட்டு வந்தன. ரமலத்தை விட்டுப் பிரிந்த பின்னர் தனது குழந்தைகளை மட்டும் தொடர்ந்து பிரபுதேவா பார்த்து வருவதாகவும், அதை நயனதாரா விரும்பவில்லை என்றும், குழந்தைகளை விட்டு நிரந்தரமாக பிரிந்து வருமாறு அவர் கட்டாயப்படுத்துவதாகவும், பிரபுதேவா மறுத்ததால் கோபித்துக் கொண்டு கேரளாவுக்குப் போய் விட்டதாகவும், அங்கு அவரைத் தேடி பிரபுதேவா போனபோது வீட்டுக்குள் அனுமதிக்காமல் தெருவிலேயே நிறுத்தி விட்டதாகவும் செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம்.

எப்படியோ ரமலத் தனது கணவரைப் பிரிந்தாலும் கூட அவரது பிள்ளைகளுக்கு அப்பா கிடைத்து விட்டார்.

 

'அமலா பால், தீக்ஷா சேத்துக்கு ஆடவே தெரியல!'

Amala Paul Diksha Seth Spoil The Show    | தீக்ஷா சேத்  

துபாயில் முதல் முறையாக நடந்த சினிமா விழா அது. இதுவரை இல்லாத அளவுக்கு 100-க்கும் அதிகமான தென்னிந்திய நட்சத்திரங்களை துபாய்க்கே அழைத்துப் போனார்கள் விழா ஏற்பாட்டாளர்கள். நல்ல பைசா!

வந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு விருது. அவர்களில் இப்போது முன்னணியில் உள்ள பலரும் மேடையில் ஆட்டம் போட்டார்கள். அதில் சில டாப் நட்சத்திரங்கள் போட்ட ஆட்டம் தப்பாய் போனதில் அரங்கமே சிரிப்பாய் சிரித்ததாம்!

குறிப்பாக அமலா பால் மற்றும் தீக்ஷா சேத் இருவருக்கும் மேடையில் சுத்தமாக ஆடவே தெரியவில்லையாம். அரைகுறை ஆடையுடன், தப்புத் தப்பாய் அவர் ஆட, போம்மா தாயே உன் ஆட்டம் போதும் என பார்வையாளர்கள் கமெண்ட் அடிக்கும் அளவுக்கு ஆகிவிட்டதாம் (பணம் தரவில்லை என்று முரண்டுபிடித்து, பட்டுவாடா செய்த பிறகு மேடைக்கு போனாரே.. அதே நிகழ்ச்சிதான்!).

சினிமாவில் ஆடுவது வேறு, மேடையில் லைவாக நிகழ்ச்சி செய்வது வேறு என்பதை ரொம்ப காஸ்ட்லியாக கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் விழா குழுவினர்!

 

நடிகர் சோஹைல் கான் கார் மோதி பெண் பலி - டிரைவர் கைது

Sohail Khan Car Crash Case Khan Brothers To Be Grilled

மும்பை: நடிகர் சல்மான்கானின் தம்பியும் நடிகருமான சோகைல்கானுக்கு சொந்தமான கார் மோதி 70 வயது பெண் பலியானார்.

சோஹைல்கானின் ஆடம்பர லேண்ட் க்ரூய்ஸர் நேற்று நள்ளிரவு 11 மணி அளவில் மும்பை புறநகர் பந்தரா பகுதியில் சென்று கொண்டிருந்தது.

வெகு வேகமாக சென்ற அந்த கார், எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் சென்ற 70 வயது மூதாட்டி மீது மோதியது. இதில் அந்தப்பெண் பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அங்கிருந்த கார் டிரைவர் தனஞ்செய் பிம்பிள் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

அவர் குடித்துவிட்டு வண்டியோட்டினாரா? என்பதை கண்டுபிடிப்பதற்காக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

இதற்கிடையே விபத்து நடந்தபோது நடிகர் சோகைல்கானும் காரில் இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறியதாக தகவல் வெளியானது. ஆனால் அதை போலீசார் மறுத்துவிட்டனர்!

இந்தக் காரில் சோஹைல்கான் சென்றதாகக் கூறப்பட்டாலும், காருக்கு உரிமையாளர் சோஹைலின் அண்ணன் நடிகர் அர்பாஸ் கான் என்பதால், இருவரிடமும் விசாரணை நடக்கும் எனத் தெரிகிறது.

 

சினி​மாவை தவிர வேற உல​கமே தெரி​யாது: நடிகை காவேரி

I Love Cinema Ilavanchi Kaveri

வைகாசி பொறந்தாச்சு, திரைப்படத்தில் சின்னப்பெண்ணாய் அறிமுகமான காவேரி இன்றைக்கு தங்கம் சீரியலில் காமெடித்தனம் கலந்த வில்லி ரோலில் இளவஞ்சியாக கலக்கி வருகிறார். "தங்​கம்' தொட​ரின் ​படப்​பி​டிப்பு. நாச்​சியார், மங்கா அக்கா என அனை​வ​ரி​ட​மும் சிரித்து விளை​யா​டிக்​கொண்டே பிஸி​யாக இருந்த அவரிடம் சீரியல் பயணம் பற்றி பேசினோம்.

"வைகாசி பொறந்​தாச்சு' முதல் படம்ங்​கி​ற​து​னால அப்போ எனக்கு எது​வுமே தெரி​யாது அத​னால் பயம் இருந்​தது. இப்​பொ​ழுது பழ​கி​டுச்சு. இரு​பது வரு​டமா இது மட்​டும் தான் தெரி​யும். சினி​மாவை தவிர வேற உல​கமே எனக்குத் தெரி​யாது.​

சினிமா, ​ சீரி​யல்ன்னு நான் பிரித்து பார்த்​த​தில்லை. என்னை பொருத்​த​வரை கேமிரா லைட்​டிங் மட்​டும் தான் வித்​தி​யா​ச​மாக இருக்​குமே தவிர மற்ற எல்​லாமே ஒரே மாதி​ரி​தான் இருக்​கும். ​ எனக்கு எங்கு போனா​லும் சந்​தோ​ஷமா இருக்​க​ணும். எல்​லோ​ரை​யும் சிரிக்க வைக்​க​ணும்.

என்​னு​டைய ஃபேமிலி என்று சொன்​னால் அது இந்த ஷூட்​டிங் ஸ்பாட்​டில் உள்​ள​வர்​கள்​தான். நான் வீட்​டில் இருக்​கும் நேரத்​தை​விட இங்​கே​தான் அதிக நேரம் செல​ வி​டு​கி​றேன். என்​னு​டைய சொந்​தம்,​ பந்​தம் ,​அத்தை,​ மாமா என்று எல்​லாமே இங்கே உள்​ள​வர்​கள் தான். எனக்கு வேற உல​கமே இல்ல. வேற உல​கத்தை பற்றி நான் நினைப்​பது கூட இல்லை.​

தங்கம் தொடரின் கதையை முதன் முத​லில் கேட்​கும் பொழுது இந்​த​ள​வுக்கு ரீச் ஆகும்ன்னு எதிர்​பார்க்​க​வில்லை. ஐயா​வுக்கு மரு​ம​க​ளாக வரு​கிற கேரக்​டர் கொஞ்​சம் பவர் ஃபுல்​லான ரோல் என்று சொன்​னார்​கள். நான் இது​வரை நெகட்​டீவ் ரோலில் நடித்​தது கிடை​யாது. எனக்கே இது ஒரு புது​மை​யான அனு​ப​வம் தான்.

ஐயா​வின் சொத்து ​ வேறு யாருக்​கும் போகக் கூடாது என்​ப​தற்​குத்​தான் அவ்​வ​ளவு வில்​லத்​த​னம் செய்ய வேண்டி இருந்​தது.​முதலில் அதிக வில்லத்தனம் இருந்தது. இப்பொழுது கிளி, ஆடு, குழந்தை என காமெடி டிராக்கில் போகிறது.

தங்கம் தொடரில் என்​னு​டைய நடிப்​பிற்கு மக்​க​ளி​டம் நல்ல வர​வேற்பு இருக்​கி​றது. அம்​மா​தான் தின​மும் தவ​றா​மல் ​ டிவி​யில் தொடரை பார்ப்​பார்​கள். நான் ஏதா​வது தப்பு செய்​தி​ருந்​தால் கூட அதைச் சுட்​டிக்​காட்​டித் திருத்​து​வார்​கள். சினிமாவில் நெகட்​டிவ் ரோல் வந்​தாலும் செய்ய தயாராக இருக்கிறேன் என்று கூறிவிட்டு சூட்டிங்கிற்கு தயாரானர் காவேரி.

 

கிளாமர் எனக்கு சரிப்பட்டு வராது – 'மீனாட்சி' ஸ்ரீஜா

I Don T Like Glamour Characters Srija

இந்த மாதிரி ஒரு மருமகள் கிடைச்சா நல்லா இருக்கும் என்று இன்றைய மாமியார்கள் கேட்கும் அளவிற்கு அனைவரின் நெஞ்சங்களிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் அழகு ஸ்ரீஜா. மதுரையில் தொடங்கி இன்றைய முந்தானை முடிச்சு, சரவணன் மீனாட்சி வரை ஹோம்லியான கேரக்டர்களின் அழகாய் ஸ்கோர் செய்து வருகிறார் ஸ்ரீஜா. சரவணன் மீனாட்சியில் பிஸியாக இருந்த அவரிடம் பிஸியான சீரியல் வாழ்க்கைப் பற்றி கேட்டோம்.

நான் இங்கு டிவி சீரியலுக்கு வருவதற்கு முன்பே சினிமாவுக்கு வந்துட்டேன். நடிக்கணும், நடனம் ஆடணுங்கிற ஆர்வத்தில ஸ்கூல்ல மூன்றாவது படிக்கும் போதே கிளாசிகல் டான்ஸ் கத்துக்கிட்டேன். ஐந்தாவது படிச்சிட்டிருந்தப்ப, மலையாள சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. பத்தாம் வகுப்பு படிச்சிட்டிருந் தப்ப மீண்டும் பட வாய்ப்புகள் கிடைச்சது. கிருஷ்ணன் கோவில் கிருஷ்ணா, சகோதரன் சகோதரி, வால் கண்ணாடி படங்களில் நடிச்சேன்.

சுவாமி ஐயப்பன் படத்தில நடிச்சிட்டிருந்தப்ப மதுரை சீரியலுக்கு டைரக்டர் ஜெரால்டு ஹீரோயின் தேடிட்டிருந்திருக்கிறார். அப்ப என்னோட போட்டோவை சுவாமி ஐயப்பன் படத்தயாரிப்பார் கார்த்திகேயன் டைரக்டர் ஜெரால்டிடம் காட்டியிருக்கிறார். பார்த்த டைரக்டர் இதே மாதிரி பெண்தான் நான் நினைச்சிருக்கிற கேரக்டருக்கு பொறுத்தமாயிருப்பாள்ன்னு சொல்லியிருக்கார். மதுரை சீரியலில், நடிக்க அழைப்பு வந்தது.

சினிமாவை விட சீரியலில் நடிப்பது பிடிச்சிருந்தது. நடிச்சிட்டிருக்கேன். மலையாளத்திலும், தமிழிலும், சினிமா வாய்ப்புகள் வந்தன. அவுங்க கேட்ட தேதிகளில், சீரியல் ஷூட்டிங் இருந்ததால, ஏத்துக்க முடியாம போச்சு. மற்றபடி சினிமாவில் நடிப்பதில், எனக்கு ஏதும் பிரச்னையில்லை.

மதுரைதான் என்னோட முதல் சீரியல். அதிலேயே எனக்கு தமிழக மக்களிடம் நல்ல அறிமுகம் கிடைச்சது. இப்போது முந்தானை முடிச்சு, சரவணன் மீனாட்சின்னு எனக்கேத்த கதை அமைஞ்சிருக்கு.

ஷூட்டிங் ஸ்பாட்ல, ஷாப்பிங் செல்கிற இடங்கள்ல, என்னை அடையாளம் கண்டுக்கிட்டு நலம் விசாரிக்கிறாங்க. யூத்கேர்ள்ஸ் சிநேகமா பேசுறாங்க. ரொம்ப சந்தோஷமாயிருக்கு. என்னதான் கதாநாயகியாக அனைவருக்கும் பிடித்தமாதிரி நடித்தாலும் வில்லியாக நடிக்க எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால் என் முகமும், தோற்றமும் பார்ப்பதற்கு ரொம்ப சாந்தமாக இருப்பதால் வில்லி கேரக்டர்கள் எனக்குக் கொடுக்க மறுக்கிறார்கள் சின்னதிரை இயக்குநர்கள் என்று வருத்தப்பட்டு சொன்னார் ஸ்ரீஜா.

அதேபோல் நிறைய பேர் கிளாமராக நடிப்பீர்களா என்று கேட்கிறார்கள். எனக்கும் கிளாமருக்கும் செட் ஆகாது. வருவாய் கிடைக்கிறது. புகழ் கிடைக்கிறதேன்னு மற்றவங்க முகம் சுளிக்கும் அளவுக்கு நடிக்க மாட்டேன். என்னை பார்க்கிறவங்க சிநேகமா மரியாதையா பேசற அளவுக்கு பேசப்படும்ன்னு நான் நினைக்கிற படி கேரக்டர் அமைந்தால் மட்டுமே, நடிப்பேன்.

என்னோட உடல் வாகிற்கு கிளாமர் கேரக்டரெல்லாம் ஒத்து வராது. பணம் கிடைக்கிறது, புகழ் கிடைக்கிறதுன்னு நினைச்சு இஷ்டத்திற்கு நடிக்க என்னால் முடியாது. நல்ல கேரக்டராக இருந்தால் நடிப்பேன். பிடிக்காத கேரக்டரில் எவ்வளவு கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்று உறுதியாக சொன்னார் ஸ்ரீ ஜா.

 

ஆதரவற்றோருக்கு உதவ நட்சத்திர கிரிக்கெட்!

Star Cricket Good Cause

ஆதரவற்றோர் மற்றும் முதியோருக்கு உதவ வரும் 16-ம் தேதி நட்சத்திர கிரிக்கெட் நடக்கிறது.

வருகிற ஜூலை 16-ம்தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள ஒஸ்.எஸ்.ராஜசேகர ரெட்டி விளையாட்டு அரங்கில் இந்த போட்டி நடக்கிறது.

அனாதை குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு உதவ இந்த போட்டி மூலம் நிதி திரட்டப்படுகிறது.

போட்டி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. அத்துடன் பிரபல சினிமாக்களில் இடம்பெற்ற காட்சிகளை ரசிகர்களுக்காக முன்னணி நடிகர்கள் நடித்து காட்டப் போகிறார்களாம்.

இந்தத் தகவலை நடிகர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். போட்டியில் பங்கேற்கும் நடிகர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்போவதாகவும் அவர் கூறினார்.

தமிழ் நடிகர்கள் மட்டுமின்றி, தென்னிந்திய சினிமா கலைஞர்கள் பலரும் இந்தப் போட்டியில் இடம்பெற உள்ளனர்.

 

எனது மார்பகங்கள்... 'டைட்டானிக்' நாயகி கேட் வருத்தம்!

I M Curvy Don T Have Perfect Boobs

எனக்கு அழகான மார்பகங்கள் இல்லை, வளைவு,நெளிவுடன் அவை இல்லை. வெகு சாதாரண மார்பங்கள்தான் அவை என்று கூறியுள்ளார் டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட்.

டைட்டானிக் படம் மூலம் உலக திரை ரசிகர்களை குறிப்பாக ஆண்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் இங்கிலாந்து நடிகை கேட் வின்ஸ்லெட். அப்படத்தில் அவரது கம்பீரமான அழகில் மயங்காதவர்களே கிடையாது. ஆனால் தனது அழகு குறித்து கேட் ஒருபோதும் பீற்றிக் கொண்டதே கிடையாது.

உலக அளவில் நடத்தப்படும் பல்வேறு கருத்துக் கணிப்புகளில் செக்ஸியான நடிகைகள் பட்டியலில் அவ்வப்போது முதலிடம் அல்லது முக்கிய இடத்தைப் பெற்றும் கூட தன்னை பெரிய அழகியாகவோ, செக்ஸியான பெண்ணாகவோ கூறிக் கொண்டதில்லை கேட்.

தற்போது 36 வயதில் ஓடிக் கொண்டிருக்கும் கேட், தனது வயது குறித்தும், அழகு குறித்தும் அடக்கமாக சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து படியுங்கள்...

நான் ஒன்றும் அவ்வளவு செக்ஸியான பெண் கிடையாது. உண்மையில் எனக்கு அழகான மார்பகங்கள் கூட கிடையாது. அழகான வளைவுகளோ, நெளிவுகளோ கிடையாது. சாதாரணமானவைதான் அவை. அதற்காக நான் ஒருபோதும் கவலைப்பட்டதே கிடையாது. செக்ஸியான, ரொமான்டிக்கான காட்சிகளில் நடிக்க தயங்கியதும் கிடையாது.

நான் நிர்வாணமாக நடிக்கும்போதும் சரி, செக்ஸியாக நடிக்கும்போதும் சரி, அது மற்ற பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்ட உதவும் என்பது எனது நம்பிக்கை. எனவேதான் எனது உடல் அழகு குறித்து நான் ஒருபோதும் கவலைப்பட்டது கிடையாது. என்னால் பல பெண்களுக்கு தன்னம்பிக்கை கிடைக்கிறது என்பதே திருப்தியாக உள்ளது.

சாதாரணமாக தெருவில் நடந்து செல்லும் பெண்களைப் போலத்தான் நானும். உடல் அமைப்பும் சரி, எடையும் சரி, அழகும் சரி, எல்லாமே என்னிடம் சாதாரணமானதுதான் என்கிறார் கேட்.

2008ல் வெளியான தி ரீடர் படத்தில் ஒரு நிர்வாணக் காட்சியில் நடித்திருந்தார் கேட். அப்படத்திற்காக அவருக்கு ஆஸ்கர் விருதும் கிடைத்தது. டைட்டானிக் படம் இன்றளவும் உலக திரை ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. அதில் அழகான கேட்டை கண்ட ரசிகர்கள் அதே பார்வையுடன்தான் இன்று வரை கேட்டை ரசித்து வருகின்றனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான டைட்டானிக் 3டி ரிலீஸுக்கும் கூட பாக்ஸ் ஆபீஸில் சரியான வரவேற்பு கிடைத்தது.

டைட்டானிக் படத்தில் நடித்தபோது அவருக்கு வயது 21 தான். தற்போது 15 வருடங்களைத் தாண்டி வந்து விட்டார் கேட். வயது குறித்தும் அவர் அதிகம் கவலைப்படவில்லை. எனக்கு தன்னம்பிக்கை அதிகம் உள்ளது. வயது ஆவது குறித்து நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. அது இயற்கை. வயது ஆக ஆக எனக்குள் மன உறுதிதான் அதிகப்படுகிறதே தவிர குறைவதில்லை. இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்ற உற்சாகம் கூடுகிறது.

21 வயதில் இருந்த நான் இப்போது இல்லை. இன்னும் போகப் போக எனது உடல் சதைகள் தளர்வடைய ஆரம்பிக்கும், மார்பகங்கள் தொங்கிப் போகும், முடி கொட்டலாம், பற்கள் துருத்த ஆரம்பிக்கலாம். இதெல்லாம் சாதாரணமானதுதான். ஆனால் எனது நம்பிக்கை வலுவாகவே உள்ளது என்று கூறும் கேட் இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்தும் செய்து கொண்டவர். அவரது முதல் கணவர் இயக்குநர் ஜிம் திரெப்லெடியான். பின்னர் இயக்குநர் சாம் மெண்டிஸை 2010ல் மணந்து அவரையும் விவாகரத்து செய்தார். தற்போது மூன்றாவதாக ஒரு காதலில் உள்ளார்.

தனது முந்தைய இரு திருமணங்கள் மூலம் அவருக்கு தலா ஒரு குழந்தை என இரண்டு பேர் உள்ளனர். அதில் 11 வயது மகள் மியா அடக்கம். இன்னொருவர் ஜோ என்ற பெயர் கொண்ட மகன் ஆவார்.

கேட் தற்போது லேபர் டே என்ற படத்தில் மன அழுத்தம் மிக்க, தனித்து வாழும் தாயாரின் கேரக்டரில் நடித்து வருகிறார்.

 

சரப்ஜித் சிங்கை விடுவிக்கக் கோரி பாகிஸ்தான் அரசிடம் மனு கொடுக்க சல்மான் திட்டம்

Salman Khan Meets Sarabjit Sister Daughters

மும்பை: பாகிஸ்தான் சிறையில் 20 ஆண்டுகளாக இருக்கும் மரண தண்டனைக் கைதி சரப்ஜித் சிங்கின் சகோதரி மற்றும் மகள்கள் பாலிவுட் நடிகர் சல்மான் கானை சந்தித்து பேசினர்.

1990ம் ஆண்டு பாகிஸ்தானில் 14 பேர் பலியான 2 வெடிகுண்டு தாக்கதல்களில் ஈடுபட்டதாகக் கூறி இந்தியரான சரப்ஜித் சிங்கை கைது செய்து பாகிஸ்தான் சிறையில் அடைத்தனர். பின்னர் பாகிஸ்தான் ராணுவச் சட்டப்படி அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் தான் உள்ளார். இந்நிலையில் சுர்ஜித் சிங் என்பவரை விடுதலை செய்கிறோம் என்று அறிவிப்பதற்கு பதிலாக சரப்ஜித் சிங்கை விடுவிக்கப் போகிறோம் என்று பாகிஸ்தான் அறிவித்தது.

இந்த குழப்பம் தீர்ந்து சுர்ஜித் சிங் விடுதலையாகி தனது குடும்பத்தாருடன் சேர்ந்துவிட்டார். இந்நிலையில் சரப்ஜித் சிங்கை விடுவிக்குமாறு பாலிவுட் நடிகர் சல்மான் கான் பாகிஸ்தான் அரசு, அதிபர் சர்தாரிக்கு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து சரப்ஜித் சிங்கின் விடுதலைக்காக போராடி வரும் அவரது சகோதரி தல்பீர் கௌரும், சரப்ஜித்தின் மகள்கள் பூனம் மற்றும் ஸ்வப்னதீப் ஆகியோரும் சல்மான் கானை தபாங் 2 ஷூட்டிங்ஸ்பாட்டில் சந்தித்து பேசியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

சரப்ஜித் சிங்கை விடுவிக்கக் கோரி மனு ஒன்றை பாகிஸ்தான் அரசிடம் கொடுக்க சல்மான் கான் திட்டமிட்டுள்ளார்.

 

குழந்தைகளுக்குப் பிடித்த திருக்குறள் கதைகள்

Thirukural Kathaigal Chithiram Tv

திருக்குறளை படித்து மனப்பாடம் செய்வதை விட அதை கதை வடிவில் படமாக பார்த்தால் சின்னக்குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்வார்கள். இதனை கருத்தில் கொண்டே சித்திரம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 5.30 மணிக்கு திருக்குறளை மையமாகக் கொண்ட நீதிக்கதைகள் ஒளிபரப்பாகி வருகிறது.

இன்றைக்கு கார்டூனில் நீதிக்கதைகள் பார்ப்பதை குழந்தைகள் விரும்ப ஆரம்பித்துவிட்டனர். அதுபோன்ற குழந்தைகளை கவரும் வகையில் `திருக்குறள் கதைகள்' என்ற தலைப்பில் அனிமேஷன் தொழில் நுட்பத்தில் குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் தரப்படுகிறது, இந்த நிகழ்ச்சி. 4 முதல் 14 வயதுள்ள குழந்தைகளைக் கருத்தில் கொண்டு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானாலும், பெரியவர்களையும் ஈர்க்கும் வண்ணம் உலகத்தரம் வாய்ந்த தொழில் நுட்பங்களோடு உருவாக்கப்பட்டிருக்கிறது.

 

அமீர்கான் படத்தில் ஒரு பாடலில் நடிக்கிறார் ரஜினி - சம்பளம் ரூ 15 கோடி?

Rajinikanth Appear Aamir S Talassh   

விரைவில் தொடங்கவிருக்கும் அமீர்கானின் தலாஷ் படத்தில் ஒரு பாடல் காட்சியில் ரஜினி நடிக்கிறார் என்றும், இதற்காக அவருக்கு ரூ 15 கோடி சம்பளம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள், தங்கள் படங்களில் ரஜினி நடிக்கிறார் என்று செய்தி பரப்புவது வழக்கமாகி வருகிறது.

இதற்கு முன் ஷாரூக்கானின் ரா ஒன் படத்தில் ஒரு காட்சியில் வந்தார் ரஜினி. ஆனால் அது ரஜினிதானா என்று கேட்கும் அளவுக்கு படு செயற்கையாக எடுத்திருந்தனர்.

அடுத்து தூம் 3-ல் ரஜினியை நடிக்க வைக்க முயற்சி நடப்பதாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்தே செய்தி வெளியிட்டுள்ளனர்.

இப்போது அமீர்கான் முறை. தனது தலாஷ் படத்தில் ரஜினியை ஒரு பாடல் காட்சியில் தோன்ற வைக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளாராம்.

இந்தக் காட்சியில் ரஜினி மட்டுமல்லாமல், அமிதாப், தர்மேந்திரா உள்பட பாலிவுட் பிரபலங்களும் தோன்றுவார்களாம். கபில்தேவ், சச்சின் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் சிலரும் கூட இந்த பாடலில் இடம்பெறவிருக்கிறார்களாம்.

பல்வேறு நாடுகளில் உள்ள 50 லொகேஷன்களில், ரூ 50 கோடி செலவில் இந்தப் பாடல் காட்சி படமாகப் போகிறதாம்.

இந்தப் பாடலில் தோன்ற ரஜினிக்கு சம்பளம் ரூ 15 கோடி என செய்தி வெளியாகியுள்ளது. இது உண்மையாக இருந்தால், உலகிலேயே ஒரு பாடலில் தோன்ற அதிக சம்பளம் பெற்ற நடிகர் என்ற பெருமையும் ரஜினிக்கே கிடைக்கும்!

 

ஐ... விக்ரம் ஜோடி எமி?

Amy Replaces Samantha In I   

ஷங்கர் இயக்கும் ஐ படத்தில் விக்ரம் ஜோடியாக எமி ஜாக்ஸன் நடிக்கக் கூடும் என தெரிகிறது.

இந்தப் படத்தின் நாயகியாக முதலில் ஒப்பந்தமானவர் சமந்தா. ஆனால் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி (தோல் அலர்ஜி) அவர் படத்திலிருந்து விலகிக் கொண்டதாகத் தெரிகிறது. இதற்கு முன் மணிரத்னத்தின் கடல் படத்திலிருந்தும் அவர் விலகிக் கொண்டார்.

எனவே சருமப் பிரச்சினைதான் காரணமா அல்லது வேறு ஏதாவது பிரச்சினையா என்று கிசுகிசுக்க ஆரம்பித்துள்ளது கோடம்பாக்கம்.

இந்த நிலையில், சமந்தாவுக்கு பதில் எமி ஜாக்ஸனை ஒப்பந்தம் செய்திருப்பதாக தெரிகிறது.

கதைப்படி இரண்டு ஹீரோயின்கள். இன்னொரு ஹீரோயினாக காஜல் அகர்வால் நடிக்கக் கூடும் என்கிறார்கள். ஸ்ருதி ஹாஸன் பெயரும் பரிசீலனையில் உள்ளதாம்.

இப்போது சீனாவில் லொகேஷன் பார்க்கப் போயிருக்கும் ஷங்கர், அடுத்த வாரம் திரும்புகிறாராம். ஜூலை 15-ம் தேதி ஷூட்டிங் ஆரம்பம்!

 

பிரபாகரன் ஆன களஞ்சியம்!

Tamil Cinema Tidbits   

கருங்காலி என்று ஒரு படம் வந்தது நினைவிருக்கலாம். அஞ்சலி, சுனிதா வர்மாவுடன் இயக்குநர் மு களஞ்சியம் நடித்து இயக்கியிருந்தார்.

இந்தப் படத்தை தெலுங்கில் ரிலீஸ் செய்கிறார் களஞ்சியம். தெலுங்கு பட உலகுக்கு களஞ்சியம் என்ற பெயர் ரொம்ப அந்நியமாக இருந்ததால், தன் பெயரை பிரபாகரன் என மாற்றிக் கொண்டுள்ளாராம்.

படத்துக்குப் பெயர் என்ன தெரியுமா... 'சதிலீலாவதி 2012.'

மீண்டும் அர்ஜூன் - கிச்சா!

மாசி படத்துக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளனர் அர்ஜூனும் இயக்குநர் கிச்சாவும். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தை பிரமாண்டமாக தயாரித்து இயக்கப் போகிறாராம் கிச்சா.

அதற்கு முன் தனது தயாரிப்பான எப்படி மனசுக்குள் வந்தாய்? படத்தை வெளியிடும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார்.

கிருஷ்ணாவின் 'நெடுஞ்சாலை'!

சூர்யா - ஜோதிகாவை வைத்து சில்லுன்னு ஒரு காதல் என்ற படத்தை இயக்கியவர் கிருஷ்ணா. அதன் பிறகு இப்போதுதான் மீண்டும் படம் இயக்குகிறார். படத்தின் பெயர் நெடுஞ்சாலை. ஆரி - ஷிவதா நடிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங்கை தொடர்ந்து 32 நாட்கள் நடத்தியுள்ளார்.

மலையாள நடிகர் சலீம்குமாரின் நகைச்சுவையும், பாலிவுட் நடிகர் பிரசாந்த் நாராயணனின் வில்லத்தனமும் பெரிதும் பேசும் என்கிறார் கிருஷ்ணா.

 

பயந்தாங்கொள்ளி கான்ஸ்டபிளாக கருணாஸ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : கென் மீடியா சார்பில் கருணாஸ் தயாரித்து, ஹீரோவாக நடிக்கும் படம் 'ரகளபுரம்'. அங்கனா, கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம்புலி, மனோபாலா உட்பட பலர் நடிக்கின்றனர். மனோ இயக்குகிறார்.
படம் பற்றி கருணாஸ் கூறியதாவது:
இதில் பயந்த சுபாவம் கொண்ட கான்ஸ்டபிளாக நடிக்கிறேன். பதவி உயர்வு பெற்றும் கடைசிவரை பயந்தாங்கொள்ளியாகவே இருக்கிறேன். நான் சீரியஸாகச் செய்யும் செயல்கள் எல்லாம் ரசிகர்களுக்கு காமெடியாக தெரியும். ஒரு கோழை எப்படி வீரனாகிறான் என்ற பார்முலா கதை என்றாலும், அதை காமெடி படமாக வழங்குகிறோம். 80 சதவீத ஷூட்டிங் முடிந்தது. கோவை சரளாவின் காமெடி நான்-ஸ்டாப்பாக சிரிக்க வைக்கும். என் மகன் கென், ஓப்பனிங் பாடலில் சமைரா கானுடன் ஆடியுள்ளான். என் மனைவி கிரேஸ், 'சூடாமணி கேட்டிலாலோ' பாடலைப் பாடியிருக்கிறாள்.  இதையடுத்து 'சந்தமாமா', 'மச்சான்' படங்களில் கதை நாயகனாக நடிக்கிறேன்.


 

குணசித்திர வேடத்தில் டேனியல் பாலாஜி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : வில்லன் மற்றும் ஹீரோ வேடங்களில் நடித்து வந்தவர் டேனியல் பாலாஜி. இப்போது குணசித்திர வேடத்தில் நடிப்பதாக அவர் கூறினார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:
தொடர்ந்து சிறந்த படங்களில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. 'வேட்டையாடு விளையாடு' உட்பட பல்வேறு படங்களில் வில்லனாக நடித்தேன். என் வில்லன் நடிப்பு சிறப்பாகப் பேசப்பட்டது. சில படங்களில் ஹீரோவாக நடித்தேன். இப்போது 'மறுமுகம்' படத்தில் ஆன்டிஹீரோவாக நடிக்கிறேன். இதன் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்துவிட்டது. கன்னடத்தில் ரிலீஸான 'களவாணி' ரீமேக்கில் ஹீரோயினுடைய அண்ணனாக நடித்தேன். இதே படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்கிறேன். தமிழில் இளையதேவன் இயக்கும் 'ஞானக்கிறுக்கன்'என்ற படத்தில் ஒரு குழந்தைக்கு தந்தையாக நடிக்கிறேன். குணசித்திர வேடம். இதுவரை நான் நடித்த வேடங்களில் இருந்து வித்தியாசமாக இருந்ததால் ஒப்புக்கொண்டேன். மாறுபட்ட வேடங்களில் நடிக்க ஆவலாக இருக்கிறேன்.
இவ்வாறு டேனியல் பாலாஜி கூறினார்.


 

காமெடி கேரக்டரில் சந்தியா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : காமெடி கேரக்டரில் நடிக்க ஆசை என்று சந்தியா கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
தற்போது மலையாள படங்களில் நடித்துவருகிறேன். சில படங்களில் காமெடி காட்சிகளில் நடித்திருந்தாலும், முழுநீள காமெடி கேரக்டரில் நடிக்க ஆசை. அது 'மைடியர் மம்மி' என்ற மலையாளப்படத்தில் நிறைவேறியிருக்கிறது. ஊர்வசியின் மகளாக நடித்திருக்கிறேன். அம்மாவும், மகளும் சேர்ந்து கல்லூரிக்கு சென்று படிப்பது போன்ற கதை. காமெடியில் டைமிங் சென்ஸ் மிக்கவர் ஊர்வசி. அவர் நடிப்பதை பார்த்ததும் சிரிப்பு வந்துவிடும். அதையும் மீறி அவரோடு நடிக்க வேண்டும். அது எனக்கு சவாலாக இருந்தது. மலையாளத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பதால் தமிழில் அதிக கவனம் செலுத்த முடியவில்லை.


 

சின்னத்திரையில் ஜோதிர்மயி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : தமிழில், 'தலைநகரம்', 'வெடிகுண்டு முருகேசன்' உட்பட பல படங்களில் நடித்தவர் மலையாள நடிகை ஜோதிர்மயி. தமிழில் வாய்ப்பில்லாமல் இருந்த அவர் மலையாளப் படங்களில் நடித்துவந்தார். அவருக்கும் கணவருக்கும் பிரச்னை ஏற்பட்டதை அடுத்து விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் மலையாள சேனல் ஒன்றில் நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதுபற்றி ஜோதிர்மயி கூறும்போது, ''தொடர்ந்து சிறந்த படங்களில் நடித்து டயர்டாகிவிட்டேன். இப்போது சின்னத்திரை நிகழ்ச்சி நடத்துவது புது தெம்பாக இருக்கிறது'' என்றார்.


 

குத்துப்பாடலில் மீண்டும் டான்ஸ் மாஸ்டர் பாபி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : பிரபு சாலமன் இயக்கிய 'மைனா' படத்தில் இடம்பெற்ற, 'ஜிங்ஜிக்கா' பாடலுக்கு ஆடியவர் டான்ஸ் மாஸ்டர் பாபி ஆண்டனி. பல்வேறு படங்களுக்கு நடனம் அமைத்துள்ள அவர் கூறியதாவது:
இப்போது 'நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' படத்தில் இடம்பெறும் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளேன். இதுவும் குத்துப்பாடல்தான். 'ஆம்லேட் போட்டா முட்டையை காணோம்/நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' என்று தொடங்கும் இந்தப் பாடல் எல்லோரும் ஆடும்படி இருக்கும். இயக்குனர் பாலாஜி தரணிதரன் கேட்டுகொண்டதால நடனம் ஆடினேன். 'மைனா' படத்துக்கு பிறகு நிறைய படங்களில் ஆடும்படி கூறினர். நான் முகம் காட்டுவதை விரும்பவில்லை.
திரைக்கு பின் நிற்கவே எப்போதும் விரும்புகிறேன். நண்பர்கள் வற்புறுத்தலால் ஆட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தொடர்ந்து பல படங்களுக்கு நடனம் அமைத்து வருகிறேன்.


 

ஐன்ஸ்டீன் தத்துவத்தில் உருவான கதை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : மேஜிக் மீடியா ஒர்க்ஸ் தயாரிக்கும் படம், 'கொஞ்சம் காபி கொஞ்சம் காதல்'. ஹிருதய் ராஜ், அதிதி செங்கப்பா, நாசர், ரேவதி, அசோக் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, டி.எஸ்.வாசன். இசை, ப்ஹனி கல்யாண். வசனம், சித்ரா வெங்கி. பாடல்கள்: அறிவுமதி, பழனிபாரதி, சித்ரா வெங்கி. படத்தை இயக்கும் வெங்கி நிருபர்களிடம் கூறியதாவது:
'மனித வாழ்க்கையில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளும், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டவையே. நம் பயணத்தின் மூலம் அடிக்கடி அதை மாற்றிக்கொள்கிறோம்' என்ற ஐன்ஸ்டீனின் விவாதத்துக்குரிய தத்துவத்தின் அடிப்படையில் இதன் கதையை உருவாக்கியுள்ளேன்.
இன்றைய இளைஞர்களுக்கு சுயநலம் அதிகரித்து விட்டது. அதை சரி என்றோ, தவறு என்றோ சொல்லும் படமாக இருக்காது. யதார்த்தத்தை சொல்கிறோம். ஹீரோ, ஹீரோயினுக்கு காதல் எப்படி ஏற்படுகிறது என்பது சுவாரஸ்யமான சம்பவம். விதி அவர்களை எப்படி வழிநடத்துகிறது, அதை அவர்கள் எப்படி தங்களுக்கு சாதகமாக மாற்றுகிறார்கள் என்பது கதை. விரைவில் சென்சார் குழுவினர் பார்க்கின்றனர். அடுத்த மாதம் ரிலீசாகிறது.


 

பூலோகம் படத்துக்காக சென்னையில் திடீர் நகர்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை : ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம், 'பூலோகம்'. ஜெயம்ரவி, த்ரிஷா, பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசை. சதீஷ்குமார் ஒளிப்பதிவு. படம் பற்றி இயக்குனர் என்.கல்யாண கிருஷ்ணன் கூறியதாவது:
வட சென்னையில் இரண்டு பிரபலமான குத்துச் சண்டை பரம்பரை இருந்தது. அவர்களுக்குள் குத்துச் சண்டை மோதலும், அது தொடர்பான வெளி மோதல்களும் பல ஆண்டுகள் நடந்து வந்திருக்கிறது. இப்போது அந்த பரம்பரையினர் குத்துச் சண்டையில் ஈடுபடாவிட்டாலும் இன்னும் வாழ்ந்து வருகிறார்கள். அந்த பின்னணியில் இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஜெயம்ரவி குத்துச் சண்டை வீரராக நடிக்கிறார். அவருடன் நிஜ குத்துச்சண்டை வீரர்கள் நடிக்கிறார்கள். இரண்டு பிரபல ஹாலிவுட் குத்துச்சண்டை வீரர்களை வில்லனாக நடிக்க வைக்க பேச்சு நடந்துவருகிறது.
1931-ம் ஆண்டு துவங்கும் கதை 2012-ல் முடிகிறது. இதற்காக நிறைய ஆராய்ச்சிகள், தேடுதல்கள் செய்திருக்கிறேன். படப்பிடிப்பு முடிந்ததும் இதை வைத்து கண்காட்சி நடத்த திட்டமிட்டிருக்கிறேன். சென்னை மக்களின் சிறு தெய்வ வழிபாடு, திருவிழாவையும் பதிவு செய்திருக்கிறேன். படத்துக்காக வடபழனியில் 50 ஏக்கர் நிலத்தில் 'திடீர் நகர்' என்ற ஒரு நகரை ஆர்ட் டைரக்டர் மோகன் உருவாக்கினார். அதில் ஒரு மாதம் படப்பிடிப்பு நடத்தினோம்.


 

அம்மாவாக நடிக்க நடிகைகள் மறுப்பு தங்கர் பச்சான் தாக்கு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : தங்கர் திரைக்களம், மேக்ஸ்ப்ரோ என்டர்டெயினர் இணைந்து தயாரிக்கும் படம், 'அம்மாவின் கைபேசி'. சாந்தனு, இனியா நடிக்கிறார்கள். ரோஹித் குல்கர்னி இசை. ஒளிப்பதிவு செய்து இயக்கும் தங்கர் பச்சான் கூறியதாவது:
 செல்போனால் இந்திய சமூகம் பெற்றிருக்கும் நல்ல விஷயம் உறவுகளை குரலால் பாதுகாப்பது. அதைச் சொல்லும் படம். 9 குழந்தைகளை பெற்ற தாய் அவர்களை பிரிந்து வாழும் சூழலில் அவளுக்கு எல்லாமுமாக இருப்பது மகன்கள் பேசும் செல்போன் மட்டுமே. செல்போனை 9 பிள்ளைகளின் பிரதிநிதியாக எப்படி மதிக்கிறாள். பாதுகாக்கிறாள் என்பதுதான் திரைக்கதை. அவளது கடைசி மகன் சாந்தனு, அவரது காதலி இனியா. கடைசி மகனுக்கும் தாய்க்கும் இடையிலான உறவையும் பதிவு செய்திருக்கிறேன். படத்தின் முக்கிய கேரக்டரான அம்மா வேடத்தில் நடிக்க பல முன்னாள் நடிகைகளை அணுகியபோது மறுத்தார்கள்.
மூன்று தேசிய விருது பெற்ற நடிகை, 10 நாள் நடிக்க 20 லட்சம் சம்பளம் கேட்டார். இதனால் துணை நடிகை ரேவதி என்பவரை அம்மாவாக நடிக்க வைத்தேன். படப்பிடிப்பு இல்லாத நேரத்திலும் அந்த கேரக்டராகவே வாழத் தொடங்கிவிட்டார். கிராமத்து வாசனையே இல்லாத சாந்தனுவை கிராமத்து இளைஞனாக மாற்றி இருக்கிறேன். இந்தப் படம் அவருக்கு திருப்பு முனையை கொடுக்கும்.


 

காதல் காட்சியை அழுத்தமாக்க படம் முடிந்த பின் பாடல் சேர்ப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : விஸ்வாஸ் ஹி லாட், புருஷோத்தமா தயாரிக்கும் படம் 'பாகன்'. ஸ்ரீகாந்த், ஜனனி அய்யர் ஜோடி. அஸ்லம் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இப்போது புதிய பாடல் ஒன்றை சேர்க்க உள்ளனர்.
இதுபற்றி அஸ்லம் கூறியதாவது:
இது காமெடி கலந்த காதல் கதையை கொண்ட படம். படம் முடிந்து ரீ ரெக்கார்டிங் நடந்து வருகிறது. இப்போது படத்தை பார்த்த தயாரிப்பாளர்கள் காதலை இன்னும் அழுத்தமாக்க இரண்டாம் பாதியில் டூயட்டை சேர்த்தால் நன்றாக இருக்கும் என்றனர். இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனிடம் சொன்னேன். அவரும் சரி என்று அழகான ட்யூனை உருவாக்கினார். 'இப்படியொரு கண்களை கண்டதில்லை' என்று தொடங்கும் இந்தப் பாடல் மெலடியாக உருவாகியிருக்கிறது. இந்த பாடலை படமாக்க உள்ளோம். அடுத்த மாத இறுதியில் படம் வெளியாகும்.இவ்வாறு அஸ்லம் கூறினார்.


 

தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : கவுதம் வாசுதேவ் மேனன் வழங்கும் போட்டோன் கதாஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம், 'தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்'. இது தெலுங்கில் 'கொரியர் பாய் கல்யாண்' பெயரில் உருவாகிறது. பிரபுதேவாவிடம் இணை இயக்குனராக இருந்த பிரேம் சாய் இயக்குகிறார். தமிழில் ஜெய், சந்தானம், வி.டி.வி கணேஷ், தெலுங்கில் நிதின், ராஜேஷ் நடிக்கின்றனர். ஹீரோயின் தேர்வு நடக்கிறது. பாடகர் கார்த்திக் இசை. ஐதராபாத்தில் ஷூட்டிங் நடக்கிறது. காமெடி, காதல், ஆக்ஷன் என்ற கலவையாக படம் உருவாகிறது.


 

இயக்குனர் ஆனார் ரவி.கே.சந்திரன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : தமிழில் 'ஆயுத எழுத்து', 'கன்னத்தில் முத்தமிட்டால்', '7ஆம் அறிவு' மற்றும் இந்தியில் 'ப்ளாக்', 'மை நேம் இஸ் கான்', 'கஜினி', 'அஞ்சானா அஞ்சானி' உட்பட ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ரவி.கே.சந்திரன். ஒளிப்பதிவாளர்கள் இயக்குனர்களாகும் வரிசையில் இவரும் இப்போது இயக்குனராகிறார். இவர் இயக்கும் படத்தில் ஜீவா ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயின் மற்றும் நடிகர் நடிகைகள் தேர்வு நடக்கிறது. 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'கோ', 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படங்களை தயாரித்த ஆர்.எஸ் இன்போடெயின்மென்ட்ஸ் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஆஸ்கர் விருதுபெற்ற ரசூல் பூக்குட்டி உட்பட முன்னணி டெக்னீஷியன்கள் பணியாற்றுகின்றனர்.




 

சிகரெட் புகை காட்சிக்கு கட் கொடுக்க மறுத்ததால் நான் ஈக்கு யு/ஏ

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : நானி, சமந்தா, சந்தானம் நடித்துள்ள படம், 'நான் ஈ'. இது தெலுங்கில் 'ஈகா' என்ற பெயரில் ரிலீஸ் ஆகிறது. பிவிபி சினிமா தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இடம்பெறுகிறது. அதை கட் பண்ண இயக்குனர் மறுத்துவிட்டதால் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதுபற்றி பிவிபி சினிமாவின் எக்ஸிகியூட்டிவ் இயக்குனர் ராஜீவ் கூறியதாவது:
கிராபிக்ஸ் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. கதைப்படி ஒரு காட்சியில் சிகரெட் புகை முக்கிய பங்கு வகிக்கிறது. அதை கட் பண்ண சென்சார் அதிகாரிகள் கூறினர். அதை நீக்கினால் காட்சியின் முக்கியத்துவம் குறையும் என்பதால் மறுத்தோம். அப்படியென்றால் யு/ஏ சான்றிதழ்தான் கிடைக்கும் என்றனர். சரி என்றோம். வரும் 6ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.
சர்வதேச தரத்தில் இந்த படத்தை ராஜமவுலி உருவாக்கியுள்ளார். டெக்னிக்கலாக இந்தப் படம் பேசப்படும் விதமாக இருக்கும்.
'இந்தப் படம் எதிர்பாராத உயரத்தை தொடும்' என்று இயக்குனர் ராம்கோபால் வர்மா கூறியுள்ளார். அது நிச்சயமாக நடக்கும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு ராஜீவ் கூறினார்.


 

சகுனியில் சத்தியமாக ராகுல் காந்தியை விமர்சிக்கவில்லை: கார்த்தி

Didn T Criticise Rahul Gandhi Saguni Karthi

மதுரை: சகுனி படத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை விமர்சனம் செய்யவில்லை என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

நடிகர் கார்த்தி நடித்து அண்மையில் வெளிவந்த படம் சகுனி. இந்த படம் தமிழகம் முழுக்க பல்வேறு திரையங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. இந்த படம் மதுரையில் தங்க ரீகல் திரையரங்கில் திரையிடப்பட்டுள்ளது. ரசிகர்களை உற்சாகப்படுத்த நடிகர் கார்த்தி வருகின்றார் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. இதனால் திரையங்கம் முன்பு கூட்டம் அலைமோதியது. அறிவித்தவாறே நடிகர் கார்த்தி திரையங்கிற்கு வந்து ரசிகர்களை சந்தித்தார்.

முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

எங்களது சகுனி படக்குழுவினருக்கு மதுரை ரசிகர்கள் பெரும் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர். இதனால் நாங்கள் மேலும் உற்சாகம் அடைந்துள்ளோம். சகுனி படத்தின் வெற்றி இது தான். இந்த வெற்றியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளவே தமிழகத்தில் உள்ள பல்வேறு திரையரங்குகளுக்கு நேரடியாக சென்று வருகின்றேன்.
இந்த படம் அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிப் படமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்காக திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இது அரசியல் கலந்த காமெடி படம். இதில் நான் புதுப்புது கதாபாத்திரங்களில் வந்து செல்வது தான் சிறப்பு அம்சம். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பருத்தி வீரன் படம் மதுரையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். அது பெரும் வெற்றியை கொடுத்தது. வெளிநாடுகளிலும் எனக்கு பெரிய மரியாதையை பெற்றுத் தந்தது.

என்னை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று நடிகர் விக்ரம் கூறவில்லை. என் மீது அதிக நம்பிக்கை உள்ளதாகவே கூறியிருந்தார். அவரது பாராட்டு எனக்கு கிடைத்த கவுரவமாகக் கருதுகின்றேன். எனது அண்ணன் சூர்யாவுடன் சேர்ந்து நடிக்க ஆசை உள்ளது. அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. நல்ல கதையம்சமுள்ள படம் கிடைத்தால் சேர்ந்து நடிப்போம்.

சகுனி படத்தில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை விமர்சித்து இருப்பதாக சிலர் கூறுவது தவறான தகவல். நான் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். சகுனி படத்தில் எந்த இடத்திலும் ராகுல் காந்தியை விமர்சனம் செய்து காட்சியோ அல்லது வசனமோ இல்லை.

அதே போல எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணமும் எனக்கு இல்லை என்றார்.

அப்போது இயக்குனர் சங்கர்தேவன், தயாரிப்பாளர்கள் பிரபு ஞானவேல்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

பில்லா 2 ட்ரைலர் வெளியீட்டு விழா கேன்சல்!

Billa 2 Trailer Launch Cancelled    | அஜீத்   

அஜீத் ரசிகர்களால் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட பில்லா 2 ட்ரைலர் வெளியீட்டு விழா திடீரென ரத்து செய்யப்பட்டுவிட்டது.

கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு விழா நூலக அரங்கில் இன்று மாலை நடைபெறுவதாக அறிக்கப்பட்ட இந்த விழாவில் அஜீத் கலந்து கொள்வாரா மாட்டாரா என்ற சந்தேகம் கடைசி வரை இருந்தது. இன்னொரு பக்கம் ரஜினி, கமல் ஆகிய பெருந்தலைகளும் விழாவுக்கு வருவதாகக் கூறிவந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்காக பெரிய அளவில் விளம்பரங்கள் செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் விழா ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரோ, விநியோகஸ்தரான ஆஸ்கர் ரவிச்சந்திரனோ எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த நிகழ்ச்சியின் டிவி ஒளிபரப்பு உரிமை விஷயத்தில் தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தருக்கும் உடன்பாடு ஏற்படாததுதான் நிகழ்ச்சி ரத்தானதற்கு காரணம் என்கிறார்கள்.

வரும் 13-ம் தேதி படத்தை வெளியிடப் போவதாக அறிவித்துள்ள சூழலில், விளம்பரப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டிருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

சினிமாவில் இதெல்லாம் சகஜம்தானே...