பாரதிராஜா இயக்கத்தில் பாபு, ரமா நடித்த 'என் உயிர்த் தோழன்' படம் 90ல் ரிலீசானது. இதில் இளையராஜா இசையில் அனைத்து பாடல்களையும் கங்கை அமரன் எழுதினார். இதையடுத்து 21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பாரதிராஜா படத்துக்கு பாட்டு எழுதியுள்ளார். இயக்குனர் அமீர், இனியா, கார்த்திகா நடிக்கும் 'அன்னக்கொடியும் கொடிவீரனும்' படத்தை இயக்கி வருகிறார் பாரதிராஜா. இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். அவரது இசையில் வைரமுத்து, கங்கை அமரன் பாடல்கள் எழுதியுள்ளனர். இதுகுறித்து கேட்டபோது, '21 வருடங்களுக்குப் பிறகு பாரதிராஜா படத்துக்கு பாடல் எழுதியது சந்தோஷமான அனுபவம்' என்றார், கங்கை அமரன்.
ஹரி இயக்கத்தில் மீண்டும் சூர்யா, அனூஷ்கா
சூர்யா, அனுஷ்கா, விவேக் நடித்து சன் பிக்சர்ஸ் வெளியிட்ட படம், 'சிங்கம்'. மெகா ஹிட்டான இந்தப் படத்தை ஹரி இயக்கியிருந்தார். இப்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட இருக்கிறது. இதில் மீண்டும் சூர்யாவும் அனுஷ்காவும் ஜோடியாக நடிக்கிறார்கள். இதுபற்றி இயக்குனர் ஹரியிடம் கேட்டபோது கூறியதாவது: சூர்யா, அனுஷ்கா ஜோடியுடன் மீண்டும் இணைகிறேன். மேலும் சந்தானம் உட்பட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. பொங்கலுக்குப் பிறகு அறிவிப்பு வரும். இது 'சிங்கம்' படத்தின் இரண்டாம் பாகமா என்பது பற்றி இப்போது சொல்ல முடியாது. படத்தில் இன்னொரு ஹீரோயினும் இருக்கிறார். அவர் யார் என்பது முடிவாகவில்லை. மார்ச் இறுதியில் ஷூட்டிங் தொடங்குகிறது. காமெடிக்கும் ஆக்ஷனுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட இருக்கிறது.
21 வருடங்களுக்கு பிறகு பாரதிராஜாவுடன் கங்கை அமரன்

காதலர் தினத்தில் காதலர் கதை!
ராசி மூவிஸ் சார்பில் கே.ஜமீல் இயக்கி, தயாரிக்கும் படம் 'காதலர் கதை'. விஜய்சிங், கீர்த்தி சாவ்லா, சைனிஷா, ராஜேஷ், குயிலி உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, கே.வி.மணி. பாடல்கள்: பா.விஜய், சினேகன், தாமரை, அண்ணாமலை. லெஸ்லி, சிவா என்ற இருவர் 'ஸ்வதேஷ்' என்ற பெயரில் இணைந்து இசையமைக்கின்றனர். படம் பற்றி ஜமீல் கூறும்போது, ''காதல் என்பது உணர்வுகளின் ஒற்றுமையில் உருவாகும் உன்னதமான உறவு என்பதை சொல்லும் கதை. ஷூட்டிங் முடிந்துவிட்டது. பிப்ரவரியில் காதலர் தினத்தன்று ரிலீசாகிறது' என்றார்.
வசனம் இல்லாமல் 20 நிமிட கிளைமாக்ஸ்
'மழைக்காலம்' படத்தில் வசனம் இல்லாமல் 20 நிமிட கிளைமாக்ஸ் இடம் பெறுகிறது. ஏ.ஆர்.ஸ்க்ரீன் சார்பில் ஏசுதாசன், ராஜன் தயாரிக்கும் படம், 'மழைக்காலம்'. ஸ்ரீராம், சரண்யா நாக் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் எஸ்.தீபன் கூறியதாவது: சென்னை ஓவியக் கல்லூரியில் நடந்த உண்மை சம்பவம் ஒன்றை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம். ஓவியக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சொன்ன செய்தியின் அடிப்படையிலும் பத்திரிகைகளில் அவர் எழுதிய கட்டுரைகளின் அடிப்படையிலும் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஓவியக் கல்லூரியில் படமாக்கப்பட்டு அந்த மாணவர்களே நடித்தும் உள்ளனர். படத்தின் 20 நிமிட கிளைமாக்சில் வசனம் கிடையாது. பின்னணி இசை மட்டுமே இருக்கும். இதற்கு பெரிய இசை அமைப்பாளர் வேண்டும் என்று இளையராஜாவை அணுகினோம். நேரமின்மையால் அவரது கால்ஷீட் கிடைக்கவில்லை. அதனால் பிரபல மலையாள இசை அமைப்பாளர் ஜான்சனை கொண்டு பின்னணி அமைத்தோம். 20 நிமிட காட்சிக்கு ஒரு வாரம் எடுத்துக் கொண்டு பின்னணி இசை அமைத்துக் கொடுத்தார். இசை அமைத்த சில நாட்களிலேயே அவர் இறந்து விட்டார். இதுவே அவருக்கு கடைசி படமாக அமைந்துவிட்டது.
"திருடி" தன்யா காதல் திருமணம்
தமிழில் ரிலீசான 'திருடி', 'வீரமும் ஈரமும்' மற்றும் மலையாளத்தில் பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர், தன்யா மேரி வர்கீஸ். இவரும், மலையாளப் படவுலகைச் சேர்ந்த நடிகரும், நடனக் கலைஞருமான ஜான் என்பவரும் காதலித்தனர். இதையடுத்து இருவீட்டு சம்மதத்துடன் சிலதினங்களுக்கு முன் திருவனந்தபுரம் எம்.எம் சர்ச்சில் திருமணம் செய்துகொண்டனர். நல்ல கேரக்டர் கிடைத்தால், சினிமாவில் தொடர்ந்து நடிக்கும்படி தன்யாவுக்கு ஜான் அனுமதி அளித்துள்ளாராம்.
கோவத்தை அள்ளி கொஞ்சுகிறேன்
'களவாணி', 'வாகை சூட வா' படங்களை தொடர்ந்து சற்குணம் இயக்கும் படம், 'கோவத்தை அள்ளி கொஞ்சுகிறேன்'. இதுகுறித்து அவர் கூறியதாவது: அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிப்பில் இப்படத்தை உருவாக்குகிறேன். முழுநீள காமெடி மற்றும் காதல் கதையாக உருவாகிறது. நாம் பேச்சுவழக்கில் சொல்வது போல், 'கோவத்தை அள்ளி கொஞ்சுகிறேன்' என்று பெயரிட்டுள்ளேன். பொங்கல் முடிந்ததும் ஷூட்டிங் தொடங்குகிறது. இதையடுத்து கலைப்புலி எஸ். தாணு தமிழ், தெலுங்கில் தயாரிக்கும் படத்தை இயக்குகிறேன். இருமொழிகளைச் சேர்ந்த முன்னணி ஹீரோக்களிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.
2ம் நூற்றாண்டு கதை மகாவம்சம்
போகஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் ரகுமான் ஹுயஸ், பிரியா, ஹென்றி, ரவிசுந்தரலிங்கம், மனோன்மணியன், கீர் ரகுமான் நடிக்கும் படம், 'மகாவம்சம்'. ஒளிப்பதிவு, முகமது காசிம். இசை, எட்ரி. இயக்கம், யுஸ்ரி. இதன் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. படம் குறித்து இயக்குனர் கூறியதாவது: 1,900 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவம் ஒன்றை மையமாக வைத்து படம் உருவாகியுள்ளது. பல்லவர்களின் செல்வாக்கு வளர்வதற்கு முன், மலேசியாவில் மலாய் அரசாட்சியை உருவாக்கியவன், மாறன் மகாவம்சன். கப்பல் ஓட்டுவதில் வல்லவன், மகாவீரன். கோவா சென்ற அவன், அரச குடும்பத்தைச் சேர்ந்த சுந்தருடன் போரிட்டு வெற்றிபெறுகிறான். அப்போது சுந்தரின் தங்கை யசோதாவுடன் காதல் மலர்கிறது. ரோமாபுரி இளவரசன் மார்கஸ், மாறன் தன்னுடன் இருக்க ஆசைப்படுகிறான். சில நிபந்தனைகளுடன் அவனுடன் தங்கி, மலேசிய தீவுகளில் ஆட்சி அமைத்த சுவாரஸ்யமான சம்பவங்களை படம் சொல்கிறது. மாறன் மகாவம்சனின் வாரிசுகள்தான் இன்றளவிலும் மலேசியாவின் அதிகார வர்க்கத்தில் இருக்கின்றனர். தமிழர்களின் வீரத்தைப் பறைசாற்றும் சரித்திரப் பதிவாக 'மகாவம்சம்' உருவாகியுள்ளது.