1970களின் இறுதியிலும் 1980களிலும் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு நாயகி ஸ்ரீதேவி!

Tamanna Recreate Sridevi S Magic   
தமிழ்நாட்டின் சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி கிராமத்தில் பிறந்து தமிழ் ரசிகர்களை மட்டுமின்றி தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் கலக்கி à®'ருவழியாக இந்திப் படவுலகில் கரைசேர்ந்தவர் நம்மூர் ஸ்ரீதேவி!

இவருக்கு பாலிவுட்டில் செம பிரேக் கொடுத்த படம் 1983-ல் வெளியான ஹிம்மத்வாலா. 1981-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான படத்தோட ரீமேக்தான் இது! தெலுங்குல ஜெயபிரதாவும் கிருஷ்ணாவும் நடிச்சிருந்தாங்க! ராகவேந்திரராவ் இயக்கியிருந்தார்! இந்தியில் ஜிதேந்திராவும் ஸ்ரீதேவியும் இணைந்திருந்தாங்க..

ஸ்ரீதேவி நடித்த ஹிம்மத்வாலா அந்த காலத்துலேயே 12 கோடி ரூபாய்க்கு கல்லா கட்டிய படம்! ஸ்ரீதேவி பாடிய 'nainon mein sapna" என்ற பாடல் அந்தக் காலத்து இளசுகளிடம் ரவுசு கட்டிய பாடல்!

இப்ப இந்த படத்தை மீண்டும் இந்தியில் ரீமேக் எடுக்கப்போறாங்களாம்... ஸ்ரீதேவி நடிச்ச ரேகா கேரக்டருக்கு யார் தெரியுமில்ல.. நம்ம தமன்னாதான் செலக்ட்! அந்த புகழ்பெற்ற பாடலுக்கு இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி டான்ஸ் அமைக்கச் சொல்லி ஃபாரா கானிடம் சொல்லியிருக்கார் டைரக்டர் சஜித்கான்.

ஹிம்மத்வாலா அன்று ஸ்ரீதேவிக்கு கொடுத்த பிரேக்கை இன்னிக்கு தமன்னாவுக்கு கொடுக்குமா?
Close
 
 

மங்காத்தா பட வில்லன் ரவிக்குமார் சென்னையில் படுகொலை!

Small Time Villain Actor Ravikumar Murdered Chennai   
அஜீத் நடித்த மங்காத்தா படத்தில் ஒரு வில்லனாக நடித்தவரான ரவிக்குமார் என்கிற குமார் சென்னை அருகே படுகொலை செய்யப்பட்டார். இவர் விஷால் நடித்த வல்லக்கோட்டை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். மேலும் சில டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

சென்னை எருக்கஞ்சேரியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். அதே பகுதியைச் சேர்நத் ராஜ்குமார் என்பவர் இவரது நண்பர் ஆவார். அடிக்கடி தனது நண்பரைப் பார்க்க வருவது வழக்கம். ராஜ்குமார் வட்டிக்குப் பணம் கொடுப்பவர். அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ராஜ்குமாரிடம் வாங்கிய கடனுக்கான வட்டியைக் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து ரவிக்குமாரிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார் ராஜ்குமார். இதையடுத்து கோபம் பெருக்கெடுக்க, ராஜ்குமாரை தனது பைக்கில் அமர வைத்துக் கொண்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றி வருபவர்களைப் பார்க்க கிளம்பினார் ரவிக்குமார்.

நேற்று நள்ளிரவு இவர்கள் போயுளள்ளனர். அப்போது பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்ரி வந்தா ரமேஷ், ஜானி, தேவா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் இருவரையும் பைக்கோடு வழிமறித்து சரமாரியாக தாக்கினர். இதை எதிர்பாராத ரவிக்குமாரும், ராஜ்குமாரும் தலை தெறிக்க ஓடினர்.

அப்போது ரவிக்குமாரை அக்கும்பல் மடக்கிப் பிடித்து சரமாரியாக வெட்டி வீழ்த்தியது. இதில் சம்பவ இடத்திலேயே ரவிக்குமார் பலியானார். ராஜ்குமார் சிக்காமல் தப்பி ஓடி உயிர் தப்பினார்.

நண்பருக்காக பஞ்சாயத்துப் பேசப் போய் கடைசியி்ல ரவிக்குமார் பரிதாபமாக பலியாகி விட்டார். கும்பலைச் சேர்ந்தவர்கள் தாக்க வந்தபோது ரவிக்குமாரை விட்டு விட்டு ராஜ்குமார் தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
Close
 
 

இந்தி பாஷா பாட்டு ரிலீஸ்... ரஜினி வாழ்த்து!

Rajinikanth Gives Miss Baashha Music Launch
பாட்ஷா படத்தின் இந்திப் பதிப்பான பாஷாவின் ஆடியோ ரிலீஸ் ஸ்டார் கூட்டத்திற்கு மத்தியில் கோலாகலமாக நடந்தேறியது. இந்த விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்கவில்லை. இருப்பினும் விழா சிறப்பாக நடந்தேற வாழ்த்து தெரிவித்திருந்தார்.

தமிழில் வெளியான பாட்ஷா சூப்பர் ஹிட் திரைப்படம் தற்போது பாஷா என்ற பெயரில் இந்தியில் ரிலீஸாகிறது. இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முன்பு அஜய் தேவ்கன் விருப்பம் தெரிவித்திருந்தார். இருப்பினும் இது தற்போது நேரடியாக இந்தியில் டப் ஆகியுள்ளது. இப்படத்தை டிஜிட்டல் முறையில் சீர்திருத்தி பத்ரகாளி ரமேஷ், நரேந்திர சிங் ஆகியோர் இந்தியில் வெளியிடுகின்றனர்.

இப்படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில்நடந்தது. இசைத் தட்டுக்களை இசையமைப்பாளர் மான்டி சர்மா வெளியிட அதை நடிகர் பாயல் ரோஹத்தி பெற்றுக் கொண்டார். இதில் ஏராளமான இந்தி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

இப்படத்தை டிஜிட்டல் முறையில் சீரமைத்து வெளியிடுகின்றனர். டைட்டில் கார்டு முதல் அனைத்தையும் சரி செய்து நவீன முறையில் மாற்றியுள்ளனர். 5.1 டிஜிட்டல் ஆடியோ முறையில் ஒலி, ஒளியமைப்பு சரி செய்யப்பட்டுள்ளது. தமிழில் இசையமைத்த தேவாவே இந்திப் படத்தின் இசையையும் கவனித்துள்ளார்.

விழாவில் ரஜினி வரலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும் ரஜினி வரவில்லை. மாறாக அவரது வாழ்த்துச் செய்தி வந்திருந்தது. மே மாத இறுதியில் படத்தை திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனராம்.
Close
 
 

'சந்திரா'வுக்காக சம்பளத்தைக் குறைத்த ஷ்ரியா!

Shriya Saran Reduces Remuneration Chandra
தான் முதல் முறையாக கன்னடத்தில் நடக்கும் சந்திரா படத்திற்காக சம்பளத்தை வெகுவாக குறைத்துக் கொண்டுள்ளாராம் ஷ்ரியா.

சரியான இடுப்பழகி என்று ரசிகர்களால் பாராட்டப்பட்டவரான ஷ்ரியா இப்போது தமிழில் சுத்தமாக வாய்ப்பிழந்து விட்டார். சீக்கிரம் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாக கூறி வரும் ஷ்ரியா கன்னடத்தில் சந்திரா என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்காக அவர் தனது சம்பளத்தைக் கூட வெகுவாக குறைத்துக் கொண்டுள்ளாராம்.

ஷ்ரியாவின் தற்போதைய மார்க்கெட் ரேட் 70 முதல் 80 லட்சம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் கன்னட மார்க்கெட்டில் அந்த அளவுக்கு தந்தால் கம்பெனிக்கு கட்டுப்படியாகாது என்று அவரிடம் எடுத்துக் கூறப்பட்டதால் தனது சம்பளத்தை வெகுவாக குறைத்துக் கொள்ள ஒப்புக் கொண்டாராம் ஷ்ரியா.

எவ்வளவு சம்பளத்திற்கு ஷ்ரியா நடிக்கிறார் என்பது தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அங்கு முதலிடத்தில் உள்ள குத்து ரம்யாவுக்கு தரப்படும் சம்பளமே ஷ்ரியாவுக்கும் தரப்படுவதாக கூறப்படுகிறது.

முதலில் ரம்யாவைத்தான் இந்தப் படத்திற்குக் கூப்பிட்டனராம். ஆனால் சில பல காரணங்களால் அவர் மறுத்து விட்டாராம். பிறகு அமலா பாலை நாடினார்கள், தியா மிர்ஸாவை தேடினார்கள், அம்ரிதாவை ராவை நாடி ஓடினார்கள். எல்லோருமே விலகிப் போனதால் ஷ்ரியாவை 'ப்ரீஸ்' செய்து 'பிக்ஸ்' பண்ணி விட்டனர்.

இப்படத்தில் இளவரசி வேடத்தில் வருகிறாராம் ஷ்ரியா. படத்தை இயக்குவது ரூபா ஐயர். படத்தில் ரம்யா கிருஷ்ணன், எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் முக்கிய ரோல்களில் வருகின்றனராம்.

ஷ்ரியாவுக்கு கன்னடத்தில் இதுதான் முதல் ஹீரோயின் படம் என்றாலும் கூட ஏற்கனவே புனீத் ராஜ்குமார் நடித்த அரசு படத்தில் கெஸ்ட் ரோலில் வந்து போயுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
Close
 
 

'அப்படியெல்லாம்' விளையாட்டுக்குக் கூட நடிக்க மாட்டேன்... நமீதா உறுதி!

Namitha Refuses Act A Gay Role   
ஓரினச்சேர்க்கையாளராக நடிக்க வேண்டும் என்று ஒரு இயக்குநர் விடுத்த வேண்டுகோளை ஒரேயடியாக நிராகரித்து விட்டாராம் நமீதா. நடிப்புக்காக கூட அதை நான் விரும்பவில்லை, ஆதரிக்க விரும்பவில்லை என்று ஒரே போடாக போட்டு விட்டாராம் நமீதா.

கவர்ச்சிக்குப் பெயர் போனவர் நமீதா. ஆனால் இப்போதெல்லாம் தனது கவர்ச்சியில் ஆபாசமோ, அசிங்கமோ இல்லாதவாறு பார்த்துக்கொள்வதில் சற்று கவனமாகவே இருக்கிறார். நடிப்பதிலும் கூட சில பாலிசிகளை வைத்துக் கொண்டு தேர்வு செய்து வேடங்களை ஒப்புக் கொண்டு வருகிறார்.

முன்பு போல படங்கள் அவர் கையில் இல்லாவிட்டாலும் கூட நிறைந்த மனதுடன்தான் இருக்கிறாராம்.

சமீபத்தில் அவரிடம் ஒரு இயக்குநர் கதை சொல்லியுள்ளார். படத்தின் ஒரு வரிக் கதையைக் கேட்ட அவர் இம்ப்ரஸ் ஆகி, பரவாயில்லையே, நல்லாருக்கே நடிக்கலாமே என்று கூறி கதையை விரிவாக சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். அது ஒரு ஆவிக் கதையாகும்.

இயக்குநரும் ஆர்வத்துடன் கதையை விவரிக்க ஆரம்பித்தார். சீன் பை சீனாக விழி விரிய கேட்டுக் கொண்டு வந்த நமீதா கதையை அவர் சொல்லி முடித்தவுடன், சாரிப்பா, இதில் நடிக்க முடியாது என்று கூறி விட்டாராம்.

என்னங்க இது நல்லாத்தானே போய்ட்டிருந்துச்சுச என்று இயக்குநர் குழப்பமாகி, ஏன் மேடம் என்று கேட்டுள்ளார். அதில் ஆவி ஒன்று என்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்வது போல சீன் வருகிறதே அதனால்தான் வேண்டாம் என்கிறேன் என்றார். ஏன் மேடம் கனவில்தானே அப்படி வருகிறது என்று கேட்க, அது குறித்துக் கூட எனக்குப் பிரச்சினையில்லை, உறவு வைத்துக் கொள்வது போல நடிக்கவும் நான் தயார்தான். ஆனால் அது பெண் ஆவி ஆச்சே... எப்படி முடியும் என்றாராம்.

எனக்கு ஓரினச் சேர்க்கை என்பது பிடிக்கவே பிடிக்காது. அதை நான் ஆதரிக்க மாட்டேன். நடிப்புக்காகவோ அல்லது விளையாட்டுக்காகவோ கூட அதை நான் ஆதரிக்க மாட்டேன் என்று கூறி விட்ட நமீதா, இந்தப் படத்தில் நடிக்க முடியாது, தப்பா நினைச்சுக்காதீங்க என்று கூறி அனுப்பி வைத்து விட்டாராம்.

நமீதா கிட்டப் போய் இப்படியாப்பா கதை சொல்லுவீங்க... அவங்களோட 'களமே' வேறயாச்சா...!
Close
 
 

மீண்டும் அசத்த வருகிறார் 'ஆச்சி' மனோரமா!

Manorama Returns Back Action
உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக நடிக்காமல் இருந்து வந்த ஆச்சி மனோரமா மீண்டும் புதுப் பொலிவுடன் நடிக்க வருகிறார். ஹரி இயக்கும் சிங்கம் 2 படத்தில் மனோரமா நடிக்கிறார்.

மனோரமாவுக்கு கடந்த சில மாதங்களாக நேரம் சரியில்லை. அடுத்தடுத்து உடல் நலக் குறைவில் விழுந்தார். ஹோட்டலுக்குப் போன இடத்தில் வழுக்கி விழுந்து அடிபட்டு விட்டது. இதனால் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இடையில் அவரது உடல் நிலை மோசமாகவும் செய்தது. செயற்கை சுவாசம் கொடுக்கப்படும் நிலைக்கு அவரது உடல் நிலை போனது. அதேபோல சிறுநீரகக் கோளாறு, சர்க்கரை, ரத்த அழுத்தம் என பல பிரச்சினைகளில் சிக்கித் தவித்து வந்தார் மனோரமா.

தற்போது அனைத்துப் பிரச்சினைகளிலிருந்தும் விடுபட்டுள்ளார் மனோரமா. நல்ல உடல் நலத்துடன் பூரண ஓய்வில் இருந்து வரும் மனோரமா மீண்டும் நடிக்க வரப் போகிறார்.

சிங்கம் 2 படத்தில் அவரை நடிக்க இயக்குநர் ஹரி அழைத்துள்ளார். மனோரமாவும் சந்தோஷத்துடன் ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து சிங்கம் 2 மூலம் நடிப்புக்கு மறு பிரவேசம் செய்கிறார் மனோரமா.
Close
 
 

'பெருசா' எதிர்பார்க்கும் பிரணீதா!

Saguni Pranitha Wants Only Big Star To Pair    | சகுணி  
நடித்தால் பெரிய நடிகர்களுடன் மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்கிறாராம் பிரணீதா.

முதல் படம் வெளியாகி ஓடி முடிப்பதற்குள்ளாகவே ஏகப்பட்ட பந்தாக்களைப் போட்டு சீன் காட்டும் நாயகிகளின் பட்டியல் இன்னும் கோடம்பாக்கத்தில் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.

ஆரம்பத்தில் சின்ன ஹீரோவுடன் ஜோடி சேருவார்கள். அந்தப் படம் எக்குத்தப்பாக ஓடி விட்டால், அடுத்து பெரிய ஹீரோக்களுடன் மட்டும்தான் ஜோடி போடுவேன், பெரிய பட்ஜெட் படமாக இருக்க வேண்டும். நல்ல கம்பெனியாக இருக்க வேண்டும் என்று பில்டப் செய்து பிலாக்காணம் பாடுவார்கள்.

இந்த நிலையில் சகுணி படம் மூ்லம் சினிமாவுக்கு வந்துள்ள பிரணீதாவும் அதேபோல ஏகப்பட்ட பில்டப், பிட்டப்புகளுடன் சினிமாக்காரர்களை மிரள வைக்கிறாராம். முதல் படத்தில் கார்த்தியுடன் ஜோடி போட்டு விட்ட இவர் இப்போது வெயிட்டாக பேச ஆரம்பித்துள்ளாராம்.

அதாவது நடித்தால் பெரிய ஹீரோக்களுடன் மட்டும்தான் நடிப்பாராம். சின்னச் சின்ன ஹீரோக்களையெல்லாம் சீண்டக்கூட மாட்டாராம். கழுகு படத்தில் ஹீரோவாக நடித்த இயக்குநர் விஷ்ணுவர்த்தனின் தம்பி கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க இவரைக் கேட்டபோது மறுத்து விட்டாராம்.அப்போதுதான் இப்படிப் பதிலளித்தாராம்.

முதல் படமே இன்னும் வந்து போணியாகவில்லை, அதற்குள்ளாகவே இப்படி ஒரு சீனா என்று புலம்புகிறார்களாம் 'சின்ன நாயகர்களை கையில் வைத்துக் கொண்டு பெரிய நாயகிகளுக்காக காத்திருக்கும் இயக்குநர்கள் சங்கத்தைச்' சேர்ந்தவர்கள்...!
Close
 
 

நடிகர் சங்கத் தலைவராக மீண்டும் 'செலக்ட்' ஆகிறார் சரத்குமார்!

Sarath Kumar Be Re Elected President Nadigar Sangam
சென்னை: நடிகர் சங்கத் தலைவராக 3வது முறையாக நடிகர் சரத்குமாரே தேர்வாகப் போகிறார். அதிமுக ஆதரவுடன், இரட்டை இலை சின்னத்தில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக உள்ள அவரை எதிர்த்து யாரும் போட்டியிட முன்வரவில்லை என்பதால் மீண்டும் சரத்தே நடிகர் சங்கத் தலைவராகிறார்.

நடிகர் சங்கத் தலைவராக தற்போது 2வது முறையாக பதவியில் நீடித்து வருகிறார் சரத்குமார். முதல் முறைதான் அவரை ஓட்டு் போட்டுத்தேர்ந்தெடுத்தனர். 2 வது முறை போட்டியி்ன்றி அனைவரும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில் இவர்களின் பதவிக்காலம் முடிந்து விட்டது. இதையடுத்து ஜூன் 10ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பிறைசூடன் தேர்தல்அதிகாரியாக செயல்படுகிறார்.

கடந்த 23ம் தேதி மனுத் தாக்கல் தொடங்கியது. இதில் தலைவர் பதவிக்கு சரத்குமார், பொருளாளர் பதவிக்கு வாகை சந்திரசேகர், செயலாளர் பதவிக்கு ராதாரவி, துணைத் தலைவர்கள் பதவிக்கு விஜயக்குமார், கே.என். காளை என பழையவர்களே மீண்டும் மனு செய்தனர்.

வெள்ளிக்கிழையுடன் மனு தாக்கல் முடிந்தது. சனிக்கிழமை பரிசீலனை நடந்தது. இதன் இறுதியில் இந்தப் பதவிகளுக்கு இவர்களைத் தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.

இதனால் தலைவர், பொருளாளர், செயலாளர், துணைத் தலைவர்கள் பதவிகளுக்கு மறுபடியும் சரத்குமார், சந்திரசேகர், ராதாரவி, விஜயக்குமார், காளை ஆகியோரே போட்டியின்றி தேர்வாகின்றனர்.

இவர்கள் போக 24 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 25 பேர் வேட்பு மனு தாக்கல்செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் வாபஸ் பெற்றால் 24 பேரும் ஒரு மனதாக தேர்வாக முடியும்.

இல்லாவிட்டால் இந்த 24 உறுப்பினர்களுக்கு மட்டும் ஜூன் 10ம் தேதி தேர்தல் நடைபெறும்.

சரத்குமார் அதிமுக ஆதரவுடன், இரட்டை இலைச் சின்னத்தில் கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அதிமுக மேலிடத்துடன் நல்ல நட்புடன் இருந்து வருபவர். எனவே அவரது தலைமையிலான அணியையே மீண்டும் பதவியில் அமர்த்தினால் நடிகர் சங்கத்திற்கு நல்லது என்று கருதப்படுவதால் அவர்களையே மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்வதாக தெரிகிறது.
Close