இங்கிலீஷ் விங்கிலீஷ் - சிறப்பு விமர்சனம்

English Vinglish Film Review

-எஸ் ஷங்கர்

நடிப்பு: ஸ்ரீதேவி, ப்ரியா ஆனந்த், அஜீத், அதில் ஹூஸைன், காரி ஹ்ப்ஸ், டாமியன் தாம்சன், சுஜாதா குமார்
இசை:அமித்ரி தேவ்
பிஆர்ஓ: நிகில்
ஒளிப்பதிவு:லஷ்மன் உடேகர்
தயாரிப்பு: ஈராஸ் இன்டர்நேஷனல், ஆர் பால்கி
எழுத்து & இயக்கம்: கௌரி ஷிண்டே

பெண்ணிய நோக்கில் படம் எடுப்பதாக எத்தனையோ பெண் இயக்குநர்கள் வந்திருக்கிறார்கள். ஆனால் பெண்ணின் உணர்வை, மனநிலையை ஒருவரும் உண்மையாக பிரதிபலித்ததில்லை. அல்லது அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால் கௌரி ஷிண்டே விதிவிலக்கு. முதல் முறையாக மிக அழகான, உணர்வுப் பூர்வமான படைப்பைத் தந்திருக்கிறார். ஒரு அழகான ரோஜா செண்டுடன் அவரை வரவேற்போம்!

மிக எளிமையான கதை. பாலச்சந்தர் அல்லது பாலுமகேந்திரா படங்களில் பார்த்துப் பழக்கப்பட்ட வகை பாத்திரம்தான். கதையோட்டம் கூட சில இடங்களில் எதிர்ப்பார்த்த மாதிரியேதான் உள்ளது. ஆனால் இதை எல்லாம் மீறி நம்மைக் கட்டிப் போடுகிறது படமாக்கப்பட்ட நேர்த்தி.

ஆங்கிலம் தெரியாத ஒரே காரணத்துக்காக கணவனிடமும் மகளிடமும் சின்னச் சின்ன அவமானங்களைச் சந்தித்து மனதுக்குள் வெம்பும் ஒரு மனைவி, தாய்.. அந்த தாழ்வுணர்ச்சியிலிருந்து மீண்டு, தனக்கான மரியாதையை மீட்டெடுப்பதுதான் இங்கிலீஷ் விங்கிலீஷ்.

படம் தொடங்கிய ஒரு சில நிமிடங்களில் அல்லது ஒரு பாத்திரம் அறிமுகமான அடுத்த நிமிடத்தில் மனதுக்குள் விழுந்து, நமக்குள்ளேயே பயணிக்கிற ரசாயனம்தான் இந்தப் படத்தின் ஸ்பெஷல்!

இன்னொன்று... ஸ்ரீதேவி. முகத்தில் முதுமையின் வரவு கையெழுத்திட்டிருந்தாலும், அந்த உறுத்தல் ஒரு சில நிமிடங்கள்தான்... ஷசியை ரசிக்க, அவரோடு அமெரிக்கா செல்ல, இங்கிலீஷ் கற்க, கிடைக்காத மரியாதைக்கான ஏக்கத்துக்காக அவருடன் கண்ணீர் சிந்த நாமும் தயாராக நிற்கிறோம். வெல்கம் பேக்!

மிகப்பெரிய திருப்பத்துக்கான காரணங்கள் என்று நாம் நினைப்பதைக் கூட, ஜஸ்ட் ஒரு பார்வையில், ஒரு இறுக்கமான பாவத்தில் அல்லது ஒரு சிரிப்பில் உணர்த்தும் அந்த அழகியலுக்காக கௌரி ஷிண்டேவுக்கு இன்னுமொரு ரோஜா.

படத்தின் அழகுக்கு அழகு சேர்ப்பது இரண்டு நிமிடங்களே வரும் அஜீத். வாவ்... என்ன ஒரு இயல்பான, தன்னம்பிக்கை தரும் நடிப்பு. நிச்சயம் அந்த வேடத்துக்கு வேறு யாரும் பொருத்தமாக இருக்க முடியாது. ஹேன்ட்ஸம் தல!

ஒவ்வொரு பாத்திரமும் அப்படியே மனதுக்குள் விழுந்து அழுத்தமான தடயங்களாகிப் போகிறார்கள்.

குறிப்பாக ப்ரியா ஆனந்த். பெண் மனசு பெண்ணுக்குத்தான் புரியும் என்ற பழமொழியை மெய்ப்பிக்கும் பாந்தமான நடிப்பு. மனதை வருடும் அழகு.

ஸ்ரீதேவியின் கணவனாக வரும் அதில் ஹூஸைன், நண்பராக வரும் மேதி, அந்த இங்கிலீஷ் ட்யூஷன் டேவிட், பாகிஸ்தானி இளைஞன் என அனைவருமே இயல்பாக பொருந்திப் போகிறார்கள்.

க்ளைமாக்ஸில் ஸ்ரீதேவி நிச்சயம் பேசுவார் என்பது தெரிந்து விடுகிறது. அதற்காக அவர் ஆங்கிலத்தில் வெளுத்துக் கட்டுவது போல காட்டாமல், இயல்பாக பேச வைத்திருப்பது இன்னும் நம்பகத்தன்மையைத் தருகிறது.

அமித்ரி தேவின் பின்னணி இசை இதமான வருடல். லஷ்மன் ஷின்டேவின் ஒளிப்பதிவு, அமெரிக்காவை காதலிக்க வைக்கிறது. மண்ணின் மைந்தர்கள் என்று சொல்லிக் கொண்டு நாட்டை, நகரத்தை குப்பைத் தொட்டியாக வைத்திருக்கும் இந்தியர்கள் நிச்சயம் வெட்கித் தலைகுனிய வேண்டும். தன் மண்ணை உண்மையாக நேசிப்பவன் அதை அழகாக சுத்தமாக வைத்திருப்பான்!

வசனங்கள் எளிமை, ஆனால் வலிமை.

ஒரு உதாரணம்:

"ஆங்கிலம் தெரியாமல் அமெரிக்கா போய் எப்படி சமாளிப்பாய்?"
"நீ தமிழ் தெரியாமல் தமிழ்நாட்டில் எப்படி சமாளிக்கிறாயோ அப்படி!!"

பெண் இயக்குநர்களுக்கு புதிய கவுரவத்தை தேடித் தந்திருக்கிறார் கௌரி ஷின்டே!

 

தெலுங்கில் சுந்தரபாண்டியன்... பீமினேனி சீனிவாசராவ் இயக்குகிறார்

Bheemineni Bags Another Tamil Film   

சசிகுமார் நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சுந்தரபாண்டியன் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆக இருக்கிறது. இதனை பீமினேனி ஸ்ரீனிவாசராவ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘தமிழ்படம்' தெலுங்கில் ‘சுடிகாடு' என்ற பெயரில் ரீமேக் ஆனது. அல்லாரி நரேஷ் நடித்த இந்த படத்தை பீமினேனி ஸ்ரீனிவாசராவ் இயக்கியிருந்தார். இவர் தற்போது தமிழில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சுந்தரபாண்டியன் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் அடிபடுகின்றன.

சசிகுமார் லட்சுமி மேனன் நடிப்பில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய பலத்த போட்டி நிலவியது. கடைசியில் பீமினேனி கைக்கு இந்த படம் கிடைத்துள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பினை பீனினேனி ஸ்ரீனிவாசராவ் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

சுப்ரமணியபுரத்தின் தெலுங்கு பதிப்பான ‘ஆனந்தபுரம் 1980' மூலம் தெலுங்கு திரை உலகில் சசிகுமார் கால் பதித்தார். தற்போது அவருடைய மற்றொரு படம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

கனடா இளையராஜா இசை நிகழ்ச்சி பின்னணியில் இலங்கை அரசு-கவலையில் தமிழர்கள்!

Canada Tamils Want Ilayaraja Postpone

டோரன்டோ இசைஞானி இளையராஜா கனடாவில் நவம்பர் 3ம் தேதி நடத்தவுள்ள மாபெரும் இசை நிகழ்ச்சியின் பின்னணியில் இலங்கை அரசு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் உலகத் தமிழர்கள் கவலை அடைந்துள்ளனர்.

வருகிற நவம்பர் மாதம் 3 ஆம் தேதி கனடாவில் இசைஞானி இளையாராஜாவின் மாபெரும் இசைக் கச்சேரி ஒன்று அரங்கேற உள்ளது . இதற்கான ஏற்பாடுகள் மிகவும் மும்மரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இதில் பிரச்சனை என்னவென்றால், நவம்பர் மாதம் முழுவதும் கனடா வாழ் தமிழர்கள் ஈழத்தில் உயிரிழந்த மாவீரர்களை நினைவு கூர்ந்து பல்வேறு வகையான நிகழ்வுகளில் பெரும் திரளாக கலந்து கொள்வர்.

அதுமட்டுமல்லாது, விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சுப.தமிழ்ச் செல்வனின் நினைவு நாள் நவம்பர் 2 தேதி வருகிறது. இதற்கும் கனடா தமிழர்கள் பெருந்திரளாக கூடி நினைவு கூர்வர். இவ்வாறு தமிழர்களின் பேரெழுச்சி மாதமாக ஒவ்வொரு ஆண்டும் மாவீரர்களின் நினைவாக நவம்பர் மாதம் அனுசரிக்கப் படுகிறது.

இந்த எழுச்சியை இலங்கை அரசும் இந்திய அரசும் பொறுத்துக் கொள்ள முடியாமல், அதை எப்படியாவது திசைத் திருப்ப வேண்டும், மழுங்கடிக்க வேண்டும் என தமிழகத்தில் இருந்து இசைஞானி இளையராஜாவை கனடாவில் இசைக் கச்சேரி நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டின் பின்னணியில் தமிழக வர்த்தக சங்கம், தென்னிந்திய வர்த்தக சங்கம் மற்றும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இருப்பதாக கனடா வாழ் தமிழர்கள் உறுதியாக கூறுகின்றனர்.

இதை ஏற்பாடு செய்யும் நிறுவனத்தின் பெயர் ட்ரினிடி ஈவன்ட்ஸ். இந்த நிகழ்ச்சிக்காக கனடாவில் இளையராஜாவும் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்களும் பத்திரிக்கை சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தனர் .

இந்த சந்திப்பில் ஒரு புதுமை என்னெவென்றால், இளையராஜாவிற்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவை விட அதிக பாதுகாப்பு கொடுத்துள்ளனர். இந்த சந்திப்பின்போது பதிவு செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் மட்டுமே அனுமத்கப்பட்டனர்.

இந்த நிகழ்வு நவம்பர் மாதத்தில் நடக்கக் கூடாது என்று இளையராஜாவிற்கு எடுத்துச் சொல்ல தமிழர் பிரதிநிதிகள் பலர் முயன்றும் இளையராஜாவை நெருங்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இந்நிகழ்வில் கலந்து கொள்ள இருந்த இயக்குனர் பாரதிராஜாவை அவர்கள் சந்தித்து பேசி உள்ளனர். அவர்களது விளக்கத்தைக் கேட்ட பாரதிராஜா தான் இதில் கலந்து கொள்ளவில்லை என்று கூறி விட்டாராம்.

இப்போது ஈழத் தமிழர்கள் கவலை எல்லாம், இந்த இசைக் கச்சேரி தமிழர்களின் ஈழ விடுதலை உணர்வை மழுங்கடிக்கச் செய்யும் என்பது தான் . இளைராஜாவை பெரிதும் நேசிக்கும் ஈழ மக்கள் இன்று இந்த இசை நிகழ்ச்சியால் அவரை புறக்கணிக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்களோ என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும், இளையராஜாவிற்கு கறுப்புக் கொடி காட்டவும் அவர்கள் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து இளையராஜா இந்நிகழ்வை நவம்பர் மாதத்தில் நடத்தாமல் டிசம்பர் மாதமோ அல்லது அக்டோபர் மாதமோ நடத்த வேண்டும் என தமிழ் உணர்வாளர்கள் கோருகின்றனர்.

தமிழகத்தில் இருந்தும் இளையராஜாவிற்கு இதற்கான கோரிக்கையை இயக்குனர் ஆர்.கே.செல்வமணி வைத்துள்ளார். அமீர் முதலான இயக்குனர்கள் கூட இது தொடர்பாக இளையராஜாவை சந்திக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. தமிழக தமிழர்களும் கட்சிகளும், இயக்கங்களும் இளையராஜாவிற்கு இது தொடர்பாக விளக்கம் கொடுத்து இந்த இசை கச்சேரியை நவம்பர் மாதத்தில் நடத்தாதபடி செய்ய வேண்டும் என உலகத் தமிழர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

 

விக்ரம் படத்தில் சரிகா 'கவ்வாலி' பாட்டுக்கு ஆடுகிறார்!

Sarika Do An Item Song David

நடிகர் கமல்ஹாசனின் முன்னாள் மனைவியும், நடிகை ஸ்ருதிஹாசனின் தாயாருமான சரிகா, விக்ரம், ஜீவா இணைந்து மிரட்டும் டேவிட் படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடியுள்ளாராம்.

சரிகா இப்போது அவ்வளவாக நடிப்பதில்லை. இந்த நிலையில் தமிழ் மற்றும் இந்தியில் உருவாகும் டேவிட் படத்தில் அவர் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடியுள்ளார். இப்படத்தில் விக்ரம், ஜீவா தவிர தபு, லாரா தத்தா, நீல் நிதின் முகேஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தில்தான் சரிகாவின் ஐட்டம் ஆட்டம் இடம் பெறுகிறது. இப்படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க சரிகாவை அணுகினார் இயக்குநர் பிஜோய் நம்பியார். ஆனால் அதை சரிகா ஏற்கவில்லை. இதையடுத்து அந்த ரோல் லாரா தத்தாவிடம் போய் விட்டது. இருப்பினும் ஐட்டம் பாட்டுக்கு ஆடக் கேட்டபோது உடனே ஒகே சொல்லி விட்டாராம் சரிகா.

தம் தம் மஸ்த் கலாந்தர் என்று ஆரம்பிக்கும் இப்பாடல் பழைய சுபி கவ்வாலி ரக ரீமிக்ஸ் பாடலாகும். இதை அந்தக் காலத்துப் பின்னணியில், கருப்பு வெள்ளையில் படமாக்கியுள்ளனராம்.

இந்தப் பாடலை வெறுமனே ஆடி விட்டுப் போகாமல் அந்த நடன வடிவமைப்பிலும் கூட சரிகா உதவினாராம். இந்த வகை நடனத்தில் சரிகா கைதேர்ந்தவர் என்பதால் நுனுக்கமான பலதகவல்களைச் சொல்லி அந்த நடனத்திற்கும், பாடலுக்கும் புது மெருகேற்றினாராம்.

 

சிவகார்த்திகேயன் ஜோடியானார் அட்டகத்தி நந்திதா!

Nandhitha In Sivakarthikeyan Movie

நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கிறார் அட்டகத்தி ஹீரோயின் நந்திதா.

அட்டகத்தி படத்தின் நாயகிகளுள் பளிச்சென்று வெளியில் தெரிந்தவர் இந்த நந்திதாதான்.

பெங்களூரைச் சேர்ந்த இந்த இளம் நடிகை இப்போது தனுஷ் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் இந்த வேடத்தில் ப்ரியா ஆனந்த் நடிப்பதாகக் கூறப்பட்டது.

எதிர்நீச்சல் என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தை வெற்றிமாறனின் உதவியாளர் செந்தில் இயக்குகிறார்.

கொலவெறி புகழ் அனிருத் இசையமைக்கிறார்.

நந்திதாவுக்கு மேலும் ஒரு வாய்ப்பும் வந்துள்ளது. அது வெங்கட்பிரபுவின் உதவியாளர் இயக்கும் நளனும் நந்தினியும் பட ஹீரோயினாக அவர் நடிப்பதுதான்!

 

வயசு 50 ஆனாலும் ஜேம்ஸ் பாண்டின் ஸ்டைல் இன்னும் மாறவே இல்லை!

லண்டன்: மை நேம் இஸ் சாமி, பழனிச்சாமி.. என்று நம்ம ஊர்க்காரர்கள் பெருமையாக சொல்லிக் கொள்ளக் கூடிய அளவுக்கு பட்டையைக் கிளப்பிய கேரக்டர் ஜேம்ஸ் பாண்ட் 007. உலகம் பூராவும் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் வைத்திருக்கும் இந்த ரகசிய ஏஜென்ட் பிறந்து 50 வருடங்களாகி விட்டது. ஆனாலும் இன்னும் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் மீதான ரசிப்பும், லயிப்பும் உலக ரசிகர்களிடையே சற்றும் குறையவில்லை.

Light on

முதல் படம் டாக்டர் நோ

இன்று உலகம் பூராவும் ஜேம்ஸ் பாண்ட் தினம் கொண்டாடப்படுகிறது. இன்றுதான் முதல் ஜேம்ஸ் பாண்ட் படமான டாக்டர் நோ வெளியான தினமாகும்.

 
 

இப்போதைக்கு நானே தயாரிப்பாளர் நானே ஹீரோ... விஜய் ஆன்டனியின் புது ரூட்!

I Will Act My Own Banner Only Says Vijay Antony

இப்போதைக்கு நான் தயாரிக்கும் படங்களில் நானே ஹீரோவாக நடிப்பதென முடிவு செய்துள்ளேன் என்கிறார் நான் படம் மூலம் ஹீரோவாகிவிட்ட விஜய் ஆன்டனி.

வாயேஜ் எக்ஸ்போ எனும் பெயரில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சுற்றுலா பயண கண்காட்சி வரும் அக்டோபர் 19, 20, 21 ஆகிய மூன்று தினங்கள் நடக்கின்றன.

இந்த கண்காட்சியில் முதல் முறையாக பாஸ்போர்ட் கவுன்டர் திறக்கப்பட்டு, ஆன் தி ஸ்பாட் விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

மேலும் இந்தியாவிலேயே முதல்முறையாக விமான நிறுவனங்கள், விமான டிக்கெட்டுகளை சலுகை விலையில் இந்தக் கண்காட்சியில் பொது மக்களிடையே நேரடியாக விற்பனை செய்ய உள்ளன.

இந்த நிகழ்ச்சியின் லோகோ அறிமுக நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விஜய் ஆன்டனி பங்கேற்று லோகோவை அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சியை நடத்தும் ஜெ செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் நிருபர்களிடம் விஜய் ஆன்டனி பேசுகையில், "பொதுமக்களுக்கு பெரிய விழிப்புணர்வு தரும் கண்காட்சி இது. இதில் நானும் ஒரு அங்கமாக இருப்பது மகிழ்ச்சி தருகிறது.

நான் தமிழில் தற்போது ‘திருடன்', ‘சலீம்' ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன்.

இப்படங்களை நான் தயாரிக்கவும் செய்கிறேன். இப்போதைக்கு எனது சொந்த தயாரிப்பிலேயே நடிக்க முடிவு செய்துள்ளேன். நான் ஒரு நல்ல நடிகன் என்று சொல்லும் அளவிற்கு உயர்ந்த பிறகு, மற்ற நிறுவனங்கள் தயாரிப்பில் நடிப்பது குறித்து முடிவு எடுப்பேன்.

எனது தயாரிப்பு நிறுவனம் மூலம் பல புதிய இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்கள் என அறிமுகப்படுத்தப் போகிறேன்," என்றார்.

 

போதையில் மிதக்கும் இளைஞர்கள்: 'காதல்' சரண்யா வேதனை

Actress Kaadhal Saranya Turns Short Film   

போதை என்ற குறும்படத்தில் போதைக்கு அடிமையான இளைஞர்களை திருத்தும் பாத்திரத்தில் நடித்த நடிகை காதல் சரண்யா மிகுந்த மனவேதனை அடைந்தாராம். இதனை அந்த படத்தை இயக்கிய இயக்குநர் செல்வகணேஷ் கூறியுள்ளார்.

வெண்ணிலா கபடி குழு, குள்ளநரிக் கூட்டம், துரோகி படங்களுக்கு இசை அமைத்த செல்வகணேஷ் தற்போது போதை என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். இதற்கு அவரே இசையும் அமைத்துள்ளார்.

போதைக்கு அடிமையாகும் இளைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் இந்தப் படத்தில், போதை இளைஞர்களை திருத்தி, நல்ல பாதைக்கு மாற்றும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சரண்யா.

போதையின் பாதையில் செல்லும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், சர்வதேச அளவில் நடக்கும் குறும்பட விழாவுக்கு செல்ல உள்ளது.

இந்த படத்திற்காக நிஜத்திலேயே போதைக்கு அடிமையான இளைஞர்களை சந்தித்த சரண்யா அவர்களின் எதிர்காலம் பற்றி மிகவும் கவலைப்பட்டார் என்று இயக்குநர் செல்வகணேஷ் கூறியுள்ளார். இந்த கதாபாத்திரம் சரண்யாவுக்கு பெரிய சவாலாக இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

 

தெலுங்கில் நாகர்ஜூனாவுடன் போட்டி போடும் சூர்யா

Nag S Damarukam Postponed A Day

தெலுங்கு சூப்பர் ஹீரோ நாகர்ஜூனா தனது ‘டமருகம்' படத்தை அக்டோபர் 12 ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். அதே தேதியில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்த ‘பிரதர்' படம் ஆந்திராவில் வெளியாகிறது. இதனால் சூர்யாவிற்கும் நாகர்ஜூனாவிற்கும் போட்டி ஏற்படும் என்று தெரிகிறது.

நாகர்ஜூனா உடன் அனுஷ்கா ஜோடியாக நடித்துள்ள ‘டமருகம்' திரைப்படம் அக்டோபர் 11 ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஒருநாள் பின்னதாக அக்டோபர் 12 ம் தேதி ரிலீஸ் செய்யலாம் என்று நாகர்ஜூனா கூறிவிட்டாராம். அந்த தேதியில்தான் சூர்யா, காஜல் அகர்வால் நடித்த பிரதர் ( மாற்றான்) திரைப்படம் ஆந்திராவில் ரிலீஸ் ஆகிறது.

‘டமருகம்' படம் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. சீனிவாசரெட்டி இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருக்கிறார்.

 

சசிகுமாருக்கு ஜோடியா? மறுக்கிறார் ஹன்ஸிகா!

Hansika Denies Reports About Movie   

இயக்குநர் / நடிகர் சசிகுமாருடன் நடிப்பதாக வந்த செய்திகளை மறுத்துள்ளார் நடிகை ஹன்ஸிகா.

தமிழ் சினிமாவில் மிகக் குறுகிய காலத்தில் தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோ என அனைத்து நிலைகளிலும் ஜெயித்து சாதனை புரிந்துள்ளவர் சசிகுமார்.

சுந்தரபாண்டியன் மூலம் அனைவருக்கும் பிடித்தமான நடிகராக மாறியுள்ளார்.

பலரும் அவர் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்ஸிகா நடிப்பார் என்று கூறப்பட்டது. இதுபற்றி தொடர்ந்து செய்திகள் வந்த நிலையில், அவற்றுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் ஹன்ஸிகா.

அவர் கூறுகையில், "என்னை யாரும் அணுகவே இல்லை. சசிகுமார் என்ன படம் நடிக்கிறார் என்றும் தெரியாது. இந்த நிலையில், நான் அவருக்கு ஜோடி என்று பொய்யான செய்தி வருவதை நான் விரும்பவில்லை. அந்த மாதிரி சீப் பப்ளிசிட்டி எனக்கு வேண்டாம்," என்றார்.

இப்போது சிங்கம் 2, வாலு, வேட்டை மன்னன் உள்பட நான்கு தமிழ்ப் படங்களிலும், இரண்டு தெலுங்குப் படங்களிலும் ஹன்ஸிகா நடித்து வருகிறார்.

 

தனுஷ்-தமன்னா ஷூட்டிங் நிறுத்தம்

Dhanush - Tamanna Shooting stopped

ஜுரம் படுத்தும் பாட்டால் தனுஷ்- தமன்னா ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. தனுஷ் முதன்முறையாக இந்தியில் நடிக்கும் படம் 'ராஞ்சனா'. ஆனந்த் எல் ராய் டைரக்ட் செய்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் காசியில் நடந்து வந்தது. இதற்காக காசி சென்ற தனுஷ் அங்கேயே தங்கி ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். கடந்த வாரம் தனுஷுக்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது. டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற்றார். அப்போது அவருக்கு டைபாய்டு காய்ச்சல் வந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை ஓய்வு எடுக்கும்படி டாக்டரும், இயக்குனரும் கூறினர். காய்ச்சல் விட்டதும் ஷூட்டிங்கில் பங்கேற்பதற்கு வசதியாக காசியிலேயே தங்கி இருக்கிறார் தனுஷ். அவரை அருகில் இருந்து கவனித்துக்கொள்ள மனைவி ஐஸ்வர்யா காசி சென்றிருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.

அதேபோல் தமன்னா நடிக்கும் இந்தி படம் 'ஹிம்மத்வாலா'. அஜய் தேவ்கன் ஹீரோ. இதன் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் அஜய் தேவ்கன் காய்ச்சலால் அவதிப்பட்டார். ஜுரத்துடன் நடிக்க எண்ணியபோது பட யூனிட்டில் உள்ள தொழில் நுட்ப கலைஞர்களும் ஜுரத்தால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து இப்படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. காய்ச்சல் மற்றும் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வருகிறார் அஜய் தேவ்கன். இந்த பாதிப்பு குடிநீர் மாசுவினால் ஏற்பட்டிருக்கிறது என்று டாக்டர் கூறினார். 'இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியதும் பட குழுவினர் அனைவருக்கும் பாட்டிலில் சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும்' என்றார்  அஜய் தேவ்கன்.
 

சூர்யாவை நினைச்சிக்கிட்டே எழுதுவேன்...! - தாமரை

Thamarai Speaks On Maattrraan Songs

சூர்யாவை நினைச்சிக்கிட்டே, அவர் எப்படியெல்லாம் ரியாக்ஷன் காட்டுவார் என்பதை கற்பனை செய்தபடி பாடல் எழுதுவேன், என்றார் கவிஞர் தாமரை.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, காஜல் அகர்வால் ஜோடியாக நடித்து வருகிற மாற்றான் படத்தின் பாடல்கள் குறித்து சமீபத்தில் பேசிய கவிஞர் தாமரை, சூர்யா குறித்துப் பேசும்போது ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டார்.

அவர் கூறுகையில், "அது என்னமோ சூர்யாவுக்கு பாட்டு எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும். அவருக்கு எழுதும்போது, அவரை நினைத்தபடிதான் வரிகளை எழுதுவேன். இந்த வரிகளைப் பாடி நடிக்கும் போது சூர்யாவின் முகபாவணை எப்படி இருக்கும் என்பதை மனத் திரையில் கற்பனை செய்துகொண்டே தான் எழுதுவேன்.

காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்களில் என் பாடல்களுக்கு சூர்யா காட்டிய உணர்வுகள் அத்தனை அழகாக இருந்தன. இந்தப் படத்தில் 'யாரோ யாரோ' பாடலையும் சூர்யாவை நினைத்தபடிதான் எழுதினேன். சூர்யா மிகச் சிறந்த நடிகர் என்பதால் பாடல் நன்றாகவே வந்துள்ளது," என்றார்.

அப்ப மத்த நடிகர்களுக்கென்றால் எந்திரத்தனமாக எழுதிவிடுவாரோ!

 

அகிலா.. மீண்டும் இயக்குநராக களமிறங்கிய ஆர்.கே.செல்வமணி!

Rk Selvamani Directs Akila

நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் இயக்குநராக களமிறங்குகிறார் ஆர்கே செல்வமணி. அகிலா என்ற படத்தை இயக்குகிறார்.

புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், செம்பருத்தி என ஒரு காலத்தில் அடுத்தடுத்து ஹிட் கொடுத்தவர் செல்வமணி. பின்னர் அவரது படங்கள் எடுபடமாமல் போய்விட்டன.

சில ஆண்டுகளுக்கு முன் பிரசாந்தை வைத்து புலன் விசாரணை 2 என்ற படத்தை எடுத்தார். ஆனால் அது இன்று வரை திரையைத் தொடவே இல்லை.

இந்த நிலையில் அகிலா என்ற புதிய படத்தை இப்போது அறிவித்துள்ளார்.

ஸ்ரீமகாலட்சுமி என்ற புதிய நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் பி ஆனந்தன், ஆர்த்திக், நரேன், ஹீதாஷா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

தீவிரவாதத்துக்கு எதிரான படமாக அகிலாவை உருவாக்கியுள்ளார் செல்வமணி. புரட்சி என்ற பெயரில் மக்களைத் தூண்டிவிட்டு, தீவிரவாதத்தை வளர்க்கும் எந்த அமைப்பும் ஜெயித்ததில்லை என்பதுதான் கதையின் கரு.

ஆதித்யன் இசையமைத்துள்ளார்.

சத்தமில்லாமல் படப்பிடிப்பை முடித்துவிட்ட செல்வமணி, அடுத்த மாதம் இந்தப் படத்தை வெளியிடுவதில் தீவிரமாக உள்ளாராம்!

 

ஹீரோவாகும் ஜி.வி. பிரகாஷ் குமார்

Music Director G V Praksah Kumar Turns Hero

இசைஅமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக இருந்த ராஜசேகர் ஜி.பி. பிரகாஷை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநர்கள் கதாநாயகர்களாக நடித்து வெற்றி பெற்று வருகின்றனர் அந்த வரிசையில் இசை அமைப்பாளர்கள் இப்போது ஹீரோவாக நடிக்கத் தொடங்கியிருக்கின்றனர். இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்த ‘நான்' திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தரவே இசை அமைப்பாளர்கள் பலருக்கும் ஹீரோவாக நடிக்க ஆசை வந்திருக்கிறது. அடுத்ததாக ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோ அவதாரம் எடுக்க இருக்கிறார். இதற்கான பேச்சுவார்தை நடைபெற்று வருகிறது.

தற்போது திரைப்படங்களுக்கு இசை அமைக்கும் பணிகள் அதிகம் இருப்பதால் அதை முடித்துவிட்டு அடுத்த ஆண்டு ஜனவரியில் இருந்து படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ராஜசேகர் இயக்க உள்ளார். கதாநாயகி யார் என்று இன்னமும் முடிவு செய்யப்படவில்லை.

தன்னுடன் கதாநாயகியாக நடிக்க பாலிவுட் நடிகைதான் சரியான சாய்ஸ் என்று ஏற்கனவே பேட்டி ஒன்றில் ஜி.வி.பிரகாஷ் கூறியிருக்கிறார். (சைந்தவி கவனிக்கவும்).

 

கிச்சன் சூப்பர் ஸ்டாருக்கு ரூ.10 லட்சம் பரிசு

Kitchen Super Star On Vijay Tv

விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சியான கிச்சன் சூப்பர் ஸ்டாரில் நன்றாக சமைத்து பட்டம் வெல்லும் பிரபலத்திற்கு 10 லட்சம் ரூபாய் பரிசாக கிடைக்க உள்ளது.

சமையல் நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு அதிகம் தான். உலகில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளிலும் யாராவது ஒருவர் எதையாவது சமைத்துக் கொண்டுதான் இருக்கிறார். பிரபலங்கள் சமைக்கும் சமையல் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே வரவேற்பு அதிகம் என்று தெரிந்து விஜய் டிவி புதியதாக கிச்சன் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சியை தொடங்கியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் அனைவருமே பிரபலங்கள்தான். திரைப்பட நடிகர் சிவா, இளவரசன், பிரியா, நேத்ரன், சின்னத்திரை நட்சத்திரங்கள் பூஜா, சந்தியா, ஆர்த்தி, நிஷா, ப்ரீத்தா ராகவ், ஜெ. லலிதாஅரவிந்த் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக களமிறங்குகின்றனர். இவர்களுடன் நடிகர் சுரேஷ் பங்குபெறுகிறார்.

இந்த சமையல் நிகழ்ச்சியில் உள்நாட்டு சமையல் மட்டுமல்லாது வெளிநாட்டு சமையலும் சமைக்க உள்ளனர் பிரபலபங்கள். ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறுபவர்கள் அடுத்த சுற்றுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இந்த சமையல் நிகழ்ச்சிக்கு சஞ்சீவ் கபூர், செஃப் தாமோதர் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று சிறந்த சமையல் வல்லுநர்களை தேர்ந்தெடுக்கின்றனர். இறுதிச்சுற்றில் வெற்றி பெற்று கிச்சன் சூப்பர் ஸ்டார் பட்டத்தை வெல்லப்போகும் பிரபலத்திற்கு 10 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்படும்.

ஞாயிறுதோறும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் புதிது புதிதாக சமைத்து அசத்தப்போகின்றனர் பிரபலங்கள் பார்த்து ரசியுங்களேன்.

 

சின்னத்திரையில் போட்டி அதிகம்: குட்டிபத்மினி

Surya Puthri Kutti Padmini

கலைஞர் தொலைக்காட்சியில் ‘சூர்யபுத்ரி' கேப்டன் டிவியில் ‘மனம் விட்டுப் பேசலாம்' என பிஸியாக இருக்கிறார் நடிகை குட்டிபத்மினி. நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்து சின்னத்திரையில் பல ஆண்டுகளாக பல்வேறு சீரியல்களை தயாரித்து கொண்டிருக்கிறார். தன்னுடைய அனுபவங்களை அவர் நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

கலைஞர் டிவியைப் பொருத்தவரை, குஷ்பு, பாலசந்தர், திருச்செல்வம், ஏவிஎம் இவர்களுக்கு மத்தியில் குட்டி பத்மினி குட்டியாக மாட்டிக்கொண்டு போட்டி போடுகிறேன். அவர்களும் இவள் என்ன செய்யப்போகிறாள் என்று பார்க்கிறார்கள். நம்மை அங்கு நிரூபிக்கணும். நல்ல பேர் வாங்கணும். எல்லா தரப்பு மக்களையும் பார்க்க வைக்கணும்.

சூர்யபுத்ரி சீரியல் 100 எபிசோடுகளைத்தாண்டி நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. டாப் டென் சீரியலில் நாங்க இருக்கோம். எல்லா டிவி சீரியலிலும் குடும்பத்தைப் பிரிக்கும் விஷயங்கள்தான் மேலோங்கி இருக்கும். இதுல குடும்பத்தை ஒன்றாக சேர்ப்பதற்காக பாடுபடும் கேரக்டர்கள்தான் அதிகம். நிழல்கள் ரவி, சுதா சந்திரன், பிரகதி, லாவண்யா என்று இதில் நடித்திருப்பவர்கள் எல்லோருமே சினிமா நடிகர்கள். அதனால் நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு.

இந்த தொடரில் பணக்கார வீட்டுப்பெண் கதாபாத்திரத்திற்கு என் மூத்த மகள் கீர்த்தனாதான் சரியாக இருப்பாள் என்று கெஞ்சிக்கேட்டு நடிக்க வைத்திருக்கிறேன். ஏற்கெனவே "அபிராமி' என்ற தொடரில் சிறப்பாக நடித்தமைக்காக அவளுக்கு "பெஸ்ட் சைல்டு ஆர்டிஸ்ட்' விருது கிடைத்திருக்கிறது. என் மூன்று மகள்களுமே என் தொடர்களில் நடித்திருக்கிறார்கள். நன்றாகவும் படிக்கிறார்கள்.

நாங்கள் எடுத்த தொடர்களில் "உறவுகள்', "கிருஷ்ணதாசி', "மந்திரவாசல், "போலீஸ் டைரி', "எப்.ஐ.ஆர்', "கனாக் கண்டேன் தோழி', "கலசம்', இப்போது "சூர்ய புத்ரி' - ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தனித்தன்மை மிக்க தொடர்கள். டிவி தொடர் தயாரிப்பதில் போட்டியிருந்தால்தான் ஆரோக்கியமான சூழல் நிலவும். நான் நாள் முழுக்க உழைத்தாலும், அன்றிரவு அன்றைய நாளின் தொடர்கள் அனைத்தையும் பதிந்து வைத்து பார்த்துவிடுவேன். தமிழ் மட்டுமல்ல, ஹிந்தி, மலையாளம், மராத்தி, பெங்காலி என்று அனைத்தையும் பார்ப்பேன். நிறைய படிப்பேன். மற்ற தொடர்களில் ஏதாவது புதுமை இருந்தால், அதை நம்மால் ஏன் பண்ணமுடியாது.. என்று முயற்சி செய்வேன். அதனால்தான் 30 ஆண்டுகளாக சின்னத்திரை உலகில் நிலைத்திருக்க முடிகிறது என்று கூறிவிட்டு சூட்டிங்கிற்கு தயாரானார் குட்டிபத்மினி.

சீரியல் தயாரிப்பு தவிர குட்டிபத்மினிக்கு அமீர்கானின்"சத்யமேவ ஜெயதே' போல நிகழ்ச்சிகள் பண்ண வேண்டும் என்ற ஆசை இருக்கிறதாம். இது தவிர அறியாமை, மூட நம்பிக்கை, போலிச் சாமியார்களிடம் ஏமாறுதல் போன்றவற்றை மாற்றும் நிகழ்ச்சிகள் செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளார். சமூகசேவையில் ஆர்வம் உள்ள குட்டி பத்மினி காஞ்சிபுரம் அருகில் "மித்ராலயா' என்ற ஆதரவற்ற முதியோர்களுக்கான இல்லத்தை நடத்தி வருகிறார். குறைந்த பட்சம் 500 முதியோர்களையாவது பராமரிக்கவேண்டும் என்பதுதான் குட்டிபத்மினியின் லட்சியமாம்.

 

ரஜினியுடன் சந்திப்பு... 240 கோடி... உண்மையா சாக்ஸ்?

Hansraj Saxena Speaks On Rajin Next Movie   

கொஞ்ச நாளைக்கு முன் ரஜினிக்கு ரூ 240 கோடி சம்பளம் கொடுத்து புதுப்படத்தில் நடிக்க வைக்க ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா தீவிரமாக முயற்சித்து வருவதாக செய்திகள் பரபரப்பாக வெளியானது நினைவிருக்கலாம்.

ஆனால் இதுபற்றி யாரும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் சக்ஸேனா அலுவலகத்தில் ரஜினியுடன் பேசியிருப்பது உண்மைதான் என்றார்கள்.

இந்த நிலையில், நேற்று சுண்டாட்டம் என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க வந்த ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா, இந்த விவகாரம் குறித்து லேசுபாசாக சில உண்மைகளைச் சொன்னார்.

விழாவில் பேசிய அவர், "எல்லோரும் ரஜினி சாரை வைத்து படம் பண்ண ஆசைப்படுவாங்க, அதே மாதிரிதான் நானும் ஆசைப்பட்டு அவரைப் போய் பார்த்து வந்தேன். சரி, யோசிக்கலாம்னு சொல்லியிருக்கார். அவர் நெனைச்சா நான் அவரை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் பண்ணுவேன்," என்றார்.

பின்னர் அவரைத் தொடர்பு கொண்டு, 'ரஜினி சாருக்கு சம்பளமாக ரூ 240 கோடி தருவது உண்மைதானா?' என்றோம்.

அதற்கு பதிலளித்த சக்ஸேனா, 'அவர் விஷயத்தில் சம்பளம் ஒரு பொருட்டல்ல. அவர் சம்மதம்தான் முக்கியம். மற்றவை முடிவானால் நானே சொல்கிறேன்," என்றார்.

 

உலக சினிமாவை நோக்கி பயணிக்க வேண்டும் - கமல்

Kamal Wants Move Towards World Cineema   

சென்னை: இந்திய சினிமா உலக சினிமாவை நோக்கி பயணிக்க வேண்டும். அதற்கான வேலைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

இந்திய தொழில் வர்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பு சார்பாக சென்னையில் அதன் மூன்றாவது மாநாடு மற்றும் கருத்தரங்கம் அக்டோபர் 16, 17 தேதிகளில் நடைபெறுவதையொட்டி, கமல் பேட்டியளித்தார்.

அவர் கூறுகையில், "இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்திய தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்காக சேவை மனப்பான்மையுடன் மகாத்மா காந்தியால் 1927ஆம் ஆண்டு ஃபிக்கி தொடங்கப்பட்டது.

ஃபிக்கியின் வரலாறு சுதந்திரப் போராட்டத்தோடும் இந்தியத் தொழில் வளர்ச்சியோடும் பின்னிப் பிணைந்துள்ளது. ஊடகம் மற்றும் கேளிக்கைத் துறையில் ஃபிக்கியின் கேளிக்கைப் பிரிவு, தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகத்துடன் இணைந்து பல நல்ல கொள்கை மாற்றங்களைக் கொண்டு வந்தது. இதனால் பொழுதுபோக்குத் துறையின் வர்த்தகம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

தென்னிந்தியத் திரைப்படத் துறையினர் பயன்பெறும் வகையில் நவீன தொழில்நுட்ப உபகரணங்களின் பயன்பாடு, திரைப்படத் துறையில் புகுத்தப்பட்டுள்ள தற்போதைய உத்திகள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஃபிக்கி, கடந்த மூன்று ஆண்டுகளாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

திரைப்படங்கள், தொலைக்காட்சி, அனிமேஷன், கிராஃபிக்ஸ், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, டப்பிங், இசை போன்றவற்றில் ஏற்பட்டுள்ள நவீன தொழில் புரட்சி குறித்து பல அரிய தகவல்களை இந்த மாநாட்டில் அறிந்துகொள்ளலாம்.

இந்திய சினிமாவின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பயிலரங்குகள், சிறப்பு வகுப்புகள், திரைக்கதையாக்க வகுப்புகள், டிஜிட்டல் திரைப்பட உருவாக்கம், டிஜிட்டல் ஒலி நுட்பம் உள்ளிட்ட திரைப்படத்துறையின் பல்வேறு பிரிவுகள் குறித்த கருத்துப் பதிவுகள் இடம்பெறுகின்றன.

இதில் இந்திய அளவில் சிறந்து விளங்கும் சினிமா கலைஞர்கள் உள்பட ஹாலிவுட் கலைஞர்கள் பலரும் கலந்துகொள்கின்றனர்.

நான் இயக்கி நடிக்கவுள்ள ஹாலிவுட் படத்தைத் தயாரிக்கும் பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்போர்னும் கலந்துகொள்கிறார். சினிமா கலைஞர்கள் கூடுகிறார்கள் என்றவுடன் இதை ஏதோ ஒரு 'ஸ்டார் நைட்' நிகழ்ச்சி என கருதிவிட வேண்டாம். நூறு ஆண்டுகளாக இந்திய சினிமாவை வளர்த்த முன்னோடிகளுக்கும் மூத்தோர்களுக்கும் சிறப்பு செய்யும் ஒரு கெüரவமான நிகழ்வு இது. இத்தகைய வாய்ப்பைப் பயன்படுத்தி இந்திய சினிமாவை உலக சினிமாவை நோக்கி பயணிக்கச் செய்வோம்," என்றார்.

 

அஜீத் படத்துக்கு டைட்டில் குழப்பம்

garbled on ajith film's title

அஜீத் நடிக்கும் படத்துக்கு டைட்டில் வைப்பதில் குழப்பம் நிலவுகிறது. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. ஆனால் இப்படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. இந்நிலையில் 'சிறுத்தை' படத்தை இயக்கிய சிவா இயக்கத்தில் நடிக்க அஜீத் ஒப்புக் கொண்டிருக்கிறார். இப்படத்துக்கு 'வெற்றி கொண்டான்' என்று பெயரிடப்பட்டிருப்பதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. திரையுலகில் முன்னணி நடிகர் இடத்தை பிடிக்க அஜீத் பல்வேறு சோதனைகளை தாண்டி வர வேண்டி இருந்தது. அதை குறிக்கும் வகையில் இப்படத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் இதுபற்றி இயக்குனர் சிவா கூறும்போது, "அஜீத் படத்துக்கு டைட்டில் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. நிச்சயம் 'வெற்றி கொண்டான்' கிடையாது. கற்பனையாக யாராவது ஒரு தலைப்பை வைத்தால் அதை ஏற்க முடியாது. இதுவேண்டுமானால் வதந்தி பரப்புபவர்களின் விருப்பமாக இருக்கலாம். இப்பட ஸ்கிரிப்ட் இறுதிகட்ட பணியில் நான் இருக்கிறேன். சமீபத்தில் அஜீத்தை சந்தித்தேன். அவரிடம்  ஸ்கிரிப்ட் பற்றி ஆலோசித்தேன். அதைக்கேட்டு மகிழ்ச்சி தெரிவித்தார். இதுவொரு உணர்வுப்பூர்வமான பொழுதுபோக்குபடமாக இருக்கும். யாருடைய வாழ்க்கையையும் பிரதிபலிக்கும் கதை அல்ல" என்றார்.
 

மீண்டும் நடிக்கிறார் திஷா பாண்டே

Disha Pandey is acting again?

நடிகர்களை விமர்சித்த படத்தில் நடித்த திஷா பாண்டே மீண்டும் நடிக்கிறார். நடிகர்களை விமர்சனம் செய்து உருவான படம் 'தமிழ் படம்'. இதில் சிவா ஹீரோ. ஹீரோயினாக  திஷா பாண்டே நடித்தார். படம் ஹிட்டானாலும் ஹீரோயினுக்கு பட வாய்ப்புகள் குறைவாகவே வந்தது. இப்படத்தையடுத்து 'மயங்கினேன் தயங்கினேன்' படத்தில் நடித்தார். தற்போது 'கீரிப்புள்ள' என்ற படத்தில் யுவன் ஜோடியாக நடிக்கிறார். இதுபற்றி இயக்குனர் பெரோஸ்கான் கூறும்போது,'பாசக்கார நண்பர்கள் படத்தில் யுவனை ஹீரோவாக அறிமுகப்படுத்தினேன். இதையடுத்து சாட்டை என்ற படத்தில் நடித்தார். இதையடுத்து கீரிப்புள்ள படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

நாகா என்ற கதாபாத்திரத்தில் 'பருத்திவீரன்' சரவணன் நடிக்கிறார். இவர்கள் இருவருக்கும் கீரியும், பாம்பும்போல் எப்போதும் மோதல் நடக்கும். ஏற்கனவே திஷா பாண்டேவின் நடிப்பை இரண்டு படங்களில் பார்த்தேன். மிகையாக இல்லாமல் யதார்த்தமாக நடித்திருந்தார். அதேபோல் யதார்த்தமான கதாபாத்திரம் என்பதால் அவரை தேர்வு செய்தேன். இப்படத்தில் சண்டைகாட்சிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. படத்தில் யாருக்கும் டூப் போடாமல் ஸ்டன்ட் படமாக்கப்பட உள்ளது. தவசிராஜ் ஸ்டன்ட் அமைக்கிறார். மோகனராமன் ஒளிப்பதிவு. ஜெப்ரிக் இசை' என்றார்.