அனாதைகள் மருத்துவமனையில் நடிகை கனகா: புற்றுநோய்க்கு சிகிச்சையா?

அனாதைகள் மருத்துவமனையில் நடிகை கனகா: புற்றுநோய்க்கு சிகிச்சையா?

திருவனந்தபுரம்: நடிகை கனகா ஆலப்புழாவில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் நடிகை தேவிகாவின் மகள் கனகா. அவர் ராமராஜனுடன் சேர்ந்து நடித்த கரகாட்டக்காரன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதையடுத்து

படுபிசியான நடிகையாக ஆன கனகா ரஜினி, பிரபு, கார்த்திக் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார். ஆனால் 90ம் ஆண்டு இறுதிகளில் அவரை அவ்வளவாக படங்களில் பார்க்க முடியவில்லை.

திருமணம் செய்து கொள்ளாத கனகா 2000ம் ஆண்டில் தனது தாய் இறந்த பிறகு யாரும் இல்லாமல் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவர்

உடல் நலக்குறைவால் அவதிப்படுவதாக செய்திகள் வந்தன. பின்பு அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை. இந்நிலையில் தமிழ் மற்றும் மலையாள

திரையுலகைச் சேர்ந்த பழைய பிரமுகர் ஒருவர் கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற அங்கு

சென்றார். அந்த மருத்துவமனையில் அனாதைகள் மற்றும் கவனிக்க ஆளில்லாமல் அவதிப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கப்படும். அங்கு புற்றுநோயால் அவதிப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அந்த மருத்துவமனையில் கனகா சிகிச்சை பெறுவதைப் பார்த்த அந்த பிரமுகர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் தனது நண்பர்களிடம் கூற விஷயம் அப்படியே பரவியது. கனகா புற்றுநோய்க்கு தான் சிகிச்சை பெறுகிறார் என்று கூறப்படுகிறது. இப்படி கவனிக்கக் கூட ஆளில்லாமல் தன்னந்தனியாக கனகா சிகிச்சை பெறுவது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

 

வேடிக்கை பார்க்கக் கூடிய ரசிகர்களைப் பார்த்து 'தூ'... வென்று துப்பிய ஜஸ்டின் பீபர்

வேடிக்கை பார்க்கக்  கூடிய ரசிகர்களைப் பார்த்து 'தூ'... வென்று துப்பிய ஜஸ்டின் பீபர்

லாஸ் ஏஞ்சலெஸ்: பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபரைப் பார்க்க அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வெளியே கூடியிருந்த ரசிகர்களைப் பார்த்து ஜஸ்டின் தூவென்று துப்பியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பிரபல பாடகர் ஜஸ்டின் பீபர். இவருக்கு பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. இந்த நிலையில் லாஸ் ஏஞ்செலஸில் உள்ள ஒரு ஹோட்டலில் பீபர் தங்கியிருந்தார். இதையடுத்து அவரைப் பார்க்க திரளான ரசிகர்கள் ஹோட்டலுக்கு வெளியே கூடியிருந்தனர்.

அப்போது பால்கனிக்கு வந்த ஜஸ்டின் தனது ரசிகர்கள் பெரும் திரளாக கூடியிருப்பதைப் பார்த்தார். பின்னர் திடீரென கீழே நோக்கி தூ வென்று துப்பினார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதைப் பார்த்த ஜஸ்டின் சுதாரித்துக் கொண்டு உள்ளே போய் விட்டார். பின்னர் அவர் வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டார். அதில், இன்று காலை நான் விழித்து எழுந்து பார்த்தபோது நிறைய ரசிகர்கள் எனக்காக காத்திருந்ததைப் பார்க்க முடிந்தது. உலகிலேயே சிறந்த ரசிகர்கள் இவர்கள்தான் என்று ஐஸ் வைத்து பேசியிருந்தார்.

துப்பிட்டுப் பேசுற பேச்சைப் பாரு...!

 

சருமப் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக.. நிர்வாணமான மைலி சைரஸ்

சருமப் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக.. நிர்வாணமான மைலி சைரஸ்

லாஸ் ஏஞ்சலெஸ்: சருமப் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக நிர்வாண போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர வைததுள்ளார் நடிகை மைலி சைரஸ்

பாடகியும், நடிகையுமான மைலி சைரஸ், டிசைனர் மார்க் ஜேக்கப்பின் சரும புற்றுநோய் நிதி சேகரிப்பு மற்றும் விழிப்புணர்வுக்காக இந்த நிர்வாண போஸைக் கொடுத்துள்ளார்.

20 வயதான மைலியின் இந்த நிர்வாணப் படத்தை, டிசைனர் மார்க், தனது சருமப் புற்றுநோயிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள் என்ற விழிப்புணர்வுப் பிரசாரத்திற்குப் பயன்படுத்தவுள்ளார். மேலும் இந்தப் படத்தின் மூலம் கிடைக்கும் நிதியானது, நியூயார்க் பல்கலைக்கழகத்தின் சருமப் புற்றுநோய் மையத்திற்கு அளிக்கப்படவுள்ளது.

தான் நிர்வாண போஸ் கொடுத்தது குறித்து டிவி்ட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் மைலி.

இந்தப் புகைப்படத்தில் ஆடை எதுவும் இல்லாமல் இருக்கிறார் மைலி. தனது இரு கைகளால் அந்தரங்கப் பகுதிகளை மறைத்தபடி காட்சி தருகிறார். படத்தில், உங்களது சருமத்தை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளங்கள் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

 

சஞ்சய்தத்தின் பெயரை ‘மோதிரமாக’ டாட்டூஸ் போட்டுக் கொண்ட மானயதா தத்!

சஞ்சய்தத்தின் பெயரை ‘மோதிரமாக’ டாட்டூஸ் போட்டுக் கொண்ட மானயதா தத்!

மும்பை: சிறையில் இருக்கும் அன்புக் கண்வர் சஞ்சய் தத்தின் பெயரை தனது மோதிர விரலில் டாட்டூஸாக குத்ஹ்டிக் கொண்டுள்ளார் மானயதா தத்.

ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்தின் மனைவியான, மானயதா தத் மிகவும் பிசியான பெண்மணி. தனது தயாரிப்பு நிறுவன வேலைகளுக்கு மத்தியிலும் தனது கணவர் சம்பந்தமான பாசப் பணிகளைச் செய்ய தவறுவதில்லை மானயதா.

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி, தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார் சஞ்சய்தத். இதனால், கணவன் -மனைவி இருவரும் தினந்தோரும் கடிதம் வாயிலாகவும், அவ்வப்போது நேரிலும் சந்தித்துக் கொள்கிறார்கள்.

தற்போது, தன் கணவர் சஞ்சய் மீது தான் கொண்ட காதலை காட்டும் விதமாக, தனது மோதிர விரலில் டாட்டூவாக வரைந்துள்ளார் மானயதா தத். தன் அன்பு மனைவியின் செயலைக் கேட்டு மிகவும் உணர்ச்சி வசப்பட்டாராம் சிறையில் இருக்கும் சஞ்சய் தத்.