நான் மோகன்பாபு மகள் மாதிரி... மனோஜ் எனக்கு சகோதரர் மாதிரி - டாப்ஸின் டாப் பல்டி!

Tapsi S Explanation On Actors Clash

சென்னையில் நடந்த சரக்கு பார்ட்டியில் மகத்தும் மனோஜும் முட்டி மோதி மூக்குடைந்ததற்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. மனோஜ் என் சகோதரர் மாதிரி என்று விளக்கம் அளித்துள்ளார் டாப்ஸி. இந்த விளக்கத்தில் மகத்தைப் பற்றி தப்பித் தவறிக் கூட ஒரு வார்த்தை சொல்லவில்லை அவர்!

சென்னையில் நடிகர்-நடிகைகள் பங்கேற்ற மது விருந்தில் ‘மங்காத்தா' படத்தில் நடித்த மகத் தாக்கப்பட்டார். தெலுங்கு நடிகர் மனோஜ் நண்பர்களுடன் சேர்ந்து அவரை அடித்து உதைத்தார்.

நடிகை டாப்ஸியை இருவரும் காதலித்ததாகவும், அதனால் ஏற்பட்ட தகராறில் இந்த அடிதடி சண்டை நடந்ததாகவும் கூறப்பட்டது. ஏராளமான நடிகர் நடிகைகள் இயக்குநர்கள் முன்னிலையில் இந்த சண்டை நடந்ததால், அவர்கள் தலையிட்டு இவர்களை விலக்கிவிட்டனர். அந்த நேரத்தில் டாப்ஸியும் அங்கு இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த விவகாரம் போலீஸ் கேஸாகிவிட்டது. இதையடுத்து டாப்ஸி இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "என்னைப் பற்றி தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

இரண்டு நடிகர்கள் தகராறு செய்துகொண்ட இடத்தில் நான் இருக்கவில்லை. அந்த சமயத்தில் கர்னூலில் இருந்தேன். எனவே நடிகர்கள் என் கண்முன்னே மோதிக் கொண்டார்கள் என்ற செய்தியில் உண்மை இல்லை.

என் மீதான குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. நான் சினிமா துறையில் நுழைந்ததில் இருந்தே மோகன்பாபு, லட்சுமி, விஷ்ணு, மனோஜ் ஆகியோரை நன்கு தெரியும். அவர்களது குடும்பத்தில் ஒருவராக என்னை பாவித்தும், பாதுகாத்தும் வருகின்றனர். அவர்களுக்கு நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.

மோகன்பாபு என்னை மகளாகவே பாவிக்கிறார். லட்சுமி, மனோஜ், விஷ்ணு ஆகியோர் என்னை இளைய சகோதரியாகவே பார்க்கின்றனர். மலிவான விளம்பரத்துக்காக என்னையும், மனோஜையும இணைத்து செய்தி வெளியிட்டுள்ளனர்.

இதற்கு முன்பு என்னைப் பற்றி அவதூறு செய்திகள் பரப்பப்பட்டன. அப்போதெல்லாம் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்து விட்டேன். இப்போது என் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கும் குடும்பத்துக்குள்ளேயே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அவதூறு பரப்பப்படுவதால் இந்த விளக்கத்தை அளிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

மனோஜ் எனது சகோதரர் போன்றவர். அவருடன் காதல் வயப்பட்டேன் என்றால் என்ன அர்த்தம்? எனக்கும், மனோஜுக்கும் சகோதர, சகோதரி உறவே தவிர வேற எந்த உறவும் கிடையாது," என்று கூறியுள்ளார்.

ஒருவேளை 'சகோதரி'யை யார் நல்லா வச்சிக்கிறதுன்னு சண்டை போட்டிருப்பாங்களோ!!

 

நான் ஒண்ணுமே பண்ணல.. மனோஜ்தான் ஆளைக் கூட்டிவந்து அடிச்சார்! - மகத்

Mahath S Statement On Clash With Manoj

நான் ஒன்றுமே செய்யவில்லை. சும்மா நின்று கொண்டிருந்தேன். மஞ்சு மனோஜ்தான் ஆட்களைக் கூட்டி வந்து அடித்தார். நான் உயிர் பிழைத்ததே அதிசயம், என்றார் டாப்ஸிக்காக சண்டை போட்டு மூக்குடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நடிகர் மகத்.

ராமச்சந்திரா மருத்துவமனையில் படுக்கையில் படுத்தபடி அவர் அளித்த பேட்டி:

கடந்த 7-ந்தேதியன்று பிலிம்பேர் விருது விழா முடிந்த பிறகு சென்னையில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். அதில் பங்கேற்க என்னையும் அழைத்து இருந்தார்கள். நான் அதில் கலந்து கொண்டேன்.

பிரபல நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் பலர் வந்து இருந்தார்கள். கூட்டத்தினரிடம் இருந்து சற்று விலகி நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். நான் ஒன்றுமே செய்யல. சும்மா நின்னுக்கிட்டிருந்தேன். அப்போது தெலுங்கு நடிகர் மனோஜ் மஞ்சு என்னை நோக்கி வந்தார். அவருடன் மூன்று நண்பர்களும் வந்தனர். அவர்கள் திடீரென்று என்னை அடிக்க தொடங்கினார்கள். எனக்கும் அவருக்கும் என்ன பிரச்சினை என்ற காரணம் எதுவும் சொல்லாமலேயே அடித்தார்.

பல நிமிடங்களாக என்னை அடித்து உதைத்தபடி இருந்தனர். என் முகத்தில் குத்தினார்கள். வயிறு, உடம்பு பகுதிகளிலும் தாக்கினர். தொண்டையிலும் குத்தினார்கள். விருந்தில் இருந்த எவரையும் என்னை காப்பாற்ற விடவில்லை.

பிறகு சிலர் தலையிட்டு என்னை அவர்கள் பிடியில் இருந்து மீட்டனர். மனோஜ் என்னைப் பார்த்து உன் சாவு என் கையில்தான் என்று சொல்லி மிரட்டினார். எனது செல்வாக்கு அனைத்தையும் பயன்படுத்தி உன் கதையை முடிப்பேன் என்றார்.

பிறகு யாருக்கோ போன் செய்து என்னை தீர்த்து கட்டும்படி சொன்னார். என்ன பிரச்சினை வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். என்னை மோசமான கெட்ட வார்த்தைகளாலும் திட்டினார்.

இந்த சம்பவம் 8-ந்தேதி அதிகாலை 4 மணியளவில் நடந்தது. நான் தாக்கப்பட்ட பிறகு எனது நண்பரை போனில் அழைத்தேன். அவர் வந்து என்னை அழைத்து போய் மருத்துவமனையில் சேர்த்தார். எனது தாடை, கண்களில் அடிபட்டு காயங்கள் இருந்தன.

டாக்டர் என்னிடம் தொண்டையில் குத்துப் பட்டு நீங்கள் உயிர் பிழைத்தது ஆச்சரியமானது என்றார். மேலும் 5 நாட்கள் சிகிச்சை பெறவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. அடுத்து எனக்கு எதுவும் நேரலாம் என பயமாக உள்ளது," என்றார்.

 

கண்ணா லட்டு தின்ன ஆசையா? - ராமநாராயணன் - சந்தானம் - பவர் ஸ்டார் கைகோர்க்கிறார்கள்!

Santhanam Joins With Rama Narayanan
ராமநாராயணன் - சந்தானம் - பவர் ஸ்டார்... கூட்டணியே களை கட்டுதில்ல... இந்தக் கூட்டணியில் வரும் படம் எப்படியிருக்கும்?

ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புக்கிடையில் ஆரம்பித்துள்ளது கண்ணா லட்டு திண்ண ஆசையா?

மணிகண்டன் இயக்கும் இந்தப் படத்தில் சந்தானமும் பவர் ஸ்டார் எனக் கிண்டலடிக்கப்பட்டு இப்போது நிஜமாகவே பவர் ஸ்டாராகிவிட்ட டாக்டர் சீனிவாசனும் நடிக்கிறார்கள்.

படத்தை தயாரிக்கப் போகிறவர்கள் இயக்குநர் ராமநாராயணனும் ஹீரோ சந்தானமும்தான். இதற்காக ஹேண்ட் பேட் ( Hand Pad ) பிலிம்ஸ் என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார் சந்தானம்.

நகைச்சுவையையும் நட்பின் பெருமையையும் காட்சிக்கு காட்சி ஆரவாரத்தை அள்ள கூடிய வகையில் இந்தப் படம் தயாராகிறதாம்.

விவேகா பாடல்கள் எழுத, தமன் இசையமைக்கிறார். பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். சந்தானம் ஜோடியாக, விசாகா நாயகியாக நடிக்கிறார். இவர் ஏற்கெனவே பிடிச்சிருக்கு படத்தில் நடித்தவர்.

'பட்டிமன்ற' ராஜா, மயில்சாமி, கோவைசரளா, தேவதர்ஷினி மற்றும் பலரை இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஆர்யா இந்தப் படத்தில் கௌரவ வேடத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.

படத்தின் பூஜை இன்று ஏவிஎம்மில் நடந்தது.
 

வில்லன் நடிப்பில் என்னை மிஞ்சிட்டீங்க.. - ரஜினியிடம் பாராட்டு பெற்ற சுதீப்

Rajinikanth Lauds Sudeep S Acting E   
நான் ஈ படத்தில் வில்லன் நடிப்பில் என்னையே மிஞ்சிவிட்டீர்கள் என நடிகர் சுதீப்பை பாராட்டியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தமிழ் தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றி கண்டுள்ள நான் ஈ மற்றும் ஈகா படங்களில் நானி, சுதீப், சமந்தா நடித்துள்ளனர். குறிப்பாக வில்லனாக கன்னட நடிகர் சுதீப்பின் நடிப்பு பலரையும் கவர்ந்துள்ளது.

சமீபத்தில் நான் ஈ படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்காக போட்டுக் காட்டினார் இயக்குநர் ராஜமவுலி. படத்தின் பல காட்சிகளை கைத்தட்டி ரசித்த ரஜினி, படம் முடிந்ததும் ராஜமவுலிக்கும் குழுவினருக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

படத்தில் வில்லனாக நடித்துள்ள சுதீப்பையும் பாராட்டினார். ரஜினியின் பாராட்டு குறித்து ட்விட்டரில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார் சுதீப்:

"படம் பார்த்த ரஜினி சார் தனக்கே உரிய வெடிச்சிரிப்புடன் 'நான்தான் பெஸ்ட் வில்லன்னு நெனச்சிக்கிட்டிருந்தேன். ஆனா என்னை மிஞ்சிட்டீங்க...' என்று வாழ்த்தினார்!"
 

ரஜினி, கமல் நடித்த படங்கள் ரீமேக் ஆகிறது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பாலசந்தர் இயக்கத்தில் ரஜினி, கமல் நடித்துள்ள 2 படங்கள் ரீமேக் ஆகிறது. ரஜினி நடித்த படம் 'தில்லு முல்லுÕ. கமல் நடித்த படம் 'மன்மத லீலை. இந்த இரண்டு படங்களையும் ரீமேக் செய்கிறார் தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி. இதுபற்றி அவர் கூறும்போது, 'கமல் நடித்த மன்மத லீலை, ரஜினி நடித்த தில்லு முல்லு இரண்டும் ஹிட் படங்கள். அந்த காலகட்டத்தில் இரண்டும் டிரெண்ட் செட் படங்களாக அமைந்தன. இப்படங்களை ரீமேக் செய்ய உள்ளேன். அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இரண்டு படங்களின் கதை கருவும் எந்த காலகட்டத்துக்கும் பொருந்தும். அதன் கருவை மட்டும் வைத்துக்கொண்டு புதிய காட்சிகளுடன் இப்படம் உருவாகும். இப்படத்தில் நடிக்கும் அதிர்ஷ்டகார நடிகர்கள் யார் என்று இன்னும் முடிவு செய்யவில்லை. பிரபல இயக்குனர்களிடம் படத்தை இயக்குவதுபற்றி பேச்சு நடக்கிறதுÕÕ என்றார்.  ஹீரோ கமல் அழகான பெண்களை பார்த்ததும் சபலம் அடையும் குணம் கொண்டவர். பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் அவர் வாழ்க்கையில் பட்ட கஷ்ட நஷ்டங்களை கூறும் கதைதான் மன்மத லீலை. இந்தியில் வெளியான கோல் மால் படமே தில்லு முல்லு என்ற பெயரில் உருவானது. தொழில் அதிபர் ஒருவரின் அன்பை சம்பாதிக்கும் ஹீரோ ரஜினி ஒரு கட்டத்தில் அவரிடமே பொய¢ சொல்லி நடிக்கும் நிலை உருவாகிறது. இதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பது கதை.


 

டாப்ஸியை காதலிக்க போட்டி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
டாப்ஸியை காதலிப்பது யார் என்ற போட்டி ஏற்பட்டதால் 2 தெலுங்கு நடிகர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். இந்த மோதல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 'ஆடுகளம்' உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் டாப்ஸி. தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு வில்லன் நடிகர் மோகன்பாபு மகன் மனோஜ் மன்சுடன் ஒரு படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பார்ட்டி நடந்தது. இதில் மனோஜ் மன்சு, நடிகர் மஹத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அமைதியாக தொடங்கிய பார்ட்டியில் திடீரென்று மோதல் ஏற்பட்டது. மஹத்தை நோக்கி கோபத்துடன் பாய்ந்தார் மனோஜ், 'உன்னை தீர்த்துக்கட்டிவிடுவேன்' என்று எச்சரித்தாராம். இதனால் பார்ட்டியிலிருந்தவர்கள் பதற்றம் அடைந்தனர். இதையடுத்து மஹத் அங்கிருந்து கோபமாக வெளியேறினார். இதுபற்றி மஹத் கூறும்போது, 'பார்ட்டியில் மோதல் சம்பவம் நடந்தது உண்மை. நான் நடிப்பில்தான் இப்போது தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறேன். மனோஜ் என் மீது கோபம் அடைவதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை' என்றார்.

மனோஜ் மற்றும் அவரது சகோதரி லட்சுமி மன்சுக்கும் நெருக்கமானவர் டாப்ஸி. லட்சுமி தயாரிக்கும் படத்தில் மனோஜுடன் ஜோடியாக நடித்தும் வருகிறார். அவர்களுடனேயே ஐதராபாத்தில் தங்கி இருக்கிறார். இந்நிலையில் மனோஜுக்கும், டாப்ஸிக்கும் நட்பு ஏற்பட்டு அது காதலாக மலர்ந்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே மஹத்துடன் டாப்ஸி நட்பாக பழகி வந்தார். பின்னர் அவருடனான நட்பை முறித்துக்கொண்டார். ஆனால் மஹத் அவரிடம் நட்பை தொடர முயற்சித்தாராம். இதானல்தான் மஹத் மீது கோபம் அடைந்து அவரிடம் மனோஜ் மோதியதாக  கூறப்படுகிறது.

இந்த சம்பவம் பற்றி லட்சுமி மன்சு கூறும்போது,''மஹத் எங்களது நல்ல நண்பர். எந்த நேரத்திலும் அவரிடம் மனோஜ் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதில்லை. நண்பர்கள் என்ற முறையில் அவர்களுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டிருக்கலாம். பிறகு ஒன்றுசேர்ந்துவிடுவார்கள். ஆனால் யாரோ மனோஜ்-மஹத் மோதியதாக கதை கட்டிவிடுகிறார்கள். எதற்காக மஹத்தை மனோஜ் தாக்க வேண்டும்? சம்பவம் நடந்ததாக கூறப்படும் பார்ட்டியில் நானும் கலந்துகொண்டேன். ஆனால் மோதல் சம்பவம் எதுவும் நடக்கவில்லை. ஒரு கண்ணாடி டம்ளர் உடைந்தது போன்ற சத்தம்கூட என் காதில் விழவில்லை. மஹத் பார்ட்டியில் இருந்து புறப்பட்டு சென்ற பிறகுகூட நான் பார்ட்டி நடக்கும் இடத்தில்தான் இருந்தேன்'' என்றார்.


 

இயக்குனர் நெருக்கடி : கரீனா திடீர் விலகல்

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
சயீப்பை திருமணம் செய்ய உள்ளதால் புதிய படத்தில் இருந்து கரீனா விலகினார். விரைவில் நடிப்புக்கு முழுக்கு போடு வார் என்று தெரிகிறது. பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் 'ராம் லீலா' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார் கரீனா கபூர். திடீரென்று அப்படத்திலிருந்து விலகிவிட்டார். அவருக்கு பதிலாக பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். காதலர் சயீப் அலிகானை மணக்க இருப்பதால்தான் கரீனா விலகியதாக கூறப்படுகிறது. இதுபற்றி கரீனா கூறியதாவது: ஒரு வாரத்துக்கு முன் 'ராம் லீலா' படத்தில் இருந்து விலகினேன். இப்படத்துக்கு 100 நாள் கால்ஷீட் ஒதுக்கினேன்.

ஆனால் இயக்குனர் பன்சாலி கூடுதலாக தேதி ஒதுக்கி தர வேண்டும் என்றார். வரும் ஆண்டில் 3 பெரிய படங்களில் நடிக்க ஏற்கனவே ஒப்புக் கொண்டிருக்கிறேன். அதில் ஒரு படம் அக்டோபரில் தொடங்குகிறது. எனவே கூடுதல் கால்ஷீட் தர முடியாது. மேலும் சம்பள விஷயத்திலும் பிரச்னை ஏற்பட்டது. எனவேதான் படத்திலிருந்து விலகினேன். ஆனால் சயீப்பை விரைவில் மணக்க இருப்பதால்தான் நான் விலகியதாக கூறுகிறார்கள்.

நாங்கள் இருவரும் கடந்த 5 வருடமாக பழகிவருவது எல்லோருக்கும் தெரியும். எங்கள் திருமணம் பற்றி சரியான நேரத்தில் அறிவிப்போம். படத்தில் இருந்து விலகியதற்கு திருமணம் காரணம் இல்லை என்பதை வதந்தி பரப்புகிறவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். நடிப்புக்கும் முழுக்கு போடமாட்டேன். இவ்வாறு கரீனா கூறினார்.


 

த்ரிஷா - நயன் சமரசம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பட வாய்ப்புக்காக மோதிக் கொண்ட த்ரிஷா, நயன்தாரா திடீர் சமரசம் ஆகினர். தமிழ், தெலுங்கில் போட்டி ஹீரோயின்களாக வலம் வருகின்றனர் த்ரிஷா, நயன்தாரா. இரண்டு வருடத்துக்கு முன்பு விஜய்யுடன் புதிய படம் ஒன்றில் நயன்தாரா ஜோடியாக நடிக்க பேச்சு நடந்தது. அப்போது விஜய், த்ரிஷா ஜோடி பிரபலமாக பேசப்பட்டு வந்தது. இதையடுத்து புதிய படத்திலும் தன்னையே ஜோடியாக போட வேண்டும் என்று த்ரிஷா தரப்பில் வலியுறுத்தப்பட்டதாம். விஜய் ஜோடியாக நடிக்கப்போவது நயன்தாராவா, த்ரிஷாவா என்ற போட்டி எழுந்தது. இறுதியாக த்ரிஷா அப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இது நயன்தாராவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதுவே பின்னர் இருவரிடமும் மனக்கசப்பாக மாறியது. இதேபோல் தெலுங்கு படமொன்றில் பிரபல நடிகருடன் த்ரிஷாவை ஒப்பந்தம் செய்ய பேச்சு நடந்தது. அந்த வாய்ப்பு பின்னர் நயன்தாராவுக்கு மாறியது. இதனால் இருவரிடம் போட்டி அதிகரித்து வந்தது. மீடியாவில் பேசும்போதும் அவர்களது மனக்கசப்பு மறைமுகமாக வெளிப்பட்டது. இந்நிலையில் சென்னையில் நடந்த நட்சத்திர விருந்தில் நயன்தாரா, த்ரிஷா கடந்த சனிக்கிழமை பங்கேற்றனர். நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட இருவரும் ஒருவரையொருவர் கட்டித் தழுவி நலம் விசாரித்துக்கொண்டனர். இருவரும் முத்தம் பரிமாறிக்கொண்டனர். பின்னர் இருவரும் அருகருகே அமர்ந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர். இவர்களின் திடீர் பாசம் அங்கிருந்தவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.


 

நல்ல பாட்டு காய்கறி கடையில் ஒலிக்கணும்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
புதுமுகங்கள் எஸ்.சதீஷ், தீப்தி நம்பியார் நடிக்கும் படம் 'வெள்ளைக் காகிதம்' ஜி.வி.சந்தர் இயக்கம். சதீஷ்வர்ஷன் இசை. இ.ராஜா, ஏ.கே.எஸ். ஆகிய இருவரின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் பாடல் சிடி வெளியீட்டு விழா நேற்று நடந்தது. பின்னணி பாடகி எஸ்.ஜானகி கலந்துகொண்டு பாடல் சிடியை வெளியிட்டு பேசினார். அவர் கூறும்போது,''அந்த காலம் முதல் இந்த காலம் வரை இசையின் ரசனை வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு நல்ல பாட்டு என்பது குறிப்பிட்ட பகுதியில் மட்டு மில்லாமல் காய்கறி கடையிலும் அது ஒலிக்க வேண்டும். பெரிய இடங்களிலும் ஒலிக்க வேண்டும். கே.வி.மகாதேவன், சுப்பையா நாயுடு, எம்.எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்ட இசை மேதைகள் வழங்கிய பாடல்கள் என்றைக்கும் ஒலித்துக்கொண்டிருக்கும். அந்த காலத்து மெலடியையும் இந்த காலத்து நவீன இசையையும் கலந்து இப்படத்தின் பாடல் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு நானும் பாடி இருக்கிறேன்'' என்றார். விழாவில் இயக்குனர்கள் பாண்டி ராஜ், சுசீந்திரன், நடிகர் விவேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


 

வில்லி வேஷம்தான் வேணும்! - சவால்விடும் ரம்யா

Ramya Wishes Play Negative Roles    | ரம்யா  

சமீபத்தில் வெளிவந்த ‘தடையற தாக்க' படத்தில் ஒரு பெண் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. யாருப்பா இந்தப் பொண்ணு என்று பார்த்தவர்களைக் கேட்க வைத்த அவர் பெயர் ரம்யா.

அக்கா, தோழி, அண்ணி வேடங்களில் நடித்தாலும், ஒரு கதாநாயகிக்குரிய அழகும் இளமையும் கொண்டவர் ரம்யா.

ஏன்? கதாநாயகியாக நடிக்க முயற்சிக்க கூடாது என ரம்யாவிடம் கேட்டபோது..

"சினிமாவில் கதாநாயகியாக நடிப்பதற்கு ஏகப்பட்ட போட்டி. அப்படியே ஒரு படத்தில் அறிமுகமானாலும் அந்த வாய்ப்பை தொடர்ந்து தக்க வைத்துகொள்வதற்கு படாதபாடு பட வேண்டும். என்னைப் பொறுத்தவரை கிடைக்கிற கேரக்டர் ரோல்களில் திறமையைக் காட்டுவது பிடித்திருக்கிறது.

எப்படி நடிக்க வந்தீர்கள்?

நான் எம்.ஏ. பப்ளிகேஷன்ஸ் படித்துள்ளேன். மாடலிங் துறையில் ஆர்வம் அதிகம்.அப்படியே சின்னத்திரைக்குள் நுழைந்தேன். ‘இது ஒரு காதல் கதை' நான் அறிமுகமான முதல் சீரியல். அதைத் தொடர்ந்து கரு. பழனியப்பன் இயக்கி நடித்த ‘மந்திரப்புன்னகை' படத்தில் கதாநாயகனின் சின்ன வயது அம்மாவாக நடித்தேன். எல்லோராலும் பாராட்டப்பட்ட அந்த கேரக்டர் மூலம் பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. டீசண்டான பாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். அதனாலேயே சில படங்களில் என்னால் நடிக்க முடியவில்லை.

‘தடையற தாக்க' படம் பார்த்தவர்கள் அத்தனை பேரும் என்னை அடையாளம் கண்டு கொண்டு பாராட்டுகிறார்கள். அந்தப் படத்தில் வில்லனை ஒரு ஆட்டுதொட்டியில் சந்திப்பது போன்று ஒரு காட்சி வரும். அந்த காட்சியை ஒரிஜினல் ‘ஆட்டுதொட்டி' பகுதியில் 3 நாட்கள் படமாக்கினார்கள். அப்படியொரு இடத்தை நான் பார்த்ததே கிடையாது. ஆனாலும் மிகவும் சிரமப்பட்டு நடித்தேன். தற்போது ‘கண்டுபிடி கண்டுபிடி' எனும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தில் சீமான் சார் ஜோடியாக நடித்துள்ளேன். ஒரு திருமண மண்டபத்திற்குள் நடக்கும் கதை. இதை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கியள்ளார் இதன் இயக்குனர்.

‘கண்டுபிடி கண்டுபிடி' விரைவில் ரிலீசாக உள்ளது. பாலுமகேந்திரா சார் இயக்கத்தில் இன்னும் பெயர் வைக்காத ஒரு புதுப்படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறேன். தமிழ் சினிமாவின் கேமரா கவிஞரும், மிகப்பெரிய இயக்குனருமான அவர் படத்தில் நடிப்பதை மிகப்பெரிய பெருமையாக கருதுகிறேன்.

எனக்கு யாராவது ‘வில்லி' வேடம் கொடுத்தால் அதில் கண்டிப்பாக கலக்குவேன். நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன் என்றார் ரம்யா.

 

டாப்ஸிக்காக அடிதடி - மஞ்ச் மனோஜ் மீது கொலை மிரட்டல் புகார் கொடுத்த மகத்!

Actor Mahath Files Life Threat Char

சென்னையில் நடந்த சரக்கு பார்ட்டியில் நடிகை டாப்ஸி யாருக்கு சொந்தம் என நடிகர் மகத்தும் மஞ்ச் மனோஜும் அடிதடியில் இறங்கிய செய்தியை நேற்று வெளியிட்டிருந்தோம்.

அந்த சண்டை இப்போது போலீஸ் கேஸாகி, நீதிமன்றத்துக்குப் போகும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த மோதலில் மகத்தின் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்தக் காயத்துக்கு சிகிச்சையளிக்க ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அடிதடி சமாச்சாரம் என்பதால், இதனை போலீசாருக்கு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துவிட்டது.

போலீஸ் விசாரணையின் போது மஞ்ச் மனோஜ் மீது மகத் கூறிய பரபரப்பு குற்றச்சாட்டு இது:

கடந்த 7-ந் தேதி அன்று இரவு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிலிம்பேர் விருது வழங்கும் விழா நடந்தது. அந்த விழா முடிந்தவுடன், சினிமா வட்டாரத்துக்கு நெருக்கமான தொழில் அதிபர் ஒருவர் தனது பிறந்தநாளையொட்டி இரவு விருந்துக்கு அழைத்தார்.

சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோட்டில் உள்ள அவரது கெஸ்ட் ஹவுஸில் இரவு 11 மணிக்கு மேல் விருந்து நிகழ்ச்சி நடந்தது. அந்த விருந்தில் நானும் கலந்து கொண்டேன். நள்ளிரவு 2 மணிக்கு விருந்து முடியும் தருவாயில், அதே விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, நடிகர் மனோஜ் என்னை தனியாக அழைத்தார். நான் அவரை அங்கேயே பார்த்தேன். அவருடன், அவரது நண்பர்கள் 3 பேரும் இருந்தனர்.

நான் எதிர்பாராத வகையில், மனோஜும், அவரது நண்பர்களும், என் முகத்தில் குத்தினார்கள். என்னை கொலை செய்துவிடுவேன் என்று மனோஜ் ஆவேசமாக சத்தம் போட்டு மிரட்டினார்.

அங்கு இருந்தவர்கள் மனோஜையும், அவரது நண்பர்களையும் விலக்கிவிட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். மனோஜ் இதுபோல் நடந்து கொள்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே எனக்கும், அவருக்கும் பிரச்சினை இருந்தது. நண்பர்கள் மூலம் சமாதான பேச்சு நடத்தப்பட்டது.

என்னை தாக்கிய நடிகர் மனோஜ் பெரிய பக்கபலம் உள்ளவர். அவரது தந்தை நடிகர் மோகன்பாபு ஆந்திராவில் பெரிய ஆள். எனவே மனோஜால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. மனோஜ் மீதும், அவரது நண்பர்கள் 3 பேர் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பதோடு, எனக்கு உரிய பாதுகாப்பும் வழங்கவேண்டும்.

இவ்வாறு தனது புகாரில் நடிகர் மஹத் குறிப்பிட்டு இருந்தார். இந்த புகார் அடிப்படையில் நடிகர் மனோஜ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் மீது கொலை மிரட்டல் உள்பட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் ராயப்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் இரவு வழக்குப்பதிவு செய்தனர்.

விமானத்தில் பறந்துவிட்ட மனோஜ்

இந்த வழக்கு அடிப்படையில், நடிகர் மனோஜ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரையும் கைது செய்ய தேடியதாகவும், அவர்கள் விமானத்தில் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்துக்கு தப்பிச்சென்று விட்டதாகவும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மனோஜை கைது செய்ய தேவைப்பட்டால் தனிப்படை போலீசார் ஹைதராபாத் செல்வார்கள் என்றும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.

நடிகர்கள் மனோஜ்-மகத் இந்த மோதல் விவகாரம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல நடிகை டாப்ஸியை யார் காதலிப்பது என்பதில்தான் இவர்களுக்குள் மோதல் நடந்தது.

இந்த சண்டை நடந்தபோது பலரும் அருகில் இருந்துள்ளனர். ஆனால் மகத்தோ, ஒண்ணும் தெரியாத சின்னப் பிள்ளை மாதிரி வாக்குமூலம் கொடுத்துள்ளார். நான் சும்மா நின்று கொண்டிருந்தேன். மனோஜ் தன் நண்பர்களுடன் வந்து அடித்தார் என எழுதிக் கொடுத்துள்ளார்.

மேலும் அந்த புகாரில் நடிகை டாப்ஸி காதல் பிரச்சினை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை

 

கவிஞர் வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர் - கருணாநிதி வெளியிடுகிறார்

Karunanidhi Release Vairamuthu Moondram Ulaga Por

சென்னை: கவிஞர் வைரமுத்து எழுதிய மூன்றாம் உலகப் போர் நூலை அவரது பிறந்த நாளன்று வெளியிடுகிறார் திமுக தலைவர் மு கருணாநிதி.

ஜூலை 13-ம் தேதி நடக்கும இந்த விழாவில் எழுத்தாளர் ஜெயகாந்தன், நடிகர் கமல்ஹாஸன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

கவிஞர் வைரமுத்து 'மூன்றாம் உலகப்போர்' என்ற தொடரை கடந்த ஓராண்டுக்கும் மேல் எழுதி வந்தார். புவி வெப்பமாதல், உலகமயமாதல் என்ற உலகத்துயரங்கள் ஒரு கிராமத்து விவசாயி வாழ்வில் ஏற்படும் தாக்கங்களை இந்த நூலில் சித்தரித்திருந்தார் வைரமுத்து.

இந்த நூல் வெளியீட்டு விழா வரும் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது. கருணாநிதி முதல்வர் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தனது அனைத்து நிகழ்வுகளையும் அவரை முன்னிறுத்தி நடத்துவதே வைரமுத்துவின் வழக்கம். எந்த சூழலிலும் அதை மாற்றிக் கொண்டதில்லை.

இந்த விழாவிற்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதிதான் தலைமை தாங்கி, நூலை வெளியிடுகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தன் நூலின் முதல் பிரதியை பெற்றுக்கொள்கிறார். நடிகர் கமலஹாசன் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசுகிறார்.

வாசகர் வார்த்தைகள் என்ற தலைப்பில் 10 வாசகர்கள், நூலைப் பற்றி உரையாற்றுகின்றனர். இறுதியில் கவிஞர் வைரமுத்து ஏற்புரையாற்றுகிறார். விழாவில் மூன்றாம் உலகப்போரும், புவி வெப்பமாதலும் என்ற குறும்படம் திரையிடப்பட உள்ளது.

நூல் வெளியீட்டு நாளான ஜுலை 13-ந் தேதி, கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாள். எனவே விழாவிற்கு முன்னதாக அன்று காலை 8 மணிக்கு கடற்கரையில் உள்ள கவிஞர்களின் சிலைகளுக்கு, வெற்றித் தமிழர் பேரவையினரோடு சென்று மலரஞ்சலி செலுத்துகிறார். கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். பின்னர் தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.