மும்பை: நடிகை ஸ்ரீதேவியின் மும்பை வீட்டில் திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகை ஸ்ரீதேவி தனது கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர், மகள்கள் ஜான்வி, குஷி மற்றும் மாமியாருடன் மும்பை அந்தேரி பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று ஸ்ரீதேவியின் வீட்டில் திடீர் என்று தீப்பிடித்தது. அவரது படுக்கை அறையில் மின்கசிவு ஏற்பட்டது தான் தீ விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த விபத்தில் ஸ்ரீதேவியின் படுக்கை அறை எரிந்து நாசமாகிவிட்டது. தீ விபத்து நடந்தபோது வீட்டில் ஸ்ரீதேவி, அவரது மகள்கள் மற்றும் மாமியார் இருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.
இதற்கிடையே ஸ்ரீதேவியின் மாமியார் போனி கபூரின் தம்பி சஞ்சய் கபூர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஸ்ரீதேவியின் குடும்பத்தார் நேற்றை இரவை ஹோட்டலில் கழித்தனர்.