கலைப்புலி தாணுவுக்கு விஜய் பண உதவி செய்தாரா?

Did Vijay Helped Kalaipuli Thanu Financially

துப்பாக்கி திரைப்பட சூட்டிங்கின் போது தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவுக்கு பண நெருக்கடி ஏற்பட்டதாம் அப்போது படத்தின் ஹீரோ விஜய்தான் பண உதவி செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரமாண்டமான தயாரிப்பாளர் என்று பெயரெடுத்தவர் எஸ்.தாணு. விளம்பரங்களுக்கு அவர் கொடுத்த முக்கியத்துவம் இன்று வரை யாராலும் முறியடிக்கப்படவில்லை. யார் படத்தில் தொடங்கி இப்போது வெளிவர இருக்கும் துப்பாக்கி படம் வரை அவரது பிரமாண்டம் தொடர்கிறது.

துப்பாக்கிப் படம் தலைப்பில் ஏற்பட்ட சிக்கலினால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இப்போது அந்த சிக்கல் தீர்ந்துவிட்டது. இருப்பினும் படத்தை பற்றி வெளிவராத தகவல் à®'ன்று இருக்கிறதாம்.

துப்பாக்கி படம் துவங்கிய பிறகு தாணுவுக்கு நிதி நெருக்கடி வந்ததாம். தாணுவின் நிலையை புரிந்து கொண்டு அவரை வரவழைத்து ரூபாய் எதுவும் நிரப்பப்படாத காசோலை à®'ன்றை கொடுத்து எவ்வளவு வேண்டுமோ எடுத்து கொள்ளுங்கள் என்றாராம். இதை சற்றும் எதிர்பார்க்கவில்லையாம் தாணு.

இது உண்மைதானா என்று தாணுவைக் கேட்டால் ஆம் என்கிறார் அவர். ரஜினியைப் போல விஜய்யும் தயாரிப்பாளரின் சிரமத்தை உணர்ந்து உதவிபுரியும் மனம் கொண்டவர் என்றார் தாணு.

சிவாஜி படத்தில் ரஜினி நடித்த போது வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே வாங்கி கொண்டு நடித்தார். படம் வெளிவந்து வெற்றி பெற்ற பிறகுதான் தனக்குரிய சம்பளத்தை பெற்றுக்கொண்டார். அதேபோல விஜய்யும் தனக்கு உதவி புரிந்துள்ளார் என்று சொல்லாமல் சொல்கிறார் தாணு.

 

அனிருத் விருந்தை புறக்கணித்த ஆண்ட்ரியா

இசையமைப்பாளர் அனிருத் அளித்த பிறந்தநாள் விருந்தை நடிகை ஆண்ட்ரியா புறக்கணித்துள்ள சம்பவம்தான் இன்றைக்கு கோலிவுட் உலகில் ஹாட் டாபிக் ஆக பேசப்படுகிறது.

தனுசின் ‘3' படத்துக்கு இசையமைத்தவர் அனிருத். இப்படத்தில் இடம்பெற்ற ‘கொலை வெறி' பாடல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார்.

andrea boycotts aniruth party
Close
 
அதை எல்லாம் விட அனிருத்தும் ஆண்ட்ரீயாவும் நெருக்கமாக உதட்டுடன் உதடு முத்தமிடும் படங்கள் இணையதளத்தில் வெளியானதால் உலகம் முழுவதும் இருவரின் புகழ் பரவியது.

இத்தனைக்கும் அனிருத்தைவிட ஆண்ட்ரியா வயதில் மூத்தவர். விருந்து நிகழ்ச்சியொன்றில் சக நடிகர் à®'ருவர் இந்த முத்த காட்சி படங்களை அவர்களுக்கு தெரியாமல் படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்டதாக கூறப்பட்டது. இருவரும் இதனை மறுக்கவில்லை. முத்தகாட்சி படங்கள் வெளியானதால் இருவரும் அதிர்ச்சியடைந்தனர். இது உண்மைதான் என்று இருவரும் à®'த்துக்கொண்டனர்

கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் அனிருத் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதில் நெருங்கிய நடிகர், நடிகைகள் பலர் கலந்து கொண்டனர். சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, ஜெய், சோனியா அகர்வால், ஐஸ்வர்யா, லட்சுமி மஞ்சு, சவுந்தர்யா, சுசித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர். நெருங்கிய உறவினர்களும் பங்கேற்றார்கள். அனிருத் ‘கேக்' வெட்டினர். பின்னர் விருந்து நிகழ்ச்சி நடந்தது.

இந்த விருந்து நிகழ்ச்சியில் நடிகை ஆண்ட்ரியா கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். முத்தகாட்சி படங்கள் வெளியானதால் அனிருத் மேல் கோபமாக இருப்பதாகவும் அதனால்தான் விருந்துக்கு அவர் வரவில்லை என்றும் கூறப்பட்டது.

 

தமிழர்களுக்கு உதவாதவரா இளையராஜா?-சீமானின் பேச்சுக்கு புலம்பெயர் தமிழர் பதிலடி!

Eelam Tamils Condemn Seeman His Attack

புதுக்கோட்டை : தமிழ் சொந்தங்கள் செத்து விழுந்தபோது, அவர்களுக்கு எந்த விதத்திலும் உதவாத இளையராஜா, வெளிநாடுகளில் கச்சேரி நடத்தப் போவது வருத்தமாக உள்ளது என சீமான் குற்றம்சாட்டியுள்ளார். சீமானின் இந்தப் பேச்சு உலகெங்கிலும் உள்ள தமிழர்களையும், ராஜாவின் ரசிகர்களையும் கொதிப்புக்குள்ளாக்கியுள்ளது.

2016 ல் புதிய அரசியல் வரலாறு படைப்போம் என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் நடந்தது.

கூட்டத்தில் கட்சியின் தலைமை à®'ருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில் இளையராஜாவை நேரடியாக தாக்கிப் பேசினார்.

அவர் பேசுகையில், "முள்ளிவாய்க்காலில் கடைசி நேரத்தில் நடேசன் வெள்ளைக் கொடியுடன் போன போது அவரை சுட்டு கொன்றார்கள். இதை பார்த்து சிங்களப் பெண்ணான நடேசனின் மனைவி சிங்களத்தில் அவர்களிடம் நியாயம் கேட்டார். அந்த பெண்ணையும் 20 சிங்கள ராணுவத்தினர் கற்பழித்துக் கொன்றார்கள்.

இத்தனை காலமும் வெளிநாடுகளுக்கு சென்று கச்சேரி நடத்தாத இசையமைப்பாளர் இளையராஜா இப்போது தமிழனின் விடுதலை நெருப்பை நீர்த்துப் போகச் செய்ய நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகு நவம்பர் 3 கனடா செல்கிறார்.

தமிழ் சொந்தங்கள் செத்து விழுந்த போது உணவுக்கோ, மருந்துக்கோ, துணிக்கோ இந்த இளையராஜா கச்சேரி நடத்தி உதவி செய்ய முன்வரவில்லை. ஆனால் இப்போது போவது வருத்தம் அளிக்கிறது," என்றார்.

ரசிகர்கள் கோபம்...

சீமானின் பேச்சை பல லட்சம் ஈழத் தமிழர்களே கண்டிக்க ஆரம்பித்துள்ளனர். சீமானின் பேச்சு குறித்து தங்கள் எதிர்வினையை அவருக்கு வெளிப்படையான கடிதமாகவே எழுதியுள்ளனர்.

அந்தக் கடிதத்தில், "இசை கேட்டால் விடுதலை உணர்வு நீர்த்துப் போகுமா... அதுவும் இத்தனை காலமும் தமிழனின் நாடி நரம்புகளில் ரத்தமாக பாய்ந்து கொண்டிருக்கும் à®'ரு ஜீவ இசைக்குச் சொந்தக்காரரை எப்படி இப்படியெல்லாம் வாய்க்கு வந்தபடி பேச மனம் வருகிறது அரசியல்வாதிகளால்? சீமான் அவர்களே.. ராஜாவின் இசை தமிழர் சொத்து. அதை ஈழத் தமிழர்களின் பேரால் கொச்சைப் படுத்த வேண்டாம். மாவீரர் நாளை உங்கள் தனிப்பட்ட அரசியலுக்கு பயன்படுத்தவேண்டாம்,' என்று தெரிவித்துள்ளனர்.

 

நான் ஈ, சுந்தரபாண்டியன், பாகன் சேட்டிலைட் உரிமையை கைப்பற்றிய சன் டிவி

Sun Tv Gears Up Holiday Season

விடுமுறை தினங்களில் à®'ளிபரப்புவதற்காக நான் ஈ, மிரட்டல், கலகலப்பு, நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம் போன்ற திரைப்படங்களின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி பெற்றுள்ளது.

விடுமுறை தினம் வந்தாலே போதும் சிறப்பு நிகழ்ச்சிகளையும், நடிகைகளின் பேட்டி, சிறப்பு திறப்படங்கள் போன்றவைகளை à®'ளிபரப்பி விளம்பரங்கள் மூலம் கல்லா கட்டிவிடுவார்கள். இதில் புத்தம் புதுப்படங்களை யார் à®'ளிபரப்புவது என்ற போட்டி வேறு ஏற்படும்.

à®'ரே நடிகர் நடித்த படத்தை இரண்டு மூன்று சேனல்களில் போட்டு மக்களை குழப்புவார்கள். இனி தொடர்ந்து பண்டிகை விடுமுறைக் காலம் வர உள்ளதால் சன் டிவி அதற்கேற்ப ரசிகர்களை கவரும் வகையில் இப்பொழுது இருந்தே நிகழ்ச்சிகளை தயாரிக்க தொடங்கிவிட்டனராம்.

ஆயுதபூஜை, விஜயதசமி, தீபாவளி, கிருஸ்துமஸ், பொங்கல் என விடுமுறைக் காலங்கள் தொடர்ந்து வர உள்ளன. அதற்கேற்ப புத்தம் புதுப்படங்களின் சேட்டிலைட் உரிமையை சத்தமில்லாமல் கைப்பற்றியுள்ளது.

கலகலப்பு, நான் ஈ, நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம், மிரட்டல், சுந்தரபாண்டியன், பாகன், பிட்ஸா போன்ற பிரபல படங்கள் சன் டிவி வசம் உள்ளதால் வரிசையாக விடுமுறை தினங்களில் அவற்றை à®'ளிபரப்ப முடிவு செய்துள்ளது சன் டிவி. இதன் மூலம் அதிக அளவில் விளம்பரங்களை பெற முடியும் என்றும் எதிர்பார்க்கின்றனர் சன்டிவி நிர்வாகத்தினர்.

 

"ஐ" ஷூட்டிங்கில் லீவ் கேட்கும் எமி

Amy excited to visit china

நண்பன் படத்தையடுத்து பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் படம் ஐ. இதில் விக்ரம், எமி ஜாக்சன் ஜோடி. இப்படத்தில் பலவித கெட்அப்புகளில் விக்ரம் தோன்றுகிறார். சுரேஷ்கோபி, ராம்குமார், சந்தானம் உள்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். சமீபகாலமாக சென்னை மற்றும் சுற்றுப்புற இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. அடுத்த கட்ட ஷெட்யூல் சீனாவில் நடக்கிறது. இதற்காக விக்ரம், எமி ஜாக்சன், சந்தானம், ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் உள்ளிட்டோருடன் சீனா செல்கிறார் ஷங்கர்.

இந்நிலையில் தனக்கு சீனா ரொம்ப பிடிக்கும் என ஹீரோயின் எமி ஜாக்சன் கூறியுள்ளார். 40 நாட்கள் சீனாவில் நடக்கும் ஷூட்டிங்கில், இரண்டு நாட்கள் லீவ் கேட்டு, சீனாவை சுற்றி பார்க்க போவதாக எமி கூறியுள்ளார். அங்குள்ள 'Zhangjiajie National Park' சுற்றி பார்க்க ஆசை என்று அவர் கூறியுள்ளார்.
 

எஸ்ரா சற்குணம் சொன்னதால் 'நீர்ப்பறவை' பாடல் வரிகள் நீக்கம்!

Neerparavai Lyrics Edited   

பேராயர் எஸ்ரா சற்குணம் கேட்டுக் கொண்டதால், நீர்ப்பறவை படத்திலிருந்து சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கப்பட்டதாக இயக்குநர் சீனு ராமசாமி அறிவித்துள்ளார்.

'நீர்ப்பறவை' என்ற படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் பற... பற... என்ற பாடலில் இடம்பெற்ற வரிகளுக்கு கிறிஸ்தவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

பைபிள் வாசகங்களை காதல் பாடலில் சேர்த்ததற்காக, அந்தப் பாடலை எழுதிய கவிஞர் வைரமுத்து வீட்டின் எதிரில் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதுகுறித்து டைரக்டர் சீனுராமசாமி வெளியிட்ட அறிக்கையில், "பேராயர் எஸ்றா சற்குணம் வேண்டுகோளை ஏற்று ‘நீர்ப்பறவை' திரைப்படத்தில் ‘பற... பற..' என்கிற பாடலில் இடம் பெற்ற ‘ஸ்தோத்திரம் மற்றும் சத்தியமும் ஜீவனுமாய் நிலைக்கிறேன்...' என்கிற சொற்களை நீக்குகிறோம்.

சிறுபான்மை மக்களின் அன்பான வாழ்க்கையை சொல்லும் திரைப்படமாக ‘நீர்ப்பறவை' இருக்கும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இந்திய உணவுகளை ருசிக்க ஆசைப்படும் ஹாலிவுட் நடிகை

Christina Hendricks Is Passionate About Indian Food

ஹாலிவுட் நடிகை கிறிஸ்டினா ஹெண்ட்ரிக்ஸ்க்கு இந்திய உணவை ருசிக்க வேண்டும் என்று சமீபகாலமாக ஆர்வம் ஏற்பட்டிருக்கிறதாம்.

இந்திய உணவின் சுவையும் மணமும் உலக அளவில் புகழ் பெற்றவை. இட்லி சாம்பார் என்றாலும் சரி அசைவ உணவுகள் என்றாலும் சரி அதன் சுவைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.

பாலிவுட் நடிகை கிறிஸ்டினா ஹெண்டிரிக்ஸ்சும் இந்திய உணவின் சுவைக்கு அடிமையாகிவிட்டார் போல. இந்திய உணவுகள் மீது சமீப காலமாக அதிக ஆர்வம் ஏற்பட்டு வருகிறதாம் அவருக்கு. இங்கிலாந்தைச் சேர்ந்தவரான இவர் பிர்மிங்காம் நகரில் உள்ள பல்டி டிரையாங்கில் என்ற இந்திய உணவகத்திற்குப் போய் இந்திய உணவுகளை ஒரு கை பார்க்கத் திட்டமிட்டுள்ளாராம்.

"எனக்கு இந்திய உணவுகள் என்றால் ரொம்பப் பிரியம். ஆனால் இதுவரை இந்திய உணவுகளை சாப்பிட வாய்ப்பு கிடைக்கவில்லை.லண்டனுக்கு வருவதற்கு முன்பு நான் சிறு நகரங்களில் வசித்ததால் இந்திய உணவுகளை சாப்பிடும் வாய்ப்பு கிட்டவில்லை. லண்டனுக்கு வந்த பிறகுதான் நிறைய இந்திய உணவகங்கள் குறித்து எனக்குத் தெரிய வந்தது. லாஸ் ஏஞ்செலஸில் கூட நல்ல இந்திய உணவகம் இல்லை. பல்டி டிரையாங்கில் குறித்து கேள்விப்பட்டேன். அங்கு போய் சாப்பிட ஆர்வமாக உள்ளேன்" என்று கிறிஸ்டினா கூறியுள்ளார்.

பாலிவுட் நடிகர் டாம் குரூஸ் ஒருமுறை இந்திய உணவான சிக்கன் டிக்காவின் சுவை குறித்து கிலாகித்து கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நீர்ப்பறவை பாடல் வரிகள் நீக்கம்

Few words removed from neerparavai songs

உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ள படம் 'நீர்ப்பறவை'. 'நீர்ப்பறவை'. விஷ்ணு, சுனேனா ஜோடியாக நடித்துள்ளனர். விரைவில் திரைக்கு வர உள்ள இந்த படத்தின் பாடல் வரியில் கிறஸ்துவ வரிகள் இடம்பெறுகின்றன. இந்த வரிகளுக்கு கிறஸ்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினும், இயக்குனர் சீனுராமசாமியும் கிறஸ்தவ அமைப்பனரின் கோரிக்கைகள் ஏற்று அந்த வரிகளை நீக்கியது.
 

அக்.14 முதல் அடுத்த பட ஷூட்டிங்

Vikram's film starts on Oct 24

'எங்கேயும் எப்போதும்' பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சரவணன் இயக்கும் படத்தில், விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்க இருக்கிறார். என்ற தகவல் வெளியாகியுள்ளது. 'கும்கி' தீபாவளிக்கு திரைக்கு வர உள்ள நிலையில, விக்ரம் பிரபுவிற்கு நிறைய பட வாய்ப்புகள் தேடி வருகின்றன. முதலில் ஆர்யாவை வைத்து படம் இயக்க திட்டமிட்டு இரந்த இயக்குனர் சரவணன், ஆர்யாவின் கால்ஷீட் இல்லாததால் விஷாலிடம் கதை கூறினார். தற்போது விஷாலும் சுந்தர்.சி படத்தில் பிசியாக இருப்பதால் அவரது படத்தில் விஷாலும் நடிக்காமல் போனது. கடைசியாக சரவணன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கயிருக்கிறார், அந்த படத்தை இயக்குனர் லிங்குசாமி தயாரிக்க உள்ளார். இன்னும் பெயரிடாத இந்த படத்தின் ஷூட்டிங் வருகிற 24ந் தேதி(விஜய தசமி) அன்று ரிலீஸ் ஆகிறது.
 

பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் சேட்டை

Settai will release on pongal

யுடிவி தயாரித்துள்ள படம் 'சேட்டை'. ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி அமரன், ஹன்சிகா மற்றும் அஞ்சலி நடித்துள்ள இந்த படத்தை கண்ணன் இயக்கியுள்ளார். தமன் இசையமைத்துள்ளார். தற்போது படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு படு வேகமாக நடந்து வருகிறது. இதனையடுத்து படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக் குழு தெரிவித்துள்ளது. இம்ரான் கான் நடித்த 'Delhi Belly' இந்தி படத்தின் தமிழ் ரீமேக் இந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

ஆடியோ விற்பனையில் அசத்தும் "போடா போடி"

Audio sales is Magnificent 'poda podi'

தீபாவளிக்கு வெளிவரும் படங்களில் சிம்புவின் 'போடா போடி' ஒன்று. படம் தாமதம் ஆனாலும், படத்தின் ஆடியோ தயாரிப்பாளர்களை அதிக சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் வாங்கியுள்ளது. முதலில் படத்தின் ஒரு பாடலை வெளியிட்ட இந்த நிறுவனம், வரவேற்பு அதிகமானதால் பாடல் வெளியீட்டு விழா நடத்தியது. தற்போது தீபாவளிக்கு வெளி வர இருக்கும் படங்களின் ஆடியோ விற்பனையை விட, சிம்புவின் 'போடா போடி' விற்பனையில் அசத்தி வருகிறதாம். மேலும், ஆடியோ அதிகம் வேண்டும் என்று எல்லா ஊர்களிலிருந்தும் ஏகப்பட்ட போன் கால்களாம். அதுமட்டுமின்றி, 'நைட் கிளப்', 'பார்ட்டி' நடைபெறும் இடங்களில் இந்த படத்தின் பாடல்கள்தான் கேட்கிறது.
 

கஸ்தூரி ராஜா மீது பைனான்சியர் புகார்

complaint on kasturi raja

சினிமா பைனான்சியரான முகன்சந்த் போத்ரா என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் அளித்தார். அவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: 20 வருடங்களாக பைனான்சியராக உள்ளேன். ரத்தின கற்கள் மதிப்பீடு செய்யும் தொழிலும் செய்கிறேன். இயக்குனர் கஸ்தூரி ராஜா பல மாதங்களுக்கு முன்னர் என்னிடம் பல தவணைகளில் 65 லட்சம் ரூபாய் கடன் பெற்றார். தான் பணம் திருப்பித் தராத பட்சத்தில் தன் சம்பந்தி ரஜினி அல்லது மகன்கள் தனுஷ், இயக்குனர் செல்வராகவன் தருவார்கள் என்று உறுதி சான்றிதழ் எழுதி கொடுத்தார். ஆனால், உறுதி அளித்தபடி கஸ்தூரிராஜா பணத்தை திரும்ப தரவில்லை. பின்னர், ஒரு செக் கொடுத்தார். ஆனால், அதில், போதிய பணம் இல்லாததால் திரும்பி வந்து விட்டது. இந்த தகவலை தெரிவித்து பணத்தை திருப்பிக் கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே, என்னை ஏமாற்றி, கொலை மிரட்டல் விடுத்த கஸ்தூரி ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
 

"சொல்ல மாட்டேன்" கதை என்ன?

What's the story for solla matten?

பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம், 'சொல்ல மாட்டேன்'. புதுமுகங்கள் சக்தி, ஜிஸ்மி, ஆதிரா, ஆதித்யா, ஜித்தன் நடிக்கின்றனர். என்.பி.இஸ்மாயில் இயக்குகிறார். ஒளிப்பதிவு, பாலு. இசை, ராஜ்மோகன். இதன் பாடலை ஆர்.சுந்தர்ராஜன் வெளியிட, ஆர்.கே.செல்வமணி பெற்றார்.  பிறகு நிருபர்களிடம் என்.பி.இஸ்மாயில் கூறும்போது, 'சுற்றுலா விடுதியில் தங்கும் மாணவி, படுகொலை செய்யப்படுகிறார். பிறகு ஆவியாக வந்து, கொடூர செயல்களில் ஈடுபடுபவர்களை எப்படி பழிவாங்குகிறாள் என்பது கதை' என்றார்.
 

இருமடங்கு செலவான ஷூட்டிங்

Create the double shooting trial

ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒத்திகை பார்த்ததால் இருமடங்கு செலவானதுடன் ஷூட்டிங் நாட்கள் அதிகரித்தது. 'விருமாண்டி' படத்தில் கமலிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் கே.சி.ரவிதேவன். இவர் சி.எஸ்.முகேசனுடன் இணைந்து தயாரிக்கும் படம் 'கள்ளத் துப்பாக்கி'. இதுபற்றி ரவிதேவன் கூறியதாவது: படிக்கும் மாணவர்களிடம் ஒரு துப்பாக்கி கிடைக்கிறது. அதைவைத்து அவர்கள் என்னென்ன செய்கிறார்கள் என்பதை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லும் கதை. விக்கி, விஜித், பிரபாகரன், தமிழ்செல்வன், குட்டி ஆனந்த் ஹீரோக்கள். கேரளாவை சேர்ந்த ஷாவந்திகா ஹீரோயினாக அறிமுகமாகிறார். மற்றும் குருபகவான், சம்பத்ராம், சிந்தியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்காதது ஏன் என்கிறார்கள். தயாரிப்பு நுணுக்கங்களை தெரிந்துகொள்வதற்காக இயக்கும்பொறுப்பு புது இயக்குனர் லோகியாஸிடம் தரப்பட்டது. புதுமுகங்கள் நடிப்பதால் லொகேஷனிலேயே ஒத்திகை பார்த்து படப்பிடிப்பு நடத்தினோம். 60 நாட்கள் திட்டமிட்டிருந்த ஷூட்டிங் இதனால் 128 நாட்கள் ஆனது. இரு மடங்கு செலவானாலும் காட்சிகள் எதிர்பார்த்தபடி வந்திருக்கிறது. மேலும் இன்டர் கட் என்ற முறையில் ஒரு ரிலீல் பிலிமுக்குள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக காட்சிகள் படமாக்கப்பட்டது. ஒளிப்பதிவு ஏ.வி.வசந்த். இசை எஸ்.கே.பாலசந்திரன். இவ்வாறு ரவிதேவன் கூறினார்.
 

பிரியங்கா-கேத்ரினா திடீர் மோதல்

Fight between priyanka and katrina

யாரிடம் முதலில் இயக்குனர் கதை சொன்னார் என்ற பிரச்னையில் பிரியங்கா, கேத்ரினாவுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அலி அப்பாஸ் ஜாபர் இயக்கும் இந்தி படம் 'குண்டே'. அர்ஜுன் கபூர், ரன்வீர் சிங் ஹீரோக்கள். இதில் ஹீரோயினாக நடிப்பது யார் என்பதில் போட்டி ஏற்பட்டது. முதலில் இக்கதையை கேத்ரினாவிடம் இயக்குனர் சொன்னார். கதை கேட்டு பிடித்துவிடவே கால்ஷீட் பற்றி பிறகு பேசலாம் என்று கேத்ரினா கூறி இருந்தார். குறிப்பிட்ட மாதங்களில் கால்ஷீட் வேண்டும் என்று இயக்குனர் கேட்டார். ஆனால் அப்போது ஹிருத்திக் ரோஷன் படத்திற்காக கால்ஷீட் ஒதுக்கி தந்திருப்பதாக கேத்ரினா கூறினார்.

இதையடுத்து மவுனமாக திரும்பிய அலி அப்பாஸ் நேராக பிரியங்கா சோப்ராவிடம் சென்று கதை கூறினார். அவருக்கு கதை பிடித்துவிடவே உடனடியாக கால்ஷீட் ஒதுக்கி தந்தார். அத்துடன், 'Ôஇப்படத்தில் நடிக்க முதலில் என்னைத்தான் இயக்குனர் கேட்டிருந்தார். ஆனால் கால்ஷீட் பிரச்னை இருந்ததால் உடனடியாக ஒப்புக்கொள்ள முடியவில்லை. தற்போது அதை அட்ஜெட் செய்துவிட்டேன். எனவே நடிக்க ஒப்புக்கொண்டேன்" என்று கூறினார் பிரியங்கா. இதைக்கேட்டு கோபம் அடைந்தார் கேத்ரினா. 'Ôகுண்டே படத்தில் நடிக்க முதலில் என்னிடம்தான் இயக்குனர் கால்ஷீட் கேட்டார். என்னால் கால்ஷீட் ஒதுக்கி தர முடியாததால் அதில் நடிக்கவில்லை. ஆனால் தன்னிடம்தான் முதலில் கதையை சொன்னதுபோல் வேறு ஹீரோயின் (பிரியங்கா) சொல்கிறார். அதை ஏற்க முடியாது" என கேத்ரினா பதிலடி தந்துள்ளார். யாரிடம் கதை முதலில் சொல்லப்பட்டது என்பதில் பிரியங்கா, கேத்ரினாவுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

தீபாவளிக்கு 5 படங்கள்

5 films for Diwali

வழக்கமாக தீபாளிக்கு பத்து முதல் 12 படங்கள் வரை வெளிவரும். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் குறைந்த அளவிலான படங்களே வெளிவருகிறது. இந்த ஆண்டு 5 படங்கள் வெளிவருவதாக முறைப்படி அறிவித்துள்ளன. இதில், விஜய், காஜல் அகர்வால் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ள 'துப்பாக்கி'யும், சிம்பு, வரலட்சுமி நடிக்கும் 'போடா போடி'யும் பெரிய படங்கள். இதுதவிர மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பிரபு சாலமனின் 'கும்கி'யும் வெளிவருகிறது. இதில் பிரபு மகன் விக்ரம் பிரபு நடித்திருப்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது. புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ள 'கள்ளத்துப்பாக்கி', மன்சூர் அலிகான் நடித்து தயாரிக்கும் 'லொள்ளு தாதா பராக் பராக்' ஆகிய படங்களும் வெளிவருகின்றன. இந்த தீபாவளிக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஜினியின் 'கோச்சடையான்', கமலின் 'விஸ்வரூபம்' ஆகிய படங்கள் தள்ளிப்போனதில் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
 

அழிந்துவரும் இனங்கள் பட்டியலில் தயாரிப்பாளர்

Producer in the list of Endangered Species

தமிழ் சினிமாவில் இயக்குனர்கள், படத் தயாரிப்பாளர்களாக மாறுவது புதிதில்லை. ஷங்கர், அமீர், லிங்குசாமி, சேரன், ஏ.ஆர்.முருகதாஸ், தங்கர்பச்சான், சசிகுமார் உட்பட பல இயக்குனர்கள் தயாரிப்பாளர்களாக உள்ளனர். இப்போது இந்த போக்கு அதிகரித்து வருகிறது. பிரபு சாலமன், 'மைனா' படத்தை தனது நண்பர் ஜான் மேக்ஸுடன் இணைந்து தயாரித்தார். இந்தப் படம் ஹிட்டானது. இதையடுத்து தன்னிடம் உதவி இயக்குனராக இருந்த அன்பழகன் இயக்கத்தில் 'சாட்டை' படத்தை தயாரித்தார். இதுவும் ஹிட்டானது. இயக்குனர் எழில் தனது நண்பர்களுடன் இணைந்து, 'மனம் கொத்திப் பறவை' படத்தை தயாரித்து இயக்கினார்.

அடுத்து, 'இது பூக்களின் தேசம்' என்ற படத்தை தயாரித்து இயக்குகிறார். பாண்டிராஜ், 'மெரினா' படத்தை தயாரித்து இயக்கினார். இந்தப் படம் ஹிட்டானதையடுத்து, 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' என்ற படத்தை மதனுடன் இணைந்து தயாரிக்கிறார். மேலும் இரண்டு படங்களைத் தயாரிக்க உள்ளார். இதே போல சுசீந்திரன், 'ஆதலால் காதல் செய்வீர்' படத்தை தயாரித்து இயக்கி உள்ளார்.  ஜெயம் ரவி, ஜீவா இணைந்து நடிக்கும் படத்தை ஜனநாதன் தயாரித்து இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. வெற்றிமாறன், 'தேசிய நெடுஞ்சாலை' படத்தை தயாரித்து வருகிறார். வெங்கட் பிரபு தனது தம்பி, பிரேம்ஜி அமரன் நடிக்கும் படத்தை தயாரிக்க உள்ளார். இயக்குனர் சற்குணம், 'மஞ்சள் பை' என்ற படத்தை தயாரிக்க இருப்பதாகக் கூறியுள்ளார். சுப்பரமணிய சிவா, 'உலோகம்' என்ற படத்தை நண்பர்களுடன் தயாரித்து இயக்குகிறார். மேலும் சீமான், செல்வராகவன், சிம்புதேவன், பாலாஜி சக்திவேல், வசந்தபாலன் போன்றோரும் படம் தயாரித்து இயக்க இருக்கின்றனர். இன்னும் பல இயக்குனர்களும் தயாரிப்பில் ஈடுபட உள்ளதாகக் கூறப்படுகிறது.

'மெரினா' பட ஹிட்டுக்குப் பிறகு பல இயக்குனர்களுக்கு படம் தயாரிப்பதில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. என்னிடம் சில இயக்குனர்கள் தயாரிப்பது பற்றி கேட்டார்கள். அவர்களுக்கு நம்பிக்கை அளித்தேன். இப்போது அவர்கள் படம் தயாரித்து வருகின்றனர்' என்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். 'சேட்டிலைட் உட்பட இன்றைய சினிமா பிசினஸ் கொஞ்சம் ஆரோக்கியமாக இருக்கிறது. சின்ன ஹீரோவை வைத்து மூன்று கோடியில் படம் எடுத்து, அதை அஞ்சு கோடிக்கு விற்க முடிகிறது. பெரிய ஹீரோவை வைத்து ஒரு வருடத்துக்கு மேல் உழைத்து படம் எடுத்து ஒன்றறை கோடி ரூபாயை இயக்குனர் ஒருவர் சம்பளமாக வாங்குவதை விட ஆறு மாதத்தில் இதை விட அதிகம் சம்பளம் பார்க்க முடியும்' என்கிறார் இயக்குனர் ஒருவர்.

'இயக்குனர்கள் தயாரிப்பாளர்களாக மாறுவது ஆரோக்கியமான விஷயம்தான்' என்கிறார் இயக்குனர் சங்கப் பொருளாளர் ஜனநாதன். அவர் மேலும் கூறும்போது, 'சினிமாவில் இரண்டு பேர் முக்கியம். ஒருவர் பணம் போடுபவர். இன்னொருவர் படம் எடுப்பவர். பணம் போட்டவருக்கு லாபம் வேண்டும். படம் எடுத்தவருக்கு வெற்றி வேண்டும். இதில் என்னவென்றால் பைனான்சியர் ஒருவர் தனக்குத் தெரிந்த தயாரிப்பாளருக்கு பணம் கொடுப்பார். அவர் மூலமாக, படம் இயக்குவார் இயக்குனர். காட்சி ஒன்றுக்கு அதிகப் பணம் செலவழித்தால் நன்றாக இருக்கும் என்பார் இயக்குனர். மறுப்பார் தயாரிப்பாளர். அதே போல வியாபாரத்துக்காக குத்துபாடல் வைக்கலாம் என்பார் தயாரிப்பாளர். இயக்குனர் வேண்டாம் என்பார். இருவருக்கும் கருத்து மோதல்கள் உருவாகும். மன வருத்தத்தோடுதான் படத்தை முடிப்பார்கள். அல்லது மனதை தேற்றிக்கொண்டு முடிப்பார்கள். இப்படித்தான் நடந்துவருகிறது. ஆனால், இப்போது பைனான்சியர்கள் தயாரிப்பாளர்களிடம் பணத்தை கொடுக்காமல் நேரடியாக படைப்பாளியிடம் கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அதனால்தான் ட்வென்டித் செஞ்சுரி பாக்ஸ் என்ற ஹாலிவுட் நிறுவனம் இயக்குனராக இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸுடன் ஒப்பந்தம் போடுகிறது. யுடிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் மிஷ்கின் போன்ற இயக்குனர்களுடன் ஒப்பந்தம் போடுகிறது' என்றார்.

"மாற்றம் மட்டுமே அழிவற்றது. மற்றதெல்லாம் எவ்வளவு ஜொலித்தாலும் காலவெள்ளத்தின் ஓட்டத்தில் மங்கி படிப்படியாக மறைந்துபோகும் என்பது நிதர்சனம். ஒவ்வொரு ஆண்டும் பலப்பல மொழிகள், இனங்கள், விலங்குகள், பறவைகள் அழிந்துவருவதை ஐக்கிய நாடுகள் சபை பட்டியல் இடுகிறது. தயாரிப்பாளர் என்ற பெயரில் வலம் வந்த இனம் தமிழ் திரையுலகில் இருந்து அழிந்துவிடுமோ என்ற கவலையை தோற்றுவித்திருக்கிறது லேட்டஸ்ட் டிரண்ட்."
 

மாணவி வேடம் "போர்" அடிக்கவில்லை

Student role is not boring

'தொடர்ந்து மாணவி வேடத்தில் நடிப்பது போரடிக்கவில்லை' என்றார் ஓவியா. 'களவாணி' படத்தில் அறிமுகமானவர் ஓவியா. இதில் விமல் ஜோடியாக நடித்த இவர் பள்ளி மாணவி வேடம் ஏற்றிருந்தார். இதையடுத்து 'சில்லுனு ஒரு சந்திப்பு' என்ற படத்தில் மீண்டும் விமல் ஜோடியாகவும் பள்ளி மாணவியாகவும் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: மீண்டும் மாணவியாக நடிக்க வந்துவிட்டேன். கோலிவுட்டில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து ஹிட்டானால் தொடர்ந்து அதே வேடங்கள் வருவது வழக்கம். Ôகளவாணி'யில் மாணவி வேடம் ஹிட்டானதையடுத்து அடுத்தடுத்த படங்களில் அதேபோன்று நிறைய வேடங்கள் வருகிறது. ஆனால் அது எனக்கு 'போர்' அடிக்கவில்லை. ஆனால் இந்த வேடத்தோடு நின்றுவிட மாட்டேன். கவர்ச்சியாக நடித்த 'கலகலப்பு' படமும் எனக்குபேர் பெற்றுத்தந்தது. கவர்ச்சி வேடங்களிலும் தொடர்ந்து நடிப்பேன். அதேபோல் சோலோ ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்றும் அடம் பிடிக்கமாட்டேன். டபுள் ஹீரோயின் படங்களில் நடித்தாலும் எனது கதாபாத்திரத்தில் என் பெயரை தக்க வைத்துக்கொள்வேன்.
 

மயங்கி விழுந்தார் ஸ்ருதி

Shruti collapsed

இடைவிடாது ஷூட்டிங்கில் பங்கேற்றதால் ஸ்ருதி ஹாசன் மயங்கி விழுந்தார். பிரபுதேவா இந்தியில் இயக்கும் படத்தில் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார். இதன் ஷூட்டிங் புனே அருகிலுள்ள போர் பகுதியில் இடைவிடாது நடந்துவருகிறது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றுக்காக ஒரு நாள் பிரேக் எடுத்துக்கொண்டு கடந்த சில நாளுக்கு முன் சென்னை வந்தார் ஸ்ருதி. அப்போது எதிர்பாராத விதமாக அங்கு மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சுயநினைவில்லாமல் இருந்த அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஓய்வெடுக்க கூறினர். 'தொடர்ந்து ஷூட்டிங்கில் ஓய்வில்லாமல் பங்கேற்றதால் உடல் சோர்ந்து மயங்கிவிட்டார். இப்போது பரவாயில்லை. மீண்டும் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார்' என்று ஸ்ருதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

‘துப்பாக்கி" 2 நிமிடம் டிரையலர்

'Thuppakki' 2 minute Trailer

'துப்பாக்கி'-யின் 1 நிமிடம் டிரையலர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. ஆக்சன் படமான இதில் என்கவுண்‌ட்டர் ஸ்பெஷலிஸ்டாக இளைய தளபதி விஜய் நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் ஆகியோரின் முதல் கூட்டணி என்பதால் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். படத்தின் 1 நிமிடம் டிரையலரில் விஜய் '' என்ற வசனத்தை மட்டுமே பேசவார். இதனையடுத்து அவரது ரசிகர்கள் டிரையலர் சின்னதாக இருப்பதாக கருத்து தெரிவித்தனர். இந்த செய்தி படக்குழுவின் காதுகளுக்கு எட்ட, இந்த மாதம் இறுதியில் துப்பாக்கி படத்தின் 2 நிமிட டிரையலரை வெளியிட இருக்கின்றனர்.
 

ஒரே படத்தை 500 தியேட்டர்களில் போடறாங்களே... - குதறும் தங்கரு!

Thankar S Complaint On Exhibitors

சென்னை: ஒரே படத்தை 500 தியேட்டர்களில் வெளியிடுகிறார்களே, இது நியாயமா... இதனால எங்க படங்களுக்கெல்லாம் தியேட்டர் கிடைக்காம போகுதே, என்று மீண்டும் கேட்டுள்ளார் இயக்குநர் தங்கர் பச்சான்.

ரொம்ப நாள் கழித்து தான் இயக்கியுள்ள அம்மாவின் கைபேசி படத்தை வாங்க யாரும் வரலியே என்று செம கடுப்பிலிருக்கிறார் தங்கர் பச்சான்.

அதன் விளைவு பத்திரிகை, தொலைக்காட்சி பேட்டிகளில் எல்லோரையும் சகட்டு மேனிக்கு திட்டி வருகிறார்.

இப்போது தீபாவளிக்கு படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார் தங்கர்.

இதுபற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில், "என்னைப் போன்ற இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மக்களை மட்டுமே நம்பி படம் எடுக்கிறார்கள். ஆனால், எங்கள் படங்கள் மக்களை போய்ச் சேருவதில்லை.

பண்டிகை காலங்களில் மட்டுமே பெரிய முதலீட்டு படங்கள், பெரிய நடிகர்களின் படங்களை திரையிட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனால் அந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.

பெரிய நடிகர்களின் படங்கள், பெரிய டைரக்டர்களின் படங்கள், பெரிய முதலீட்டில் தயாரிக்கப்படும் படங்கள் வரிசையாக தோல்வி அடைந்து வருகின்றன. ஆனால், அந்த படங்களுக்குத்தான் தியேட்டர்களில் முன்னுரிமை கொடுக்கிறார்கள். ஒரே படத்தை 500 தியேட்டர்களில் திரையிடுகிறார்கள். தீபாவளிக்கு முன்பே பெரிய படங்கள் திரைக்கு வர ஆரம்பித்து விட்டன.

கதையையும், மக்களையும் மட்டுமே நம்பி படம் எடுக்கும் என்னைப் போன்றவர்களின் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை. யாரிடம் சென்று இதை முறையிடுவது? என் போன்ற நூற்றுக்கணக்கான இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். பெரிய படங்களுக்கு 500 தியேட்டர்கள் கொடுத்தால், எங்கள் படங்களுக்கு 100 தியேட்டர்களாவது கொடுங்கள்," என்றார்.

 

மேல்மலையனூர் கோயில் விழாவில் ஷகிலா.. உற்சாகத்தில் மேலே விழுந்த ரசிகர்கள்!

Shakila Sujibala Mobbed At Festival

மேல்மலையனூர் அம்மன் கோயிலில் சாமி கும்பிட வந்த கவர்ச்சி நடிகை ஷகிலா, சுஜிபாலாவின் மேலே விழுந்து தங்கள் ரசிக ஆர்வத்தைக் காட்டினர் ரசிகர்கள்.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இந்த விழாவுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர்.

நேற்று இரவு நடிகைகள் ஷகிலா, சுஜிபாலா ஆகியோர் இந்தக் கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்த போது, பக்தர்களாக வந்திருந்த ரசிகர்கள் கண்ணில் மாட்டினர்.

அவ்வளவுதான்... சாமியை அம்போவென விட்டுவிட்டு, பீரானந்தி என்ற பெண் சாமியாராக நடித்த ஷகிலாவைச் சூழ்ந்து கொண்டனர். பல ரசிகர்கள் இதுதான் சந்தர்ப்பம் என்று ஷகிலா மேல் விழ ஆரம்பிக்க, காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டார் ஷகிலா. உடனே பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து இருவரையும் மீட்டனர்.

ஆனாலும் ஷகிலாவும் சுஜிபாலாவும் உடனே கிளம்பிவிடவில்லை. கிட்டத்தட்ட 3 மணி நேரம் காத்திருந்து அம்மனின் ஊஞ்சல் உற்சவத்தைப் பார்த்தனர். போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டதால், தொல்லையின்றி பார்த்து ரசித்தனர்.

 

கடும் மழையால் மதுரை போன விமானம்... தூத்துக்குடியிலிருந்து காரிலேயே பயணித்த சூர்யா, அனுஷ்கா!

Flight Diverted Surya Anushka Take Car Reach Chennai   

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பலத்த மழை பெய்த காரணத்தால் விமானம் தரையிறங்கவில்லை. இதனால் அந்த விமானத்தில் ஏறி சென்னை செல்லவிருந்த நடிகர் சூர்யா மற்றும் நடிகை அனுஷ்கா ஆகியோர் விமான பயணத்தை ரத்து செய்து விட்டு காரிலேயே சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.

சிங்கம் 2 படத்தின் படப்பிடிப்புக்காக தூத்துக்குடி பக்கம் முகாமிட்டிருந்தனர் சூர்யாவும், அனுஷ்காவும். நேற்று மாலை 4.50 மணிக்கு சென்னையிலிருந்து ஒரு தனியார் விமானம் தூத்துக்குடிக்கு வந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக ரன்வேயில் தண்ணீர் தேங்கிக் கிடந்ததால் விமானம் தூத்துக்குடியில் இறங்காமல், மதுரைக்குப் போய் விட்டது.

இந்த விமானத்தில் அமைச்சர் செல்லப்பாண்டியன் பயணித்தார். அவர் மதுரையில் இறங்கி பின்னர் காரில் தூத்துக்குடிக்குப் பயணமானார்.

இதேபோல இந்த விமானத்தில் ஏறி சென்னை செல்வதற்காக நடிகர் சூர்யா, அனுஷ்கா ஆகியோர் தூத்துக்குடி விமான நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால் விமானம் தரையிறங்காததால், அவர்கள் விமான பயணத்தை ரத்து செய்து விட்டு காரிலேயே சென்னைக்குப் பயணமானார்கள்.

 

ஜீ தமிழ் டிவியின் திகிலூட்டும் பியர் பைல்ஸ்

Fear Files On Zee Tamil Tv

மனிதர்களாக பிறந்த எல்லோருமே ஏதாவது ஒரு விசயத்திற்கு பயப்படுவார்கள். சினிமாவிலோ, தொலைக்காட்சியிலோ திகிலான சம்பவங்களை பார்ப்பது அநேகம் பேருக்கு சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் அதேபோன்ற அசாதாரணமான சம்பவங்கள் நிகழும் போது அச்சம் அதிகரிக்கும். இதுபோன்ற அசாதாரணமான சம்பவங்களை பதிவு செய்வதுதான் ‘பியர் பைல்ஸ்' (Fear Files). ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு மாதிரியான திகிலான சம்பவங்கள் இடம் பெறுகின்றன.

பியர் பைல்ஸ் திகில் தொடரின் முதல் கதையாக மும்பையில் வசிக்கும் கர்ப்பிணி பெண் நீருவின் திகில் கதை ஒளிபரப்பானது. ஆரம்பமே அமானுஷ்யமாக தொடங்குகிறது. மிகபெரிய வீட்டில் கர்ப்பிணிப் பெண் ஒருத்தி தனியாக உறங்கிக் கொண்டிருக்கிறாள். அவளுடைய வயிற்றினை அமானுஷ்யமான உருவம் ஒன்று தொட்டுத் தடவுகிறது. இதைக்கண்டு திடுக்கிட்டு விழிக்கும் அந்த பெண்ணின் கண் முன்னாள் கருப்பு உருவம் ஒன்று அமர்ந்திருக்கிறது. இதைக் கண்டு அலறுகிறாள் அவள். இதற்கான காரணம் என்ன என்பதை விவரிக்கிறது கதை.

நீரு தன் கணவனுடன் புது வீட்டுக்கு குடி போக, அங்கு வழக்கத்திற்கு மாறான சம்பவங்கள் நடக்கின்றன. திடீரென்று தொலை பேசி மணி ஒலிக்கிறது. வீட்டின் மாடியில் ஏதோ ஒரு உருவம் நடந்து செல்கிறது. இது போன்ற சம்பவங்களினால் நீரு அதிர்ச்சியும் பயமும் கொள்கிறாள்.

அந்த வீட்டில் இவர்கள் குடி வரும் முன்பு அங்கு ஒரு கர்ப்பிணி பெண் தற்கொலை செய்த உண்மை இவளுக்கு தெரிய வருகிறது. அந்த ஆவிதான் இவளை பல ரூபங்களில் பயமுறுத்துகிறது. இந்த ஆபத்திலிருந்து நீரு தன் வயிற்றில் இருக்கும் எப்படி காப்பாற்றினாள் என்பதை திகிலான சம்பவங்களுடன் பதிவு செய்துள்ளனர்.

ஆவிகளின் கோர தாண்டவமும், அதன் பயங்கர பிடியில் சிக்கி உயிருக்கு போராடியவர்களின் உண்மை சம்பவங்களும் வாரவாரம் திகில் காட்சிகளுடன் ஒளிபரப்பாகின்றன.ஆவிகள், பேய், பூதம் பற்றிய நம்பிக்கைகள் பலருக்கு இருப்பதில்லை. இருப்பினும் இதய பலவீனம் உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் இத்தொடரை பார்ப்பதை தவிர்ப்பது நல்லது என மனநல மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் அதை எல்லாம் யார் கேட்பது ‘பியர் பைல்ஸ்' போன்ற திகில்கதைகள் குழந்தைகள்தான் அதிகம் பார்க்கின்றனர் என்பதுதான் உண்மை. அவர்களுக்குத்தான் இதுபோன்ற கதைகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன. ஜீ தமிழில் ஞாயிறு தோறும் இரவு 10 மணிக்கு இந்த திகில் தொடர் ஒளிபரப்பாகிறது.