வளர்ப்புத் தந்தை, வளர்ப்பு அண்ணனுடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிகை கரோலின்!!


புனேவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விபச்சாரம் செய்ததாக சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த நடிகை கரோலின் குறித்த பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புனேவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக புனே காவல்துறையின் சமூக பாதுகாப்புப் பிரிவு (விபச்சாரத் தடுப்புப் பிரிவு)போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து விரைந்து சென்ற போலீஸார் கரோலின் என்ற 22 வயதுப் பெண்ணையும், ராஜ்குமார் மரியதாசன் என்பவரையும் கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. கைது செய்யப்பட்ட கரோலினின் முழுப் பெயர் கரோலின் ரஞ்சித் மரியதாசன். இவர் சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர். ஆனால் மும்பை அந்தேரியில் வசித்து வருகிறார். தமிழில் வாடா செல்லம் உள்ளிட்ட 3 படங்களில் நடித்துள்ளார்.

அவரது தந்தை ரஞ்சித் சென்னையில் ஒரு போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ளாராம். ஆனால் இவர் சொந்தத் தந்தை இல்லையாம், வளர்ப்புத் தந்தையாம். இவருடன் சேர்த்துக் கைது செய்யப்பட்ட ராஜ்குமார் மரியதாசன், ரஞ்சித்தின் மகன் ஆவார். இவர் கரோலினின் வளர்ப்பு அண்ணனாக செயல்பட்டு வந்துள்ளார். கூடவே கரோலினின் மேனேஜராகவும் இருக்கிறாராம்.

இவர்கள் கூட்டாக இணைந்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு புனேவை மையமாக வைத்து விபச்சாரத்தில் குதித்துள்ளனர். எரவாடா என்ற இடத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு அவ்வப்போது கஸ்டமர்களுடன் தங்கிச் செல்வாராம் கரோலின்.

இவரது தந்தைதான் கோ ஆர்டினேட்டராக செயல்பட்டு வந்துள்ளார். கரோலின் தேவை என்றால் இவரை அணுக வேண்டுமாம். அவர் புனேவில் உள்ள அந்த ஹோட்டலுக்கு கரோலினையும், துணைக்கு ராஜ்குமாரையும் அணுப்பி வைப்பாராம். இரண்டு மணி நேரத்திற்கு ரூ. 2 லட்சம் கட்டணம் வசூலித்து வந்துள்ளனர்.

அந்த ஹோட்டலில் இரண்டு அறைகள் போட வேண்டுமாம். ஒரு அறை கரோலினும், ராஜ்குமாரும் தங்குவதற்காம். இன்னொரு அறையில் வாடிக்கையாளருடன் உல்லாசமாக இருக்கவாம்.

பல விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளாராம் கரோலின். ஆனால் திரைப்படத்தில் இவருக்கு சரியான பிரேக் கிடைக்கவில்லை. மேலும் பணப் பற்றாக்குறையும் ஏற்படவே விபச்சாரத்தில் குதித்ததாக தெரிகிறது.
 

சோனம் கபூருக்காக தீபிகாவை கழற்றி விட்டுட்டாரா சித்தார்த் மல்லையா?


கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் உரிமையாளர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா தனது காதலி தீபிகாவை விட்டுவிட்டு சோனம் கபூருடன் சுற்றிக் கொண்டிருப்பதாக காற்று வாக்கில் வரும் தகவல்கள் வந்துள்ளன.

சித்தார்த் மல்லையாவும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும் கடந்த சில மாதங்களாக காதலர்களாக வலம் வந்தனர். கடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றபோது கிரிக்கெட் மைதானத்தில் அத்தனை பேருக்கும் அதுவும் பக்கத்தில் தந்தையை வைத்துக் கொண்டே சித்தார்த் தீபிகாவின் உதட்டில் முத்தமிட்டதை, அவர்களின் உதடுகளும் மறந்திருக்க முடியாது, மற்றவர்களும் மறந்திருக்க முடியாது.

இப்படி ஒன்னுமண்ணாக திரிந்து வந்த தீபிகாவும், சித்தார்த்தும் இப்படி தனித் தனியே பிரிந்து போகும் நிலைக்குப் போய் விட்டனராம். இதுகுறித்த பேச்சுக்கள் கடந்த டிசம்பர் மாதமே பேச்சு அடிபட்டது. தற்போது அவர்கள் பிரிந்தே விட்டனர் என்று கூறப்படுகின்றது. சித்தார்த் தற்போது அனில் கபூரின் புத்திரி சோனம் கபூருடன், ஷோக்காக சுற்றுகிறாராம்.

இதேபோன்று தீபிகாவும் தான் முன்னர் காதலித்த மாடலும், வளர்ந்து வரும் நடிகருமான நிஹார் பாண்டியாவுடன், இணக்கமாகி விட்டதாக கூறப்படுகிறது.

அதேசமயம், சோனம் கபூர் ஏற்கனவே புனீத் மல்ஹோத்ரா என்பவரை டேட் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நேரத்தில் இருவருடன் 'டேட்' செய்வதால் 'ஏர் டைட்'டாகி விடாது...!!??

என்னத்தையோ பண்ணுங்கப்பா...!
 

'எழுத்துலகுக்கு மிகப் பெரிய உதவியை செய்திருக்கிறார் ரஜினி' - மனுஷ்யபுத்திரன்


இன்றைக்கு பெரிய எழுத்தாளரைப் பற்றி கூட நிறைய பேருக்கு தெரிவதில்லை. உலகமறிந்த சூப்பர் ஸ்டாரான ரஜினி ஒரு இலக்கிய விழாவில் பங்கெடுத்து, எழுத்தாளர்களின் பணியைப் பற்றி பேசும்போது, அதற்கு கிடைக்கிற மரியாதையும் கவனமும்தான் மிக முக்கியம். அந்த வகையில் இலக்கிய உலகுக்கு ரஜினி மிகப்பெரிய உதவியைச் செய்திருக்கிறார், என்று கவிஞர் மனுஷ்யபுத்திரன் கூறியுள்ளார்.

எஸ் ராமகிருஷ்ணனுக்கு நடந்த பாராட்டு விழாவில் ரஜினி பங்கெடுத்ததை விமர்சித்து, நடிகரை வைத்து இலக்கியம் வளர்ப்பதா என சிலர் 'அரசியல்' பேசி வரும் நிலையில், ரஜினி பங்கேற்பு குறித்து பாஸிடிவாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

எஸ் ராமகிருஷ்ணன் விழாவில் ரஜினி பேசும்போது, "நான் எஸ்எஸ்எல்சிதான் படிச்சிருக்கேன். ஆனா வேற புத்தகங்கள் நிறைய படிச்சேன். அவைதான் இன்னிக்கு வரைக்கும் என் வாழ்க்கல ரொம்ப உதவியா இருக்கு. ...எழுத்தாளர்கள் கஷ்டப்படக் கூடாது. நாம் படைப்பாளிகளை நன்றாக வைத்திருந்தால், அவர்கள் பல நல்ல படைப்புகளை தந்து கொண்டே இருப்பார்கள். படைப்பாளி கஷ்டப்படக்கூடாது. அவர்களை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும். நல்ல சூழலில் இருக்க நாமெல்லாரும் துணை நிற்க வேண்டும்," என்றதோடு, இளைஞர்களை புத்தகங்கள் வாங்கிப் படிக்கும்படி கேட்டுக் கொண்டார் ரஜினி.

புத்தகச் சந்தையில் விற்பனை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதைச் சுட்டிக் காட்டி, இது தனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த நிலை தொடரணும், என்றார் ரஜினி.

"ஒரே ஒரு வார்த்தை சொன்னாலும் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆளுமை கொண்ட ரஜினி இப்படிப் பேசியிருப்பது, மிக முக்கியமானது. இளைஞர்களிடையே பெரும் மாறுதல்களை ஏற்படுத்தக் கூடியது. இந்த நிலையை எழுத்தாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நல்ல பயனுள்ள புத்தகங்களைத் தரவேண்டும்," என இலக்கியவாதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

புதிய வாசகர்களை ஈர்க்கும்...

இதுகுறித்து, அன்றைய விழாவில் பங்கேற்ற பேராசிரியர் கு ஞானசம்பந்தன் கூறுகையில், "இளைஞர்கள் நிறைய படிக்கணும்னு சூப்பர் ஸ்டார் சொல்லியிருக்கார். ரஜினி அன்றைக்கு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இலக்கிய உலகுக்கே தனி கவன ஈர்ப்பு கிடைச்சிருக்கு. தன்னுடைய அலுவல்களுக்கிடையில், ஒரு எழுத்தாளனைக் கவுரவிக்க அவர் வந்தது அவர் எந்த அளவு பெருந்தன்மை, நேர்மையாளர் என்பதைக் காட்டுகிறது. தீவிர இலக்கியத்தை நோக்கி பல புதிய வாசகர்களை ரஜினியின் வார்த்தை ஈர்க்கும் என்று நம்பிக்கை பிறந்திருக்கிறது," என்றார்.

ரஜினி செய்திருக்கும் பெரிய உதவி...

கவிஞர் மனுஷ்யபுத்திரன் கூறுகையில், "இன்றைக்கும் பல புகழ்பெற்ற எழுத்தாளர்களைப் பற்றி பெரும்பான்மை தமிழ் மக்கள் தெரிந்து கொள்ளாமல்தான் உள்ளனர். உலகமறிந்த பெரும் புகழுக்குச் சொந்தக்காரரான ரஜினி இந்த இலக்கிய விழாவில் பங்கெடுத்து, எழுத்தாளர்களின் பணியைப் பற்றி பேசும்போது, அதற்கு கிடைக்கிற மரியாதையும் கவனமும்தான் மிக முக்கியம். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினி மிகப்பெரிய உதவியைச் செய்திருக்கிறார் இந்த இலக்கிய உலகுக்கு," என்றார்.

எழுத்தாளர்களை மதிப்பவர்...

எஸ் ராமகிருஷ்ணன் கூறுகையில், "ரஜினி அவர்கள் எப்போதுமே எழுத்தாளர்களையும் அவர்களது எழுத்துக்களையும் மதிப்பவர். அவர்கள் தன்னைப் பற்றி என்ன கருத்து கொண்டிருக்கிறார்கள் என்று தனிப்பட்ட முறையில் எதையும் கவலைப்படாத பெருந்தன்மையானவர். பல எழுத்தாளர்களை தன் வீட்டுக்கே வரவழைத்து பேசுவது அவருக்குப் பிடித்தமானது. இந்த இயல் விருது பாராட்டு விழா என்பதே அவரது முயற்சிதான்," என்றார்.
 

'சரி சரி... என்னை நான் மன்னிச்சு தொலைங்க!' - அமலா பாலின் சலிப்பு


தவறு செய்த ஒருவர் அதற்காக வருந்தி மன்னிப்பு கேட்பதற்கும், வேறு வழியில்லை கேட்டுத் தொலைப்போம் என்ற கடுப்போடு மன்னிப்பு கேட்பதற்கும் எக்கச்சக்க வித்தியாசம் இருக்கிறது.

இன்னும் தெளிவாகத் தெரிய வேண்டும் என்றால், சமீபத்தில் அமலா பால் கொடுத்துள்ள ஒரு பேட்டியின் வீடியோவைப் பாருங்கள் புரியும்.

அது என்ன, சின்ன சேனலுக்கு பேட்டி தரமாட்டேன், பெரிய சேனலுக்குத்தான் தருவேன்னு நீங்க அடம்பிடிக்கிறீங்க என்று சமீபத்தில் அமலா பாலிடம் கேட்டிருந்தனர் நிருபர்கள்.

அதற்கு பதிலளித்த அமலா, "எனக்கும் மீடியாவுக்கும் பிரச்சினை என்று இப்போ கொஞ்ச காலமா செய்தி வருது. பிரஸ் - சினிமாகாரங்களுக்குள்ள இது சகஜம்தான். நீங்க சொல்ற சம்பவம் நடந்த அன்னிக்கு நான் ப்ளைட் பிடிக்க கிளம்பினேன் (காலை 9 மணி பேட்டிக்கு அமலா வந்தது 11.30-க்கு. அடுத்த அரை மணி நேரத்தில் பிளைட்டுக்கு நேரமாச்சு என்று ஓடியதில் மீடியா தவறு என்ன இருக்கிறது?). அதனால்தான் சில சேனலுக்கு பேட்டி தர முடியலை.

கேள்வி: 'இல்லை... நீங்க பெரிய சேனலுக்குதான் பேட்டின்னு சொன்னீங்களே?'

நான் அப்படியெல்லாம் சொல்லல... சரி, எல்லார் கிட்டயும் நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். போதுமா...

கேள்வி: 'பெரிய மீடியா சின்ன மீடியான்னு பிரிச்சிப் பேசினது தப்புன்னு சொல்ல வர்றோம்...'

அதெல்லாம் எனக்கு தெரியாது... நான் மன்னிப்பு கேட்டதை ஏத்துக்கிறதும் ஏத்துக்காததும் உங்க இஷ்டம். நான் கேக்கறத கேட்டுட்டேன்...

'ஓ சரி சரி...' (நிருபருக்கு இதுவே போதுமென்ற திருப்தி!)
 

கல்யாணத்திற்கு முன்பே கரீனா கபூர் கர்ப்பமா?


பாலிவுட் நடிகை கரீனா கபூர் கர்ப்பமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலிவுட்டில் நெடுங்காலமாக காதலர்களாக வலம் வந்த நடிகை கரீனா கபூரும், நடிகர் சைப் அலி கானும் வரும் மார்ச் மாதம் திருமணம் செய்துகொள்ளவிருக்கின்றனர். இந்நிலையில் கரீனா கர்ப்பமாக இருப்பதால் தான் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளார் என்று கூறப்படுகின்றது.

கடந்த வாரம் மும்பை விமான நிலையத்தில் கரீனா லூஸான பச்சை நிற டிசர்ட் அணிந்து லேசாக வீங்கியது போல் இருந்த வயிற்றை துப்பட்டாவால் மறைத்தபடி சென்றார். அதை ஒரு புகைப்படக்காரர் கிளிக் செய்து இணையதளத்தில் வெளியிட்டார். கரீனா கர்ப்பம் என்பதை அவரது தரப்பினர் மறுத்தனர்.

இந்நிலையில் இம்ரான் கானுடன் நடித்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு வந்த கரீனா பயங்கர லூஸான டாப் அணிந்து வந்துள்ளார். பாலிவுட்டில் சைஸ் ஜீரோவில் உள்ள கரீனா கபூர் எதற்காக லூஸான உடை அணிய வேண்டும். வயிறு எதற்காக வீங்கியது போல் இருக்கிறது என்பது தான் பாலிவுட்டின் ஹாட் டாபிக்.

சைப்ரீனாவின் நிச்சயதார்த்தம் வரும் 10ம் தேதியும், வரும் மார்ச் மாதம் 23ம் தேதி திருமணமும் நடக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கல்யாணமான பின்னர் கர்ப்பமாவது எல்லாம் இப்போது பழையை ஸ்டைலாகி விட்டது. பல பிரபலங்கள் கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பம் தரித்து விடுகிறார்கள். சிலர் குழந்தை பெற்றுக் கொண்ட பின்னர் கல்யாணத்தை வைத்துக் கொள்கிறார்கள்.
 

மீண்டும் கதை கேட்க ஆரம்பித்தார் ஐஸ்வர்யா ராய்!


புகழின் ஒட்டு மொத்த வெளிச்சமும் தன்மீதே இருக்கும்படி பார்த்துக் கொண்ட நடிகை என்றால் அது ஐஸ்வர்யா ராய்தான். அதுவும் ஒரு ஆண்டோ இரண்டாண்டோ அல்ல... கிட்டத்தட்ட 15 ஆண்டுகள்...

அப்படிப்பட்டவர் திடீரென்று குழந்தை, குடும்பம், ரெஸ்ட் என்று அடைபட்டுக் கிடப்பாரா என்ன... இதோ, குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் முடியும் முன்பே, அடுத்த படத்துக்கான கதையைக் கேட்க ஆரம்பித்துள்ளார்.

எப்படியும் நாளையே நடித்துவிடப் போவதில்லை. கதை கேட்டு, நடிகர்கள் முடிவாக படம் தொடங்க குறைந்தது 6 மாதங்களாவது ஆகும்... அதற்குள் பழைய வனப்பையும் உடல்நிலையையும் பெற்று விடுவோம் என்ற நம்பிக்கைதான் ஐஸ்வர்யாவுக்கு.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடம்தான் என்றல்ல, ஆக்ஷன் த்ரில்லர் கதைகளாக இருந்தாலும் ஓகே என்று கூறியுள்ளதால், முன்பு ஐஸ்வர்யா ராயை மனதுக்குள் 'ஃபிக்ஸ்' பண்ணி வைத்திருந்தவர்கள் மீண்டும் தங்கள் கதைகளை தூசு தட்ட ஆரம்பித்துள்ளனர்.

சமீபத்தில் அபிஷேக் பிறந்த நாள் விழாவுக்கு வந்த பலரும், அபிஷேக்கு வாழ்த்து சொல்வதைவிட, ஐஸ்வர்யாவுக்கு கதை சொல்ல எப்போது வரட்டும் என்று கேட்பதிலேயே ஆர்வம் காட்டினார்களாம்.

இது தெரிஞ்சிருந்தா, இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணியிருக்கலாமே என்று யோசிக்கிறாராம், முன்பு ஐஸ்வர்யா ராயை ஹீரோயினாகப் போட்டு, பின் அவர் கர்ப்பம் என்பதால் படத்தையை கைவிட்ட மதுர் பண்டார்கர். இப்போது அந்தப் படத்தில் கரீனா நடிப்பது குறிப்பிடத்தக்கது.
 

'நிம்மதி வேணும்...'- திருப்பதியில் தமன்னா வேண்டுதல்


திருப்பதி திருமலைக்கு திடீரென போன நடிகை தமன்னா மனமுருக ஏழுமலையானை வேண்டிக் கொண்டார்.

சமீபத்தில் திருமலைக்கு தமன்னா வருவது இது இரண்டாவது முறையாகும்.

தமிழில் ஓஹோவென்றிருந்த தமன்னா, சிறுத்தை, வேங்கை படங்களுக்குப் பிறகு தமிழில் வாய்ப்பே இல்லாமல், தெலுங்குக்குப் போனார்.

இரு மாதங்களுக்கு முன்பு, ஒரு தெலுங்குப் பட ஷூட்டிங் இடைவேளையில் திருமலைக்குச் சென்றிருந்தார். அப்போது அவர் கவர்ச்சியாக உடையணிந்து வந்து சாமி கும்பிட்டதாகக் கூறி சர்ச்சை கிளம்பியது. பக்தர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், திடீரென நேற்று திருமலைக்குச் சென்று சாமி கும்பிட்டார் தமன்னா. ஹைதராபாதிலிருந்து சென்னைக்கு வந்த அவர், பின்னர் இங்கிருந்து திருமலைக்கு தன் தாயாருடன் காரில் சென்றார். அதிகாலை சுப்ரபாதம் தரிசனத்துக்குச் சென்ற அவர் அடக்க ஒடுக்கமாக சுடிதார் அணிந்திருந்தார்.

தரிசனம் முடிந்த பிறகு அவர் கூறுகையில், "எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் நான் திருமலைக்குச் சென்றுவிடுவேன். இந்த முறை மன அமைதியும் நிம்மதியும் தன்னம்பிக்கையும் வேண்டி அங்கே சென்றிருந்தேன்," என்றார்.

திருமலையில் தரிசனம் முடிந்ததும் மீண்டும் சென்னை திரும்பிய தமன்னா, பின்னர் கொச்சியில் ராம் சரண் தேஜாவுடன் டூயட் பாட கிளம்பிவிட்டார்.
 

திரைப்படமாகிறது இளவரசி டயானாவின் வாழ்க்கை


இளவரசி டயானாவின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளது. இந்த படத்தில் டயானாவாக நடிக்க ஒரு ஹாலிவுட் நடிகையைத் தேடிக் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் ஸ்டீபன் இவான்ஸ்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸின் முன்னாள் மனைவி இளவரசி டயானா. உலகப் புகழ்பெற்ற அவர் கடந்த 1997ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கார் விபத்தில் பரிதாபமாக பலியானார். டயானாவின் மெய்க்காப்பாளர் கென் வார்பேர் எழுதிய டயானா: குளோஸ்லி கார்டட் சீக்ரட் என்ற புத்தகத்தை தழுவி படம் எடுக்கவிருக்கின்றனர்.

இது குறித்து தயாரிப்பாளர் இவான்ஸ் கூறியதாவது,

இளவரசி டயானா தனது இரண்டாவது மகன் ஹாரியைப் பெற்றெடுத்த பிறகு அதாவது சுமார் 11 ஆண்டு கால வாழ்க்கையை படமாக்குகிறோம். இந்த படத்தின் மூலம் டயானாவின் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடந்தது என்பது ரசிகர்களுக்குத் தெரியப்படுத்தவிருக்கிறோம்.

இந்த படத்தில் டயானாவை ஆஹா, ஓஹோ என்றோ ச்சே அவரா என்றோ காட்ட மாட்டோம். அவரிடம் அற்புதமான குணாதிசயங்கள் இருந்தன. மக்களைக் கவரும் தன்மை கொண்டவர். சொல்ல வேண்டியதை ஒரே வரியில் நச்சென்று சொல்லும் திறன் வாய்ந்தவர்.

அவர் அரசாங்கத்தில் பெரிய அளவில் ஒன்றும் இல்லை என்றாலும் அவருக்கு இயல்பாகவே தந்திரம் மற்றும் பிடிவாத குணம் இருந்தது. ஏதாவது முடிவு செய்தால் யார் சொன்னாலும் கேட்கமாட்டார். அவர் நட்பைப் பயன்படுத்தியும் உள்ளார், உதறியும் விட்டுள்ளார் என்றார்.

முன்னாள் இங்கிலாந்து பிரதமர் மார்கரேட் தாட்சரின் வாழ்க்கை 'தி அயர்ன் லேடி' என்ற பெயரில் படமாக்கப்பட்டது. அதில் ஹாலிவுட் நடிகை மெரில் ஸ்ட்ரீப் தாட்சராக நடித்து விருதும் வாங்கியுள்ளார். அதே போன்று டயானாவின் வாழ்க்கைப் படமும் வெற்றி பெறும் என்று இவான்ஸ் நம்புகிறார்.
 

'மச்சானு'க்கு நமீதா கிடைப்பாரா?


'பருப்பு இல்லாம சாம்பாரா... நமீதா இல்லாத சக்தி சிதம்பரம் படமா' என்று ரைமிங்கோடு கேட்கும் அளவு, நமீதா - சக்தி சிதம்பரம் கூட்டணி படு பாப்புலர் கோலிவுட்டில்.

ஆனால் என்ன நடந்ததோ... இடையில் ஒரு படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் நமீதா. இன்னொரு நமீதாவை உருவாக்கிக் காட்டுகிறேன் பார் என்று தொடை தட்டிய சக்தி சிதம்பரம், குருசிஷ்யன் படத்தில் ஹேமமாலினி என்பவரை உரித்த கோழியாகக் காட்டினார். ம்ஹூம்... யாரும் சீந்தவில்லை.

என்ன இருந்தாலும் நமீதா நமீதாதான் என்று மீண்டும் இப்போது நமீதா புராணத்தை ஆரம்பித்துள்ளார் சக்தி.

தனது அடுத்த படத்துக்கு 'நமீதா தமிழி'ன் முக்கிய வார்த்தையான மச்சான் என்பதையே தலைப்பாக்கியிருக்கிறார்.

இந்த தலைப்பை வைத்துவிட்டுத்தான் நமீதாவிடம் கால்ஷீட்டே கேட்டிருக்கிறார் சக்தி. பழசையெல்லாம் மறந்து படத்தில் நடிக்க நமீதா ஒப்புக் கொள்வாரா... அல்லது இன்னொரு விடுமுறை என்ற நினைப்பில் ஆம்பிவேலியிலேயே தங்கிவிடுவாரா என்பது இனிமேல்தான் தெரியும்!
 

பிப்ரவர் 10-ல் கரீனா - சயீப் நிச்சயதார்த்தம்!


வயதாகும்வரை காதலர்களாகவே இருந்து விடுவார்களோ என்று கமெண்ட் அடிக்கும் அளவுக்கு பாலிவுட்டில் ரொம்ப நாளாகக் காதலித்துக் கொண்டிருக்கிற சபீப் அலிகானும் கரீனா கபூரும் ஒரு வழியாக நிச்சயதார்த்த தேதியை அறிவித்துள்ளனர்.

சயீப் அலிகானுக்கு 41 வயது. கரீனாவுக்கு 31 வயது. இருவரும் கிட்டத்தட்ட கணவன் மனைவி ரேஞ்சுக்குதான் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும், பேட்டி கொடுப்பதுமாக இருந்தார்கள். ஆனால் கல்யாணத்தைப் பற்றி எதுவும் பேசுவதில்லை. வெறுத்துப் போன இரு தரப்பு குடும்பத்தினரும், "அட, கல்யாணத்தைப் பண்ணித் தொலைங்கப்பா!" என வற்புறுத்த ஆரம்பித்துவிட்டனர்.

சயீப் அலிகான் ஏற்கனவே திருமணம் ஆனவர். முதல் மனைவியான நடிகை அமிர்தாசிங்கை 1991-ல் மணந்தார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2004-ல் விவாகரத்து செய்து கொண்டனர். இரண்டாவது மனைவியாகத்தான் கரீனா கபூர் போகிறார்.

கரீனா- சயீப் அலி திருமணம் மார்ச் 23-ந்தேதி நடக்கிறது. திருமண நிச்சயதார்த்தம் வருகிற 10-ந்தேதி நடக்கிறது. கபூர் குடும்ப வாரிசுகளில் ஒருவர் கரீனா கபூர். இவரது தந்தை ரந்தீர் கபூர் பெரிய நடிகர். மறைந்த இயக்குநர் / நடிகர் ராஜ் கபூரின் சகோதரர். கரீனாவின் அக்காதான் நடிகை கரிஷ்மா கபூர்.

மறைந்த கிரிக்கெட் வீரரும் பட்டோடி சமஸ்தான நவாபுமான மன்சூர் அலிகான் - நடிகை ஷர்மிளா தாகூர் மகன் இந்த சயீப். மன்சூர் அலிகானுக்குப் பிறகு சமஸ்தான வாரிசு சயீப் அலிகான்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 

பிரபல நீச்சல் வீரர் ஹீரோவாக நடிக்கும் 'சேவற்கொடி'!


நீச்சலில் பல சாதனைகள் புரிந்தவர் அருண் பாலாஜி. கடந்த 1995 ஆம் ஆண்டு தனது 8 வயதில் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை கடலில் 10.41 மணி நேரத்தில் 32 கி.மீ.நீந்தி 'உலக சாதனை' செய்தவர். இதில் ஏற்கனவே சாதனை புரிந்த குற்றாலீஸ்வரனின் நீச்சல் சாதனையை வென்றவர். இனி இவர் சேவற்கொடி அருண பாலாஜி ஆகிவிடுவார்!

கதாநாயகியாக பாமா நடிக்கிறார்.இயக்குனர் லோகிததாசின் அறிமுகமான இவர் மலையாளத்தில் பத்துக்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களில் நடித்தவர்.'மைனா' கன்னட ரீமேக்கான 'ஷைலு'படத்திலும் நடித்திருக்கிறார். வில்லனாக பவன் நடிக்கிறார்.

கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் இரா.சுப்பிரமணியன். இயக்குனர்கள் சீமான், ராதாமோகன் ஆகியோரிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் இவர். 'அபியும் நானும்' படத்துக்கு வசனமும் எழுதியுள்ளார்.

படத்தைப் பற்றி இயக்குனர் கூறுகையில், "ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மற்றவர்களைப் பற்றிய ஒரு புரிதல் இருக்கும்.சிலரை ஒரு நிமிட சிரிப்பிலே பிடித்து விடும்.சிலரை இறுதி வரை பிடிக்காது.தனிப்பட்ட ஒருவரைப் பற்றி பலரும் ஒவ்வொரு விதமான புரிதலை வைத்திருப்பார்கள்.அப்படி தவறாக உணரப்படும் ஒரு மனிதனுக்கும், அப்படி உணர்ந்த ஒரு மனிதனுக்கும் இடையேயான மோதல் தான் இந்த கதை. வெவ்வேறு சூழலில் வாழக்கூடிய இருவர் யதார்த்தமாக சந்தித்துக் கொள்கிறார்கள். பின் அவர்களுக்குள் மோதல் வருகிறது.அது ஏன் எப்படி ? என்பது தான் கிளைமாக்ஸ்.

திருசெந்தூர் கடற்கரையோரமுள்ள கிராமங்களின் பின்னணியில் கதை உருவாகியுள்ளது. ஒரு சூரசம்ஹாரத்தின்போது நாயகன், நாயகி, வில்லன் மூவரும் சந்திக்க நேர்கிறது. அடுத்த ஆண்டு சூரசம்ஹார நிகழ்ச்சியில் முடிகிறது கதை.இடையில் என்ன நடக்கிறது? என்பதே பரபரப்பான திரைக்கதை.

திருசெந்தூரில் நடைப் பெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியில் கதாநாயகன் கதாநாயகியை தேடும் காட்சியை மக்களோடு மக்களாக இருந்து படம் பிடித்தோம். திருசெந்தூர், கன்னியாகுமரி சாலையில் நாயகன் அருண் பாலாஜியும் வில்லன் பவனும் மோதிக் கொள்ளும் சேசிங் காட்சி ஒன்றையும் சிரமப் பட்டு படமாக்கி இருக்கிறோம். படத்தின் காட்சிகள் அனைத்தும் யதார்த்தமாக அதேவேளையில் ஜனரஞ்சமாகவும் இருக்கும்" என்றார்.

பனேரி பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் மகரந்த் கமலாகர்,ஆனந்த் ரெட்டி இருவரும் மிகுந்த பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
 

மணிரத்னத்தின் அடுத்த படம் கடல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு


தனது அடுத்த படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் இயக்குநர் மணிரத்னம். இந்த அறிவிப்பை இன்று அவரே முறைப்படி வெளியிட்டார்.

ராவணன் படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் அடுத்த படம் குறித்து பல்வேறு செய்திகள். பூக்கடை என இந்தப் படத்துக்கு பெயரிடப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் அதை மணிரத்னம் மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் இன்று புதிய அறிவிப்பு வெளியிட்டார். படத்துக்குப் பெயர் கடல் என்றும், கார்த்திக் மகன் கவுதம்தான் ஹீரோ என்றும் அவர் கூறியுள்ளார். சமந்தா நாயகியாக நடிக்கிறார்.

அர்ஜூனும், மோகன் பாபு மகள் லட்சுமி மஞ்சுவும் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, வைரமுத்துவும் அவர் மகன் மதன் கார்க்கியும் பாடல்கள் எழுதுகிறார்கள். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார்.

தென் தமிழகத்தின் கடலோர கிராமப் பின்னணியில் நடக்கும் காதல் கதை இந்தப் படம் என்று கூறப்படுகிறது. தமிழ் மீனவர்களை இலங்கை ராணுவம் அடிக்கடி தாக்குவது, சித்திரவதை செய்வது பற்றியும் இந்தப் படத்தில் மணிரத்னம் காட்சிப்படுத்துவார் என்கிறார்கள். ஆனால் அதில் எந்த அளவுக்கு நேர்மையாக இருப்பார் மணிரத்னம் என்பது தெரியவில்லை.

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஈழப் போரையே, வல்லரசுகளின் ஆயுத வியாபாரம் என மணிரத்னம் காட்சி வைத்திருந்தது நினைவிருக்கலாம்.
 

டப்பிங் உரிமையை விற்று ஏமாற்றி விட்டார்-தயாரிப்பாளர் மீது சோனா புகார்!


கோலிவுட் கவர்ச்சி நடிகை சோனா மறுபடியும் சர்ச்சை வளையத்திற்குள் வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரண் மீது பரபரப்பு புகார் அளித்த அவர் இந்த முறை தயாரிப்பாளர் டி.சிவாவுக்கு எதிராக ஆர்த்தெழுந்துள்ளார். சிவா மீது கோலிவுட் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.

பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி. சரணுக்கு எதிராக போலீசில் புகார் கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் கவர்ச்சி நடிகை சோனா. முதலில் சரண் மீது குற்றம் சுமத்தி வானும், பூமிக்கும் குதித்தவர் பின்னர் சமாதானம் ஆகிவிட்டார். அதன் பிறகு அமைதியாக இருந்து வந்த அவர் தற்போது தயாரிப்பாளர் டி.சிவாவுக்கு எதிராக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து அவர் கொடுத்த புகாரில்

நானும், சிவாவும் சேர்ந்து 50-50 சதவீதத்தில் கனிமொழி என்ற படத்தை தயாரித்தோம். அவருக்கு தமிழ் தவிர வேறு மொழிகளின் ரீமேக் மற்றும் டப்பிங் உரிமை இருக்கிறது. இந்நிலையில் அவர் என் அனுமதி இன்றி கனிமொழி படத்தின் டப்பிங் உரிமையை தெலுங்கு தயாரிப்பாளர் ஜக்குலா நாகேஸ்வர ராவுக்கு விற்றுவிட்டார்.

ஒப்பந்தத்தை மீறி அவர் தன்னிச்சையாக டப்பிங் உரிமையை விற்று என்னை ஏமாற்றியுள்ளார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
 

சேவை வரியை எதிர்த்து போராட்டம் - எஸ் ஏ சந்திரசேகரன்


சென்னை: சினிமாவுக்கு மத்திய அரசு சேவை வரி விதிப்பதை எதிர்த்து தமிழ் சினிமா அமைப்புகள் ஒரு நாள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன.

அரசு தரப்பில் கட்டணம், வரி என எதை அறிவித்தாலும் சினிமாக்காரர்கள் அதிலிருந்து தப்பிப்பது என்றே பார்க்கின்றனர். சலுகை என்றால் முதலில் ஓடி வருகின்றனர். கேட்டால் நாங்கள் கலைஞர்கள் என்பார்கள். ஆனால் நிஜத்திலும் ஒரு கலைஞனுக்குரிய தன்மையோடு ஒதுங்கியிருப்பதில்லை. அடுத்த முதல்வர் நான்தானாக்கும்... ஆட்சியமைக்கவே நான்தான் உதவினேன் என்றெல்லாம் வீராவேசப் பேச்சுக்கு மட்டும் குறைவிருக்காது.

திரைப்படங்களுக்கு சேவை வரியை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு வழக்கம் போல சினிமாக்காரர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அனைத்து மாநிலங்களிலும் திரைப்பட சங்கங்கள் இந்த சேவை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. நேரில் மனுக்களும் அளிக்கப்பட்டன.

அடுத்த கட்டமாக ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன. வருகிற 23-ந்தேதி இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கிறது. இந்திய சினிமா பெடரேஷன் இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழ் திரையுலகமும் பங்கேற்கும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறியுள்ளார்.
 

விஜய் நடிக்கும் 'துப்பாக்கி' திடீர் நிறுத்தம் : ஏ.ஆர். முருகதாஸ் அறிவிப்பு


நடிகர் விஜய் நடித்து வரும் துப்பாக்கி படத்தை திடீரென நிறுத்துவதாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அறிவித்துள்ளது விஜய் ரசிகர்களை கோபமடைய செய்திருக்கிறது.

திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் திரைப்படத் தொழிலாளர் சம்மேளமான பெப்சிக்கும் இடையேயான மோதலால் தமிழ் திரைப்பட உலகம் முடங்கியுள்ளது.

இந்நிலையில் கலைப்புலி தாணு தயாரிப்பில் மும்பையில் விஜய்யை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் "துப்பாக்கி" என்ற படத்தை இயக்கி வந்தார்.

பெப்சி- தயாரிப்பாளர்கள் சங்க மோதல் நீடித்து வரும் நிலையில் திடீரென முருகதாஸ் அறிவித்திருப்பது விஜய் மற்றும் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

பெப்சி, தயாரிப்பாளர் சங்க மோதல் எதிரொலியாக பல முக்கியப் படங்களின் படப்பிடிப்பு நடைபெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இயக்குநர் முருகதாஸ், தானாக முன்வந்து துப்பாக்கி படத்தின் ஷூட்டிங்கை காலவரையின்றி நிறுத்தி வைத்திருப்பது விஜய் தரப்பை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து விஜய்யிடம் முருகதாஸ் பேசினாரா என்பது தெரியவில்லை.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரேசகரின் மகன் படமே படப்பிடிப்பைத் தொடர முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது பெப்சி தொழிலாளர்களிடையே கேலியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
 

தாலி கட்டி, குழந்தை பெற்ற பிறகு ஏமாற்றிவிட்டு ஓடினார்! - பிரபு தேவா தந்தை சுந்தரம் மீது வழக்கு


சென்னை: எனக்கு தாலி கட்டி, குழந்தை பெற்ற பிறகு, ஏமாற்றிவிட்டு ஓடிய டான்ஸ் மாஸ்டர் சுந்தரம், அதன் பிறகுதான் பிரபு தேவாவின் தாயை திருமணம் செய்து கொண்டார். இப்போது நான் கஷ்டப்படுகிறேன், ஜீவனாம்சம் தரவேண்டும் என வழக்கு தொடர்துள்ளார் பெண் நடன இயக்குநர் தாரா.

பிரபல டான்ஸ் மாஸ்டர் சுந்தரம். நூற்றுக்கணக்கான படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியவர். இவர் நடிகரும் இயக்குனருமான பிரபுதேவாவின் தந்தை ஆவார். மாஸ்டர் சுந்தரம் மீது பெண் நடன இயக்குனர் தாரா உயர்நீதிமன்றத்தில் உள்ள மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், "டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்துக்கும் எனக்கும் 38 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. எனக்கு அவர் தாலி கட்டினார். ஒன்றாக சேர்ந்து குடும்பம் நடத்தினோம்.

பிறகு ஊருக்கு போய் விட்டு வருவதாக சொல்லி விட்டுப் போனார் அங்கு பிரபு தேவாவின் தாயை திருமணம் செய்து கொண்டார். கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்து விட்டதாக கூறி என்னிடம் வருத்தப்பட்டார்.

எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்றபின் நான்கு மாதம் என்னுடன் சேர்ந்து இருந்தார். அதன் பிறகு என்னை ஏமாற்றி விட்டு ஓடி விட்டார். இதனால் மனதளவில் நான் பாதிக்கப்பட்டு, ஒதுங்கியிருந்தேன். என் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் அவர்தான் தந்தை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனது மகன் தந்தையின் ஆதரவின்றி இருக்கிறான்.

பொருளாதார ரீதியாக நாங்கள் இப்போது மிகுந்த கஷ்டத்தில் உள்ளோம்.

எங்களுக்கு நிவாரணம் கிடைக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது வாழ்க்கையாவது நன்றாக இருக்கட்டும் என்றுதான் இத்தனை நாள் அமைதியாக இருந்தோம். ஆநால் இப்போது நாங்களே இவ்வளவு கஷ்டப்படுவதால், எங்களுக்கு உள்ள உரிமையை கோருகிறோம்," இவ்வாறு மனுவில் கூறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்துக்கு நீதிமன்றத்துக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

ஏற்கெனவே பிரபு தேவா எக்கச்சக்க குடும்ப சிக்கலில் உள்ளார். ரம்லத்தை காதலித்து கல்யாணம் செய்துகொண்டு, மூன்று குழந்தைகளையும் பெற்ற பிறகு பிரிந்துவிட்டார். அடுத்து நயன்தாராவை திருமணம் செய்வதாகக் கூறி, கொஞ்சநாள் சேர்ந்து வாழ்ந்த பிறகு, சமீபத்தில் பிரிந்துவிட்டார். இப்போது இன்னொரு நடிகையுடன் தொடர்பிலிருப்பதாகக் கூறுகிறார்கள்.

பிரபு தேவாவுக்கு முன்பே அவரது தந்தை சுந்தரமும், இதே வேலையைத்தான் செய்திருக்கிறார் என்பது இந்த வழக்கு மூலம் உறுதியாகியுள்ளது.

விதி படத்தில் மறைந்த நடிகை சுஜாதா பேசும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது... 'குடும்ப வழக்கம்... வாழையடி வாழை'!
 

ஒத்துழைக்க மறுக்கிறார் - தமன்னா மீது தெலுங்கு தயாரிப்பாளர்கள் குற்றச்சாட்டு


அடிக்கடி கால்ஷீட் சொதப்புவதாகவும், ஒப்புக் கொண்டபடி அவர் ஒத்துழைப்பு தருவதில்லை என்றும் தயாரிப்பாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழில் போன வருடம் வரை ஓஹோவென்று செல்வாக்குடன் இருந்த தமன்னா, சிறுத்தையில் கார்த்தியுடன் நடித்த பிறகு காணாமல் போய்விட்டார்.

தமிழில் சுத்தமாக வாய்ப்பில்லை. தன்னை அறிமுகப்படுத்திய தெலுங்குக்கே மீண்டும் போனார். அங்கே நிறைய படங்கள் ஒப்புக் கொண்டார்.

இப்போது அங்கு கால்ஷீட் தருவதில் குளறுபடி செய்வதாக தமன்னா மீது தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

'ராச்சா', 'எந்துகட்தே', 'பிரேமந்தா ரீபெல்' ஆகிய மூன்று தெலுங்கு படங்களில் நடிக்கிறார். இப்படங்களை முடித்து கொடுத்து விட்டுத்தான் வேறு படங்களில் நடிப்பேன் என்று உறுதிமொழி அளித்திருந்தாராம்.

ஆனால் இவற்றை முடிப்பதற்கு முன்பே மகேஷ்பாபு ஜோடியாக நடிக்க புதுப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இது ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

தமன்னாவின் கால்ஷீட் குளறுபடியால் 'ராச்சா' படம் முடியாமல் கிடக்கிறதாம். மற்ற தயாரிப்பாளர்களும் தங்கள் படத்தை முடிக்கும்படி வற்புறுத்துகின்றனர்.

எனவே தமன்னா மீது புகார் தர முடிவெடுத்துள்ளார்களாம். ஆனால் இந்தப் புகார்களை மறுத்துள்ள தமன்னாவின் தந்தை, தன் மகள் அனைத்து தயாரிப்பாளர்களையும் சமமாக நடத்துவதாகவும், இன்னும் மகேஷ்பாபு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்றும் கூறினார்.
 

பெப்சி-தயாரிப்பாளர் பிரச்சினையைத் தீர்க்க குழு-பாரதிராஜா


திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் திரைப்படத் தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்க்க, இயக்குநர்கள் சங்கம் சார்பில் குழு அமைக்கப்படும் என்று பாரதிராஜா அறிவித்துள்ளார்..

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கும் இடையில் நிலவும் குழப்பமான பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வு காண, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டம், சென்னை பாம்குரோவ் ஓட்டலில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்க தலைவர் டைரக்டர் பாரதிராஜா தலைமை தாங்கினார். செயலாளர் அமீர், துணைத்தலைவர் சேரன், பொருளாளர் ஜனநாதன், மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் சிறப்பு அழைப்பாளர்களாக பாலுமகேந்திரா, பாக்யராஜ், விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, பாலாஜி சக்திவேல், லிங்குசாமி, ஆர்.சுந்தர்ராஜன், சீமான், ஏ.வெங்கடேஷ், டி.கே.சண்முகசுந்தரம், சுந்தர் சி, வெற்றிமாறன், பாண்டியராஜன், மாதேஷ், சுசீந்திரன், சீனுராமசாமி, கரு.பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் பெப்சி தொழிலாளர்கள் சம்மேளனம் இவற்றுக்கு இடையே ஏற்பட்டுள்ள ஊதிய பிரச்சினைகளுக்கு நல்ல முடிவு ஏற்பட, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நடுநிலை வகித்து பேச்சுவார்த்தை நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிராஜா, பிரச்சனைக்குத் தீர்வு காண தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்படும். இந்த குழு தொழிலாளர்கள் சம்மேளனத்துடனும், தயாரிப்பாளர்கள் சங்கத்துடனும் தனித்தனியாகவும், கூட்டாகவும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான நல்ல முடிவுகளை உருவாக்கும் என்றார்.
 

சிம்பு எப்பக் கூப்பிட்டாலும் வருவேன்: தீக்ஷா!


சிம்பு எப்போது என்னை அழைத்தாலும் அடுத்த விநாடியே அவருக்கு டேட் கொடுக்க நான் தயார். அவரைப் பற்றி யார் என்ன சொன்னாலும் எனக்குக் கவலை இல்லை என்று அதிரடியாக கூறியுள்ளார் நடிகை தீக்ஷா சேத்.

தெலுங்கில் நடித்துக் கொண்டுள்ள தீக்ஷா, தமிழில் ராஜபாட்டை படம் மூலம் அறிமுகமானார். விக்ரமுடன் இணைந்து கலக்கிய அவர் தற்போது சிம்புவைக் குறி வைத்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் சிம்பு ஒரு பிரச்சனை பிடித்த ஆள். சிம்பு என்றாலே வம்பு தான். அதனால் அவருடன் நடிக்கும் போது எச்சரிக்கையாக இருக்கவும் என்று யாரோ தீக்ஷாவுக்கு அட்வைஸ் செய்துள்ளார்கள் போல. ஆனால் அதை ஒரேயடியாக நிராகரித்து விட்டாராம் தீக்ஷா.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் சிம்புவின் தீவிர ரசிகை. அவரைப் பற்றி யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன். அவர் தன்னுடைய புதிய படத்தில் நடிக்க அழைத்தால், எப்போது கூப்பிட்டாலும் நான் உடனே ஒத்துக் கொள்வேன். அடுத்த விநாடியே அவருக்காக டேட் கொடுக்க உடன்படுவேன் என்று கூறியுள்ளார்.

தீக்ஷா இப்படி புல்லரித்துக் கூறியதைக் கேட்டு சிலிர்த்துப் போய் விட்டாராம் சிம்பு. உடனே, தனது வேட்டை மன்னன் படத்தில் தீக்ஷாவைப் போடுமாறு கூறி விட்டாராம்.

தீக்ஷா பிழைத்துக் கொள்வார்...!
 

மல்லிகை, நயன் மயங்கும் மலரல்லவோ...!


நடிகை நயன்தாராவுக்கு மல்லிக்கைப் பூ என்றால் அவ்வளவு பிரியமாம். அதனால் எங்கு வந்தாலும் தலை நிறைய மல்லிகைப்பூ வைத்துக் கொள்ளத் தவறுவதில்லையாம்.

மல்லிகைப்பூவுக்கு மயங்காத பெண்ணும் உண்டோ. அதற்கு நயன்தாராவும் விதிவிலக்கல்ல. படங்களில் எப்பொழுதும் மல்லிகைப்பூவுடன் வர முடியாதல்லவா அதனால் அவர் தான் எங்கு சென்றாலும் தலை நிறைய மல்லிக்கைப் பூ வைத்து மங்களகரமாகச் செல்கிறார்.

படங்களில் சேலை கட்டி, பாந்தமாக வரும் கேரக்டர்கள் என்றால் நயனுக்கு ஜாலியாகி விடுகிறதாம். காரணம், மல்லிகைப் பூவை அள்ளி வைத்துக் கொள்ளலாம் அல்லவா. அதேசமயம், பெரும்பாலும் மாடர்ன் உடையில், தலைமுடியை விரித்துப் போட்டு வருவதால் மல்லிகைப்பூ வைக்க முடியவில்லையே என்று நயனுக்கு ஏக்கமாக உள்ளதாம்.

மல்லிகை நயன் மயங்கும் மலரல்லவோ...!
 

ஆசையைத் தூண்டுகிறார் வித்யா பாலன்...ஜாக்குலின்!


சிங்களத்து நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு வித்யா பாலன் ரொம்பப் பிடிக்குமாம். அவரைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது, ஆசையைத் தூண்டும் உடல் அமைப்பும், கவர்ச்சியும் அவருக்கு இருப்பதாக கூறுகிறார் ஜாக்குலின்.

இதுகுறித்து ஜாக்குலின் கூறுகையில், வித்யா பாலன்தான் எனக்கு மிகவும் பிடித்த நடிகை. ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய அத்தனையும் அவரிடம் உள்ளது. அழகு, கவர்ச்சி, ஆதிக்கம், திறமை என அத்தனையும் அவரிடம் குவிந்து கிடக்கிறது.

அழகாக மட்டுமல்லாமல், கவர்ச்சியாக மட்டுமல்லாமல், நல்ல நடிப்பையும் கொடுக்க்க கூடிய திறமைசாலி வித்யாபாலன்தான்.

மேலும் திரையில் மட்டுமல்லாமல், திரைக்கு வெளியிலும் கூட நல்ல மனுஷியாக இருப்பவர் வித்யாபாலன். உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசாதவர். இயல்பானவர். தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்.

அவரைப் பார்க்கவே பொறாமையாக இருக்கிறது. ஆசையைத் தூண்டும அழகு அவருடையது. அவர் நடித்த டர்ட்டி பிக்சர்ஸ் என்னை மிகவும் கவர்ந்து விட்டது என்று ஜொள்ளு வடிக்காத குறையாக கூறியுள்ளார் ஜாக்குலின்.

இந்த ஜாக்குலின் இலங்கையிலிருந்து மும்பை வந்து இந்திப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

ரசிகர்களின் விருப்பத்துக்குரிய பெண் கரீனா கபூர்-10வது இடத்தில் 'ஐஸ்'-ஸ்ருதிக்கு 15வது இடம்!


ஐடைம்ஸ் 2011 கருத்துக் கணிப்பில், அந்த ஆண்டின் ரசிகர்களின் அதிக விருப்பத்துக்குரிய பெண்ணாக கரீனா கபூர் தேர்வாகியுள்ளார். முன்னாள் கனவுக் கன்னியான ஐஸ்வர்யா ராய் 10வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

ஐடைம்ஸ் 2011ம் ஆண்டின் அதிக விருப்பத்துக்குரிய பெண் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் கரீனா கபூர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 2வது இடம் காத்ரீனா கைபுக்குக் கிடைத்துள்ளது. 3வது இடத்தைப் பிடித்துள்ளார் தீபிகா படுகோன்.

4வது இடத்தில் பிரியங்கா சோப்ராவும், 5வது இடத்தில் அனுஷ்கா சோப்ராவும் உள்ளனர்.

தி டர்ட்டி பிக்சர்ஸ் மூலம் லைம்லைட் எகிறிப் போய்க் காணப்படும் வித்யா பாலன் 6வது இடத்தைப் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் சிங்கள நடிகை ஜாக்குலின் இருக்கிறார்.

நர்கீஸ் பக்ரி 8வது இடத்திலும், கங்கனா ரனவத் 9வது இடத்திலும் காணப்படுகின்றனர்.

முன்னாள் கனவுக் கன்னியான ஐஸ்வர்யா ராய்க்கு 10வது இடமே கிடைத்துள்ளது. ஒரு காலத்தில் தனது கண் அழகாலும், வசீகரத்தாலும் ரசிகர்களை வாரிக் குவித்து வைத்திருந்த ஐஸ்வர்யா ராய் தற்போது பின்னுக்குப் போய் விட்டார்.

ஸ்ருதி ஹாசனுக்கு இந்தப் பட்டியலில் 15வது இடமும், ஆசினுக்கு 17வது இடமும் கிடைத்துள்ளன.

திரிஷாவை 19வது இடத்திலும் இலியானாவை 20வது இடத்திலும் ரசிகர்கள் வைத்துள்ளனர். சமீரா ரெட்டி 29வது இடத்தில் இருக்கிறார்.
 

தேனில் முக்கிய ஆப்பிள் ரிச்சா...!: 'ஜொள்'கிறார் வெங்கி!


நடிகைகளின் அழகு குறித்து வர்ணித்துப் பேசுவோரைப் பார்த்துள்ளோம். ஆனால் வழுக்கி விழும் அளவுக்கு ஜொள்ளு விட்டுள்ளார் திரைப்பட புகைப்படக்காரர் வெங்கட்ராமன். நடிகை ரிச்சா தேனில் முக்கிய எடுத்த ஆப்பிள் போல இருக்கிறாராம் வெங்கட்ராமனின் பார்வையில்.

நடிகை ரிச்சா தனுஷுடன் சேர்ந்து மயக்கம் என்ன என்ற படத்தில் நடித்துள்ளார். அதேபோல சிம்புவுடன் இணைந்து ஒஸ்தி படத்திலும் திறமை காட்டியுள்ளார்.

இந்த நிலையில் ரிச்சாவை அழகோ, அழகு என்று அவர் அழகைப் பாராட்டி மாய்கிறார் வெங்கட்ராமன். இவர் கோலிவுட்டில் பிரபலமான நடிகைகளை புகைப்படம் எடுத்து ஆண்டுதோறும் காலண்டர் வெளியிடுகிறார். இந்த ஆண்டு காலண்டரில் ரிச்சா கங்கோபத்யாயவின் புகைப்படமும் உள்ளது. திரிஷாவையும் புதுக் கோணத்தில் தனது கேமரா கண்கள் மூலம் பார்த்து கிளர்ச்சியூட்டும் படத்தை காலண்டரில் ஏற்றியுள்ளார்.

ரிச்சா குறித்து வெங்கட் கூறுகையில்,

ரிச்சா தேனில் முக்கிய எடுத்த ஆப்பிள் போன்று உள்ளார். ஒரு பெண்ணின் கண்கள் அழகாக இருந்தால் அவர் என்ன ஆடைகள் அணிகிறார் என்று யாரும் பார்ப்பதில்லை. அவர் அணியும் ஆடைகள் அவருக்கு மட்டும் தான் பொருந்தும். எப்பொழுதும் வற்றாமல் கொட்டும் அருவி ரிச்சா என்று ஜொள்ளருவியில் நீந்தித் திளைத்துள்ளார் வெங்கி.

ரிச்சாவிடம் கேட்டால், ஆமாம் உண்மைதான், நான் அவ்ளோ அழகாக இருப்பதைப் பார்த்து வெங்கட்ராமைப் பாராட்டினேன் என்கிறார்.
 

'பிகினி'யில் நுழைகிறாரா ஜனனி ஐயர்?


அவன் இவன் புகழ் ஜனனி ஐயர் தனது புதிய படத்தில் பிகினியில் நடிக்க தயாராக உள்ளார் என்று கூறப்படுகிறது.

இயக்குனர் பாலாவின் அவன் இவன் படத்தின் மூலம் புகழ் பெற்றவர் நடிகை ஜனனி ஐயர். அவன் இவனில் கான்ஸ்டபிளாக நடித்த அவரின் நடிப்பு பாராட்டு வாங்கினாலும் யாரும் அவரை அடுத்த படத்திற்கு அழைக்கவில்லை.

பொறுத்துப் பார்த்த அவர் இனி வரும் படங்களில் ஆடை குறைப்பு செய்து, மாடர்னாக நடிக்கவிருப்பதாக அதிரடியாக அறிவி்ததார். அப்படியாவது பட வாய்ப்புகள் வராதா என்று பார்க்கிறார்.

ஜனனி தற்போது பாகன் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் மார்டர்ன் உடையில் வந்து ரசிகர்களை கிறங்க வைக்கவிருக்கிறாராம்.

இது குறித்து அவர் கூறுகையில், என்னுடைய முதல் படத்திற்குப் பிறகு என்னை புதிதாகக் காட்டும் படத்தை எதிர்பார்த்தேன். பாகன் படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறேன் என்றார்.

வாய்ப்பு வருகிறது என்றால் பிகினியில் வரச் சொன்னாலும் ஓகே என்ற மனநிலையில் உள்ளாராம். பிகினி அணிவது சமீப காலமாக தமிழ் சினிமாவிலும் பிரபலாகி வருகிறது. நயனதாரா பில்லா படத்தில் வந்து போன காட்சியை ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை. அதேபோல நமீதாவும் அழகிய தமிழ் மகனிலும் பயமுறுத்தினார். ஷ்ரியாவும் தன் பங்குக்கு ரசிகர்களை எகிற வைத்தார்.

இப்போது ஜனனி ஐயரும் 'பிகினி குளத்தில்' குதிக்கப் போவதாக கூறுவது ரசிகர்களுக்கு சந்தோஷமான செய்திதான்...!
 

பெப்சி ஊழியர்கள் உண்ணாவிரதம்-சுத்தமாக முடங்கியது படப்பிடிப்புகள்


தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான பெப்சிக்கும் இடையிலான மோதலின் அடுத்த கட்டமாக பெப்சி தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர்.

தயாரிப்பாளர்களுக்கும், பெப்சிக்கும் இடையே சம்பள உயர்வு பிரச்சினையில் மோதல் வெடித்துள்ளது. திரைப்பட தொழிலாளர்கள் புதிய ஊதிய உயர்வை அறிவித்துள்ளனர். ஆனால் இதை தயாரிப்பாளர்கள் நிராகரித்து விட்டனர். இதனால் திரையுலகம் பிளந்து போயுள்ளது. படப்பிடிப்புகள் ஸ்தம்பித்துள்ளன.

பெப்சி தொழிற்சங்கத்துடன் உறவு முறிந்தது என்றும் தன்னிச்சையாக தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் பட அதிபர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளது. முன்னணி நடிகர்களின் படப்பிடிப்புகள் நின்று போயுள்ளன.

2 வாரங்களாக படப்பிடிப்புகள் நடைபெறாமல் உள்ளது. இரு தரப்புமே பிடிவாதம் பிடித்து வருவதாலும், சமரச முயற்சிகளுக்குப் பலன் இல்லாததாலும் திரையுலகம் ஸ்தம்பித்துக் கிடக்கிறது.

இந்த நிலையில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி, வடபழனியில் உள்ள இசை அமைப்பாளர்கள் சங்க அலுவலக வளாகத்தில் பெப்சி தொழிலாளர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை 8 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது. உண்ணாவிரதத்தை நடிகர் ராதாரவி தொடங்கி வைத்தார். அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத் தலைவர் கல்வேஷ் திவாரி தலைமை வகித்தார். பெப்சி தலைவர் ராமதுரை, செயலாளர் சிவா, பொருளாளர் சண்முகம் பங்கேற்றனர்.

இந்த உண்ணாவிரதத்தில் 23 சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். மேலும் உண்ணாவிரதப் போராட்டத்தை வாழ்த்தி இயக்குநர்கள் அமீர், ஜனநாதன், சண்டை மாஸ்டரும், இயக்குநரும், முன்னாள் பெப்சி தலைவருமான பெப்சி விஜயன் உள்ளிட்டோர் பேசினர்.

முன்னதாக எம்.ஜி.ஆர். சமாதி அருகே உண்ணாவிரதம் நடத்த அனுமதி கோரியிருந்தனர். ஆனால் காவல்துறை அனுமதி தராததால் இங்கு போராட்டம் நடந்தது.
 

திருநங்கைக்கு வாய்ப்பு தேடும் அனுஷ்கா!


தன்னுடைய உதவியாளராக இருக்கும் திருநங்கைக்கு வாய்ப்பு தேடி நடிக்க உதவி வருகிறார் நடிகை அனுஷ்கா.

கோலிவுட்டிலும் சரி, டோலிவுட்டிலும் சரி ரொம்ப பிஸியாக இருப்பவர் நடிகை அனுஷ்கா. அவரின் உதவியாளர் ஒரு திருநங்கை என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள் அவர் வித்தியாசமாக திருநங்கையை உதவியாளராக வைத்துள்ளார். அந்த அதிர்ஷ்டக்கார திருநங்கை யார் என்று தானே நினைக்கிறீர்கள்?

வானம் படத்தில் அனுஷ்காவுடனேயே இருப்பாரே ஒரு திருநங்கை அவர் தான் அந்த அதிர்ஷ்டசாலி. அந்த உயர்ந்த நடிகைக்கு தனது உதவியாளர் மீது அவ்வளவு பாசமாம். தான் நடிக்கும் படங்களில் ஏதாவது சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பளிக்கும்படி கேட்கிறாராம்.

அனுஷ்கா கடைக்கண் படாதா என்று இயக்குனர்கள் காத்திருக்கும் வேளையில் அவரே யாரையாவது சிபாரிசு செய்தால் வேண்டாம் என்றா சொல்லப் போகிறார்கள்.

அதனால் அந்த திருநங்கை சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே ஆறடி இருக்கும் அனுஷ்கா அவரது இந்த செயலினால் மேலும் உயர்ந்து விட்டார்.
 

அபிஷேக் பச்சனுக்கு வயது 36: குவியும் வாழ்த்துக்கள்


அபிஷேக் பச்சன் தனது 36வது பிறந்தநாளை இன்று கொண்டாடி மகிழ்கிறார். இதையொட்டி அவருக்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

பாலிவுட்டின் முதல் குடும்பம் என்று சொல்லும் அளவுக்கு பெயர் எடுத்துள்ள பச்சன் குடும்ப வாரிசு அபிஷேக் பச்சன் இன்று தனது 36வது பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்கிறார். இது அவருக்கு ஸ்பெஷலான பிறந்தநாள். அதற்கு காரணம் ஜஸ்வர்யா தன்னைப் போன்றே அழகான மகளைப் பெற்றுக்கொடுத்துள்ளது தான். தனது மகள் வேகமாக வளர்வதாக அபிஷேக் டுவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளவர்களில் சிலரின் விவரங்கள்,

சோனம் கபூர்: ஜூனியர் பச்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனக்கு தெரி்ந்தவர்களிலேயே நீங்கள் தான் மிகவும் நல்ல மனிதர்.

பிபாஷா: ஹேப்பி, ஹேப்பி பர்த்டே ஜூனியர் பச்சன்! லவ் அன்ட் ஹக்ஸ் ஃபிரம் பிப்பி.

நீல் நிதின் முகேஷ்: எனது மூத்த சகோதரருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். லாட்ஸ் ஆப் லவ் டு யூ பிரதர்.

ராணா டக்குபதி: அபிஷேக் பச்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இவ்வாறு பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
 

'வாடா செல்லம்' பட நாயகி கரோலின் விபச்சார வழக்கில் கைது!


புனே: வாடா செல்லம் உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் ஹீரோயினாக நடித்தவரான நடிகை கரோலின் மரியத், புனேவில் விபச்சாரம் செய்ததாக போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புனேவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலி்ல வைத்து அவரை கையும் களவுமாக போலீஸார் பிடித்தனர்.

22 வயதான கரோலின் மரியத், 2 தமிழ்ப் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளாராம். இதுதவிர சில நகைக் கடை, துணிக்கடை விளம்பரங்களிலும் இவர் நடித்துள்ளாராம்.

இவருடன் ஒரு இரவை செலவிட ரூ. 3 லட்சம் வரை பணம் கொடுக்க வேண்டுமாம். இதுகுறித்து மூத்த இன்ஸ்பெக்டர் பானுபிரதாப் பார்கே கூறுகையில், வலை விரித்து இந்தப் பெண்ணை நாங்கள் பிடித்துள்ளோம். சென்னையில் இவர் பிரபலமானவர் என்று கூறப்படுகிறது. சில படங்களில் இவர் ஹீரோயினாக நடித்துள்ளாராம்.

மரியத்துடன் அவரது மேலாளர் ராஜ்குமார் என்பவரும் சிக்கியுள்ளார். மரியத் மீது விமான் நகர் போலீஸில் நிலையத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது என்றார்.

வாடா செல்லம் என்ற தமிழ்ப் படத்தில் கரோலின் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் மகேந்திரன் நாயகனாக நடித்துள்ளார்.
 

ரஜினியைச் சாடுகிறார் சர்ச்சை சாரு நிவேதிதா!


சென்னை: சினிமா நடிகர்களை வைத்து இலக்கியக் கூட்டங்களை நடத்தும் போக்கு அதிகரித்து விட்டதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சாடியுள்ளார் சர்ச்சை எழுத்தாளரான சாரு நிவேதிதா.

ஒரு பெண்ணிடம் சாட்டில் சாரு நிவேதிதா அநாகரீகமாக பேசினார் என்று முன்பு சர்ச்சை வெடித்தது. இதனால் அவரது ரஜினி விமர்சனம் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கனடா நாட்டின் இயல் விருது பெற்றிருக்கிறார். இதற்கான பாராட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் எழுத்தாளர்கள், திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் கலந்து கொண்டார். மிகச் சிறப்பான உரையையும் அவர் கொடுத்திருந்தார்.

ஆனால் தற்போது ரஜினியை கடுமையாக சாடியுள்ளார் சாரு நிவேதிதா. அவர் எழுதிய ஒரு புத்தகத்தின் விமர்சனக் கூட்டத்தை சென்னையில் நடத்தினர்.இந்த விழாவில் நிவேதிதா பேசுகையில், ஒரு எழுத்தாளன் அதிக வாசகர்களைக் கொண்டு கூட்டம் நடத்தி விட்டார். அவரை மிஞ்சி நிற்க வேண்டும் என்ற நோக்கில், நூல் வெளியீட்டுக் கூட்டங்களையும், விமர்சனக் கூட்டங்களையும் நடத்தும் போக்கு, தமிழ் இலக்கியவாதிகள் மத்தியில் நிலவுகிறது. அதற்காக, சினிமா நடிகர்களைக் கொண்டு பாராட்டுக் கூட்டங்களை நடத்திக் கொள்கின்றனர்.

தமிழ் இலக்கியங்களைப் படியுங்கள் என, சினிமா நடிகர் சொல்லும் அளவுக்கு, நிலைமையை மோசமாக்கி வருகின்றனர். இது ஆரோக்கியமான போக்கை, தமிழ் இலக்கியத்தில் ஏற்படுத்தவில்லை.

காமத்தை மையமாகக் கொண்டு நாவல்களை எழுதுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்புகிறது. இன்றைய இளைஞர்கள், காமத்தால் சீரழியும் போது அதை எழுதாமல் இருக்க முடியாது.

ஆங்கிலப் புனை கதைகளுக்கு இருக்கும், வரவேற்பு தமிழ் புனை கதைகளுக்கு இல்லை. இந்த நிலை மாற வேண்டும் என்று சமூகத்திற்குத் தேவையான பல கருத்துக்களைத் தெரிவித்தார் நிவேதிதா.

சாரு நிவேதிதா எப்போதுமே சர்ச்சையாகப் பேசக் கூடியவர், சர்ச்சையான எழுத்துக்களை எழுதுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது புதிய சர்ச்சைக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார்.
 

ரஜினியின் கோச்சடையான் - அசத்தல் ஸ்டில்... அதிர வைக்கும் '8 பேக்ஸ்' ரஜினி!


ஓங்கி உயர்ந்த மலையுச்சி... அதில் விண்ணுக்குமாக மண்ணுக்குமாக, ஒற்றைக் காலில் ஆக்ரோஷமாக நிற்கும் ரஜினி. ஜடா முடியும் அதில் தங்க நிற சூலமும் நீண்ட தாடியுமாக நிற்கும் ரஜினி, இடையில் நீல நிற பட்டுக் கச்சை அணிந்திருக்கிறார். அந்தக் கச்சையின் இன்னொரு நுனி விண்ணுக்கு நீள்கிறது.

கிட்டத்தட்ட சிவபெருமானின் ருத்ரதாண்டவம் மாதிரியான ஒரு தோற்றம் அது. பார்த்த உடன் சிலிர்க்க வைக்கிறது.

இந்த ஸ்டில்லில் ரஜினியின் உடல் 8 பேக்ஸ் கொண்டதாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. Photorealistic படம் என்பதால் இது சாத்தியம்தான்.

இந்த ஸ்டில் வெளியானது முதல் மீடியா மற்றும் ரசிகர் மத்தியில் ஒரே பரபரப்பு.

எங்கும் ரஜினியின் கோச்சடையான் ஸ்டில்களே. அதற்கேற்ப, ரஜினியும் பாரபட்சமின்றி அத்தனை நாளிதழ்களுக்கும் கோச்சடையான் டிஸைனை விளம்பரமாகக் கொடுத்திருந்தார்.

இந்தியாவின் அத்தனை முன்னணி இணையதளங்களும் 'கோச்சடையான் பர்ஸ்ட் லுக்' என்ற தலைப்பில் தமிழ், ஆங்கில டிஸைன்களை வெளியிட்டிருந்தனர்.

கோச்சடையான் பட அறிவிப்பு வெளியானபோது, ரஜினி ரசிகர்களுக்கே அதில் பெரிய நம்பிக்கை இருக்கவில்லை. ஆனால் இப்போது முதல் ஸ்டில்லைப் பார்த்ததிலிருந்து அவர்களால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. அந்த வகையில் கே எஸ் ரவிக்குமார் - சௌந்தர்யா ரஜினி குழுவுக்கு எடுத்த எடுப்பிலேயே வெற்றிகிடைத்துள்ளது எனலாம்!!
 

பேச அழைத்தது தமிழக அரசு: பெப்சி - தயாரிப்பாளர் மோதல் இன்றுடன் முடிகிறது?


பெப்ஸி தொழிலாளர் அமைப்புக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே எழுந்துள்ள மோதல் இன்று முடிவுக்கு கொண்டுவரப்படும் என்று தெரிகிறது. அதற்கான முயற்சியில் மாநில தொழிலாளர் நலத்துறையும் இறங்கியுள்ளதால், தயாரிப்பாளர்கள் இறங்கிவரும் சூழல் உருவாகியுள்ளது.

மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பெப்ஸி தொழிலாளர்களுக்கான சம்பளம் உயர்த்தப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தோடு 8-வது ஊதிய ஒப்பந்தம் முடிந்த நிலையில், புதிய ஒப்பந்தம் ஏற்படுவதில் இழுபறி நீடித்து வருகிறது. இதனால் பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பெப்ஸி - தயாரிப்பாளர் சங்கங்களின் இடையேயான சம்பளப் பிரச்னையில் தீர்வு ஏற்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரு சங்கங்களும் கோரிக்கை வைத்துள்ளன.

இந்நிலையில் பெப்ஸி அமைப்பின் சார்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. பெப்ஸி அமைப்பின் 24 சங்கங்களின் சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

சென்னை வடபழனியில் உள்ள திரை இசைக் கலைஞர்களின் சங்க வளாகத்தில் காலை 9 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதம் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. பெப்ஸி அமைப்பின் தலைவர் எம்.ஏ.ராமதுரை, பொதுச்செயலாளர் ஜி.சிவா, பொருளாளர் அங்கமுத்து சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகளும், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பெப்ஸி அமைப்பின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இயக்குநர்கள் அமீர், எஸ்.பி.ஜனநாதன், எஸ்.எஸ்.ஸ்டேன்லி, பெப்ஸியின் முன்னாள் தலைவர் பெப்ஸி விஜயன் உள்ளிட்டோரும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.

உண்ணாவிரதத்தில் பேசிய பலர், திரைப்படத் தொழிலாளர்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய சம்பளத்தைத்தான் கேட்கிறோம். அதை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர்.

இந்த உண்ணாவிரதத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்களைக் காப்பாற்றும் வகையில் தமிழக அரசு இப்பிரச்னையில் தலையிட வேண்டும். தொழிலாளர்களின் நன்மைக்காக தயாரிப்பாளர்கள் சங்கம் உடனடியாக ஊதியத்தைப் பேசி முடிக்க வேண்டும்.

இப் பிரச்சினையில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ள நடிகர் சங்கத்துக்கு நன்றி. தனி குழு அமைத்து பேசி முடிக்க முடிவெடுத்துள்ள இயக்குநர் சங்கத்துக்கு நன்றி என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் உண்ணாவிரதக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

பேச்சுவார்த்தைக்கு அழைத்தது தமிழக அரசு

இதற்கிடையே, தொழிலாளர் நலன் கருதி, இப்பிரச்சினையில் பேசித் தீர்வு காண பெப்சி நிர்வாகிகள் மற்றும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து பிரதிநிதிகளை அழைத்துள்ளது தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை.

இன்றே இப்பிரச்சினைக்கு இறுதி முடிவு காண வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா உத்தவிட்டுள்ளதால், அநேகமாக பிரச்சினை முடிவுக்கு கொண்டுவரப்படும் என தொழிலாளர் தரப்பு நம்புகிறது.

நேற்றைய உண்ணாவிரதப் போராட்டத்தின்போது, மேடையில் முதல்வர் ஜெயலலிதா படத்துடன் பிரமாண்டமாக காணப்பட்ட வாசகம்: 'தாயே காப்பாற்று'!
 

மணிரத்னத்தின் கடல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'ராவணன்' படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் படத்துக்கு 'கடல்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் கார்த்திக் மகன் கவுதம் ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். முக்கிய கேரக்டரில் அர்ஜுன், அரவிந்தசாமி நடிக்கின்றனர். மேலும் லட்சுமி மஞ்சு, தம்பி ராமையா உட்பட பலர் நடிக்கின்றனர். தென்மாவட்ட மீனவ கிராம பின்னணியில் இக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இலங்கை ராணுவத்தால் மீனவர்கள் தாக்கப்படும் விஷயமும் அதைத்தொடர்ந்து நடக்கும் போராட்டங்களையும் இப்படம் பேசும் என்று கூறப்படுகிறது. மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். வைரமுத்து, மதன் கார்க்கி பாடல்கள் எழுதுகின்றனர். தமிழ், தெலுங்கில் தயாராகும் இப்படத்தில் நடிப்பது பற்றி சமந்தா கூறும்போது, ''இது காதல் கதை. வரும் 11ம் தேதி ஷூட்டிங்கில் கலந்துகொள்கிறேன். மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது கனவு. அது நனவாகியிருக்கிறது'' என்றார்.


 

தயாரிப்பும் நடிப்பும் இரு கண்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு. தற்போது 'மறந்தேன் மன்னித்தேன்' என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். மணிரத்னத்தின் 'கடல்' படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அவர் கூறியதாவது: தயாரிப்பு, நடிப்பு இரண்டும் அப்பா கற்றுக் கொடுத்ததுதான். தெலுங்கு படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் 'மறந்தேன் மன்னித்தேன்' முதல் படம். 1986ம் ஆண்டு கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலர் இறந்தனர். அந்த விபத்துக்குள் ஒரு காதலும் இருந்தது. அதுதான் படத்தின் கதை. ஹாலிவுட் 'டைட்டானிக்' மாதிரியான கதை. இதற்காக கோதாவரி ஆற்றில் தொடர்ந்து பத்து நாட்கள் கழுத்தளவு தண்ணீரில் நானும் ஆதியும் நடித்தோம். இன்னும் 25 நாட்கள் நடிக்க வேண்டியது இருக்கிறது. பெரிய பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாரித்து வருகிறேன். தூத்துக்குடியில் பிறந்து காஞ்சிபுரத்தில் புடவை விற்கிற பெண்ணாக நடிக்கிறேன். மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. அது இப்போது நிறைவேறியிருக்கிறது. இந்தப் படத்துக்கு பிறகு தமிழில் எனக்கு நல்ல இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன். 'பருத்தி வீரன்', 'சுப்பிரமணியபுரம்' படங்களை பார்த்துவிட்டு இந்தப் படங்களில் நடிக்கவில்லையே என்று ஏங்கி இருக்கிறேன். அதுபோன்ற கதையம்சமுள்ள படங்களில் நடிக்க வேண்டும் என்பதே ஆசை. படங்களையும் தொடர்ந்து தயாரிப்பேன். நடிப்பும், தயாரிப்பும் இரு கண்கள்.


 

தமிழ் கற்கிறார் ரிச்சா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழில் தனுஷ் ஜோடியாக 'மயக்கம் என்ன', சிம்பு ஜோடியாக, 'ஒஸ்தி' படங்களில் நடித்தவர் ரிச்சா கங்கோபாத்யாய். தற்போது பெங்காலி படத்தில் நடித்து வரும் அவர் கூறியதாவது: பெங்காலி படமான 'சிங்கா'வின் கிளைமாக்ஸ் ஷூட்டிங் நடந்து வருகிறது. இது தமிழில் வெளியான 'சிறுத்தை' படத்தின் ரீமேக். தென்னிந்திய மொழிகளில் நடித்துவிட்டு எனது தாய்மொழியில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்போது எனது உதவியாளர் மூலமாக தமிழ் கற்று வருகிறேன். அதாவது இந்தி வழியாக தமிழ். தெரியாத ஒரு மொழியை கற்றுக்கொள்வது சிறப்பாகவே இருக்கிறது. மொழி தெரிந்து நடிக்கும்போது இன்னும் சிறப்பாக உணரலாம். தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். தமிழில் நடிக்க பேச்சு வார்த்தை நடக்கிறது. எனது இந்தி அறிமுகம் சுசி கணேசன் படம் மூலமாக நிறைவேறியிருக்க வேண்டும். கால்ஷீட் பிரச்னையால் அது நடக்கவில்லை. விரைவில் வேறு படம் மூலமாக அறிமுகமாவேன் என நினைக்கிறேன்.


 

ஜெய் ஜோடியாக அபிநயா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'நாடோடிகள்', 'ஈசன்' படங்களில் நடித்த அபிநயா, அடுத்து ஜெய் ஜோடியாக நடிக்கிறார். இதை பிரபுதேவாவிடம் இணை இயக்குனராக இருந்த பிரேம் சாய் இயக்குகிறார். கவுதம் வாசுதேவ் மேனனின் போட்டோன் கதாஸ், கணேஷின் வி.டி.வி புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. ஏப்ரலில் ஷூட்டிங் தொடங்குகிறது. இதுபற்றி ஜெய்யிடம் கேட்டபோது, 'டைட்டில் முடிவாகவில்லை. கொரியர் கம்பெனியில் வேலை பார்க்கும் இளைஞன் வேடம். சந்தானம், கணேஷ் காமெடி படத்தின் ஹைலைட்டாக இருக்கும்' என்றார்.


 

கே.ஆர்.விஜயா காலில் விழுந்த பக்தர்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
புதுமுகங்கள் சந்துரு, தென்னா மற்றும் கே.ஆர்.விஜயா, பொன்னம்பலம் உட்பட பலர் நடிக்கும் படம், 'விருதுநகர் சந்திப்பு'. எழுதி, தயாரித்து, இயக்கும் வி.எஸ்.டி.ரெங்கராஜன் கூறியதாவது: கல்லூரியில் படிக்கும் ஹீரோ, ஹீரோயின் காதலிக்கின்றனர். திருமணம் செய்துகொள்ள முடிவு செய்யும்போது, ஹீரோயின் தந்தைதான், தன் பெற்றோரை கொன்றவர் என்பது ஹீரோவுக்கு தெரிகிறது. அடுத்து என்ன நடக்கிறது என்பது கதை. விருதுநகரில் நடந்த கோயில் திருவிழாவில், கேமராவை மறைத்து வைத்து, கே.ஆர்.விஜயா தீச்சட்டி சுமந்து வரும் காட்சியைப் படமாக்கினோம். அப்போது பக்திப் பரவசத்தில் ஆழ்ந்த பல பக்தர்கள், ஷூட்டிங் என்று தெரியாமல் கே.ஆர்.விஜயாவின் காலில் விழுந்து வணங்கினர். ஷூட்டிங் முடிந்து விட்டது. படத்தைப் பார்த்த சென்சார் குழு, 'யு' சான்றிதழ் வழங்கியது. இம்மாதம் படம் ரிலீசாகிறது.


 

சினிமாவுக்கு திரும்புகிறார் ருக்மணி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'பொம்மலாட்டம்' படத்தில் அறிமுகமானவர் ருக்மணி விஜயகுமார். பிறகு 'ஆனந்த தாண்டவம்' படத்தில் நடித்தார். பின்னர் படங்களில் நடிக்காமல் நடனத்தில் கவனம் செலுத்தினார். இப்போது மீண்டும் நடிக்க வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 'பொம்மலாட்டம்' நான் மிகவும் எதிர்பார்த்த படம். அதில் எனது வித்தியாசமான நடிப்பை எல்லோரும் பாராட்டினார்கள். ஆனால் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால் அதிக வாய்ப்புகள் வரவில்லை. அதனால் நடனத்தின் பக்கம் கவனம் செலுத்தினேன். உலகம் முழுவதும் சென்று நடன நிகழ்ச்சிகள் நடத்தினேன். இப்போது நடிப்பின் மீது ஆர்வம் வந்திருக்கிறது. கதை கேட்க ஆரம்பித்திருக்கிறேன். இந்த ஆண்டு தெலுங்கில் ஒரு படமும், தமிழில் ஒரு படமும் நடிக்கிறேன். இனி நடிப்பு, நடனம் இரண்டிலும் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறேன்.


 

3 பேர் 3 காதலில் விமல்-பானூ

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வசந்த் இயக்கும் '3 பேர் 3 காதல்' படத்தில் இரண்டு புது ஹீரோயின் அறிமுகமாகிறார்கள். இதுகுறித்து அவர் கூறியதாவது: 60 சதவிகித படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. சிங்கப்பூர், ராஞ்சி, நாகர்கோவில், சென்னை பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. பாடல்களுக்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருக்கிறோம். அர்ஜுன், சேரன், விமல் ஹீரோக்கள். ஹீரோயின்களாக ஸ்குருவின், ஸ்ருதி என்ற புதுமுகங்களை அறிமுகப்படுத்துகிறேன். இருவரும் மும்பையை சேர்ந்தவர்கள். இவர்கள் தவிர, மூன்றாவது ஹீரோயினாக 'தாமிரபரணி' பானு நடிக்கிறார்.