மும்பை: வாண்டட் படம் 100 கோடி வசூலை வாரிக் குவித்திருக்கும் வேளையில், தான் இயக்குநர் ஆனது சந்தர்ப்ப சூழ்நிலையால் தான் எனக் கூறியுள்ளார் பிரபுதேவா
சமீபத்தில் தனது 40வது பிறந்த்நாளை கொண்டாடிய பிரபுதேவா, நடனம், நடிப்பு மற்றும் டைரக்ஷன் என தன் பன்முகத்திறமையால் மின்னிக் கொண்டிருக்கிறார்.
சொந்த வாழ்க்கையில் சில நொந்த பக்கங்கள் இருந்தாலும், தொழில் ரீதியாக பிரபலமாக உலா வருகிறார். இவருடைய படத்தில் நடிப்பதற்கு பாலிவுட்டிலும் சரி, கோலிவுட்டிலும் சரி ஹீரோக்கள் தவம் இருக்கிறார்கள்.
சல்மான் கானை வைத்து இயக்கும் திரைப்படம் உட்பட நான்கு திரைப்படங்கள் தற்போது இவர் கைவசம் உள்ளன.
இந்நிலையில் பிரபுதேவா, ‘ நான் செய்யும் தொழிலை மிகவும் நேசிப்பவன். பாலிவுட்டில் என்னை அங்கீகரித்து விட்டார்கள். அங்கு வரிசையாக படங்கள் செய்து வருகிறேன். ஆனால், நான் இயக்குனர் ஆனது எதிர்பாராமல் நடந்த ஒன்று, தற்செயலானது' எனக் கூறியுள்ளார்.