மும்பையில் வீடு பார்த்தாச்சு ... பால் காய்ச்சி குடியேறும் ஸ்ருதி ஹாசன்!

Shruti Hassan Move Into Her Mumbai Apartment   
நடிகை ஸ்ருதி ஹாசன் மும்பை பந்த்ரா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துள்ளார். அங்கு குடி போகப் போகிறாராம்.

நடிகை ஸ்ருதி ஹாசன் பாலிவுட் படமான லக்கில் தான் அறிமுகமானார். லக் அவருக்கு கை கொடுக்காவிட்டாலும் ஏழாம் அறிவு அவருக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது. இந்நிலையில் அவர் பவன் கல்யாணுடன் நடித்த தெலுங்கு படமான கப்பார் சிங் சக்கை போடு போடுகிறது. இந்நிலையில் ஸ்ருதிக்கு பாலிவுட்டில் இருந்து நல்ல வாய்ப்புகள் வருவதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் மும்பை பந்த்ரா பகுதியில் வாடகைக்கு வீடு பிடித்துள்ளார். அவரது தாய் சரிகா மற்றும் தங்கை அக்ஷரா தங்கியிருக்கும் இடத்திற்கு அருகில் தான் இந்த வீடு உள்ளது. விரைவில் அவர் மும்பையில் குடியேறுகிறாராம்.

இது குறித்து அவர் கூறுகையில்,

மும்பையில் வீடு பார்த்திருக்கிறேன். மும்பைக்கும் எனக்கும் எப்பொழுதும் நெருங்கிய தொடர்பு உண்டு. எனது தாயும், தங்கையும் அங்கு தான் உள்ளனர். நான் கூட பந்த்ராவில் உள்ள புனித ஆண்ட்ரூஸ் கல்லூரியில் தான் படித்தேன். அதனால் மும்பை எனக்கு இரண்டாவது வீடு போன்றது. அதனால் நான் பந்த்ரா பெண்ணாகிவிட்டேன் என்றார்.
Close
 
 

கேரளாவில் வாழ பயமா இருக்கு: மோகன்லால்

I M Scared Live Kerala Mohanlal
ஒரு மனிதனை இன்னொரு மனிதன் வெட்டிக் கொல்லும் கேரளாவில் வாழ பயமாக இருப்பதாக மாலிவுட் சூப்பர் ஸ்டார் மோகன்லால் தெரிவித்துள்ளார்.

மலையாளம் சூப்பர்ஸ்டார் மோகன்லால் நேற்று முன்தினம் தனது 52வது பிறந்தநாளைக் கொண்டாடினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து விலகி தனி கட்சி தொடங்கிய சந்திரசேகரன் என்பவர் அண்மையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இது குறித்து மோகன்லால் தனது பிளாக்கில் கூறியிருப்பதாவது,

ஒரு மனிதரை ஒரு கும்பல் வெட்டிக் கொன்றது என்ற செய்தியைப் படித்த நான் எனது தாயின் கையைப் பிடித்துக் கொண்டு, அவர்களால் ஒரு சிறிய எறும்புக்காவது உயிரைக் கொடுக்க முடியுமா என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். எனக்கு சிறு வலி என்றாலும் என் அம்மா எப்படி துடித்துப் போவார் என்பது எனக்கு தெரியும். அப்படி இருக்கையில் தனது மகனை யாரோ சிலர் வெட்டிக் கொன்றனர் என்பதை அறிந்து அந்த தாய் எவ்வளவு துடித்திருப்பார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

எனக்கு சந்திரசேகனை தெரியாது. ஆனால் அவர் தற்போது உயிரோடு இருந்திருந்தால் அவருக்கு என் வயது தான் இருக்கும். இது போன்ற கொலைகளுக்கு பின்னால் இருக்கும் அரசியலைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் இது போன்ற இடத்தில் வாழ பயமாக உள்ளது. எனது தாய்க்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டு சுயநினைவு வருவதும், போவதுமாக உள்ளது.

அவர் மட்டும் நன்றாக இருந்து இந்த கொலை சம்பவம் பற்றிய செய்தியை படித்திருந்தால் யாரோ என்னைத் தான் கொன்றுவிட்டார்கள் என்பது போல் கண்ணீர் விட்டிருப்பார். பிள்ளைகளை இழக்கும் துயரம் தாய்மார்களுக்கு மட்டும் தான் தெரியும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
Close
 
 

விஷால் படத்தில் கார்த்திகா 'அவுட்'!

Karthika Sacked From Vishal Movie
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ள மதன கஜ ராஜா படத்தில் நாயகியாக நடிக்கவிருந்த கார்த்திகா திடீரென அதிலிருந்து தூக்கப்பட்டு விட்டார். புது நாயகியைத் தேடி வருகின்றனராம்.

எம்.ஜி.ஆர். என்று சுருக்கமாக வரும் வகையில் மதன கஜ ராஜா என்ற பெயரில் புதிய படத்தை இயக்கப் போகிறார் சுந்தர்.சி. இப்படத்தில் நாயகனாக நடிப்பவர் விஷால். அவருக்கு ஜோடியாக கார்த்திகாவை புக் செய்திருந்தனர். ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை, இபபோது கார்த்திகா படத்தில் இல்லையாம்.

இப்படத்தில் விஷால் மூன்று வேடத்தில் நடிக்கவிருக்கிறார். அவருக்கு ஜோடியாக கார்த்திகாவை புக் செய்திருந்தனர். படத்தின் டெஸ்ட் ஷூட்டிலும் கூட அவர் கலந்து கொண்டிருந்தார். ஆனால் தற்போது அவர் படத்தில் இல்லையாம். அவருக்குச் சொன்ன கதையை மாற்றி வேறு கதையை சுந்தர்.சி எடுக்கத் திட்டமிட்டதால்தான் கார்த்திகாவே விலகி விட்டதாக கூறுகிறார்கள்.

தற்போது இரண்டு நாயகி கதையாக படத்தை மாற்றி விட்டாராம் சுந்தர்.சி. இரண்டு நாயகி கதையில் நடிக்க கார்த்திகாவுக்கு விருப்பம் இல்லாததால்தான் அவர் விலகியதாக கூறினாலும் கூட தொடர்ந்து அவருடன் சுந்தர்.சி தரப்பு பேசி வருவதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.

கோ படத்துக்குப் பிறகு ராதா மகள் கார்த்திகாவுக்கு பிரேக் தரும் படம் எதுவும் இன்னும் அமையவில்லை. பாரதிராஜா இயக்கத்தில் அவர் நடித்து வரும் கொடி வீரனும் அன்னக்கொடியும் வந்தால்தான் அவரது அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் என்கிறார்கள்.
Close
 
 

ஐ லவ் யூ சொன்ன ரசிகரைப் பிடித்து டோஸ் விட்ட பிரியங்கா சோப்ரா

Priyanka Chopra Slams Fan   
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை பார்த்து ஐ லவ் யூ சொன்ன ரசிகருக்கு அவர் செம டோஸ் விட்டுள்ளார்.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தேரி மேரி கஹானி என்னும் இந்தி படத்தில் முன்னாள் காதலர் ஷாஹித் கபூருடன் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஔரங்காபாத்தில் உள்ள ஆற்றங்கரையோரம் நடந்தது. அப்போது அக்கரையில் நின்று கொண்டிருந்த ரசிகர் ஒருவர் பிரியங்காவைப் பார்த்த குஷியில் அங்கிருந்து ஐ லவ் யூ பிரியங்கா என்று கத்தியுள்ளார்.

இதை கேட்ட பிரியங்கா கடுப்பாகி அந்த நபரை அழைத்து வரச் சொல்லியுள்ளார். அவர் இக்கரைக்கு வந்ததும் பிரியங்கா கண்டபடி டோஸ் வி்ட்டுள்ளார். அதன் பிறகு தனது தவறை உணர்ந்த அந்த ரசிகர் மன்னிப்பு கேட்டதோடு ஒரு ஆட்டோகிராப் போடுங்களேன் என்று கேட்டுள்ளார். பிரியங்காவும் இப்படியும் ஒரு ரசிகரா என்று சிரித்துவிட்டு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்துள்ளார்.
Close
 
 

கப்பார் சிங்கை பார்த்து பவன் கல்யாணை புகழ்ந்த ரஜினிகாந்த்

Rajinikanth Praises Pawan Kalyan On Gabbar Singh
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பவன் கல்யாணின் படமான கப்பார் சிங்கை பார்த்து அவரது நடிப்பை வெகுவாகப் புகழ்ந்துள்ளார்.

சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண், ஸ்ருதி ஹாசன் நடித்த படம் கப்பார் சிங். சல்மான் கான், சோனாக்ஷி சின்ஹா நடித்த தபாங் படத்தின் தெலுங்கு ரீமேக். இந்த படம் திரைக்கு வந்த 10 நாட்களில் ரூ.52 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தாருக்காக நேற்று சென்னையில் ஸ்பெஷலாக திரையிடப்பட்டது.

படத்தைப் பார்த்த ரஜினி குடும்பத்தார் அதில் சில காட்சிகளை திரும்ப, திரும்ப காண்பிக்குமாறு கூறி பார்த்தார்களாம்.

படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த ரஜினிகாந்த் கூறுகையில், கப்பார் சிங் பக்கா மாஸ் பொழுதுபோக்கு படம். பவன் கல்யாண் அருமையாக நடித்துள்ளார் என்றார்.

கப்பார் சிங் ஆந்திரா தவிர பிற மாநிலங்கள், உலக அரங்குகளிலும் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதே தபாங் படத்தை தமிழில் ஒஸ்தி என்ற பெயரில் ரீமேக் செய்தனர். சிம்பு, ரிச்சா நடித்த அந்த படம் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை.
Close
 
 

லண்டனில் கார் ஓட்டுவதற்காக டிரைவிங் லைசென்ஸ் வாங்கிய சந்தானம்!

Santhanam Gets International Driving License
லண்டனில் கார் ஓட்டுவது போன்று எடுக்கப்படவுள்ள காட்சிக்காக, சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை வாங்கியுள்ளார் காமெடியன் சந்தானம். இதையடுத்து அவர் சம்பந்தப்பட்ட லண்டன் காட்சிகளைப் படமாக்க இருந்து வந்த தடை நீங்கியுள்ளதாம்.

விக்ரம், ஏமி ஜாக்சன் நடித்து வரும் தாண்டவம் படத்தில் சந்தானம்தான் காமெடியன். இப்படத்தில் வித்தியாசமான கேரக்டரில் வருகிறார் சந்தானம்.

கதைப்படி உசிலம்பட்டியைச் சேர்ந்தவரான சந்தானம், கள்ளத்தனமாக லண்டன் வந்து சேருகிறார். அங்கு கார் டிரைவராக வேலை பார்க்கிறார். லண்டனில் சந்தானம் கார் ஓட்டுவது போன்ற காட்சிகளைப் படமாக்க ஒரு தடை இருந்தது. அதாவது அவரிடம் இன்டர்நேஷனல் ஓட்டுநர் உரிமம் இல்லை. அது இல்லாததால் அவரது காட்சிகளைப் படமாக்க சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து உடனடியாக அவர் ஒரு சர்வதேச ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பித்தார். அதுவும் கிடைத்து விட்டது. இதையடுத்து தற்போது லண்டனில் முகாமிட்டுள்ள தாண்டவம் படக்குழுவினர் உற்சாக தாண்டவமாடி வருகின்றனராம்.

விரைவில் சந்தானத்திடம் காரைக் கொடுத்து லண்டன் முழுக்க ஓட்ட விட்டு கலர் கலராக படம் பிடிக்கப் போகிறார்களாம்.
Close
 
 

பிகினி, முத்தம் ம்ஹூம்: சோனாக்ஷி

No Bikini Acts Steamy Scenes Sonaks   
பிகினி, முத்தக் காட்சி மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா கன்டிஷன் போட்டுள்ளார்.

பாலிவுட் படங்களில் ஹீரோயின் பிகினியில் வருவது தான் லேட்டஸ்ட் பேஷன். இந்த பிகினி காட்சியில் நடிக்க நடிகைகளும் ஆர்வமாக உள்ளனர். தீபிகா படுகோனே கூட சயீப் அலி கானுடன் நடித்து வரும் படத்தில் சிவப்பு நிற பிகினியில் வருகிறார். இப்படி ஆளாளுக்கு போட்டி போட்டு நடிக்கும் பிகினி காட்சிக்கு தபாங் நாயகி சோனாக்ஷி சின்ஹா தடா போட்டுள்ளார்.

பிகினி மட்டுமல்ல முத்தம் மற்றும் நெருக்கமான காட்சிகளிலும் அவர் நடிக்க மாட்டாராம்.

இது குறித்து அவர் கூறுகையில்,

நான் பிகினி அணிந்து நடிக்க மாட்டேன். நான் முழுதாக போர்த்திக் கொண்டு நடித்துள்ளதை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அப்படி இருக்கையில் பிகினியில் நடிக்க வேண்டியதில்லை. மேலும் முத்தம் மற்றும் நெருக்கமான காட்சிகளிலும் நடிக்க மாட்டேன். நான் அந்த மாதிரியான ஆள் இல்லை என்றார்.

சோனாக்ஷி அறிமுகமான தபாங் படத்தில் கிராமத்து பெண்ணாக சேலையில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Close
 
 

இலங்கை கடற்கரையை பிகினியில் சூடாக்கிய சன்னி லியோன்!

Sunny Leone S Hot Bikini Act Sri Lankan Beaches    | ஜிஸ்ம் 2  
ஆபாச படங்களில் இருந்து பாலிவுட்டுக்கு வந்துள்ள நடிகை சன்னி லியோன் ஜிஸ்ம் 2 படத்திற்காக இலங்கையின் ரம்மியமான கடற்கரைகளில் பிகினி அணிந்து நடித்துள்ளாராம்.

பாலிவுட்டுக்கும், பிகினிக்கும் அவ்வளவு ராசியாகிவிட்டது. முன்பெல்லாம் ஹாலிவுட் நடிகைகள் தான் பிகினி அணிந்து சன் பாத் எடுப்பார்கள். ஆனால் இப்போது பாலிவுட் படங்களில் பிகினி உடையில் வர நடிகைகளிடையே போட்டி நிலவும் நிலை உள்ளது. பிகினி அணிந்து நடிப்பதற்காகவே சில நடிகைகள் உடலை குறைக்கின்றனர் என்றால் பாருங்களேன்.

ஆபாச படங்களில் நடிக்கும் சன்னி லியோன் பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட்டின் ஜிஸ்ம் 2 படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங் தற்போது இலங்கையில் நடந்து வருகிறது. அங்குள்ள அழகான கடற்கரைகளில் சன்னி பிகினி அணிந்து வரும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அந்த படங்களை இயக்குனர் மகேஷ் பட் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

ஜிஸ்ம் 2 படத்தில் பிகினி காட்சி தவிர ரந்தீப் ஹூடாவுடன் படுக்கையறைக் காட்சிகளிலும் சன்னி லியோன் நடித்துள்ளார். அவ்வாறு படுக்கையறைக் காட்சிகளில் நடிக்கும் போது அவர் மிகவும் கூச்சப்பட்டதாக இயக்குனர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

நாலு சுவருக்குள் வெட்கப்படுகிறார் சன்னி, ஆனால் வெட்ட வெளியில் படு குஷாலாக நடிக்க வெட்கப்பட மாட்டாராம்...
Close
 
 

ஷில்பா மகனோட பெயர் 'பேபி கே'...!

After Baby B It Is Baby K Bollywood   
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தனது மகன் பெயரை பேபி கே என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நட்சத்திரங்கள் பண்ணும் அலும்புக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. முதலில் ஐஸ்வர்யா ராய் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்து அதை இன்று வரை உலகின் பார்வைக்கு காட்டாமல் வைத்துள்ளார். குழந்தை என்னவோ நவம்பரி்ல் பிறந்தாலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் அதன் பெயர் ஆராத்யா என்று தாத்தா அமிதாப் பச்சன் தெரிவித்தார்.

அது வரை குழந்தையின் பெயர் தெரியாமல் ஊடகங்கள் முதலில் பேபி பி என்றும், அதன் பிறகு பேட்டி பி என்றும் அழைத்து வந்தன. ஒரு வழியாக குழந்தையின் பெயர் ஆராத்யா என்பதை ஊடகங்கள் கண்டுபிடித்தும் அதை பச்சன் குடும்பத்தார் உறுதிபடுத்தாமலேயே இருந்து வந்தனர். இந்த கூத்து முடிந்த நிலையில் அடுத்த கூத்து ஆரம்பித்துள்ளது.

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி நேற்று முன்தினம் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தான் தாயான சந்தோஷத்தை அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளதோடு தங்களுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் தனது மகனின் பெயரை பேபி கே என்று குறிப்பிட்டுள்ளார். ஷில்பாவின் கணவர் பெயர் ராஜ் குந்த்ரா. அதனால் தான் குழந்தையின் பெயர் பேபி கே.

இவராவது சீக்கிரம் குழந்தைக்கு பெயர் வைத்து அதை நமக்கு சொல்வாரா, இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Close
 
 

உடல் எடையை குறைக்க ஹன்சிகா ஆபரேஷன்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
உடல் எடையை குறைக்க ஆபரேஷன் செய்ததாக வந்த தகவலை மறுத்துள்ளார் ஹன்சிகா. இது குறித்து அவர் கூறியது: திடீரென எனது உடல் எடை கூடிவிட்டது. இதனால் அவதிப்பட்டேன். எடையை குறைக்க முடிவு செய்தேன். இதற்காக கடுமையாக டயட் இருந்தேன். உடற்பயிற்சி தவறாமல் செய்தேன். சிங்கம் 2 படத்தில் சூர்யாவுடன் நடிக்கிறேன். இதில் பள்ளி மாணவி வேடம். அதனால் எடையை குறைக்க வேண்டும் என இயக்குனர் ஹரி சொல்லிவிட்டார். அதே நேரம், ஒல்லிகுச்சி நடிகையானால் இந்தி சினிமாவில் ஜமாய்க்கலாம். ஆனால் தமிழ் சினிமாவில் கொஞ்சம் குண்டாக இருந்தால்தான் வாய்ப்பு வரும். அதே நேரம், ஓவர் குண்டாகிவிட்டால் ஓரம் கட்டிவிடுவார்கள். நிறைய பேர் அதை சுட்டிக்காட்டினார்கள். அதனால்தான் எடையை குறைத்தேன்.

ஆர்யாவுடன் சேட்டை படத்தில் நடித்து வருகிறேன். இப்பட செட்டில் என்னை பார்ததவர்கள், ஆச்சரியம் அடைந்தனர். ஆபரேஷன் மூலம் எடையை குறைத்ததாக சிலர் கதை கட்டுகிறார்கள். அதற்கெல்லாம் அவசியமே கிடையாது. எடையை குறைத்தாலும் எனது பப்ளி லுக் மாறிவிடக்கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தேன். சமீபத்தில் கல்லூரி விழா ஒன்றில் என்னை பார்த¢த மாணவன், ரசகுல்லா என அழைத்தார். இது எனக்கு சந்தோஷமாக இருந்தது. இவ்வாறு ஹன்சிகா கூறினார்.


 

ஆந்திர முதல்வர் மிரட்டலால் பயந்தேன்: பி.வாசு தகவல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பிறமொழி ஹீரோக்கள் தமிழில் கதை கேட்பதால் தமிழ் இயக்குனர்கள் பிறமொழியில் ஜெயிக்க முடிகிறது என்றார் பி.வாசு. நடிகர் மோகன்பாபு மகள் லட்சுமி மன்சு. தமிழ், தெலுங்கு இருமொழியில் 'வருவான் தலைவன் என்ற படத்தை தயாரிக்கிறார். முதன்முறையாக இப்படம் மூலம் என்.டி.பாலகிருஷ்ணா தமிழில் அறிமுகமாகிறார். மனோஜ் மன்சு, தீக்ஷா சேத் ஜோடி. சேகர் ராஜா இயக்குகிறார். இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இதில் இயக்குனர் பி.வாசு பேசியதாவது: தெலுங்கில் என்.டி.பாலகிருஷ்ணாவை இயக்க எண்ணி அப்போது ஆந்திர முதல்வராக இருந்த என்.டி.ராமராவிடம் கதை சொல்லச் சென்றேன். ஆங்கிலம், தெலுங்கில் கதை சொல்ல வராது தமிழில் சொல்கிறேன் என்றேன். 'ஆந்திரா முதல்வரிடம் தமிழில் கதை சொல்கிறேன் என்கிறாயே என்ன தைரியம் உனக்கு என்றார். பயந்துவிட்டேன்.

பிறகு சிரித்தபடி, 'நான் 40 வருடம் தமிழ்நாட்டு தண்ணி குடித்து வளர்ந்தவன். எனக்கு தமிழ் தெரியும். தமிழிலேயே சொல். அடுத்த முறை சொல்லும்போது தெலுங்கில் சொல்ல வேண்டும் என்றார். ராமராவ், நாகேஸ்வரராவ், ராஜ்குமார், மம்மூட்டி என 4 மொழி நடிகர்களுமே தமிழ்நாட்டில் வாழ்ந்தவர்கள். அவர்களது பிள்ளைகளும் தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். அதனால்தான் அவர்களை எளிதாக அணுக முடிகிறது. தமிழிலேயே கதை சொல்லி அவர்களிடம் கால்ஷீட் பெற்று தமிழ் இயக்குனர்கள் பிற மொழிகளில் வெற்றி பெற முடிகிறது. இவ்வாறு பி.வாசு கூறினார். என்.டி.பாலகிருஷ்ணா, சிம்பு, மனோஜ் மன்சு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


 

நான் அதிர்ஷ்டக்காரி இல்லையா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஒரு படம் ஹிட் ஆகாததால் நான் அதிர்ஷ்டக்காரி இல்லை என்பதா என்று ஆவேசப்படுகிறார் ஸ்ருதி ஹாசன். நடிகை ஸ்ருதி ஹாசன் கூறியதாவது: கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை என்னை 'அன்லக்கி' (அதிர்ஷ்டம் இல்லாதவள்) என்று எழுதி வந்தார்கள். தெலுங்கில் நான் நடித்துள்ள 'கப்பர் சிங்' படம் சூப்பர் ஹிட் ஆகி உள்ளது. இப்போது அதிர்ஷ்டம் உள்ளவள் என்று எழுதுகிறார்கள். இந்தியில் நான் நடித்த படம் ஹிட் ஆகவில்லை என்பதால் அதிர்ஷ்டமில்லாதவள் என்றவர்களே இப்போது மாற்றி கூறுவது சந்தோஷம். வீட்டில் சிறுமியாக இருந்தபோதே அப்பா நடித்த படங்களின் வெற்றி, தோல்விகளை பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு படமும் என்னை பொறுத்தவரை அனுபவம்தான். இதுவரை நான் நடித்த படங்கள் எல்லாமே நல்ல படங்கள்தான். அதில் ஏற்று நடித்த வேடங்களை எண்ணி பெருமைப்படுகிறேன். 'ஓ மை பிரண்ட்', '3', '7ம் அறிவு' ஆகிய படங்களில் வலுவான, சுதந்திரமான கதாபாத்திரங்கள். எந்த வேடமாக இருந்தாலும் 100 சதவீத நடிப்பை தருகிறேன். ஆனால் முடிவில் என்ன வருகிறது என்பதற்கு நான் பொறுப்பல்ல.

'எந்த படத்தில் நடிப்பது என்பதை அப்பா, அம்மாவிடம் கேட்டு முடிவு செய்கிறீர்களா' என்று கேட்கிறார்கள். முதலில் நான் கதை கேட்பேன். அதில் நடிப்பதா, வேண்டாமா என்று சந்தேகம் எழுந்தால் மட்டுமே பெற்றோரிடம் அறிவுரை கேட்பேன். கமல்ஹாசன், சரிகா மகள் என்பதால் எனக்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது. ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை நான் பூர்த்தி செய்ய வேண்டும். அதுதான் என் வேலை. இன்னும்கூட சினிமாவிலும், இசையிலும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன்.


 

சின்னத்திரையில் மீண்டும் சொர்ணமால்யா...!

Swarnamalya Acts Thangam Serial
நீண்ட இடைவெளிக்குப் பிறகு டிவி பக்கம் சொர்ணமால்யாவைக் காண முடிகிறது. எங்கிருந்து அவரது டிவி வாழ்க்கை பிரகாசமாக ஆரம்பித்ததோ அதே சன் டிவியில் ஒளிபரப்பாகும் டிவி தொடர் ஒன்றில்தான் தற்போது தலை காட்ட ஆரம்பித்திருக்கிறார் சொர்ணமால்யா.

சன் டிவியில் தங்கம், தங்கம் என்று ஒரு டிவி தொடர் ஒளிபரப்பாகிறது. ரொம்ப நாட்களாக ஓடிக் கொண்டுள்ள இந்தத் தொடரை ஆரம்பத்தில் படு சீரியஸாக காட்டி வந்தனர். சீரியஸான முகங்கள், சீரியஸான சண்டைகள், சீரியஸான வசனங்கள் என ஓடிக் கொண்டிருந்தத் தொடரை திடீரென காமெடியாக்கி விட்டனர். வருடக் கணக்கில் இழுக்க வேண்டும் என்றால் இதெல்லாம் செய்துதானே ஆக வேண்டும்...

நடிகை காவேரியை வைத்து காமெடித்தனம் செய்து வந்தன நிலையில் இப்போது தொடரை எப்படிக் கொண்டு செல்வது என்பதில் இயக்குநருக்கே குழப்பமாகியிருக்கும் போல. இதனால் திடீரென ஒரு புதுக் கேரக்டரை புகுத்தி விட்டார். அந்த புது கேரக்டர்தான் சொர்ணமால்யா. இவர் நீண்ட நாட்களாக டிவி பக்கம் காணாமலேயே இருந்து வந்தார். முன்பு சன் டிவியில் இளமை புதுமை நிகழ்ச்சியை கலக்கலாக கொடுத்து வந்து லைம்லைட்டுக்குப் போனவர் சொர்ணமால்யா. இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சன் டிவிக்குள் அவர் காலெடுத்து வைத்துள்ளார்.

சொர்ணாவைக் கூட்டி வந்து நாக கன்னிகை கேரக்டரைக் கொடுத்து நடிக்க வைத்து வருகின்றனர். சொர்ணமால்யாவும் தனது ஸ்டைலில் கலக்கி வருகிறார். இது சிறப்புத் தோற்றம்தானாம். இந்தக் கேரக்டர் முடிவடைந்ததும் மறுபடியும் காவேரியின் அரைவேக்காட்டுக் காமெடியும், பழிவாங்கும் படலங்களும் தொடரும் என்று தெரிகிறது.

இப்படி எதையாவது செய்துதானே சீரியல்களை லென்த்தா இழுத்து ஓட்ட வேண்டியிருக்கு...
Close
 
 

என்.டி.ஆர். அதட்டியதால் பயந்துவிட்டேன்: பி. வாசு

When Ntr Scared P Vasu
ஆந்திர முதல்வராக இருந்த என்.டி.ஆரிடம் நான் தமிழில் கதை சொன்னபோது, ஆந்திர முதல்வரிடம் தமிழில் கதை சொல்கிறேன் என்று சொல்ல என்ன தைரியம் உனக்கு என்று என்.டி.ஆர். கேட்டதால் தான் பயந்துவிட்டதாக இயக்குனர் பி. வாசு தெரிவித்துள்ளார்.

நடிகர் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு தனது சகோதரர் மனோவை வைத்து தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாரிக்கும் படம் வருவான் தலைவன். சேகர் ராஜா இயக்கும் இந்த படத்தில் தீக்ஷா சேத் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் என்.டி.ஆர். பாலகிருஷ்ணா தமிழுக்கு வருகிறார். இந்த படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது.

அதில் கலந்து கொண்ட இயக்குனர் பி. வாசு பேசியதாவது,

தெலுங்கில் என்.டி.ஆர். பாலகிருஷ்ணாவை வைத்து படம் எடுப்பதற்காக அப்போதைய ஆந்திர முதல்வர் என்.டி.ஆரிடம் கதை சொல்லச் சென்றேன். எனக்கு ஆங்கிலம் மற்றும் தெலுங்கில் கதை சொல்ல வராது அதனால் தமிழிலேயே சொல்கிறேன் என்றேன்.

உடனே அவர், ஆந்திர முதல்வரிடம் வந்து தமிழில் கதை சொல்கிறேன் என்று சொல்ல என்ன தைரியம் உனக்கு என்றார். அதைக் கேட்டு நான் பயந்துவிட்டேன். ஆனால் அவரோ, நான் 40 ஆண்டுகள் தமிழ்நாட்டு தண்ணீர் குடித்து வளர்ந்தவன். எனக்கும் தமிழ் தெரியும். தமிழிலேயே கதையைச் சொல் என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

மேலும் அடுத்த முறை வரும்போது தெலுங்கில் கதை சொல்ல வேண்டும் என்றார்.

ராமராவ், நாகேஸ்வரராவ், ராஜ்குமார், மம்மூட்டி ஆகிய 4 மொழி நடிகர்களும் தமிழகத்தில் வாழ்ந்தவர்கள் தான். அவர்களின் பிள்ளைகளும் தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் தான். அதனால் தான் அவர்களை எளிதில் அணுக முடிகிறது. அவர்களிடம் தமிழில் கதை சொல்லி கால்ஷீட் வாங்கி நம் தமிழ் இயக்குனர்கள் பிற மொழிகளில் வெற்றி பெற முடிகிறது என்றார்.
Close