80 மில்லியன் செலவில் திரைப்படமாக உருவெடுக்கிறது ஆங்ரி பேர்ட்ஸ்

பின்லாந்து: ஒருகாலத்தில் உலகினரையே அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆங்ரி பேர்ட்ஸ் விளையாட்டு தற்போது தனது பெருமையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது.

இதனை சரிக்கட்டும் முயற்சியாக ஆங்ரி பேர்ட்ஸ் விளையாட்டை திரைப்படமாக உருவாக்கி வருகிறார், இந்த விளையாட்டை உருவாக்கிய ரோவியோ.

Angry Birds - Now Turned Movie

தற்போது 80 மில்லியன் செலவில் ஆங்ரி பேர்ட்ஸ் விளையாட்டு 3D யில் திரைப்படமாக உருவாகி வருகிறது. இதன் மூலம் இழந்த ஆங்ரி பேர்ட்ஸ் புகழை மீட்டெடுக்க முடிவு செய்திருக்கிறார் ரோவியோ.

"தி ஆங்ரி பேர்ட்ஸ்" இதன் முதல் டிரெய்லர் தற்போது வெளிவந்துள்ளது. ரெட் எனப்படும் கோபக்கார பறவை, அதைக் கட்டுப்படுத்த முயலும் ஆங்ரி பேர்ட்ஸ்கள் என கதை நகரவிருக்கிறதாம்.

ஆங்ரி பேர்ட்ஸ் ஹீரோவான ரெட்டுக்கு ஜாசன் சுதேய்கிஸ் என்பவரும், பக்கத்துக்கு வீட்டுக்காரராக வந்து ரெட்டை கோபப்படுத்தும் பிக் கதாபாத்திரத்திற்கு பில் ஹாடரும் குரல் கொடுத்துள்ளனர்.

ஒரு காலத்தில் உலகையே தனக்கு அடிமையாக்கி வைத்திருந்த ஆங்ரி பேர்ட்ஸ் கேம் சீரிஸ்க்கு இப்போது ரசிகர்கள் குறைவாகிவிட்டனர். நாளுக்கு நாள் வெளியாகும் ஆண்ட்ராய்டு கேம்கள், புதுப்புது அறிமுகங்கள் என ஆங்ரி பேர்ட்ஸ் ரசிகர்களுக்கு சலித்துப் போய்விட்டது.

இருப்பினும் வேகமாக வளர்ந்துவரும் இணைய கேம் உலகைத் தொடர்ந்து ஆட்சி செய்ய முடியாது ஆங்ரி பேர்ட்ஸ் கொஞ்சம் பின்தங்கியது.

80 மில்லியன் செலவில் உருவாகும் இப்படம், ஆங்ரி பேர்ட்ஸ் கேம் இழந்த புகழை மீண்டும் தேடித் தரும் என, இவ்விளையாட்டை உருவாக்கிய ரோவியோ நம்புகிறார். 3டியில் மே 2016 இல் இப்படத்தை வெளியிட ஆங்ரி பேர்ட்ஸ் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

 

மம்முட்டி படத்திற்காக கொள்கையைத் தளர்த்திய நயன்தாரா

திருவனந்தபுரம்: தாய் மொழியான மலையாளத்தில் 2 வருடத்திற்கு ஒரு படம் தான் என்று கொள்கையுடன் செயல்பட்டு வந்த நடிகை நயன்தாரா, மம்முட்டியின் படத்திற்காக தனது கொள்கையை தளர்த்தி இருக்கிறார்.

மலையாளத்தில் கடைசியாக நயன்தாரா மம்மூட்டியுடன் நடித்து வெளியான படம் பாஸ்கர் த ராஸ்கல். இந்தப்படத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்ததோடு ஒரு குழந்தைக்குத் தாயாக வீட்டில் ஹோம் மேட் சாக்கலேட்டுகள் செய்து வாழ்வில் முன்னேறும் பெண்ணாகவும் நடித்திருப்பார்.

Nayanthara breaks her rule for Mammootty film

மிகக்குறைந்த செலவில் எடுக்கப்பட்ட பாஸ்கர் தி ராஸ்கல் திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் சுமார் 23 கோடிகளை வசூலித்து சாதனை புரிந்தது.

சொந்த மண் மலையாள சினிமாவாகினும் தமிழுக்கே முன்னுரிமை என்ற ரீதியில் இரண்டு வருடத்திற்கு ஒரு படம் வீதம் தெலுங்கு, மலையாளம் என நடிக்கும் எண்ணத்தில் இருக்கிறார் நயன்தாரா.

சமீபத்தில் இயக்குநர் சஜன் மம்முட்டி கதாநாயகனாக நடிக்க உள்ள ஒரு படத்தின் கதையை நயனிடம் கொடுத்துள்ளார். கதையைப் படித்த நயன்தாரா சிறிதும் யோசிக்காமல் ஒப்புக்கொண்டுள்ளார்.

மதம் விட்டு மதம் மாறி திருமணம் செய்துகொண்ட இரு தம்பதிகளின் ஈகோ பிரச்னைகள் அதைச் சூழ்ந்த கதைதான் படமாம். இரண்டு வருடம் கழித்துதான் அடுத்த படம் என்றக் கட்டுப்பாடோடு இருந்த நயன்தாரா நல்லகதை என்றவுடன் தற்போது ஓகே சொல்லியுள்ளார் என இயக்குநர் சஜன் தெரிவித்திருக்கிறார்.

கதைப்படி லூயிஸ் போதென் என்னும் வக்கீலாக மம்முட்டியும், மம்முட்டியின் குணத்திற்கு நேரெதிரான வாசுகி என்னும் கதாபாத்திரத்தில் நயன்தாராவும் நடிக்கவிருக்கின்றனராம்.

கதை பிடித்திருந்தால் நயன்தாரா யோசிக்காமல் ஒப்புக்கொள்வார், என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது இந்த நிகழ்வு.

 

சென்னை விமான நிலையத்தில் 'கபாலி' ரஜினி தரிசனம்... பயணிகள், ரசிகர்கள் பரவசம்!

சென்னை: கபாலி படத்தின் ஒரு முக்கிய காட்சி இன்று சென்னை விமான நிலையத்தில் படமாக்கப்பட்டது. அப்போது ரஜினியைப் பார்த்த பயணிகளும் ரசிகர்கள் பரவசத்தில் உற்சாகமாகக் குரல் எழுப்பினர்.

பொதுவாக ரஜினி நடிக்கும் படங்களின் படப்பிடிப்பை சென்னையில் வைக்க மாட்டார்கள். திரளும் ரசிகர்களைக் கட்டுப்படுத்துவது முடியாத காரியம் என்று காரணம் கூறி, வெளி மாநிலம் அல்லது ரகசியமான இடங்களில் நடத்துவார்கள்.

Rajini spots at Chennai Airport

ஆனால் இந்த முறை அனைத்து விஷயங்களிலும் ஆச்சர்ய மாறுதல்கள்.

கபாலியின் முதல் கட்ட படப்பிடிப்பே சென்னையில்தான். அதுவும் மக்கள் நெரிசல் மிகுந்த மயிலாப்பூர் மற்றும் சுற்றுப்புற இடங்கள், வடபழனி, பூந்தமல்லி போன்ற பகுதிகளில் நடக்கிறது.

இதன் உச்சமாக, பல ஆயிரம் பயணிகள் வந்து போகும் சென்னை விமான நிலையத்தில் இன்று படப்பிடிப்பு நடந்தது.

Rajini spots at Chennai Airport

விமான நிலையத்தில் ரஜினி நடந்துவருவது போன்ற காட்சி இன்று படமாக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய பயணிகள் அனைவரும் ரஜினி ஷூட்டிங்கில் நடிப்பதைப் பார்த்து ரசித்து மகிழ்ந்தனர்.

பலர் 'தலைவா தலைவா.. நல்லாருக்கீங்களா... கபாலி சூப்பர்' என்று குரல் கொடுக்க புன்னகையுடன் அனைவரையும் கையெடுத்துக் கும்பிட்டார் ரஜினி.

 

2 மணி 34 நிமிஷம் 5 செகன்ட் ஓடும் 'புலி'!

விஜய் நடித்துள்ள புலி திரைப்படத்துக்கான டிக்கெட் புக்கிங் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் படம் குறித்த மேலும் சில தகவல்கள் உங்கள் கவனத்துக்கு.

Puli: இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

இந்தப் படத்துக்கு அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்று வழங்கியுள்ளதை ஏற்கெனவே தெரிவித்திருந்தோம்.

Puli running time is 2:34:5

இப்போது படத்தின் நீளம்.

மொத்தம் 2 மணி 34 நிமிடம் 5 நொடிகள் நீளம் கொண்ட படம் இது.

இதில் பாடல்கள் மட்டுமே கிட்டத்தட்ட 28 நிமிடங்கள், ஒரு ப்ரமோ பாடல் உள்பட. தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்க, அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார்.

படத்தின் மொத்த பட்ஜெட் ரூ 118 கோடி என்று அறிவித்துள்ளனர் (விஜய் சம்பளம் உள்பட).

படத்தை விஜய்யின் மேனேஜர் மற்றும் பிஆர்ஓ பிடி செல்வகுமாரும் கேரளாவைச் சேர்ந்த ஷிபு தமீன்ஸும் தயாரித்துள்ளனர்.

முதல் முறையாக இந்தியா முழுவதும் பெரிய அளவில் வெளியாகும் விஜய் படம் இதுதான். குறிப்பாக வட இந்தியாவில்!

 

அம்மா இல்லாமல் நான் இல்லை.. மனம் திறந்த மனோரமா

சென்னை: இன்றைய காலகட்டத்தில் நடிகர்கள் 25 படங்கள் தாண்டுவதே ஒரு சவாலாக உள்ளபோது, நடிகை மனோரமா 15௦௦ படங்களில் நடித்திருப்பது பெரும் சாதனையாக திரையுலகில் பார்க்கப்படுகிறது.

இடையில் சில காரணங்களால் படங்களில் நடிக்காமல் இருந்த மனோரமா தற்போது "சிங்கம் 3" படத்தின் மூலம், மீண்டும் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார்.

Singam 3: Aachi Manorama Return in Tamil Cinema

சமீபத்தில் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் தான் நடிக்கவிருக்கும் படங்கள் மற்றும் தனது எதிர்காலத் திட்டம் போன்றவைகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

கடவுள் அருளால் எனக்கு 1500 படங்களுக்கு மேல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. என் எல்லா வெற்றிகளுக்கும் பின்னால் இருந்தவர் என் அம்மா தான். அவரில்லாமல் இருப்பது வருத்தமான விஷயமே.

இப்போதும் நடிக்கும் வாய்ப்புகள் வருகின்றன. என் உடல் நிலை காரணமாக நிறையப் படங்களை ஒப்புக்கொள்வதில்லை எனக் கூறியுள்ளார் மனோரமா.பேராண்டி மற்றும் சிங்கம் 3 போன்ற படங்களில் தற்சமயம் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளேன். என் வாழ்க்கையின் மாற்றத்திற்கு முக்கியக் காரணம் கண்ணதாசன் தான். நீ ஹீரோயினாக நடித்தால் கண்டிப்பாக 3 அல்லது 4 வருடங்களில் உன்னை மக்கள் சினிமா துறையிலிருந்து ஒதுக்கி விடுவார்கள் எனக் கூறி என்னை காமெடி நடிகையாக்கி என்னால் முடியும் என நம்பியவர் அவர் தான்.

ஒருவேளை சினிமாவிற்குள் வரவில்லையெனில் என் அம்மாவின் ஆசை நான் மருத்துவம் படிக்க வேண்டும் என்பதே. அதற்காக முயற்சியும் செய்தேன். ஆனால் இப்போது என் பேரன் டாக்டர். இந்த வருடத்தில் எனக்கு எந்தக் கவலையும் இல்லை. அடுத்த பிறப்பிருந்தால் அதிலும் இதே மனோரமாவாகவே பிறக்க ஆசைப்படுகிறேன்" என்று கூறியிருக்கிறார் மனோரமா.

இன்னும் நிறைய காலம் தாங்கள் படங்களில் நடிக்க வேண்டும் என்று மனமார வேண்டிக் கொள்கிறோம் ஆச்சி....

 

கேள்வி கேட்ட நிருபரை பளார் என அறைந்த பிரியா மணி...!

ஹைதராபாத்: ஏன் அயிட்டம் பாடல்களில் தொடர்ந்து ஆடுகிறீர்கள்? என்று கேட்ட தெலுங்கு நிருபரை நடிகை பிரியாமணி ஓங்கி கன்னத்தில் அறைந்தார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த விவகாரம் தற்போது தெலுங்குத் திரையுலகில் மாபெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது என்று டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Actress Priyamani Slapped Reporter’s Face?

தமிழில் உள்ளம் என்னும் படத்தில் நாயகியாக அறிமுகமான நடிகை பிரியாமணி, இயக்குநர் பாரதிராஜாவின் கண்களால் கைது செய் படம் மூலம் தமிழ்த் திரையுலகில் பிரபலமானார்.

நடிகர் கார்த்தியுடன் இவர் இணைந்து நடித்த பருத்திவீரன் திரைப்படம் பிரியாமணிக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது. தற்போது தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் பிரியாமணிக்கு சொல்லிக் கொள்ளும்படி வாய்ப்புகள் எதுவும் இல்லை.

இதனால் கூடிய விரைவில் திருமணம் செய்துக் கொள்ளும் முடிவில் இருக்கிறார் பிரியாமணி. இந்நிலையில் சமீபத்தில் ஒரு தெலுங்கு செய்தியாளர் பிரியாமணியிடம் ஏன் ஐட்டம் பாடலில் எல்லாம் ஆடுகிறீர்கள், திரையில் தோன்றுவதற்காக இந்தப் பாடலை ஓகே என சொல்லிவிட்டீர்களா? எனக் கேட்க இதில் எரிச்சல் அடைந்த பிரியாமணி அவரை அடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் ஒரு கேள்வியைக் கேட்கும் முன் யோசித்து கேளுங்கள் என கூறியதாகவும் சொல்லப்படுகிறது.இது தெலுங்கு சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Actress Priyamani Slapped Reporter’s Face?

தற்சமயம் இரு கன்னடப் படங்களில் நடித்து வரும் பிரியாமணி தெலுங்கில் இயக்குநர் திரிவிக்ரமின் பன்னி படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு ஆடவிருக்கிறார். இதைக் கேட்கப்போய்த்தான் தெலுங்கு செய்தியாளர் அடி வாங்கினாராம்.

பிரியாமணி இவ்வளவு கோபக்காரரா? தெரியாமப் போச்சே...

 

மூன்று நாள் பட்டினி, கண் மங்கி, மயங்கி விழுந்து... ஈட்டிக்காக அதர்வா சிக்ஸ் பேக் வைத்த கதை!

அதர்வா நடிப்பில் அறிமுக இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் வெளிவரவிருக்கும் புதிய படம் 'ஈட்டி'. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கமலா திரையரங்கில் நடைபெற்றது.

விழாவில் படத்தின் நாயகன் அதர்வா பேசுகையில், "இந்த படத்தின் கதையை தாணு சார்தான் முதல் எனக்கு அனுப்பி வைத்தார். கதையைப் படித்தவுடன் எனக்கு பிடித்துவிட்டது. இந்த கதைக்கு பின்னால் இயக்குநர் வெற்றிமாறனும் இருக்கிறார் என்பதலேயே நான் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தேன்.

How Atharva gets 6 pack body for Eetti

ரவி அரசு மிக சிறந்த இயக்குநர். நான் என்னுடைய முயற்சிகளில் உறுதியாக இருந்தேன். மேலும் இந்த படத்துக்காக சிக்ஸ் பாக் வேண்டும் என்பதால் மிகப் பெரிய அளவில் உணவுக் கட்டுபாட்டு முறையைக் கடைப்பிடித்து வந்தேன். அதனாலேயே எனக்கு படபிடிப்பு தளத்தில் அடிக்கடி மயக்கம் வரும். எனக்கு சில நேரங்களில் கண் மங்கலாகத் தெரியும். எதிரில் என்ன இருக்கிறது என்றே எனக்கு தெரியாது. கேமராவை கூட நான் தேடிக் கொண்டுதான் இருப்பேன். அந்த நேரங்களில் 'நான் ஏதாவது ஒரு திசையை நோக்கி நடிக்கிறேன் நீங்கள் அதைப் படம் பிடித்து கொள்ளுங்கள்' என்று கூறிவிடுவேன்.

பாக் மில்கா பாக் படத்தில் நடிகர் இயக்குநர் பர்ஹான் அக்தரின் நடிப்பைப் பார்த்து நான் மிரண்டுவிட்டேன். அவருடைய நடிப்புதான் இந்த படத்தில் நான் நடிக்க மிக பெரிய பலமாக இருந்தது. பாக் மில்க்ஹா பாக் படம்தான் நான் கடுமையாக உழைக்க என்னுள் வெறியை உண்டாக்கியது," என்றார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், "இந்த ஈட்டி படத்தின் கதையை முதலில் நான் தயாரிப்பாதாகத்தான் இருந்தது. பின்னர் அது தாணு சாரிடம் சென்று மைகேல் ராயப்பன் சாரின் கைக்கு சென்றுள்ளது. நான் தயாரித்திருந்தால் படத்தை இவ்வளவு பெரிதாக தயாரித்திருக்கமாட்டேன்.

ஜி.வி.பிரகாஷுடன் பணியாற்றுவது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். அவருடன் ஒரு கிரீன் டீ குடித்து கொண்டே ஒரே இரவில், ஒரு பாடலின் கம்போசிங்கை முடித்துவிடலாம். நாயகன் அதரவா படத்துக்கு கொடுத்துள்ள உழைப்பு பெரியது. மூன்று நாட்கள் தொடர்ந்து தண்ணீர் அருந்தாமல் இருந்தால்தான் சிக்ஸ் பேக் வரும் என்று சொல்வார்கள். நாயகன் அதர்வா தண்ணீர் அருந்தாமல் இந்த படத்துக்காக எவ்வளவு உழைத்திருப்பார் என்பது பாடல் மற்றும் ட்ரைலரை பார்க்கும் போது தெரிகிறது," என்றார்.

விழாவில் நாயகி ஸ்ரீ திவ்யா, படத்தின் தயாரிப்பாளர் மைகேல் ராயப்பன், செரொபின் ராய சேவியர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், ஒளிப்பதிவாளர் சரவணன், இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு, கதிரேசன், தேனப்பன் பி.எல், கே.ராஜன், ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

 

ஜிங்கிலியா ஜிங்கிலியா சித்திரகுள்ளன் கலக்குறானே.... - இது புலி விளம்பரப் பாட்டு!

விஜய் நடித்துள்ள புலி படம் வரும் அக்டோபர் முதல் தேதி வெளியாகிறது. அதனையொட்டி ஒரு விளம்பர குறும் காணொலியை (வீடியோ டீசர்) வெளியிட்டுள்ளனர்.

Puli: இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

விஜய் - ஸ்ருதிஹாஸன் இருவரும் குள்ள மனிதர்களுடன் ஆட்டம் போடும் டூயட் பாடல் இது. பழங்குடி மாதிரி இழை தழைகளில் விதவிதமாக உடையணிந்து ஆடுகிறார் ஸ்ருதி.

ஜிங்கிலியா ஜிங்கிலியா சித்திர குள்ளன் கலக்குறானே... எனத் தொடங்குகிறது அந்தப் பாடல்.


நேற்று முன்தினம்தான் படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் வெளியானது. அதைத் தொடர்ந்து இந்த விளம்பர பாடல் டீசர் வெளியாகியுள்ளது.

கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள பாடல் இது. தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

விஜய், ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தின் இன்னும் ஒரு டீசரை படம் வெளியாவதற்குள் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

 

ரவி 'சூப்பர்'.. அரவிந்த் சாமி 'வாவ்'... பாராட்டித் தள்ளிய ஷங்கர்

சென்னை: கடந்த மாதம் வெளியாகி பலரின் கவனத்தையும் கவர்ந்த தனி ஒருவன் இயக்குநர் சங்கரையும் விட்டு வைக்கவில்லை. சமீபத்தில் தனி ஒருவன் படத்தைப் பார்த்த இயக்குநர் ஷங்கர் படக்குழுவினரை மனந்திறந்து பாராட்டியிருக்கிறார்.

Thani Oruvan (U): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி மற்றும் இசையமைப்பாளர் ஆதி ஆகியோரின் பங்களிப்பில் உருவான தனி ஒருவனை இயக்குநர் மோகன் ராஜா பார்த்துப் பார்த்து உருவாக்கியிருந்தார்.

Director Shankar Impressed with Jeyam Ravi's

மோகன் ராஜாவின் 4 வருட உழைப்பை ரசிகர்கள் அப்படியே ஏற்றுக் கொண்டனர். மேலும் திரையுலகினரும் படத்தைப் பாராட்டினர். இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பின்வருமாறு கூறியிருக்கிறார்.


படத்தை பற்றி ஷங்கர் கூறும்போது, ‘சமீபத்தில் ‘தனி ஒருவன்' படத்தை பார்த்தேன். மிகவும் பிடிந்திருந்தது. இயக்குனர் ராஜா திறமையாக இயக்கியிருக்கிறார். அற்புதமான நடிப்பை ஜெயம் ரவி வெளிபடுத்தியிருக்கிறார். அரவிந்த் சாமி சிறப்பாக நடித்திருக்கிறார். இசையமைப்பாளர் ஆதியின் பின்னணி இசை அழுத்தமாக பதிந்திருக்கிறது. படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்' என்று தனி ஒருவனை பாராட்டியிருக்கிறார்.


இந்தப் பாராட்டால் மகிழ்ந்து போன அரவிந்த் சாமி "நீங்கள் படத்தை விரும்பியது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. உங்கள் பாராட்டிற்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

தமிழின் பிரமாண்ட இயக்குனர் என்று பெயரெடுத்த ஷங்கர் தங்கள் படத்தைப் பாராட்டியதில் படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.

தனி ஒருவன் படத்தின் 2 வது பாகம் கண்டிப்பாக வரும் என்று இயக்குநர் மோகன் ராஜா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

பூந்தமல்லி ரோட்டில் 'டுர்ர்ர்ர்ர்'ரென்று பைக் ஓட்டி கிலியேற்படுத்திய "செல்பி புள்ள" வசுந்தரா

சில மாதங்களுக்கு முன் சினிமா வட்டத்துக்குள் உள்ள அத்தனை பேரின் ஸ்மார்ட் போன்களிலும் வைரலவாக வலம் வந்த நிர்வாண செல்ஃபி படங்களில் தோன்றி வசுந்தரா, அந்த சுவடே தெரியாமல் ப்ரெஷ்ஷாக நடிக்க களமிறங்கிவிட்டார்.

படத்துக்குப் பேரு கூட புத்தன் ஏசு காந்தி. ஆமா... விட்டா குடுமி... அடிச்சா மொட்டை ரகம்தான்!

Vasunthara's bike riding

ப்ளசிங் எண்டர்டெயினர்ஸ் சார்பில், பிரபாதீஸ் சாமுவேல் தயாரித்து வரும் இந்தப் படத்தில் வசுந்தராவுக்கு பத்திரிகையாளர் வேடம். அரசியல்வாதிகளின் ஊழலை ஆதாரங்களுடன் பத்திரிகையில் எழுதி அம்பலப்படுத்தும் கதாபாத்திரமாம்.

இந்தப் படத்தில் சென்னை நகருக்குள் மிகவும் வேகமாக கார் ஓட்டும் காட்சியில் வசுந்தரா நடித்திருக்கிறார். மேலும், பரபரப்பான நிருபர் கதாபாத்திரத்துக்கு துணிச்சலாக பைக் ஓட்டும் காட்சிகளில் நடிக்க வேண்டி வந்ததாம்.

Vasunthara's bike riding

பைக் ஓட்ட பல நாட்கள் கற்றுத் தந்துள்ளனர். தினமும் காலையில் அண்ணா நகரில் இருந்து கோயம்பேடு, வடபழனி, மதுரவாயல், பூந்தமல்லி என நகரில் பரபரப்பான சாலைகளில் பைக் ஓட்ட, இவரைப் பார்த்த பலரும் சட்டென்று தங்கள் வாட்ஸ்ஆப் படத் தொகுப்பை நோண்ட ஆரம்பித்துவிட்டார்களாம்.

ஆனால் பல நாட்களாக பைக் ஓட்டுபவர் போல மிகவும் லாவகமாக பைக் ஓட்டி தனது படக்குழுவினரை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் வசுந்தரா.

Vasunthara's bike riding

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கிஷோர், அசோக், மதுமிதா, கயல் வின்சென்ட், கல்லூரி அகில் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

வே வெற்றிவேல் சந்திரசேகர் இயக்கும் இந்தப் படத்து, வேத் சங்கர் இசையமைக்கிறார்.

 

விறுவிறு புலி புக்கிங்... சத்யம் சினிமாஸில் இன்னும் ஆரம்பமாகவில்லை!

விஜய் நடித்து, வரும் அக்டோபர் முதல் தேதி வெளியாகும் புலி படத்துக்கான முன்பதிவு வேகமாக நடந்து வருகிறது.

Puli: இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

இந்தப் படத்துக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. சென்னையில் 40-க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகும் புலியைக் காண, நேற்று மாலை முதலே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.

Puli advance booking starts

சென்னையில் சத்யம் குழும அரங்குகளில் மட்டும் இன்னும் முன்பதிவு தொடங்கவில்லை. பிற காம்ப்ளெக்ஸ்களில் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

செங்கல்பட்டு ஏரியாவின் மிகப் பெரிய மல்டிப்ளெக்ஸான மாயாஜாலில் 45 காட்சிகள் திரையிடப்பட உள்ளது புலி. இதுவரை முதல் நாள் காட்சிக்கான டிக்கெட்டுகள் பெருமளவில் விற்கப்பட்டுள்ளன. முதல் நாளின் சில காட்சிகளுக்கு இன்னும் டிக்கெட்டுகள் ஆன்லைனிலேயே கிடைக்கின்றன.

Puli advance booking starts

முதல் மூன்று தினங்களுக்கு புலியின் டிக்கெட்டுகள் நிச்சயம் விற்பனையாகிவிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.