அப்பா நலமாக இருக்கிறார் : ஐஸ்வர்யா!

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

அப்பா நலமாக இருக்கிறார் : ஐஸ்வர்யா!

5/5/2011 5:52:34 PM

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் உடல் நலம் குறித்து கவலைப்பட வேண்டாம் என்று ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இரண்டு தினங்கள் அவர் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ராணா படத்தின் துவக்க விழாவின் போது ரஜினிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஜீரணக் கோளாறு, நீர்ச்சத்து குறைவு காரணமாக அவர் இஸபெல்லா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்று மாலை வரை அவருக்கு சிகிச்சை அளித்து அனுப்பினர். வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில்,நேற்று இரவு மீண்டும் அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இரவே இசபெல்லா மருத்துவனையின் அவசர சிகிச்சி பிரிவில் அனுமதிக்கப்பட்டார் ரஜினிகாந்த். மருத்துவமனை முன்பு ரசிகர்களும், பத்திரிக்கையாளர்களும் குவிந்துவிட்டனர்.

இதையடுத்து ரஜினியின் மகள் ஐஸ்வர்யா செய்தியாளர்களிடம், “அப்பாவின் உடல்நிலை பற்றி ரசிகர்கள் கவலை கொள்ள வேண்டாம். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அப்பாவுக்கு ஏற்பட்டிருப்பது சாதாரண வைரஸ் காய்ச்சல்தான்'' என்றார். ரஜினிக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்களில் ஒருவரான கிஷோர் கூறுகையில், “ரஜினியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரை மேலும் இரண்டு தினங்கள் இங்கேயே தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தியுள்ளோம்..”, என்றார்.

 

அந்தமானில் நண்பன்

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அந்தமானில் நண்பன்

5/5/2011 5:19:07 PM

நான் ஸ்டாப்பாக நண்பனை இயக்கி வருகிறார் ஷங்கர். இயக்குவது ஷங்கர் என்பதால் மூன்று ஹீரோக்கள் இருந்தும் சின்ன முணுமுணுப்பில்லை. ச‌ரியான நேரத்துக்கு படப்பிடிப்பு தளத்தில் மேக்கப்புடன் ஆஜராகிவிடுகிறார்கள் மூவரும்.

இந்தி 3இடியட்ஸின் ‌ரீமேக்கான இந்தப் படத்தில் இலியானா ஹீரோயினாக நடித்து வருகிறார். ஊட்டியில் தொடங்கிய படப்பிடிப்பு தற்போது அந்தமானில் நடந்து வருகிறது. விஜய் உள்ளிட்டோர் தற்போது அந்தமானில் உள்ளனர்.

ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் தயா‌ரிக்கும் நண்பனுக்கு ஹாரிஸ் ஜெயரா‌ஜ் இசையமைக்கிறார்.




 

டபுள் ஹீரோயினால் தொல்லையா?

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

டபுள் ஹீரோயினால் தொல்லையா?

5/5/2011 12:34:42 PM

சமீபத்தில் வெளியான Ôமிஸ்டர் பெர்ஃபக்ட்Õ தெலுங்கு படத்தில் காஜல¢ அகர்வாலுடன் நடித்திருந்தார் டாப்ஸி. இது பற்றி டாப்ஸி கூறியது: டபுள் ஹீரோயின் கதை என்றால் தொல்லையான விஷயமாக சினிமாவில் சிலர் கருதுகிறார்கள். இரண்டு ஹீரோயின்களுக்குள் ஈகோ பிரச்னை ஏற்படும், ஷூட்டிங்கிற்கு சரியான நேரத்துக்கு வர மாட்டார்கள் என்பது உள்பட பல விஷயங்களை கூறுகிறார்கள். இது, அந்தந¢த நடிகைகளை பொறுத்தது. Ôமிஸ்டர் பெர்ஃபக்ட்Õ ஷூட்டிங்கை பொறுத்தவரை நானும் காஜல் அகர்வாலும் நட்பாக பழகினோம். எங்களுக்குள் ஈகோ பிரச்னையே ஏற்படவில்லை. பல படங்களில் இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள். பெரும்பாலும் ஹீரோயின்கள் மோதல் சம்பவம் நடப்பதில்லை. நான் எத்தனை ஹீரோயின்களுடனும் சேர்ந்து நடிக்க தயாராக இருக்கிறேன். அதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. அடுத்ததாக தமிழில் ஜீவாவுடன் Ôவந்தான் வென்றான்Õ, தெலுங்கில் ÔவீராÕ ஆகிய படங்களில் நடிக்கிறேன். இப்படங்களில் கிளாமர், ஹோம்லி கலந்த வேடங்களில் நடிக்கிறேன்.

 

அனுஷ்காவுக்கு மீண்டும் இந்தி வாய்ப்பு!

Tags:


bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news

அனுஷ்காவுக்கு மீண்டும் இந்தி வாய்ப்பு!

5/5/2011 12:18:18 PM

சிங்கம் படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் நடிக்க அனுஷ்காவிடம் கேட்டனர். அதிக சம்பளம் கேட்டதால் அவரை தேர்வு செய்யவில்லை. அந்த வாய்ப்பு இப்போது காஜல் அகர்வாலுக்கு சென்றுவிட்டது. அஜய் தேவகனுடன் அவர் டூயட் பாடி வருகிறார். இந்நிலையில் மீண்டும் அனுஷ்காவுக்கு இந¢தி பட வாய்ப்பு வந்துள்ளது. சிங்கம் ரீமேக்கை இயக்கும் அதே ரோஹித் ஷெட்டியின் அடுத்த படத்தில் நடிக்க அனுஷ்காவை கேட்டுள்ளனர். இம்முறை அனுஷ்கா கேட்கும் சம்பளத்தை கொடுக்கவும் தயாரிப்பு தரப்பு ஓகே சொல்லியுள்ளதாம். இதனால், இதில் அனுஷ்கா நடிப்பார் என கூறப்படுகிறது. படத்துக்கு இதுவரை ஹீரோ கூட முடிவாகவில்லையாம். அதே நேரம் ஹீரோயினாக அனுஷ்காதான் நடிக்க வேண்டும் என ரோஹித் ஷெட்டி வற்புறுத்தியதால், அனுஷ்காவுக்கு அதிக சம்பளம் தரவும் தயாரிப்பாளர் சம்மதித்து விட்டாராம்.

 

ரஜினிக்கு மீண்டும் உடல்நலக் குறைவு : மருத்துவமனையில் அனுமதி

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ரஜினிக்கு மீண்டும் உடல்நலக் குறைவு : மருத்துவமனையில் அனுமதி

5/5/2011 10:46:31 AM

ரஜினிக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். முன்னதாக ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு ஓய்வெடுத்து வருவதால் பூஜையுடன் தொடங்கிய ராணா படப்பிடிப்பு ஒருவாரத்துக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு உடலில் நீர்ச்சத்து குறைந்ததோடு, காய்ச்சலும் அடிக்கிறது. இதையடுத்து மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் ரஜினி நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.