ஆர்யா,அனுஷ்கா,தமன்னா உட்பட 76பேருக்கு கலைமாமணி விருது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஆர்யா, அனுஷ்கா, தமன்னா உட்பட 76 பேருக்கு கலைமாமணி விருது

2/14/2011 10:42:57 AM

நடிகர்கள் ஆர்யா, கருணாஸ், சின்னி ஜெயந்த், நடிகைகள் அனுஷ்கா, தமன்னா உள்பட 76 பேருக்கு கலைமாமணி விருதை முதல்வர் கருணாநிதி நேற்று வழங்கினார். அதே போல் பாரதி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, பாலசரசுவதி மற்றும் சின்னத்திரை விருதுகளையும் முதல்வர் வழங்கினார்.

ஒவ்வொரு ஆண்டும் கலைத்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் கலைஞர்களை பாராட்டி, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைமாமணி விருதுகள், சின்னத்திரை விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 2008, 2009, 2010ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுக்குரிய கலைஞர்களை தேர்வு செய்து தமிழக அரசு அறிவித்தது.

இதே போன்று 2007,2008ம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகளும் அறிவிக்கப்பட்டன. இதன்படி, கலைமாமணி மற்றும் சின்னத்திரை விருது வழங்கும் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு முதல்வர் கருணாநிதி தலைமையேற்று விருதுகளையும், பரிசுகளையும் வழங்கி பேசினார். அமைச்சர் பரிதி இளம்வழுதி வாழ்த்தி பேசினார். இதில் மத்திய, மாநில அமைச்சர்கள், நடிகர், நடிகைகள், சின்னத்திரை கலைஞர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

விழாவில், பாரதி விருது -எழுத்தாளர் ஜெயகாந்தன், எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது -இசையமைப்பாளர் இளையராஜா, பாலசரசுவதி விருது-பரத நாட்டிய கலைஞர் பத்மாசுப்ரமணியம் ஆகியோர் பெற்றனர். 2008ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது நகைச்சுவை நடிகர்- கருணாஸ், ஒளிப்பதிவாளர்-ராஜீவ்மேனன், இசையமைப்பாளர்-பரத்வாஜ், இயக்குனர்- திருமுருகன் உள்பட 27 பேருக்கும், 2009ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது நகைச்சுவை நடிகர்- சின்னி ஜெயந்த், குணச்சித்திர நடிகைகள் ரோகிணி, சரண்யா, நடிகைகள் மாளவிகா, ரேவதி சங்கரன், நாட்டுப்புற பாடகி தஞ்சை சின்னப்பொன்னு உள்பட 23 பேருக்கும் வழங்கப்பட்டது.

அதே போல, 2010ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது நடிகர்-ஆர்யா, நடிகைகள்-அனுஷ்கா, தமன்னா, பட்டிமன்ற பேச்சாளர்- திண்டுக்கல் ஐ.லியோனி உள்பட 26 பேர் பெற்றனர்.


Source: Dinakaran
 

பூர்ணா என் தோழி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பூர்ணா என் தோழி

2/14/2011 10:54:18 AM

ஆதி கூறியது: ஒரு பெரிய குடும்பத்துக்குள் காதல் நுழைகிறது. அதனால் ஏற்படும் பிரச்னைகள் Ôஆடு புலிÕ படத்தின் கதை. பிரபுவின் மகனாக நடிக்கிறேன். ஜோடியாக பூர்ணா நடிக்கிறார். சென்னை, கும்பகோணம், புதுச்சேரியில் ஷூட்டிங் நடந்தது. பூர்ணாவுடன் நெருக்கமாக பழகுகிறீர்களே என்கிறார்கள். இப்படம் மூலம் இருவரும் பிரெண்ட்ஸ் ஆகிவிட்டோம். முதல்முறை சந்தித்தபோது நீண்ட நாள் பழகியவர்போல் மனம்விட்டு பேசினார். இந்த பழக்கத்தால் இருவருக்கும் படத்தில் கெமிஸ்ட்ரி நன்கு ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. மற்ற படங்களைவிட இப்படத்தில் ஹீரோயினுடன் நிறைய ரொமான்ஸ் சீன் உள்ளது. எல்லா அம்சமும் கொண்ட கமர்ஷியல் படமாக இயக்கி இருக்கிறார் விஜய் பிரகாஷ்.

அடுத்து வசந்தபாலன் இயக்கும் 'அரவான்Õ படத்தில் நடிக்கிறேன். 18ம் நூற்றாண்டில் நடக்கும் கதை. சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் கூடிய இளைஞன் வேடம். தொடை தெரிய கச்சம் கட்டும் பாணியில் வேட்டி கட்டி நடிக்கிறேன். இக்கதைக்காக வரலாற்று ரீதியாக இயக்குனர் நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறார். கமர்ஷியல் படம் பிடிக்கிறதா? ஆர்ட் படம் பிடிக்கிறதா? என்கிறார்கள். இரண்டிலுமே நடிக்க எனக்கு ஆசை. தெலுங்கு படத்தில் நடிக்க கேட்கிறார்கள். ஹீரோவாக வாய்ப்பு வந்தால் நடிப்பேன். இப்போதைக்கு தமிழில்தான் முழு கவனம் செலுத்துவேன்.


Source: Dinakaran
 

வதந்திகளை தாங்கிக் கொண்டேன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

வதந்திகளை தாங்கிக் கொண்டேன்

2/14/2011 10:55:00 AM

பாவனா கூறியது: பட வாய்ப்பு குறைந்தால் உடனே கல்யாணம் என்று கதை கட்ட தொடங்கிவிடுகிறார்கள். அந்த வதந்திகளையெல்லாம் தாங்கிக் கொண்டேன். தமிழில் 'அசல்Õ படத்துக்கு பிறகு நடிக்கவில்லை. அதற்காக கோலிவுட் மீது எனக்கு எந்த புகாரும் இல்லை. அதே நேரம் தமிழ் சினிமாவில் எனக்கும் ஒரு காலம் வரும். ஏற்கனவே கன்னடத்தில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தது. கன்னடம் தெரியாததால் ஒப்புக்கொள்ளாமல் இருந்தேன். புனித் ஹீரோவாக நடிக்கும் 'ஜாக்கிÕயில் கேட்டபோது ஒப்புக்கொண்டேன். பெரிய நடிகர் என்பதோடு கதையும் நன்றாக இருந்தது. அங்குள்ள ரசிகர்கள் ரசனை பற்றி தெரியாததால் படம் ஹிட்டாகுமா என்பது தெரியவில்லை. ஆனால் இப்படம் பெரிய ஹிட்டாகிவிட்டது. 2010ம் ஆண்டு மலையாளத்தில் 3 படங்களில் நடித்தேன். நன்றாக ஒடியது. கன்னடத்தில் சுதீப் படத்தில் நடிக்க கால்ஷீட் ஒதுக்கினேன். அவர் எடுக்கும் சொந்த படம் முடியாததால் இப்படம் தள்ளிப்போனது. பிரியதர்ஷன் படத்துக்கும் கால்ஷீட் கொடுத்திருந்ததால் சுதீப் படத்தில் நடிக்க முடியவில்லை. ஒரு கல்லூரி வளாகத்துக்குள் நடக்கும் கதையை பிரியதர்ஷன் என்னிடம் சொன்னபோது பிடித்திருந்தது. நடிக்க ஒப்புக்கொண்டேன். இதன் ஷூட்டிங் முழுவதும் துபாயில் நடக்க உள்ளது.


Source: Dinakaran
 

சிம்புவிற்கு ரசிகர்கள் தந்த பரிசு!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சிம்புவிற்கு ரசிகர்கள் தந்த பரிசு!
2/11/2011 3:40:02 PM
யங் சூப்பர் ஸ்டார் சிம்பு, பரத், அனுஷ்கா நடித்துள்ள படம் 'வானம்’. புதுமுக இயக்குனர் க்ரிஷ் இயக்கியுள்ளார். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு படுவேகமாக நடந்து வருகிறது. இதனையடுத்து, சிம்பு நடித்த படங்களின் தலைப்புகளை வைத்து பாடல் எழுதி ஒலிப்பதிவு செய்து அவருக்கு பரிசாக அளித்துள்ளனர் அவரது ரசிகர்கள்.


Source: Dinakaran
 

தமிழ் 3டி படத்துக்கு ஹாலிவுட் கேமரா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழ் 3டி படத்துக்கு ஹாலிவுட் கேமரா
2/11/2011 3:30:14 PM
'அம்புலி 3 டி’ படம் பற்றி டைரக்டர்கள் ஹரிசங்கர், ஹரீஷ் நாராயண் கூறியது: கிராமங்களில் பாட்டி சொன்ன கட்டுக்கதைகள் காலம் காலமாக தொடர்ந்து கொண்டிருக்கும். அது உண்மையா? பொய்யா? என்பதே கதை. 1978ம் ஆண்டில் நடப்பதுபோல் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஹீரோவாக வேட்டைக்காரன் வேடத்தில் நடிக்கிறார் பார்த்திபன். மேலும் அஜெய், ஸ்ரீஜித், சனம், திவ்யா நடிக்கின்றனர். இப்படத்தை 3 டியில் உருவாக்க வேண்டும் என்று இதன் தயாரிப்பாளர் வி.லோகநாதனிடம் சொன்னபோது வித்தியாசமான முயற்சி என்றார். கோவை, மேட்டுப்பாளையம் பகுதியில் இதன் ஷூட்டிங் நடக்கிறது. அப்பகுதியில் உள்ள காட்டுக்குள் 3 டி கேமராவுடன் யதார்த்தமான சண்டை காட்சிகளை படமாக்கினோம். அடர்ந்த காட்டுபகுதியே திகிலுட்டும் வகையில் படமாகிறது. வியூ பாயின்ட் என்ற கேமராவில் 'ஓர் இரவுÕ என்ற படத்தை இயக்கினோம். அடுத்த முயற்சியும் மாறுபட்டதாக இருக்க வேண்டும் என்பதன் விளைவுதான் ‘அம்புலி’ படம். இதற்காக அமெரிக்காவிலிருந்து 3 டி கேமரா வரவழைக்கப்பட்டு உள்ளது. சாதாரண கேமராவில் ஒரு லென்ஸ் இருக்கும். இந்த கேமராவில் 2 லென்ஸ்கள் உண்டு. ஹாலிவுட்டை சேர்ந்த 3 டி டெக்னிஷியன் டேன் என்பவரிடம் இதற்காக பயிற்சி பெற்றோம்.


Source: Dinakaran
 

ரஜினி,விஜய்யுடன் நடிக்க ஆசை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ரஜினி, விஜய்யுடன் நடிக்க ஆசை

2/12/2011 10:39:20 AM

தமிழ் சினிமா உட்பட அனைத்து மாநில கதாநாயகிகளும் ஒரு முறையாவது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க ஆசை இருக்கும். அப்படிப்பட்ட ஆசைகளும் சமீரா ரெட்டிக்கும் இருக்கு என்ற விஷயம் தற்போது தெரியவந்துள்ளது. வாரணம் ஆயிரம், படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் சமீரா ரெட்டி. அசல் படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடித்தார். இப்போது கவுதம் மேனன் இயக்கியுள்ள ‘நடுநிசி நாய்கள்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் பிப் 18-ம் தேதி வெளியாகிறது. தமிழ்ப் பட அனுபவங்கள் பற்றி சென்னையில் சமீரா ரெட்டி நேற்று அளித்த பேட்டியில் நான் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் இளைய தளபதி விஜய்யின் தீவிர ரசிகை, அவர்களது படங்களில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை என்று கூறினார்.


Source: Dinakaran
 

உறுமி படத்தில் நான் நடிக்கவில்லை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

உறுமி படத்தில் நான் நடிக்கவில்லை

2/12/2011 10:52:16 AM

சந்தோஷ் சிவன் இயக்கத்தில் தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் உருவாகும் படம் ‘உருமி’. படத்தில் தபு, ‌‌ப்ருத்விரா‌ஜ், ஜெனிலியா, பிரபுதேவா, வித்யாபாலன் ஆகியோர் நடித்துள்ளனர். பதினைந்தாம் நூற்றாண்டு பின்னணியில் வாஸ்கோடகாமாவின் கதையை எடுத்து வருகிறார் சந்தோஷ் சிவன். இந்த படத்தில் கெஸ்ட் ரோலாக விக்ரம் நடிப்பார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் விஜய் இயக்கத்தில் விக்ரம் பிஸியாக இருப்பதால் அவருக்குப் பதில் ஆர்யா நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால் இதனை ஆர்யா மறுத்துள்ளார். சந்தோஷ் சிவனின் படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் உறுமியில் நான் நடிக்கவில்லை என்று தெ‌ரிவித்துள்ளார்.


Source: Dinakaran
 

வால்டர் வணங்காமுடி விஷால்...கும்பிடறேன் சாமி ஆர்யா...

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வால்டர் வணங்காமுடி விஷால்... கும்பிடறேன் சாமி ஆர்யா...

2/12/2011 11:47:11 AM

தலைப்பை பார்த்து ஆர்யாவுக்கும், விஷாலுக்கும் வைத்து பட்டப் பெயர் என நினைத்திட வேண்டும். அவன் இவனில் விஷாலின் பெயர் வால்டர் வணங்காமுடி. ஆர்யாவின் பெயர் கும்பிடறேன் சாமி என்று கூறப்படுகிறது. பாலா படம் என்றால் சமூக விழிப்புணர்வு இருக்கும், ஆனால் அவரது மற்றப் படங்களைப் போல் சீ‌ரியஸாக இல்லாமல் படு நகைச்சுவையாக அவன் இவனை எடுத்திருக்கிறாராம்.





Source: Dinakaran
 

மனம்விட்டு பேசிய ரஜினி,கமல்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மனம்விட்டு பேசிய ரஜினி, கமல்!

2/12/2011 12:06:52 PM

சூப்பர் ஸ்டார் ரஜினியும், உலக நாயகன் கமலும் நட்பிற்கு சிறந்த எடுத்துகாட்டு என்று தான் சொல்ல வேண்டும். சமீபகாலமாக பொதுவிழாவில் மட்டுமே ரஜினியும் கமலும் சந்தித்து பேசி வந்தனர். இதனையடுத்து டைரக்டர் செல்வராகவன்கீதாஞ்சலி திருமண நிச்சயதார்த்தில் கலந்துகொண்ட ரஜினியும், கமலும் தனியாக அமர்ந்து நீண்ட நேரம் மனம்விட்டு பேசினார்களாம். யார் தொந்தரவு இல்லாமல் இவர்கள் பேசிக் கொண்டே இருந்தார்களாம்.


Source: Dinakaran
 

திருநங்கை கதையை படமாக்கியது ஏன்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

திருநங்கை கதையை படமாக்கியது ஏன்?

2/12/2011 11:58:36 AM

'நர்த்தகி' பட இயக்குனர் விஜய பத்மா கூறியது: சினிமாவில் திருநங்கைகள் கேலியாகச் சித்தரிக்கப்படுகின்றனர். அது தவறு. திருநங்கைகள்பற்றி ஆராய்ச்சி கட்டுரை எழுதியபோது அவர்களை சந்தித்தேன். படங்களில் தங்களை கேலியாக சித்தரிப்பதை சொல்லி மனம் குமுறுவார்கள். அந்த பாதிப்புதான் 'நர்த்தகி' என்ற படத்தை எடுக்க தூண்டியது. குடும்பத்தில் ஒரு திருநங்கை பிறந்துவிட்டாலே அவர்களை பெற்றோர்கள் கூட வெறுக்கத் தொடங்கி விடுகின்றனர். ஒரு இளவயது ஆண்மகன் மன உணர்வின் பாதிப்பில் கொஞ்சம் கொஞ்சமாக பெண்ணாக மாறிக்கொண்டிருப்பதை உணர்கிறான். இதனால் காதலித்தவளையே நிராகரிக்கத் தொடங்குகிறான். அவனுக்காகவே வாழ்ந்த அப்பெண் எடுக்கும் முடிவுதான் கதை. இதில் கல்கி என்ற திருநங்கை ஹீரோயினாக நடிக்கிறார்.


Source: Dinakaran
 

கருந்தேள் காட்டில் திக்...திக்...திக்...

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கருந்தேள் காட்டில் திக்… திக்… திக்…

2/12/2011 11:54:39 AM

'வந்தான் வென்றான்' படம் பற்றி இயக்குனர் கண்ணன் கூறியது: ஜீவா, டாப்ஸி நடிக்கும் இதன் ஷூட்டிங் கேரளா, கர்நாடக எல்லையில் உள்ள காட்டுப்பகுதியில் 23 நாட்கள் நடந்தது. காடுகளுக்குள் ஷூட்டிங் நடத்த அனுமதி வாங்கியபோது அங்கிருந்த அதிகாரிகள், 'கருந்தேளும், அட்டைகளும் நிறைந்த இடம். தேள்கள் கடித்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்' என்று எச்சரித்தனர். இதனால் உஷார் ஆனோம். 2 டாக்டர்களையும் கையோடு அழைத்துக்கொண்டு காடுகளுக்குள் சென்றோம். அங்கிருந்த அணைப் பகுதியின் சரிவில் மரத்தால் வீடு அமைக்கப்பட்டது. இதற்கு அடித்தளம் எதுவும் இல்லாததால் 10 பேருக்கு மேல் மரவீட்டுக்குள் செல்லக்கூடாது என்று ஆர்ட் டைரக்டர் கூறி இருந்தார். ஆனால் ஜீவாடாப்ஸியின் பாடல்காட்சியை அதற்குள்தான் படமாக்கினோம். மொத்த யூனிட்டும் அந்த வீட்டுக்குள் இருந்ததுடன் டிராலி, கேமரா சகிதமாக உள்ளே ஐக்கியமாகிவிட்டோம். ஆனால் எதையுமே அசைக்காமல் ஒவ்வொருவரும் பூனைபோல் நடந்துதான் வேலைகள் பார்த்தோம். பல இடங்களில் தேள், அட்டைகளைப் பார்த்தோம். ஆனால் எந்த பாதிப்பும் இல்லாமல் ஷூட்டிங் நடத்தினோம். டாப்ஸியை பயமுறுத்துவதற்காக ஜீவா, அங்கிருக்கும் சிறுகுச்சிகளை அவர் மீது எறிந்து, தேள் தேள் என்று பயமுறுத்துவார்.


Source: Dinakaran
 

மனம்விட்டு பேசிய ரஜினி,கமல்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மனம்விட்டு பேசிய ரஜினி, கமல்!

2/12/2011 12:06:52 PM

சூப்பர் ஸ்டார் ரஜினியும், உலக நாயகன் கமலும் நட்பிற்கு சிறந்த எடுத்துகாட்டு என்று தான் சொல்ல வேண்டும். சமீபகாலமாக பொதுவிழாவில் மட்டுமே ரஜினியும் கமலும் சந்தித்து பேசி வந்தனர். இதனையடுத்து டைரக்டர் செல்வராகவன்கீதாஞ்சலி திருமண நிச்சயதார்த்தில் கலந்துகொண்ட ரஜினியும், கமலும் தனியாக அமர்ந்து நீண்ட நேரம் மனம்விட்டு பேசினார்களாம். யார் தொந்தரவு இல்லாமல் இவர்கள் பேசிக் கொண்டே இருந்தார்களாம்.


Source: Dinakaran