மாநில மொழிப் படங்கள் வளரவேண்டும் - ஆமீர்கான்

மாநில மொழிப் படங்கள் வளரவேண்டும் - ஆமீர்கான்

மும்பை: மாநில மொழிப் படங்கள் அதிக அளவில் வர வேண்டும் என்றார் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஆமீர்கான்.

மகரந்த் தேஷ்பாண்டே என்பவர் இயக்கிய மராத்தி மொழிப் படமான சாடர்டே சண்டே படத்தின் சிறப்புக் காட்சிக்கு வந்திருந்தார் ஆமீர்கான். ஆமீர் நடித்த கயாமத் சே கயாமத் தக், சர்பரோஷ் போன்ற படங்களில் பணியாற்றியவர் இந்த மகரந்த் தேஷ்பாண்டே.

நிகழ்ச்சியில் பேசிய ஆமீர்கான், "இந்தியா ஒரு தேசம் என்றாலும் பல மொழிகள், வரலாற்றுப் பாரம்பரியங்களைக் கொண்டது. அந்த மாநில மொழிகளில் படங்கள் உருவாகும்போது, இந்தியாவின் இந்த கலாச்சார, மொழிச் சிறப்பு அதிகம் வெளிப்படும்.

இந்த மாதிரி படங்கள் அதிகம் வரவேண்டும் என விரும்புகிறேன். என ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.

ஏற்கெனவே மராத்தி போன்ற மாநில மொழிப் படங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

தொழிலதிபரின் மூக்கில் 'பஞ்ச்': நடிகர் சயீப் அலி கானின் பத்மஸ்ரீ விருதை பறிக்கும் மத்திய அரசு?

மும்பை: மும்பையில் உள்ள உணவகத்தில் சண்டை போட்ட விவகாரத்தால் நடிகர் சயீப் அலி கானுக்கு அளித்த பத்ம ஸ்ரீ விருதை திரும்பப் பெறலாமா என்று மத்திய அரசு யோசனையில் உள்ளது.

பாலிவுட் நடிகர் சயீப் அலி கானுக்கு கடந்த 2010ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. கலைத்துறையில் அவர் ஆற்றி வரும் சேவையை பாராட்டி விருது வழங்கப்பட்டது. பாலிவுட்டில் ஜென்டில்மேன் என்று அழைக்கப்படும் சயீப் அலி கான் கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மும்பையில் உள்ள உணவகம் ஒன்றுக்கு சென்றார்.

தொழிலதிபரின் மூக்கில் 'பஞ்ச்': நடிகர் சயீப் அலி கானின் பத்மஸ்ரீ விருதை பறிக்கும் மத்திய அரசு?

அங்கு அவர் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த தொழில் அதிபர் மற்றும் அவருடைய மாமனாருடன் சண்டை போட்டார். மேலும் அவர் அந்த தொழில் அதிபரின் மூக்கில் ஓங்கி ஒரு குத்துவிட்டார். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் தகவல் அறியும் சட்ட ஆர்வலர் எஸ்.சி. அகர்வால் என்பவர் சயீப் அலி கானின் பத்ம ஸ்ரீ விருதை திரும்பப் பெற வேண்டும் என்று கூறி கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய அரசு அவருக்கு அளித்த பதிலில் தெரிவித்துள்ளது.

இந்த சண்டை விவகாரத்தால் சயீபின் பத்ம ஸ்ரீ விருது பறிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

 

தீபாவளிக்கு லிங்கா இசை வெளியீடு?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த தீபாவளிக்கு லிங்கா இசை வெளியீடு?  

இந்தப் படத்தில் மொத்தம் 5 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் ஏ ஆர் ரஹ்மான்.

முதலி இந்தப் படத்தை தீபாவளிக்கு வெளியிடத்தான் திட்டமிட்டிருந்தனர். ஆனால் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி வெளியிடுவதன் மூலம், அவரை கவுரவிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் திட்டமிட்டார்.

இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட இயக்குநர் ரவிக்குமாரும், அதற்கேற்ப பணிகளைச் செய்து வருகிறார்.

இந்த நிலையில், படத்தின் இசையை தீபாவளியன்று வெளியிடலாம். ரசிகர்களை உற்சாகப்படுத்த அது உதவும் என இயக்குநர் கூறியதால், அன்றைய தினமே இசையை வெளியிடவிருக்கிறார்களாம். அடுத்த மாதத்துக்குள் பாடல்களின் மாஸ்டர் காப்பியைத் தருவதாக ஏஆர் ரஹ்மானும் உறுதியளித்துள்ளாராம்.

 

நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் புற்றுநோயால் மரணம்

சென்னை: பிரபல சின்னத்திரை நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் இன்று சென்னையில் மரணமடைந்தார்.

பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும், திரைப்படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சுருளி மனோகர். கடந்த ஆண்டு ' இயக்குனர்' என்ற திரைப்படத்தை இயக்கினார்.

நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் புற்றுநோயால் மரணம்

கிங்காங், போண்டாமணி, ஜாஸ்பர், மனோபாலா, பாலு ஆனந்த், குண்டு கல்யாணம், பாண்டு, அல்வா வாசு, குள்ளமணி, பாவா லட்சுமணன், தேவதர்ஷினி, ஜெய்கணேஷ், ஜெயமணி என தமிழ் சினிமாவில் உள்ள நகைச்சுவை பட்டாளத்தையே இந்தப் படத்தில் நடிக்க வைத்தார் சுருளி. இவர்களுடன் சுருளி மனோகர் ஒரு கதாபாத்திரத்திலும் நடிக்கவும் செய்தார்.

இந்நிலையில், சென்னையில் அவர் இன்று மரணமடைந்தார். வெகு நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த சுருளி மனோகர் சிகிச்சை பலனின்றி இன்று இறந்துவிட்டார். மறைந்த சுருளி மனோகருக்கு, மூன்று மகள்கள் உள்ளனர். சுருளி மனோகர் மறைவுக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு தரப்பினரும், மற்றும் தொலைக்காட்சி நடிகர், நடிகைகளும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

 

ஹாலிவுட் செல்லும் பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா: ஸ்பீல்பெர்க் படத்தில் நடிக்கிறார்

மும்பை: பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தயாரிக்கும் படத்தில் பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா நடிக்க உள்ளார்.

ஹாலிவுட் செல்லும் பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா: ஸ்பீல்பெர்க் படத்தில் நடிக்கிறார்

இன்டியானா ஜோன்ஸ், தி அட்வென்சர்ஸ் ஆப் டின்டின் உள்ளிட்ட பல பிரமாண்ட ஹாலிவுட் படங்களை இயக்கியவர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். அவர் தயாரிப்பில், லாஸ் ஹால்ஸ்ட்ராம் இயக்கத்தில் உருவாகும் தி ஹன்ட்ரட் பூட் ஜர்னி படத்தில் பாலிவுட் நடிகர் ஓம் புரியின் மனைவியாக நடிக்கிறார் ஜூஹி சாவ்லா. 46 வயதாகும் அவர் படத்தில் 62 வயது பெண்ணாக நடிக்கிறார்.

மேலும் ஹீரோவின் அம்மா ஜூஹி தான். 1984ம் ஆண்டு மிஸ் இந்தியா அழகிப்பட்டம் வென்றவர் ஜூஹி. உலக அழகிப் பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராயை அடுத்து ஹாலிவுட் செல்லும் அழகி ஜூஹி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தில் ஜூஹியின் கதாபாத்திரம் சிறியதாக இருந்தாலும் முக்கியத்துவம் வாய்ந்ததாம். ஆனால் ஜூஹி இது குறித்து இன்னும் வாய் திறக்காமல் உள்ளார்.

 

மராத்தி நடிகை சுமிதா தல்வாக்கர் புற்றுநோயால் மரணம்: பிரதமர் மோடி இரங்கல்

மும்பை: பிரபல மராத்திய நடிகை சுமிதா தல்வாக்கர் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58. புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். நடிகையின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மராத்திய திரைப்பட நடிகையும், தயாரிப்பாளருமான சுமிதா தல்வாக்கர் கடந்த சில மாதங்களாக கர்ப்பப்பை புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக அவர் மும்பை ஜஸ்லோக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், புதன்கிழமை மதியம் 2.30 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது. சுமிதா தல்வாக்கர் மரணம் அடைந்ததை ஜஸ்லோக் மருத்துவமனை டாக்டர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

மராத்தி நடிகை சுமிதா தல்வாக்கர் புற்றுநோயால் மரணம்:  பிரதமர் மோடி இரங்கல்

செய்திவாசிப்பாளர் டூ நடிகை

மரணம் அடைந்த நடிகை சுமிதா தல்வாக்கர், ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கினார். அங்கு 17 ஆண்டுகள் பணிபுரிந்த பின்னர், சினிமா வாய்ப்பு கிடைத்து திரையுலகில் தடம் பதித்தார். அவரது நடிப்பில் வெளியான ‘‘து சவுபாக்யவதி ஹோ', ‘கத்பாத் கோத்தாலா' ஆகிய திரைப்படங்கள் என்றும் நினைவில் நிற்பவை.

திரைப்பட தயாரிப்பாளர்

ஆரம்ப காலத்தில் ஒரு நடிகையாக திரையுலகில் கால் பதித்த சுமிதா தல்வாக்கர், 1989-ம் ஆண்டு வெளியான ‘கலத் நகலத்' திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அவருக்கு 1991-ம் ஆண்டு தேசிய விருது வழங்கப்பட்டது. அதன்பின், 1993-ம் ஆண்டில் ‘சாவத் மஷி லத்கி' என்ற நகைச்சுவை படத்தை அவர் இயக்கியதன் மூலம், ஒரு இயக்குனராகவும் பிரவேசம் எடுத்தார்.

திரைப்பட இயக்குநர்

சுமிதா தல்வாக்கர் இதுவரை 6 திரைப்படங்கள் இயக்கி உள்ளார். தவிர, ‘பெஷ்வாய்' ‘அவந்திகா', ‘உஞ்ச் மாஷா ஷோக்கா' உள்பட 25 தொலைக்காட்சி தொடர்களையும் அவர் தயாரித்து உள்ளார்.

ராஜ்தாக்கரே அஞ்சலி

நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, மறைந்த நடிகை சுமிதா தல்வாக்கரின் இல்லத்துக்கு சென்று, அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும், பல்வேறு அரசியல் கட்சியினரும், திரையுலகினரும் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர்.

மோடி இரங்கல்

நடிகை சுமிதா தல்வாக்கரின் மரணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, இரங்கல் தெரிவித்துள்ளார்.‘‘சுமிதா தல்வாக்கரின் மறைவு மராத்திய திரைப்பட துறைக்கு பேரிழப்பு. திரைப்பட துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் நினைகூரத்தக்கவை. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்'' என்று தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

அமைச்சர் இரங்கல்

சுமிதா தல்வாக்கர் மறைவுக்கு தகவல் ஒலிப்பரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகரும் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் வலைதளத்தில், திறமைவாய்ந்த நடிகையும், தயாரிப்பாளரும், இயக்குனருமான சுமிதா தல்வாக்கர் என்றைக்கும் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்று வாழ்கிறார். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார்.

 

சிகரம் தொடு.. இசை வெளியீட்டு மேடையில் ஜேசுதாஸ் பாடிய 'அப்பா' பாடல்!

சென்னை: இன்று நடந்த சிகரம் தொடு இசை வெளியீட்டு விழா மேடையில், அன்புள்ள அப்பா என்ற பாடலை என்ற பாடலைப் பாடி நெகிழ வைத்தார் கேஜே ஜேசுதாஸ்.

கும்கி', ‘இவன் வேற மாதிரி', ‘அரிமா நம்பி' படங்களுக்குப் பிறகு, விக்ரம் பிரபு நடிக்கும் படம் சிகரம் தொடு. மோனல் காஜர் ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை ‘தூங்கா நகரம்' கௌரவ் இயக்கி வருகிறார்.

இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை இன்று காலை சத்யம் வளாகத்தில் வெளியிட்டனர்.

சிகரம் தொடு.. இசை வெளியீட்டு மேடையில் ஜேசுதாஸ் பாடிய 'அப்பா' பாடல்!

இதில் சிறப்பு விருந்தினராக கமல் ஹாசன், கே.ஜே.யேசுதாஸ், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர்.

இப்படத்தின் பாடல்களை கமல் ஹாசன் வெளியிட அதை கே.எஸ்.ரவிக்குமார் பெற்றுக் கொண்டார். படத்தின் டிரைலரை தனுஷ் மற்றும் யேசுதாஸ் வெளியிட்டனர்.

விழாவில் சிறப்பு அம்சமாக இமான் இசையில் இப்படத்தில் தான் பாடிய ‘அன்புள்ள அப்பா...' என்ற பாடலை மேடையில் பாடினார் ஜேசுதாஸ். அப்பா - மகன் உறவைச் சொல்லும் இந்தப் பாடல் கேட்பவை நெகிழ வைத்தது.

 

என் மேனேஜர் என்று சொல்லி ஏமாற்றும் நபர்! - ஹன்சிகா புகார்

என் மேனேஜர் என்று சொல்லி ஏமாற்றும் நபர்! - ஹன்சிகா புகார்  

சிலர், அதிகாரப்பூர்வமாக மேனேஜராக இல்லாமலேயே, குறிப்பிட்ட நடிகர் நடிகைகளின் பெயர்களைச் சொல்லி சம்பளம் பேசி கமிஷன் பார்ப்பதும் நடக்கிறது.

அப்படி ஒரு நபர் ஹன்சிகாவின் பெயரைப் பயன்படுத்தி வருகிறாராம். இதனை அறிந்த ஹன்சிகா இன்று ஒரு எச்சரிக்கை மற்றும் புகார் கடிதம் அனுப்பியுள்ளார் மீடியாவுக்கு.

அதில், "எனக்கு மேனேஜர் என்று சொல்லிக் கொண்டு யாரோ ஒருவர் தயாரிப்பாளர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களிடம் சம்பளம் பேசி வருவதாக திரையுலக நண்பர்கள் மூலம் அறிந்தேன். எனக்கு அப்படி யாரும் மேனேஜர் இல்லை. என் அம்மா டாக்டர் மோனாதான் என் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் கவனித்து வருகிறார். மோசடி நபர்களை நம்பி ஏமாறாதீர்கள்," என்று கூறியுள்ளார்.

 

மன்மதனிடம் தப்பி தெலுங்கு அவதார நடிகரின் கஸ்டடியில் சிக்கிய சின்னப்பூ!

சென்னை: மன்மதனின் காதலியாக வலம் வந்து கொண்டிருந்த வரை சின்னப்பூ நடிகையை மற்ற நடிகர்கள் எட்டி நின்றே பேசி வந்தனர். ஆனால், சிலப்பல காரணங்களுக்காக அந்தக் காதல் பாதியிலேயே முறிந்து போனது. இதனால் மற்ற நடிகர்களுக்கு மிகவும் ஜாலியாகி விட்டது.

ஆனால். இந்த நிலை நீண்டகாலம் நீடிக்கவில்லை. இப்போது நடிகையின் நிலைமையே தலைகீழ் என்கிறார்கள் அவரது நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்கள். நடிகை தற்போது தெலுக்கு நடிகர் ஒருவரின் வசம் சிக்கியுள்ளாராம்.

இதனால், மீண்டும் பாதுகாப்பு வேலிக்குள் வந்து விட்டாராம் நடிகை. நினைத்த நேரத்தில் மற்ற நடிகர்களால் நடிகையை தொடர்பு கொள்ள இயலுவதில்லையாம். நடிகரைத் தாண்டி புதிய படத்திற்காக நடிகையை அணுகுவதற்குள் தலை சுற்றி விடுகிறதாம்.

ஆனால் மன்மதன் நடிகரின் கட்டுப்பாட்டில் நடிகை இருந்த போது பல கண்டிசன்களைப் போட்ட தாய்க்குலம் இப்போது எப்படி அமைதியாக இருக்கிறார் என்பது தான் (தொடர்பு கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும்) பல நடிகர்களின் முக்கியக் கேள்வியே.!

 

மும்பைக்குச் செல்வதாக கூறிச் சென்ற சென்னை துணை நடிகர் மாயம் - தீவிர வேட்டை

சென்னை: சென்னையைச் சேர்ந்த திரைப்பட துணை நடிகர் ஒருவர் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, வடபழனியில் உள்ள ஆண்ட்ரூஸ் தெருவில் வசித்து வருபவர் சிவம் என்பவர். இவர் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவின் "கள்வனின் காதலி" போன்ற சில திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் மும்பை செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற சிவம் அதன் பின்னர் வீடு திரும்பவே இல்லை. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர்.

ஆனாலும், சிவம் எங்கிருக்கின்றார் என்பதைக் கண்டறிய இயலவில்லை. இதையடுத்து அவர்கள் வடபழனி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

அப்புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிவத்தை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

'பூ இலை'யொடு சேர்ந்து விடுமோ.... அச்சத்தில் 'மிஸஸ் நாட்டாமை'!

சென்னை :உட்கட்சிப் பூசலால் சமீபத்தில் பூ நடிகை முன்னணி அரசியல் கட்சியிலிருந்து திடீரென வெளியேறினார். உடனே, பூ அடுத்ததாக இந்தக் கட்சிகளில் இணையலாம் என அவரது அபிமானிகள் ஒரு பட்டியலை வெளியிட்டு விவாதித்தனர். ஆனால், சில காலம் ஓய்வெடுக்கப் போகிறேன் என அறிவித்தார் பூ.

அதன்படி, குடும்பத்துடன் சுற்றுலா என மேடம் பிசியாக இருக்கிறார். ஆனபோதும், நடிகை இலைக் கட்சிக்குத் தாவலாம் என்ற தகவலும் அரசல் புரசலாக வெளியாகியுள்ளது.

ஏனெனில், முன்னர் அக்கட்சியின் தொலைக்காட்சி நிகழ்ச்சியை அம்மணி தான் தனது வித்தியாசமான ஆடைகள் மூலம் பிரபலப்படுத்தினார். அப்போதே அவர் இலையோடு சேர்வார் எனக் கூறப்பட்டது. ஆனால், எதிர்பார்ப்புக்களை திசைதிருப்பி அவர் சகோதரச் சண்டைக் கட்சியில் களமிறங்கினார்.

இந்நிலையில், மீண்டும் வருகிறேன் என அவர் கூறினால் இலைக் கட்சி மேலிடம் நிச்சயமாக மறுக்கப் போவதில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், பூ எங்கே இலையோடு இணைந்து விடுவாரோ என்ற அச்சத்தில் இருப்பவர் மிஸஸ் நாட்டாமை தானாம்.

சூரிய தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை மனைவி வழங்கிக் கொண்டிருக்க, நீங்க சொன்னா சரியாத் தான் இருக்கும் என மதர் புகழ் பாடி வருகிறார் அவரது நாட்டாமைக் கணவர். எப்படியும் மதரின் மனதில் இடம் பிடித்தே தீருவோம் என தீவிரமாக இருவரும் போராடிக் கொண்டிருக்க, ‘காத்திருந்தவன் மாட்டை நேற்று வந்தவன் ஓட்டிக் கொண்டு போனது போல' இடையில் புகுந்து பூ ஆட்டத்தைக் கலைத்து விடுவாரோ என்ற மிஸஸ் நாட்டாமை அச்சப்படுகிறாராம்.

தாமரைக்கொடி தரையில் வந்ததெப்படி.. மல்லிகைக் கொடி உந்தன் மனதில் என்னடி .. என்று பாட்டுப் பாடியபடி இருக்கிறாராம் மிஸஸ் நாட்டாமை!

 

எனக்கு யாரும் பொண்ணு தர மாட்டேங்கிறாங்களே: பிக்கப் டிராப் நடிகர் கவலை

சென்னை: பிக்கப் டிராப் நடிகர் நயன நடிகையிடம் இருந்து சற்று தள்ளியே இருக்கிறார். திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் உள்ளதால் தான் இப்படி ஒரு நடவடிக்கையாம்.

இது உடலா ரப்பரா என்று கேட்கும் அளவுக்கு டான்ஸ் ஆடும் அந்த நடிகர், இயக்குனர், டான்ஸ் மாஸ்டரை காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து சினிமாவுக்கு முழுக்குப் போட்டார் நயன நடிகை. ஆனால் அந்த காதல் முறிந்த பிறகு மீண்டும் நடிக்க வந்துவிட்டார். அவர் ரீ என்ட்ரி கொடுத்ததில் இருந்தே அவர் பெயரும், பிக்கப் டிராப் நடிகரின் பெயரும் சேர்ந்தே அடிபட்டது.

நடிகர் கண்டுகொள்ளாவிட்டாலும் நடிகை அவ்வப்போது இது எல்லாம் வெறும் வதந்தி வதந்தி என்று கூறியதை யாரும் கண்டுகொள்ளவில்லை. பிக்கப் டிராப் நயனத்துடன் மட்டும் அல்லாமல் உயர்ந்த நடிகை, சிவத்த பொண்ணு உள்ளிட்டோரிடமும் நெருக்கம் காட்டி வருகிறார்.

நடிகரின் தோட்டத்தில் பல ரோஜாக்கள் இருந்தாலும் பலர் அவரிடம் உங்களுக்கும் நயனத்துக்கும் இடையே தான் வலுவான உறவாமே என்று கேட்கத் துவங்கியுள்ளனர். இதையடுத்து நடிகர் நயனத்தை அடிக்கடி சந்தித்து கடலை போடுவதை குறைத்துள்ளாராம். மேலும் அவருடன் படங்களில் சேர்ந்து நடிப்பதையும் தவிர்க்கிறாராம் நடிகர்.

இரண்டு புதிய படங்களில் பிக்கப் டிராப் நடிகருடன் நயனம் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் நடிகர் தான் அவர் வேண்டாம் என்று கூறி சிவத்த பொண்ணு மற்றும் புஸு புஸு நடிகையை பரிந்துரை செய்தாராம். அவர் இவ்வளவையும் செய்ததற்கு காரணம் அவரின் பிக்கப் டிராப் மேட்டரால் திருமணத்திற்கு யாரும் பெண் தர மாட்டேன் என்பதால் தான்.

தற்போது புஸு பஸு நடிகையும் பிக்கப் டிராப்புடன் நெருக்கம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வாய் சும்மா இருந்தாலும்.. பீப்பி சத்தம் பெருஸ்ஸா இருக்கே!

கெத்து.. அதுதாங்க பலரை அப்படியே சாய்த்து விடுகிறது பல நேரங்களில். இப்படித்தான் கோலிவுட்டிலும் ஒரு இளம் நடிகர் பழைய கெத்துடா பேராண்டி கதையாக நடந்து வருவதால் பல தயாரிப்பாளர்களின் காதுகளில் புகையை வர வைத்துக் கொண்டிருக்கிறாராம்.

இவர் ஒரு காலத்தில் செம பிசியாக இருந்தவர்தான். தகிடுமுகிடாக நடித்து வந்தவரும் கூட. பெரிய பெரிய ஹீரோயின்ஸ் எல்லாம் இவர் கூட சேர்ந்து நடித்தனர். 2 முறை காதல் கசமுசாக்களிலும் சிக்கினார்.

ஆனால் இப்போது பெரும் சிக்கலில் இருக்கிறார். வரிசையாக இவர் நடித்து வராமல் காத்திருக்கும் படங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது.

"டெய்ல், ஹன்டிங் கிங், ஷீ இஸ் அவர் கேர்ள்" (என்னா ஒரு டிரான்ஸ்லேஷன் - கண்டு பிடிக்கவே முடியாது பாரு....!) ஆகிய படங்களில் இவர் நடித்தும், முடித்தும் கூட படம் எப்போ வரும் என்றே தெரியவில்லை. சிக்கலில் தொக்கி நிற்கின்றன. மேலும் 3 வருடங்களாக எந்தப் படமும் வரவில்லை. இருந்தாலும் நம்மவர் கெத்து குறையாமல்தான் இருக்கிறாராம்.

சமீபத்தில் கூட ஒரு தயாரிப்பாளர் போய் புதுப் படத்தில் புக் செய்வது குறித்துப் பேசியுள்ளார். அதற்கு சம்பளமாக சில கோடிகளைக் கேட்க தயாரிப்பாளர் லைட்டாக வந்த மயக்கத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அப்புறம் வர்றேன் தம்பி என்று சொல்லி கம்பி நீட்டி விட்டாராம்.

இப்போது நடிகர் தனது விரல்களை மேலேயும் கீழேயும் மடக்கி சொடுக்கி சுருட்டி வித்தை காட்டி அதை அவரே ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாராம் ... வீட்டில்!