அஜீத்தை வைத்து இயக்கவில்லை.. அடுத்த பட ஹீரோக்கள் ஆர்யா - கிருஷ்ணா!

சென்னை: எனது அடுத்த படம் அஜீத்துடன் இல்லை.. ஆர்யாவையும் கிருஷ்ணாவையும் வைத்து இயக்குகிறேன், என்று இயக்குநர் விஷ்ணுவர்தன் கூறியுள்ளார்.

ரஜினியின் பில்லா பட ரீமேக்கில் அஜீத்தை வைத்து இயக்கி வெற்றி கண்டார் விஷ்ணுவர்தன். பின்னர் ஆரம்பம் படத்தில் இருவரும் இணைந்தனர். இந்தப் படமும் வெற்றி பெற்றது.

அஜீத்தை வைத்து இயக்கவில்லை.. அடுத்த பட ஹீரோக்கள் ஆர்யா - கிருஷ்ணா!

இந்த நிலையில் மூன்றாவதாக அஜீத்தை வைத்து விஷ்ணுவர்தன் சொந்தமாக படம் தயாரித்து இயக்கப் போகிறார் என்று கூறப்பட்டது.

இதனை மறுத்துள்ளார் விஷ்ணுவர்தன். இதுகுறித்து அவர் கூறுகையில், "விஷ்ண்வர்தன் பிலிம்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை புதிதாக ஆரம்பித்துள்ளது உண்மைதான்.

இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில் ஆர்யா மற்றும் கிருஷ்ணா நடிக்கிறார்கள். அஜீத்தை வைத்து இப்போது இயக்கும் திட்டம் எதுவும் இல்லை. எதிர்காலம் எப்படியோ.. பார்க்கலாம்,' என்றார்.

 

ஸ்ரீ சங்கரா டிவியில் பசுவை பாதுகாக்கும் ‘கோ கிரீன்’

அழிந்து வரும் இயற்கை வளங்களைப்பற்றிய விழிப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் கோ கிரீன் என்ற நிகழ்ச்சியை ஸ்ரீ சங்கரா டிவி ஒளிபரப்புகிறது.

கோ கிரீன்'' என்ற தலைப்பு நமக்கு இரண்டு விஷயங்களைப்பற்றி கூறுகின்றது. அதாவது, ‘‘கோ'' என்றால் பசு மற்றும் ‘‘கிரீன்'' என்றால் ‘‘பச்சை'', அதாவது ‘‘சைவ உணவு முறை.''

ஸ்ரீ சங்கரா டிவியில் பசுவை பாதுகாக்கும் ‘கோ கிரீன்’

சைவ உணவு முறையை ஆங்கிலத்தில் ‘‘வெஜிடேரியனிசம்'' என்பர். லத்தின் மொழியின் ‘‘வெஜிடஸ்'' என்ற வார்த்தையிலிருந்து நிறுவப்பட்ட ‘‘வெஜிடேரியனிசம்'' என்பதன் பொருள். நாம் எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பது இதன் பொருள். சைவ உணவு முறையை பின்பற்றி வாழ்வதே மனித குலத்தின் குறிக்கோளாக இருக்க வேண்டும். இதுவே நமது உடலுக்கு புத்துணர்ச்சியை தரும்.

பண்டைய காலத்து இந்தியர்களின் உணவு முறை அகிம்சையை பின்பற்றி உருவாக்கப்பட்டது. அவர்கள் மற்ற விலங்குகளை துன்புறுத்தக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்தினர். இது மட்டுமல்லாமல், பசுவை காப்பதிலும் அவர்கள் அதிக கவனம் செலுத்தினர். மனித நேயம், மருத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விவசாயம், ஆன்மிகம் என பல துறைகளுடன் ‘‘கோ சம்ரஷணம்'' சம்பந்தப்பட்டுள்ளது.

பண்டைய காலத்து சைவ உணவு முறை மற்றும் கோ சம்ரஷணம் அதாவது பசுவை பாதுகாத்தல் என்கின்ற இவ்விரண்டு விஷயங்களையும் நேயர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, அழிந்து வரும் இயற்கை வளங்களைப்பற்றிய விழிப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்தும்.

திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஸ்ரீசங்கரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது, ‘‘கோ கிரீன்.''

 

ஜீ தமிழ் டிவியில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் குத்தாட்டம்

ஜீ தமிழ் டிவியில் கேம் ஷோ ஒன்றில் சிறப்பு அழைப்பாளராக வந்த பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் சின்னத்திரை நடிகைகளுடன் குத்தாட்டம் போட்டு அசத்தியுள்ளார்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்குஒளிபரப்பாகி வரும் வித்தியாசமான ரியாலிட்டி கேம் ஷோ ‘ஒய் திஸ் கொலவெறி'.

ஜீ தமிழ் டிவியில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் குத்தாட்டம்

சின்னத்திரை நட்சத்திரங்கள் போட்டியாளர்களாக பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில்பங்கேற்பாளர்கள் தங்களது இசைத்திறமையை பல இடையூறுகளுக்கிடையே வெளிப்படுத்த வேண்டும் என்ற வித்தியாசமான கான்செப்ட்டுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி இது.

இன்றைய எபிசோடில் தமிழ்த்திரையுலக குத்தாட்ட நடிகைகளுடன் நடிகர் பவர் ஸ்டார் பங்கு பெற்று ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ளார்.

இதில் பவர் ஸ்டார் பாடலுக்கு ஆடுவது மட்டுமின்றி நடன மங்கைகளுடன் சேர்ந்து குத்தாட்டம் போடுவது சிறப்பம்சம் ஆகும்.

 

'வயசானாலும் கவுண்டரின் நையாண்டியும் நக்கலும் குறையவே இல்லை!'

வயதானாலும் கவுண்டமணியின் நையாண்டியும் நக்கலும் குறையவே இல்லை, என்று 49ஓ படப்பிடிப்பைப் பார்த்த பொதுமக்கள் கமெண்ட் அடித்தனர்.

ஜீரோ ரூல்ஸ் என்டேர்டைன்மென்ட் தயாரிப்பில் கவுண்டமணி நடிக்கும் புதிய படம் 49ஓ.

திரை உலகில் அன்றும், இன்றும், என்றும் ரசிகர்களை கவர்ந்தவராகத் திகழும் கவுண்டமணி நடிக்கும் 49 ஒ படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம்...

'வயசானாலும் கவுண்டரின் நையாண்டியும் நக்கலும் குறையவே இல்லை!'

ஒரத்த நாட்டில் இருந்து தஞ்சை நோக்கி போய் கொண்டு இருந்த ஒரு பேருந்துப் பயணிகள், வயல் வெளியில் படப்பிடிப்பு நடப்பதையும், அதில் கவுண்டமணி நடித்து கொண்டு இருப்பதையும் பார்த்து பேருந்து ஓட்டுனரிடம் வண்டியை நிறுத்த சொல்லிவிட்டார்களாம்.

ஆவலோடு கவுண்டமணி இருக்கும் இடத்துக்குப் போய் பார்த்தால், 'நிஜமாகவே கவுண்டர் விவசாயியாக மாறி விட்டாரோ' எனும் அளவுக்கு இயல்பாக, ஒரு விவசாயியாகக் காட்சி தந்தாராம் கவுண்டர்.

பார்க்கப் போனவர்களுக்கு ஒரு ஒரு இன்ப அதிர்ச்சி தரும் விதத்தில், அவர்கள் அருகில் வந்த கவுண்டர், ஒவ்வொருவரையும் நலம் விசாரித்ததோடு அவருக்கே உரிய பாணியில் பேசி கலகலக்க வைத்தார்.

அங்கிருந்தவர்கள் அப்போது அடித்த கமெண்ட், 'வயசானாலும் கவுண்டரின் நையாண்டியோ நகைச்சுவை உணர்வோ, சற்றும் குறையவில்லை' என்பது தான் .

 

மூணுமாசம் போதும்.. தமிழ்ல எப்படி கலக்குறேன் பாருங்க! - வாணி கபூர்

மூன்றே மாதங்களில் தமிழ் கற்றுக் கொண்டு, சொந்தக் குரலில் பேசுவேன் என்று புது நடிகை வாணி தெரிவித்துள்ளார்.

யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் முதல் முறையாக தமிழில் 'ஆஹா கல்யாணம்' படத்தை தயாரிக்கிறது.

மூணுமாசம் போதும்.. தமிழ்ல எப்படி கலக்குறேன் பாருங்க! - வாணி கபூர்

இதில் நானி ஹீரோவாக நடிக்க, வாணி கபூர் ஹீரோயினாக நடிக்கிறார். ஏற்கெனவே பாலிவுட்டில் நடித்தவர் வாணி.

அழகு, நடிப்பு, நடனம் என அனைத்து திறன்களையும் வாணிக்கு இப்போது கூடுதல் உற்சாகம்... காரணம் பிலிம் பேர் பத்திரிகை வழங்கும் சிறந்த புதுமுக நடிகைக்கான விருதை ‘ஷுட் தேசி ரொமன்ஸ்' என்னும் இவர் நடித்த இந்திப் படத்திற்கு வழங்கியுள்ளது.

இவ் விருதைப் பெற்றது குறித்து வாணி கபூர் கூறும்போது, 'சிறந்த புதுமுக நடிகைக்கான விருது அறிவிப்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது. இந்த விருதுக்கும் தமிழகத்துக்கும் சம்மந்தம் உண்டு.

இன்னும் மூன்று மாதங்களில் தமிழ் கற்றுக் கொள்வேன். என் சொந்தக் குரலில் பேசவும் முயற்சிப்பேன். தமிழில் தொடர்ந்து நடிப்பேன்," என்றார்.

 

தமிழில் என்டர்ஸ் கேம்... சுட்டீஸ் ஸ்பெஷல் ஹாலிவுட் படம்!

சிறுவர்கள் சாகச படமாக ஹாலிவுட்டில் தயாரான ‘என்டர்ஸ்கேம்' என்ற ஆங்கில படம் தமிழில் வருகிறது.

தமிழில் என்டர்ஸ் கேம்... சுட்டீஸ் ஸ்பெஷல் ஹாலிவுட் படம்!

பிரபல எழுத்தாளர் ஆர்சன் கார்ட் நாவலை மையமாக வைத்து கேவின் ஹுட் இப்படத்தை நவீன தொழில் நுட்பத்தில் இயக்கியுள்ளார். என்டர் என்ற தைரியசாலி சிறுவனின் பராக்கிரமம் நிறைந்த சாகசங்களே கதை.

தமிழில் என்டர்ஸ் கேம்... சுட்டீஸ் ஸ்பெஷல் ஹாலிவுட் படம்!

இதில் நாயகனாக வரும் 13 வயது சிறுவனுக்கு மனதில் நினைப்பதை செய்யும் சக்தி உருவாகிறது. அவனுக்கு ராணுவ பள்ளியில் பயிற்சி அளிக்கின்றனர். வேற்று கிரக மனிதர்கள் பூமி மேல் படையெடுக்க தயாராகிறார்கள்.

தமிழில் என்டர்ஸ் கேம்... சுட்டீஸ் ஸ்பெஷல் ஹாலிவுட் படம்!

அவர்களை எதிர்க்க சிறுவன் என்டர் தலைமையில் சிறுவர்கள் படை உருவாக்கப்படுகிறது. அந்த படைக்கு ராணுவ அதிகாரிகள் போர் யுக்திகள் பற்றி பயிற்சி அளிக்கின்றனர். வேற்று கிரக மனிதர்கள் படையை சிறுவர்கள் படையினர் எப்படி அழித்து பூமியை காப்பாற்றுகின்றனர் என்பது கதை.

நிக்சிதா விஷன் இப்படத்தை தமிழாக்கம் செய்து வெளியிடுகிறது.

 

விஜய் டிவி சூப்பர் சிங்கர்–4 இறுதிச்சுற்றில் வெல்லப்போவது யார்

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்-4 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

நேரடியாக இறுதிச்சுற்றுக்கு மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். போட்டியின் வைல்டு கார்டு சுற்றின் ரிசல்ட்டுகள் கடந்த வாரம் ஒளிபரப்பானது.

இதில் திவாகர், பார்வதி, சையத் சுபான். இவர்களுடன் நான்காவது போட்டியாளராக வைல்டு கார்டு சுற்றின் மூலம் சரத் சந்தோஷ் மற்றும் சோனியா தேர்வாகியுள்ளனர்.

விஜய் டிவி சூப்பர் சிங்கர்–4 இறுதிச்சுற்றில் வெல்லப்போவது யார்

நேயர்களின் ஏகோபித்த பாராட்டையும், ஓட்டுக்களையும் பெற்று சரத் சந்தோஷ் லட்சக்கணக்கான ஓட்டுகளின் மூலம் இறுதிச்சுற்றில் பாடும் வாய்ப்பை பெற்றார். அதேபோல் மிகவும் நன்றாக பாடி இறுதிச்சுற்றுக்கு தேர்வானார் சோனியா.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே நடைபெறவிருக்கும் இந்த இறுதிப்போட்டி, வருகிற 31-ந்தேதி சென்னையில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

ஐவரும் பாடும் இந்த நேரடி இறுதிப்போட்டியின்போது இந்திய சினிமாவின் இசையுலகைச் சார்ந்த பல பிரபலங்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்க்கிறார்கள்.

இந்த இறுதிப் போட்டியில் நேயர்களின் வாக்குகளில் அடிப்படையிலேயே வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.

போட்டியில் வெற்றி பெற்று சூப்பர் சிங்கர் 4 பட்டத்தோடு லட்சக்கணக்கான மதிப்புள்ள பரிசுகளை வெல்லப்போவது யார் என்பதை இன்னும் சில தினங்களில் தெரிந்து கொள்ளலாம்.

 

நாகார்ஜுனாவுக்கு நேரில் ஆறுதல் சொன்ன சூர்யா!

ஹைதராபாத்: தந்தை ஏ நாகேஸ்வரராவை இழந்து தவிக்கும் நடிகர் நாகார்ஜுனாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் நடிகர் சூர்யா.

சூர்யா தற்போது லிங்குசாமி இயக்கும் அஞ்சான் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடந்து வருகிறது.

இந்நிலையில் தெலுங்கு பட உலகில் பழம்பெரும் நடிகர் நாகேஷ்வர ராவின் மரணம் அடைந்ததை கேள்விப்பட்டு நேன்று முன் தினம் தனது படப்பிடிப்பை நிறுத்திவிட்டார்.

நாகார்ஜுனாவுக்கு நேரில் ஆறுதல் சொன்ன சூர்யா!

அங்கிருந்து நேராக ஹைதராபாத்தில் உள்ள நாகர்ஜூனா வீட்டிற்கு சென்று தனது ஆழந்த இரங்கலை தெரிவித்தார் சூர்யா.

அன்று நெடுநேரம் நாகார்ஜுனாவும் இருந்து பேசிவிட்டு சென்றார் சூர்யா.

 

கைவிட்ட நடிகர்.. புலம்பும் இயக்குநர்!

கிண்டலுக்கு இன்னொரு தமிழ்ப் பெயரைச் சூட்டி படமெடுத்த இயக்குநருக்கும் ஹீரோவுக்கும் இப்போது ஏழாம் பொருத்தம் ஆகிவிட்டது.

அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது, எனக்கு உங்களை ரொம்ப புடிச்சிடுச்சி. இந்தப் படம் முடிஞ்சதும் மீண்டும் நாம இன்னொரு படம் பண்ணலாம். கதை ரெடி பண்ணுங்க, என்றாராம்.

இதை நம்பி, அவருக்கேற்ற இன்னொரு கதையையும் தயார் செய்துள்ளார் இயக்குநர்.

ஆனால் இருவரும் இணைந்த முதல் படம் மகா தோல்விப் படமாக முடிந்தது. தொடர்ந்து தோல்விப் படம் கொடுத்த அந்த ஹீரோவுக்கு இது மிகப் பெரிய சறுக்கலாகவும் அமைந்தது.

இதனால் கடுப்பான நடிகர், இயக்குநரிடம் பேசுவதையே நிறுத்திக் கொண்டாராம். அந்த இரண்டாவது பட வாய்ப்பையும் மறுத்துவிட்டாராம்.

இயக்குநர் இப்போது புலம்பிக் கொண்டிருக்கிறார்!

 

அனாமிகாவின் கணவரை காணவில்லை! சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்!!

சென்னை: சென்னையின் முக்கிய இடங்களில் அனாமிகாவின் கணவரைக் காணவில்லை என்ற பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

இந்தியில் வித்யாபாலன் நடித்த படம் கஹானி. காணாமல் போன கணவரை கர்ப்பிணி பெண் தேடிச்செல்லும் இந்த படம் இந்திய அளவில் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது.கர்ப்பிணியாக நயன்தாராகஹானி திரைப்படம் இப்போது தமிழ், தெலுங்கில் அனாமிகா என்ற பெயரில் தயாராகி வருகிறது. நடிகை நயன்தாரா இதில் கதாநாயகியாக கர்ப்பிணி வேடத்தில் நடிக்கிறார்.பரபரப்பு போஸ்டர்படம் ரிலீசுக்கு தயாராகி விட்டதால், ஏதேனும் வித்தியாசமான பப்ளிசிட்டி செய்து பரபரப்பு கூட்ட நினைத்தவர்கள், அனாமிகாவின் கணவரை காணவில்லை என்று சென்னை நகரெங்கும் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

அனாமிகாவின் கணவரை காணவில்லை! சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்!!

இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு

இந்து மக்கள் கட்சி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கணவரை காணவில்லை என்று ஒட்டப்பட்டிருக்கும் இந்த போஸ்டர் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். அதனால் இதுபோன்ற விளம்பரங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.ஆர்யா - நயன்தாரா திருமணம்இதற்கு முன்பு, ஆர்யாவுடன் நயன்தாரா இணைந்து நடித்த ராஜா ராணி படத்தின் ரிலீசுக்கு முன்பும் ஆர்யா-நயன்தாராவுக்கு நிஜமாலுமே திருமணம் நடந்தது போன்று புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டு ஒரு பரபரப்பை ஏற்படுத்தினர். அதேபோல் இப்போதும் இந்த பரபரப்பை புகைய விட்டுள்ளனர்.

If you happen to wait at a traffic signal in Chennai and see a "missing" poster featuring actor Harshvardhan Rane, don't be shocked because it's just a promo for upcoming Tamil thriller "Anamika", the remake of Vidya Balan-starrer "Kahaani".

 

No such pipe, or this pipe has been deleted

This data comes from pipes.yahoo.com but the Pipe does not exist or has been deleted.