அமெரிக்காவில் நடக்கும் சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்க வந்த அழைப்பை முதலில் ஏற்றுக்கொண்ட குஷ்பு, பின்னர் அதில் பங்கேற்க முடியாதது பற்றி மெயிலில் தகவல் தெரிவித்தார். அதை அந்த அமைப்பு ஏற்றுக்கொண்டதாம்.
பெரிய படங்களுக்கு யூ சின்ன படங்களுக்கு ஏ
தணிக்கையில் ஏ சான்றிதழ் தருவதால் சிறுபட்ஜெட் படங்கள் வரி சுமையால் பாதிக்கிறது என்றார் இயக்குனர் சுப்பிரமணியன். ஆர்.சுப்பிரமணியன், 'அபியும் நானும்', 'வாமனன்' படங்களுக்கு வசனம் எழுதியதுடன் 'சேவற்கொடி' படத்தை இயக்கியவர். இவர் கூறியதாவது: 2 படங்களுக்கு வசனம் எழுதிவிட்டு முதன்முறையாக சேவற்கொடி படம் இயக்கினேன். புது ஹீரோ அருண் பாலாஜி என்பவரை நடிக்க வைத்தேன். இவர் நீச்சல் வீரர். வில்லன் பவன். ஹீரோயின் பாமா. இது பெரிய பட்ஜெட் படம் அல்ல. இப்படத்தை தணிக்கைக்காக திரையிட்டபோது படத்தில் மது குடிக்கும் காட்சி வருவதால் 'ஏÕ சான்றிதழ்தான் தருவோம் என்றார்கள். என் தரப்பில் விளக்கம் அளித்தேன். அதை ஏற்கவில்லை. 'ஏÕ சான்றுதான் தருவோம் என்று கண்டிப்பாக கூறிவிட்ட்£ர்கள். ஆனால் மது குடிக்கும் காட்சிகளுடன் உருவான ஒரு சில பெரிய படங்களுக்கு 'யூ' சான்றிதழ் கொடுத்திருந்தார்கள். அதை தணிக்கை அதிகாரிகள் எப்படி தந்தார்கள் என்று தெரியவில்லை. 'ஏ' சான்றிதழ் தரப்பட்டால் 30 சதவீதம் மாநில அரசுக்கு கேளிக்கை வரி செலுத்த வேண்டும் என்பது பின்னர்தான் தெரிந்தது. சிறுபட்ஜெட் படத்துக்கு இதுபோன்ற கூடுதல் செலவு தயாரிப்பாளர்களுக்கு பெரிய சுமை. இதை சீர்படுத்த திரையுலகினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜனநாதன் புது அட்வைஸ்
இயற்கை, ஈ, பேராண்மை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஜனநாதன், தான் சந்திக்கும் புதுமுக இயக்குனர்களை உடனடியாக இயக்குனர்கள் சங்கத்தில் உறுப்பினராக்கி சேர்த்து விடுகிறாராம், அதன் மூலம் கிடைக்கும் பலன்களை அடைய வேண்டும் என்று புதுமுக இயக்குனர்களுக்கு வலியுறுத்துகிறாராம்.
பாம்புக்கு கிஸ் : மல்லிகா-இம்ரான் ஹாஷ்மி மீண்டும் மோதல்!
மல்லிகா ஷெராவத்துக்கும் பாலிவுட் ஹீரோ இம்ரான் ஹாஷ்மிக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பேட்டி அளித்த இம்ரான் ஹாஷ்மி, 'மர்டர்Õ இந்தி படத்தில் தன்னுடன் நடித்த மல்லிகா ஷெராவத்துக்கு முத்த காட்சியில் நடிக்க தெரியவில்லை என்று விமர்சித்திருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இம்ரானின் பேட்டியை அறிந்து கோபம் அடைந்த மல்லிகா, 'Ôஇம்ரானுடன் முத்தக்காட்சியில் நடித்ததை காட்டிலும் Ôஹிஸ்ஸ்Õ படத்தில் பாம்புக்கு முத்தம் கொடுத்து நடித்ததுதான¢ நன்றாக இருந்தது. இம்ரானைவிட முத்தக்காட்சியில் நடிப்பதற்கு பாம்பு தான் சிறந்ததுÕÕ என்றார். இந்த மோதலுக்கு பிறகு அமைதியாக இருந்த இருவரும் தற்போது மீண்டும் மோதலுக்கு தயாராகி இருக்கிறார்கள். பாம்புக்கு முத்தமிட்டதை புகழ்ந்திருந்த மல்லிகாவுக்கு தற்போது பதிலடி கொடுத்திருக்கார் இம்ரான். 'பாம்புக்கு முத்தம் கொடுத்தவர், அடுத்து பாம்பாட்டிக்கு முத்தம் கொடுத்து நடிக்கட் டும். இது இன்னும் நன்றாக இருக்கும்Õ என்று மீண்டும் மல்லிகாவை வம்புக்கு இழுத்திருக்கிறார் இம்ரான். இருவருக்கும் படங்கள் இல்லாததால் பப்ளிசிட்டிக்காக இப்படி யோசித்து யோசித்து தாக்கிக் கொள்கிறார்கள் என பாலிவுட் வட்டாரம் கூறுகிறது.
அடுத்த ஸ்கிரிப்ட் உருவாக்குவதில் பிஸி : இயக்குனர் ராஜா
தனது தம்பி ஜெயம் ரவியை வைத்து மூன்று வெற்றி படங்களை கொடுத்த ஜெயம் ராஜா, இளைய தளபதி விஜய்-யை வைத்து, 'வேலாயுதம்' இயக்கினர், அந்த படமும் வெற்றி பெற்றது. இந்நிலையில் தன் அடுத்த பட ஸ்கிரிப்ட்டில் பிஸி இருக்கிறார். இந்த முறை யார் ஹீரோவாக நடிக்கிறார் என்ற தகவல் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
மம்மூட்டிக்கு ஜோடியாக நடிக்க நிபந்தனை போட்ட திவ்யா
மம்மூட்டிக்கு ஜோடியாக நடிக்கும் படத்துக்கு அதிக சம்பளத்துடன் ஏகப்பட்ட நிபந்தனைகள் போட்டதால் திவ்யா நீக்கப்பட்டார். மலையாளத்தில் மம்மூட்டி நடிக்கும் 'தப்பனா'. இப்படத்துக்கு ஹீரோயினாக நடிக்க பலரிடம் பேசப்பட்டது. கால்ஷீட் பிரச்னையால் சில நடிகைகள் மறுத்துவ¤ட்டனர். தமிழ், கன்னட படங்களில் நடித்து வரும் திவ்யாவிடம் கேட்டபோது, நடிக்க ஒப்புக்கொண்டார். இதனால் அவரிடம் கால்ஷீட் வாங்குவது சம்பந்தமான முதல் கட்ட பேச்சுவார்த்தையை படக்குழு முடித்தது. அதன் பின் சம்பளம் தொடர்பாக பேசப்பட்டபோதுதான் தயாரிப்பாளருக்கு திவ்யா அடுத்தடுத்து அதிர்ச்சிகளை தந்தார். தயாரிப்பாளர் சொன்ன தொகையை விட 2 மடங்கு அதிகமாக சம்பளம் கேட்டாராம் திவ்யா. அத்துடன் எந்த ஊரில் ஷூட்டிங் நடத்தினாலும் பைவ் ஸ்டார் ஓட்டல்களில் தங்க வைக்க வேண்டும். கேரவன் வேண்டும், உதவியாளர்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் பேட்டா, தனி மேக்கப் மேன் என திவ்யாவின் நிபந்தனைகள் பட்டியல் நீண்டு கொண்டே சென்றதாம். இதனால் தயாரிப்பாளர் மிலன் ஜலீல், திவ்யாவை படத்திலிருந்து நீக்க¤விடலாம் என கூற, இயக்குனரும் சம்மதித்துவிட்டார். இதையடுத்து சமீரா ரெட்டியிடம் படக்குழு பேசியிருக்கிறார்கள். அவரும் அதிக சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. இறுதியில¢ தெலுங்கில் மார்க்கெட் இழந்த சார்மியை தேர்வு செய்துள்ளனர்.