இளையராஜா கச்சேரி... கனடா தமிழ்ச் சங்கம் அறிக்கை!

Canada Tamil Sangam Appeal On Programme

டொரன்டோ: இசைஞானி இளையராஜா கனடாவில் நடத்தவிருக்கும் கச்சேரியைப் புறக்கணிக்குமாறு கனடா தமிழ்ச் சங்கம் அறிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கை:

எங்களின் தொப்புள் கொடி உறவான கலைஞர்களே!

தயவுகூர்ந்து ஈழத் தமிழர்களின் வெந்த புண்ணிலே வேலைப் பாச்சாதீர்கள். நாங்கள் இழந்தது ஒன்று இரண்டல்ல. 40,000-க்கும் மேற்பட்ட மாவீரர்களையும், பல இலட்சக்கணக்கான எங்களின் சொந்தங்களையும், மண்ணையும் இழந்து உலகப்பந்தெங்கும் ஏதிலிகளாக அலைகின்றோம்.

எமக்கு இன்னும் நீதியோ, அரசியல் உரிமையோ கிடைக்கவில்லை. நாங்கள் அழுது புரண்டு ஆற்றுவதற்காக எங்களின் தலைவன் பிரபாகரனால் குறிக்கப்பட்ட மாதந்தான் இந்த நவம்பர் மாதம்.

இந்த மாதத்திலாவது அழுவதற்குக்கூட சிங்களவன் விடுவதாயில்லை. ஈழத்திலே இருக்கும் அத்தனை மாவீரர் துயிலும் இல்லங்களையெல்லாம் இருக்கும் இடந்தெரியாமல் அழித்து விட்டான்.

ஈழத் தமிழனுக்கு இன்று இருக்கும் ஒரே ஒரு நம்பிக்கை நட்சத்திரங்களாக இருப்பவர்கள் புலம்பெயர் தமிழர்கள்தான். இவர்களின் பலத்தைச் சிதைப்பதற்காக பல மில்லியன் கணக்கில் பணத்தை இனத் துரோகிகளின் கையில் வாரி இறைத்து மாவீரர்களின் விழாவைக் குழப்புவதற்காக சென்ற ஆண்டிலிருந்து மிகவும் வேகமாகச் செயற்பட்டுக் கொண்டு வருகின்றான்.

எங்களுக்கு இசைஞானி இளையராசா மேல் எந்தவொரு வெறுப்புமில்லை. மாவீரர்களுக்குரிய நவம்பரில் மாத்திரம் எந்தவெரு ஆடம்பரமும் வேண்டாமென்பதுதான் கனடியத் தமிழர்களின் வேண்டுகோள். கனடாவிலுள்ள தமிழ் மக்களின் எதிர்ப்பினால் இவர்கள் எதிர்பார்த்த மாதிரி நுளைவுச் சீட்டுகள் விற்பனையாகாமையினால், ஆங்காங்கே சிறிய நிகழ்வுகளை வைத்து நுழைவுச் சீட்டுகளை இலவசமாக விநியோகிக்கின்றார்கள்.

இதிலிருந்து என்ன தெரிகின்றது. இவர்களுக்கு பணத்தைப் பற்றிக் கவலையில்லை. எல்லாவற்றிற்கும் பின்னால் சிங்கள அரசின் ஆதரவு இருக்கின்றது. எனவே, எங்களின் அன்பான கலைஞர்களே இழந்து போன எங்களின் மாவீரர் பேரிலும், இசைப் பிரியா போன்ற ஈழக் கலைஞர்களின் பேரிலும் உங்களிடம் மன்றாட்டமாகக் கேட்கின்றோம், நவம்பர் 3-ல் கனடாவில் நடைபெறும் இளையராசாவின் இசை விழாவைப் புறக்கணிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

 

மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி

சென்னை: மறவர் சீமையில் தமிழ் வளர்ச்சி குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். தமிழக மீனவர்களை விமர்சித்து நான் டிவிட் செய்யவில்லை என்று பாடகி சின்மயி விளக்கம் தெரிவித்துள்ளார்.
singer chinmayi refutes charges against her
இந்த விவகாரம் தொடர்பாக அவர் அளித்துள்ள நீண்ட விளக்கம்....

ஒட்டு மொத்த தமிழர்களுக்கு எதிரானவள், ஒரு குறிப்பிட்ட சாதித் திமிர், மீனவர்கள் குறித்து தரக்குறைவாகப் பேசினேன் என்று பலரும் தங்களுக்குத் தோன்றிய வகையில் மனம் போன போக்கில் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார்கள்.

நான் ஒரு தமிழச்சி. பல தமிழர்களின் வீட்டின் செல்லப் பிள்ளை. தமிழர்களின் ஆதரவினாலும், கடவுள் கிருபையினாலும், என் தாயாருடன் ஆசிர்வாததினாலும் வளர்ந்து வரும் இளம் திரைக் கலைஞர்களில் நானும் ஒருவள்.

ஐயங்கார் குடும்பம்

சிறு வயது முதலே என்னை சீராட்டி, பாராட்டி வளர்த்து வருவது இந்தத் தமிழ்ச் சமூகம் தான். பாரம்பரியமாகவே தமிழ் வளர்க்கும் பரம்பரையில் வந்தவள் நான். வித்வான் ரா.ராகவ ஐயங்கார் , முனா ராகவ ஐயங்கார் அவர்களின் பேத்தி என் தாயார். மறவர் சீமையில் தமிழ் வளர்த்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவள் தான் நான்!

உள்ளூர்த் தமிழர்களானாலும் சரி, வெளிநாடுகளில் வசிக்கும் புலம் பெயர் தமிழர்களானாலும் சரி என்னை அவர்களின் சொந்த சகோதரியாகவே பார்த்து வருகிறார்கள். நானும் அவர்களிடத்தில் எனக்குள்ள மதிப்பை கட்டிக் காத்து வருகிறேன். அதிலும் சிறப்பாக இலங்கைத் தமிழர்களைப் பொறுத்த வரையில், எங்கள் மறவன் சீமையின் ஒரு Extension ஆகத்தான் நாங்கள் கருதுகிறோம். அவர்களுடைய கஷ்டத்தை இன்னும் அதிகமாக உணர்ந்திருக்கிறோம். நான் இலங்கை தமிழர்களுக்காக நடத்தி வந்த கச்சேரிகளில் பங்கு பெற்று மருத்துவம் மற்றும் படிப்பிற்கு சம்பந்தப்பட்ட Charitieகளுக்கு நிதியுதவி திரட்டியிருக்கிறோம்.

இந்தச் சமுதாயத்தால் வளர்ச்சி பெற்று வரும் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னால் இயன்ற அளவு சமுதாயம் வளரவும் பங்களிப்பு தரவேண்டும் என்ற நம்பிக்கை உடையவள் நான்.

வரவேற்றார்கள், பேசினார்கள், விவாதித்தார்கள்

என்னுடைய கடுமையான பணிகளுக்கு இடையே சமூக வலை தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் மூலமாக என்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்வதோடு இல்லாமல் அடுத்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தை எப்படி அணுகுகிறார்கள் என்று தெரிந்து கொண்டால் எனக்கு மிகுந்த பயனாக இருக்கும் என்று நம்பினேன். சுமார் இரண்டாண்டுகளுக்கு முன் சமூக வலை தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றில் இணைந்து கொண்டேன். உலகெங்கிலும் வாழ்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வரவேற்றார்கள். பேசினார்கள். விவாதித்தார்கள்.

திடீரென ஒரு நாள் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதலைக் கண்டிக்கக்கோரி ட்விட்டரில் ஒரு சிலரால் ட்விட்டுகள் வெளியாகின. #TNFisherman என்ற hashடேக் (தொடர் கீச்சு) மூலம் அனைவரும் இலங்கை அரசை கண்டிக்க வேண்டும் என்று வற்புறுத்தத் தொடங்கினார்கள். என்னையும் கேட்டார்கள். நல்லதொரு காரியத்தில் நானும் இணைந்து செயல்படுவதில் என்றுமே தயங்கியதில்லை. ஆனால் மேற்படி #TNFishermanதொடர்பில் வெளியான பல்வேறு ட்வீட்டுகளில் நம் நாட்டு மூத்த அரசியல் தலைவர்கள் உள்பட பலரை கேவலமாகவும், அவதூறாகவும் திட்டி ட்விட்டினார்கள். எனவே எனக்கு இந்த ஒரு குழுவுடன் இணைந்து (இந்த எண்ணம் நல்லதாக இருந்தாலும்) குறிப்பிட்ட hashtag ஐ ஆதரிக்க மாட்டேன் என்று கூறினேன்.

தொடர் கீச்சில் இணைய மறுத்தேன்

இந்த hashtag இல் மேற்கண்ட காரணங்களுக்காக நான் வெகுவாக புறக்கணிக்கும் ஒரு குழுவினரால் வற்புறுத்தப் பட்டதால் இந்தத் தொடர் கீச்சில் இணைய மறுத்தேன். இதற்கும் மீனவர்கள் மேல் எனக்குள்ள அனுதாபத்திற்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. என் அனுதாபத்தை என்னுடைய முறையில், hashtag போடாமல் நானே தனியாக ஒரு ட்விட் போட்டேன். இவர்களுடன் இணைய மறுத்தேன். இது தவறா? இதில் மீனவர்களுடைய பிரச்னையை பேசுகிறார்கள, அல்லது தங்களுடைய தனிப்பட்ட பிரச்சனைய புகுத்துகிறார்களா?

சாப்பிடுவதும் இல்லை, தொட்டியில் வளர்ப்பதும் இல்லை

அடுத்து "நீங்கள் மீன் சாப்பிடுவது இல்லையா?" என்ற கேள்விக்கு "இல்லை. நான் சைவம்" என்று பதில் கூறினேன். "மீன் தொட்டி வாஸ்துக்காக இருக்கிறதே" என்று அதே ட்விட்டில் பதில் கேலி செய்த பொது, "நான் மீன் சாப்பிடுவது இல்லை, தொட்டியில் வைத்து துன்புறுத்துவதும் இல்லை. PETA supporter" என்று ஒரு ":)" போட்டேன். இந்த பதில் கூட மேலே சொன்ன#TNFisherman Hash டேக் பிரச்னை நடப்பதற்கு முதல் நாள் வேறொரு கருத்துப் பரிமாற்றத்தின் போது தான்! ஆனால் நான் மீனவர்களைக் கொல்பவர்களைக் கண்டிக்க மாட்டேன்.

மீனவர்கள் மீன்களை கொல்கிறார்கள் என்றெல்லாம் கூறியதாக தகவல் திரித்துக் கூறப்பட்டு இணையம் முழுவதும் பரவியது. இந்த கற்பனை கீச்சுக்குச் சொந்தக்காரர் திருவாளர் @rajanleaks. இதெல்லாம் உண்மை தானா என்று உங்களில் பலர் என் தரப்பு என்று ஒன்று இருக்கவேண்டும் என்று கூட நினைக்கத் தவறியது எனக்கு மிகவும் வருத்தமே. மற்றும் என்னுடைய சாதி, மதம், இனம் என்று சகல வகைகளிலும் ஏசப்பட்டேன் .

அந்த தருணத்தில் எழுந்த உணர்ச்சியின் வெளிப்பாடு

பிறகொரு சமயம் ‘இடஒதுக்கீடு' தொடர்பான கருத்து விவாதத்தில் ஒரு மாணவி நூற்றிக்கு அருகில் மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், 'FC' என்ற காரணத்தினாலும், பண வசதிக் குறைவாலும், தனது மேற்படிப்பு தடைபட்டு போன வருத்தத்தை பகிர்ந்த போது, அந்த தருணத்தில் இந்த இட ஒதுக்கீடு அவசியம் தானா என்று நினைத்தேன். அது அந்த தருணத்தில் எழுந்த உணர்ச்சியின் வெளிப்பாடு. நீங்களும் அப்படித் தான் யோசிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் மீண்டும் என் சாதியைப் பிடித்து இழுத்து, ‘இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவள் சின்மயி' என்று பிரச்னை கிளப்பப்பட்டது.

அன்றிலிருந்து இன்று வரை பல சமயங்களில் பல இடங்களில் என்னை நேரடியாகவும், மறைமுகமாகவும் படு கேவலமான வசைச் சொற்களைக் கொண்டு ட்விட்டரில் விமரிசித்து வருகிறார்கள் ஒரு சிலர் கொண்ட கும்பல் ஒன்று.

என் தாய் வருந்தினார்

என்னைப் பெற்று வளர்த்தெடுத்த என் தாய்..என்னுடைய வளர்ச்சிக்காவே தன் நேரம் முழுவதையும் செலவழித்து வரும் என் தாய்.. இந்த மாதிரியான வசைச் சொற்களைக் கண்டு மனம் வருந்தினார். இப்படிப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவு செய்து, இந்த மாதிரி தொடர்ந்து வசைபாடுபவர்களின் பட்டியலைத் தயாரித்து போலீஸ் துறையிடம் கொடுக்கலாம் என்று முடிவு செய்தோம்.

பொது வெளியில் இப்படி அநாகரீகமாக நடந்த பலரின் பின்னணியை என் தாயார் கண்டறிந்து இவர்களில் பெரும்பாலானவர்கள் இள வயதும், திருமணம், சிறு குழந்தைகள் என்ற நிலையில் இருப்பதை உணர்ந்து அவசரத்தில் சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவேண்டாம், பொறுமையாக பேசி உணர்த்த முயற்சிக்கலாம் என்று பலரிடம் அலைபேசியிலும், அவர்களின் நண்பர்கள் மூலமாகவும், ஒரு முடிவு காண, என் தாயார் முயற்சித்தார். அதன் விளைவு தான் திரு sharankay அவர்களின் மிக கீழ்த்தரமான கீசுகளின் வெளிபாடு.

இதற்கு பிறகும் நாங்கள் சட்டபூர்வமான நடவடிக்கையை எடுக்காவிட்டால் எங்களுக்கே மிகவும் தீதாத முடியும் என்ற காரணத்தினால் இந்த முடிவிற்கு தள்ளப்பட்டோம். நாங்கள் பரிதாபப்பட்டதை பயந்து விட்டதாக நினைத்து அதன் பிறகு தான் அநாகரிகத்தின் உச்சத்தையும் கடந்துவிட்டனர். மற்றபடி யாரையும் பழிவாங்குவதிலோ, தண்டனை வாங்கி கொடுப்பதிலோ எங்களுக்கு எந்த விதமான மகிழ்ச்சியும் கிடையாது.

என் அம்மாவையும் திட்டினார்கள்

இவற்றைத் தொடர வேண்டாம் என்று ஃபோன் மூலம் என் அம்மா சம்பந்தப்பட்டவர்களிடம் தொடர்பு கொண்டு பேச முயற்சித்த போதும் அதனை மிரட்டல் விடுவதாகக் கூறி திசை திருப்ப முயன்றார்கள். என் அம்மாவையும் மிகத் தரக்குறைவாக கிண்டல், கேலி செய்து ட்விட்டினார்கள்.

அதன்பிறகு சட்டத்தின் துணியை நாடுவதை தவிர வேறு வழில்லாத நிலைக்கு தள்ளப்பட்டோம்.

இதற்குப் பிறகும் ஒரு பத்திரிகையின் கார்ட்டூனிஸ்ட் மூலம் நாங்கள் பேசாத வார்த்தைகளை நாங்கள் பேசியதாகச் சொல்லி பொய்ச் செய்தி பரப்பி உலகம் முழுதும் உள்ள தமிழர்களின் கொந்தளிப்பான உணர்சிகளை தூண்டும் வகையாக விஷயத்தை திசை திருப்பப்பட்டது.

இந்நிலையிலும் ஏராளமான தமிழ்ச் சகோதர, சகோதரிகள் தங்களால் ஆன அனைத்து உதவிகளையும் எங்களுக்குச் செய்தார்கள். வழி நடத்தினார்கள். ஆறுதல் சொன்னார்கள்.

இந்தவொரு சிரமமான சூழலில் எனக்கு முழு ஆதரவளித்த ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்துக்கும் நாங்கள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
 

தந்தையாகும் மகிழ்ச்சியில் நடிகர் கார்த்தி!

நடிகர் கார்த்தி விரைவில் தந்தையாகப் போகிறார். அவரது மனைவி ரஞ்சனி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் நடிகர் கார்த்தி படு உற்சாகத்தில் இருக்கிறார்.

karthi become father
Close
 
முதல் குழந்தை என்பதால் மொத்த குடும்பமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனராம்.

பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன், சிறுத்தை என அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்த கார்த்திக், கடந்த ஆண்டு ரஞ்சனியை மணந்தார். இருவருக்குமே சொந்த ஊர் கோவை.

கார்த்தி தற்போது 'அலெக்ஸ் பாண்டியன்' படத்தில் நடித்து வருகிறார்.

கருவுற்றிருக்கும் ரஞ்சனியை குடும்பத்தினர் அக்கறையோடு கவனித்து வருகின்றனர்.

 

2 நாள் லீவுல டிவியில் ஜாலியா படம் பாருங்க!

Tv Channels Gearing Pooja Holidays Movies

சரஸ்வதி பூஜை, விஜயதசமி விடுமுறை தினங்களை ஒட்டி இரண்டு தினங்களும் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் தயாராகிவருகின்றன.

சன் தொலைக்காட்சியில் சூர்யா பேட்டியில் தொடங்கி மதுரை முத்துவின் நகைச்சுவை பஞ்சாயத்து, சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம், கணேஷ்கர் - ஆர்த்தி ஜோடியின் ‘மாமா உன் பொண்ணைக் கொடு' போன்ற பல சுவையான நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.

செவ்வாய்கிழமை காலையில் தனுஷ் நடித்த ‘மயக்கம் என்ன' திரைப்படமும் மாலையில் விஷால் நடித்த ‘வெடி' திரைப்படமும் ஒளிபரப்பாகிறது. புதன்கிழமை மாலையில் விஜயதசமி ஸ்பெசல் திரைப்படம் உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி' திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவேண்டிய ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பாவதுதான் உலகமகா ஆச்சரியம்.

கலைஞர் தொலைக்காட்சியில் சூர்யா நடித்த வேலு, அங்காடித்தெரு, ஆர்யா நடித்த பாஸ் என்ற பாஸ்கரன் திரைப்படம் விடுமுறை தின சிறப்புத் திரைப்படமாக ஒளிபரப்பாகிறது.

விஜய் டிவியில் விஜயதசமி தின சிறப்பு திரைப்படமாக சிவகார்த்திக்கேயன் நடித்த ‘மெரினா' திரைப்படம் ஒளிபரப்பாகிறது. சிறப்புத் திரைப்படங்களைப் பார்த்து விடுமுறைத்தினத்தை ஜாலியாக கொண்டாடுங்கள். ( இது சன் டிவியில தூரன் கந்தசாமி சொன்னதுங்க)

 

20 ஜோடி இதழ்களை 'பதம் பார்த்த' ரோஜர் மூர்!

Roger Moore Kiss Record More Than James Bond

ஜேம்ஸ்பாண்ட் படங்கள் என்றாலே கிளுகிளுப்புக்கும் முத்தக்காட்சிகளுக்கும் பஞ்சமிருக்காது. ஜேம்ஸ்பாண்ட் படங்கள் எடுக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவதை ஒட்டி பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

ஜேம்ஸ்பாண்ட் பயன்படுத்திய பொருட்கள் ஏலம் விடப்படுகின்றன. கண்காட்சிகள் நடைபெறுகின்றன. அதேபோல் ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்களில் அதிகம் முத்தமிட்டது யார் என்ற போட்டியும் நடைபெற்றது. அதிக இதழ்களை 'சுவைத்து' முதல் இடத்தை தட்டிச்சென்றவர் என்ற பெருமை ரோஜர் மூர்க்கு கிடைத்துள்ளது.

இவர் கிட்டத்தட்ட 20 ஜோடி இதழ்களை முத்தமிட்டுள்ளார். அடுத்ததாக சீன் கானரி 18 ஜோடி இதழ்களை 'கொய்துள்ளார்'. பியர்ஸ் ப்ராஸ்னன் 12 ஜோடி இதழ்களில் முத்தமிட்டுள்ளார். ஜேம்ஸ்பாண்ட் சரியான உளவாளி மட்டுமல்ல இதழாளி என்பதையும் இதிலிருந்து புரிந்து கொள்ளமுடிகிறதுதானே?.

 

சத்தியம் டிவியின் ‘க்ரைம் ரிப்போர்ட்’

Crime Report On Sathiyam Tv

சத்தியம் தொலைக்காட்சியில் வாரம்தோறும் ஒளிபரப்பாகும் ‘கிரைம் ரிப்போர்ட்' நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெறும் வரவேற்பினை பெற்றுள்ளது.

புலனாய்வு நிகழ்ச்சிகளுக்கு என்றுமே வரவேற்பு அதிகம்தான். நடந்தது என்ன தொடங்கி குற்றப்பத்திரிக்கை வரை எத்தனையோ நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின்றன. அதுபோன்ற ஒரு புலனாய்வு நிகழ்ச்சிதான் ‘க்ரைம் ரிப்போர்ட்'

குற்றங்களுக்கு எப்போதுமே பல முகங்கள் உண்டு. ஆனால் அவற்றில் எல்லா முகங்களுமே உண்மை முகங்களா என்பது மறுக்க முடியாத கேள்வி. பொய் முகங்களை மறைத்து உண்மையை உலகிற்கு உரத்து சொல்லும் புதுமையான புலனாய்வு நிகழ்ச்சி தான் "கிரைம் ரிப்போர்ட்.''

மனதை நெருடும் நிஜங்களை தோலுரித்து காட்டும் இந்த நிகழ்ச்சி, சத்தியம் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

 

கமல்ஹாஸன் மீது முக்தா சீனிவாசன் கோபம்... மான நஷ்ட வழக்கு தொடரப் போவதாக அறிவிப்பு!

கமல்ஹாஸன் மீது மான நஷ்ட வழக்குத் தொடரப் போவதாகக் கூறி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் தயாரிப்பாளர் - இயக்குநர் முக்தா சீனிவாசன்.

muktha srinivasan sends legal notice to kamal
Close
 
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த படம் ‘நாயகன். இதை முதலில் முக்தா சீனிவாசன் தயாரித்தார். பின்னர் ஜிவியின் சுஜாதா பிலிம்ஸுக்குக் கைமாறியது.

இப்படம் உருவாகி 25 வருடம் ஆனதையடுத்து ஆங்கில பத்திரிகையொன்றில் கமல் ஒரு கட்டுரை எழுதினார்.

அதில், ‘முக்தா சீனிவாசனின் நிறுவனத்துக்காக நாயகன் படம் நடிக்க முடிவு செய்தேன். மணிரத்னம் இயக்கினார். மும்பையில் ஷூட்டிங் என்றதும் சற்று தயக்கம் காட்டி சீனிவாசன் சம்மதித்தார். பின்னர் சண்டை காட்சிகளை சர்வதேச தரத்துடன் எடுக்க இயக்குனர் முடிவு செய்தபோது அதற்கு சீனிவாசன் சம்மதிக்கவில்லை. பட்ஜெட்டை தாண்டி செலவு செய்ய முடியாது," என்று கூறிவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு முக்தா சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். கமல் கூறியதில் உண்மையில்லை என்றும், அவர் தன் மேதைமையைக் காட்ட என்னை சிறுமைப்படுத்துகிறார் என்றும் கூறினார்.

Muktha Srinivasan sends legal notice to Kamal

மேலும் கமல் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாகக் கூறி கமலுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

 

தமிழக மீனவர்களை விமர்சித்து டிவிட் செய்தாரா சின்மயி?

டிவிட்டர், பேஸ்புக்கில் தன்னை இழிவுபடுத்துவதாக குற்றம் சாட்டிய பாடகி சின்மயி மீது இப்போது குற்றச்சாட்டுகள் கொட்ட ஆரம்பித்திருக்கின்றன.

chinmayi trouble due her controversial tweets
Close
 
ப்ளாக், ட்விட்டர், பேஸ்புக் என சின்மயி கால்வைத்த இடமெல்லாம் சூடான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே உள்ளன.

'யாரும் தானாக முன்வந்து இவரை அவதூறாக எழுதுவதில்லை. மாறாக இவர் ஒரு விஷயத்தை எழுதப் போய், அதற்கு எதிர்வினையாக இவர் மீது குற்றச்சாட்டுகள் குவிய, ஒரு கட்டத்தில் அது ஆபாச கமெண்டுகளாக மாறியிருக்கிறது,' என்பதுதான் இவரை நீண்ட காலமாக சமூகத் தளங்களில் கவனித்து வருபவர்கள் கருத்தாக உள்ளது.

இந்த நிலையில் தன்னைப் பற்றி தனிப்பட்ட முறையில் வக்கிரமாக சிலர் எழுதி வருவதாக சில தினங்களுக்கு முன் போலீசில் புகார் கொடுத்தார் சின்மயி. உடனே சின்மயிக்கு ஆதரவாக ஒரு கோஷ்டியே வேலைப் பார்க்க ஆரம்பித்துவிட்டது.

இந்தப் பெண் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சாதி துவேஷத்தைப் பரப்ப ஆரம்பித்துள்ளதுதான் இப்போது பலரையும் கொதிப்புக்குள்ளாக்கியுள்ளது.

தனது ட்விட்டரில் 'நாங்கள் மீன்களை துன்புறுத்துவதில்லை, வெட்டி கொல்வதுமில்லை', என கூறியிருக்கிறார் சின்மயி என்பதுதான் குற்றச்சாட்டு. இது மீன் உண்பவர்களை மட்டுமல்ல, மீன் பிடித்தலையே தொழிலாகக் கொண்டுள்ள மீனவர்களையும் அவமதிப்பதாகும் என இப்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அதுமட்டுமில்லை.. "மீன்களை மீனவர்கள் கொல்கிறார்கள், மீனவர்களை இலங்கை கடற்படை கொல்கிறது, இரண்டும் ஒன்றுதான், இதில் இலங்கையை கண்டிப்பதற்கு என்ன இருக்கிறது?" என்றும் சின்மயி கூறியிருந்தாராம்.

ஈழத்து மக்களை, மீனவர்களை அவமானப்படுத்தியதோடு, மீனை உணவாகத் தந்து வறியோரின் பசிபோக்கிய இயேசு பிரானையே குற்றம்சாட்டுவதாகத்தான் சின்மயி கருத்து உள்ளதாக இணையத்தில் சின்மயிக்கு எதிரானோர் அணி திரள ஆரம்பித்துள்ளனர்.

திரைப்படங்களில் இனி சின்மயிக்கு எந்த வாய்ப்பையும் வழங்கக் கூடாது என வெளிப்படையான போராட்டங்களை முன்னெடுக்கவும் சில அமைப்புகள் தயாராகி வருகின்றன.

 

தாங்க் யூ யாஷ்ஜி! - கமல் உருக்க கடிதம்

Kamal Condolence Yash Chopra

சென்னை: பாலிவுட் சினிமா மேதை யாஷ் சோப்ரா மறைவையொட்டி, தனது இரங்கலை ஒரு கடிதமாக வெளியிட்டிருக்கிறார் நடிகர் கமல்ஹாஸன்.

கடந்த ஆண்டு, ஃபிக்கி அமைப்பின் மேடையில் கமலுடன் அமர்ந்திருந்தவர் யாஷ் சோப்ரா என்பது நினைவிருக்கலாம்.

கமல் எழுதிய ஆங்கில கடிதத்தின் தமிழாக்கம்:

டியர் யாஷ்ஜி...

நான் இப்படி அழைப்பதைக் கேட்க இன்று நீங்கள் இல்லை. நீங்கள் உயிருடன் இருக்கும்போதே இதைச் சொல்ல ஆசைப்பட்டேன்.

உங்களை நாங்கள் அதிகமாக விரும்பினோம். உங்கள் வேலைகளைப் பார்த்து நாங்கள் நம்பிக்கை பெற்றோம். இதை உங்களிடம் நான் ஒருபோதும் சொன்னதில்லை. அதற்குக் மிகைப் புகழ்ச்சி அல்லது ஈகோ காரணமல்ல. நீங்கள் வகித்த உயர்ந்த ஸ்தானம் என்னை அப்படி வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் தடுத்தது.

நன்றி யாஷ்ஜி... இது ஒருதலைப் பட்சமான உரையாடல் என்று எனக்குத் தெரியும். ஆனால் உங்களுடன் மிக நீண்ட உரையாடலை நிகழ்த்தியவன் என்ற பெருமை எனக்குண்டு. உங்கள் மீதான என் அன்பை நான் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறேனா என்று எனக்குத் தெரியவில்லை. அது விஷயமில்லை. ஆனால் இன்னும் பல தலைமுறை உங்களை நேசித்துக் கொண்டே இருக்கும்.

நீங்கள் செய்துவிட்டுப் போயிருக்கும் சாதனைகளின் பலன், புகழ், வருவாய் அனைத்தையும் உங்கள் குடும்பம் அனுபவிக்கும். ஒரு கலைஞனாக, அது ஒரு உண்மையான பாராட்டு.

உங்களை இழந்துவாடும் குடும்பத்தின் துயரத்தில் நானும் பங்கெடுக்கிறேன்.. அதேநேரம் நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து மகிழ்கிறேன்!

 

தேவிக்கு நீண்டதொரு பாராட்டு

Karthik praises devi sri prasad

'அலெக்ஸ் பாண்டியன்' படத்தின் இறுதிகட்ட இசை கோர்ப்பை கேட்ட கார்த்தி, இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு நீண்டதொரு பாராட்டு எஸ்எம்எஸ் அனுப்பினாராம். இதை டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியாக குறிப்பிட்டிருக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத்.
 

யஷ்சோப்ரா உடல் இன்று தகனம்

Veteran filmmaker Yash Chopra dead

டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இந்தி பட இயக்குனர் யஷ் சோப்ரா நேற்று மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது. அமிதாப் பச்சன், ஷாருக்கான் நடித்த பல்வேறு படங்களை இயக்கியவர் யஷ் சோப்ரா (80). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவால் மும்பை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. இந்நிலைய¤ல் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் மரணம் அடைந்தார்.

அவரது உடல் மும்பையில் உள்ள யஷ்ராஜ் ஸ்டுடியோவில் பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்தி நடிகர்கள் திலீப்குமார், அமிதாப்பச்சன், ஷாருக்கான், அக்ஷய்குமார், நடிகைகள் கேத்ரினா கைப், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பாலிவுட் திரையுலகமே திரண்டு சென்று இறுதி அஞ்சலி செலுத்தியது. அவரது மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். யஷ் சோப்ரா உடல் இன்று மதியம் மும்பையில் உள்ள பவன் ஹன்ஸ் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

'தீவார்', 'கபி கபி', 'த்ரிஷூல்', 'காலா பத்தர்', 'சாந்தினி', 'தில் தோ பாகல் ஹே' உள்பட 22 படங்களை இயக்கியுள்ளார் யஷ் சோப்ரா. கடைசியாக ஷாருக்கான் நடிப்பில் Ôஜப் தக் ஹே ஜான்' என்ற படத்தை இயக்கினார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. அவர் இயக்கிய 'தீவார்' என்ற படம்தான் தமிழில் ரஜினி நடிப்பில் Ôதீ' என்ற பெயரில் வெளியானது.
 

ரஜினிக்கு கதை சொன்னது உண்மையா?

I do not tell any story to Rajinikanth

ரஜினிக்கு கதை சொன்னது நிஜமா என்றதற்கு பதில் அளித்தார் இயக்குனர் கே.வி.ஆனந்த். இதுபற்றி அவர் கூறியதாவது: ரஜினியை சந்தித்து கதை சொன்னதாக கிசுகிசு வருகிறது. அவரிடம் எந்த கதையும் சொல்லவில்லை. அவரை இயக்கும் வாய்ப்பு வந்தால் ஏற்பேன். இப்போதைக்கு என் கைவசம் கதை எதுவும் தயாராக இல்லை. வேலை இல்லாமல் வீட்டில்தான் இருக்கிறேன். விரைவில் அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுத தொடங்குவேன்.

'மாற்றான்' படத்தை பற்றி கலப்படமான விமர்சனம் வந்திருக்கிறது. சிலர் பாராட்டி இருக்கிறார்கள். சிலர் தலையில் குட்டி இருக்கிறார்கள். இப்படத்தின் கதையை பொருத்தவரை நடைமுறைக்கு சாத்தியமான விஷயத்தை கருவாக எடுத்துக்கொண்டோம். சூர்யா நடித்ததால் அதை சரியாக செய்ய முடிந்தது. ரஷ்ய நாட்டை விமர்சிப்பதுபோல் ஸ்கிரிப்ட் இருப்பதாக கூறுகிறார்கள். கற்பனையான ஒரு நாட்டின் பெயரில்தான் இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தணிக்கையில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. படத்தின் விறுவிறுப்பு குறையாமல் இருப்பதற்காக 10 நிமிட காட்சிகள் கட் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு கே.வி.ஆனந்த் கூறினார்.
 

வடிவேலு ஹீரோவாக நடிக்க, இம்சை அரசனின் இரண்டாம் பாகம்.. விரைவில் ஷூட்டிங்!

Vadivelu Play Hero Imsai Arasan 23am Pulikesi Sequel

சென்னை: தனது அஞ்ஞாதவாசத்திலிருந்து வெளியில் வருகிறார் வடிவேலு. இனி வடிவேலு நடிக்கவே மாட்டார் என்று வந்த செய்திகளைப் பொய்யாக்கும் விதத்தில், அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

அந்தப் படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி-2. இதற்கான ஆரம்பகட்ட வேலைகளை சத்தமில்லாமல் முடித்துவிட்டார் இயக்குநர் சிம்புதேவன்.

ஏற்கெனவே இம்சை அரசனின் இரண்டாம் பாகத்தை எடுக்க சிம்புதேவன் வடிவேலுவுடன் பேசி வந்தார். அரசியல் காரணங்களால் ஒதுக்கப்பட்டு அல்லது ஒதுங்கியிருந்தாலும், இந்தப் படத்துக்கான வேலைகள் மட்டும் தொடர்ந்து நடந்து வந்தனவாம்.

விரைவில் இந்தப் படத்துக்கான ஷூட்டிங் தொடங்கவிருக்கிறது. இதுகுறித்து சிம்புதேவன் கூறுகையில், "ஆமாம்.. வடிவேலுவின் மறுபிரவேசம் இம்சை அரசனின் இரண்டாம் பாகம் மூலம் நடக்கவிருக்கிறது. படத்துக்கான திரைக்கதை வேலைகள் முடிந்துவிட்டன. விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகவிருக்கிறது. ரசித்து ரசித்து சிரிக்கும் ஒரு நல்ல படமாக இம்சை அரசன் 2-ம் பாகம் அமையும்," என்றார்.

 

''நீர்ப்பறவை வாழும் நிலத்தில் நீ வாழ இடமா இல்லை''... நெஞ்சைப் பிசையும் வைரமுத்து வரிகள்

Vairamuthu S Touching Song From Neerparavai

நடுக்கடலில் இலங்கைக் கடற்படையால் சுட்டு சல்லடையாக்கப்பட்டப் படகில் எல்லோரும் இறந்து கிடக்க, வட இலங்கையைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் ஒருவன் மட்டும் கடல் அநாதையாகிறான். தமிழகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவன் அச்சிறுவனை தன் பிள்ளையாக வளர்க்கிறார் ஒரு தாய்.

இந்தக் காட்சி இடம்பெறும் படம்: நீர்ப்பறவை, இயக்கம்: சீனு ராமசாமி, பாடல்: கவிப்பேரரசு வைரமுத்து, இசை: என். ஆர். ரகுநந்தன்.


யார் வீட்டு மகனோ மகனோ
தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
நீ வாழ இடமா இல்லை

யார் வீட்டு மகனோ மகனோ
தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
நீ வாழ இடமா இல்லை

நீ வந்து நிறையும்போது
வாழ்வோடு வெறுமையில்லை
நாம் ஒன்று சேரும்போது
நீ இங்கு ஒருமை இல்லை

மகனே நீயும்
அன்பால் வளர்வாய்
கடலும் அன்னை
கரைதான் தந்தை

யார் வீட்டு மகனோ மகனோ
தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
நீ வாழ இடமா இல்லை

நிலங்கள் நீளும் வரையில்
உயிர்கள் வாழும் வரையில்
யாருமே அனாதை இல்லையே
யாதும் இங்கே ஊரே ஆகுமே

புலங்கள் மாறிய போதும்
புலன்கள் மாறுவதில்லை
ஊர்கள் தோறும் வானம் ஒன்றுதான்
உயிர்கள் வாழ மானம் ஒன்றுதான்

மழைச் சொட்டு மண்ணில் வீழ்ந்தால்
மறுக்கின்ற பூமியும் இல்லை
மனிதர் இருவர் உள்ள வரைக்கும்
அகதி என்று யாரும் இல்லை

கால தேசம் எல்லாம் மாறலாம்
காதல் பாசம் எல்லாம் ஒன்றுதான்

யார் வீட்டு மகனோ மகனோ
தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
நீ வாழ இடமா இல்லை

நீ வந்து இணையும்போது
வாழ்வோடு வெறுமையில்லை
நாம் ஒன்று சேரும்போது
நீ இங்கு ஒருமை இல்லை

மகனே நீயும்
அன்பால் வளர்வாய்
கடலும் அன்னை
கரைதான் தந்தை

யார் வீட்டு மகனோ மகனோ
தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
நீ வாழ இடமா இல்லை...

இந்தப் பாடல் வரிகள் இன்று உலகமெங்கும் வாழும் தமிழ் உறவுகளின் மனதைத் தொட்ட பாடலாக மாறியிருக்கிறது.

 

தலைமுறையை தாண்டி நட்பை அறியச் செய்த 'நீயா? நானா?'

Vijay Tv Neeya Naana Talk Show11

நட்பு என்பது ஒரு கொண்டாட்டம் ! நீண்ட கால நட்பு ஒரு உன்னதமான அனுபவம். ஒருவருடன் நீண்டகாலம் நட்பில் இருப்பது ஒரு ஆனந்தமான அனுபவம். அநேகம் பேருக்கு அது வாய்த்துவிடுவதில்லை. இந்த உன்னதமான உணர்வினை குறித்து விஜய் டிவியின் நீயா நானாவில் விவாதித்தனர்.

பக்கத்து வீட்டிலோ, பள்ளிப்பருவத்திலோ, கல்லூரி காலத்திலோ, அலுவலகத்திலோ எங்காவது ஒரு இடத்தில் நட்பு பூத்திருக்கும். அது தலைமுறையை தாண்டியும் தொடரும். அதுபோன்ற நட்பானவர்கள் தங்களின் அழகான அனுபவங்களை நேற்றைய நீயா நானா நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டனர்.

நண்பர்களுக்கு இடையே பட்டப்பெயர் சூட்டி அழைத்த தருணங்கள், எம்.ஜி.ஆர். மிளகா, கரப்பான், மூக்கா, மாமா, மொக்க கோவிந்தன், சடை சரவணன், சூப்பிரண்ட், போன்ற பெயர்களை சொல்லும்போதே முகத்தில் மகிழ்ச்சி இழையோடியது.

அதை விட ஒரு அழகியல் என்னவென்றால் நண்பர்களை கண்டுபிடிப்பதற்காக தனது உடையில் செல்போன் எண்ணை மாட்டிக்கொண்டு வந்திருந்தார் ஒரு பங்கேற்பாளர்.

காதல் மட்டுமல்ல நட்பு பூப்பது கூட ஒரு அழகான தருணம்தான். துன்பமான தருணத்தில் கை கொடுப்பது நட்பு. கண்ணீர் வழியும் போது கண்களைத் தாண்டிப் போகும் முன் துடைக்கின்றன கைகள்தான் நட்பின் கரம். அந்த அளவிற்கு ஒரு உயர்வான இடம் நட்பிற்கு உண்டு என்று தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர் பங்கேற்பாளர்கள்.

நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்களாக எழுத்தாளர் மனுஷ்யபுத்ரன், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்று நட்பு பற்றிய தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர்.

நீண்டகால நட்பு என்பது இன்றைக்கு தேவையில்லை என்பது போன்ற கண்ணோட்டத்தில் பேசினார் மனுஷ்யபுத்ரன். நட்பை புரிந்து கொள்ள முயற்சி செய்திருக்கிறோமா

இந்த 15 வருட நட்பு கூட திடீரென்று ஒருநாள் உடைந்து போகிறது. கண்ணாடிச்சுவர் போன்றதா நட்பு என்று கேள்வி எழுப்பினார். என் வாழ்க்கையின் மிகப்பெரிய துரதிஷ்டம் பழைய நண்பர்களை திரும்பவும் சந்திப்பதுதான் என்றார் மனுஷ்யபுத்ரன்.

நட்பு என்பது அறிவுப்பூர்வமானதா, உணர்வுப்பூர்வமானதா? என்று விவாதம் திரும்பியது. இந்த கருத்தை ஒட்டிப் பேசிய திருச்சி சிவா, இசைக்கு மொழி கிடையாது அதுபோல நட்புக்கும் மொழி கிடையாது. இவரோடு இருந்தால், இவர் அருகில் இருந்தால் மனதிற்கு ஒரு தெம்பு ஏற்படுகிறது. அதுதான் நட்பு. அதற்கு மொழி தேவையில்லை என்றார்.

நட்புக்கு ஒரே சிந்தனை, ஒரு கொள்கை என்பது அவசியமில்லை. நண்பரைப் பற்றிய சிந்தனை வரும்போது அவர் நம்மோடு கூட இருந்தால் பரவாயில்லை என்று தோன்றும். பழைய நண்பர்களைத்தேடித்தான் என்மனம் போகும் என்று கூறினார் சிவா.

நட்பு என்பது அறிவுப்பூர்வமாக இருக்கவேண்டியதில்லை. உணர்வு பூர்வமாக இருக்கவேண்டும். இதுதான்

புரிதல் என்பது நட்புக்குள் அவசியம். இந்த உறவு நட்புக்குள் இன்றைக்கு இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்றுதான் கூறுவேன் என்று தனது கருத்தினை பதிவு செய்தார் மனுஷ்யபுத்ரன்.

நீண்ட நாட்களாக யாராவது ஒருவரை பார்க்கத்துடிக்கிறீர்களா என்று கோபிநாத் கேட்டதற்கு, பள்ளிப் பருவத்தில் தன்மீது அக்கறை செலுத்திய நண்பரை காண துடிக்கிறேன் என்று கூறினார் மனுஷ்ய புத்ரன்.

இதே கேள்வியை சிவாவிடம் முன்வைத்தார் கோபிநாத். விலகிப்போன நண்பர்கள் என்று எனக்கு யாரும் இல்லை. நட்பு அறுந்துபோகாமல் அனைவரும் என் கைக்குள் இருக்கின்றனர் என்றார். செப்டம்பர் 17 அன்று நாங்கள் அனைவரும் எங்கள் கல்லூரியில் ஒன்று கூடுவோம். அனைவரும் எண்ணங்களை பகிர்ந்து கொள்வோம் என்றார்.

நிகழ்ச்சியின் இடையே நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்களாக இருப்பவர்களைப் பற்றி ஒளிபரப்பினார்கள். அண்ணன் தம்பிகளாக இருப்பவர்களே ஒரே குடும்பத்தில் இருக்க சிரமப்படும் இந்த நேரத்தில் நண்பர்கள் இருவரும் ஒரே குடும்பத்தில் ஒற்றுமையாக இருப்பதை நிகழ்ச்சியில் காட்டியது கவிதையாய் அமைந்திருந்தது.

நட்பு என்பது அழகான விசயம். இன்றைய தலைமுறைக்கு நட்பினை அறிமுகம் செய்வதற்காகவே இந்த விவாதம் நிகழ்த்தப்பட்டது என்று இனிய நினைவுகளோடு முடித்தார் கோபிநாத்.

நீண்ட காலம் நட்பாய் இருப்பவர்கள் என்ன சொல்றீங்க?

 

கிசு கிசு - நடிகைக்கு எச்சரிக்கை

Kodampakkam kodangi

நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

மிரட்ற படத்துல நடிச்ச சான்டல்வுட் ஷர்மி நடிகை இப்ப சான்டல்வுட் பக்கம் தலை காட்றதில்லையாம்... இல்லையாம்... அடுத்து கோலிவுட் பட ஸ்கிரிப்ட் கேக்க தயாரா இருக்கறதா இயக்கங்களுக்கு தூது அனுப்புறவருக்கு டோலிவுட்ல நரேஷான ஹீரோவோட நடிக்க சான்ஸ் கெடச்சிருக்காம். கோலிவுட், டோலிவுட்லேயே கொஞ்ச நாள் நீடிச்சா லக்குல டாப் ஹீரோயின் லிஸ்டுக்கு போயிடுவேன்னு சொல்றாராம்... சொல்றாராம்...

முரணான படத்துல நடிச்ச ப்ரியமான ஹரி நடிகைக்கு கோலிவுட்ல வேற வாய்ப்பு கெடக்கலயாம்... கெடக்கலயாம்... ஆனா டோலிவுட்ல ஒரு படத்துல டபுள் ரோல்ல நடிக்க¤றாராம். இதுல ஒரு ரோல் ஹீரோவுக்கு தரும் இமேஜ்போல சூப்பர் வேஷமாம். இந்த மேட்டர தன்னைவிட படத்துல நடிக்கற வருணான ஹீரோதான் ஊர் முழுக்க பரப்பிட்டிருக்காராம். இதுல குஷியான அம்மணி வருண ஹீரோவை அன்போடு பாக்குறாராம்... பாக்குறாராம்... அவரும் அதே பாணில லுக் விட்றாராம். இப்படி பாத்துகிட்டிருந்தா காதல்ல போய் முடிஞ்சிடும் ஜாக்கிரதைன்னு தோழிங்க நடிகைக்கு எச்சரிக்கை பண்றாங்களாம்... பண்றாங்களாம்...

சமீபத்துல ரீ என்ட்ரி கொடுத்த ஸ்ரீ நடிகையோட படத்துல பைசா வாங்காம தல நடிகர் நடிச்சி கொடுத்தாரு. இதுல உச்சி குளுந்த நடிகை, தல படத்துல தன்னை நடிக்க கேட்டா நிச்சயமா நடிப்பேன்னு சொல்றாராம். சொல்லப்போனா, அவர் படத்துல ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடவும் தயாருன்னு ஸ்டேட்மென்ட் விடுறாராம்... விடுறாராம்...
 

சுதந்திரத்தைப் பறிக்கும் செயல்

Freedom of choice act

ருத்ரன் இயக்கும் படம், 'வெற்றிச்செல்வன்'. அஜ்மல், ராதிகா ஆப்தே, ஷெரீப், மனோ நடிக்கிறார்கள். மணிசர்மா இசை. பாடல்களை எழுதியுள்ள மதன் கார்க்கி நிருபர்களிடம் கூறியதாவது: எனது மகன் முணு முணுக்கும் பாடல்கள் பெரிய வெற்றி பெறும் என்பது என் சென்டிமென்ட். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் அவனுக்குப் பிடிக்கும். பொதுவாக நான் முழு கதையும் கேட்டு பாடல் எழுதுவதில்லை. சூழ்நிலைகளை மட்டும் கேட்டு எழுதுகிறேன். பாட்டு எழுத தனியாக இந்த இடம்தான் வேண்டும் என்று இல்லை. இருந்தாலும் காபி ஷாப்பில் அமர்ந்து பாடல் எழுத பிடிக்கும். பாடலாசிரியர்கள் எழுதி ஒலிப்பதிவான பிறகு வேறு காரணங்களுக்காக பாடல் வரிகளை நீக்கச் சொல்லும் போக்கு அதிகரித்திருக்கிறது. இது பாடலாசிரியர்களின் சுதந்திரத்தை பறிப்பதாகும்.
 

வட்டியில் வாழும் கோடம்பாக்கம்

Kodambakkam in Interest

சினிமாவில் வட்டி விஷயங்கள் புதிதில்லை என்றாலும் சமீபகாலமாக வட்டியில் அதிகமாக சிக்கித் தவித்து வருகிறது கோடம்பாக்கம். பொதுவாக வட்டிக்கு கடன் வாங்கி படம் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு யாரும் படத்தை துவக்குவது இல்லை. தங்களிடம் உள்ள தொகையோடு, படத்தில் நடிக்கும், ஹீரோ, இயக்குனர்களை பொறுத்து, வினியோகஸ்தர்கள் கொடுக்கும் முன் பணத்தைக் கொண்டு தயாரிக்க ஆரம்பிப்பார்கள். தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் கடைசி நேரத்தில் பணத்தட்டுப்பாடு வந்தால் வட்டிக்கு வாங்கி சமாளித்து வந்தார்கள். 1990 வரை இதுதான் நிலைமை.
பிறகு சினிமாவில் கந்துவட்டியும், அதையொட்டிய தாதாயிசமும் நுழைந்தது.

பலர் பெரும் தொகையை வட்டித் தொழிலில் இறக்கினார்கள். மற்ற தொழில்களைப் போல சினிமாவில் பணம் திரும்பி வர உத்தரவாதம் கிடையாது என்பதால் வட்டியும் அதிகம். முன்பெல்லாம் ஒன்று முதல் 3 சதவிகிதமாக இருந்த வட்டி, கந்துவட்டி, மீட்டர் வட்டிக்குப் பிறகு 5 முதல் 10 சதவிகிதமாக உயர்ந்தது. டாக்குமென்ட்களில் ஒரு சதவிகிதம் என்றே குறிப்பிடப்படும். ஆனால் நிஜத்தில் அதிலிருந்து பல மடங்கு வட்டி இருக்கும்.

முன்பு கடைசி நேரத்தில் வட்டிக்கு பணம் வாங்கினார்கள். இப்போது கையில் ஒரு காசு கூட இல்லாமல் வட்டிக்கு வாங்கி படம் எடுப்பவர்கள் அதிகம். ஒரு முன்னணி ஹீரோவின் கால்ஷீட்டை வாங்கி விட்டால், அதையே ஆதாரமாகக் காட்டி சில கோடிகளை வட்டிக்கு வாங்கிவிட முடியும். அதை வைத்து ஒரு ஷெட்யூல் முடித்தால் பின்பு அதைக் காட்டியே வினியோகஸ்தர்கள், தொலைக்காட்சி உரிமம், வெளிநாட்டு உரிமம் ஆகியவற்றில் பணத்தை பெற்றுக் கொண்டு மீதி படத்தை முடித்து விடுவார்கள். படம் நல்லபடியாக தயாராகி, வியாபாரமாகி, வெற்றி பெற்றால் பிரச்னை இல்லை. ஒரு ரூபாய் கூட முதலீடு இல்லாமல் தயாரித்த தயாரிப்பாளர் பலகோடி லாபம் பார்ப்பார். வட்டிக்காரர்களுக்கு பெரும் தொகை வட்டியாக கிடைக்கும். இதில் ஏதாவது ஒரு இடத்தில் சிக்கல் ஏற்பட்டால், குறிப்பாக படம் தயாராவதில் தாமதம், அல்லது தோல்வி ஏற்பட்டால் மொத்தமும் டமால்தான். பிறகு கட்டப்பஞ்சாயத்து, கோர்ட் என்று விஷயம் வீதிக்கு வரும்.

சில வங்கிகள் படத் தயாரிப்புக்கு கடன் உதவி செய்து வந்தது. அதுவும் அந்த தயாரிப்பாளரின் பிற சொத்துக்களின் பேரில்தான் கொடுத்தது. அதிலும் பணம் திரும்பி வருவதில் சுணக்கம் இருந்ததால் நிறுத்தி விட்டது. சமீபத்தில் தயாரிப்பாளர் ஒருவர், படத்தில் நடிக்க ஹீரோ ஒருவருக்கு ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தார். ஆனால் அவரால் 6 மாதம் வரை படத்தை துவக்க முடியவில்லை. வாங்கிய பணத்துக்கு வட்டி எகிறியது. தயாரிப்பாளர் சங்கம், மற்றும் நடிகர் சங்க விதிப்படி அட்வான்ஸ் கொடுத்துவிட்டு ஒரு நாள் படப்பிடிப்பு நடந்தால் கூட நடிகர் அட்வான்சை திருப்பித் தரவேண்டியதில்லை. இவரோ அந்த நடிகரை வைத்து இரண்டு நாள் படப்பிடிப்பு வேறு நடத்திவிட்டார். ஆனாலும் அந்த ஹீரோ மனசாட்சிப்படி பணத்தை சில மாதங்களுக்கு பிறகு திருப்பிக் கொடுத்தார். அதைக் கொண்டு அவர் வாங்கிய கடனுக்கு வட்டிதான் கட்ட முடிந்தது. அந்த கோடி ரூபாய் கடன் அப்படியே இருந்தது. இப்போது அவர் வீட்டை விற்று பாதி கடனை அடைத்து பரிதவித்துக் கொண்டிருக்கிறார். இப்படி பல தயாரிப்பாளர்கள் காணமல் போயிருக்கிறார்கள்.

வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் புத்திசாலித்தனமாக லேப்புடன் இணைத்து ஒப்பந்தம் போட்டு விடுவதால் படத்தை வெளியிடும்போது கழுத்தை நெரிப்பது போல வந்து நிற்பார்கள். இப்போதும் 50 சதவிகிதத்துக்கும் மேலான படப் பெட்டிகள் லேப்பின் வாசலில் பஞ்சாயத்தோடும், தயாரிப்பாளரின் கண்ணீரோடும்தான் வெளியே வருகிறது. 'எல்லா காலத்திலும், பெரிய தயாரிப்பாளர்கள், பெரிய ஹீரோக்களை, இயக்குனர்களை நம்பித்தான் வட்டிக்கு கடன் கொடுப்பார்கள்.

சிறு தயாரிப்பாளர்களுக்கு யாரும் கடன் தருவதில்லை. கடன் பெறும் தயாரிப்பாளர்கள் சரியான திட்டமிடுதல் இல்லாமை, தாமதம், தோல்வி இவற்றால் இந்த வட்டிக்குள் வாழ்க்கையை இழந்து விடுகிறார்கள். முறையான திட்டமிடுதல் இன்றி கடன் வாங்கி படம் எடுக்க வந்தால், யாராக இருந்தாலும் வட்டிக்குள் சிக்காமல் தவிர்க்க முடியாது. வெளிநாட்டில் இந்தப் பிரச்னை இல்லை. அங்கு பைரஸி கிடையாது, சினிமாவை தொழிலாக பார்க்கிறார்கள். கடைசி ஒரு பைசா லாபம் வரை தயாரிப்பாளருக்கு சென்று சேர்ந்து விடுகிறது. அதனால் வங்கிகள் கடன் கொடுக்கிறது. அப்படியொரு நிலை இங்கு வரும் வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை' என்கிறார் தயாரிப்பாளரும், வினியோகஸ்தருமான கலைப்புலி ஜி.சேகரன்.
 

ஒரே காட்சிக்கு 25 டேக்

25 take the same scene

இயக்குனர் பாண்டிராஜ், மதனுடன் இணைந்து தயாரிக்கும் படம், 'கேடி பில்லா கில்லாடி ரங்கா'. விமல், சிவகார்த்திக்கேயன், பிந்து மாதவி, ரெஜினா, சூரி உட்பட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். படம் பற்றி பாண்டிராஜ் கூறியதாவது: தங்கள் எதிர்காலம் பற்றிய கனவு நிறைவேற கேடியாகவும் கில்லாடியாகவும் செயல்படும் நான்கு இளைஞர்களின் கதை இது. அவர்களின் கனவுகள், ஏக்கங்கள், வாழ்க்கை முறை போன்றவற்றை புதுமையாக சொல்லியிருக்கிறோம். இதுவரை காட்டப்படாத திருச்சி பகுதிகளில் ஷூட்டிங் நடந்துள்ளது.

காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படம் என்பதால் ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு நடக்கும்போது கலகலப்பாகத் தொடங்கி கலகலப்பாக முடியும். காட்சியை ஷூட் பண்ணும்போதே சிரிக்கத் தொடங்கிவிடுவார்கள். விமல், சிவகார்த்திக்கேயன், சூரி மட்டுமின்றி கேமராமேன் உட்பட பட யூனிட்டும் சிரித்து விடும். ஒரு காட்சியை படமாக்கும் போது 25 டேக் வரை போனோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். கதையில் காமெடி இருந்தாலும் கூடவே அழுத்தமான மெசேஜும் இருக்கிறது. படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. அடுத்து பாடல் காட்சியை படமாக்க இருக்கிறோம்.
இவ்வாறு பாண்டிராஜ் கூறினார்.
 

இசையமைப்பாளர் ஆனார் யு.கே.முரளி

Murali became the composer

ஸ்ரீசாய் பிலிம்ஸ் சார்பில் எஸ்.வி.உதயகுமார் ஒளிப்பதிவு செய்து தயாரிக்கும் படம், 'நான்காம் தமிழன்'. சந்துரு, மோனா ஜோடியாக நடிக்கின்றனர். பாடல்கள், பிறைசூடன். ஓங்காரமூர்த்தி இயக்குகிறார். 20 வருடங்களாக மேடைக்கச்சேரி நடத்தி வரும் கின்னஸ் சாதனையாளர் 'உதயராகம்' யு.கே.முரளி, இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். அவரை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியும், படத்தின் பாடல் வெளியீடும் நேற்று நடந்தது. 6 பாடல்களை தனித்தனியே முக்தா சீனிவாசன், அபிராமி ராமநாதன், பி.பி.ஸ்ரீனிவாஸ், வசந்த், கதிர், தேவா வெளியிட்டனர். தயாரிப்பாளர் எஸ்.ஏக்நாத், 'ஆரோகணம்' ஜெய்குஹானி, யு.கே.முரளி, புளோரல் பெரேரா, சந்துரு, விஜய்சந்தர், மோனா, அபிநயா பெற்றனர். நிகழ்ச்சிகளை பாத்திமா பாபு தொகுத்து வழங்கினார்.

கமலுக்கு வக்கீல் நோட்டீஸ்

விழாவில் யு.கே.முரளியை வாழ்த்திய முக்தா சீனிவாசன், கூறும்போது,  'ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு கமலஹாசன் அளித்துள்ள பேட்டியில், 'நாயகன்' படம் பற்றி சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். அது இப்போது தேவையில்லாதது. சினிமாவில் சண்டை சச்சரவு இல்லாமல், எல்லோரும் சமாதானமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். கமலஹாசன் சொல்லியிருக்கும் விஷயங்களைப் படித்து வருத்தப்பட்டேன். கமல் மீது வழக்கு தொடுத்துவிட்டு இங்கு வந்திருக்கிறேன்' என்றார்.
 

தெலுங்கு பவருடு தமிழில் ஓ ஆனது

Pourudu dubbed in tamil

சுமந்த், காஜல் அகர்வால் நடித்த தெலுங்கு படம், 'பவருடு', தமிழில் 'ஓ' என்ற பெயரில் டப் ஆகிறது. ராஜ் ஆதித்யா இயக்கி உள்ளார், மணிசர்மா இசை. தமிழ் வசனம் மற்றும் பாடல்களை சத்தியன் கண்ணன் எழுதி உள்ளனர். சிங்கம் நிறுவனம் சார்பில் ஜீ.கே.குகன் வெளியிடுகிறார். ஹீரோவின் அப்பா தாதாவிடம் வேலை பார்க்கிறார். ஹீரோவுக்கு ஐ.ஏ.எஸ் படித்து மக்களுக்கு சேவை செய்ய ஆசை. ஆனால் தாதாக்களால் ஹீரோவின் அப்பா கொல்லப்பட, மகன் அவர்களை எப்படி பழிவாங்குகிறார். அவரது ஐ.ஏ.எஸ் கனவு நிறைவேறியதா என்பது கதை.
 

சொன்னா புரியாது

Sonna puriyathu

சிவா, வசுந்தரா காஷ்யப் நடிக்கும் படம், 'சொன்னா புரியாது'. சி.எஸ்.அமுதன் உதவியாளர் கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்குகிறார். 350 டிகிரி பிலிம் தயாரிக்கிறது. யதீஷ் மகாதேவ் இசை. நீரவ்ஷா உதவியாளர் சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி கிருஷ்ணன் ஜெயராஜ் கூறும்போது, 'திருமணத்தை வெறுப்பவர் சிவா. அதற்கான காரணம் யாருக்கும் தெரியாது, அவருக்கு திருமணம் செய்து வைக்க நண்பர்கள் முயற்சிக்கிறார்கள். இவர்கள் திருமண ஏற்பாடுகள் செய்வதையும், அதிலிருந்து சிவா தப்பிப்பதையும் காமெடியாக சொல்கிறோம். சிவா திருணம் செய்து கொண்டாரா, அவர் ஏன் திருமணத்தை வெறுக்கிறார் என்பது கிளைமாக்ஸ். ஷூட்டிங் முடிந்துவிட்டது. தற்போது பின்னணி இசை சேர்ப்பு பணி நடந்து வருகிறது' என்றார்.
 

"நாயகன்" விவகாரம் : கமல் விளக்கம்

'Nayagan' concern: Kamal Description

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த படம் 'நாயகன்'. இதை முதலில் முக்தா சீனிவாசன் தயாரித்தார். பின்னர் வேறு நிறுவனத்துக்கு படம் கைமாறியது. இப்படம் உருவாகி 25 வருடம் ஆனதையடுத்து ஆங்கில பத்திரிகையொன்றிற்கு கமல் பேட்டி அளித்திருந்தார். அதில், Ô'முக்தா சீனிவாசனின் நிறுவனத்துக்காக Ôநாயகன்' படம் நடிக்க முடிவு செய்தேன். மணிரத்னம் இயக்கினார். மும்பையில் ஷூட்டிங் என்றதும் சற்று தயக்கம் காட்டி சீனிவாசன் சம்மதித்தார். பின்னர் சண்டை காட்சிகளை சர்வதேச தரத்துடன் எடுக்க இயக்குனர் முடிவு செய்தபோது அதற்கு சீனிவாசன் சம்மதிக்கவில்லை. பட்ஜெட்டை தாண்டி செலவு செய்ய முடியாது என்று கூறிவிட்டார்' என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு முக்தா சீனிவாசன் கண்டனம் தெரிவித்து கமலுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

இது குறித்து கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை: நல்ல சினிமா செய்வதற்கு தடைகள் நிறையவும், ஆதரவு கொஞ்சமும் இருக்கத்தான செய்கிறது. எங்கள் கூட்டு முயற்சியின் வெற்றிக்கு வயது 25. மணிரத்னம், இளையராஜா, பி.சி.ஸ்ரீராம், தோட்டா தரணி, பாலகுமாரன், புதுமைப்பித்தன், சரிகா இவர்கள் போக அமைதியாய் தொண்டரடி பொடியாய் வேலை செய்தவர்களையும் ஆரம்பத்திலிருந்தே ஆதரவும், மூலதனமும், விமர்சனமும், கோபமும் கண்டிப்பும் நிறைந்த முக்தா சீனிவாசனையும் தன் கர்மத்தை செய்து காலமான ராமசாமியையும் நினைக்காமல் இருக்க முடியவில்லை. என்றென்றும் அவர்களுக்கு எங்கள் நன்றியை செலுத்துகிறோம். இவ்வாறு கமல் கூறியுள்ளார்.
 

ஏன் சூர்யா.. ஏன்?

ஏன் சூர்யா.. ஏன்?
சூர்யா நடித்தால் நிச்சய வெற்றி என்ற நிலை அப்படியே தலைகீழாக மாறிப் போயிருக்கிறது, ஜஸ்ட் ஒன்றரை ஆண்டுகளில். காரணம், பெரிய இயக்குநர்கள், பெரிய பட்ஜெட் என்று மட்டும் பார்த்த சூர்யா, நல்ல கதையைப் பார்க்காததுதான்.

இன்னொன்று, புதியவர்கள், அனுபவசாலிகள் என்றெல்லாம் பார்க்காமல் திறமையாளர்களுக்கு கால்ஷீட் கொடுத்து வந்த சூர்யா, இப்போது, அனுபவ இயக்குநர்களுக்கு மட்டுமே கால்ஷீட் தருவதுதான்.

ரத்த சரித்திரம்
சூர்யாவின் இந்தத் தோல்விப்பயணத்தின் துவக்கம் ரத்தசரித்திரம். இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு என்று மூன்று மொழிகளில் வெளியானது.
இதற்காக செய்யப்பட்ட விளம்பரங்கள் பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பின. ஆனால் படம் அதற்கேற்ப இல்லாத நிலையில் படுதோல்வியைச் சந்தித்தது. இந்தியில் இந்தப் படம் தனக்கான வாயிலாக அமையும் என்ற சூர்யாவின் எதிர்ப்பார்ப்பும் பொய்த்தது.

ஏழாம் அறிவு
ஏ ஆர் முருகதாஸை மட்டுமே பெரிதாக நம்பி சூர்யா நடித்த படம். ஆரம்ப 20 நிமிடங்கள் தவிர, வேறு எதுவும் இந்தப் படத்தில் க்ளிக் ஆகவில்லை. அந்த நோக்கு வர்ம டாங்லீ ஏக கிண்டலுக்குள்ளானார்.
ஆனால் வசூலில் வெற்றி என்று தயாரிப்பு தரப்பு அறிவித்துவிட்டது. ஆனால் சூர்யாவைப் பொறுத்தவரை இது ஒரு க்ளீன் வெற்றிப் படம் என்று சொல்ல முடியாத நிலை.

மாற்றான்
சூர்யாவின் படங்களுக்கு இதுவரை தரப்படாத முக்கியத்துவம், விலை இந்த மாற்றானுக்குதான் தரப்பட்டது. படத்தில் அவரும் குறைவின்றி செய்திருந்தார். தொழில்நுட்ப ரீதியில் ஏகப்பட்ட உழைப்பை இந்தப் படம் பெற்றிருந்த போதும், பார்வையாளர்களை சுவாரஸ்யமாக வைக்கத் தவறிவிட்டது.

சிங்கம்தான் கடைசி…
2010-ல் வெளியான சிங்கம்தான் சூர்யாவுக்கு அதிரடியான வெற்றிப்படமாக அமைந்தது. விமர்சன ரீதியில் அந்தப் படத்துக்கும் நிறைய எதிர்மறை கருத்துகள் இருந்தாலும், படம் பார்த்த ரசிகர்களை வேறு எதைப் பற்றியும் யோசிக்க விடாமல் கட்டிப் போட்டது சிங்கம். அந்த வெற்றி தந்த நம்பிக்கையில் இப்போது சிங்கம் 2வை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தேவை, அணுகுமுறையில் மாற்றம்…
விஜய், அஜீத்துக்கெல்லாம் இல்லாத ஒரு ப்ளஸ் சூர்யாவுக்கு உண்டு. அது அனைத்து மட்டங்களிலும் அவருக்குள்ள ரசிகர் வட்டம். அதுவும் குடும்ப ரசிகர்கள் அவருக்கு அதிகம். திரும்பத் திரும்ப டிஎன்ஏ, வெளிநாட்டு சதி என ஒரே மாதிரி திரைக்கதைக்குள் சிக்கி சுவாரஸ்யமற்ற படங்களைத் தருவதன் மூலம் அந்த ரசிகர்களை அவர் இழக்கும் அபாயமுள்ளது.

புதியவர்களை நம்புங்கள்…
சினிமாவைப் பொறுத்தவரை வெற்றி யார் மூலமும் கிடைக்கலாம். அது யாரிடமும் உதவியாளராகக் கூட இல்லாமல் நேரடியாக படம் இயக்குபவர் மூலம் கூட சாத்தியமே. முருகதாஸ்கள், ராம்கோபால் வர்மாக்கள்தான் வெற்றியின் சூத்திரதாரிகள் என நம்பாமல், நல்ல கதைகள், திறமையான புதியவர்களை நம்பத் தொடங்கினால் சாத்தியமாகலாம்..!
 

டெங்கு காய்ச்சல்... பாலிவுட்டின் பிரபல இயக்குநர் யாஷ் சோப்ரா திடீர் மரணம்!

Yash Chopra Passes Away

பாலிவுட்டின் பழம்பெரும் சினிமா படைப்பாளர் யாஷ் சோப்ரா ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவருக்கு வயது 80.

ஏராளமான வெள்ளிவிழா திரைக் காவியங்கள் படைத்தவர் என்பதால் 'காதல் மன்னன்' என்று வர்ணிக்கப்பட்டவர் யாஷ் சோப்ரா.

அண்மையில் டெங்கு காய்ச்சல் காரணமாக மும்பை மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்ட யாஷ் சோப்ராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், உடல் உறுப்புகள் பலவும் செயல் இழந்ததன் காரணமாக அவர் மரணம் அடைந்தார்.

தூல் கா பூல் (1959) தொடங்கி தில் தோ பாகல் ஹை (1997) வரை அவர் பல பொன்விழா, வெள்ளிவிழா படங்களைத் தந்தார். த்ரிஷூல், சில்சிலா, தீவார் என காலத்தை வென்ற காதல் காவியங்கள் தந்தார்.

ஏழு ஆண்டு இடைவெளிவிட்டு வீர் ஜாரா (2004) என்ற ப்ளாக்பஸ்டரைக் கொடுத்தவர் யாஷ் சோப்ரா.

ஷாரூக்கான், அனுஷ்கா சர்மா, கத்ரீனாவை வைத்து ஜப் தக் ஹை ஜான் என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது.

ஒரு தயாரிப்பாளராகவும் வெற்றிக் கொடி நாட்டினார் யாஷ் சோப்ரா. தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே, தாக், ஏக் தா டைகர் உள்பட 50 படங்களுக்கும்மேல் தனது யாஷ் ராஜ் பிலிம்ஸ் பேனரில் தயாரித்தார்.

ஜப் தக் ஹை ஜான் படத்தோடு, சினிமாவிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்திருந்தார் யாஷ் சோப்ரா.

தன் படைப்பாற்றலால் பல தலைமுறைகளுக்கு சிறந்த பொழுதுபோக்கை அளித்தவர் யாஷ் சோப்ரா என பிரதமர் மன்மோகன் சிங் தன் இரங்கல் குறிப்பில் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஒட்டு மொத்த இந்தியத் திரையுலகமும் யாஷ் சோப்ரா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

 

'எஸ்.ஆர்.கே' பெயரை டிரேட்மார்க் செய்த ஷாருக்கான்!

Srk Be Trademark

உற்பத்திப்பொருளுக்கும், நம்முடைய தயாரிப்பை யாரும் காப்பி அடித்துவிடக்கூடாது என்பதற்காகவும் தான் டிரேட் மார்க் பதிவு செய்யப்பட்டது. இப்போது தன்னுடைய பெயருக்கு டிரேட்மார்க் கோரி பதிவு செய்துள்ளார் ஷாருக்கான். தன்னுடைய இன்சியலை தன் அனுமதியில்லாமல் யாரும் உபயோகப் படுத்தக்கூடாது என்பதற்காகவே டிரேட் மார்க் அனுமதி கோரி ஷாருக்கான் விண்ணப்பித்துள்ளாராம்.

பாலிவுட் உலகில் எஸ்.ஆர்.கே என்றால் பிரபலம். அது ஷாருக்கின் தனி அடையாளம். கடந்த சில ஆண்டுகளாக பிரபல பிராண்டுகளின் பெயர்களுக்கு டிரேட்மார்க் அனுமதி, அளிக்கப்படுகிறது. அதேபோல் தனது ‘எஸ்.ஆர்.கே' என்ற இனிசியலுக்கு காப்புரிமை கேட்டிருக்கிறார் ஷாருக்கான். இதேபோல இன்ஷியலுக்கு அனுமதி கேட்டுள்ள மற்றொரு பிரபலம் சச்சின் டெண்டுல்கர். ‘எஸ்.ஆர்.டி' என்ற பெயரை டிரேட்மார்க் ஆக மாற்ற விண்ணப்பித்துள்ளாராம்.

ஏற்கனவே ரோஜர் பெடரர், மைக்கேல் ஜோர்டன், ஜெனிபர் லோபஸ் ஆகியோரின் பெயர்களுக்கு டிரேட்மார்க் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.