கிசு கிசு - நடிகைகள் மோதல்... யோசனையில் இயக்கம்...

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நடிகைகள் மோதல்... யோசனையில் இயக்கம்...

7/28/2011 3:45:08 PM

நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

நமீ நடிகைக்கும் சோன நடிகைக்கும் இடையே கோல்ட் வார் ஆரம்பிச்சிருக்கு... ஆரம்பிச்சிருக்கு... சமீபத்துல சோன நடிகையை நமீ தாக்கியிருந்தாரு. ரெண்டு பேரும் பப்ளிசிட்டிக¢காக இப்படி பண்றதா கோடம்பாக்கத்துல பேசிக்கிட்டாங்க. இதனால சோன நடிகை உர்ராகியிருக்காராம். Ôநமீயை பற்றி நான் சொன¢ன அந்த எஸ்எம்எஸ் விவகாரம் ரொம்ப பழசு. அதுக்கு இத்தனை நாள் கழிச்சி, இப்போ ஏன் அவர் பதில் சொல்லணும். பப்ளிசிட்டி ஆசை நமீக்குதான். எனக்கு கிடையாதுÕனு பதிலடி தர்றாராம்... தர்றாராம்...

இளைஞன் இளைஞி படத்துல நடிச்சிருக்காரு மலையாள ரீம நடிகை. தன்னோட அடுத்த படத்துக்காக கவுதமரு நடிகைகிட்ட பேசினாராம்... பேசினாராம்... டெஸ்ட் ஷூட்டும் நடத்தினாராம்... நடத்தினாராம்... இது நடந்து ஒரு மாசமாகியும் இயக்குனர் தரப்பிலேருந்து பதில் இல்லையாம். இதனால நடிகை வருத்தமா இருக்காராம்... இருக்காராம்...

சரண இயக்கம் இந்தி பக்கம் போயி வாய்ப்பு தேடினாரு. ஏமாற்றம்தான் கிடைச்சது. அடுத்ததா டோலிவுட்டுக்கு போனாரு. அவர் சொன்ன கதையை தெலுங்கு ஹீரோ ரிஜெக்ட் பண்ணிட்டாராம்... பண்ணிட்டாராம்... திரும்ப கோடம்பாக¢கத்துக்கே வந்தவரு என்ன பண்ணலாம்னு யோசனையில மூழ்கியிருக்காராம்... மூழ்கியிருக்காராம்...




 

அக்டோபர் 3ல் ராணா ஷூட்டிங்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அக்டோபர் 3ல் ராணா ஷூட்டிங்

7/28/2011 3:42:53 PM

'ராணா பட ஷூட்டிங் அக்டோபர் 3ம் தேதி முதல் தொடங்குகிறது. ஐதராபாத்தில் நடைபெற உள்ள இப்பட ஷூட்டிங்கில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கிறார். ரஜினிகாந்த் 3 வேடங்களில் நடிக்கும் படம் 'ராணா'. கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார். கடந்த ஏப்.29ம் தேதி இப்படத்தின் தொடக்க விழாவுடன் ஷூட்டிங் தொடங்கியது. அப்போது ரஜினிகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக போரூரிலுள்ள மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். சிறுநீரக கோளாறு இருப்பது கண்டறியப்பட்டதால் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றார் ரஜினி.  சிகிச்சை முடிந்து கடந்த 13ம் தேதி சென்னை திரும்பினார். டாக்டர்கள் அறிவுரைப்படி அவர் ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்நிலையில் 'ராணா பட ஷூட்டிங் விரைவில் தொடங்குவது பற்றி ரஜினியும், இயக்குனர் ரவிகுமாரும் ஆலோசனை நடத்தினர். அக்டோபர் 3ம் தேதி முதல் ஷூட்டிங் தொடங்கி தொடர்ந்து 100 நாட்கள் இடைவிடாமல் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ரஜினி பங்கேற்கும் காட்சிகள், அவ்வப்போது சில நாள் இடைவெளி விட்டு படமாக்கப்படும். இதற்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் பல லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டு வருகிறது. மன்னராக ரஜினி நடிக்கும் காட்சிகளுக்காக, பிரமாண்ட கப்பல் செட் ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.

ரஜினியுடன் பட ஹீரோயின் தீபிகா படுகோன், கஞ்சா கறுப்பு, சோனு சூட் உள்ளிட்டோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. சண்டை காட்சிகளில் ரஜினி நடிக்க வேண்டியுள்ளதால் அவரது உடல்நலம் கருதி ரிஸ்க்கான காட்சிகளை கிராபிக்ஸில் படமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. படத்தின் பாடல் பதிவு பணியில் ஏ.ஆர்.ரகுமான் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே 4 பாடல்கள் தயாராகிவிட்டதாக ரகுமான் தரப்பில் கூறப்படுகிறது. ஒவ்வொரு படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்பதற்கு முன்பும் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் சென்று தரிசனம் செய்வது ரஜினியின் வழக்கம். ஷூட்டிங் தொடங்கும் முன் அவர் திருப்பதி செல்கிறார்.




 

இருட்டடிப்பு செய்த இயக்குனர்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இருட்டடிப்பு செய்த இயக்குனர்கள்

7/29/2011 3:01:56 PM

மம்தா கூறியது: மகிழ் திருமேனி இயக்கும் 'தடையறத் தாக்கÕ படத்தில் அருண் விஜய் ஜோடியாக நடிக்கிறேன். இதில் ஏற்கனவே பிராச்சி தேசாய் நடிப்பதாக இருந்தது. அவர் விலகிவிட்டார். அவர் ஏன் விலகினார் என்பது எனக்கு தெரியாது. இப்படத்தில் ஹீரோயினாக யாரை போடலாம் என்று யோசித்தபோதே என் பெயரையும் பரிசீலித்ததாக கூறினார் இயக்குனர். மலையாள படம் ஒன்றில் நடித்து வந்தேன். அதன் ஷூட்டிங் ஒரு மாதம் தள்ளிப்போனதால் உடனடியாக கால்ஷீட் தர முடிந்தது. தமிழ் படங்களில் நடிப்பதை நான் நிறுத்திவிட்டதாக புரளி கிளப்பி இருக்கிறார்கள். அப்படி எந்த முடிவும் எடுக்கவில்லை. ஏற்கனவே 'சிவப்பதிகாரம்Õ, 'குரு என் ஆளுÕ படத்தில் நடித்திருக்கிறேன். பிரபல ஹீரோக்களுடன்தான் ஜோடியாக நடித்தேன். ஆனால் அப்படத்தின் போஸ்டர்களில் என் போட்டோவை போடாமல் இயக்குனர்கள் இருட்டடிப்பு செய்துவிட்டனர். சிலர் இதைக் கூறிய பின்தான் எனக்கே தெரிந்தது. அது வருத்தம் அளித்தது. மேலும் என்னை வழிநடத்துவதாக கூறி, என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டார்கள். அது பற்ற¤ பேச விரும்பவில்லை.




 

கௌதம் மேனனின் ""யோஹன் : அத்தியாயம் ஒன்று''-அஜீத்துக்கான கதையில் விஜய்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கௌதம் மேனனின் ''யோஹன் : அத்தியாயம் ஒன்று''-அஜீத்துக்கான கதையில் விஜய்!

7/29/2011 12:31:04 PM

முக்கிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கும் விஜய், அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் நடிப்பதும் உறுதியாகி இருக்கிறது. இது ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் என்பதுதான் விஷேசம். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான், தாமரை காபினேஷனில் பாடல்கள் உருவாகின்றன. படத்தை தமது போட்டோன் கதாஸ் நிறுவனம் சார்பில் கௌதம் வாசுதேவ் மேனனே தயாரிக்கிறார்.

அஜித்திற்கு என்று தயார் செய்யப்பட்ட 'துப்பறியும் ஆனந்த்' கதையினை விஜய்க்கு ஏற்றவாறு சிறு மாற்றம் செய்து இருக்கிறாராம் கௌதம். படத்தின் தலைப்பை 'யோஹன் : அத்தியாயம் ஒன்று' என மாற்றி உள்ளார் கௌதம்.  அஜீத்திடம் கால்ஷீட் கேட்டு கௌதம் காத்துக்கிடந்ததும், பின் சில உரசல்களுடன் இனி அஜீத்துக்காக நான் காத்திருக்க முடியாது என்றும் கௌதம் சொல்லியிருந்தார். இப்போது அஜீத்துக்கான கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு விஜய் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த 2012யில் துவங்குகிறது.

அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸூடன் இணைந்து எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக 'உதயன்' பட நாயகி ப்ரணிதா ஒப்பந்தம் செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

கௌதம் மேனனின் ''யோஹன் : அத்தியாயம் ஒன்று''-அஜீத்துக்கான கதையில் விஜய்!




 

கொல்கத்தா காளி கோயிலில் பிரபுதேவா ஷூட்டிங்குக்கு அனுமதி மறுப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கொல்கத்தா காளி கோயிலில் பிரபுதேவா ஷூட்டிங்குக்கு அனுமதி மறுப்பு

7/29/2011 3:02:57 PM

கொல்கத்தா காளி கோயிலில் பிரபு தேவா படத்துக்கு ஷூட்டிங் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரபுதேவா இயக்கும் புதிய படம் 'வெடி'. விஷால், சமீரா ரெட்டி ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்துக்காக கொல்கத்தாவில் உள்ள பிரபல தட்சிணேஸ்வரம் காளி கோயிலில் ஷூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக அனுமதி கேட்டு முன்னதாகவே கடிதம் கொடுத்திருந்தனர். நேற்று முன்தினம் நடிகர், நடிகைகளுடன் பட யூனிட் கோயில் முன்பு போய் இறங்கியது. அவர்களை காவலாளிகள் வெளியிலேயே தடுத்து நிறுத்தினர். 'ஏற்கனவே அனுமதி கேட்டு விண்ணப்பம் கொடுத்துவிட்டோம்' பட குழுவினர் கூறினர். விண்ணப்பம் முழுமையாக இல்லாததால், ஷூட்டிங் நடத்த அனுமதிக்க முடியாது என்று கோயில் நிர்வாகத்தினர் கூறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மதியம் வரை பட குழுவினர் காத்திருந்தும் அனுமதி கிடைக்காததால் ஏமாற்றத்துடன் புறப்பட்டனர். நாளை மறுநாள் பூங்கா ஒன்றில் ஷூட்டிங் நடத்த அனுமதி பெற்றிருந்தனர். அங்கு சென்று ஷூட்டிங்கை நடத்தினர். ஷூட்டிங் ரத்து, லொகேஷன் மாற்றம் போன்றவற்றுக்கு ரூ.5 லட்சம் செலவானதாக பட குழு மேனேஜர் தெரிவித்தார். இதுபற்றி சமீரா ரெட்டி கூறும்போது, 'எல்லோரும் ஷூட்டிங்கில் பங்கேற்றும் எண்ணத்துடன் கோயில் முன்பு கூடினோம். எதிர்பாராத விதமாக அனுமதி மறுக்கப்பட்டதால் பாதி நாள் வீணானது. ஆனாலும் காளி தேவியை தரிசிக்க வாய்ப்பு கிடைத்தது' என்றார். 'பட குழு சார்பில் கடந்த 21ம் தேதி விண்ணப்பம் கொடுக்கப்பட்டிருந்தது. அது முழுமையாக இல்லை. எவ்வளவு நேரம் ஷூட்டிங் நடக்கும், வியாபார நோக்கத்துக்காக ஷூட்டிங் நடக்கிறதா என்ற கேள்விகளுக்கு பதில் தரவில்லை. சம்பவத்துக்கு பிறகு புதிய விண்ணப்பம் கொடுத்தனர். ஆனால் அனுமதி பெறுவதற்கு கால அவகாசம் தேவை' என்று கோயில் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.




 

பிரபாகரன் படபிடிப்பு-பிரபுதேவாவுடன் கொல்கத்தாவில் சமீரா ரெட்டி முகாம்!


டான்ஸ் டைரக்டர் பிரபுதேவாவின் பிரபாகரன் படபிடிப்பு கொல்கத்தாவில் நடந்து வருகிறதாம். இதற்காக நடிகை சமீரா ரெட்டி கொல்கத்தா சென்றுள்ளாராம். இதை அவரே தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பிரபுதேவா இயக்கத்தில் விஷால், சமீரா ரெட்டி நடிக்கும் படம் பிரபாகரன். தெலுங்கில் சூப்பர்ஹிட்டான சவுரியம் படத்தின் ரீமேக் தான் பிரபாகரன்.

இந்த படத்தின் ஒரு பாடல் காட்சி கொல்கத்தாவில் படமாக்கப்பட்டு வருகிறது. இது குறித்து படத்தின் நாயகி சமீரா ரெட்டி டுவிட்டரில் கூறியுள்ளதாவது,

கொல்கத்தாவில் உள்ள ஹவுரா பாலத்தில் பாடல் படபிடிப்பு. அருமையான தட்ப வெட்பம். இயக்குனர் பிரபுதேவாவின் படத்திற்காக டான்ஸ் ஆடுகிறேன் என்றார்.

நல்லா ஆடுங்க!
 

சன் பிக்சர்ஸ் சக்சேனாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஆக. 1க்கு ஒத்திவைப்பு


சென்னை: சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வல்லக்கோட்டை என்ற திரைப்படத்தைத் தயாரித்த ராஜா என்பவர் சக்சேனா மீது பண மோசடிப் புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து சக்சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இருவரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இது நீதிபதி தேவதாஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சக்சேனாவின் வக்கீல் கால அவகாசம் கேட்டார். இதையடுத்து ஆகஸ்ட் 1ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
 

பிளேபாய் தந்த ரூ 7.5 கோடி 'டாப்லஸ் ஆஃபர்': மறுத்தார் தீபிகா


பாலிவுட் பிரபலங்களுக்கு அடிக்கடி மெகா ஆஃபர்கள் வரும்... எதற்காக தெரியுமா... அரை நிர்வாணம் அல்லது முக்கால் நிர்வாணத்துடன் ஆட்டம் போட / போஸ் கொடுக்க. இதற்கு பல கோடிகளை அள்ளித் தரவும் வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர்கள் தயாராக இருப்பார்கள்.

ஏற்கெனவே ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைஃப், ப்ரியங்கா சோப்ரா போன்றவர்களுக்கு இதுபோன்ற வாய்ப்பு வந்ததும் அவர்கள் மறுப்பு தெரிவித்து அது செய்தியாக வந்ததும் தெரிந்திருக்கும்.

இப்போது அப்படியொரு வாய்ப்பு ராணா நாயகி தீபிகா படுகோனுக்கு வந்துள்ளது. ஆனால் இந்த முறை தொழிலதிபர்ளிடமிருந்தல்ல... உலகப் புகழ்பெற்ற பிளேபா.் பத்திரிகையிடமிருந்து. ரூ 7.5 கோடி வரை தருகிறோம், பிளேபாய் செப்டம்பர் மாத இதழுக்கு அரை நிர்வாணமாக... அதாவது டாப்லெஸ்ஸாக போஸ் தர வேண்டும் என்று கேட்டார்களாம்.

ஆனால் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லையாம் தீபிகா. பிளேபாய்க்கு விளம்பர படங்கள் எடுத்துத் தரும் அந்த சர்வதேச நிறுவனம் எவ்வளவோ முயன்றும் இந்த ஆஃபரை ஒப்புக் கொள்ளவே இல்லையாம் தீபிகா.

பிளேபாய் வாய்ப்புக்காக ஹாலிவுட், பாலிவுட் நடிகைகள் தவம் கிடக்கையில், தீபிகா உறுதியாக மறுப்புத் தெரிவித்திருப்பது அவரை ஆச்சர்யத்துடன் பார்க்க வைத்துள்ளது சக பாலிவுட் நடிகைகளை.
 

சக்சேனாவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!


சென்னை: சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனாவின் வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளனர் தமிழக போலீசார்.

சேலத்தைச் சேர்ந்த வினியோகஸ்தர்கள் செல்வராஜ், சண்முகவேல் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார் சக்சேனா. தொடர்ந்து அவர் மீது மேலும் மேலும் வழக்குகள் போடப்பட்டன. இவற்றில் சேலம் விநியோகஸ்தர்கள் கொடுத்த வழக்குகளை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.

மீதி 4 வழக்குகளில் அவர் மீது விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், சக்சேனா மீது நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தனியாக ஒரு நிறுவனம் நடத்தி வந்ததும், அந்த நிறுவன கணக்கில் லட்சக் கணக்கில் பணம் டெபாசிட் செய்திருந்ததும் தெரிய வந்துள்ளது. வங்கியில் மனைவி, மகள் பெயரில் டெபாசிட் செய்து இருப்பதும் தெரியவந்துள்ளதாம். மொத்தம் ரூ 50 லட்சம் வரகை இப்படி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக்த தெரிகிறது.

இந்த வங்கி கணக்கை முடக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சக்சேனா வேறு எந்த நிறுவனத்திலாவது பணம் முதலீடு செய்துள்ளாரா? என்றும் விசாரித்து வருகின்றனர்.
 

நயனதாராவின் உதட்டோர மச்சத்தை கிராபிக்ஸ் போர்வை போட்டு மூடிய இயக்குநர்


தெலுங்கில் தான் நடித்த ஸ்ரீராம ராஜ்யம் படத்தோடு சினிமாவுக்கு குட்பை சொல்லியுள்ள நயனதாராவுக்கு அந்தப் படத்தில் நடித்தபோது பல வித்தியாசமான, சுவாரஸ்யமான அனுபவங்கள் கிடைத்ததாம்.

பிரபுதேவாவை கள்ளத்தனமாக காதலித்து, அவரை அவரது மனைவியிடமிருந்து வெற்றிகரமாக, சட்டப்பூர்வமாக பிரித்து விட்ட நயனதாரா விரைவில் பிரபுதேவாவைக் கல்யாணம் செய்யவுள்ளார்.

இந்தநிலையில் அவர் கடைசியாக நடித்த படம் ஸ்ரீராம ராஜ்ஜியம். கடும் எதிர்ப்புகளையும் மீறி இப்படத்தில் நடித்தார் நயனதாரா. இப்படத்தில் சீதை வேடத்தில் நயனதாரா நடித்துள்ளார் என்பதுதான் வேடிக்கையாகும்.

இப்படத்தில் நடித்த காலத்தில் அசைவ உணவுகளை தொடாமல் சைவப் பட்சியாக இருந்தாராம் நயனதாரா. இயக்குநர் பாபு கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த விரதத்தை அவர் கடைப்பிடித்தாராம்.

ராமர் வேடத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ளார். லவ குசா என்ற என்.டி.ராமாராவ் நடித்த படத்தின் ரீமேக்தான் இது.

படப்பிடிப்பின்போது அவர் காட்டிய ஒத்துழைப்பும், சின்சியாரிட்டியும் அனைவரையும் கவர்ந்து விட்டதாம். இருப்பினும் இயக்குநர் பாபுவுக்கு ஒரு விஷயம் மட்டும் இடித்துள்ளது. அது நயனதாராவின் உதட்டோர மச்சம். கீழ் உதட்டில் உள்ள அந்த மச்சம், நயனதாராவின் முகத்தை படு கவர்ச்சியாக, செக்ஸ் அப்பீலுடன் காட்டுவதாக இருப்பதாக அவர் உணர்ந்தார்.

சீதை வேடத்தில் நயனதாரா கன கச்சிதமாக பொருந்தியிருந்தபோதிலும், அவரது உதட்டு மச்சம் கவர்ச்சியை தூக்கலாக காட்டுவதாக உணர்ந்த அவர், அதை மறைத்துக் கொண்டு நடிக்க முடியுமா என்று நயனதாராவிடம் கேட்டார்.

ஆனால் அதற்கு நயனதாரா மறுத்துள்ளார். அது எனக்கு சென்டிமென்ட்டான மச்சம். எனவே அதை தயவு செய்து மறைக்க வேண்டும் என்று கேட்காதீ்ர்கள் என்று கேட்டுக் கொண்டாராம். இதையடுத்து மச்சத்துடன் படத்தை எடுத்து முடித்த பாபு, தற்போது கிராபிக்ஸ் உதவியுடன் மச்சத்தை மறைத்து விட்டாராம்.

என்னா ஒரு டெக்னாலஜி!
 

துபாயில் இருந்து சென்னை வந்த துணை நடிகை மாயம்: கேரள தொழில் அதிபருடன் ஓட்டம்?


துபாயில் இருந்து சென்னை வந்த துணை நடிகை மாயமாகி விட்டார். கேரள தொழில் அதிபருடன் அவர் ஓடிவிட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய போலீசில் நாகர்கோவில் ராமன் புதூரைச் சேர்ந்த ராஜா ஒரு புகார் மனு அளித்தார். அதில், "என்னுடைய மனைவி மீனா (வயது 27). துணை நடிகையாக படங்களில் நடித்து வருகிறார்.

அவர் கடந்த 24-4-2011 அன்று துபாயில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்றார். கடந்த 3 மாதங்களாக துபாயில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் கடந்த 23-ந் தேதி துபாயில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்தார். பின்னர் அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தார். அவரை அழைத்து செல்ல விமான நிலையத்தில் காத்திருந்தேன்.

அப்போது என் மனைவியுடன் செல்போனில் பேசியபோது விமான நிலையத்திற்கு வெளியே சிறிது நேரத்தில் வந்து விடுவதாகத் தெரிவித்தார் நீண்ட நேரமாகியும் வரவில்லை. அவளுடன் சென்றவர்கள் வெளியே வந்தனர். அவர்களிடம் எனது மனைவியை பற்றி விசாரித்தபோது அவர் நீண்ட நேரத்திற்கு முன்பே சென்று விட்டதாக தெரிவித்தனர். என் மனைவியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்," என்று கூறியுள்ளார்.

போலீஸ் விசாரணையில், கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் துபாயில் நடந்த கலை நிகழ்ச்சியில் மீனாவுடன் பழகி உள்ளார். அவரும் மீனாவுடன் சென்னை வந்தாராம். இதனால் மீனா கேரளா தொழில் அதிபருடன் சென்று விட்டிருக்கலாம் என்று தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கிறார்கள்.
 

எனக்கு பயமில்லை... சினிமாவில் தவறு செய்பவர்களை சுட்டிக் காட்டினேன்! - அஜீத்


எனக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளது. அதனால்தான், சினிமாவில் இருக்கிற சிலர் தவறு செய்த போது பயமின்றி சுட்டிக் காட்டினேன், என்கிறார் அஜீத்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பேட்டிகள் தர ஆரம்பித்துள்ளார் நடிகர் அஜீத் குமார்.

சமீபதில் அவர் அளித்த ஒரு பேட்டியில் மங்காத்தா சிக்கலில் இருக்கிறது என்ற உண்மையை வெளியிட்டார்.

இப்போது இன்னொரு பேட்டியில், சினிமாவில் இருக்கிற சிலர் தவறு செய்தனர். அதை பயமின்றி சுட்டிக் காட்டினேன். காரணம் ஜனநாயகத்தில் எனக்கு நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார்.

கடந்த ஆட்சியில் நடந்த திரையுலக விழாயொன்றில், அன்றைய முதல்வர் கருணாநிதி முன்னிலையில், முதல்வர் விழாவுக்கு மிரட்டி அழைக்கிறார்கள், இது நியாயமா என்று கேட்டார். உடனே ரஜினி எழுந்து நின்று கைதட்டி ஆதரவைத் தெரிவித்தார்.

இதற்கு பிறகு, அப்படி பேசியதற்காக முதல்வரிடம் நேரில் சென்று விளக்கம் அளித்தார் என்பது வேறுவிஷயம்.

ஆனால் அவரது இந்த பேச்சுக்காக சினிமா உலகைச் சேர்ந்தவர்களே அஜீத்தை தாறுமாறாக விமர்சித்தனர். இதனால் அவர் அதிமுக பக்கம் சாய்ந்தார். ஜெயலலிதாவைவும் சந்தித்தார்.

இப்போது ஆட்சிமாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், ஆளும் கட்சி ஆதரவாளரான அஜீத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படுகிறது.

இந்த நிலையில்தான் அஜீத்தின் பேட்டி வெளியாகியுள்ளது.

அதில் அஜீத் கூறியிருப்பதாவது:

நம்முடைய அரசியல் முறை மற்றும் ஜனநாயகத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. சினிமாவில் இருக்கும் சிலரின் செயல்பாடுகள் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை. அதனால் அப்போது சில கருத்துக்களை வெளியிட்டேன்.

என்னை எதிர்க்கும் அந்த சில நபர்கள் திரையுலகில் தனது அதிகாரத்தை நிலை நிறுத்தவோ அல்லது எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவதற்காகவோ இது போன்ற ஸ்டண்ட்களில் இறங்குகின்றனர். என் பெயரை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

சினிமாவில் அரசியல் வேண்டாம்

நான் வெளியாட்களைப் பற்றி பேசவில்லை. சினிமாவில் இருக்கும் சிலர் செய்கின்ற காரியங்களைத்தான் சுட்டிக் காட்டினேன். சினிமாவில் அரசியலை கலக்கக்கூடாது. எனது கருத்தை ஆதரித்தால் பாதிக்கப்படுவோம் என அப்போது பயந்தனர். அதனால் பேசாமல் இருந்தார்கள்.

நடிகர்களுக்கும் சமூக பொறுப்பு இருக்கிறது. இனம், மொழியை கடந்து அவர்கள் எல்லோருக்கும் பொதுவானவர்களாக இருக்கிறார்கள். சினிமா மூலம் மக்களை சந்தோஷப்படுத்துவதே நடிகர்கள் இலக்காக இருக்க வேண்டும்.

மற்ற நடிகர்கள் போல் நான் அதிக படங்களில் நடிக்காத காரணம் என் வாழ்க்கையை நான் சந்தோஷமாக வாழ விரும்புகிறேன்."
 

சிம்பு.... 'நற நறக்கும்' பரத்!


இரண்டு நாயகர்கள் நடிக்கும் படங்களின் ஆரம்பம் இனிப்பாக இருக்கும்... முடியும்போது மகா கசப்பான அனுபவங்கள் மிஞ்சும் என்பார்கள்.

அதனால்தான் ரஜினி - கமலுக்குப் பிறகு இரட்டை நாயகர்கள் நடிக்கும் படங்கள் அதிகமாக வராமலே போயின. அவ்வளவு பெரிய நடிகர்களே எந்த ஈகோவுமில்லாமல் நடித்து வெற்றிப் படங்களாகக் கொடுத்தனர்.

ஆனால் இன்று பெரிதாக வாய்ப்பில்லாத சில நடிகர்கள்கூட ஒரு படத்தில் சேர்ந்து நடித்ததும், பிணக்கு வந்து மீடியாவிடம் முணக ஆரம்பிக்கிறார்கள்.

சமீபத்தில் சிம்பு நடிக்கும் வானம் படத்தில் இன்னொரு ஹீரோவாக நடித்தார் பரத். படத்தின் அறிமுக பிரஸ் மீட்டில் இருவரும் கட்டிப்பிடித்து போஸ் கொடுத்தார்கள். சிம்புவுக்கு இணையான ரோல் பரத்துக்கு என்று இயக்குநர் வேறு கூறினார்.

படம் வந்தது. பரத்துக்கு என்ன ரோல் என்பது தெரிந்தும் போனது.

இப்போது பரத் புலம்ப ஆரம்பித்துள்ளார்.

"இந்தப் படத்தில் எனக்கும் சிம்புவுக்கும் சரிக்கு சரியான வேடம் என்று ஒப்பந்தம் செய்தனர். ஆனால் படம் முடியும் நேரத்தில் எனக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. ரிலீஸின்போது, நான் படத்தில் இருப்பதே தெரியாத அளவுக்கு என்னை மறைத்து, ஒருவருக்கே முக்கியத்துவம் கொடுத்திருந்தனர். எவ்வளவு பெரிய அவமானம், கொடுமை இதெல்லாம். இனி இந்தமாதிரி வாய்ப்புகளை ஏற்கும் முன் யோசிப்பேன்," என்கிறார் பரத்.

இது குறித்து விசாரித்தபோது, "அட போங்க... 'ரோலை'க் குறைத்தாலும் 'பே ரோலில்' கரெக்டாக இருந்தார்களல்லவா.... அதற்காக பரத் சந்தோஷப்பட வேண்டும். இன்றைய மார்க்கெட்டில் அவர் நிலை அதுதான்," என்கிறார் வானம் யூனிட் கலைஞர் ஒருவர்!
 

யோஹன் - அத்தியாயம் ஒன்று: விஜய் நடிக்கும் கவுதம் மேனன் படம் அறிவிப்பு!


நண்பன் படம் முடிந்ததும் விஜய் நடிக்கும் அடுத்த படம் அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்தப் படத்தை இயக்குபவர்... கவுதம் மேனன்! படத்துக்குப் பெயர் யோஹன்- அத்தியாயம் ஒன்று!!

இந்தப் படத்தை கவுதம் மேனனின் போட்டோன் கதாஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் தலைப்புக்குக் கீழே டேக்லைனாக 'மிஷன் -1 நியூயார்க் சிட்டி' என குறிப்பிட்டுள்ளனர். வரும் 2012 ஏப்ரலில் படப்பிடிப்பு துவங்கும் என்றும், 2013 பொங்கலுக்கு வெளியாகும் என்றும் கவுதம் மேனன் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இசைக்கு ஏ ஆர் ரஹ்மான், ஒளிப்பதிவுக்கு மனோஜ் பரமஹம்ஸா, பாடலுக்கு தாமரை, கலை இயக்கத்துக்கு ராஜீவன் என கவுதம் மேனனின் பரிவாரம் பட்டையைக் கிளப்ப தயாராகி வருகிறது.

பக்கா ஆக்ஷன் படமான யோஹா, முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாகிறது!
 

தனுஷ் நாயகி: ஸ்ருதிக்கு பதில் அமலா பால்?


ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்குநராக அறிமுகமாகும் புதிய படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க அமலா பாலுடன் பேச்சு நடக்கிறது.

கணவர் தனுஷை ஹீரோவாக வைத்து புதிய படம் இயக்குறார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா. இந்தப் படத்துக்கு இன்னும் தலைப்பிடப்படவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் படம் குறித்த செய்திகள் காற்றுவாக்கில் பரவி வருகின்றன.

இந்தப் படத்தில் முதலில் நடிப்பதாக இருந்தவர் கமல் மகள் ஸ்ருதி ஹாஸன்தான். அவர் தேதி கொடுத்ததை சில ஆங்கில பத்திரிகைகளுக்கு தெரிவித்துமிருந்தார் ஐஸ்வர்யா.

ஆனால் தெலுங்கில் நிறைய கமிட்மெண்டுகள் இருப்பதால் இப்போதைக்கு இந்தப் படத்தை ஒப்புக் கொள்ள முடியாது என இப்போது கூறிவிட்டாராம் ஸ்ருதி.

இதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் இப்போதைய சென்சேஷனான அமலா பாலிடம் ஐஸ்வர்யா பேசி வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அமலா பால் கூறுகையில், "தனுஷ் படத்துக்கு என்னிடம் பேசப்பட்டது உண்மைதான். ஆனால் இதற்கு மேல் எதுவும் சொல்வதற்கில்லை. உறுதியானதும் நானே பேசுவேன்," என்றார்.
 

அழகு, அழகு, சஞ்சய் தத் குழந்தைகள் கொள்ளை அழகு: ஷாருக் கான்


சஞ்சய் தத்தின் இரட்டைக் குழந்தைகள் தான் உலகிலேயே மிகவும் அழகானவர்கள் என்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஷாருக் கான், கௌரி தம்பதிக்கு ஆர்யன்(14) என்ற மகனும், சுஹானா (11) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் ஷாருக் சக நடிகர் சஞ்சயத் தத் வீட்டிற்கு விருந்திற்குச் சென்றுள்ளார்.

அங்கு சஞ்சய் தத், மான்யதா தம்பதியின் இரட்டைக் குழந்தைகளைப் பார்த்து பெரு மகிழ்ச்சி அடைந்தார்.

இதுகுறித்த ஷாருக்கின் டுவீட்:

சஞ்சு பாபாவுடன் இரவு விருந்து சாப்பிட்டேன். சஞ்சய், மான்யதா தம்பதியின் இரட்டைக் குழந்தைகள் தான் உலகிலேயே மிகவும் அழகானவர்கள். மாஷா அல்லாஹ் என்று கூறியுள்ளார்.

சஞ்சய் தத்தின் மனைவி மான்யதா கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இரட்டையர்களைப் பெற்றெடுத்தார். அதில் ஆண் குழந்தைக்கு ஷாஹ்ரான் என்றும், பெண் குழந்தைக்கு இக்ரா என்றும் பெயரிட்டுள்ளனர்.
 

நயன்தாரா இடம் எனக்கு வேண்டாம்! - மேக்னா


என்னைப் பார்க்கும் எல்லோரும் நான் நயன்தாரா மாதிரி இருப்பதாகக் கூறுகிறார்கள். நயன்தாரா இடம் உனக்குத்தான் என்கிறார்கள். எனக்கு நயன்தாரா இடம் வேண்டாம். எனக்கென தனி இடம் உள்ளது, என்கிறார் மேக்னா.

காதல் சொல்ல வந்தேன் மூலம் நல்ல நடிகையாக பெயர் வாங்கிய மேக்னா ராஜ், இப்போது 'உயர்திரு 420' படத்தில் நடிக்கிறார். மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் அறிமுகமாகியும் பெரிய வாய்ப்பு அமையாததில் வருத்தமா?

இந்தக் கேள்விக்கு மேக்னா பதிலளிக்கையில், "மலையாளத்தில் நல்ல படங்கள் கிடைத்தன. ஸ்டார் பட வாய்ப்புகளால் மிக்க மகிழ்ச்சி. அனைத்தும் சூப்பர் ஹிட். தமிழில் ஒரு நல்ல வாய்ப்பை எதிர்பார்த்திருந்த நேரத்தில்தான் 'உயர்திரு 420' பட வாய்ப்பு கிடைத்தது.

கவிஞர் சினேகன் ஹீரோவாக நடிக்கிறார். சமீபத்திய படங்களின் எந்த சாயலும் இல்லாத ஒரு திரைக்கதை. இனி நல்ல நல்ல வாய்ப்புகளை இந்தப் படம் ஏற்படுத்தித் தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்றார்.

அடுத்த நயன்தாரா நீங்கதானா?

"நான் நயன்தாரா போல் இருப்பதாக நிறைய பேர் சொல்லுகிறார்கள். மீடியாக்களும் என்னை அவருடன் ஒப்பிட்டு பேசுகின்றன. நயன்தாரா இடத்தை நீங்கள் பிடிப்பீர்களா? என்றெல்லாம் கேட்கிறார்கள். நயன்தாராவின் நடிப்பு எனக்கு பிடித்தமான ஒன்றுதான். ஆனால், எனக்கான இடம் அவருடையது அல்ல. எனக்கென தனி இடம் இருக்கிறது. அதற்கு என்னைத் தயார்ப்படுத்தி வருகிறேன். நயன்தாராவின் திருமணம் குறித்து கருத்து சொல்ல நான் விரும்பவில்லை. அது எனக்கு தேவையில்லாத விஷயமும் கூட,'' என்றார்.
 

சினிமா டிக்கெட் கட்டணம் குறையுமா? - இன்று தெரியும்!!


சென்னை: தமிழக திரையரங்குகளில் தாறுமாறாக வசூலிக்கப்படும் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும், குறிப்பாக இரண்டாம் கட்ட நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இன்று அவசர கூட்டம் கூட்டி முக்கிய முடிவை அறிவிக்க உள்ளனர் சங்க நிர்வாகிகள்.

சினிமா தியேட்டர்களில், டிக்கெட் கட்டணம் அதிகமாக இருக்கிறது என்று பொதுமக்கள் குறைப்பட்டு வருகிறார்கள். திருட்டு டிவிடியை ஒழிக்க அரசு முயன்றும் முடியாமல் போனதற்குக் காரணமே, அதற்கு பொதுமக்கள் மத்தியில் உள்ள அமோக ஆதரவுதான்.

பெரிய பட்ஜெட் படங்கள், மற்றும் பண்டிகை கால படங்கள் திரைக்கு வரும் போது, நகர்ப்புற தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை கணிசமாக உயர்த்தி விடுகிறார்கள் என்ற புகார் எழுந்துள்ளது.

இதனால் தியேட்டர்களுக்கு வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. வீடுகளிலேயே அமர்ந்து டிவிடிகளில் படம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ரூ 20க்கு டிவிடியை வாங்கி குடும்பத்தோடு இஷ்டப்பட்ட நேரத்தில் பார்ப்பதற்கு பழகிவிட்டார்கள் மக்கள்.

இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு எடுப்பதற்காக, தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் அவசர கூட்டம், சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

அதில், தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும், அப்படி குறைக்காத தியேட்டர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.

நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும்

இதேபோல் நடிகர்-நடிகைகளின் சம்பளத்தையும் குறைக்க வேண்டும் என்று இன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.

தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை குறைத்தால், நடிகர்-நடிகைகளின் சம்பளம் தானாகவே குறைந்துவிடும் என்று நம்புவதால், டிக்கெட் கட்டணத்தை குறைக்க முதலில் வற்புறுத்துவது என்ற முடிவுக்கு வினியோகஸ்தர்கள் வந்து இருக்கிறார்கள்.
 

ஹைதராபாதில் பிரமாண்ட அரங்குகள்... அக்டோபர் 3ல் ராணா ஷூட்டிங்: தயாராகிறார் ரஜினி!


ரஜினியின் உடல்நிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ராணா படப்பிடிப்பு வரும் அக்டோபர் 3-ம் தேதி மீண்டும் தொடங்குகிறது.

ரஜினிகாந்த் 3 வேடங்களில் நடிக்கும் படம் 'ராணா'. கடந்த ஏப்.29ம் தேதி இப்படத்தின் தொடக்க விழாவுடன் ஷூட்டிங் தொடங்கியது. அப்போது ரஜினிகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பது கண்டறியப்பட்டதால் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றார் ரஜினி. சிகிச்சை முடிந்து கடந்த 13ம் தேதி சென்னை திரும்பினார்.

டாக்டர்கள் அறிவுரைப்படி தனது போயஸ் தோட்ட இல்லத்தில் அவர் ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்நிலையில் 'ராணா' பட ஷூட்டிங் விரைவில் தொடங்குவது பற்றி ரஜினியும், இயக்குனர் கேஎஸ் ரவிகுமாரும் ஆலோசனை நடத்தினர். அக்டோபர் 3ம் தேதி முதல் ஷூட்டிங் தொடங்கி தொடர்ந்து 100 நாட்கள் இடைவிடாமல் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

ரஜினி பங்கேற்கும் காட்சிகள், அவ்வப்போது சில நாள் இடைவெளி விட்டு படமாக்கப்படும். இதற்காக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் பல லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டு வருகிறது. மன்னராக ரஜினி நடிக்கும் காட்சிகளுக்காக, பிரமாண்ட கப்பல் செட் ஒன்றும் அமைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.