கொரியன் சீரியல் சில வேற்றுமைகள் பல ஒற்றுமைகள்

சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு நேரம் மொத்தத் தாய்க்குலமும் சன் டிவியில் வரும் சீரியலே கதி என்று கிடந்தார்கள். மெல்ல அடுத்த தலைமுறை வரும்போது டப்பிங் சீரியல்கள் முக்கியத்துவம் பெற்றன.

தற்போது 21 ம் நூற்றாண்டு இளைஞிகள் வந்து இங்கிலீஷ் சீரியலை மூர் மார்கெட்டில் தேடி வாங்கிப் பார்த்து அதெல்லாம் மலையேறிப் போச்சு பாஸ் அண்ணா கொரியன் சீரியல்ஸ் இருக்கா இல்லையா வேற கடைக்கு போய் பாக்கலாம் அப்படி இல்லேன்னா நெட்ல டவுன்லோட் பண்ணிக்கலாம் என்று சொல்லித் தேடித் தேடி கடைகளில் கொரியன் சீரியலை வாங்குகின்றனர்.

What Korean dramas have in common?

இதெல்லாம் பரவா இல்லைங்க இப்போ காலேஜ்ல புதுசா சேரப் போற பொண்ணுங்களோட பேச ஆரம்பிச்சா அந்த சீரியல்ல வர கொரியன் செம அழகுடி சான்சே இல்ல என்று சகட்டுமேனிக்கு தமிழ் ஹீரோக்களை வாரிவிடுகிறார்கள். நம்ம பொண்ணுங்களுக்கு தான் யாராவது புதுசா எதுவும் செஞ்சிடக் கூடாதே.

இந்த சீரியல பாத்துட்டு அதே மாதிரி டிரஸ் எடுத்துப் போடுறது, நாய வளக்குறது இதெல்லாம் கூட நான் பொறுத்துக்குவேன் ஆனா அந்தக் குச்சிய வச்சி சாப்பிடறத தான் என்னால பொறுத்துக் கவே முடில குச்சி பேரு என்ன தெரியுமா சாப்ஸ்டிக்ஸ். இதெல்லாம்பத்தாதுன்னு புது யுகம் சேனல்ல கொரியன் சீரியல டப் பண்ணி போட்டு விட்டு மிச்சம் மீதி பாக்காம இருந்தவங்களும் இப்போ பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.

எல்லோருமே விழுந்து விழுந்து பாக்கற இந்த சீரியலோட எல்லா கதையும் கிட்டத் தட்ட ஒரே மாதிரிதான், இதுக்கே ஷாக் ஆனா எப்படி மனசத் தேத்திட்டு மேலே படிங்க உங்களுக்கே தெரியும்..பின்ன எத்தன நாளைக்கு தான் நம்ம ஊரு சீரியலையே கலாய்க்கிறது

ஒரு சேஞ்சுக்கு அடுத்த நாட்டு சீரியலையும் கலாய்ப்போம், என்னது நீங்க வரலையா சரி நானே பண்ணிடறேன்.

பணக்கார ஹீரோ

எல்லா கொரியன் சீரியல்லையும் ஹீரோ கண்டிப்பா பணக்காரரா இருப்பார். ஹீரோன்னா ஸ்கூல் தான் நீங்க எதுவும் பெரிய ஆக்சன் ஹீரோனு நெனைச் சுடாதிங்க.

மேரேஜ் பிக்ஸ் ஆகியிருக்கும்

ஹீரோவோட அம்மாவோ அல்லது அப்பாவோ தன் அந்தஸ்துக்கு ஏத்த மாதிரி பையனுக்கு கல்யாணம் பேசி முடிச்சிடுவாங்க நிறைய சீரியல்கள்ல அம்மாதான் இந்த வேலைய செய்வாங்க.

வறுமையில் வாடும் ஹீரோயின்

ஹீரோயின் பெரும்பாலும் வறுமையிலவாடுவாங்க அல்லது நடுத்தரக் குடும்பத்தினரா வருவாங்க, படிச்சிட்டே பார்ட் டைமா வேலை பார்ப்பாங்க கண்டிப்பா அது ஒரு ஹோட்டல் இல்லன்னா ஸ்நாக்ஸ் ஷாப்பா இருக்கும்.

காதல்

ஹீரோவுக்கு கண்டிப்பா ஹீரோயின் மேல காதல் வந்துடும் ஆனா அத வெளிக் காட்டாம அவங்களுக்கு உதவி செய்வாரு.

காதலை பிரித்தல்

ஹீரோவோட காதல தெரிஞ்சிகிட்ட ஹீரோவோட அம்மாவோ அல்லது அப்பாவோ ஆளுங்கள அனுப்பி ஹீரோயினோட கண்ணு முன்னாடியே அவரை இழுத்துட்டுப் போய்டுவாங்க, சரி நம்மளாலதான் இப்படின்னு இந்த லூசு ஹீரோயின்களும் ஹீரோவா விட்டு கண்காணாத தூரத்துக்கு பிரிஞ்சு போய்டுவாங்க.

ஆண் வேடம் போடும் ஹீரோயின்

முன்ன பின்ன நேரடியா பாக்காத ஹீரோவுக்காக ஹீரோயின் ஆண் மாதிரி மாறி அவரோட ஸ்கூல்க்கு வந்து படிப்பாங்க, அவர் கூடவே சுத்துவாங்க இத ஹீரோவைத் தவிர மத்த எல்லோரும் ஈசியா கண்டுபிடிச்சுடுவாங்க ஆனா கடைசிவரைக்கும் கூடவே சுத்திட்டு இருக்கற ஹீரோவுக்கு மட்டும் இது தெரியாது.

கண்டிப்பா ஒரு நாய் இருக்கும்

சீரியல்ல நல்லா கொழுகொழுன்னு ஒரு நாய் இருக்கும் இது எப்பவுமே ஹீரோயினோட சுத்தும் முடிஞ்சா அப்பப்போ ஹீரோவுக்கும் கம்பெனி கொடுக்கும் இது மேல படுத்து தான் ஹீரோயின் பெரும்பாலும் தூங்குவாங்க.

ஹீரோ சம்திங் ஸ்பெஷல்

ஹீரோ எதாவது ஒரு துறையில ரொம்ப பேமஸா இருப்பாரு நடிகரா, பாடகரா, விளையாட்டு வீரரா அப்படி எதுல இருந்தாலும் அதுல நம்பர் ஒண்ணா இருப்பாரு.

இன்னும் சொல்லலாம் ஆனா வேணாம்..அப்புறம் நான் ஊருக்குள்ள நடமாடணும்..

 

சோஷியல் மீடியாவில் ”பாசிட்டிவ்” விமர்சனங்களை அள்ளிக் குவிக்கும் “புறம்போக்கு”

சென்னை: தமிழில் சமீபத்தில் வெளியான புறம்போக்கு என்னும் பொதுவுடமை திரைப்படம் பல்வேறு வகையான கருத்துக்களை சமூக வலைதளங்களில் அள்ளிக் குவித்து வருகின்றது.

எஸ்.பி.ஜகன்நாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நாயர் நடித்த படம் புறம்போக்கு என்னும் பொதுவுடமை.

பல்வேறு சமூக பிரச்சனைகள் சார்ந்த களமாக எடுக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம்.

மக்களிடமிருந்து நேர்மறையான கமெண்ட்களே அதிகளவில் இப்படம் பற்றி வெளிவருகின்றன. டுவிட்டரிலும் பல்வேறு டுவிட்டுகள் இப்படம் பற்றிய விமர்சனங்களை வெளியிட்டுள்ளன.

"புறம்போக்கு படம் பார்த்தாச்சு... அருமையான படம். ஆர்யா அசத்தியிருக்கின்றார்கள்" என்று டுவிட்டியுள்ளார் சாந்தினி மதிவாணன் என்ற ரசிகை.

சித் என்பவரோ "புறம்போக்கு படம் கம்யூனிசம் கூறும் படம். படம் பார்க்க அருமை" என்றுள்ளார்.

"புறம்போக்கு மிகவும் சூப்பரான படம்.. நல்ல கதைக்கரு... டிக்கெட் வாங்கிய காசு தப்பித்தது... ஷாம், ஆர்யா, விஜய் சேதுபதி மிரட்டிட்டாங்க" என்று ஒருவர் டுவிட்டியுள்ளார்.

தினேஷ் குமார் என்பவரோ, "எனக்கு பல இடங்களில் புல்லரித்தது. முக்கியமாக ஷாமுக்கும், ஆர்யாவிற்கும் இடையிலான கடைசி பேச்சு அருமை. கண்டிப்பாக பார்க்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

 

நடிகை அனுஷ்காவிற்குத் விரைவில் டும்..டும்...டும்?

ஹைதராபாத்: நடிச்சது போதும் கல்யாணம் பண்ணிக்கம்மா என்று சொன்ன பெற்றோர்கள் தற்போது கல்யாணம் பண்ணிட்டே நடிம்மா அப்படி ஒரு மாப்பிளைய உனக்காக பாக்குறோம் என்று கெஞ்சவே திருமணத்திற்கு சம்மதித்து இருக்கிறார் நடிகை அனுஷ்கா.

ரெண்டு படத்தில் மாதவனின் ஜோடியாக தமிழில் அறிமுகமான நடிகை அனுஷ்கா அருந்ததி என்ற சரித்திரப் படத்தில் நடித்ததின் மூலம் வரலாற்றுப் படங்களா கூப்பிடு அனுஷ்காவை என்று சொல்லுமளவிற்கு தென்னிந்தியத் திரைப் படங்களில் பேரும் புகழும் பெற்றவர்.

Anushka is ready for marriage

உலக அளவில் எல்லோரின் கவனத்தையும் தொடர்ந்து ஈர்த்து வரும் பாகுபாலி படம் அனுஷ்காவை மையமாகக் கொண்டே எடுக்கப் பட்டு வருவது அனைவரும் அறிந்ததே

சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக படம் நீண்டு கொண்டே செல்கிறது எனவே இந்தப் படத்துடன் திருமணம் செய்து கொள், திருமணத்திற்கு பிறகும் உன் நடிப்பை தொடரலாம் என்று பெற்றோர்கள் கூற தற்போது திருமணத்திற்கு சம்மதித்து விட்டாராம் அனுஷ்கா.

மூன்று வருடங்களுக்கு மேலாக திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று வதந்திகள் வந்த போதெல்லாம் மறுத்துப் பேசியவர் தற்போது அப்படி எதுவும் கூறவில்லை எனவே விரைவில் அனுஷ்காவின் திருமணத்தை எதிர்பார்க்கலாம் என்று கும்மியடிக்கின்றன டோலிவுட் வட்டாரங்கள்.

மாப்பிள்ளை ரெடியாக இருக்கிறார், அனுஷ்காவின் சம்மதம் என்ற ஒற்றை வார்த்தைக்காகத் தான் காத்து இருக்கின்றனர் அவரது பெற்றோர்கள். அனுஷ்கா சம்மதம் என்றால் திருமணம் ரெடி.

மாப்பிள்ளை ராணிக்கேத்த ராஜாவாக இருப்பாரா...

 

இருவர் ஒன்றானால் பட ஜோடி நிஜத்திலும் ஒன்றானது

சென்னை: இருவர் ஒன்றானால் புதுமுகங்கள் நடித்து வெளிவர இருக்கும் இந்த படம் நடிகர் சூர்யாவின் மாஸ் படத்துடன் நேரடியாக மோதுகிறது.இப்போது விஷயம் அதுவல்ல படத்தில் காதலர்களாக நடித்த இந்த ஜோடி படம் முடிவதற்குள் திருமணமும் செய்து கொண்டதாம்.

நிஜ திருமணத்தை படம் பிடித்து கிளைமாக்ஸ் காட்சியில் சேர்த்து விட்டார்கள், நாயகன் பிரபு நாயகி கிருத்திகா மாலினி இருவரும் படத்தில் பல போராட்டங்களுக்குப் பின் ஒன்று சேர்வார்கள்.

Iruvaar Ondrannal hero heroine married in real life

நிஜத்திலும் இந்தஜோடி அப்படிதான் சேர்ந்திருக்கிறது பிரபுவுக்கு சொந்த ஊர் சேலம், கிருத்திகாவுக்கு மதுரை ... படிக்கும் போதே இருவரும் காதலித்து இருக்கிறார்கள். இதனைத் தெரிந்து கொண்ட இயக்குனர் படத்தில் இருவரையும் காதலிக்க விட்டு நிஜத்தில் திருமணமும்செய்து வைத்து விட்டார்.

தமிழ் சினிமாவில் இது ஒரு வித்தியாசமான முயற்சி நிஜக் காதலர்களையே படத்தில் நடிக்க வைத்ததால் படம் நன்றாக வந்து இருக்கிறது. இயக்குனர் அன்பு, தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் முருகதாசின் சீடர், அதான் வித்தியாசமா யோசிச்சு இருக்கிங்க.

கதைப்படி நாயகன் பிரபு தன்னைத் தேடி வரும் காதல்களை ஏற்றுக் கொள்ளாமல் தானே தேடிச் சென்று கிருத்திகாவை காதலிப்பாராம், நிஜத்திலும் இந்த மாதிரி செஞ்சீங்களா பிரபு?

தெரியாத ரெண்டு பேர காதலிக்க வைக்கிறத விட காதலர்களையே நடிக்க வச்ச உங்க ஐடியா சூப்பர் டேரக்டர்...

 

ஜஸ்பா படத்தில் போராடும் அம்மாவாக ஐஸ்வர்யா

மும்பை: குழந்தை பிறந்த பின்னர் சுமார் 5 வருடங்கள் கழித்து நடித்து வரும் ஜஸ்பா படத்தில் குழந்தையைத் தொலைத்து விட்டு போராடும் அம்மாவாக வருகிறார் நடிகை ஐஸ்வர்யாராய்.

ஜஸ்பா படத்தில் கதைப் படி இளம் வக்கீலாக வரும் ஐஸ்வர்யா இவரது குழந்தை ஒரு கட்டதில் காணாமல் போக குழந்தையைத் தேடி இவர் செல்லும் பாதையும் சந்திக்கும் போராட்டங்களும் தான் கதை.

Aishwarya Is Playing - Single Mother in Jazbaa

பெண் குழந்தையைக் கண்டுபிடிப்பது போல் செல்லும் இந்தக் கதை பெண்ணியத்தையும் அதன் சக்தியையும் விவரிக்கும் என்று கூறுகிறார்கள், படத்தின் முதல் பார்வை போஸ்டரில் சிட்டிஸ்கேப் பின்னணியில் ஐஸ்வர்யா இருப்பது போல வடிவமைக்கப் பட்டிருந்தது.

அதன் அர்த்தம் நகரங்களின் கோரப்பிடியில் இருந்து தனது மகளை மீட்கும் அடையாளம் போலத் தோன்றுகிறது, படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலர் கேன்ஸ் திரைப் பட விழாவில் வெளியிடப் பட்டு பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்குப் பின் மீண்டும் நடிக்க வரும் நடிகைகளுக்கு தற்போது எல்லா மொழிகளிலும் முக்கியதுவம் அளிக்கப் பட்டு கதைகள் உருவாக்கப் படுகிறது இந்திய சினிமா மாற்றங்களை எதிர்கொள்ள ஆரம்பித்து விட்டது போல,தமிழ்ல ஜோதிகா , மலையாளத்தில மஞ்சு ,கன்னடத்தில பிரியங்கா, இப்போ ஹிந்தியில ஐஸ்வர்யா ராய்.

நீங்க கலக்குங்க ஹீரோயின்ஸ்...

 

அஜீத்தின் அசலை பார்த்திருப்பீங்க, நடிகை மலாய்க்காவின் அசலை பார்த்திருக்கிறீங்களா?

மும்பை: பாலிவுட் நடிகை மலாய்க்கா அரோரா கான் தான் கலந்து கொண்ட டிவி நிகழ்ச்சி ஒன்றில் பார்க்க தன்னைப் போன்றே உள்ள பெண்ணை சந்தித்தார்.

பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தம்பி அர்பாஸ் கானின் மனைவி நடிகை மலாய்க்கா அரோரா. மலாய்க்கா பாலிவுட் படங்களில் குத்துப்பாட்டுக்கு ஆடுவதற்கு பெயர் பெற்றவர். குத்தாட்டமா கூப்பிடு மலாய்க்காவை என்று கூறும் அளவுக்கு பிரபலமானவர்.

Malaika Arora Khan finds her lookalike

மலாய்க்கா, பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார், இந்தி நடிகை கிரண் கேர் ஆகியோர் இந்தியா ஹேஸ் காட் டேலன்ட் என்ற நிகழ்ச்சியில் நடுவர்களாக உள்ளனர். கலர்ஸ் தொலைக்காட்சியில் வார இறுதி நாட்களில் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

கடந்த வார நிகழ்ச்சியின்போது மேடையில் பச்சை நிற உடையில் ஒரு பெண் நடனமாடினார். நடுவர் மலாய்க்கா தான் ஆடுகிறார் என்று பார்வையாளர்கள் நினைத்துவிட்டனர். அதன் பிறகு மலாய்க்கா மேடைக்கு வந்தபோது தான் மேடையில் ஆடிய பெண் வேறு யாரோ என்று தெரிய வந்தது.

பச்சை நிற ஆடையில் ஆடிய பெண் பார்ப்பதற்கு அச்சு அசலாக மலாய்க்கா போன்றே உள்ளார். பின்னர் மலாய்க்காவும், அந்த பெண்ணும் சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.

 

சமஸ்கிருத அனிமேஷன் படத்திற்கு இசையமைக்கும் இசைஞானி

சென்னை: 1000 படங்களுக்கு இசையமைத்து சாதனை புரிந்த நமது இசைஞானி இளையராஜா தற்போது சமஸ்கிருத மொழியில் உருவாகும் ஒரு அனிமேஷன் படத்திற்கு இசையமைக்கிறார்.படத்தின் பெயர் "புண்யகோடி".... விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும்இடையே உள்ள சிக்கல்களை இந்தப் படம் பேசவிருக்கிறது.

படத்தின் இயக்குனர் ரவிசங்கர் இந்தப் படத்தை ஏன் சமஸ்கிருத மொழியில் எடுக்க வேண்டும் என்ற கேள்விக்கு நம் இந்திய மொழி மற்றும் பண்பாடு தற்போது மாறிக் கொண்டே செல்கிறது. தற்போது நாம் பேசும் மொழிகளில் அந்நிய மொழிகளின் கலப்பு அதிகமாக உள்ளது.நம் இந்திய பண்பாடு மற்றும் பாரம்பரியத்துக்கு என்னால் முடிந்த ஒரு காணிக்கையாக இந்த படத்தை அர்ப்பணிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Ilaiyaraja  To Score The Music Of First-Ever Sanskrit Animation Film

படத்தின் கதை என்ன

காரநாடு என்ற கிராமத்தில் உண்மையை மட்டும் பேசும் ஒரு பசுமாடு உள்ளது. ஒருநாள் அது ஒரு புலியிடம் மாட்டிக் கொள்ளும். மிகுந்த பசியில் இருக்கும் புலி மாட்டை அடித்துச் சாப்பிட விரும்பும். அப்போது மாடானது எனது கன்று வீட்டில் பசியோடு எனக்காக காத்துக் கொண்டு இருக்கும் ..நான் சென்று அதற்கு பால் கொடுத்துவிட்டு வருகிறேன் என்று கூற புலியும் அதற்கு சம்மதிக்கிறது.

உயிரா அல்லது நேர்மையா

வீட்டிற்கு சென்று பாலைக் கொடுத்து விட்டு அப்பாடா தப்பித்தோம் என்று பசுமாடு நினைக்கும். ஆனால் அதன் நேர்மை மனசாட்சியை உறுத்த மீண்டும் அந்தப் புலியை நோக்கி செல்கிறது பசு... முடிவு என்ன என்பதை படத்தில் காணலாம்.

அனிமேஷன் படங்கள் குறைவது ஏன்

நமது நாட்டில் அனிமேஷன் படங்கள் ஏன் தரமாக வருவதில்லை என்றால் படம் எடுப்பதற்கு லட்சக் கணக்கான படைப்பாளிகள் இருக்கிறார்கள் ஆனால் பணம் செலவிட யாரும் தயாராக இல்லை இதுதான் உண்மை.

எல்லோரும் தயாரிப்பாளரே

இயக்குனர் ரவிசங்கர் கூறும் பொழுது இந்தப் படத்தின் கதையை நான் எழுதி முடித்து விட்டேன்.இந்தக் கதையை படமாக்குவதற்கு நிறைய ரசிகர்கள்ஆதரவு அளித்திருக்கிறார்கள் ..ஆனால் பணம் இல்லாததால் படம் தடைபடுகிறது.இந்தப் படத்திற்கு யார் வேண்டுமானாலும் பணம்
கொடுத்து உதவலாம் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இசைக்கு காப்பிரைட் படத்திற்கு அல்ல

படத்தின் உரிமையை காப்பிரைட் பண்ண நான் விரும்பவில்லை , படத்தின் இசையை காப்பி ரைட் பண்ணவிருக்கிறேன் ஏனெனில் அது பெருமைமிக்க நமது இசைஞானியின் படைப்பு என்பதால் என்று இசைஞானியை புகழ்ந்து தள்ளும் ரவிசங்கர் 2016 ம் ஆண்டில்இந்தப் படத்தை வெளியிட உள்ளார்.

மொழியானது ஒருபோதும் இசைக்கு தடையாக இருப்பதில்லை...

 

காதலுக்காக காவல் நிலையம் சென்ற இயக்குனர்

சென்னை: புதுமுகங்கள் நடிப்பில் மதுரை மாவேந்தர்கள் என்ற படத்தை எடுத்து வருகிறார் இயக்குனர் விஜய் கண்ணன். ஜனவரியில் பாடல்களை வெளியிட்டு, பிப்ரவரி மாதம் படத்தை வெளியிடுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

என்ன காரணத்தினாலோ பாடல்களை கூட இதுவரை நமது காதுகளில் காட்ட வில்லை. ஒளிப்பதிவாளர் குமார் மதுரை மாவேந்தர்கள் படத்தின் ஒளிப்பதிவு எனது வாழ்க்கையிலேயே சவாலான ஒன்று என்று கூறியிருக்கிறார்..படம் வரட்டும் பாக்கலாம்..படத்தின் முதல் பாதி மதுரையிலும் இரண்டாம் பாதி சென்னையிலும் எடுக்கப் பட்டிருக்கிறது.

MADURAI MAA VENDHARGAL NEARING COMPLETION

நாயகன் அஜய் இதில் ஆட்டோ டிரைவராக நடித்திருக்கிறார், நாயகி அர்ச்சனாவுக்கு வேலைக்கு செல்லும் பெண் வேடம். காமெடி மற்றும் காதலை மையமாக வைத்து படம் எடுக்கப் பட்டிருக்கிறதாம்.

நாயகி அர்ச்சனாவை வைத்து கோவளம் கடற்கரையில் நடுக் கடலில் ஒரு பாடல் காட்சியை எடுத்துக் கொண்டிருக்கும் போது போட் உடைந்து நாயகிக்கு விபத்து ஏற்பட்டுள்ளது, இருந்தும் பொருட்படுத்தாமல் காட்சிகளில் நடித்து கொடுத்திருக்கிறார்.

படத்தில் சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது அதாவது துணை நடிகர்களாக வந்த ஒரு நடிகரும், நடிகையும் காதலித்து ஊரை விட்டு ஓடிவிட ஒருநாள் முழுவதும் காவல் நிலையத்தில் இருந்து சத்தியம்மா இதுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொல்லிட்டு வந்திருக்காரு இயக்குனர் விஜய்.

நடிகர் அப்புக்குட்டி, நடிகை தேவதர்ஷினி, பூவிலங்கு மோகன் மற்றும் காதல் சுகுமார் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். விரைவில் வெளிவர இருக்கும் மதுரை மாவேந்தர்கள் படத்திற்கு இசையமைத் திருப்பவர் பிஜு ஜேக்கப்.

படத்தில் இன்னும் ஒரு பாடல் மட்டும் எடுக்கப்பட உள்ளது அதை முடித்துவிட்டு படத்தை ஜூன் மாதம் திரைக்கு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம் என்று படத்தின் இயக்குனர் விஜய் கூறியிருக்கிறார்.

 

பாலிவுட் இதழில் ‘கண்ணைக் கூசும்’ ஆபாச போஸ்... சன்னிலியோன், கூகுள் சிஇஓ மீது வழக்குப் பதிவு!

அஜ்மீர்: பாலிவுட் இதழில் ஆபாசமாக போஸ் கொடுத்ததாக சன்னி லியோன் மீது ராஜஸ்தான் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.

புகழ் பெற்ற நீலப்பட நடிகையாக இருந்த சன்னி லியோன், தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது கவர்ச்சியான புகைப்படங்கள் சில பாலிவுட் இதழ் ஒன்றில் வெளியாகி இருந்தது.

Police File FIR Against Sunny Leone, Google In Rajasthan For Obscenity

இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை சேர்ந்தவர் அரிஞெய் ஜெயின் என்பவர், அஜ்மீர் கொதவாலி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

பொழுதுபொக்கு அம்சங்கள் இருக்க வேண்டிய பாலிவுட் இதழில் சன்னி லியோனின் ஆபாச படங்கள் இடம் பெற்று உள்ளது. அந்த இதழின் இணையதளத்தை ஓப்பன் செய்த போதும் அதில் சன்னி லியோனின் ஆபாச படங்கள் அதிக அளவு இடம் பெற்று உள்ளது' என குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், ஆபாச புத்தகம் விற்பனை, அருவருப்பாக நடந்து கொள்ளுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சன்னி லியோன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் கூகுள் தலைமை செயல் அதிகாரி லேரி பேஜ் மீதும், சம்பந்தப்பட்ட பாலிவுட் இதழ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

 

ஆண் குழந்தைக்கு அம்மாவானார் சமீரா ரெட்டி

சென்னை: வாரணம் ஆயிரம் படப் புகழ் சமீரா ரெட்டி நேற்று அழகான ஆண் குழந்தையை மருத்துவமனையில் பெற்றெடுத்தார். தமிழில் நடிகர் சூர்யாவின் வாரணம் ஆயிரம் படத்தில் இயக்குனர் கௌதம் மேனனால் அறிமுகப் படுத்தப் பட்டவர் நடிகை சமீரா ரெட்டி.

வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுடன் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதக் கொள்ளை கொண்ட இவர் தொடர்ந்து கௌதம் மேனனின் நடுநிசி நாய்கள் என்ற திகில் படத்தில் அறிமுக நாயகனுக்கு ஜோடியாக நடித்தார்.

Sameera Reddy-Akshai Varde Blessed with Baby Boy

தமிழில் பெரிதாக ஒரு ரவுண்டு வருவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப் பட்ட சமீரா தொடர்ந்து நடித்த படங்கலான அசல், வெடி, வேட்டை போன்ற படங்கள் வியாபார ரீதியாக தோல்வி அடைந்ததால் நடிப்பதை நிறுத்திவிட்டு கடந்த வருடம் அக்சய் ரெட்டிஎன்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

Sameera Reddy-Akshai Varde Blessed with Baby Boy

2002 ம் ஆண்டு மைனே கில் துஜ்கோ தியா என்ற ஹிந்தி படத்தில் அறிமுகமான சமீரா 12 வருடங்களில் தமிழ்,தெலுங்கு,கன்னடம், மலையாளம், பெங்காலி மற்றும் ஹிந்தி மொழிகளில் இதுவரை சுமார் 30 க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார்.

'Sameera Reddy-Akshai Varde Blessed with Baby Boy

34 வயதான சமீரா அழகான ஆண் குழந்தையை நேற்று மருத்துவமனையில் பெற்றெடுத்தார், தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீரா இப்போ ஹேப்பி அண்ணாச்சி...

 

இந்த ரிப்பன் பந்தா தாங்க முடியலடா சாமி: புலம்பும் தயாரிப்பாளர்கள்

சென்னை: ரிப்பன் நடிகையின் அலப்பறை தாங்க முடியவில்லை என்று தயாரிப்பாளர் புலம்பி வருகிறார்கள்.

சங்கம் வைத்த படம் மூலம் பிரபலமானவர் ஆந்திராவில் இருந்து வந்த ரிப்பன் நடிகை. அந்த படம் ஓடியதால் அவருக்கு மவுசு ஏற்பட்டது. அதனால் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் வெளியான அவரும், சங்கத் தலைவரும் சேர்ந்து நடித்த படம் ஹிட்டானது.

A young actress throws tantrums

இந்நிலையில் நடிகை படப்பிடிப்பு தளத்தில் ஓவர் பந்தா செய்கிறாராம். நான் எல்லாம் பெரிய நடிகையாக்கும், எனக்கு தனி கேரவன் தான் வேண்டும் என்று அடம்பிடிக்கிறாராம். கேரவனோடு நிறுத்திக் கொள்வது இல்லை. நான் தங்கினால் நகரில் இருக்கும் பெரிய ஸ்டார் ஹோட்டலில் மட்டுமே தங்குவேன் என்று கூறி தயாரிப்பாளர்களின் பாக்கெட்டில் ஓட்டை போடுகிறாராம்.

அது போதாது என்று தனக்கு உதவிக்கு என 6, 7 பேரை வைத்துள்ளாராம். அவர்களுக்கும் சேர்த்து சம்பளம் கொடுக்குமாறு தயாரிப்பாளர்களிடம் கூறுகிறாராம் நடிகை. வேறு வழி இல்லாமல் தயாரிப்பாளர்களும் அவர் கையை காட்டும் நபர்களுக்கும் சம்பளம் தருகிறார்களாம்.

வளர்ந்து வரும் நடிகையாக இருக்கையிலேயே இத்தனை பந்தாவா, வளர்ந்தாப்புல தான் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

 

சின்னத்திரை த்ரிஷா சொல்றாங்க…கேட்டுக்கங்க!

சூர்ய தொலைக்காட்சியின் இசைச்சேனல் தொகுப்பாளினிக்கு சின்னத்திரை திரிஷா என்று செல்லப்பெயர் சூட்டியுள்ளனர் ரசிகர்கள்.

சேனலைத்தாண்டி இப்போதான் வெளி உலக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இதன் மூலம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வருகிறதாம். ஆனாலும் ஒரு திரிஷாவே போதும் நான் வேறு எதுக்கு நாசூக்காக மறுத்து விடுகிறாராம் அந்த தொகுப்பாளினி.

இப்படி சொன்னவங்க எத்தனை பேரு சினிமாவுக்கு வந்திருக்காங்கன்னு நம்ம ரசிகர்களுக்கு தெரியாதா என்ன?

நடிக்க வந்த பத்தாப்பு பாப்பா

அந்த குடும்ப சீரியல் சூட்டிங் பார்க்க வந்த பள்ளி மாணவிக்கு லக்கி ப்ரைஸ் ஆக தற்போது புதிய சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. படிக்கிறது பத்தாப்பு என்றாலும் எட்டாப்பு மாணவியாக மாடர்ன் டிரஸ்சில் கலக்கி வருகிறாராம். இப்போது படிப்போடு நடிப்பையும் கன்டினியூ செய்கிறாராம்.