2014-ன் முதல் வெள்ளிக் கிழமை.. ஆறு சிறு பட்ஜெட் படங்கள் ரிலீஸ்!

புத்தாண்டின் முதல் வெள்ளிக்கிழமை இன்று. ஆறு சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாகியுள்ளன.

இவற்றுடன் மூன்று டப்பிங் படங்களும் வெளியாகின்றன.

இன்று வெளியாகியுள்ள நேரடி தமிழ்ப் படங்கள்:

அகடம், அத்திமலை முத்துப்பாண்டி, என் காதல் புதிது, கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு, முன் அந்தி சாரல், நம்ம கிராமம் ஆகியவை.

2014-ன் முதல் வெள்ளிக் கிழமை.. ஆறு சிறு பட்ஜெட் படங்கள் ரிலீஸ்!

இந்தப் படங்கள் அனைத்தும் சிறுமுதலீட்டில் எடுக்கப்பட்டவை. அதிகமாக வெளியில் தெரியாதவை.

இன்று வெளியான டப்பிங் படங்கள்:

ஜேசி டானியல், பெஜவாடா, கும்கி வீரன்.

ஷோலே 3டி பதிப்பும் இன்று வெளியாகியுள்ளது.

அடுத்த வாரம் பொங்கல் ஸ்பெஷல் படங்களாக ஜில்லாவும் வீரமும் வெளியாவதால், அந்த இடைவெளியை நிரப்ப இருக்கிற சின்ன படங்களை வெளியிட்டுள்ளனர்.

 

தெலுங்கில் 'வீருடொக்கடே' வாக வெளியாகும் வீரம்!

தெலுங்கில் 'வீருடொக்கடே' வாக வெளியாகும் வீரம்!  

தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பழம்பெரும் நிறுவனமான விஜயா புரொடக்ஷனின் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

இந்நிலையில் வீரம் படம், தெலுங்கில் வீருடொக்கடே என்ற பெயரில் டப் செய்யப்படுகிறது.

தெலுங்குப் பதிப்புக்கான இசையை ஜனவரி முதல் வாரத்தில் வெளியிட்டு கடைசி வாரத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கெனவே ஆரம்பம் படம் தெலுங்கில் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

 

போலி ஃபேஸ்புக்: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரோட்டா சூரி புகார்

சென்னை: தன்னுடைய பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு தொடங்கி விஷமிகள் சிலர் தன் பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காமெடி நடிகர் பரோட்டா சூரி புகார் அளித்துள்ளார்.

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமாகி பல படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்து வருபவர் பரோட்டா சூரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று ஒரு பரபரப்பான புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

போலி ஃபேஸ்புக்: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரோட்டா சூரி புகார்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும்நான் பொதுமக்கள் மத்தியிலும் - ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த மரியாதையுடன் விளங்கி வருகிறேன்.

பொது விவகாரங்களில் தலையிடுவதோ அல்லது எதைப் பற்றியும் கருத்து சொல்வதோ கிடையாது. ஆனால் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் பற்றி அவதூறாக பேசியிருப்பதாக கூறி சில பத்திரிகையாளர்கள் என்னிடம் கருத்து கேட்டார்கள்.

பதறிப்போன நான் அது பற்றி விசாரித்த போது எனது பெயரில் விஷமிகள் சிலர் ‘ஃபேஸ் புக்' கணக்கு ஆரம்பித்து அவதூறு கருத்துக்களை பரப்பி வருவது தெரிய வந்தது.

டுவிட்டர், ஃபேஸ்புக்கில் பங்கேற்கும் அளவுக்கு நான் படித்தவன் இல்லை. ஆனால் எனது பெயரில் 3 ஃபேஸ்புக் கணக்குகள் தொடங்கி எனக்கு எதிரான மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளனர். எனவே, எனது பெயரிலான ஃபேஸ்புக் கணக்குகளை முடக்கி வைக்கவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

வீரம் படம் ரஜினியின் முரட்டுக்காளை ரீமேக்கா?- இயக்குநர் விளக்கம்

சென்னை: அஜீத் நடித்துள்ள வீரம் படம் ரஜினியின் முரட்டுக்காளை படத்தின் தழுவல் அல்ல என்று படத்தின் இயக்குநர் சிவா தெரிவித்தார்.

அஜீத், தமன்னா, விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் வீரம். விஜயா நிறுவனம் நடித்துள்ள இந்தப் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது.

இந்தப் படம் கிராமத்து பின்னணியில், அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் போஸ்டர்கள், ட்ரைலர் பார்த்த பிறகு, இது ரஜினி நடித்த முரட்டுக்காளை படத்தின் ரீமேக்காக இருக்கும் என்ற பேச்சு கிளம்பிவிட்டது.

வீரம் படம் ரஜினியின் முரட்டுக்காளை ரீமேக்கா?- இயக்குநர் விளக்கம்

(வீரம் படங்கள்)

நேற்று நடந்த வீரம் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து இயக்குநர் சிவாவிடம் கேட்டபோது, "இந்தப் படம் அண்ணன் தம்பி பாசத்தை மையமாகக் கொண்டது. ஆனால் முரட்டுக்காளையின் ரீமேக் அல்ல.

அண்ணன் - தம்பிகளின் கதை என்பதால், அப்படி ஒரு சந்தேகம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் எந்த படத்தின் சாயலும் இதில் இருக்காது.

மலையாளப் படமான வெள்ளியேட்டன் படத்தின் தழுவல் என்று கூறப்படுவதும் தவறான தகவல். 'வீரம்,' நேரடி தமிழ் படம்," என்றார்.

 

'வீரம் படத்தில் தமன்னாவுக்கு முக்கியத்துவம் இல்லையாமே!'

வீரம் படத்தில் கதாநாயகியான தமன்னாவுக்கு போதிய முக்கியத்துவம் இல்லை என்ற குற்றச்சாட்டை மறுத்தார் இயக்குநர் சிவா.

நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், அஜீத்குமாருடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து இயக்குநர் சிவா கூறுகையில், "அஜீத்துடன் பணியாற்றியது ஒரு சந்தோஷமான அனுபவம். அஜீத் துணிச்சல் மிகுந்தவர் என்பது நிறைய பேருக்கு தெரியும்.

'வீரம் படத்தில் தமன்னாவுக்கு முக்கியத்துவம் இல்லையாமே!'

இந்தப் படத்தில் இடம்பெறும் பயங்கரமான ஒரு ரயில் சண்டை காட்சியில், 'டூப்' நடிகரைப் பயன்படுத்தலாம் என்று நானும், ஸ்டண்ட் மாஸ்டரும் சொன்னோம். அஜீத் ஏற்கவில்லை. அவருக்கு நடப்பது எனக்கு நடக்கட்டும், என்று துணிச்சலுடன் அந்த காட்சியில் நடித்தார்.

தமன்னா

தமன்னாவுக்கு இந்த படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று கூறுவதில் உண்மையில்லை.

'வீரம் படத்தில் தமன்னாவுக்கு முக்கியத்துவம் இல்லையாமே!'

இதுவரை தமன்னா நடித்த படங்களில் இல்லாத அளவுக்கு, 'வீரம்' படத்தில் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதை தமன்னாவே

என்னிடம் தெரிவித்தார். ''இந்த படம் எனக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.

 

கல்வி வளர்ச்சியை வலியுறுத்தி அர்ஜூன் இயக்கும் ஜெய்ஹிந்த் 2!

கல்வி வளர்ச்சிதான் ஒரு நாட்டை வல்லரசாக்கும் என்ற கருத்தை வலியுறுத்தி தனது ஜெய்ஹிந்த் 2 படத்தை எடுக்கிறார் அர்ஜூன்.

ஸ்ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக அர்ஜுன் எழுதி, இயக்கி, தயாரித்து நடிக்கும் படம் ஜெய்ஹிந்த் -2. கதாநாயகியாக சுர்வீன் சாவ்லா நடிக்கிறார் .

கல்வி வளர்ச்சியை வலியுறுத்தி அர்ஜூன் இயக்கும் ஜெய்ஹிந்த் 2!

புதுமுகமாக சிம்ரன் கபூர் என்ற முன்பை நடிகை ஒருவரும் அறிமுகமாகிறார். மற்றும் ராகுல்தேவ் , பிரம்மானந்தம், ரவிகாலே, அதுல் மாதூர், மயில்சாமி, மனோபாலா, வினய்பிரசாத், நரசிம்ம ராஜு, கெளதம் சுந்தர்ராஜன், பரத்குமார், அமித் திவாரி, பேபி யுனிதா ஆகியோர் நடிக்கிறார்கள்.

எச் சி வேணுகோபால் ஒளிப்பதிவு செய்கிறார். அர்ஜூன் ஜெனியா இசை அமைக்கிறார். அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதுகிறார்.

கல்வி வளர்ச்சியை வலியுறுத்தி அர்ஜூன் இயக்கும் ஜெய்ஹிந்த் 2!

அர்ஜூன் மகள்கள் ஐஸ்வர்யா, அஞ்சனா இணைந்து தயாரிக்கின்றனர். கதை, திரைக்கதை, தயாரிப்பு, இயக்கம் - அர்ஜுன்.

படம் பற்றி அர்ஜுன் என்ன சொல்கிறார் என்று கேட்டோம்...

"தமிழ், கன்னடம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் இதை உருவாக்குகிறேன். 80 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்தது விட்டது.

கல்வி வளர்ச்சியை வலியுறுத்தி அர்ஜூன் இயக்கும் ஜெய்ஹிந்த் 2!

சமீபத்தில் பாங்காக்கில் ஒரு சண்டை காட்சியை படமாக்கினோம். ராணுவம் சம்மந்தப்பட்ட இடம் அது. சுமார்பத்து ஏக்கர் அந்த இடம் முழுக்க உபயோகம் இல்லாத பிளைட்கள், படகுகள், கார்கள், என குவிந்து கிடந்தது. அங்கே அமெரிக்க ஸ்டன்ட் கலைஞர்களுடன் மோதும் காட்சிகள் பத்து நாட்கள் படமானது.

இது என் இயக்கத்தில் ஒரு லட்சியப் படம் என்றே சொல்லலாம். ஒரு நாட்டின் வளர்ச்சி கல்வியை பொறுத்தே அமைகிறது என்கிற கருத்தை வலியுறுத்தும் படமாக ஜெய்ஹிந்த் -2 இருக்கும். அடுத்து மும்பையில் 20 நாட்களும் லண்டனில் 20 நாட்களும் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

கல்வி வளர்ச்சியை வலியுறுத்தி அர்ஜூன் இயக்கும் ஜெய்ஹிந்த் 2!

சென்னையில் 20 நாட்கள் படப்பிடிப்புடன் படம் முடிந்து விடும்," என்கிறார் அர்ஜுன்.

 

ஜில்லாவில் 3 இடத்தில் கத்தரி போட்ட சென்சார் போர்டு

சென்னை: விஜய்யின் ஜில்லா படத்தை பார்த்த சென்சார் போர்டு 3 இடங்களில் கத்தரி போட்டுள்ளது.

பொங்கல் விருந்தாக வரும் விஜய்யின் ஜில்லா படம் சென்சார் போர்டுக்கு போட்டுக் காட்டப்பட்டது. படத்தை பார்த்த போர்டு உறுப்பினர்கள் 3 இடங்களில் கத்தரி போட வேண்டும் என்றனர்.

ஜில்லாவில் 3 இடத்தில் கத்தரி போட்ட சென்சார் போர்டு

இதற்கு தயாரிப்பாளரும், இயக்குனரும் ஒப்புக் கொண்ட பிறகே படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டது. படத்தில் வரும் ஆக்ஷன் காட்சிகளில் வன்முறை அதிகம் உள்ள இரண்டு காட்சிகளுக்கு கத்தரி போடப்பட்டுள்ளது. மேலும் மதுரை பக்கத்து கெட்ட வார்த்தை வரும் ஒரு காட்சிக்கும் கத்தரி போடப்பட்டுள்ளது.

ஜில்லாவில் 3 இடத்தில் கத்தரி போட்ட சென்சார் போர்டு

ஜில்லா தமிழகம் தவிர கேரளாவிலும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் படத்தை மோகன்லால் வெளியிடுகிறார்.