நீத்துவுடன் குத்துப் பாட்டு - சோகத்தில் அமீர்


Neetu Chandra and Ameer
நீத்து சந்திராவுடன் சேர்ந்து ஆடியுள்ள குத்துப் பாட்டுக்காக பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளாராம் அமீர். மெளனம் பேசியதே முதல் பருத்தி வீரன் வரை இயக்குநராக கலக்கிக் கொண்டிருந்த அமீர் பின்னர் நடிகராகவும் அவதாரம் எடுத்தார். இப்போது ஒத்தப் பாட்டுக்கு, நீத்து சந்திராவுடன் இணைந்து செமத்தியான குத்தாட்டம் போட்டுள்ளார் யுத்தம் செய் படத்துக்காக.
ஆனால் அந்தப் பாட்டுக்கு ஆடியதற்காக தற்போது வருத்தத்தில் உள்ளாராம் அமீர்.
மிஷ்கின் இயக்கி, சேரன் நாயகனாக நடித்துள்ள படம்தான் யுத்தம் செய். இதில் ஒரு குத்துப் பாட்டை வைத்துள்ளார் மிஷ்கின். ஏற்கனவே இவர் சித்திரம் பேசுதடி படத்தில் வைத்த வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் குத்துப் பாட்டு இன்று வரை பட்டி தொட்டியெங்கும் பேவரைட் பாட்டாக உள்ளது. அதேபோல கத்தாழைக் கண்ணாலே பாடலும் சூப்பர் ஹிட் ஆனது.
அந்தவரிசையில் யுத்தம் செய் படத்தில் இவர் வைத்துள்ள அமீர்-நீத்து சந்திரா ஆடியுள்ள குத்துப் பாட்டும் பிரபலமாகும் என்ற நம்பிக்கையில் உள்ளார் மிஷ்கின். ஆனால் அமீர்தான் சோகமாக உள்ளாராம்.
ஏன் இந்த சோகம்…?
மிஷ்கினும், சேரனும் எனது நண்பர்கள். அவர்கள் வற்புறுத்திக் கேட்டதால்தான் இப்பாடலுக்கு ஆடினேன். ஆனால் இதுபோன்ற பாடல்களுக்கு ஆடுவதில் எனக்கு உண்மையில் இஷ்டமே இல்லை. எனவே இனிமேல் இதுபோல ஆட மாட்டேன்.
அது மட்டுமல்ல படம் வெளியாகும் போது இந்தப் பாடலைப் பார்க்கவும் மாட்டேன் என்கிறார் மிதிக்கக் கூடாததை மிதித்து விட்டது போல வெறுப்புடன்.
 

சித்து ப்ளஸ்டூ தாமதம் ஏன்? – பாக்யராஜ் தந்த விளக்கம்


K Bagyaraj
நேரம் சரியில்லாவிட்டால் என்ன செய்தாலும் சரியாக வராது. எனது புதிய படமான சித்து ப்ளஸ் டூவும் அதனால்தான் தாமதமாகிவிட்டது போலிருக்கிறது, என்றார் இயக்குநர் கே பாக்யராஜ். மகன் சாந்தனுவை வைத்து பாக்யராஜ் இயக்கியுள்ள புதிய படம் சித்து பிளஸ்-2. நாயகியாக சாந்தினி நடித்துள்ளார். இந்த படம் குறித்து பாக்யராஜ் நேற்று நிருபர்களிடம் கூறியது:
பொதுவாக நான் படம் ஆரம்பிப்பதை பெரிதாக விளம்பரப்படுத்தியதில்லை. முடித்த பிறகுதான் வெளியில் தெரியும். இத்தனை வருடமும் அப்படித்தான் நடந்தது. ஆனால் இந்தப் படம் அதற்கு விதிவிலக்காகிவிட்டது.
சித்து பட வேலைகள் திட்டமிட்டபடி நடந்தன. ஆனாலும் தாமதமாகி விட்டது. இதை சொல்லும் போது எனக்கு பழைய நினைவுகள் வருகின்றன.
16 வயதினிலே படப்பிடிப்பின் போது பட வேலைகள் முடிந்து எங்கள் இயக்குனரும் இதர தொழில் நுட்ப கலைஞர்களும் சென்னைக்கு திரும்பினோம். வழியில் வேன் ரோட்டை விட்டு இறங்கி விபத்துக்குள்ளாகிவிட்டது. யாருக்கும் காயம் இல்லை. அதிலிருந்து மீண்டு சென்னை வந்து சேர்ந்த போது டயர் கழன்று ஓடியது. எல்லோரும் தப்பினோம். எங்கள் வண்டியில் இருந்து இறங்கி போன அப்துல்லா என்பவர் மட்டும் இன்னொரு விபத்தில் சிக்கி காயம் பட்டார். அவரை துரத்திய விதிதான் எங்களை பாடாய் படுத்தியது போலிருக்கிறது.
அது போலத்தான் இந்த படத்துக்கும் சில தாமதங்கள் எற்பட்டது. 16 வயதினிலே தடைகளை மீறி ஜெயித்தது போல் இப்படமும் பெரும் வெற்றி பெறும்.
முதல் படம் செய்த போது கூட நான் பயந்ததில்லை. இந்த படம் தாமதம் ஆனதால் லேசாக பயம் வருகிறது.
பொதுவாக என் படங்களில் தமிழ் பேச தெரிந்தவர்களைத்தான் கதாநாயகியாக்குவேன். என்னுடன் நடித்த ஊர்வசி, சரிதா, ஷோபனா போன்றோருக்கு தமிழ் தெரிந்ததால் சிறப்பாக பணியாற்ற முடிந்தது. அது போல் சித்து படத்தில் நடிக்கும் நாயகி சாந்தினிக்கும் தமிழில் பேசத் தெரியும் சிறப்பாக நடித்துள்ளார். ராஜேஷ், கஞ்சா கருப்பு, போன்றோரும் நடித்துள்ளனர். மகன், தந்தை சென்டி மெண்ட், காதல், போன்ற அம்சங்கள் இதில் இருக்கும்.
இது இளைஞர்களுக்கான படம் மட்டுமல்ல, இளைஞர்களுடன் குடும்பத்தினரும் தைரியமாக பார்க்கக்கூடிய நல்ல படம்,
 

வார்த்தைகள் புரியாததற்கு பாடகர்களைக் குறை சொல்லாதீர்கள்!-பி.சுசீலா


P Suseela
சென்னை: புதிய பாடல்களில் வார்த்தைகள் புரியாமல் போவதற்குக் காரணம் இசையமைப்பாளர்களே. பாடகர்களைக் குறை சொல்லாதீர்கள், என்றார் பிரபல பாடகி பி சுசீலா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட பல மொழிகளில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடி சாதனை புரிந்தவர், பி.சுசீலா. இன்றும் தன் குரல் வளத்தை பேணி வருகிறார். தற்போது தனது பெயரில் ஒரு அறக்கட்டளையை உருவாக்கி, அதன் மூலம் கலைத்திறன் மிக்கவர்களையும், சாதனையாளர்களையும் ஊக்குவிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இந்த அறக்கட்டளை சார்பில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி, அதில் பின்னணி பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன், பி.பி.சீனிவாஸ், கே.ஜே.ஜேசுதாஸ் ஆகியோரை கவுரவிக்கிரார்.
டி.எம்.சௌந்தரராஜன், பி.பி.சீனிவாஸ் இருவருக்கும் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்படுகிறது.
இதற்கான விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், வருகிற 14-ந் தேதி மாலை 6 மணிக்கு நடக்கிறது.
இதையொட்டி பி.சுசீலா, சென்னையில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “பழைய பாடல்களில் உள்ள இனிமை, புதிய பாடல்களில் இல்லையே என்கிறார்கள். அப்படி ஒரேடியாக சொல்லிவிட முடியாது. புதிய பாடல்களில் கூட சில இனிமையான பாடல்கள் வரத்தான் செய்கின்றன.
பாடல்களில் வார்த்தைகள் புரியாமல் போவதற்கு பாடகர்-பாடகிகளை குறை சொல்லக் கூடாது. இசையமைப்பாளர்கள்தான் காரணம். இசையமைப்பாளர்கள் எப்படி பாடச் சொல்கிறார்களோ, அப்படித்தான் பாடகர்-பாடகிகள் பாட முடியும். இன்றைக்கு ஏராளமான புதிய கருவிகள் வந்துவிட்டன. ஆனால் அன்றைக்கு ‘கீ போர்டு’ இல்லை. சிதார், வீணை போன்ற கருவிகள் மட்டுமே இருந்தன.
என்னைப் பொருத்த வரை பாடகர்களில் மிகச் சிறந்தவர் டி.எம்.சௌந்தரராஜன். அதற்காகத்தான் அவருக்கு விருது கொடுக்கிறோம்.
எங்களைப் போல இளம் பாடகர்கள் நிலைக்க முடியாமல் போவதற்குக் காரணம், இசையமைப்பாளர்களுக்கு புதுசு புதுசாக பாடகர்-பாடகிகள் தேவைப்படுவதுதான். பழைய பாடகர்-பாடகிகளே இருந்து கொண்டிருந்தால் எப்படி? புதியவர்கள் வரவேண்டாமா? அப்படித்தான் நாம் நினைத்துக்கொள்ள வேண்டும்.
இசைத்துறையில், எனக்கிருந்த நிறைவேறாத ஆசை, என் பெயரில் அறக்கட்டளை அமைத்ததன் மூலம் நிறைவேறி விட்டது.
நான் பாடிய பழைய பாடல்களான, ‘மலர்ந்தும் மலராத,’ ‘உன்னை காணாத கண்ணும்,’ ‘நாளை இந்த வேளைப்பார்த்து’ போன்ற பாடல்களை டி.வி.யில் பார்க்கும்போது, இப்போதும் கண்ணீர் வருகிறது….” என்றார்.
 

ஹீரோயினை தாக்க பாய்ந்த ஹீரோ

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கணவன்-மனைவிக்கிடையே எழும் சந்தேகத்தால் நடக்கும் விளைவுகளை சொல்லும் த்ரில்லர் படமாக உருவாகிறது 'யுகம்'. இதுபற்றி இயக்குனர் பவன் சேகர் கூறியதாவது: என் நண்பரின் வாழ்வில் நடந்த உண்மை கதை. நிஜத்தில் அதன் முடிவு வேறுவிதமாக இருந்தது. இதனால் படத்திற்காக கிளைமாக்ஸ் மாற்றிவிட்டேன். ராகுல் மாதவ் ஹீரோ, தீப்தி ஹீரோயின். இருவருமே காட்சிகளை புரிந்துகொண்டு நடித்தனர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிவிடும். காட்சி தத்ரூபமாக வர வேண்டும் என்று யோசித்தபோது ஸ்பாட்டில் ஒரு யோசனை தோன்றியது. கோபமாக பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென ஹீரோயினை தாக்குவதுபோல் காட்சி அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்று ஹீரோவிடம் கூறினேன். காட்சி தொடங்கியதும் ராகுல், தீப்தி இடையே காரசாரமாக வாக்குவாதம் நடந்தது. பேசிக்கொண்டிருக்கும்போதே ராகுல் திடீரென தீப்தியை தாக்க பாய்ந்தார். சற்றும் எதிர்பாராத தீப்தி அதிர்ச்சியில் உறைந்துபோனார். இக்காட்சி தத்ரூமாக இருக்க வேண்டும் என்பதற்காக, முன்கூட்டியே இது பற்றி
தீப்தியிடம் சொல்லவில்லை. காட்சி முடிந்து சில நிமிடம் அவர் அப்படியே உட்கார்ந்திருந்தார். பிறகு அவருக்கு ஆறுதல் கூறவேண்டியாதாகிவிட்டது.


Source: Dinakaran
 

ஒரு பாடலுக்கு ஆட மாட்டேன் :சமீரா ரெட்டி!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தமிழில், 'வாரணம் ஆயிரம்', 'அசல்' படங்களில் நடித்துள்ளவர் இந்தி நடிகை சமீரா ரெட்டி. தமிழ் படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆட வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா என கேட்டதற்கு ஏற்கனவே தமிழில் ஒரு பாடலுக்கு ஆட வந்த வாய்ப்பை மறுத்துள்ளதாக சமீரா ரெட்டி கூறியுள்ளார்.


Source: Dinakaran
 

விக்ரம் மனைவியாக அமலா பால்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

விஜய் இயக்கும் படத்தில், விக்ரம் மனைவியாக நடிக்கிறார் அமலா பால். 'மதராசப்பட்டணம்' படத்துக்குப் பிறகு விஜய் இயக்கும் படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இதில், விக்ரம் மனநிலை பாதிக்கப்பட்டவராக நடிக்கிறார் எனக்கூறப்படுகிறது. விக்ரம் மனைவியாக மீரா ஜாஸ்மின் நடிப்பார் என்று கூறப்பட்டது. இப்போது, 'மைனா' ஹீரோயின் அமலா பால் நடிக்கிறார். இந்த படத்தில் அனுஷ்கா வக்கீல் கேரக்டரில் நடிக்கிறார்.


Source: Dinakaran
 

கோடம்பாக்கத்தில் கொடிகட்டி பறக்கும் டைட்டில் வியாபாரம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக டைட்டில் வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது. குழந்தைக்கு பெயரைப்போல படத்துக்கு டைட்டில் முக்கியமானது. சில படங்களால் டைட்டிலும், சில டைட்டில்களால் படங்களும் சிறப்பு பெற்றதுண்டு. அதனால்தான் டைட்டிலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை டைட்டிலுக்கு பெரிய அளவில் பஞ்சம் வந்ததில்லை. காரணம் அழுத்தமான ஆங்கில வார்த்தையை டைட்டிலாக வைத்து விடுவார்கள். இப்போது தமிழில் டைட்டில் வைத்தால்தான் வரி விலக்கு கிடைக்கும் என்பதால் டைட்டிலுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
கதைக்கு தொடர்புடைய அதே நேரத்தில் ரசிகர்களை கவரும் விதமான தமிழ் டைட்டில்களைத் தேடி பல படங்கள் இப்போதும் அலைந்து கொண்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு லட்சக் கணக்கில் சம்பாதிக்க, சிலர் டைட்டில் வியாபாரத்தில் குதித்துள்ளனர்.
தயாரிப்பாளர் சங்கத்தில், ஒரு தயாரிப்பு நிறுவனத்தை பதிவு செய்ய, ஒரு லட்சம் ரூபாய் கட்டி சங்கத்தில் உறுப்பினராக வேண்டும். பட டைட்டிலுக்கு 500 ரூபாய் கட்டணம். ஆனால், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிலும், தயாரிப்பாளர் கில்டிலும் நிறுவன பதிவு கட்டணம் 5 ஆயிரம் ரூபாய். பட டைட்டிலுக்கான கட்டணம் 250 ரூபாய்க்கும் குறைவு.
இதனால் சில தயாரிப்பாளர்கள் கட்டணம் குறைவு என்பதால் இங்கு தங்கள் நிறுவனத்தை பதிவு செய்கிறார்கள். இன்னும் சிலர், தயாரிப்பாளர்கள் என்ற போர்வையில், இந்த இரண்டு இடங்களிலும் முக்கிய தலைப்புகளை பதிவு செய்து வைத்துக் கொள்கின்றனர். அதே டைட்டிலை வேறொரு தயாரிப்பாளர், தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யச் சென்றால், அந்த டைட்டிலை, நான் கில்டில் பதிவு செய்திருக்கிறேன். சேம்பரில் பதிவு செய்திருக்கிறேன். மீறி அந்த தலைப்பை படத்துக்கு நீங்கள் வைத்தால் வழக்கு தொடருவேன் என்று வந்து நிற்பார்கள். வேறு வழியில்லாமல் அந்த தயாரிப்பாளர் தலைப்பின் முக்கியத்துவத்துக்கேற்ப 50 ஆயிரம் முதல் 3 லட்சம் வரை பணத்தைக் கொடுத்து, அந்த தலைப்பை பெறுகிற சூழ்நிலை இருப்பதாகக் கூறப்படுகிறது.
இன்னும் சிலர் தலைப்பை பணம் கொடுத்து வாங்காமல், அதை ஒட்டி வேறொரு வார்த்தையை சேர்த்து தலைப்பு வைத்துக் கொள்கிறார்கள். உதாரணமாக 'கண்மணி' என்று ஒரு படத்தின் டைட்டிலை ஒருவர் பதிவு செய்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதே டைட்டிலை வேறொருவர் விரும்புகிறார்; அவருக்கு பணம் கொடுத்து வாங்க விருப்பம் இல்லை என்றால் 'என் கண்மணி' என்று படத்தின் பெயரை வைத்துக் கொள்வார். இதில் 'என்' என்ற வார்த்தையை சிறிய அளவில் போட்டுக் கொள்வார். அல்லது 'கண்மணி செல்லம்' என்று வைத்து, 'செல்லம்' என்பதை சிறிதாக போட்டுக்கொள்வார்.
பழைய திரைப்படங்களின் பெயர்களை மீண்டும் வைக்கும் சீசனும் இப்போது ஆரம்பித்திருக்கிறது. பழைய படத்தின் பெயர்களை பத்து வருடங்களுக்கு பிறகு மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தயாரிப்பாளர் சங்கம் விதிமுறை வைத்திருந்தாலும், தற்போது பெரிய நிறுவனங்கள் தயாரித்த, பெரிய இயக்குனர்கள், நடிகர்கள் நடித்த படங்களின் பெயர்களை பயன்படுத்திக் கொள்ள சம்பந்தபட்டவர்களிடமிருந்து தடையில்லா சான்று வாங்கி வரவேண்டும் என்ற விதிமுறையை கடைபிடித்து வருகிறார்கள்.
இதையும் மீறி சிலர் பழைய படங்களின் டைட்டில்களை பயன்படுத்துவதும் அதிகரித்திருக்கிறது. அல்லது அந்த தலைப்புகளில் சிறு மாற்றங்களை செய்து பயன்படுத்துகிறார்கள். உதாரணத்துக்கு 'தங்க மகன்' என்ற ¬ட்டிலை 'தங்க மகள்' என்று மாற்றி வைத்துக் கொண்டால் எதுவும் செய்ய இயலாது. 'இந்த பிரச்சினைகளுக்கான தீர்வு, நேரடி தமிழ் படங்களுக்கான டைட்டிலை தயாரிப்பாளர் சங்கத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை கொண்டு வரவேண்டும். ஆனால் அது சாத்தியமில்லை. இப்போது தயாரிப்பாளர் சங்கமும், சேம்பரும் இணக்கத்துடன் செயல்படுவதால் சேம்பரில் ஒருவர் டைட்டில் பதிவு செய்தால் அந்த தகவலை தயாரிப்பாளர் சங்கத்துக்கு தந்து விடுகிறார்கள்.
சேம்பரில் பதிவு செய்தாலும் படம் முடிவதற்குள் தயாரிப்பாளர் சங்கத்திலும் பதிவு செய்துவிட வேண்டும் என்று அவர்கள் கடிதம் பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் கில்டில் அந்த நிலை இல்லை. 'சேம்பர் மற்றும் கில்டில் டப்பிங் படங்களையும், பிற மொழி படங்களையும் மட்டுமே பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு கட்டணத்தை அதிகரிக்க வேண்டும். ஒரே நேரத்தில் இரண்டு டைட்டிலுக்கு மேல் பதிவு செய்யக்கூடாது' என்று தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள விதிமுறையை மற்ற அமைப்புகளும் கடைப்பிடிக்க வேண்டும். டைட்டிலுக்கான புதுப்பிப்பு கால அவகாசத்தை ஒரு வருடம் என்பதை 3 மாதங்களாக குறைக்க வேண்டும். இவை சாத்தியமென்றால் டைட்டில் வியாபாரத்தையும், குழப்பத்தையும் தடுக்க முடியும்' என்கிறார் முன்னணி தயாரிப்பாளர் ஒருவர்.


Source: Dinakaran
 

ஹிப்பி முடியுடன் வரும் சந்தானம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நடிகர் ஜீவா நடிக்கும் 'சிங்கம் புலி' படத்தை இயக்குனர் ஜனநாதனின் உதவியாளர் சாய்ரமணி இயக்குகிறார். இதில் திவ்யா, சவுந்தர்யா ஜோடி. முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறேன். இதில் ஜீவாவுக்கு மீனவனாகவும் பிளேபாயாகவும் இரு வேடங்கள். பிளேபாய் வேடம், இரண்டில் ஒன்று வில்லன். 'சிங்கம் புலிÕ படத்தில் 1970, 80களில் இருந்த இளைஞர்களைப்போல் ஹிப்பி முடியுடன் நடிக்கிறார் சந்தானம். இவர்கள் இருவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டி ‘சிவா மனசில சக்தி’ படத்தை விட சூப்பர் காமெடியாக இருக்கும் என இயக்குநர் கூறுகிறார்.


Source: Dinakaran
 

ஹாலிவுட்டுடன் இந்திய திரையுலகம் வர்த்தக ஒப்பந்தம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அமெரிக்க திரைப்பட சங்கத்தின் (மோஷன் பிக்சர்ஸ் அசோஸியேஷன் ஆஃப் அமெரிக்கா) சிறப்பு அழைப்பை தொடர்ந்து, ஹாலிவுட் திரையுலகுடன் இந்திய திரையுலகம் இணைந்து செயல்பட மற்றும் பொருளாதார ஒப்பந்தம் செய்ய, இந்திய திரையுலகம் சார்பில் குழு சென்றுள்ளது. ஆனந்தா பிக்சர்ஸ் எல்.சுரேஷ் தலைமை தாங்கி, குழுவினரை அழைத்து சென்றார். பாலிவுட்டில் இருந்து தயாரிப்பாளர் பாபி பேடி கலந்து கொள்கிறார். ஹாலிவுட்&இந்திய திரையுலக வர்த்தக ஒப்பந்தம், லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் ஆண்டோனியோ வில்லாரை கோஸா முன்னிலையில், பாரமவுன்ட் பிக்சர்ஸ் அலுவலகத்தில் நாளை நடைபெறுகிறது.


Source: Dinakaran
 

ரஜினியின் ரசிகராக திலீப்

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-1993.jpg
அனைத்து திரையுலகனிரும் ரஜினி ரசிகர்களாக இருந்து வருகின்றர். அப்படிபட்ட வரிசையில் மலையாள நடிகர் திலீப் இடம் பெற்றுள்ளார். ‘காரியஸ்தான்' என்ற மலையாள படத்தில் ரஜினியின் ரசிகராக நடித்திருக்கிறார் திலீப். அதில், 'எஜமான்' படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு நடனமும் ஆடி உள்ளாராம்.