'அம்மா' ஆசி வடிவேலுவுக்கு சுத்தமா இல்ல... முழுக்க முழுக்க விவேக்குக்குதான்!

'அம்மா' ஆசி வடிவேலுவுக்கு சுத்தமா இல்ல... முழுக்க முழுக்க விவேக்குக்குதான்!

சென்னை: ரூ 30 கோடி செலவழிக்கப்பட்டு பிரம்மாண்டமாக நடத்தப்படும் ஒரு மேடையில் தானும் எப்படியாவது இடம்பிடித்து விட வேண்டும் என ரொம்பவே முயற்சித்தார் வடிவேலு. ஆனால் அதற்கு இடம்தரவில்லை ஆளும்தரப்பு!

அதேநேரம், காமெடி நடிகர் விவேக்குக்கு முழு அனுமதி கிடைத்திருக்கிறது.

நாளை மறுதினம் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் தொடங்குகிறது. இந்தியத் திரையுலகமே இங்கு ஒன்று கூடுகிறது.

இந்த விழாவில், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரையுலகைச் சேர்ந்தவர்கள் மொத்தம் இரண்டு நாட்களுக்கு கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்த உள்ளனர்.

'ஜெயலலிதாவை வாழ்த்தி காமெடி ட்ராமா ஒன்றை நடத்த விரும்புகிறேன். பணமெல்லாம் வேண்டாம்... அம்மாவின் ஆசி கிடைச்சி, நானும் சினிமாவுக்கு முழுசா திரும்புன மாதிரியிருக்கும். முதல்வர் அம்மாவை நான் ஏற்கெனவே வாழ்த்திப் பேசியவன்தான்," என கலைநிகழ்ச்சிக்குப் பொறுப்பேற்றுள்ள குழுவிடம் கேட்டாராம் வடிவேலு.

விஷயம் முதல்வர் காதுக்குப் போனது. நோ என ஒற்றைச் சொல்லில் மறுத்தவர், தன்னை வாழ்த்தி நாடகம் நடத்த வேறு யார் யாரெல்லாம் அனுமதி கேட்டிருக்கிறார்கள் என்று பார்த்து, அதில் நடிகர் விவேக் பெயரை மட்டும் டிக் அடித்தாராம்.

விஷயம் தெரிந்த விவேக் முழு வீச்சில் காமெடி ஸ்க்ரிப்ட் தயாரித்துக் கொண்டுள்ளார். வடிவேலுவை வைத்து மீண்டும் படமெடுப்பதாக அறிவித்திருப்பவர்களோ திகிலில் இருக்கிறார்கள்!

 

நடிகையை ஏமாற்றிய டைரக்டர்... ஆபாசமாக படமெடுத்ததாக குற்றச்சாட்டு

ஜோ சாயலில் இயற்கையான அழகோடு, செயற்கையாகவே அவரைப் போலவே துள்ளல் நடிப்பை வெளிப்படுத்தும் நடிகை அவர். அறிமுகமானது விரல் வித்தை நடிகருடன். தமிழில் தொடர்ந்து சொல்லிக் கொள்கிற மாதிரி படங்கள் அமையவில்லை.

இதனால் தெலுங்குப்பக்கம் சாய்ந்தார் நடிகை. சில ஐயிட்டம் சாங் மூலம் பிரபலமான இவர் தற்போது, தெலுங்கு படவுலகம் பற்றி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளாராம். அதாகப்பட்டது, தன் சினிமா வாழ்க்கையில் பலர் தன்னை ஏமாற்றியதாகவும், சில டைரக்டர்கள் தன்னிடம் மோசடி செய்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், தெலுங்உப் படமொன்றில் நடித்த போது தனக்கு தெரியாமலேயே டைரக்டர் தன்னை ஆபாசமாக படமெடுத்ததாகவும், படத்தில் அக்காட்சிகளைப் பார்த்து தான் கதறிக் கதறி அழுததாகவும் பார்ப்பவர்களிடம் எல்லாம் புலம்பி வருகிறாராம் நடிகை.

 

அப்பா கமலைப் போல ஆடி காயம்பட்ட ஸ்ருதி!

துபாயில் நடைபெற்ற விருது வழங்கும் அப்பா கமல்ஹாசனின் பாடலுக்கு ஆட்டம் போட்ட ஸ்ருதிஹாசனுக்கு முட்டிக்காலில் காயம் ஏற்பட்டுவிட்டதாம்.

இசையின் மீதுள்ள ஆர்வத்தினால் உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்திற்கு இசையமைத்தவர் ஸ்ருதி. பின்னர் நடிகையாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.

திரைப்படங்களில் இவரின் நடனம் அனைவராலும் பாராட்டப்படுகிறது. இந்த நிலையில் துபாயில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற சிமா திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடனமாடினார்.

அப்பா கமலைப் போல ஆடி காயம்பட்ட ஸ்ருதி!

அப்பா கமலின் பாடலுக்கு அவரைப் போலவே ஆடினாராம் ஸ்ருதி. இதற்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

ஸ்ருதியின் நடன அசைவுகள் வேகமாகவும், செய்வதற்குக் கடினமாகவும் இருந்தன. ஆனாலும் அனைத்தையும் மேடையில் செய்து காட்டி ஸ்ருதிஹாசன் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார். ஆனால், இதன் விளைவாக அவரது கால் முட்டி பாதிக்கப்பட்டு விட்டதாம். இதனால் தற்போது ஓய்வில் இருக்கிறாராம் ஸ்ருதி.

 

13 ஆண்டு திருமண வாழ்வு கசந்ததா?... நடிகர் ரித்திக், சூசன் விவாகரத்தா??

மும்பை: பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனும், அவரது மனைவி சூசனும் விவகாரத்து செய்யப் போவதாக தகவல் பரவி வருகிறது.

பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் நடிகர் சஞ்சய் கானின் மகள் சூசன் கானை கடந்த 2000ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் தேதி மணந்தார். அவர்களுக்கு ரிஹான், ரிதான் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ரித்திக்கின் நடவடிக்கைகள் சூசனுக்கு பிடிக்கவில்லையாம். இதையடுத்து அவர் அண்மையில் தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

13 ஆண்டு திருமண வாழ்வு கசந்ததா?...  நடிகர் ரித்திக், சூசன் விவாகரத்தா??

தனது மாமனார் ராகேஷ் ரோஷனின் பிறந்தநாள் பார்ட்டிக்கு கூட மூன்றாவது ஆள் போன்று வந்துவிட்டு சென்றர் சூசன். மேலும் வழக்கமாக தனது கணவருடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளும் அவரை இந்த ஆண்டு பார்க்க முடியவில்லை. இந்நிலையில் ரித்திக்கும், சூசனும் விவாகரத்து பெறப் போவதாக தகவல் பரவி வருகிறது.

13 ஆண்டு திருமண வாழ்வு கசந்ததா?...  நடிகர் ரித்திக், சூசன் விவாகரத்தா??

ரித்திக் நடித்துள்ள க்ரிஷ் 3 படம் விரைவில் ரிலீஸாகவிருக்கிறது. படம் ரிலீஸுக்கு பிறகு அவர்கள் விவகாரத்து குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடக்கூடும் என்று கூறப்படுகிறது.

 

அப்படீன்னா சினிமா நூற்றாண்டு விழாவில் கேயாருக்கு சீட் கிடையாதா?

சென்னை: தயாரிப்பாளர் சங்க தலைவராக பதவி ஏற்ற நேரம் பார்த்து நாட்டின் குடியரசுத் தலைவரும் முதல்வரும் பங்கேற்கும் ஒரு பிரமாண்ட மேடை கிடைக்கிறதே என சந்தோஷப்பட்ட கேயாருக்கு, இப்போது அதில் மண்.

சினிமா நூற்றாண்டு விழா நிகழ்ச்சியின் மேடையில் தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை தலைவர் கல்யாண், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், இயக்குனர் சங்கத் தலைவர் விக்ரமன், பெப்சி சம்மேளன தலைவர் அமீர் இவர்களோடு சேர்ந்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயாரும் கௌரவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படித்தான் நிகழ்ச்சி நிரலும் அமைக்கப்பட்டிருந்தது.

அப்படீன்னா சினிமா நூற்றாண்டு விழாவில் கேயாருக்கு சீட் கிடையாதா?

இதற்கிடையில் தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் கேயார் அணி ஜெயித்தது சட்டப்படி செல்லாது என்று தாணு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், 'கேயார் அணியில் ஜெயித்தவர்கள், தலைவர் உள்பட அந்தந்த பதவியில் செயலாற்ற 27ம்தேதி வரை தடைவிதிக்கப்படுகிறது.

தயாரிப்பாளர் சங்க பிரதிநிதி என்ற முறையில் பொதுநிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் கவுன்சிலில் கூட்டம் நடத்தவும் தடை விதிக்கபடுகிறது' என்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுவிட்டது.

இதனால் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கேயார் மேடையில் அமரும் வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.

ஆனால் நேற்று முதல்வரைச் சந்திக்கச் சென்ற குழுவில் கேயாரும் இடம்பெற்றிருந்தார். செய்திக் குறிப்பிலும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. இதைக் கவனித்த தாணு அணி, இதை நீதிமன்ற அவமதிப்பாகக் கூறி வழக்கு தொடரப் போவதாகக் கிளம்பியுள்ளனர்.

 

இதான் யதார்த்தமான பாசம்.. நிஜமான தங்க மீன்! - ஷாமின் '6' படத்துக்கு குவியும் பாராட்டு

ஒரு இளம் தம்பதி... அவர்களுக்கு ஒரு அழகான மகன்... ஒரு நாள் காணாமல் போகிறான்... அவனைத் தேடி அலைகிறான் தந்தை.. அந்த அலைச்சலில் வெளிவரும் பயங்கரங்கள்...

-இதுதான் ஷாம் நடித்துள்ள 6 (6 மெழுகுவர்த்திகள்) படம்.

இதான் யதார்த்தமான பாசம்.. நிஜமான தங்க மீன்! - ஷாமின் '6' படத்துக்கு குவியும் பாராட்டு

இந்தப் படத்தின் செய்தியாளர் காட்சி நேற்று சென்னை பிரசாத் லேபில் நடந்தது. யாருக்கும் பெரிதாக எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை. காரணம், 'மகனுக்கு தரும் முத்தம் ஏதாவது ஒன்றில் சேர்த்தியில்லை..' என்பது போன்ற அபத்தமான விளம்பரங்கள், அதற்கு அறிவு ஜீவி கூட்டத்தின் ஆதரவு என தடபுடல் இலவச விளம்பரங்கள் எதுவும் இல்லாமல் படம் வெளியாகியிருந்ததுதான்!

முதல் பாதி படம் முடிந்தபோதுகூட பெரிதாக எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை, படம் பார்த்தவர்கள்.

படம் முடிந்த பிறகு, பலரும் வெளிப்படையாக உதிர்த்த கமெண்ட், 'இதுதான் நிஜமான பாசம்... ஒரு அப்பா தன் மகளாக இருந்தாலும் மகனாக இருந்தாலும் இப்படித்தான் நடந்து கொள்வார்... அந்த யதார்த்தத்தை முடிந்தவரை சரியாகவே காட்டியிருக்கிறார்கள்... ஷாமும் மிகையாக நடிக்காமல் கவர்ந்துவிட்டார்," என்பதே.

இதான் யதார்த்தமான பாசம்.. நிஜமான தங்க மீன்! - ஷாமின் '6' படத்துக்கு குவியும் பாராட்டு

சமூக வலைத் தளங்களில் வெளிப்படையாகவே, 'இதுதான் நிஜமான தங்க மீன்,' என சினிமா ஆர்வலர்கள் கமெண்ட் எழுதி வருகின்றனர்.

ஷாம், இந்தப் படம் மூலம் ஒரு தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்.

படம் குறித்து ஷாமிடம் பேசியபோது, "நான் 12பி-க்குப் பிறகு நடிச்ச இரண்டாவது படமா இதை நினைச்சிக்கிறேன். அவ்வளவு உழைப்பு. இரண்டரை ஆண்டுகள் இந்தப் படத்துக்காக முழுசா உழைச்சிருக்கேன். ப்ளீஸ் என்னை சப்போர்ட் பண்ணுங்க.. இனி எண்ணிக்கைக்காக இல்லாமல், நல்ல படங்களுக்காக உழைப்பையும் பொருளையும் தருவேன்," என்றார்.

இந்தப் படத்தில் ஒரு நடிகராக பாராட்டுப் பெறும் ஷாம், தயாரிப்பாளராகவும் தப்பித்துவிடுவார் என்கிறது சினிமா வட்டாரம்.

 

அதெப்படி குமரி முத்துவை நீக்கலாம்? - மூத்த, இளம் நடிகர்கள் எதிர்ப்புக்குப் பணிந்தார் சரத்!

அதெப்படி குமரி முத்துவை நீக்கலாம்? - மூத்த, இளம் நடிகர்கள் எதிர்ப்புக்குப் பணிந்தார் சரத்!

சென்னை: மூத்த மற்றும் இளம் நடிகர்கள் கடும் எதிர்ப்பு காரணமாக குமரி முத்துவை நடிகர் சங்கத்திலிருந்து நீக்கும் முடிவை மறுபரிசீலனை செய்வதாகவும், அவரை மீண்டும் சங்கத்தில் சேர்த்துக் கொள்வதாகவும் இறங்கி வந்திருக்கிறது சரத்குமார் தலைமையிலான நடிகர் சங்கம்.

நேற்று சென்னையில் நடந்த நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்போது சங்கத்தில் சரத்குமார் தலைமைக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எதிர்ப்பும் வலுத்துள்ளது. விஷால் போன்ற நடிகர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படையாக தெரிவித்த நிலையில் பொதுக்குழு கூடியது.

இதில் ரஜினி, கமல் பங்கேற்பார்கள் என்று கூறியிருந்தனர். ஆனால் எதிர்ப்பார்த்தது போலவே இருவரும் வரவில்லை.

கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளைப் பேசினார்கள். குமரிமுத்து நீக்கம்தான் பெரிதாகப் பேசப்பட்டது. அவரை நீக்கியது சங்கத்தின் தலைவர் சரத்குமார், செயலர் ராதாரவியின் தன்னிச்சையான முடிவு என்று மூத்த நடிகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக சிவக்குமார், நாசர், விஷால் போன்றவர்கள் குமரிமுத்து நீக்கத்தை கடுமையாக எதிர்க்க, கடைசியில் வேறு வழியின்றி குமரிமுத்துவை மீண்டும் சேர்க்க ஒப்புக் கொண்டாராம் சரத்குமார்.

கட்டட பிரச்சினை உள்பட மற்றவற்றை சுமூகமாக பேசியதாகவும், ஒத்துழைத்த சக உறுப்பினர்களுக்கு நன்றி என்றும் கூறி கூட்டத்தை முடித்தார் சரத்குமார்.

 

சீனு ராமசாமியின் அடுத்த படம் இடம் பொருள் ஏவல்!

சீனு ராமசாமியின் அடுத்த படம் இடம் பொருள் ஏவல்!

சென்னை: இயக்குநர் சீனு ராமசாமி தனது அடுத்த படத்துக்கு இடம் பொருள் ஏவல் என்று தலைப்பிட்டுள்ளார்.

இந்தப் படத்தை லிங்கசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது.

கூடல் நகர் மூலம் இயக்குநரானவர் சீனுராமசாமி. ஆனால் அடுத்து அவர் இயக்கிய தென்மேற்குப் பருவக்காற்றுதான் அவரை இயக்குநராக நிலை நிறுத்தியது.

அந்தப் படத்துக்குப் பிறகு நீர்ப்பறவை படத்தை இயக்கினார். இதில் விஷ்ணு - சுனைனா நடித்திருந்தனர். வெளிநாட்டுத் திரைப்பட விழாக்களில் நல்ல பெயர் கிடைத்தது இந்தப் படத்துக்கு.

அடுத்து இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்காக புதிய படம் இயக்குகிறார் சீனு ராமசாமி.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், "உங்கள் நல்வாழ்த்துக்களுடன் திருப்பதி பிரதர்ஸ் இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில் 'இடம் பொருள் ஏவல்' என்ற தமிழ்த் திரைப்படம் துவங்குகிறேன். மற்ற தகவல்களை தம்பி நிகில் முருகன் (அவரது பிஆர்ஓ) அறிவிப்பார்," என குறிப்பிட்டுள்ளார்.

சீக்கிரம் டீடெய்ல்ஸ் கொடுங்க நிகில்!!

 

'கருணாநிதியை அழைப்பீர்களா?'... 'சினிமாக்காரங்க எல்லாரையும் அழைப்போம்!'

'கருணாநிதியை அழைப்பீர்களா?'... 'சினிமாக்காரங்க எல்லாரையும் அழைப்போம்!'

சென்னை: ஒரு அரசியல்வாதி என்பதைத் தாண்டி தமிழ் சினிமாவுக்கு கடந்த 65 ஆண்டு காலமாக கதை வசனகர்த்தாவாக, பாடலாசிரியராக, தயாரிப்பாளராக பங்களித்து வரும் முன்னாள் முதல்வர் கருணாநிதியை சினிமா நூற்றாண்டு விழாவுக்கு அழைப்பது குறித்து தெளிவாக பதிலளிக்க மறுத்துவிட்டனர் விழாக் குழுவினர்.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம் சேம்பர்) தலைவர் கல்யாண் சென்னையில் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், "நாளை மறுதினம், 21-ம் தேதி மாலை சினிமா நூற்றாண்டு விழா தொடங்குகிறது. இதனையொட்டி, நடிகர், நடிகைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. இதற்கான ஒத்திகை நேரு உள்விளையாட்டு அரங்கில் தினமும் நடைபெறுகிறது.

விழாவுக்காக, இதுவரை பார்த்திராத அளவில் மிகப்பிரமாண்டமான முறையில் மேடை அமைக்கப்படுகிறது.

முதல்வர் ஜெயலலிதா சினிமா நூற்றாண்டு விழா பற்றி தினமும் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் விவாதித்து வருகிறார்.

முதல்வர் ஜெயலலிதா எங்களையெல்லாம் அழைத்து பேசினார். சினிமா நூற்றாண்டு விழாவுக்காக எவ்வளவு செலவு ஆகும் என்று விசாரித்தார். ஏறக்குறைய ரூ.30 கோடி செலவாகும் என்று தெரிவித்தோம். உடனே, தமிழக அரசு சார்பில் அவர் ரூ.10 கோடி நிதி உதவி வழங்கினார்.

சினிமா நூற்றாண்டு விழா கலைநிகழ்ச்சிகளுக்கு சிலர் ஒத்துழைப்பு தருவதில்லை. இந்த விழாவில் கலந்துகொண்டால்தான் சினிமாவில் அவர்கள் இருப்பது தெரியும். அல்லது சினிமாவிலேயே இல்லாததுபோல் ஆகிவிடும்," என்றார்.

கருணாநிதிக்கு அழைப்பு உண்டா?

அவரிடம், 'சினிமா நூற்றாண்டு விழாவுக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதி அழைக்கப்படுவாரா?' என்று கேட்டார்.

அதற்கு 'பிலிம் சேம்பர்' தலைவர் கல்யாண் நேரடியாக பதிலளிக்கவில்லை. சிறிது நேரம் தயங்கிவிட்டு, 'சினிமா துறையை சேர்ந்த அனைவரும் அழைக்கப்படுவார்கள்' என்று மட்டும் கூறினார்.

விழாவுக்கு அழைக்கப்படுபவர்கள் யார் யார் என்பதை முதல்வர் அலுவலகமே முடிவு செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ஆடு பகை, ஆனால் ‘குட்டியோடு’ உறவாடும் ஹீரோ....

அரசர் பெயரில் உருவான படத்தில் நடித்த பஸ் ஏறும் நாயகன், தன்னுடன் நடித்த வாரிசு நடிகையிடம் ரொம்பவே உரிமை பாராட்டுகிறாராம்.

சங்க விஷயங்களில் நடிகையின் அப்பாவிடம் மோதல் தொடர்ந்தாலும், நடிகையிடம் நட்பும் ஒரு புறம் ஸ்மூத்தாகவே செல்கிறதாம். சமீபத்தில் நாயகனின் பிறந்த நாள் வந்தது. பட வேலைகளில் பிசியாக இருந்த நாயகனுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தாராம் நடிகை.

யூனிட் ஆட்கள் முன்னிலையில் நாயகன் கேக் வெட்டி, நடிகைக்கு ஊட்டி விட்டாராம். அப்பாவுடம் மோதிக் கொண்டாலும், நடிகையிடம் நட்பு பாராட்டும் நாயகனின் சாமர்த்தியத்தைக் கண்டு திரையுலகினர் ‘ஆடு பகை, ஆனா குட்டி உறவா..?' என சிரித்துக் கொள்கிறார்களாம்.