துப்பாக்கியை 2 வாட்டி பார்த்தேன், அருமை: முருகதாஸை பாராட்டிய ரஜினி

Rajinikanth Praises Vijay Huppaki   

சென்னை: துப்பாக்கி படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் இயக்குனர் முருகதாஸை செல்போனில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படத்தை ஒரு முறையல்ல இரண்டு முறை பார்த்துவிட்டு இயக்குனரை செல்போனில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார்.

இது குறித்து முருகதாஸ் டுவிட்டரில் குஷியாக கூறியிருப்பதாவது,

நம்ம தலைவர் ரஜினி சர் போன் செய்தார். உங்கள் துப்பாக்கி படத்தை 2 தடவை பாத்தேன். அருமையாக உள்ளது. நல்ல படம் என்றார். சூப்பர் ஹேப்பி என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர் வைபவ் ரெட்டி உள்ளிட்ட பல பிரபலங்களும் படத்தைப் பார்த்துவிட்டு முருகதாஸை பாராட்டியுள்ளனர். தீபாவளிக்கு ரிலீஸான துப்பாக்கி இதுவரை உலக அளவில் ரூ.10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி காந்த் போன் செய்ததில் முருகதாஸ் ஏக குஷியாக உள்ளார்.

கள்ளத்துப்பாக்கி - தெலுங்கு தயாரிப்பாளர் கம் இயக்குநர் கைது

தமிழ்ப் படமான கள்ளத் துப்பாக்கிக்கும் இந்தச் செய்திக்கும் சம்பந்தமில்லைதான். ஆனால் விவகாரம் என்னவோ... கள்ளத் துப்பாக்கி சம்பந்தமானதுதான்.

இரண்டு கைத் துப்பாக்கிகளை கள்ள மார்க்கெட்டில் வாங்கியது தொடர்பாக தெலுங்கு தயாரிப்பாளரும் இயக்குநருமான சிவராமகிருஷ்ணா கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து 2 துப்பாக்கிகள் மற்றும் 14 புல்லட்களை ஜூப்ளி ஹில்ஸ் போலீசார் கைப்பற்றினர்.

பீகாரைச் சேர்ந்த ஒரு கும்பலிடமிருந்து கள்ள மார்க்கெட்டில் இந்தத் துப்பாக்கிகளை அவர் வாங்கியிருந்தார்.

விஷயம் தெரிந்து போலீசார் விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாக உளறினாராம் சிவகிருஷ்ணா.

அவரை சட்டவிரோத ஆயுத கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

தெலுங்கில் நா பெல்லம் நா இஷ்டம் என்ற சர்ச்சைக்குரிய படத்தை தயாரித்து இயக்கியுள்ளார் இந்த சிவகிருஷ்ணா.

நமீதா பாஜகவில் சேர்ந்து விட்டாரா...?

சென்னை: நடிகை நமீதா தமிழக பாஜகவில் சேர்ந்து விட்டதாக யாரோ சிலர் புரளியைக் கிளப்பி விட்டுள்ளனர். இதையெல்லாம் தயவு செய்து நம்பாதீர்கள் என்று நமீதாவே மறுப்பு தெரிவித்துள்ளார்.

சூரத் சுந்தரி நமீதாவுக்கு தமிழில் இப்போது பெரிய அளவில் படங்கள் இல்லை. இருந்தாலும் அவர் பிசியாகத்தான் இருக்கிறார். மானாட மயிலாட தவிர ரியல் எஸ்டேட் பிசினஸிலும் கொடி கட்டிப் பறக்கினார்.

i haven t join bjp says namitha
Close
 
இந்த நிலையில் அவர் பாஜகவில் சேர்ந்துள்ளதாகவும், சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமையகத்திற்குப் போய் உறுப்பினர் படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுத்து கையெழுத்துப் போட்டு விட்டு வந்துள்ளதாகவும் ஒரு செய்தி பரவி வருகிறது.

குஷ்பு எப்படி திமுகவில் கவர்ச்சி பேச்சாளராக, பேச்சுப் பீரங்கியாக வலம் வருகிறாரோ அதேபோல நமீதவும் பாஜகவின் கவர்ச்சிப் பேச்சாளராக வலம் வரப் போகிறார் என்றும் செய்திகள் படு வேகமாக உலா வந்தன.

ஆனால் இதை நமீதா மறுத்துள்ளார்... அய்யோ, நான் அரசியலில் சேரவே இல்லையே. தமிழக பாஜகவில் நான் சேர்ந்து விட்டதாக வந்துள்ள செய்தி முற்றிலும் தவறு. அப்படியெல்லாம் எந்த பிளானும் என்னிடம் இல்லை. யாரோ தவறாக கிளப்பி விட்டுள்ளனர். நான் வழக்கம் போல சினிமாவில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

மச்சான்ஸ், நமீதாவே விளக்கிட்டாங்க.. நம்பிடாதீங்க..

துப்பாக்கி படத்திற்கு கடும் எதிர்ப்பு... பாதுகாப்பு கோரி அரசிடம் விஜய், கலைப்புலி தாணு மனு!

Actor Vijay Seeks Govt Protection Movie Thuppakki

சென்னை: தான் நடித்த துப்பாக்கி படத்திற்கு இஸ்லாமியர்களிடையே கடும் எதிர்ப்பும், போராட்டங்களும் வெடித்துள்ளதைத் தொடர்ந்து பாதுகாப்பு கோரி தமிழக அரசை அணுகியுள்ளார் நடிகர் விஜய்.

சமீபகாலமாக பல்வேறு திரைப்படங்களும் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றன. அந்த வகையில் விஜய் நடித்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள துப்பாக்கி படத்திற்கு தற்போது இஸ்லாமியர்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இஸ்லாமியர்களை இழிவுபடுத்துவது போன்ற காட்சிகள் படத்தில் இருப்பதாகவும், அதை நீக்கக் கோரியும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று விஜய்யின் வீட்டை முற்றுகையிடச் சென்ற இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். சென்னையில் இந்தப் படம் ஓடும் ஒரு சில தியேட்டர்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் விஜய்யின் வீட்டுக்கும், அவரது தந்தை வசிக்கும் வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விஜய்யும், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனும் சேர்ந்து தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் ராஜகோபாலை இன்று நேரில் சந்தித்து இந்தப் படம் ஓடும் அனைத்துத் தியேட்டர்களுக்கும் பாதுகாப்பு கோரி மனு கொடுத்தனர். அதேபோல தனது வீட்டுக்குப் பாதுகாப்பு தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதவிர படத்தில் இடம் பெற்றுள்ள இஸ்லாமியர்கள் தொடர்பான காட்சிகள் குறித்தும் விளக்கம் அளித்தனர்.

கலைப்புலி தாணுவும்

இதேபோல விஜய்யுடன் சென்ற படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி தாணுவும் பாதுகாப்பு கோரி மனு கொடுத்தார்.

குத்தாட்டம் போட நான் ரெடி… நடிகை ஓவியா ஸ்டேட்மென்ட்

Oviya Becomes Kuthu Song Dancer   

சினிமாவில் குத்துப்பாடலுக்கு ஆட்டம் போட தயாராக இருப்பதாக களவாணி நாயகி ஒவியா அறிவித்துள்ளார்.

சினிமாவில் ஐட்டம் பாடலுக்கு ஆடுவதற்கு என்றே தனியாக நடிகைகள் இருந்த காலம் போய் ரோஜா, சிம்ரன், மீனா என ஒரு பாடலுக்கு இறங்கி வந்து ஆடினர். இவர்களைப் பார்ப்பதற்காகவே அந்த படத்தை பார்க்க ரசிகர்கள் வந்த காலமும் இருந்தது.

இதே முறையை இப்போது ஓவியாவும் பின்பற்றத் தொடங்கிவிட்டார் போல அதனால்தான் குத்துப்பாடலுக்கு ஆட நானும் ரெடிதான் என்று அறிவித்துவிட்டார்.

களவாணியில் கதாநாயகியாக நடித்தாலும், மன்மதன் அம்பு படத்தில் மாதவனின் அத்தை மகளாக சில காட்சிகளில் தலை காட்டினார் ஓவியா. அதில் வெறுத்துப்போய் ஓதுங்கியிருந்தவருக்கு கலகலப்பு கொஞ்சம் கை கொடுத்தது. இதன் தொடர்ச்சியாக விமலுடன் மூன்றாவது முறையாக சில்லுன்னு ஒரு சந்திப்பு படத்தில் நடித்து முடித்தார். இதற்குப் பின்னர் ஓவியாவிற்கு சொல்லிக்கொள்ளும் படியாக எந்தப் படமும் புக் ஆகவில்லை.

சொந்த ஊரான கேரளாவிற்கு சென்று இப்போது முழுநேர ஒய்வில் இருக்கும் ஓவியா, முன்னணி ஹீரோ படங்களில் குத்தாட்ட சான்ஸ் கிடைத்தாலும் தான் ஆட தயாராக இருப்பதாகவும் ஸ்டேட்மெண்ட் விட்டுள்ளார்.

முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கும் இயக்குநர்கள் கவனித்து வாய்ப்பு தருவார்களா?

பேசிப் பேசியே என்னை நடிகையாக்கிவிட்டார் யாஷ் சோப்ரா: ஐஸ்வர்யா ராய்

மும்பை: தான் இன்றைக்கு திரையுலகில் இருப்பதற்கு மறைந்த இந்தி இயக்குனர் யாஷ் சோப்ரா தான் காரணம் என்று நடிகை ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார்.

im film industry because yashji aishwarya rai   
Close
 
உலகி அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராயை திரையுலகிற்கு அழைத்து வந்த பெருமை அண்மையில் மறைந்த பாலிவுட் இயக்குனர் யாஷ் சோப்ராவையே சாரும்.

இது குறித்து ஐஸ்வர்யா கூறுகையில்,

யாஷ்ஜி எனக்கு மிகவும் ஸ்பெஷலானவர். நான் இன்றைக்கு திரையுலகில் இருக்க முக்கிய காரணங்களில் அவரும் ஒருவர். அவர் 2 ஆண்டுகளாகப் பேசிப் பேசியே ஒரு வழியாக என்னை திரையுலகிற்கு அழைத்து வந்துவிட்டார். அவருக்கு என் இதயம் மற்றும் வாழ்வில் ஸ்பெஷலான இடம் உண்டு என்றார்.

ஐஸ்வர்யா யாஷ்ராஜ் பிலிம்ஸின் மொஹப்பதைன் மற்றும் தூம் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் யாஷ்ராஜ் பிலிம்ஸின் அபிஷேக், அமிதாப் நடித்த பண்ட்டி அவ்ர் பப்ளி படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார்.

ஐஸ்வர்யாவை திரையுலகிற்கு யாஷ் சோப்ரா அழைத்து வந்தாலும் அவரது முதல் படம் மணிரத்னத்தின் இருவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

'அப்படி இப்படி' படத்தை ரிலீஸ் செய்த பியான்ஸ்... !

நியூயார்க்: 31வது பிறந்த நாளை ஆடம்பர சொகுசுக் கப்பலில் கொண்டாடிய பியான்ஸ் நோல்ஸ், தனது கவர்ச்சிகரமான படத்தையும் ரசிகர்களை குளுப்பாட்டியுள்ளார்.

கவர்ச்சிகரமான பாப் பாடகியான இவர் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் அவரது மனைவி மிஷலுக்கும் மிகவும் பிடித்தமானவராவர். முதல் முறையாக அதிபரானபோது, பதவியேற்புக்குப் பின்னர் பியான்ஸின் பாடலுக்குத்தான் ஒபாமா தம்பதியினர் ஜோடியாக நடனமாடினர்.

busty bikini girl beyonce shares intimate
Close
 
தனது 31வது பிறந்த நாளை தெற்கு பிரான்ஸில் வைத்து ஒரு சொகுசுக் கப்பலில் கொண்டாடினார் பியான்ஸ். அப்போது எடுக்கப்பட்ட ஒரு கவர்ச்சிகரமான புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார் பியான்ஸ். பிகினி உடையில், மார்பழகு பளிச்சிட, மேக்கப் இல்லாத முகத்துடன் படு காந்தமாக காட்சி தருகிறார் பியான்ஸ்.

இன்னொரு படத்தில், தனது கணவர் ஜே இசட் மற்றும் குழந்தையுடன் சேர்ந்து பியான்ஸ் கேக் வெட்டுவது போன்ற காட்சி உள்ளது.

முஸ்லிம்கள் எதிர்ப்பு எதிரொலி... இன்று நடக்கவிருந்த துப்பாக்கி பிரஸ் மீட் ரத்து!

Thuppakki Press Meet Cancelled Due

இன்று நடக்கிவிருந்த துப்பாக்கி பட சக்ஸஸ் பிரஸ்மீட் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம் துப்பாக்கியில் இஸ்லாமியரை தீவிரவாதிகளாக சித்தரித்து படம் எடுத்திருப்பதால் எழுந்துள்ள சர்ச்சைதான் என்கிறார்கள்.

தீவிரவாதத்தைப் பற்றி படமெடுத்தாலே ஏன் முஸ்லிம்களை மட்டும் தீவிரவாதிகளாகச் சித்தரித்து அவமானப்படுத்துகிறீர்கள் என்று கோஷம் எழுப்பி விஜய் வீட்டை முஸ்லிகம்ள் முற்றுகையிட்டனர்.

இந்தப் போராட்டத்தில் 60 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் படத்தின் சக்ஸஸ் பிரஸ்மீட் இன்று சென்னை ரெயின் ட்ரீ ஓட்டலில் நடப்பதாக இருந்தது.

ஆனால் பிரஸ்மீட்டுக்கு வரும் செய்தியாளர்கள் யாராவது இந்த பிரச்சினை குறித்து கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளிக்கப்போய் சிக்கலில் சிக்கிக் கொள்வோமோ என பயந்து பிரஸ் மீட்டையே ரத்து செய்து விட்டார்களாம். தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த பிரஸ் மீட் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நபிகளை அவமானப்படுத்தும் விதமாக படமெடுத்த ஹாலிவுட் டைரக்டரை கண்டித்து முஸ்லிம்கள் சென்னையையே ஸ்தம்பிக்க வைத்தது நினைவிருக்கலாம். ஒருவேளை துப்பாக்கி தயாரிப்பாளர்களுக்கு அந்த போராட்டம் நினைவுக்கு வந்துவிட்டதோ என்னமோ..!

'தா' இயக்குநர் சூர்ய பிரபாகர் இயக்கும் அடுத்த படம் ... கோவையில் இன்று பூஜை!

கடந்த ஆண்டு வெளியான படங்களில், சினிமா ஆர்வலர்களின் கவனத்தைக் கவர்ந்த படம் தா. நார்வே தமிழ் திரைப்பட விழாவுக்காக தேர்வு செய்யப்பட்டு, பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்ற படம் இது.

இந்தப் படத்தை இயக்கிய ஆர் கே சூர்ய பிரபாகரின் அடுத்த படம் இன்று கோவையில் பூஜையுடன் தொடங்கியது.

இரண்டு நாயகர்கள், மூன்று நாயகிகள் இடம் பெறும் இந்தப் படத்தின் கதை உண்மையிலேயே வித்தியாசமானதுதான்.

ஒருவனின் இன்பம் துன்பம் இரண்டையுமே அவனுக்குத் தெரியாத யாரோ 6 பேர் நிர்ணயிக்கிறார்கள். இவர்கள் ஒருவருக்கொருவர் பரிச்சயமற்றவர்களாக, எந்தெந்த தேசங்களிலோ வசிப்பவர்களாகக் கூட இருக்கலாம். இந்த தியரி எப்படி இந்த இரு ஹீரோக்களை பாதிக்கிறது என்பதை சுவாரஸ்யமான ஸ்கிரிப்டாக்கியிருக்கிறார் சூர்ய பிரபாகர்.

"கேட்கும்போது இது ஏதோ கற்பனை கதை என்று தோன்றலாம். ஆனால் உண்மையில் என் நண்பன் வாழ்வில் நடந்த கதை இது. இன்றும் அந்த நண்பனை பார்த்துக் கொண்டிருப்பவன் நான். படத்தில் எந்தப் பகுதியும் வலிந்து திணித்தது போல இருக்காது. காமெடி, காதல், ஆக்ஷன் எல்லாமே இயல்பாக அமைந்திருக்கும். நடிகர் நடிகைகள் பற்றிய விவரங்களை விரைவில் அறிவிக்கிறேன்," என்கிறார் சூர்ய பிரபாகர்.

கோவையைச் சேர்ந்த டாக்டர் பி அனந்த கிருஷ்ணன் தனது ரைட்லைன்ஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். பெயர் ஓரிரு நாளில் அறிவிக்கப்பட உள்ளது.

கோவையில் இன்று நடந்த படத்தின் பூஜையில், வாக்கப்பட்ட சீமையிலே படத்தைத் தயாரித்த லிங்க்ஸ் அயூப் மற்றும் பலர் பங்கேற்று வாழ்த்தினர்.

மனநிலை பாதித்த பெண்களின் அவலம் படமாகிறது

Mentally disabled women's tragedy is going to be a movie சென்னை: மனநிலை பாதித்த பெண்களை பாலியல் தொந்தரவு செய்யும் கதை 'மாசி திருவிழா என்ற பெயரில் படமாகிறது. இதுபற்றி இயக்குனர் இ.கே.சேகர் கூறியதாவது: மனநிலை பாதித்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் அதிர்ச்சி தரும் சம்பவங்கள் அவ்வப் போது பத்திரிகைகளில் வெளியாகிறது. இது கொடுமையான விஷயம். இதை தடுக்க வேண்டும். இத்தகைய கதை அம்சத்துடன் மாசி திருவிழா கதை உருவாகி இருக்கிறது. மனநிலை பாதித்த தனது தாயை சிலர் பாலியல் ரீதியாக கொடுமைபடுத்துகின்றனர்.

அதை சிறுவயதில் காணும் மகன் மனதளவில் பாதிக்கப்படுகிறான். வளர்ந்தபின் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு வாழ்வு தருகிறான். அவளையும் சிலர் பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர். அவர்களை எப்படி பழிவாங்குகிறான் என்பதே கதை. விதுன், சதீஷ் ஹீரோ. பானுஸ்ரீ, பாலமீனா ஹீரோயின்கள். இவர்களுடன் சசி, பாலு, அருள்குமார், கலைகோமதி, தாஜ், வெங்கடேசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சீனு ஆதித்யா ஒளிப்பதிவு. காந்திதாசன் இசை. ஜி.அருள்குமார், கே.சேகர் தயாரிப்பு. கோவை நாமக்கல் போன்ற இடங்களில் ஷூட்டிங் நடந்துள்ளது.
 
நடிகையின் உறவினர்களுக்கு செலவு செய்ய மாட்டோம் : தயாரிப்பாளர்கள் போர்க்கொடி

The cost will be relatives of the actress: Manufacturers நடிகைகளுடன் வரும் உறவினர்கள், பணியாளர்களுக்கான செலவை ஏற்க மாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். நடிகர், நடிகைகள் உள்ளூர் மற்றும் வெளியூர் ஷூட்டிங் செல்லும்போது தங்களுக்கு உதவியாக உறவினர் மற்றும் பணியாளர்களை அழைத்துச் செல்கின்றனர். இவர்களுக்காக ஆகும் செலவை பட நிறுவனங்களே ஏற்க வேண்டி உள்ளது. அதை ஏற்க முடியாது என்று தயாரிப்பாளர்கள் ஏற்கனவே கூறி வந்தனர். தற்போது அந்த பிரச்னை மீண்டும் எழுந்துள்ளது. சமீபத்தில் ஒரு ஹீரோயின் தன்னுடன் அழைத்து வந்தவர்களுக்கான செலவை பட நிறுவனமே செய்ய வேண்டும் என்று கூறியதையடுத்து  அதற்கான செலவை நிறுவனம் செய்தது.

இதற்காக நடிகைகளின் சம்பளம்போக கூடுதலாக 10 லட்சம் வரை செலவானதாக கூறப்படுகிறது. இலியானா, அனுஷ்கா போன்றவர்களும் இதுபோன்ற செலவுகளை இழுத்துவிடுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த செலவுகளை கட்டுப்படுத்துவது பற்றி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஆலோசனை நடக்கிறது. ஆனால் சில நடிகர், நடிகைகள் இதில் விதிவிலக்காக உள்ளனர். இது பற்றி தமன்னா கூறும்போது,'வீட்டில் இருக்கும்போது தினமும் நான் உடற்பயிற்சி செய்கிறேன். வெளிப்புற படப்பிடிப்புக்கு செல்லும்போதும் அதை தொடர்வதற்காக என்னுடைய பயிற்சியாளரை உடன் அழைத்துச் செல்கிறேன். அதேபோல் சமையல்காரரையும் அழைத்துச் செல்கிறேன். ஆனால் அவர்களுக்கான செலவு முழுவதையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.
 
படங்களை ஒப்புக்கொள்ள மறுக்கிறார் பிரியாமணி

Priyamani refuses to accept movie புதிய படம் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை என்றார் பிரியாமணி. 'பருத்திவீரன் படம் பெரிய ஹிட் ஆனபோதும் பிரியாமணிக்கு தமிழில் ஒரு சில படங்களில் நடிக்கவே வாய்ப்பு வந்தது. இதனால் டோலிவுட் படங்களில் கவனம் செலுத்தினார். தொடர்ந்து மலையாளம், கன்னட படங்களில் நடித்தார். சமீபத்தில் கன்னடத்தில் அவர் நடித்த 'சாருலதா தமிழில் ரிலீஸ் ஆனது. இப்படத்துக்கு பிறகு மலையாள படங்களில் நடிக்க பிரியாமணி ஒப்புக்கொண்டிருக்கிறார் என்று தகவல் வெளியானது. இதை அவர் மறுத்தார்.

இது குறித்து அவர் கூறும்போது, 'நான் தற்போது நடிப்பிலிருந்து பிரேக் எடுத்திருக்கிறேன். எனது குடும்பத்தினருடன் நேரத்தை கழித்து வருகிறேன். இதற்கிடையில் கதைகளும் கேட்டு வருகிறேன். ஆனால் புதிய படங்களில் நடிக்க அவசரம் காட்டவில்லை. புதிய படங்களைப் பொறுத்தவரை மெதுவாகவே படங்களை ஒப்புக்கொள்ள முடிவு செய்துள்ளேன். மலையாளத்தில் கடைசியாக கிராண்ட் மாஸ்டர் என்ற படத்தில் நடித்தேன். அதன்பிறகு புதிய படங்களை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின்றன. ஆனால் புதிதாக எந்த மலையாள படத்திலும் நடிக்க நான் ஒப்புக்கொள்ளவில்லை என்றார்.
 
கிசு கிசு - காத்திருந்த இயக்கம்

Kodambakkam Kodangi நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...

'கோல்ட் ஃபிஷ் படத்தை கவுதம இயக்கம் தயாரிக்கிறாராம்...  தயாரிக்க¤றாராம்... இந்த படம் தொடங்கி 2 வருஷத்துக்கு மேல ஆயிடுச்சாம். ஏன் இவ்ளோ டிலேன்னு கேட்டா, 'படத்துல நடிக்க¤ற பேபி நடிகைகதான் காரணம்னு சொல்றாங்களாம். அவருக்கு என்னாச்சின்னு கேட்டா, 'ஒண்ணுமில்ல அவரோட சிறுமி பருவத்துல யிருந்து கூடுதலா 3 வருஷம் வளர்ற வரை கதை போகுது. அதுக்காக வேற சிறுமிகளை நடிக்க வெக்காம அந்த பேபி குழந்தை வளர்ற வரை காத்திருந்து ஷூட்டிங்
நடத்தியிருக்கோம்னு சொல்றாங்களாம்... சொல்றாங்களாம்...

தீபாவளிக்கு நிறைய ஹீரோயினுங்க பேமலியோட பட்டாசு கொளுத்த¤னாங்களாம்.. கொளுத்த¤னாங்களாம்... ஆனா அமல ஹீரோயினும், பிரியமான ஆனந்த ஹீரோயினும் பட்டாச கையிலயே தொடலையாம். ரெண்டு பேருமே விலங்குகள காப்பாத்துற சங்கத்துல மெம்பராம். பட்டாசு கொளுத்துனா அதுங்க பயப்படும்னு பட்டாசே கொளுத்தாம சத்தமே இல்லாத மத்தாப்பு மட்டும் கொளுத்தனாங்களாம். தன்னோட தோழிகளுக்கும் இதையே அட்வைஸா சொல்லி பட்டாசு கொளுத்துரத தவிர்க்க சொன்னாங்களாம்... சொன்னாங்களாம்...

புத்தக பட சாங் ரிலீஸ் பங்ஷன்ல பேசன புதுபாத ஹீரோ தமாஷா பேசறமாதிரி வேல்டு ஹீரோவையும், ஐ காட் ஹீரோவையும் நக்கலடிச்சாராம்... நக்கலடிச்சாராம்... 'இன்டஸ்ட்ரில கிஸ் கலாச்சாரத்த பரப்புனதே இவங்கதான்னு சொன்னதோட, ஐ காட் ஹீரோ, ஜோடியா நடிக்கற ஹீரோயின்கள பிக்கப் பண்றதுலய குறியா இருக்காருனு சொன்னாராம். பங்ஷன்ல இருந்த ஐ காட் ஹீரோ இத கேட்டு ஷாக் ஆயிட்டாராம்... ஆயிட்டாராம்...  ஸ்டேஜுக்கு வந்தவர், 'எந்த ஹீரோயினயும் நான் பிக்கப் பண்ணலனு புதுபாத ஹீரோக்கு சூடா பதில் சொன்னாராம்... சொன்னாராம்...
 
போடா போடி - விமர்சனம்

Rating:
2.5/5

-எஸ் ஷங்கர்

நடிப்பு: சிம்பு, வரு சரத்குமார் (வரலட்சுமி), ஷோபனா, விடிவி கணேஷ்
இசை: தரன் குமார்
மக்கள் தொடர்பு: நிகில்
ஒளிப்பதிவு: டங்கன் டெல்போர்டு
தயாரிப்பு: ஹிதேஷ் ஜபக்
இயக்கம்: விக்னேஷ் சிவன்

பெண்ணென்பவள் திருமணத்துக்குப் பின் கணவனை கவனித்துக் கொண்டு, பிள்ளை பெற்று, அதை வளர்ப்பதிலேயே காலத்தைக் கழிக்க வேண்டுமா... அவளுக்கென்று கேரியர் வேண்டாமா...

தன் கண் முன் மனைவி ஆண் நண்பர்களுடன் எப்படி இருந்தாலும் அதை கணவன் சகித்துக் கொண்டுதான் இருக்க வேண்டுமா?

poda podi review
Close
 
-இந்த ஈகோ மோதல்தான் போடா போடி படம். அதனை முடிந்தவரை சுவாரஸ்யமாகக் கொடுக்க முயன்றிருக்கிறார்கள்.

அனிமேஷன் டிசைனர் சிம்புவும், நடனக் கலைஞர் வரு சரத்குமாரும் காதலிக்கிறார்கள். காதல் என்றால் பொய் இல்லாமலா... இந்தக் கதையில் பொய்யாய் அவிழ்த்துவிடுபவர் ஹீரோயின் வரலட்சுமி. ஆனால் எதற்காகவும் நடனத்தை விட்டுத் தர மறுக்கிறார். இந்தப் பொய் மற்றும் பிடிவாதத்தால் வெறுத்துப்போய் 'போடி உன் காதலும் வேண்டாம் கத்தரிக்காயும் வேண்டாம்' என்று ஓடுகிறார் சிம்பு.

ஊடல் முடிந்து மீண்டும் கூடுகிறார்கள். இந்த முறை, திருமணம் செய்து கொண்டால் வரலட்சுமியை வழிக்குக் கொண்டு வந்துவிடலாம் என்ற யோசனை உதிக்க, சிம்பு அதை செயல்படுத்த முயல்கிறார். ஆனால் திருமணத்துக்குப் பிறகும் நடனத்தை விடமுடியாது, தன் பழக்கங்களையும் மாற்றிக் கொள்ளமுடியாது என்கிறார் வரலட்சுமி. கர்ப்பமாக்கிவிட்டால் நடனமாட முடியாதே என்ற அபார யோசனையை சித்தப்பா விடிவி கணேஷ் சொல்ல, அதையும் செயல்படுத்திப் பார்க்கிறார்.

குழந்தை பிறக்கிறது. இருவரின் சண்டையில் ஒரு விபத்து நேர, அதில் குழந்தை இறக்கிறது. சிம்புவும் வரலட்சுமியும் பிரிகிறார்கள். பிரிந்த மனைவியை ஒடிப்போய் மல்லுக்கட்டி மீண்டும் குடித்தனம் நடத்த கூட்டி வருகிறார் சிம்பு, நடனமாடியே தீருவேன் என்ற அவரது நிபந்தனையை ஏற்றுக் கொண்டு.

ஆனால், மீண்டும் ஈகோ மோதல் வெடிக்கிறது. நடனமாடும்போது அடுத்தவன் உன்னைத் தொடுவதை எப்படி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது என்ற சிம்புவின் ஆதங்கத்தின் மூலம்...

கடைசியில் இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டுகிறார்கள். கண்டவனுடன் ஆடுவதைவிட, கணவனுடனே ஆடித் தொலைக்கிறேன் என வரலட்சுமி முடிவு செய்ய, சிம்பு டான்ஸ் பார்ட்னராகிறார்.

ஆனால் டான்ஸ் காம்பெடிஷனில் அவர் சொதப்புகிறார். 'சரி, எனக்குதான் சல்சா டான்ஸ் வரவில்லை.. அதனால் எனக்கு நன்றாக ஆட வரும் குத்து டான்ஸுக்கு நீ மாறிக் கொள்' என சிம்பு அட்வைஸ் பண்ண, சல்சா குத்துக்கு மாறுகிறது. சக்ஸஸ் ஆகிறது.

ஆனால்... அடுத்து டான்ஸ் காம்பெட்டிஷனில் இன்னும் 14 ரவுண்டுகள் இருக்கின்றன. அதில் எப்படி ஜெயிப்பது என்று வரலட்சுமி கேட்க, அதற்கு சிம்பு ஒரு டெக்னிக் வைத்திருக்கிறார். அது மீண்டும் வரலட்சுமியை கர்ப்பமாக்குவது.. அப்புறம்....சுபம்!

ஸ்ஸப்பா... ஒருவழியா கதையை எழுதி முடிச்சிட்டேன். கதையை எழுதும் போதுதான் இத்தனை இம்சையாக இருக்கிறதே தவிர... அதை புது இயக்குநர் விக்னேஷ் சிவன் படமாக்கிய விதம், கொஞ்சம் புதுசாகவும் சுவாரஸ்யமாகவும்தான் இருக்கிறது.

நெத்தியடியாக ஒரு தோல்வி கிடைத்தால்தான் சிம்பு மாதிரி ஹீரோக்கள் வாயையும் கையையும் அடக்கிக் கொண்டு நடிப்பார்கள் போலிருக்கிறது. ஒஸ்தியில் பட்ட அடி, இந்தப் படத்தில் அவரை அப்படியே திருப்பிப் போட்டிருக்கிறது (அட்லீஸ்ட் அப்படி நடிக்கவாவது செய்ய வைத்திருக்கிறது).

அவரை விட வெயிட்டான ரோல் வரலட்சுமிக்கு. அதை செவ்வனே செய்திருக்கிறார். குரலும் தோற்றமும் சற்று கடூரம்தான் என்றாலும், அவரது ஈடுபாடும், டான்ஸும் அவற்றை மறக்கடிக்க வைக்கிறது. அவரை ஏன் இந்தப் படத்துக்கு ஹீரோயினாக்கினார்கள் என்பதை சரியாக நியாயப்படுத்தியிருக்கிறார் வரலட்சுமி.

விடிவி கணேஷ் வரும் காட்சிகளில் தியேட்டர் கலகலக்கிறது. ஆனால் இன்னும் எத்தனைப் படத்துக்கு இது ஒர்க் அவுட் ஆகும் என்ற கேள்வியையும் தவிர்க்க முடியவில்லை.

ஷோபனாவுக்கு ஒரு ரெண்டுங்கெட்டான் கேரக்டர்.

ஒட்டுமொத்தமாக படம் சூப்பர் என்று சொல்ல முடியாவிட்டாலும், பல காட்சிகள் ரசிக்கும்படி இருப்பதை சொல்லித்தான் ஆக வேண்டும். குறிப்பாக பிரிந்த மனைவியை கூட்டிப் போக வரும் சிம்பு, ஷோபனாவிடம் வாதிடுவது. குழந்தைக்காக அவர் பாடும் ங்கொப்பன் மவனேயை ரசிக்க முடியவில்லை என்றாலும், அதை எடுத்திருக்கும் இடம், விதம் அழகு. முழு கிரெடிட்டும் ஒளிப்பதிவாளருக்குதான்!

டாய்லெட்டுக்குள் வெறுப்புடன் வீசியெறிந்த திருமண மோதிரத்தை வரலட்சுமி மீண்டும் எடுப்பது, படத்தில் சபாஷ் பெறும் இன்னொரு காட்சி!

காதல், ஊடல், சண்டை, பிரிவு, மீண்டும் கூடல், ஊடல், சண்டை என ரோலர் கோஸ்டர் மாதிரி காட்சிகள் நகர்வதில் ஒரு கட்டத்தில் களைப்புத் தட்டுவதும் உண்மைதான். ஆனால் அந்த டான்ஸ் காம்பெடிஷன் நெருங்க நெருங்க, நாமும் அதில் ஐக்கியமாவதை உணர்கிறோம்...

தரணின் இசை பரவாயில்லை. பாடல்கள் எதுவும் நினைவிலும் இல்லை. மீண்டும் மீண்டும் தன் பழைய பாடல்களையே புதுப் பாட்டாக கோர்ப்பதை சிம்பு எப்போது விடப் போகிறாரோ!

புது இயக்குநர் விக்னேஷ் சிவன், எடுத்த எடுப்பிலேயே கொஞ்சம் வித்தியாசமான கதையை வித்தியாசமான அணுகுமுறையோடு ரசிகர்களுக்கு தந்திருக்கிறார். ஆனால் இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்றும் சொல்ல முடியாது!

எதிர்ப்பார்ப்பில்லாமல் போனால் ரசிக்கலாம்!

பூவோடும் புயலோடும்

சென்னை : தெலுங்கில் ரிலீசான 'தக்கரகா தூரங்கா', தமிழில் 'பூவோடும் புயலோடும்' பெயரில் டப் ஆகிறது. நாமக்கல் பாலாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.சுரேஷ்காந்தி, டி.எஸ்.கோபி தயாரிக்கின்றனர். சுமந்த், வேதிகா, சிந்து துலானி நடிக்கின்றனர். வசனம், சத்யன். இசை, ரகு குன்ச்சே. படம் பற்றி சத்யன் கூறும்போது, ''விளம்பர கம்பெனி வடிவமைப்பாளரான ஹீரோ, கம்ப்யூட்டரில் அழகிய பெண்ணை வரைந்து, காமாட்சி என்று பெயரிடுகிறார். திடீரென்று அவளைப் போல் தோற்றம் கொண்டவள் வருகிறார். அவரை ஹீரோ காதலிக்கிறார். சில பிரச்னைகள் காரணமாக அவர்கள் திருமணம் தடைபடுகிறது. ஏன், எதற்கு, பிறகு என்ன நடக்கிறது என்பது கதை'' என்றார்.
 
விக்ரம் பிரபுக்காக குடும்ப செல்வாக்கை பயன்படுத்த மாட்டோம்

சென்னை : பிரபுவின் மகன் விக்ரம் பிரபு ஹீரோவாக அறிமுகமாகும் படம், 'கும்கி'. இந்தப் படம் டிசம்பரில் ரிலீஸ் ஆகிறது. இந் நிலையில் பிரபு, தன் மகன் விக்ரமை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் பேசியதாவது: விக்ரம் பிரபுவுக்கு ஆரம்பத்தில், நடிக்கும் ஆசை இல்லை. அதனால் அமெரிக்காவுக்கு படிக்கப் போனார். பிறகு அவருக்கு சினிமா ஆசை வந்து அவராகவே வாய்ப்பு தேடி, வாய்ப்பை பெற்றிருக்கிறான்.

எங்கள் குடும்ப செல்வாக்கை அவன் பயன்படுத்தவில்லை. இனியும் பயன்படுத்த மாட்டோம். தன் திறமை, உழைப்பைக் கொண்டு முன்னுக்கு வரவேண்டும். நான்கைந்து படங்களுக்கு பிறகு வேண்டுமானால் சிவாஜி பிலிம்சில் நடிக்கலாம். விக்ரம் பிரபு இப்போது அடுத்த படத்தில் நடித்துக் கொண்டிருந்தாலும் 'கும்கி' வெளியீட்டை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
 
இயக்குனர் ஜோதி கிருஷ்ணா திருமணம்

சென்னை : 'கேடி', 'எனக்கு 20 உனக்கு 18' படங்களை இயக்கியவர் ஜோதி கிருஷ்ணா. சமீபத்தில் வெளியான 'ஊலலலா' படத்தை ஹீரோவாக நடித்து இயக்கினார். தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மூத்த மகனான இவருக்கும் சிவகுருநாதன் ,துளசி தம்பதியரின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்கள் திருமணம் வரும் 23ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்கின்றனர். இதையடுத்து 26,ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துவார்கள் என்று தெரிகிறது.

புத்தகம் சொல்லும் ரகசியம்: விஜய் ஆதிராஜ்

சென்னை : ராம் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் டாக்டர் வி.ராமதாஸ் தயாரிக்கும் படம், 'புத்தகம்'. ஆர்யா தம்பி சத்யா ஹீரோ. ரகுல் பிரீத்தி சிங், ரட்சணா மவுரியா, ஜெகபதி பாபு, சுரேஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். விஜய் ஆதிராஜ் இயக்குகிறார். இசை, ஜேம்ஸ் வசந்தன். பாடல்கள்: நா.முத்துக்குமார், பா.விஜய், மதன் கார்க்கி. இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

பிறகு படம் பற்றி விஜய் ஆதிராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: பல்வேறு இடங்களில் நான் பார்த்த, கேட்ட சம்பவங்களை வைத்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளேன். கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்ற  கருத்து இடம்பெற்றுள்ளது. ஒரு பெண்ணை பார்ப்பதற்கு முன்னும் பின்னும் சத்யா, விக்னேஷ், சஞ்சய் பாரதி ஆகிய மூன்று நண்பர்களுடைய வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை. சத்யா, அஞ்சல் மூலம் படிக்கும் மாணவன். சஞ்சய் பாரதி கூரியர் சர்வீசிலும், விக்னேஷ் ஹேர்டிரஸராகவும், ரகுல் பிரீத்தி சிங் சேனல் ரிப்போர்ட்டராக நடிக்கின்றனர். ஜேம்ஸ் வசந்தன் இசையும், லஷ்மன் ஒளிப்பதிவும் படத்துக்கு கூடுதல் பலத்தைக் கொடுத்துள்ளது.
 
தீபிகா படுகோன் அத்தையாக மனோரமா

சென்னை : தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட மொழிகளில் 1,200 படங்களுக்கு மேல் நடித்துள்ள மனோரமா, தற்போது மீண்டும் இந்தி படத்தில் நடிக்கிறார். ஷாரூக்கான் ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கும் படம், 'சென்னை எக்ஸ்பிரஸ்'. இதில் தீபிகா படுகோனின் அத்தையாக நடிக்கிறார் மனோரமா. 1975,ல் ரிலீசான 'குன்
 
போரிடப் பழகு

சென்னை : புளூ ஸ்டார் ஸ்டுடியோஸ் சார்பில் திட்டக்குடி ம.பாலாஜி, மதுரை எஸ்.ரோஸ்மேரி தயாரிக்கும் படம், 'போரிடப் பழகு'. மாஸ்டர் மகேந்திரன், நீலாம்பரி, ரியாஸ்கான், கிரேன் மனோகர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஆண்டனி. இசை, பவதாரணி. பாடல்கள்: பா.விஜய், சினேகன், கிருதயா. வசனம், நிம்பஸ் நாராயணன். கதை, திரைக்கதை எழுதி இயக்கும் சேகர் பாரதி கூறும்போது, 'மணல் கடத்தும் ரியாஸ்கானிடம் லாரி டிரைவராகப் பணியாற்றுகிறார், மகேந்திரன். அவரது காதலி நீலாம்பரி, இயற்கை மற்றும் சுற்றுப்புற சூழ்நிலைகளால் உண்டாகும் அதிசயங்களையும், மனித வாழ்க்கைக்கான அவசியத்தையும் மகேந்திரனுக்குப் புரிய வைக்கிறார். இதையடுத்து ரியாஸ்கானை எதிர்க்கும் மகேந்திரன், எப்படி ஜெயிக்கிறார் என்பது கதை' என்றார்.
 
மாமன் மச்சான்

சென்னை : ஹனீபா பிலிம்ஸ் சார்பில் ஏ.முஹம்மது ஹனீபா தயாரிக்கும் படம், 'மாமன் மச்சான்'. அமுதன், அருண், அபிநிதி, மோனிஷா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, விஜய் திருமூலம். இசை: சரத் பிரியதேவ், நிர்மல். பாடல்கள், சேது ராமலிங்கம். எழுதி, இயக்கும் எம்.ஜெயராஜ் கூறும்போது, 'மாமன் விடாக்கொண்டனாகவும், மச்சான் கொடாக்கொண்டவனாகவும் இருந்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை காமெடியுடன் சொல்லும் படம் இது. திருச்சி, சமயபுரம், காஞ்சிபுரம் பகுதிகளில் ஷூட்டிங் நடந்துள்ளது' என்றார்.
 
விஜய் வீட்டை முற்றுகையிட முயன்ற 60 பேர் கைது

சென்னை : விஜய் நடித்து தீபாவளிக்கு திரையிடப்பட்டுள்ள துப்பாக்கி படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதியாக, தேச துரோகிகளாக சித்தரித்திருப்பதாக கூறி, அவரை கண்டித்து இந்திய தேசிய லீக் கட்சி மாநில பொது செயலாளர் தடா அப்துல்ரஹீம் தலைமையில் நீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று திரண்டனர்.

அங்கிருந்து விஜய் வீட்டுக்கு ஊர்வலமாக செல்ல முயன்றனர். தகவலறிந்து அடையாறு துணை கமிஷனர் சுதாகர், நீலாங்கரை உதவி கமிஷனர் உமாசங்கர், இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் போலீஸ் படையினர் வந்து, 60க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.  
இதுகுறித்து அப்துல் ரஹீம் கூறுகையில், ரஜினி சூப்பர் ஸ்டார். அவர் எந்த சமுதாயத்தையும் இழிவுபடுத்தி படங்களில் நடித்ததில்லை. ஆனால் விஜய் ஒவ்வொரு படத்திலும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டி நடித்து பெரிய ஆளாகுவதற்கு நினைக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.
 
விஜய் வீட்டை முற்றுகையிட முயன்ற 60 பேர் கைது

சென்னை : விஜய் நடித்து தீபாவளிக்கு திரையிடப்பட்டுள்ள துப்பாக்கி படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதியாக, தேச துரோகிகளாக சித்தரித்திருப்பதாக கூறி, அவரை கண்டித்து இந்திய தேசிய லீக் கட்சி மாநில பொது செயலாளர் தடா அப்துல்ரஹீம் தலைமையில் நீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று திரண்டனர்.

அங்கிருந்து விஜய் வீட்டுக்கு ஊர்வலமாக செல்ல முயன்றனர். தகவலறிந்து அடையாறு துணை கமிஷனர் சுதாகர், நீலாங்கரை உதவி கமிஷனர் உமாசங்கர், இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் போலீஸ் படையினர் வந்து, 60க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.  
இதுகுறித்து அப்துல் ரஹீம் கூறுகையில், ரஜினி சூப்பர் ஸ்டார். அவர் எந்த சமுதாயத்தையும் இழிவுபடுத்தி படங்களில் நடித்ததில்லை. ஆனால் விஜய் ஒவ்வொரு படத்திலும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டி நடித்து பெரிய ஆளாகுவதற்கு நினைக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.
 
விக்ரம் பிரபுக்காக குடும்ப செல்வாக்கை பயன்படுத்த மாட்டோம்

சென்னை : பிரபுவின் மகன் விக்ரம் பிரபு ஹீரோவாக அறிமுகமாகும் படம், 'கும்கி'. இந்தப் படம் டிசம்பரில் ரிலீஸ் ஆகிறது. இந் நிலையில் பிரபு, தன் மகன் விக்ரமை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் பேசியதாவது: விக்ரம் பிரபுவுக்கு ஆரம்பத்தில், நடிக்கும் ஆசை இல்லை. அதனால் அமெரிக்காவுக்கு படிக்கப் போனார். பிறகு அவருக்கு சினிமா ஆசை வந்து அவராகவே வாய்ப்பு தேடி, வாய்ப்பை பெற்றிருக்கிறான்.

எங்கள் குடும்ப செல்வாக்கை அவன் பயன்படுத்தவில்லை. இனியும் பயன்படுத்த மாட்டோம். தன் திறமை, உழைப்பைக் கொண்டு முன்னுக்கு வரவேண்டும். நான்கைந்து படங்களுக்கு பிறகு வேண்டுமானால் சிவாஜி பிலிம்சில் நடிக்கலாம். விக்ரம் பிரபு இப்போது அடுத்த படத்தில் நடித்துக் கொண்டிருந்தாலும் 'கும்கி' வெளியீட்டை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
 
பூவோடும் புயலோடும்

சென்னை : தெலுங்கில் ரிலீசான 'தக்கரகா தூரங்கா', தமிழில் 'பூவோடும் புயலோடும்' பெயரில் டப் ஆகிறது. நாமக்கல் பாலாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.சுரேஷ்காந்தி, டி.எஸ்.கோபி தயாரிக்கின்றனர். சுமந்த், வேதிகா, சிந்து துலானி நடிக்கின்றனர். வசனம், சத்யன். இசை, ரகு குன்ச்சே. படம் பற்றி சத்யன் கூறும்போது, ''விளம்பர கம்பெனி வடிவமைப்பாளரான ஹீரோ, கம்ப்யூட்டரில் அழகிய பெண்ணை வரைந்து, காமாட்சி என்று பெயரிடுகிறார். திடீரென்று அவளைப் போல் தோற்றம் கொண்டவள் வருகிறார். அவரை ஹீரோ காதலிக்கிறார். சில பிரச்னைகள் காரணமாக அவர்கள் திருமணம் தடைபடுகிறது. ஏன், எதற்கு, பிறகு என்ன நடக்கிறது என்பது கதை'' என்றார்.
 
தமிழில் டப் ஆகிறது அனுஷ்கா படம்

சென்னை : தெலுங்கில் ரிலீசான 'ஸ்வாகதம்', தமிழில் 'அமெரிக்கா டூ அமைந்தகரை' பெயரில் டப் ஆகிறது. ஸ்ரீசக்ரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. அர்ஜுன், அனுஷ்கா, பூமிகா, ஜெகபதி பாபு நடிக்கின்றனர். இசை, ஆர்.பி.பட்நாயக். பாடல்கள்: கவி கார்கோ, ஜெயமுரசு, கருணாநிதி, யுவஸ்ரீ. வசனம், ஏ.ஆர்.கே.ராஜராஜா. இயக்கம், தசரதன். அமெரிக்கா வரும் அர்ஜுனுக்கு வழிகாட்டியாக இருக்கும் அனுஷ்கா, அவரைக் காதலிக்கிறார். திடீரென்று அர்ஜுன் இந்தியா திரும்புகிறார். அவர்களின் காதல் நிறைவேறியதா என்பது கதை. அடுத்த மாதம் ரிலீசாகிறது.

போரிடப் பழகு

சென்னை : புளூ ஸ்டார் ஸ்டுடியோஸ் சார்பில் திட்டக்குடி ம.பாலாஜி, மதுரை எஸ்.ரோஸ்மேரி தயாரிக்கும் படம், 'போரிடப் பழகு'. மாஸ்டர் மகேந்திரன், நீலாம்பரி, ரியாஸ்கான், கிரேன் மனோகர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஆண்டனி. இசை, பவதாரணி. பாடல்கள்: பா.விஜய், சினேகன், கிருதயா. வசனம், நிம்பஸ் நாராயணன். கதை, திரைக்கதை எழுதி இயக்கும் சேகர் பாரதி கூறும்போது, 'மணல் கடத்தும் ரியாஸ்கானிடம் லாரி டிரைவராகப் பணியாற்றுகிறார், மகேந்திரன். அவரது காதலி நீலாம்பரி, இயற்கை மற்றும் சுற்றுப்புற சூழ்நிலைகளால் உண்டாகும் அதிசயங்களையும், மனித வாழ்க்கைக்கான அவசியத்தையும் மகேந்திரனுக்குப் புரிய வைக்கிறார். இதையடுத்து ரியாஸ்கானை எதிர்க்கும் மகேந்திரன், எப்படி ஜெயிக்கிறார் என்பது கதை' என்றார்.
 
கனல் பாடல் வெளியீடு

சென்னை : எம்.கே.எல் புரொடக்ஷன் தயாரிக்கும் படம், 'கனல்'. ஜெயகுமார் இயக்கி நடிக்கிறார். பவீனா ஹீரோயின். ஆதிஷ் உத்ரியன் இசை. இதன் பாடல் வெளியீடு சென்னையில் நடந்தது. அபிராமி ராமநாதன் வெளியிட, தயாரிப்பாளர் கேயார் பெற்றார். விழா முடிவில் டி.ஜெயகுமார் படம் பற்றி கூறும்போது, 'ஒரு கிராமத்தில் பெரிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து கொல்லப்படுகிறார்கள். அதை செய்வது ஊர் கருப்பசாமி என்று நம்புகிறார்கள். உண்மையில் கொலையாளி யார் என்பதை தொலைக்காட்சி குழுவினரும், போலீஸ் அதிகாரிகளும் கண்டுபிடிப்பதுதான் கதை' என்றார்.
 
தமிழில் ஷனா ஓபராய்

சென்னை: கோவை ஸ்ரீராஜ் தயாரிக்கும் 3டி படம், 'நான்காம் பிறை'. பிரபு, நாசர், மனோபாலா, கஞ்சா கருப்பு உட்பட பலர் நடிக்கின்றனர். படத்தை இயக்கும் வினயன் கூறியதாவது: இது 3டி படம். ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களை மிரட்ட வேண்டும் என்று ருமேனியாவில் உள்ள டிராகுலா மாளிகையில் முக்கிய காட்சிகளைப் படமாக்கியுள்ளோம். ஸ்டீரியோ பணிகளை, லண்டனைச் சேர்ந்த டியானா சில்விஸ்டர் கவனிக்கிறார். இந்தி மற்றும் தெலுங்கு கிளாமர் நடிகை ஷனா ஓபராய், ஒரு பாடல் காட்சியில் ஆடியுள்ளார். டிராகுலா வேடத்தில் சுதிர் நடிக்கிறார். ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்கள் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் செய்துள்ளனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள படம். விரைவில் ரிலீசாகிறது.
 
ஒரு பாட்டுக்கு ஆடினார் அஞ்சலி

சென்னை : தமிழில் 'மதகஜராஜா', 'சேட்டை', 'வத்திக்குச்சி' படங்களில் நடிக்கும் அஞ்சலி,, ஹரி இயக்கத்தில் உருவாகும் 'சிங்கம் 2' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். இதற்காக அவருக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். ராஜூசுந்தரம் நடனப் பயிற்சியில் சூர்யாவுடன் அஞ்சலி ஆடிய பாடல் காட்சி தூத்துக்குடி மற்றும் மணப்பாடு பகுதியில் படமாக்கப்பட்டது. ப்ரியன் ஒளிப்பதிவு செய்தார். தேவிஸ்ரீபிரசாத் இசை. இப்படத்தில் சூர்யா ஜோடியாக அனுஷ்கா, ஹன்சிகா நடிக்கின்றனர்.