புது யுகம்... புதிய தொலைக்காட்சி தொடக்கம்

சென்னை: புதிய தலைமுறை தொலைக்காட்சி குழுமத்திலிருந்து ‘புதுயுகம்' எனும் பொழுதுப்போக்கு டிவி சேனல் இன்று முதல் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது. ‘நியூ ஜெனரேஷன் மீடியா' நிறுவன தலைவர் சத்திய நாராயணன் இதனை தொடக்கி வைத்தார்.

குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என்று அனைவரும் ஒருசேர அமர்ந்து பார்த்து ரசிக்கும் வண்ணம் நெடுந்தொடர்கள் மற்றும் குறுந்தொடர்கள் தயாரிக்கப்பட்டுள்ளனவாம். இந்த தொடர்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்டு புனையப்பட்டுள்ளன.

புது யுகம்... புதிய தொலைக்காட்சி தொடக்கம்

பொழுதுகள் போக்குவதற்கு இல்லை அனுபவிக்கவேண்டியவை என்பதை உணர்த்தும் வகையில் காலை முதல் இரவு வரை நேயர்களை ஒருமுகப்படுத்தும் வகையில் புதுயுகம் தொலைக்காட்சியில், நிகழ்ச்சிகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

புதிய கோணத்தில்

இந்த டிவியில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், தொடர்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், சமையல் நிகழ்ச்சிகள், விவாதங்கள் என்று நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் புதிய கோணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளனவாம்.

புது யுகம்... புதிய தொலைக்காட்சி தொடக்கம்

அழ வைக்காத சீரியல்கள்

வீட்டுப் பெண்களை அழவைத்து அழகு பார்க்கவைப்பதிலும் முறையற்ற உறவுகளைக்காட்டி பார்வையாளர்களை வசீகரிக்கும் நோக்கமுமின்றி, நிகழ்ச்சிகளிலும் தொடர்களிலும் கேளிக்கை , பொழுதுபோக்கு , கொண்டாட்டம் அதே சமயத்தில் வாழ்க்கை மதிப்பீடுகளை தூக்கிப்பிடிக்கும் செய்திகளும் கொண்டதாய் புதுயுகம் உருவாக்கப்பட்டுள்ளது என்கின்றனர் தொலைக்காட்சி நிறுவனத்தினர்.

சன் நியூஸ் சேனலுக்கு போட்டியாக புதிய தலைமுறை ஒளிபரப்பாவதைப் போர சன்டிவி சேனலுக்கு கடுமையான போட்டியை புதுயுகம் சேனல் உருவாக்கும் என்கின்றனர் ஊடக உலகத்தினர்.

 

நடிக்க வந்துட்டு தொப்புள காட்ட மாட்டேன், தொடையை காட்ட மாட்டேங்கிறதா: நடிகை விளாசல்

சென்னை: நயனமான நடிகை தொப்புள் நடிகையை விளாசியுள்ளார்.

கேரளாவில் இருந்து வந்த நடிகை தொப்புள் விவகாரத்தை பெரிதாக்குவதற்கு முன்பு கோலிவுட் விரும்பும் நாயகியாக இருந்தார். இது பல முன்னணி நடிகைகளுக்கு காதில் புகையை வரவழைத்தது.

வந்த வேகத்தில் இந்த நடிகைக்கு இத்தனை பட வாய்ப்புகளா என்று வெம்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த நடிகை ஒரு படத்தில் எடுக்கப்பட்ட தொப்புள் காட்சியை பெரிய பிரச்சனையாக்கி இறுதியில் நாங்கள் சமாதானமாகிவிட்டோம் என்று கூறி புஸ்ஸாக்கிவிட்டார். இதை பார்த்த கோடம்பாக்கத்தினர் படத்திற்கு இப்படி எல்லாமா பப்ளிசிட்டி தேடுவது என்று தலையில் அடித்துக் கொண்டனர். இதையடுத்து அந்த நாயகியை ஒப்பந்தம் செய்ய ஆளாளுக்கு அஞ்சுகிறார்களாம்.

இந்நிலையில் இது பற்றி நயனமான நடிகையிடம் கேட்டதற்கு அவர் கூறுகையில்,

சினிமாவின் ஒரு அங்கம் கவர்ச்சி. தற்போது ஹீரோயின்களை அயிட்டம் நடிகைகள் போன்று பயன்படுத்துகிறார்கள். இது எல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு சினிமாவுக்கு வந்த பிறகு தொப்புளை காட்ட மாட்டேன், தொடையை காட்ட மாட்டேன் என்பது வேடிக்கையாக உள்ளது என்றார்.

தொப்புள் நடிகையை சின்ன நயனம் என்றெல்லாம் வர்ணித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

'இல்ல இல்ல... நான் ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்கல, அரசியல் பேசல!' - விஜய் அவசர மறுப்பு

'இல்ல இல்ல... நான் ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்கல, அரசியல் பேசல!' - விஜய் அவசர மறுப்பு

சென்னை: ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து நான் அரசியல் ஆலோசனை நடத்தவே இல்லை என்று நடிகர் விஜய் அவசரமாக மறுத்துள்ளார்.

சமீபத்தில் தன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலரை வெளிமாநிலத்தில் ரகசியமாகச் சந்தித்து அரசியல் ஆலோசனை நடத்தினார் விஜய் என தகவல் வெளியானது. இது ஊடகங்களில் செய்தியாகவும் வெளியிடப்பட்டது.

இப்போது இதுகுறித்து விஜய் விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமீபத்தில் நான் கேரளாவில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து அரசியல் சம்மந்தமாக ஆலோசனையில் ஈடுபட்டதாக செய்தி வெளியானது. இதை படித்து ரசிகர்களும், பொதுமக்களும், மீடியா நண்பர்களும் குழப்பம் அடைந்துள்ளார்கள்.

நான், கடந்த இரண்டு மாதமாக ஹைதராபாத்தில் ஜில்லா படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறேன். கேரளாவிற்கே நான் செல்லவில்லை. அப்படியிருக்க இப்படியொரு தவறான செய்தியால் ரசிகர்கள் மட்டுமின்றி நானும் குழப்பம் அடைந்தேன்.

நான் இப்போது வருடத்திற்கு இரண்டு படங்கள் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இரவு பகலாக உழைத்து வருகிறேன். எனது வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் பக்க பலமாகவும் இருப்பது பத்திரிகை நண்பர்கள்தான். ஆகவே தயவு செய்து உண்மை இல்லாத செய்திகளை வெளியிட்டு ரசிகர்களுக்கும், மக்களுக்கும் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.

 

பாண்டிய நாடு படத்துக்கு யுஏ... விஷால் ஷாக்.. மறு தணிக்கைக்கு முயற்சி!

சென்னை: விஷாலின் பாண்டிய நாடு படத்துக்கு யு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்காத விஷால், படத்தை மறு தணிக்கைக்கு அனுப்ப முயற்சி மேற்கொண்டுள்ளார்.

விஷால், லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பாண்டிய நாடு'. இப்படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். இப் படத்தை விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். தீபாவளிக்கு இப்படம் வெளியாகிறது, தியேட்டர்கள் லிஸ்டும் அறிவிக்கப்பட்டுவிட்டது.

தீபாவளிக்கு குறைந்தது ஒரு வாரம் முன்பே படங்களின் தணிக்கைச் சான்றிதழைத் தரவேண்டும் என அனைத்து திரையரங்குகளும் கோரிக்கை விடுத்திருந்தன. எனவே படத்தை முன்கூட்டியே தணிக்கை செய்து வருகின்றனர்.

பாண்டிய நாடு படத்துக்கு யுஏ...  விஷால் ஷாக்.. மறு தணிக்கைக்கு முயற்சி!

ஆரம்பம் மற்றும் ஆல் இன் ஆல் அழகுராஜா படங்களுக்கு கடந்த வாரமே தணிக்கை முடிந்து யு சான்றும் கிடைத்துவிட்டது.

ஆனால் பாண்டியநாடு படத்துக்கு நேற்றுதான் தணிக்கை நடந்தது. இந்தப் படத்துக்கு யுஏ சான்று அளித்துள்ளனர் தணிக்கைக் குழுவினர். படத்தில் நிறைய சண்டைக் காட்சிகள் என்பதால் இந்த சான்று.

இதனை விஷாலும் படக்குழுவும் ஏற்கவில்லை. காரணம் யு ஏ சான்றிதழ் பெற்றால் டிவியில் ஒளிபரப்புவது கஷ்டம். வரிவிலக்கும் கிடைக்காது. எனவே மறு தணிக்கைக்கு அனுப்ப முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

 

படப்பிடிப்பில் கடலுக்குள் விழுந்தார் சத்யன்!

படப்பிடிப்பில் கடலுக்குள் விழுந்தார் சத்யன்!

சென்னை: நவீன சரஸ்வதி சபதம் படப்பிடிப்பின் போது கடலுக்குள் விழுந்து பரபரப்பேற்படுத்தினார் நடிகர் சத்யன்.

கே சந்துரு இயக்கத்தில் ஜெய், நிவேதா தாமஸ் நடிக்கும் படம் ‘நவீன சரஸ்வதி சபதம்'.

மலேசியாவில் உள்ள ரெடாங் என்ற தீவில் இப்படத்தை படமாக்கியபோது தீவின் கரையில் கடலில் விழுந்துவிட்டாராம் நடிகர் சத்யன். இதுகுறித்து இயக்குனர் கே.சந்துரு கூறுகையில், "நவீன சரஸ்வதி சபதம்' ஒரு வித்தியாசமான காமெடி படம். இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள ரெடாங் தீவில் 25 நாட்கள் நடந்தது. கடலில் சுமார் 4 மணி நேரம் படகு சவாரி செய்துதான் ரெடாங் தீவுக்கு செல்லமுடியும். அந்த தீவில் இரண்டு ரிசார்ட்ஸ் மட்டும்தான்.

அங்கு படப்பிடிப்பு நடத்த சென்றபோது கடலுக்குள் சத்யன் விழுந்துவிட்டார். எங்களின் பாதுகாப்புக்காக ஒரே ஒரு படகுதான் வரும். சத்யன் கடலில் விழுந்ததும் அவருக்கு நீச்சல் தெரியும் என்று அசட்டையாக இருந்துவிட்டனர்.

ஆனால் விழுந்து சிறிதுநேரம் வரை சத்யன் வெளியே வராததால் நாங்கள் பயந்து கூச்சல் போட்டு சத்யனை தேடச் சொன்னோம். அதன்பிறகு அவர்கள் கடலுக்குள் குதித்து சத்யனை மீட்டனர். பாதுகாப்புக்கு வந்தவர்கள் அவருக்கு சில முதலுதவிகளை செய்து அவரை பழைய நிலைமைக்கு கொண்டு வந்தனர். அதன்பிறகு படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார் சத்யன்," என்றார்.

Actor Sathyan was drown to Malaysian sea during the shoot of Naveena Saraswathi Sabatham.

 

சினிமா மட்டும் போதுமா... கொஞ்சம் சைடு பிஸினசும் வேணும்!- இது ஆர்யா பாலிசி

சினிமா மட்டுமே போதும் என்று இருந்து விட்டால், வாய்ப்புகள் மங்கும் காலத்தில் அல்லாட வேண்டி வரும் என்ற கோடம்பாக்க வாழ்க்கைப் பாடத்தை இந்த இளம் வயதிலேயே தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிறார் ஆர்யா.

அதனால்தான் சினிமாவில் சம்பாதித்ததில் ஒரு பெரும் பகுதியை தனது வேறு வகையில் முதலீடு செய்து வருகிறார்.

சினிமா மட்டும் போதுமா... கொஞ்சம் சைடு பிஸினசும் வேணும்!- இது ஆர்யா பாலிசி

அதில் ஒன்று ஹோட்டல் பிஸினஸ். அண்ணா நகரில் ஆரம்பித்த பிரியாணி ஓட்டலுக்கு சென்னையில் வேறு பகுதிகளிலும் கிளைகளை திறந்துள்ளார்.

அடுத்து அவர் கால்பதித்திருப்பது ரியல் எஸ்டேட்டில்.

அஜீத்துடன் இவர் நடித்த ‘ஆரம்பம்' படத்திற்கு முதலில் இவருக்கு பேசப்பட்டது நான்கு கோடிதானாம். ஆனால் பின்னர் தன் கேரக்டருக்கு இது பத்தாது என ஆர்யா பிடிவாதம் பிடித்ததால் மேலும் ஒரு கோடி சம்பளம் தரப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

இந்த பணத்தை அப்படியே கொண்டுபோய் கொச்சி அருகே பெரிய நிலப்பரப்பை வாங்கிப் போட்டுள்ளாராம்.

சில மாதங்களுக்கு முன் அவர் வாங்கிய இந்த நிலத்துக்கு இப்போது ஆறு மடங்கு விலை உயர்ந்துவிட்டதாம். இதைப் பார்த்து, ரொம்பவே குஷியாகிவிட்ட ஆர்யா, தொடர்ந்து நிலங்களைத் தேடி வருகிறாராம். கொச்சி பக்கத்தில் பலரும் ஆர்யாவின் சார்பில் வருவதாகக் கூறி நிலங்களுக்கு பேரம் பேசுகிறார்களாம்.

ஜம்ஷெட் சேத்திரகாட் எனும் ஆர்யாவின் சொந்த மாநிலம் கேரளா என்பது குறிப்பிடத்தக்கது.

 

என்றென்றும் புன்னகை இசையை வெளியிடும் கமல் - பாலா

சென்னை: ஜீவா - த்ரிஷா நடித்த என்றென்றும் புன்னகை படத்தின் இசைத் தட்டை நாளை வெளியிடுகிறார் கமல் ஹாஸன்.

டாக்டர் வி.ராம் புரொடக்ஷன்ஸ் மற்றும் தமிழ் குமரன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘என்றென்றும் புன்னகை'.

இப்படத்தில் ஜீவா, வினய், சந்தானம், திரிஷா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஐ.அகமத் இயக்குகிறார். இவர் ஜெய-ப்ரியா ஆனந்தை வைத்து ‘வாமணன்' என்ற படத்தை இயக்கியவர்.

என்றென்றும் புன்னகை இசையை வெளியிடும் கமல் - பாலா

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீடு விழா நாளை மாலை சத்யம் சினிமாஸில் நடக்கிறது.

என்றென்றும் புன்னகை இசையை வெளியிடும் கமல் - பாலா

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இசைத் தட்டை கமல் வெளியிட, இயக்குநர் பாலா பெற்றுக் கொள்கிறார்.

கமல் ஹாஸனும் பாலாவும் இணைந்து பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் விழா குறித்து சுவாரஸ்யமான எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.

 

'தம்பி விஜய்... இதான் கரெக்ட்.. இப்படியே மெயின்டெய்ன் பண்ணுங்க!'

சென்னை: இனி ஆண்டுக்கு இரு படங்கள் செய்வேன் என்று அறிவித்துள்ள விஜய்யை திரையரங்க உரிமையாளர் சங்கம் பாராட்டியுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் இணைச் செயலாளர் திருச்சி ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கை:

அன்பு தம்பி விஜய்,

இன்றைய தினம் தாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையைப் படித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.

அழிந்து வரும் திரையரங்குகளைக் காக்க தாங்கள் உள்பட அனைத்து முன்னணி நடிகர்களும் ஆண்டுக்கு மூன்று படங்களாவது நடிக்க வேண்டும் என கடந்த வாரம் பத்திரிகை வாயிலாக வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

அதை ஏற்று, இனி ஆண்டுக்கு இரண்டு படங்கள் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இரவு பகலாக உழைத்து வருவதாக அறிக்கை வெளியிட்டு, திரையரங்குகளைக் காப்பாற்ற நான் தயார் என உணர்த்தியதோடு, மற்ற கலைஞர்களுக்கும் முன் மாதிரியாகத் திகழும் உங்களுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

-இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

சர்ச்சை நாயகிக்கு சிபாரிசு செய்யப்போய்... வாயால் வாய்ப்பை இழந்த நாயகன்

மூன்றெழுத்து நடிகரின் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் வெற்றி நாயகன் நடிப்பதற்காக ஒப்பந்தமானார். டெல்லியில் நடந்த பாலியல் பலாத்காரத்தை அடிப்படையாகக் கொண்ட கதைக் களம் அது.

சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவி வேடத்துக்கு நடிகையாக யாரை ஒப்பந்தம் செய்யலாம் என படக்குழுவினர் யோசித்துக் கொண்டிருக்கையில் நாயகன், தனது சமீபத்திய கிசுகிசு நாயகியை சிபாரிசு செய்திருக்கிறார்.

சமீபத்து படமொன்றில் சர்ச்சையைக் கிளப்பிய நாயகி அவர் என்பதால் நாயகனின் சிபாரிசை புறக்கணித்து விட்டனர் படக்குழுவினர். அத்தோடு நடிகையின் கெட்டநேரம் நடிகரையும் தொற்றிக் கொள்ள தற்போது நாயகனையும் மாற்றி விட்டனராம்.

மூன்றெழுத்து நடிகரே தயாரிப்போடு சேர்த்து அப்படத்தில் நடிக்கவும் முடிவு செய்து விட்டாராம்.