சிறு முதலீட்டில் தயாராகும் த்ரில்லர் 'கார்த்திகேயன்'

சின்ன பட்ஜெட்டில் படமெடுக்க வேண்டும் என பலரும் ஆலோசனை சொல்கிறார்கள். அத்தகைய படங்களுக்கு ஆதரவு நிச்சயம் என தயாரிப்பாளர் சங்கம் சத்தியமடிக்கிறது.

ஆனால் அப்படி எடுக்கிற படங்கள் பெருமளவு பெட்டிக்குள்ளேயே முடங்கி விடுகின்றன. இருந்தும் சிலர் துணிச்சலாக எடுத்து வெளியிடவும் செய்கிறார்கள். அப்படி வெளியாகத் தயாராக உள்ள படம்தான் கார்த்திகேயன்.

சிறு முதலீட்டில் தயாராகும் த்ரில்லர் 'கார்த்திகேயன்'

சுப்பிரமணியபுரம் சுவாதியும், புதுமுகம் நிகிலும் ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தை மேக்னம் சினி பிரைம், நவ்யா விஷுவல் மீடியா நிறுவனங்கள் சார்பில் ஸ்ரீனிவாஸ், மல்லிகார்ஜூன் தயாரிக்கிறார்கள்.

ஜெய்பிரகாஷ், கிஷோர், துளசி ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சிறு முதலீட்டில் தயாராகும் த்ரில்லர் 'கார்த்திகேயன்'

சாகசமும், ஆபத்தும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை குறிப்பிடும் வகையில் விறுவிறு த்ரில்லராக கார்த்திகேயன் படம் உருவாகிறது.

சந்தூ என்ற புதிய இயக்குநர் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். ஜி. கார்த்திக் ஒளிப்பதிவு செய்ய, சேகர் சந்திரா இசையமைத்துள்ளார். ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது கார்த்திக்கேயன்.

 

செக் மோசடி வழக்கு: 11ம் தேதி கோர்ட்டில் ஆஜராக நடிகை புவனேஸ்வரிக்கு உத்தரவு

சென்னை: செக் மோசடி வழக்கில் வரும் 11ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நடிகை புவனேஸ்வரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ககன் போத்ரா என்பவர் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

செக் மோசடி வழக்கு: 11ம் தேதி கோர்ட்டில் ஆஜராக நடிகை புவனேஸ்வரிக்கு உத்தரவு

'கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம்' என்ற திரைப்படத்தில் நடித்தவர் சாலிகிராமத்தை சேர்ந்த புவனேஸ்வரி என்ற அனு. இவரும், அவரது தாய் சம்பூரணமும் ஒரு சொத்து மீது 45 லட்ச ரூபாய் கடன் வாங்கினர். அதற்காக அவர்கள் கொடுத்த காசோலைகள் வங்கி கணக்கில் பணம் இல்லாததால் திரும்பியது. இது தொடர்பாக அவர்கள் எந்த பதிலும் சொல்லவில்லை. எனவே, அவர்கள் மீது செக் மோசடி வழக்கு பிரிவின் கீழ், நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு 8வது பெருநகர மாஜிஸ்திரேட் ஜெயஸ்ரீ முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் புவனேஸ்வரி மற்றும் அவரது தாயார் இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். ஆனால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி புவனேஸ்வரி மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்நிலையில் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மாஜிஸ்திரேட் வழக்கை வரும் 11ம் தேதிக்கு தள்ளி வைத்தார். மேலும் புவனேஸ்வரி தனது தாயுடன் அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.

 

அடுத்த ஆண்டு 250 அரங்குகளை மூட வேண்டியிருக்கும்! - ஷாக் தந்த தியேட்டர் சங்கத்தினர்

சென்னை: இப்போதல்லாம் ஒரு படம் ஒரு நாள் ஓடுவதே கஷ்டமாக உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த ஆண்டு 250 தியேட்டர்களை மூட வேண்டி இருக்கும், என்றார் திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர்.

தமிழகத்தில் தியேட்டர்களின் நிலைமை மிக மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருப்பதாக திரையுலகில் புலம்பல்கள் தீவிரமடைந்துள்ளன.

அடுத்த ஆண்டு 250 அரங்குகளை மூட வேண்டியிருக்கும்! - ஷாக் தந்த தியேட்டர் சங்கத்தினர்

ஒரு பக்கம் மால்களில் மல்டிப்ளெக்ஸ் அரங்குகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. முன்பு கட்டப்பட்ட ஒற்றை அல்லது இரட்டைத் திரையரங்குகளோ காத்து வாங்குகின்றன. ஒரு காலத்தில் 2000 அரங்குகள் வரை இருந்த தமிழகத்தில் இப்போது 950 அரங்குகள் கூட இல்லை.

இந்த நிலையில் மேலும் பல திரையரங்குகள் மூடும் நிலைக்குப் போய்க் கொண்டிருக்கின்றன.

ஜிகிர்தன்டா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இதுகுறித்துப் பேசிய திரையரங்க உரிமையாளர்கள் சங்க இணைச் செயலர் திருச்சி ஸ்ரீதர் கூறுகையில், "தமிழ்நாட்டில், இப்போது 934 தியேட்டர்கள் உள்ளன.

பொங்கலுக்கு அப்புறம் வெளியான படங்களில், ‘கோலி சோடா' மட்டும் வெற்றி பெற்று இருக்கிறது. மற்ற படங்கள் எதுவும் ஓடவில்லை.

வெள்ளிக்கிழமை காலையில் ஒரு படம் வெளியானால், அன்று இரவு காட்சிக்கு வேறு படத்தை மாற்ற வேண்டிய நிலை உள்ளது. இதே நிலைமை நீடித்தால், அடுத்த இரண்டு மாதங்களில் 250 தியேட்டர்கள் மூடப்படும்,'' என்றார்.

 

சென்னையில் ஜப்பானிய திரைப்பட விழா தொடங்கியது!

சென்னை: சென்னையில் ஜப்பானிய திரைப்பட விழா நேற்று தொடங்கியது.

நாளை மார்ச் 5-ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவை இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் மற்றும் ஜப்பானில் உள்ள தி ஜப்பான் ஃபவுண்டேஷன் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. தியாகராயர் நகர், தேவி ஸ்ரீதேவி திரையரங்குகளில் நடைபெறும் இந்த விழாவில் 6 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தி ஜப்பான் ஃபவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த மானோ சோனரி நக்னோ, தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையின் செயலர் ரவி கொட்டாரக்கரா, நடிகை அனுஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

"தி போர்ட் ஆஃப் டெத்', "சாமுராய் பிரிட் ஹன்டர்' திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) மாலை "கேட் ஆஃப் ஹெல்', "எண்ட் ஆஃப் டோக்கியோ' ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன.

 

'அம்மா' பிறந்தநாளில் சிசேரியன் செய்து குழந்தையை எடுத்த வி.ஐ.பி. குடும்பம்

சென்னை: தமிழக அமைச்சரவையில் முக்கிய பதவி வகிக்கும் ஒருவரின் வாரிசு முதல்வரின் பிறந்தநாள் அன்றே தனக்கும் வாரிசு வர வேண்டும் என்று தனது மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்துள்ளார்களாம்.

தமிழக அமைச்சரவையில் முக்கிய பதவி வகிக்கும் ஒருவரின் வாரிசு வரும் தேர்தலில் தென் மாவட்ட தொகுதி ஒன்றில் போட்டியிட விரும்பினார். ஆனால் முதல்வர் அவருக்கு தொகுதியை ஒதுக்கவில்லை. இந்நிலையில் கர்ப்பமாக இருந்த வாரிசின் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை நன்றாக உள்ளது, பிரசவத்திற்கு இன்னும் நாட்கள் இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர். அதற்கு அரசியல் வாரிசோ என் குழந்தை முதல்வர் அம்மா பிறந்த பிப்ரவரி 24ம் தேதி தான் பிறக்க வேண்டும் என்று அடம்பிடித்தாராம். இதையடுத்து அம்மாவின் பிறந்த நாள் அன்றே அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்துள்ளனர். அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்டது ஆண் குழந்தை ஆகும்.

குழந்தை பிறந்த நேரமாவது வாரிசுக்கு சீட் கிடைக்கிறதா என்று பார்ப்போம் என உறவினர்கள் கிசுகிசுத்தார்களாம். பதவி ஆசை படுத்தும் பாட்டை பாருங்களேன்.

 

விரல் நடிகர், புஸு புஸு நடிகையின் காதல் முறிவுக்கு சீயான் தான் காரணமா?

சென்னை: புஸு புஸு நடிகையும், விரல் வித்தை நடிகரும் காதலை முறித்துக் கொண்டதற்கு சீயான் நடிகர் தான் காரணம் என்று கிசுகிசுக்கிறார்கள்.

கோடம்பாக்கத்தின் பிஸியான நாயகிகளுள் ஒருவர் புஸு புஸு நடிகை. அவர் விரல் வித்தை நடிகரை காதலிப்பதாக அறிவித்தார். தல, அவரது காதல் மனைவி போன்று நாங்களும் திருமணம் செய்து வாழ்வோம் என்றது இந்த காதல் ஜோடி.

இந்நிலையில் விரல் வித்தை நடிகர் செய்தியாளர்களை அழைத்து தனது காதல் முறிவு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இனி எனக்கும் அந்த நடிகைக்கும் தொடர்பு இல்லை, நான் சிங்கிள் தான் என்று அறிவித்தார்.

இதற்கிடையே நடிகை பிசியாக இருப்பதாலும், நடிகர் மீது விருப்பம் இல்லாததாலும் தான் காதல் முறிந்துள்ளது என்று சிலர் கோலிவுட்டில் கிசுகிசுக்கின்றனர். அதே சமயம் நடிகை சீயான் நடிகருடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். சீயான் நடிகர் தன்னுடன் நடிக்கும் நடிகைகளின் நட்பை முறித்துவிடுவார் என்பதால் தான் காதல் ஜோடி பிரிந்துவிட்டது என்றும் சிலர் கிசுகிசுக்கிறார்கள்.