இனி வில்லன் இல்லை: கரிகாலன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இனி வில்லனாக நடிக்க மாட்டேன் என்று கரிகாலன் கூறினார். 'அரவான்' படத்தின் மூலம் ரீ என்ட்ரியாகி இருக்கும் கரிகாலன் நிருபர்களிடம் கூறியதாவது: 'சோலையம்மா' படத்தில் வில்லனாக அறிமுகமானேன், 'தாய்மனசு', 'அடிமை சங்கிலி', 'அம்மன் கோவில் வாசலிலே' உட்பட பல படங்களில் வில்லனாக நடித்தேன். 'வைரவன்' என்ற படத்தை இயக்கி நடித்தேன். பிறகு நடிப்பை விட்டுவிட்டு ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கினேன். 7 வருட இடைவெளிக்குப் பிறகு 'அரவான்' வாய்ப்பு வந்தது. அதுவும் வில்லன் வாய்ப்புதான் என்றாலும் நடித்தேன். அது நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. இனி வில்லான நடிக்க மாட்டேன். எனது எடையை 30 கிலோ குறைத்திருக்கிறேன். இனி நல்ல கேரக்டர்கள் அமைந்தால் மட்டுமே நடிப்பேன்.


 

நிஜ கேரக்டரில் நடிப்பது சவால்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கும் படம், 'வனயுத்தம்'. வீரப்பன் வாழ்க்கையை தழுவி எடுக்கப்படும் இதில், கிஷோர், விஜயலட்சுமி, அர்ஜுன் உட்பட பலர் நடிக்கிறார்கள். விஜய் மில்டன் ஒளிப்பதிவு. படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இதில் அர்ஜுன் பேசியதாவது: வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் கேரக்டரில் நடிப்பது சவாலானது. காரணம் அவர்கள், அவர்களையே திரையில் பார்க்கும்போது கொஞ்சம் தவறினால் கூட சம்பந்தப்பட்டவர்களின் விமர்சனத்துக்கு ஆளாக நேரிடும். போலீஸ் அதிகாரி விஜயகுமார் கேரக்டரில் நடிக்கிறேன். நிறைய படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தாலும், இதில் யதார்த்தமாக நடித்திருக்கிறேன். வீரப்பன் கதை எல்லோருக்கும் தெரியும் என்பதால் ஆரம்பத்தில் தயங்கினேன். ஆனால் இயக்குனர் ரமேஷின் 12 வருட ஆய்வு, அவருடைய உழைப்பை பார்த்து வியந்து நடித்தேன். வீரப்பனுடன் வாழ்ந்தவர்களும், அவரால் கடத்தப்பட்டவர்களும் என்னுடன் நடித்திருக்கிறார்கள். இது எனக்கு புது அனுபவம். இந்தப் படம் எனது கேரியரில் முக்கியமான படமாக இருக்கும்.


 

ஐபிஎல் தொடக்க விழாவில் பிரபுதேவா டான்ஸ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் பிரபுதேவா நடனம் ஆடுகிறார். ஒவ்வொரு வருடமும் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்த வருடம், ஏப்ரல் 4-ம் தேதி தொடங்குகிறது. இதற்கு முன்னதாக ஏப்ரல் 3-ம் தேதி சென்னையில் இதன் தொடக்க விழா நடக்க இருக்கிறது. இதில் ரசிகர்கள் முன்னிலையில் பிரபுதேவா நடனம் ஆடுகிறார். மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தின் முன் பிரபுதேவா நடனம் ஆடுவது இதுதான் முதல் முறை. சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இல்லாமல், ஒய்எம்சிஏ கிரவுண்டில் இந்த தொடக்க விழா நடக்கும் என்று கூறப்படுகிறது. இதில் தமிழ், ஹிந்தி பாடல்களுக்கு பிரபுதேவா நடனம் ஆடுகிறார். அவருடன் இந்தி நடிகர் சல்மான் கான், நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோரும் டான்ஸ் ஆடுகிறார்கள். இந்த நிகழ்ச்சியை அமிதாப் பச்சன் தொகுத்து வழங்குகிறார். ஏப்ரல் 3-ம் தேதி பிரபுதேவாவுக்கு பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.


 

குடும்பங்களுக்குள் நடக்கும் கிரைம், திரில்லர்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கே.எஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் படம், 'அகராதி'. பிரதீப், பவன், ஓவியா, மோனிகா, அர்ச்சனா நடிக்கிறார்கள். நாகா வெங்கடேஷ் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: ராஜேஷ்குமாரின் 'இரவு நேர வானவில்' என்ற நாவலை தழுவி எடுக்கப்படும் படம் இது. குடும்பங்களுக்குள் நடக்கும் கிரைம், திரில்லர் கதை. நாவலை கமர்சியல் சினிமாவுக்கு ஏற்ப மாற்றி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஸ், திரில்லிங், ரொமான்ஸ், ஆக்ஷன் என அத்தனை அம்சங்களையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் 'நிலா காயுது நேரம் நல்ல நேரம்...' பாணியில் பாடலாசிரியர் வாலி, மூட் சாங் எழுதியுள்ளார். இந்த பாடலில் சில வரிகளை நீக்கினால் 'யு/ஏ' சான்றிதழ் தருகிறோம்; நீக்காவிட்டால் 'ஏ' தருவோம் என்றார்கள். நீக்க மறுத்து 'ஏ' சான்றிதழ் பெற்றிருக்கிறோம். இந்தப் பாடல் பரபரப்பாகப் பேசப்படும்.


 

சினேகா நடிக்கும் ஹரிதாஸ் பாகவதர் பட ரீமேக் இல்லை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சினேகா நடிப்பில் உருவாகும் ஹரிதாஸ் , தியாகராஜ பாகவதர் நடித்த படத்தின் ரீமேக் இல்லை என்றார் இயக்குனர் குமாரவேலன்.
பிருத்விராஜ் நடித்த நினைத்தாலே இனிக்கும், பரத் நடித்த யுவன் யுவதி படங்களை இயக்கியவர் ஜி.என்.ஆர்.குமாரவேலன். அடுத்து ஹரிதாஸ் என்ற படத்தை இயக்குகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:தியாகராஜ பாகவதர் நடித்து 3 தீபாவளிகளை கண்டு, தொடர்ந்து ஒரே தியேட்டரில் ஓடிய படம் ஹரிதாஸ். இப்பட தலைப்பை என் படத்துக்கு வைக்க விரும்பினேன். இதற்காக டைட்டில் அனுமதி வாங்க 2 மாதம் சுற்றினோம். தயாரிப்பாளர் சங்கம், இன்டர்நெட் மூலமாக தேடி சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடித்து அனுமதி வாங்கினோம். இது அப்பட ரீமேக் இல்லை.

தந்தைக்கும் மகனுக்கும் இடையே உள்ள பாசத்தை மையமாக கொண்ட படம். தந்தையை ஹீரோவாக நினைக்கும் மகன் அவரைப்போலவே உழைத்து வாழ்வில் எப்படி முன்னேறுகிறான் என்பதுதான் கதையின் கரு. தந்தை தாஸ் என்ற வேடத்தில் கிஷோர். மகன் ஹரி வேடத்தில் பிருத்விராஜ். இவர்களின் இரண்டு கேரக்டர் பெயர்களை சேர்த்துத்தான் ஹரிதாஸ் என்று படத்துக்கு தலைப்பிடப்பட்டது. அமுதவள்ளி என்ற முக்கிய வேடத்தில் சினேகா நடிக்கிறார். பரோட்டா சூரியுடன் பலர் நடிக்கின்றனர். ஷூட்டிங் தொடங்கிவிட்டது. தயாரிப்பு ராமதாஸ், எஸ்.மஞ்சுளா, வேல்முருகன். ஒளிப்பதிவு ரத்னவேல். இசை விஜய் ஆண்டனி.இவ்வாறு இயக்குனர் குமாரவேலன் கூறினார்.


 

காதலுக்காக வன்முறையில் இறங்கும் ஹீரோ

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஹேமச்சந்திரன், மேக்னா ராஜ், நாசர், சண்முகராஜன் உட்பட பலர் நடிக்கும்   படம், 'நந்தா நந்திதா'. சூப்பர் டீம் சினிமாஸ் சார்பில் எம்.கோவிந்தராஜ், எம்.நாகராஜ், ஜி.பூபால் தயாரிக்கின்றனர். எழுதி இயக்கும் ராம்சிவா நிருபர்களிடம் கூறியதாவது:  கன்னடத்தில் ரிலீசான 'நந்தா நந்திதா' படத்தின் தமிழ் ரீமேக் உரிமை வாங்கி, அதே பெயரில் தெலுங்கிலும், தமிழிலும் படத்தை உருவாக்கினோம். கடந்த வாரம் தெலுங்கில் ரிலீசாகி விட்டது. அதில் ஹேமச்சந்திரன், மேக்னா அண்ணன், தங்கையாக நடித்துள்ளனர். மேக்னாவுக்கு டி.சூர்யா ஜோடி. ஆனால், தமிழில் ஹேமச்சந்திரன், மேக்னா இருவரும் ஜோடி. மேக்னா அண்ணனாக டி.சூர்யா நடிக்கிறார். இது புதுமையான விஷயம்.  ஹேமச்சந்திரன், குடிகார தந்தையால் அம்மாவை இழக்கிறார். அவரது வாழ்க்கையில் மேக்னாராஜ் குறுக்கிடுகிறார். அவரைக் காதலிக்கும் ஹேமச்சந்திரன், பணத்துக்காக, நாசர் வலையில் சிக்குகிறார். காதல் நிறைவேற வன்முறைப் பாதையில் செல்லும் ஹேமச்சந்திரன், காதலில் வெற்றிபெற்றாரா இல்லையா என்பது கதை. 23ம் தேதி ரிலீசாகிறது.


 

வழக்கு எண் 18/9 தாமதம் ஏன்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
திருப்பதி பிரதர்ஸ் சார்பில் லிங்குசாமி தயாரிக்கும் படம், 'வழக்கு எண் 18/9'. ஸ்ரீ, மிதுன் முரளி, ஊர்மிளா, மனீஷா என்ற புதுமுகங்கள் நடித்துள்ளார்கள். விஜய் மில்டன் ஒளிப்பதிவு. பிரசன்னா இசை. நா.முத்துக்குமார் பாடல்கள். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குனர் பாலாஜி சக்திவேல் பேசியதாவது: 'காதல்' மூலம் ஹிட் கொடுத்தும் 'கல்லூரி' சரியாகப் போகாததால் அடுத்த படம் இயக்குவதில் குழப்பம் இருந்தது. புது இயக்குனர்கள் வேறு வெவ்வேறு களத்தில் படம் கொடுத்து மிரட்டினார்கள். 'காதல்' படத்தை லிங்குசாமிதான் தயாரிக்க வேண்டியது. அது தவறியதால் அவருக்கு ஒரு படம் இயக்கி கொடுக்க வேண்டும் என்பதற்காக, இந்தக் கதையை தேர்வு செய்தேன். இதை உருவாக்குவதில் தடுமாற்றம் இருந்தது. அதை கதையாகச் சொல்ல முடியவில்லை. அதனால் லிங்குசாமியிடம், 'தயவு செய்து கதை கேட்காதீர்கள். நான் எடுத்து கொடுப்பதை பாருங்கள்' என்றேன். இரண்டு வருடம் ஆலோசித்து ஸ்கிரிப்ட் உருவாக்கினேன். படத்தின் தாமதத்துக்கு நான்தான் காரணம். புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக இதை ஸ்டில் கேமராவில் உருவாக்கினோம். அது வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கிறது. பட வெளியீட்டுக்குப் பிறகு ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் பேசப்படுவார். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் இயக்குனர்கள் சசி, எழில், எஸ்.எஸ். ஸ்டேன்லி, நா.முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


 

பிரபுதேவாவின் பெயரை அழிக்க நயன்தாரா பிளாஸ்டிக் சர்ஜரி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பிரபுதேவாவுடன் காதல் முறிந்த நிலையில், கையில் பச்சை குத்திய அவரது பெயரை அழித்துவிட முடிவு செய்துள்ளார் நயன்தாரா. இதற்காக அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்கிறார்.
இயக்குனரும் நடிகருமான பிரபுதேவாவை தீவிரமாக காதலித்து வந்தார் நயன்தாரா. இதனால் தனது மனைவியை பிரபுதேவா விவாகரத்து செய்தார். ஜீவனாம்சமாக பல கோடி மதிப்புள்ள சொத்துகளை வழங்கினார். பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக கிறிஸ்துவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறினார் நயன்தாரா.

இதற்கிடையே சமீபத்தில் திடீரென பிரபுதேவா, நயன்தாரா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பிரிந்தனர். பண விவகாரம் காரணமாக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் அதனால் பிரிந்ததாகவும் தனது குழந்தைகளை கவனிப்பதில் பிரபுதேவா அதிக நேரம் ஒதுக்குவது நயன்தாராவுக்கு பிடிக்கவில்லை அதனால் காதல் முறிந்ததாகவும் பலவிதமாக பேசப்பட்டது. இது பற்றி இருவருமே வாய் திறக்கவில்லை. இந்நிலையில் தனது கையில் பச்சை குத்திய பிரபுதேவாவின் பெயரை அழிக்க முடிவு செய்துள்ளார் நயன்தாரா. பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டால் முற்றிலும் அழித்துவிடலாம், கையும் அதே அழகுடன் இருக்கும் என அவருக்கு டாக்டர்கள் ஆலோசனை கூறியுள்ளதாக தெரிகிறது. இதனால் அவர் பிளாஸ்டிக் சர்ஜரிக்கு தயாராகி வருகிறார். அஜீத்தின் புதிய படம், நாகார்ஜுனா, ராணா ஆகியோருடன் நடிக்கும் தெலுங்கு படங்களின் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன் பச்சை குத்தியதை அழிக்க அவர் முடிவு எடுத்துள்ளார்.


 

ஹீரோ, ஹீரோயின் முகம் தெரியாமல் பாடல் காட்சி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சிட்டி லைட்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் படம், 'ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி'. 23-ம் தேதி ரிலீசாகிறது. படம் பற்றி இயக்குனர் ஷண்முகராஜ் கூறியதாவது: வசனம் இல்லாத படம், இசை இல்லாத பாடல், பாடல்கள் இல்லாத படம் என இதுவரை பல புதுமைகளை செய்துவிட்டனர். நானும் ஏதாவது புதுமை செய்ய வேண்டும் என நினைத்தேன். அதன்படி ஒரு பாடல் முழுக்க ஹீரோ, ஹீரோயின் முகம் தெரியாமல், அவர்களது கை, கால்களை மட்டுமே காட்டி ரசிக்கும் வகையில் படமாக்கியுள்ளேன். இது, புது முயற்சி என்பதில் எனக்கு பெருமை. திருக்குறள் காமத்துப்பாலில் இருந்து 16 குறள்களை தேர்வு செய்து, அவற்றை மையப்படுத்தி யுகபாரதி எழுதிய பாடல், 'பாலோடு தேன்சேர பணிமொழி வாய்சேர'. தாஜ்நூர் இசையில் உருவான இப்பாடலை, காரைக்குடியிலுள்ள பாரம்பரியமான வீட்டில், 6 நாட்கள் படமாக்கினேன். இதற்காக புதுமுகங்கள் வெங்கடேஷ், அக்ஷராவுக்கு முன்கூட்டியே பயிற்சி அளித்தேன். இயல்பாகவும், சிறப்பாகவும் நடித்தார்கள். படத்தில் இப்பாடல் காட்சி ஹைலைட்டாக இருக்கும்.


 

கிசு கிசு - தீவிர அரசியல்... நடிகை முடிவு!

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

சூப்பர் ஹிட் கொடுத்த பாசி இயக்கம் சமீபமா ஹிட் கொடுக்காததால யாருமே அவரை கண்டுங்காணாம புறக்கணிக்கிறாங்களாம்... புறக்கணிக்கிறாங்களம். இப்போதைய டிரெண்டுக்கு ஏற்ப அவரால கதைகளை அமைக்க முடியாததே இந்த தோல்விக்கு காரணமாம். அவர்கிட்ட உதவி இயக்கமா இருந்தவங்க டாப் இயக்கமா இருக்காங்களாம். இதனால தன்னோட அடுத்த படத் தோட கதையை உதவி இயக்கமா இருந்தவங்க எழுதி தர கேட்டிருக்கா ராம்... கேட்டிருக்காராம்...

அரசியல் கட்சியில சேர்ந்தாலும் சினிமாவுல நடிக்க¤றதை குறைச்சிக்க மாட்டேன்னு திவ்ய ஹீரோயின் சொன்னாராம்... சொன்னாராம்... ஆனா, கட்சியில சேர்ந்த ப¤றகு நடிப்பை விட அரசியலுக்கு முக்கியத்துவம் தர்றாராம்... தர்றாராம்... கர்நாடக இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக கடுமையா உழைச்சாராம்... உழைச்சாராம்... அடிக்கடி ஷூட்டிங்கிற்கு கட் அடிச்சிட்டு, பிரசாரமே கதின்னு கிடந்தாராம்.  தீவிர அரசியல்ல குதிக்கவும் முடிவு எடுத்திருக்காராம்... இருக்காராம்...

ஒத்த எழுத்து படத்துக்கு பிறகு கைநிறைய படம் கொட்டப்போகுதுன்னு பியாவான நடிகை கனவுல இருந்தாராம்... இருந்தாராம்... ஆனா எதிர்பாத்த மாதிரி படங்கள் வரலையாம். மனம் நொந்துபோயிருந்த நடிகை பாலிவுட்ல வாய்ப்பு தேட ஆரம்பிச்சாராம். இப்போ இளைய திலகத்தோட வாரிசு நடிக்கற படத்துல நடிக்க பியாவான நடிகைக்கு அழைப்பு அனுப்பி இருக்காங்களாம்... இருக்காங்களாம்...