நடிகரானதால் இசைக்கு முழுக்கா? : விஜய் ஆண்டனி பதில்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நடிகரானாலும் இசை அமைப்பதை நிறுத்தமாட்டேன் என்று இசை அமைப்பாளர் விஜய் ஆன்டனி கூறினார். இதுபற்றி அவர் கூறியதாவது: 'வேலாயுதம்', 'வேட்டைக்காரன்' உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்தேன். இந்நிலையில் 'நான்' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு வந்தது. ஏற்றேன். 'நடிகரானதால் இசைக்கு முழுக்குதானா?' என்று கேட்கிறார்கள். படம் வெற்றி அடைந்தாலும் இசை அமைப்பதை விடமாட்டேன். அதுதான் என் தொழில். ஆரம்ப காலத்தில் வாய்ப்பு கிடைக்காமல் பல வருடம் காத்திருந்தேன். என்னை போல நிறைய பேர் காத்திருக்கிறார்கள். அவர்களின் கஷ்டம் எனக்கு தெரியும். என் படங்களில் இதுவரை 42 பாடகர், பாடகிகளை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். திறமையான பாடலாசிரியர்களையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக 'நான்' படத்துக்காக ஒரு போட்டி வைத்திருக்கிறேன். பாடல் எழுதி என் இமெயிலுக்கு அனுப்புபவர்களில் சிறந்த பாடலாசிரியரை தேர்வு செய்து இந்த படத்தில் அறிமுகப்படுத்துவேன். இவ்வாறு விஜய்
ஆன்டனி கூறினார்.


 

ஆக்ஷன் வேடத்தில் பிரியங்கா சோப்ரா

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
'டான் 2' படம் மூலம் ஆக்ஷன் ஹீரோயின் ஆகிவிட்டேன் என்று நடிகை பிரியங்கா சோப்ரா கூறினார். 'டான் 2' இந்தி பட விளம்பர நிகழ்ச்சிக்காக ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா ஐதராபாத் வந்தனர். அப்போது பிரியங்கா சோப்ரா கூறியதாவது: இந்தியில் ஷாருக்கானுடன் நடித்துள்ள 'டான் 2' படம் தமிழ், தெலுங்கு மொழியிலும் டப்பிங் செய்யப்படுகிறது. ரூ.82 கோடி செலவில் இப்படம் உருவாகி உள்ளது. பர்ஹான் அக்தர் இயக்கி இருக்கிறார். இம்மாதம் படம் ரிலீஸ். இப்படத்தில் ஹீரோ ஷாருக்குக்கு மட்டுமின்றி, எனக்கும் ஆக்ஷன் வேடம். இதன்மூலம், நான் ஆக்ஷன் ஹீரோயின் ஆகிவிட்டேன். ஏற்கனவே 'தமிழன்' படம் மூலம் ரசிகர்களை மகிழ்வித்த நான் பல வருட இடைவெளிக்கு பிறகு 'டான் 2' மூலம் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. நல்ல ஸ்கிரிப்ட் கிடைத்தால் நடிப்பேன்.



 

ரூ.7 கோடி சம்பளம் கேட்கும் வித்யாபாலன்: தயாரிப்பாளர் அதிர்ச்சி!

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
நடிப்புக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடித்ததால் கவர்ச்சி காட்ட வித்யா பாலனுக்கு வாய்ப்பு இல்லாமல் போனது. மேலும், கவர்ச்சி வேடங்களை தவிர்த்தும் வந்தார். இந்நிலையில், சில்க் ஸ்மிதா கதையாக உருவான 'தி டர்ட்டி பிக்சர்' படத்தில் நடிக்க கேட்டபோது ஒப்புக்கொண்டார். படுகவர்ச்சியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஓவர் கவர்ச்சியாக இவர் நடித்ததை எதிர்த்து ஐதராபாத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி எப்ஐஆர் பதிவு செய்யும்படி போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 'தி டர்ட்டி பிக்சர்' படம் வெளியாகி ஹிட்டானதையடுத்து பாலிவுட் தயாரிப்பாளர்கள் வித்யா பாலன் கால்ஷீட் கேட்டு படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர். இதையடுத்து தனது சம்பளத்தை ரூ.7 கோடியாக உயர்த்தி இருக்கிறார் வித்யா பாலன். இந்தியில் இவ்வளவு பெரிய சம்பளத்தை ஒரே படம் ஹிட்டானதும் யாரும் கேட்டதில்லை என்பதால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


 

கிசு கிசு - இயக்குனர்-நடிகை நெருக்கம்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

விஜயமான இயக்கத்துக்கும் அமலமான மில்க் நடிகைக்கும் லவ்வுன்னு கோலிவுட்ல பேச்சு இருக்காம்... இருக்காம்... இது பற்றி கேட்டா, ரெண்டு பேரும் மழுப்புறாங்களாம்... மழுப்புறாங்களாம்... ஆனாலும் மில்க் ஹீரோயின் நடிச்ச படத்தோட விழான்னா விஜய இயக்கம் தவறாம ஆஜராகுறாராம். சமீபத்துல நடிகை சம்பந்தப்பட்ட ரெண்டு விழாலேயும் இயக்கம் கலந்துகிட்டாராம். நடிகையோடு நெருக்கமா உட்கார்ந்து ரொம்ப நேரம் பேசிட்டும் இருந்தாராம்... இருந்தாராம்...

டோலிவுட்ல மகேஷான நடிகருக்கு அண்ணி வேடத்துல நடிக்க டாப் ஹீரோயின்கள் மறுத்துட்டாங்களாம்... மறுத்துட்டாங்களாம்... முதல்ல ஓகே சொன்ன அனுஷ்க நடிகையும் இப்போ கால்ஷீட் இல்லைன்னு கைவிரிச்சிட்டாராம்... கைவிரிச்சிட்டாராம்... அதனால மூணுஷா நடிகைகிட்ட தயாரிப்பு பேசினாராம். Ôஇனிமே இந்த மாதிரி ரோலுக்கெல்லாம் என்கிட்ட பேசாதீங்கÕன்னு நடிகை கோபப்பட்டாராம்... கோபப்பட்டாராம்...

மாஜி கவர்ச்சி நடிகையோட கதை இந்தியில படமாகி ஹிட்டாச்சு. அதனால அதேபோல் அந்த கவர்ச்சி நடிகையை பின்னணியா கொண்டு தமிழ், தெலுங்குல கதை எழுதுறாங்களாம்... எழுதுறாங்களாம்... படத்துக்கு பர்மிஷன் வாங்க, நடிகையோட பிரதரை சந்திச்சி ஒரு குரூப் பேசியிருக்காம்... பேசியிருக்காம்...


 

பிறந்த நாள் கொண்டாட்டம் ஜெனிலியா, ரிதேஷ் கட்டிப்பிடித்து குஷி !

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
காதலன் ரிதேஷ்முக்கிற்கு நடிகை ஜெனிலியா பார்ட்டி கொடுத்தார். ரகசியமாக காதலித்து வந்த ஜெனிலியாவும், பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கும் சமீபத்தில் தங்கள் காதலை பகிரங்கமாக அறிவித்தனர். அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து ஜெனிலியா படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.  ரிதேஷ் முக்கிற்கு நேற்று முன்தினம் பிறந்தநாள். இதையடுத்து அவருக்கு பிறந்தநாள் ஆச்சரியம் கொடுக்க ஜெனிலியா முடிவு செய்தார். ரகசியமாக மும்பை ஸ்டார் ஓட்டல் ஒன்றில் விழா ஏற்பாடு செய்தார். தனது நெருங்கிய நண்பர்களுக்கும், தோழிகளுக்கும் தொலைபேசியில் அழைப்பு விடுத்தார். பின்னர் காதலன் ரிதேஷுக்கு போன் செய்து நட்சத்திர ஓட்டலில் சந்திக்க காத்திருப்பதாக கூறி வரவழைத்தார். அவர் புறப்பட்டு வந்தபிறகுதான் அங்கு பிறந்தநாள் பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தது தெரிந்தது. சந்தோஷமாக கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார். தம்பதிகளாவதற்கு முன்பாக காதல் ஜோடிகளாக கடைசி பிறந்தநாளாக இது அமைந்ததில் இருவருமே கட்டிப்பிடித்து பரஸ்பரம் மகிழ்ச்சி பரிமாறிக் கொண்டனர்.