அஜீத் படத்திற்கு இசை அமைக்கிறார் அனிருத்!

Kolaveri Anirudh Compose Ajith

அஜீத் படத்திற்கு 'கொலைவெறி' புகழ் அனிருத் இசை அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜீத் இப்போது விஷ்ணுவர்த்தன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் தலைப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. இதற்கு அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் அ‌ஜீத் நடிக்கிறார். ‘வெற்றி கொண்டான்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை விஜயா வாஹினி நிறுவனம் தயா‌ரிக்கிறது. அஜீத்துடன் முதன் முறையாக அனுஷ்கா ஜோடி சேர உள்ள இந்தப் படத்துக்கு இசையமைக்க தேர்வு செய்யப்பட்டவர் கொலவெறி புகழ் அனிருத் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

அ‌ஜீத்தின் சமீபகால படங்களுக்கு இசையமைத்து வருகிறவர் யுவன் ஷங்கர் ராஜா. ஒரு சேஞ்சுக்கு அனிருத்தை செலக்ட் செய்திருப்பதாக தெ‌ரிவிக்கிறார்கள். இந்த புது காம்பினேஷன் வொர்க் அவுட்டாகுமா என்று படத்தின் பாடல்களை கேட்டபின்னர்தான் தெரியும்.

 

'சூப்பர் சிங்கரில்' ஆட்டம் போட்ட சாந்தனு

Santhanu Bakyaraj Performance On Super Singer

சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக நடிகர் சாந்தனு பாக்கியராஜ் பாட்டுப்பாடி, நடனமாடினார்.

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிச்சுற்றுப்போட்டியில் பங்கேற்பதற்காக சுகன்யா, பிரகதி, கவுதம், ஆஜித், யாழினி ஆகிய 5 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதுநாள் வரை ஸ்டூடியோவில் பாட்டுப்பாடி ஆட்டம் போட்ட செல்லக்குழந்தைகள் முதன் முறையாக பொதுமக்கள் முன்னிலையில் பாட்டுப்பாடிவருகின்றனர்.

சென்னையில் மிகப்பெரிய ஷாப்பிங் மால் ஒன்றில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் சாந்தனு பாக்கியராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினார். அனைவருக்கும் விருப்பமான டாக்ஸி பாடலை பாடியும், நடனமாடியும் அசத்தினார்.

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3 போட்டியாளர்களின் குரலைக் கேட்டு அவர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் ஓட்டுபோட்டு தமிழகத்தின் செல்லக்குரலை தேர்ந்தெடுக்கலாம். இறுதிச்சுற்றுப்போட்டி இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது போட்டியில் வெற்றிபெற்று முதலாவதாக வரும் குழந்தைக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக கிடைக்க உள்ளது.

 

22 கோடி சொன்னார்... 42 கோடிக்கு இழுத்துவிட்டுட்டார்! - லாரன்ஸ் மீது புகார்

Telugu Producers File Complaints On Lawrence

ரூ 22 கோடிக்கு படம் எடுத்துத் தருவதாக உறுதியளித்துவிட்டு, ரூ 43 கோடி வரை இழுத்திவிட்டுவிட்டார் என நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் மீது புகார் கொடுத்துள்ளனர் தெலுங்குப் பட தயாரிப்பாளர்கள்.

நடிகரும், இயக்குனருமான லாரன்ஸ் தெலுங்கில் 'ரெபெல்' என்ற படத்தை இயக்கினார். பிரபாஸ் - தமன்னா, தீக்ஷா சேத் நடித்தனர். படம் வெளியாகி நல்ல வசூலையும் பார்த்துவிட்டது.

இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர்கள் பசவான், புல்லாரோ ஆகியோருக்கும், லாரன்சுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது.

ரூ 22.50 கோடி செலவில் பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் இந்தப் படத்தை இயக்கித் தர ஒப்புக் கொண்ட லாரன்ஸ், ரூ 42 கோடிக்கு செலவை இழுத்துவிட்டதாகவும், பட்ஜெட்டுக்கு மேல் ஆன தொகையை லாரன்ஸ் தங்களுக்குத் தரவேண்டும் என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

தயாரிப்பாளர்களுக்கு எதிராக லாரன்சும், இயக்குனர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். தன்னிடம் தெரிவிக்காமல் படத்தின் டப்பிங் மற்றும் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர்கள் விற்றுவிட்டதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் இந்த சண்டைக்கு காரணமே, படத்தின் தமிழ் உரிமையை தனக்கு எழுதித் தர வேண்டும் என ராகவா லாரன்ஸ் அடம் பிடித்ததுதானாம். ஏற்கெனவே போட்ட பட்ஜெட்டுக்கு மேல் செலவழித்து எடுக்கப்பட்ட படத்தின் தமிழ் உரிமையை தரமுடியாது என தயாரிப்பாளர்கள் கூற, லாரன்ஸ் தன் பங்குக்கு எகிறினாராம். விளைவு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துவிட்டனர்.

 

பார்ட்டியில் ஓவர் சவுண்ட்... சயீப் - கரீனா கல்யாணத்தில் குவிந்த போலீஸ்!

Bandhra Police Rushed Saif Kareena Marriage House

விருந்தில் ஏக சத்தம் போட்டதால், சயீப் அலிகான் - கரீனா கபூர் திருமண வீட்டில் திடீரென போலீஸ் குவிந்தனர். இதனால் அக்கம் பக்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சயீப் அலிகான் - கரீனா கபூர் இன்று மும்பையில் நடிக்கிறது. இந்தத் திருமணத்தையொட்டி தங்களின் நண்பர்கள் - உறவினர்களுக்கு மும்பை வீட்டில் விருந்தளிக்கப்பட்டது.

விருந்தின்போது இசை - பாடல்கள் இசைக்கப்பட்டன. அப்போது ஒலியின் அளவு மிக அதிகமாக இருந்ததால் அக்கம் பக்கத்தினர் தூங்க முடியாமல் தவித்தார்களாம்.

இதைத் தொடர்ந்து பாந்த்ரா போலீசில் ஓவர் சவுண்ட் குறித்து புகார் தெரிவித்தனர், பக்கத்து வீட்டுக்காரர்கள். இந்தப் புகாரின்பேரில், ஒரு ஜீப் நிறைய போலீசார் திருமண வீட்டுக்கு வந்திறங்கினர்.

இதனால் அந்தப் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. புகார் குறித்து விசாரணை நடத்திய பிறகு, சத்தத்தை குறைச்சிக்கங்க என்று கூறிவிட்டு போலீசார் கிளம்பினர். இதைத் தொடர்ந்து சிறிது நேரம் திருமண வீட்டில் அமைதி நிலவியது. ஆனால் ஒரு மணிநேரத்துக்குப் பிறகு மீண்டும் ஓவர் சத்தத்தில் விடிய விடிய பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருந்ததாக அந்தப் பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

 

இளையராஜா ஸ்டுடியோவுக்கு திடீர் விசிட் அடித்த ரஜினி!

Rajini Visits Ilayaraaja S Recording

நட்புக்கு மரியாதை செலுத்துவதில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வழி எப்போதும் தனி வழிதான்.

ரஜினிகாந்தின் மிக நெருங்கிய நண்பரும், தெலுங்கு நடிகருமான மோகன் பாபுவின் மகள் லஷ்மி மஞ்சு தற்போது மறந்தேன் மன்னித்தேன் படத்தை தயாரித்து வருகிறார்.

இந்த படத்துக்கான் பின்னணி இசை சேர்ப்பு பணிகள் சென்னையில் நடைபெறுகிறது. இளையராஜா மேற்பார்வையில் இந்த இசை சேர்ப்பு நடந்து வருவதும், அதைப் பார்க்க மோகன் பாபு வந்துள்ளதும் ரஜினிகாந்துக்கு தெரிய வந்தது.

அடுத்த நிமிடம் தனது தனது காரை எடுத்துக் கொண்டு யாருக்கும் முன்னறிவிப்பு கொடுக்காமல் கிளம்பிவிட்டார் ரஜினிகாந்த்.

ஸ்டூடியோவில் ரஜினிகாந்த்தை பார்த்த உடன் இளையராஜா, மோகன் பாபு உள்ளிட்டோர் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

பிறகு தனது நண்பர் மோகன் பாபுவுடனும், இளையராஜாவுடனும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த ரஜினி, படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

 

மாற்றான்.... 21 நிமிடங்கள் கட்!

Maattrraan Trimmed 21 Minutes   

சூர்யா நடித்து கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்த மாற்றான் படத்தின் நீளம் இப்போது 21 நிமிடங்கள் குறைத்து ட்ரிம் செய்யப்பட்டுள்ளது.

மாற்றான் படம் குறித்து எதிர்மறை விமர்சனங்கள் நிறைய வந்தன. மேலும் படம் மிக நீளமாக உள்ளதாகவும், இடைவேளைக்குப் பிறகு போரடிப்பதாகவும் ரசிகர்கள் தரப்பில் கூறப்பட்டது.

படத்தின் நீளம் மொத்தம் 2 மணி 47 நிமிடங்கள். எனவே படத்தில் போரடிக்கும் காட்சிகளைத் தூக்கிவிட தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்தது.

அதன்படி 21 நிமிடக் காட்சிகள் வெட்டப்பட்டு படம் ட்ரிம் செய்யப்பட்டுள்ளது.

வசூல் எப்படி?

விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் படத்துக்கு வெகு சிறப்பான ஓபனிங் கிடைத்ததால், உலகம் முழுவதும் கடந்த மூன்று தினங்களில் மட்டும் ரூ 19 கோடியை மாற்றான் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரளாவிலும் இதுவரை ரூ 2.86 கோடியை இந்தப் படம் வசூலித்துள்ளதாம்.

விடுமுறை நாட்கள் அதிகம் உள்ளதாலும், படம் ட்ரிம் செய்யப்பட்டுள்ளதாலும் இனி வசூல் அதிகரிக்கும் என்று தயாரிப்பாளர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

 

ரீமேக் செய்கிறார் மோகன்

Mohan do remake films

மலையாளத்தில் ஹிட்டான 'பியூட்டிஃபுல்' படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் மோகன். இதுபற்றி அவர் கூறியதாவது:  'அன்புள்ள காதலுக்கு' படத்தை சிவிக் சினிமா நிறுவனம் சார்பில் தயாரித்தேன். பிறகு மலையாளத்தில் 'தலப்பாவு' படத்தை தயாரித்தேன். இப்போது ஜெயசூர்யா, அனூப் மேனன், மேக்னாராஜ் நடித்த 'பியூட்டிஃபுல்' படத்தின் தமிழ், தெலுங்கு, கன்னட ரீமேக்கின் உரிமையை வாங்கியுள்ளேன். இதை நானே தயாரிக்கிறேன். மலையாளத்தில் இயக்கிய வி.கே.பிரசாத் தமிழிலும் இயக்குகிறார். இது தவிர, செந்தில் என்பவர் இயக்கும் படத்தில், ஆன்ட்டி ஹீரோவாக நடிக்கிறேன். மேலும், சாம் ஜே.சைதன்யா இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறேன்.
 

பறந்து.. பறந்து.. ஆடியோ வெளியீடு

Vishwaroopam audio release in 3 places

விஸ்வரூபம் படத்தின் இசை வெளியீட்டுக்காக வாடகைக்கு ஒரு விமானத்தை எடுத்துள்ளார் கமல் ஹாஸன். இன்றைக்கு பெரிய பட்ஜெட் படங்களின் இசை வெளியீடு வெளிநாடுகளில்தான் அதிகம் நடக்கிறது. கோச்சடையான் கூட ஜப்பானில்தான் நடக்கிவிருக்கிறது. ஆனால் 'விஸ்வரூபம்' படத்தின் பாடல்களை வெளிநாட்டில் வெளியிடாமல் தமிழகத்திலேயே முக்கிய நகரங்களில் விழா நடத்தி கமல் வெளியிடுகிறார். 3 நகரங்களிலும் ஒரே நாளில் இசை வெளியீட்டு விழாக்களில் பங்கேற்பதற்காக ஒரு குட்டி விமானத்தையே வாடகைக்கு எடுத்துள்ளார் கமல்.

முதலில் மதுரை செல்கிறார். இங்குதான் விஸ்வரூபத்தின் முதல் இசை சிடி வெளியிடப்படுகிறது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கோவையில் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறார். இறுதியாக சென்னை விழாவில் பங்கேற்று இசையை வெளியிடுகிறார். இந்த விழாவில் முன்னணி நடிகர்-நடிகைகள் பங்கேற்க உள்ளனர்.
 

சன் எக்ஸ்பிரஸ் "வீட்டுக்கு வீடு"

Sun Express Veedikku Veedu
சன் தொலைக்காட்சியில் சன் எக்ஸ்பிரஸ் என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. தென்றல் தொடரின் கதாநாயகன் தீபக் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

விஜய் டிவியில் ‘ஹோம் ஸ்வீட் ஹோம்' நிகழ்ச்சியில் டிடியுடன் கலகலப்பாக கலந்து கட்டிய தீபக் அதிலிருந்து விலகி விட்டார். சில நாட்கள் டிடி தனியாக ஹோம் ஸ்வீட் ஹோம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இப்பொழுது டிடியுடன் அந்த நிகழ்ச்சியை வேறு யாரோ தொகுத்து வழங்குகின்றனர் நம்முடைய செய்தி அதைப்பற்றியல்ல. தீபக்கை பற்றிதான்.

சன் தொலைக்காட்சியில் புதிதாக தொடங்க உள்ள சன் எக்ஸ்ப்ரஸ் நிகழ்ச்சியை தீபக் தொகுத்து வழங்க உள்ளார். இதைப்பற்றி அவரை டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். நிகழ்ச்சிக்கான முன்னோட்டம் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது.

எல்லாமே பழசாயிருச்சு புதுசா எப்போ வாங்கப்போறோம்னு தெரியலையே என்று ஆதங்கப்படும் மருமகளுக்கு ஆறுதல் தரும் விதமாக பேசுகிறார் தீபக்.

கவலைப்படாதீங்க நாங்க உங்க வீடு தேடி வருகிறோம். நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் தருபவர்களுக்கு புதிதாக பெரியதாக பரிசு தருகிறோம் என்கிறார். பழையதை மாற்றிக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார் தீபக். பழசு எதுவா இருந்தாலும் மாற்றித் தருவீர்களா? என்று மருமகள் கேட்கவே அதற்கு மாமியார் அதிர்ச்சியடைவதுதான் சூப்பராக இருந்தது.

இது வித்தியசாமான கேம்ஷோ என்கிறார்கள். ஒளிபரப்பாகும் போதுதான் தெரியும். நிஜமாகவே இது புதுசா இல்லை பழைய பாட்டிலில் ஊற்றப்பட்ட புது ஒயினா என்று.

சன் டிவியில் இப்பொழுதுதான் புதிது புதிதாக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. சீரியலுக்கு சீக்கிரம் முடிவு கட்டிட்டு நல்ல நிகழ்ச்சிகளாக போடுங்கப்பா !
 

21 நிமிடங்கள் கட்

21 mins cut in maattaran

மாற்றான் படத்தில் ஒரு சில காட்சிகள் போரடிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். ஏற்கனவே மாற்றான் படம் குறித்து எதிர்மறை விமர்சனங்கள் நிறைய வந்து கொண்டியிருக்கின்றன. திரைக்கதையில் சொதப்பல், லாஜிக் மிஸ்சிங் என ரசிகர்கள் குறநை வருகின்றனர். விமர்சனங்கள் எதிர்மறையாக இருந்தாலும், படத்துக்கு வெகு சிறப்பான ஓபனிங் கிடைத்திருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. வெளியான மூன்று தினங்களில் மட்டும் ரூ 19 கோடியை மாற்றான் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், படத்தின் நீளம் மொத்தம் 2 மணி 47 நிமிடங்கள். எனவே படத்தில் போரடிக்கும் காட்சிகளைத் தூக்கிவிட தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்தது. அதன்படி 21 நிமிடக் காட்சிகள் வெட்டப்பட்டு படம் ட்ரிம் செய்யப்பட்டுள்ளது.
 

வினய்யுடன் நடிக்கிறேனா?

I never say no to vinay

'ஒன்பதுல குரு' படத்தில் நடிக்கவில்லை என்று ஸ்ரேயா கூறினார். இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, 'இந்த படத்தில் வினய்யுடன் நான் நடிப்பதாக வந்துள்ள செய்திகள் அதிர்ச்சியாக இருந்தது.  இப்போது 'சந்திரா' படத்தில் மட்டுமே நடித்துவருகிறேன். மேலும் தெலுங்கு, இந்தியில் தலா ஒரு படங்களில் நடித்துவருகிறேன். தமிழில் வேறு படங்களில் ஒப்பந்தமாகவில்லை" என்றார். ஸ்ரேயா நடித்துள்ள 'மிட்நைட் சில்ரன்' என்ற ஆங்கிலப் படத்தின் பிரிமீயர் லண்டனில் நடக்கிறது. இதற்காக அவர் நேற்று அதிகாலை சென்னையில் இருந்து லண்டன் சென்றார்.
 

சென்னையில் ஒரு நாள்

Chennaiyil Oru Naal

மலையாளத்தில் வெளிவந்த 'டிராபிக்' படத்தை தமிழில், ரீமேக் செய்கிறார் ராதிகா சரத்குமார். இது பற்றி ராதிகா நிருபர்களிடம் கூறியதாவது: மலையாள 'டிராபிக்' படத்தை பார்த்து பிரமித்து போனேன். இப்படியெல்லாம் கூட திரைக்கதை அமைக்க முடியுமா? என்று ஆச்சர்யமாக இருந்தது. இதை தமிழில் தயாரிக்க முடிவு செய்தேன். மலையாள டிராபிக்கை தயாரித்த மேஜிக் சினிமாவின் லிஸ்டின் ஸ்டீபனுடன் எனது ஐ பிக்சர்சும் இணைந்து இதை 'சென்னையில் ஒரு நாள்' என்ற பெயரில் தயாரித்துள்ளோம்.

'டிராபிக்' இயக்குனர் இப்போது இந்தியில் பிசியாக இருப்பதால் அவரது உதவியாளர் ஷகித் காதர் இயக்கி உள்ளார். நான், பிரகாஷ்ராஜ், சரத்குமார், சேரன், பிரசன்னா, லட்சுமி ராமகிருஷ்ணன், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளோம். உடல் உறுப்பு தானம், போக்குவரத்து நெரிசலில் எதிர்கொள்ள வேண்டிய சவால் என்ற இரண்டு விஷயங்கள் குறித்த விழிப்புணர்வை படம் ஏற்படுத்தும்.

அதோடு ஒவ்வொரு மனிதரும் வாழ்க்கையில் ஏதாவது சிறு தவறு செய்திருப்போம். அதற்கு பரிகாரம் செய்ய வாய்ப்பும் வரும் என்பதையும், ஒருவரின் சிறிய விட்டுக் கொடுத்தல் இன்னொருவருக்கு பெரிய வாழ்வை கொடுக்கும் என்பது போன்ற உணர்வு பூர்வமான விஷயத்தையும் சொல்கிறோம். இன்றைய காலகட்டத்துக்கு தேவையான படத்தை தயாரித்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
 

சுவாரஸ்யமான வேடிக்கை விளையாட்டு!

Makkal Tv Vedikkai Vilayattu

கேம் ஷோ என்றாலே சின்னச் சின்ன சுவாரஸ்யங்கள் கலந்திருக்க வேண்டும். மக்கள் டிவியில் ஒளிபரப்பாகும் வேடிக்கை விளையாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் குறும்புத்தனங்கள் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது.

வேடிக்கை விளையாட்டு நிகழ்ச்சியில் இந்த வாரம் சிறு சிறு வினோத விளையாட்டுகள் இடம் பெற்றன. சென்னைக்கு அருகில் உள்ள கேளிக்கை பூங்காவான கிஷ்கிந்தாவில் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள் ஒரு புறமும், நட்பு வட்டாரமாய் சுற்றித்திரிந்த நண்பர்கள் கூட்டம் மறுபுறமுமாய் நிகழ்ச்சி களைகட்டியது. செங்கலின் மேல் கால் தடம் பதித்து சுமார் 100 மீட்டர் வரை பயணிக்கும் போட்டி, நெற்றியில் தண்ணீர் குவளையை வைத்து வானத்தை பார்த்துக் கொண்டே 100 மீட்டர் வரை நடக்கும் போட்டி என இரு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. தொகுப்பாளினி அபர்ணா அற்புதமாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். போட்டியில் பங்கேற்பவர்களுக்கு ஆச்சரியமான பரிசுகளும் கொடுக்கப்படுகின்றன.

சனிக்கிழமை தோறும் மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் இதனை எதிர்கொண்ட முறை, அவர்கள் குறும்புத்தனமாய் செய்த தவறுகள் அனைத்தும் வரும் வார நிகழ்ச்சியில் இடம்பெறுகிறது.

 

பழசுக்கு புதுசு: தீபக் வழங்கும் சன் எக்ஸ்பிரஸ்

Sun Express New Game Show

சன் தொலைக்காட்சியில் சன் எக்ஸ்பிரஸ் என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. தென்றல் தொடரின் கதாநாயகன் தீபக் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

விஜய் டிவியில் ‘ஹோம் ஸ்வீட் ஹோம்' நிகழ்ச்சியில் டிடியுடன் கலகலப்பாக கலந்து கட்டிய தீபக் அதிலிருந்து விலகி விட்டார். சில நாட்கள் டிடி தனியாக ஹோம் ஸ்வீட் ஹோம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இப்பொழுது டிடியுடன் அந்த நிகழ்ச்சியை வேறு யாரோ தொகுத்து வழங்குகின்றனர் நம்முடைய செய்தி அதைப்பற்றியல்ல. தீபக்கை பற்றிதான்.

சன் தொலைக்காட்சியில் புதிதாக தொடங்க உள்ள சன் எக்ஸ்ப்ரஸ் நிகழ்ச்சியை தீபக் தொகுத்து வழங்க உள்ளார். இதைப்பற்றி அவரை டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். நிகழ்ச்சிக்கான முன்னோட்டம் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது.

எல்லாமே பழசாயிருச்சு புதுசா எப்போ வாங்கப்போறோம்னு தெரியலையே என்று ஆதங்கப்படும் மருமகளுக்கு ஆறுதல் தரும் விதமாக பேசுகிறார் தீபக்.

கவலைப்படாதீங்க நாங்க உங்க வீடு தேடி வருகிறோம். நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் தருபவர்களுக்கு புதிதாக பெரியதாக பரிசு தருகிறோம் என்கிறார். பழையதை மாற்றிக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார் தீபக். பழசு எதுவா இருந்தாலும் மாற்றித் தருவீர்களா? என்று மருமகள் கேட்கவே அதற்கு மாமியார் அதிர்ச்சியடைவதுதான் சூப்பராக இருந்தது.

இது வித்தியசாமான கேம்ஷோ என்கிறார்கள். ஒளிபரப்பாகும் போதுதான் தெரியும். நிஜமாகவே இது புதுசா இல்லை பழைய பாட்டிலில் ஊற்றப்பட்ட புது ஒயினா என்று.

சன் டிவியில் இப்பொழுதுதான் புதிது புதிதாக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. சீரியலுக்கு சீக்கிரம் முடிவு கட்டிட்டு நல்ல நிகழ்ச்சிகளாக போடுங்கப்பா !

 

இன்று சயீப் அலிகான் - கரீனா கபூர் திருமணம்!

Kareena Saif Marriage Today

மும்பை: பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் சயீப் அலிகான்- கரீனா கபூர் திருமணம் இன்று மும்பையில் நடக்கிறது.

மும்பையில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பதிவுத் திருமணமாக இந்த நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுதினம் (18-ந் தேதி) டெல்லியில் திருமண வரவேற்பு நடைபெறுகிறது.

படோடி அரண்மனையிலும் ஒரு வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. முதலில் திருமணத்தையே இங்குதான் நடத்துவதாக அறிவித்திருந்தனர். அதற்கேற்ப அரண்மனையும் புதுப்பிக்கப்பட்டது.

சயீப் அலிகான் மறைந்த கிரிக்கெட் வீரரும், பட்டோடி நவாப்புமான மன்சூர் அலிகான் பட்டோடி- நடிகை ஷர்மிளா தாகூரின் மகன் ஆவார்.

கரீனா கபூர் நடிகர் ரந்தீர் கபூரின் இளைய மகள். அத்துடன் பழம்பெரும் நடிகர் ராஜ்கபூரின் பேத்தி. இதனால் சயீப் அலிகான்- கரீனா கபூர் ஜோடியின் திருமண வரவேற்பு டெல்லியில் மிகவும் பிரமாண்ட முறையில் நடக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் பங்கேற்பார் என்று தெரிகிறது.

இதற்கிடையே திருமணத்தையொட்டி, சங்கீத் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. மும்பை பாந்திரா பகுதியில் உள்ள கரீனா கபூர் வீட்டின் மாடியில் நடந்த இந்நிகழ்ச்சியில் பபிதா, நீது சிங், சோகா அலிகான், குணால் கெமு, சஞ்சய் கபூர், துஷார் கபூர், ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்கோத்ரா, மலைக்கா அரோரா கான், கரீனாவின் நெருங்கிய தோழி அம்ரிதா அரோரா உள்பட குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

 

மஞ்சளுக்கு மாறிய பிரபு தேவா... ஜோதிடர்கள் அட்வைஸ்?

Prabhu Deva Changes His Costume Colour

ஜோதிடர்கள் அட்வைஸ் காரணமாக, இப்போது மஞ்சள் நிற ஆடைக்கு தாவியுள்ளார் நடிகரும் இயக்குநருமான பிரபுதேவா.

மனைவியை விவாகரத்து செய்தது, நயன்தாராவுடன் காதல் முறிந்தது என ஏகப்பட்ட பிரச்சினைகளை தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்தவர் பிரபுதேவா.

இப்போது மகன்கள்தான் தனது உலகம் என்றும், சினிமாதான் மூச்சு என்றும் கூறிவருகிறார்.

விவாகரத்து செய்த முதல் மனைவியுடனும் சமரசமாகப் போய்விட்டார் பிரபுதேவா. தான் இப்போது வசிக்கும் மும்பை குடியிருப்புக்கே மனைவி ரம்லத் மற்றும் குழந்தைகளை அழைத்துச் சென்றுவசிப்பதாகக் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்ல, குடும்பத்திலும் மனதிலும் அமைதி நிலவ மஞ்சள் ஆடையை அணியும்படி ஜோதிடர் ஒருவர் பரிந்துரைத்தாராம்.

அதன்படி இப்போது மஞ்சள் உடையை அணிய ஆரம்பித்துள்ளார் பிரபுதேவா. வெளியில் செல்லும்போதுகூட மஞ்சள் உடையில்தான் காணப்படுகிறார்.

 

போலீசில் "நான் ஈ" சுதீப் புகார்

sudeep complaints his twitter

தனது பெயரில் போலி டுவிட்டர் பக்கம் தொடங்கப்பட்டுள்ளதால் போலீசில் புகார் அளித்துள்ளார் கன்னட பட ஹீரோ சுதீப். Ôநான் ஈ' படத¢தில் வில்லனாக நடித்து புகழ் பெற்றவர் சுதீப். இவர் டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து தனது கருத்துகளை எழுதி வருகிறார். இந்நிலையில் இவரது பெயரில் இன்னொரு டுவிட்டர் பக்கம் இயங்கி வந்துள்ளது. இது பற்றி சுதீப்புக்கு அவரது நண்பர்கள் தகவல் கூறினர். இதையடுத்து அந்த பக்கத்தை பார்த்தபோது, சுதீப் அதிர்ந்து போயிருக்கிறார். அதில் தான் கூறியதாக சில கருத்துகள் இடம்பெற்றிருந்தன.

தனது அடுத்தகட்ட பணிகள் தொடர்பாகவும் அதில் சில குறிப்புகள் இருந்தன. எல்லாமே பொய்யான தகவல்களாக அதில் இடம்பெற்றிருந்ததால் சுதீப் கொதித்துப்போனாராம். மேலும் தனது பெயரில் இதுபோல் மோசடி செய்வது யார் என்பதை தெரியப்படுத்துமாறு தனது ரசிகர்களுக்கு சுதீப் உத்தரவிட்டாராம். ஒரு மாதமாகியும் அது யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து சைபர் கிரைமில் புகார் அளித்திருக்கிறார் சுதீப்.

இதுபற்றி அவர் கூறும்போது, ÔÔநான் ஈ படத்துக்கு பிறகு எல்லோருக்கும் தெரிந்த முகமாக நான் மாறிவிட்டேன். இதை பயன்படுத்தி எனது பெயரில் யாரோ டுவிட்டர் பக்கத்தை தொடங்கியுள்ளனர். இது எனக்கு பெரும் ஷாக் ஆக இருந்தது. இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துவிட்டேன். ரசிகர்கள் யாரும் போலி டுவிட்டர் பக்கத்தை நம்ப வேண்டாம்" என்றார்.
 

சயீப்-கரீனாவிற்கு இன்று திருமணம்

Saif Ali Khan and Kareena Kapoor to get married today

பாலிவுட் நட்சத்திர ஜோடி சயீப் அலிகான்கரீனா கபூர் திருமணம், இன்று நடைபெற உள்ளது. மும்பையில் நடைபெற உள்ள இவர்களின் பதிவு திருமணத்தில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர். வரும் 18ம் தேதி டெல்லியில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு, சயீப்கரீனா ஜோடியின் உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். கிரிக்கெட் வீரர் மன்சூர் அலிகான் பட்டோடியின் மகனான சயீப்பிற்கு, இது 2வது திருமணம் ஆகும்.
 

ஒரு பாட்டுக்கு ஆடுவேன்

I like item song

பெரிய படத்தில் மட்டுமே ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடுவேன் என்றார் சமீரா ரெட்டி.Ôவாரணம் ஆயிரம்', Ôஅசல்' உள்ளிட¢ட படங்களில் நடித்தவர் சமீரா ரெட்டி. இப்போது தமிழில் இவருக்கு வாய்ப்புகள் இல்லை. இந்த நேரத்தில் Ôசக்ரவியூ' இந்தி படத்தில் ஒரு பாட்டுக்கு சமீரா டான்ஸ் ஆடியுள்ளார். இதை பற்றி அறிந்ததும் சில தென்னிந்திய இயக்குனர்கள் தங்கள் படங்களில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆட சம¦ராவை கேட்டிருக்கிறார்கள். ஆனால் சமீரா மறுத்துவிட்டாராம். இது பற்றி சமீரா ரெட்டி கூறியதாவது:

சக்ரவியூ படம் பிரபல இயக்குனரான பிரகாஷ் ஜாவின் படம். அவரது படத்தில் ஒன்று அல்லது இரண்டு பாடல்தான் இடம்பெறும். அரசியல் கதைகளை மட்டுமே அவர் உருவாக்குவதால் பட காட்சிகள் பரபரப்பாக நகர்ந்துகொண்டிருக்கும். அந்த நேரத்தில் ரசிகர்களை ரிலாக்ஸ்படுத்த பாடல் காட்சியை புகுத்துவார். அப்படி இடம்பெறும் பாடலின்போது ரசிகர்கள் யாரும் வெளியே எழுந்து போகமாட்டார்கள். எனவேதான் அவர் ஒரு பாட்டுக்கு ஆட கேட்டதும் சம்மதித்தேன்.

அது கவர்ச்சியான பாடல் காட்சிதான். அந்த பாடல் காட்சியில் எனது Ôபோஸ்Õ பார்த்துவிட்டு பலர் அதுபோல் ஒரு பாட்டுக்கு ஆட கேட்கிறார்கள். பெரிய ஹீரோ அல்லது பெரிய இயக்குனர் சம்பந்தப்பட்ட பெரிய படமாக இருந்தால் மட்டுமே அதுபோல் நடிப்பேன். இல்லாவிட்டால் நோ கால்ஷீட். இவ்வாறு சமீரா ரெட்டி கூறினார்.
 

பொங்கலுக்கு தள்ளிப்போகிறது ரஜினி படம்

Kochadaiyaan may release on pongal

ரஜினி நடித்துள்ள 'கோச்சடையான்' படம் டிசம்பருக்கு பதிலாக பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 'ராணா' படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் ரஜினிகாந்த். அப்போது உடல் நிலை பாதிக்கப்பட்டதால் சிங்கப்பூரில் ஒரு மாதம் தங்கியிருந்து சிகிச்சை பெற்று திரும்பினார். ராணா படத்தில் ரிஸ்க்கான ஆக்ஷன் காட்சிகள் இடம்பெறுவதால் ரஜினியின் உடல் நிலை காரணமாக அந்த படம் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து மகள் சவுந்தர்யா இயக்கத்தில் கோச்சடையான் படத்தில் நடிக்க தொடங்கினார் ரஜினி. இதில் ரஜினி ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். ஜாக்கி ஷெராப், சரத்குமார், ஆதி உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை முதலில் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் காரணமாக டிசம்பரில் திரையிட திட்டமிட்டனர். இந்நிலையில் பட ஷூட்டிங் முடிந்தாலும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தாமதமாகும் என தெரிகிறது. காரணம், படத்தின் பெரும்பாலான காட்சிகள் கம்ப்யூட்டர் கிராபிக்சில் உருவாக்கப்படுகிறது. அதே நேரம் அந்த காட்சிகள் கிராபிக்ஸ் போல் தெரியக்கூடாது என சவுந்தர்யா நினைக்கிறார்.

இதனால் குறிப்பிட்ட சில காட்சிகளுக்கான கிராபிக்ஸ் பணிகள் லண்டனில் நடைபெற உள்ளது. இதன¢ காரணமாக படத்தை டிசம்பரில் திரையிட முடியாது என பட வட்டாரங்கள் கூறுகின்றன.
படத்தின் பாடல் சிடி வெளியீட்டு விழாவை ஜப்பானில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த விழாவே டிசம்பரில்தான் நடைபெறும் என கூறப்படுகிறது. இதையடுத்து படத்தை 2013 பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய சவுந்தர்யா யோசித்துள்ளாராம்.