சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை சினிமாவாகிறது!

Tags: atul agnihotri, biopic, English, film, indian, life history, rajini, summaryPopular, superstar rajinikanth


Rajinikanth
இந்திய சூப்பர் ஸ்டார் என்ற பெருமைக்குரிய ரஜினியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது, தமிழில் அல்ல இந்தியில்!

இந்தியாவில் நடிகர் ஒருவரின் முழு வாழ்க்கை வரலாறு சினிமாவாக எடுக்கப்படுவது இதுவே முதல்முறை. ரஜினியின் அனுமதியுடன் ரஜினி வாழ்க்கையை சினிமாவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் அதுல் அக்னிஹோத்ரி. பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர்.

இதுகுறித்து அதுல் அக்னிஹோத்ரிக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், “ரஜினி சார் அனுமதியோடு இந்தப் படம் எடுக்கப்பட உள்ளது. கிட்டத்தட்ட எல்லாமே முடிவாகிவிட்டன. விரைவில் படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும்.

இந்தப் படத்தில் நடிப்பவர்கள் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லையாம். ரஜினியின் முக அமைப்யையொத்த சில புதுமுகங்களைத் தேர்வு செய்துள்ளார்களாம். ரஜினியின் உடல்மொழி, மேனரிஸங்கள் யாருக்கு சரியாக வருகிறதோ அவரை ரஜினியாக நடிக்க வைக்கப் போகிறார்களாம். படத்துக்கு ரஜினியின் முன்னுரையைப் பெறவும் திட்டமுள்ளதாம்.

பல வெளிநாட்டு விளம்பரப் படங்களை இயக்கிய லாயிட் பாப்டிஸா என்ற இயக்குநர்தான் ரஜினி படத்தை இயக்கப் போகிறாராம் .

இந்தியாவில் இதுவரை எந்த சினிமா கலைஞரின் வாழ்க்கை வரலாறும் முழுமையாகப் படமாக்கப்பட்டதில்லை. முன்பு, பிரபல பாடகர் அமரர் கிஷோர் குமாரின் வாழ்க்கையைப் படமாக்க முயன்றனர். ஆனால் பின்னர் அந்த முயற்சி கைவிடப்பட்டது நினைவிருக்கலாம்.

English summary
Popular Hindi producer Atul Agnihotri is gearing up to produce a film on the life history of globally acclaimed Indian Superstar Rajinikanth. A source close to Agnihotri confirmed, “Atul is already busy working on his next, which will be a biopic of Rajinikanth. Rajini has given his consent too, so the film is expected to go on floors soon.”
 

விஷால் படத்துக்கு தலைப்பு 'பிரபாகரன்'!!

Tags:


Vishal and Sameera Reddy
பிரபு தேவா இயக்கத்தில் விஷால்- சமீரா ரெட்டி நடித்து வரும் படத்துக்கு பிரபாகரன் என்று தலைப்பிட்டுள்ளனர்.

பிரபாகரன் என்ற பெயரின் மகத்துவம் மற்றும் பிரபலத்தை சொல்லித் தெரியவேண்டியதில்லை. இந்தத் தலைப்பை தங்கள் கனவுப் படத்துக்கான தலைப்பாக நினைத்து அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளோரை ஒரு பட்டியலே போடலாம்.

பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவாகும் படத்துக்கு இந்தத் தலைப்புதான் சூட்டப்பட்டுள்ளதாக முன்பு கூறிவந்தனர்.

இன்னும் சிலரும் இந்தத் தலைப்பை பதிவு செய்துள்ளதாகக் கூறிவந்த நிலையில், பிரபுதேவா இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்துக்கு பிரபாகரன் என தலைப்பிட்டுள்ளனர்.

ஆனால் பிரபாகரனுக்கும் இந்தப் படத்துக்கும் துளியும் சம்பந்தமில்லை. தெலுங்கில் கோபிசந்த் நடிப்பி்ல் வெளியான மசாலாப் படம் சௌர்யம் படத்தைத்தான் தமிழில் விஷால் – சமீரா ஜோடியை வைத்து இயக்கி வருகிறார் பிரபு தேவா. இப்போது கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் பெயருக்கு எதிர்ப்பு வரும் பட்சத்தில் பிரபா என பெயரை சுருக்கவும் திட்டமிட்டுள்ளனராம்.

ஒரு மசாலா படத்துக்கு தமிழினத்தின் ஒப்பற்ற போராளியான பிரபாகரன் பெயரை வைப்பதா என எதிர்ப்புகள் கிளம்பவும் வாய்ப்பிருக்கிறது.

விஜயகாந்த் நடிப்பில் ஏற்கெனவே கேப்டன் பிரபாகரன் என்ற படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது நினைவிருக்கலாம்!!

English summary
Vishal – Sameera Reddy’s forthcoming movie in which Vishal plays a cop and directed by Prabhu Deva will be titled as Prabhakaran or Prabha.
 

பொன்னியின் செல்வன் கைவிடப்பட்டதன் பின்னணி!

Tags: budget, conspiracy, drop, heroes, Manirathnam, Ponniyin, reliable sources, summaryHeavy


Manirathnam
கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை மணிரத்னம் படமாக எடுக்கப்போகிறார் என்று செய்திகள் வெளியானதும், இதை நினைத்து மகிழந்தவர்களுக்கு சமமாக வருத்தப்பட்டவர்களும் இருந்தார்கள்.

காரணம் கல்கியின் இந்த காவியம் மீது அவர்கள் கொண்டிருந்த அபிமானம். இப்போது வருத்தப்பட்டோருக்கு சற்று நிம்மதி. கதை தப்பித்ததே என்று!!

சரி… ஏன் இந்தக் கதை படமாவது சந்தேகத்துக்கிடமானது, அதுவும் விஜய் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும் அட்வான்ஸ் கொடுத்திருந்த நிலையில்?

முக்கிய காரணம் ஒரு நடிகர் மற்றும் பட்ஜெட். இந்தக் கதையில் தான் நடிக்க வேண்டும் என்று விரும்பினாராம் ஒரு முன்னணி நடிகர். ஆனால் அதற்கான வாய்ப்பு அமையாமல் போகவே, “படத்தில் நான் இல்லை. மீதியுள்ளவர்களை வைத்து, என்னதான் மணிரத்னம் சிறப்பாக எடுத்தாலும் 100 கோடியை எடுத்துவிட முடியுமா?யோசிங்க”, என பற்ற வைக்க, முதல்போட முன் வந்தவர்கள் பின்வாங்க ஆரம்பித்துவிட்டனராம்.

ரஜினி அல்லது கமல் நடிப்பதாக இருந்தால் ரூ 100 கோடிக்கு மேலும் முதலீடு செய்ய நாங்கள் தயார். இன்னொரு ராவணன் மாதிரியாகிவிடக்கூடாது, என அட்வைஸும் செய்ய, யோசித்த மணிரத்னம், இப்போதைக்கு ஒரு கமா போட்டு நிறுத்தி வைத்துள்ளாராம். கமா முற்றுப்புள்ளியாகுமா தெரியவில்லை!

English summary
Heavy budget and a heroes inner conspiracy is the reasons behind the drop of Manirathnam’s Ponniyin Selvan, according to some reliable sources.
 

நடிகர் பிரகாஷ்ராஜால் ரத்தக்கண்ணீர் வடிக்கிறேன்! - கதறும் இயக்குநர் ஜீவன்

Tags: becuase, film, irrsponsibilty, said, suffering


Director Jeevan and Prakash Raj
நடிகர் பிரகாஷ்ராஜால் நான் ரத்தக் கண்ணீர் வடிக்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளேன் என்றார் இயக்குநர் ஜீவன்.

சிங்கப்பூரைச் துவார் ஜி.சந்திரசேகர் தயாரித்துள்ள ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’ என்ற படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை அடையாறில் உள்ள ஆந்திர மகிள சபாவில் நடந்தது.

பாடல்களை, சென்னை நகர திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் வெளியிட, ஆந்திர மகிள சபாவின் நிறுவனர் கிருஷ்ணமாச்சாரி நரசிம்மன் பெற்றுக்கொண்டார். அப்போது அவரிடம், ஆந்திர மகிள சபாவில் வசிக்கும் மாற்று திறனாளிகளின் நலனுக்காக, பட அதிபர் துவார் ஜி.சந்திரசேகர் ரூ.1 லட்சம் வழங்கினார்.

விழாவில், கற்க கசடற, கொக்கி, தூத்துக்குடி ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளரும், ஞாபகங்கள், மயில் ஆகிய படங்களின் இயக்குநருமான ஜீவன் பேசும்போது, “பெரிய பட அதிபர், சின்ன பட அதிபர் என்பது ஒரு படத்தை எடுத்து உரிய நேரத்தில் ரிலீஸ் செய்வதை பொருத்தே அமையும். இந்த படத்தை தயாரித்த துவார் ஜி.சந்திரசேகர் மிக குறுகிய காலத்தில் படத்தை தயாரித்து முடித்து வெளியிட இருக்கிறார். அந்த வகையில், அவர் பெரிய தயாரிப்பாளர்தான்.

நடிகர் பிரகாஷ்ராஜ் பெரிய தயாரிப்பாளர்தான். ஆனால், அவர் தயாரிப்பில் நான் இயக்கியுள்ள மயில் படம் மூன்றரை வருடங்களாக ரிலீஸ் ஆகாமல், பெட்டிக்குள் முடங்கி கிடக்கிறது. அந்த படத்தை நான் மிக குறைந்த பட்ஜெட்டில், மிக குறுகிய காலத்தில் எடுத்துக் கொடுத்தேன். இளையராஜாவின் இசையில் பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டாகின.

மயில் படத்துடன் பூஜை போடப்பட்ட வெள்ளித்திரை, அபியும் நானும், இனிது இனிது, பயணம் ஆகிய படங்கள் திரைக்கு வந்துவிட்டன. தரமான கதையம்சம் கொண்ட மயில் படம் முடிவடைந்து மூன்றரை வருடங்கள் ஆகிவிட்டன. படத்தை ரிலீஸ் செய்வதற்காக தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ் எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

மயில் படம் வெளிவந்தால்தான் எனக்கு வாழ்க்கை கிடைக்கும். அந்த படத்தை ரிலீஸ் செய்யாததால், நான் வேறு பட வேலைகளுக்கு போக முடியவில்லை. தினம் தினம் ரத்தக்கண்ணீர் வடிக்கிறேன். ஒவ்வொரு நாளும் கடப்பது ரணமாக இருக்கிறது.

சினிமா படங்களில் வில்லனாக வரும் பிரகாஷ்ராஜ், நிஜ வாழ்க்கையில் எனக்கு வில்லனாகி விட்டார்,” என்று பேசினார்.

அடுத்து பேசவந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன், இயக்குநர் ஜீவனுக்கு ஆறுதல் கூறும் வகையில் இப்படிச் சொன்னார்:

“கவலைப்படாதீர்கள் ஜீவன். உங்கள் பிரச்சினை பேசி தீர்க்கப்படும்,” என்றார்.

English summary
Jeevan, well known photographer and director of yet to be released Mayilu complained on actor – producer Prakash Raj in a cinema function. He said that becuase of Praksha Raj’s irrsponsibilty in releasing his film Mayilu, he is suffering a lot.
 

நாளை ஜூனியர் என்டிஆர் திருமணம் - ரூ 18 கோடி செலவில் பிரமாண்ட ஏற்பாடுகள்!!

Tags: bride and bridegroom, jr ntr, lakshmi, pranathi, telugu culture, wedding of the year


Jr NTR  and Ileana
நாளை நடக்கவிருக்கும் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் – லட்சுமி பிரணதி திருமணத்துக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவின் பேரன் நடிகர் ஜுனியர் என்.டி.ஆர். இவருக்கும், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சகோதரி மகள் லட்சுமி பிரணதிக்கும் நாளை திருமணம் நடைபெற உள்ளது.

ஆந்திர மாநிலம் மாதாப்பூரில் அமைந்துள்ள ஐடெக்ஸ் வளாகத்தில் இவர்களுடைய திருமணம் நடக்கிறது. இந்தத் திருமணத்துக்கு ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் உள்பட சுமார் 15 ஆயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் ஜுனியர் என்.டி.ஆர் திருமணத்திற்காக ஐடெக்ஸ் வளாகத்தில் கடந்த ஒரு வாரகாலமாக பிரம்மாண்டமான செட்டிங்குகளுடன் திருமண மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரபல சினிமா கலை இயக்குனர் ஆனந்து சாயி தலைமையில் இப்பணி நடைபெற்று வருகிறது. திருமண ஏற்பாடுகளுக்கான செலவு மட்டும் ரூ 18 கோடி. 300 பணியாளர்கள் இரவு பகலாக பணியாற்றிவருகின்றனர்.

மணமக்கள் அமர உள்ள மண்டபத்தின் மீது பெரிய கலசங்களுடன் யானைகளின் உருவ சிலைகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மணமேடைக்கு இருபுறமும் சிறிய சிறிய மேடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இவர்களின் திருமணத்திற்கு ஏராளமான பிரபலங்கள் வருவதால், அவர்களுக்கென்று தனியாக மண்டபத்திற்கு வருவதற்காக வி.ஐ.பி. கேட் அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக ஐடெக்ஸ் பின்புறமுள்ள மைதானம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மண்டபம் அமைக்கும் பணிகளை ஜுனியர் என்.டி.ஆர். தினமும் வந்து மேற்பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கி வருவதாக கலை இயக்குனர் ஆனந்து சாயி தெரிவித்தார்.

திருமணம் முடிந்தவுடன் நடைபெற உள்ள சிறப்பு விருந்துக்கு, விஜயவாடாவை சேர்ந்த பிரபல கேட்டரிங் நிறுவனத்திற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஐடெக்ஸ் வளாகத்தில் உள்ள மூன்று மாபெரும் ஹால்கள் ஒதுக்கப்பட்டு, அலங்கார பணிகள் நடைபெற்று வருகின்றன.

English summary
The most awaited wedding of the year Jr NTR with Lakshmi Pranathi is getting ready with traditional Telugu culture touch every where, both the bride and bridegroom houses are full of marriage arrangements along with relatives and well wishers. The stage for the wedding is nearing completion and is in the last stage of decoration, as we know the marriage is on May 5th and the budget of the marriage is a whopping 18 crore the set was erected by art director Anand and around 300 workers are working day and night for the stage.
 

தேர்தல் விதிமீறல் வழக்கில் குஷ்புவுக்கு காவல் துறை சம்மன்

Tags: actress kushboo, campaigning, connection, department, election rules, Kushboo, violation, violation case

kushboo
தேனி: தேர்தல் விதிமுறைகளை மீறி தேனி மாவட்டத்தில் 2 இடங்களில் பிரசாரம் செய்த வழக்கில் நடிகை குஷ்புவுக்கு காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக நடிகை குஷ்பு பிரசாரம் செய்தார். தனது பிரசாரத்தின் ஒரு பகுதியாக அவர் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, பழனிசெட்டிபட்டி ஆகிய இடங்களில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

இந்த இரண்டு இடங்களிலும் அவர் தேர்தல் விதிமுறையை மீறி பிரசாரம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக குஷ்புவுக்கு காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இது குறித்து மாவட்ட காவல் துறையினர் கூறியதாவது,

தேர்தல் விதியை மீறி ஆண்டிபட்டி, பழனிசெட்டிபட்டியில் பிரசாரம் செய்த வழக்கில், சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் மூலம் நடிகை குஷ்புவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்றனர்.
English summary
Police department has sent a summon to actress Kushboo in connection with election rules violation case. Police have filed a rules violation case against her for campaigning against the rules in 2 places in Theni district.
 

பிறந்த நாள்... த்ரிஷாவின் நள்ளிரவுப் பார்ட்டி!!

Tags:

 

சும்மா எதுக்கு பில்ட் அப்...நல்லாருந்தா படம் ஓடும் - த்ரிஷா

Tags: film, films, firm, payment, producers, promos, self, summaryTrisha

Trisha
கோடி கோடியா கொட்டிக் கொடுத்தாலும் மோசமான படங்களில் நடிப்பதாக இல்லை. மேலும் ஒரு படம் உருவாகிக் கொண்டிருக்கும்போதே அதைப் பற்றி ஆஹா ஓஹோ என புகழ்வது வேஸ்ட். நல்ல படமா இருந்தா ஓடும், என்றார் நடிகை த்ரிஷா.

ஹைதராபாதில் த்ரிஷா அளித்த பேட்டி:

ஒரு படத்தில் நடிக்கும் போது நடிகர், நடிகைகள் இஷ்டத்துக்கும் அடித்துவிடுகின்றனர். தாங்கள் நடிக்கும் படத்தை ஆஹா ஓஹோவென புகழ்ந்து பேசுகிறார்கள். ஆனால் படம் ரிலீசான பிறகு ஒரு சில நாட்களிலேயே தியேட்டரை விட்டு போய்விடுகிறது.

எனவே இந்த மாதிரி வெற்று பில்ட் அப் எதற்கு? தாங்கள் நடிக்கும் படங்களை தாங்களே மிகைப்படுத்தி பேசுவது எனக்கு பிடிக்காது. எல்லா படங்களும் வெற்றி பெறுவது இல்லை. படங்கள் ஓடுமா? ஓடாதா? என்பதை தீர்மானிப்பவர்கள் ரசிகர்கள். அவர்கள் முடிவுக்கு விட்டு விட வேண்டும்.

படம் ரிலீசுக்கு முன்பே அதை புகழ்வது ரசிகர்களை ஏமாற்றுவதுபோல் ஆகி விடும். நல்ல கதையம்சம் உள்ள படங்களையே தேர்வு செய்து நடிக்கிறேன். எனது கேரக்டர் நன்றாக இருந்தாலும் படம் வெற்றி பெற வேண்டும். கதாபாத்திரம் நன்றாக அமைந்தாலும் தோல்வி அடையும் படங்களில் நடிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.

கூடுதல் சம்பளம் தருவதாக ஆசை காட்டி, கோடி கோடியாகக் கொட்டினாலும் தோல்வி அடையும் படங்களில் நடிக்க மாட்டேன்," என்றார் த்ரிஷா.
English summary
Trisha firm on her decision to not to appearing in films with poor stories, even the producers offer big payment. She has also slammed the self praising of stars in film promos of their films. She told, "just let the public to speak or praise the film".
 

நயன்தாராவின் காதல் கதையா எங்கேயும் காதல்? - பிரபுதேவா பதில்

Tags: flick, kadhal, love affair, plot, prabhu deva, rumour, summaryActor, told

Prabhu Deva and Nayantara
எங்கேயும் காதல் ஒரு பொதுவான காதல்கதை. எங்கேயும் பார்கக் கூடிய சுவாரஸ்யமான கதை. அது குறிப்பிட்ட யாருடைய காதல் கதையும் அல்ல, என்றார் இயக்குநரும் நடிகருமான பிரபு தேவா.

நயன்தாராவும் பிரபுதேவாவும் திருமணத்துக்கு தயார் ஆகிறார்கள். முதல் மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்வதற்கான அனைத்து நடைமுறைகள், செய்ய வேண்டிய செட்டில்மெண்டுகளை முடித்து தயாராக உள்ளார் அவர். இன்னொரு பக்கம் அவர் இயக்கிய தமிழ்ப் படம் எங்கேயும் காதல் விரைவில் வெளியாகிறது. அடுத்து விஷால் நடிக்கும் படமான பிரபாகரனின் இறுதிக்கட்டப் பணிகள் நடக்கின்றன.

இந்தப் படம் முடிந்ததும் பிரபு தேவா - நயன்தாரா திருமணம் மும்பையில் நடக்கிறது.

இந்த நிலையில் எங்கேயும் காதல் ரிலீஸ் குறித்து பிரபு தேவா கூறுகையில், "காதல் என்பது உலகளவில் பொதுவான விஷயம். அதை உணராதவர்கள் எவரும் இருக்க முடியாது.

அதுதான் இந்தப் படத்துக்கு அடிப்படை. இது யாருடைய சொந்தக் கதையும் அல்ல. வாண்டட் என்ற ஆக்ஷன் படத்தை இந்தியில் எடுத்தேன். பலரது அனுபவத்தை வைத்துதான் அப்படத்தை எடுத்தேன் என்று சொல்ல முடியுமா? அல்லது அது என் சொந்தக் கதை ஆகிவிடுமா?

எங்கேயும் காதல் அழகான காதல் கதை. இளைஞர்களுக்கு ரொம்ப பிடிக்கும். ஜெயம் ரவியும், ஹன்சிகா மோத்வானியும் பொருத்தமான ஜோடியாக உள்ளனர். ஜாலியான படமாக இது இருக்கும். எனது தயாரிப்பாளர் என் கதை மீது நம்பிக்கை வைத்து படத்தை எடுக்க எனக்கு முழு சுதந்திரம் அளித்தார். அதை தவறாகப் பயன்படுத்தவில்லை", என்றார்.
English summary
Actor turned director Prabhu Deva ruled out the rumour on the plot of his forthcoming flick Engeyum Kadhal. He told that the film's story is not based on his love affair with Nayanthara.
 

கடை திறப்பு விழாக்களுக்கு முக்கியத்துவம் நடிகைகளை புறக்கணிக்க வேண்டும் - தாசரி ஆவேசம்

Tags: actresses, Cinema, film industry, personality

Dasari Narayana Rao
கடை திறப்பு விழாக்களுக்கு முக்கியத்துவம் நடிகைகளை புறக்கணிக்க வேண்டும் - தாசரி ஆவேசம்

ஹைதராபாத்: நகைக் கடை திறப்பு, ஜவுளிக் கடை திறப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, சினிமா விழாக்களைப் புறக்கணிக்கும் நடிகைகளை இனி சினிமா உலகமும் புறக்கணிக்க வேண்டும், என்றார் இயக்குநரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தாசரி நாராயணராவ்.

ஹைதராபாத்தில் "வம்சி" விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் விருதுகள் பெற நடிகைகள் யாரும் வரவில்லை. இவ்விழாவில் தாசரி நாராயணராவ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிருந்தார். விருது வாங்க யாருமே வராதது அவரைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியது.

அவர் பேசுகையில், "கதாநாயகிகள் சினிமாவில் சம்பாதிக்கின்றனர். அதோடு துணி கடை, நகை கடைகள் திறப்பு விழாக்களுக்கும் போகிறார்கள். அதற்கும் பணம் வாங்கிக் கொள்கின்றனர். ரூ 15 லட்சம் முதல் 1 கோடி வரை வாங்குகிறார்கள். இந்த சம்பாத்தியத்துக்கெல்லாம் காரணம் சினிமாதான் என்பதை வசதியாக மறந்துவிடுகிறார்கள்.

அதனால்தான் இது போன்ற விருது வழங்கும் விழாக்களுக்கு அழைத்தால் வருவது இல்லை. இது போன்ற நடிகைகளிடம் திரையுலகினர் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

பணத்துக்காக கடை திறப்பு விழாக்களுக்கு செல்லும் கதாநாயகிகளை புறக்கணிக்க வேண்டும். திரைப்பட விழாக்களுக்கு அவர்களை அழைக்கக் கூடாது. சினிமா துறையில் தங்களுக்கும் பங்கு இருக்கிறது என்பதை நடிகைகள் உணர்வது இல்லை," என்றார்.

தாசரி நாராயணராவுக்கு இன்று 66வது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
English summary
Dasari narayananrao, one of the multi talented personality in Andhra cinema and politics blasted actresses for ignoring film functions and award shows. He urged the film industry to boycott actresses who not turned in these functions.
 

3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா கேட்டில் ஷூட்டிங்

Tags: nbsp

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா கேட்டில் ஷூட்டிங்

5/4/2011 10:21:30 AM

படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த மும்பை, இந்தியா கேட் பகுதியில் 3 வருடங்களுக்குப் பிறகு 'வந்தான் வென்றான்' படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் கண்ணன் கூறியதாவது: 'வந்தான் வென்றான்' படத்தின் கதையில் பெரும்பகுதி மும்பையில் நடக்கிறது. அதனால் மும்பையின் முக்கிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய தாஜ் ஓட்டல் முன்பும், இந்தியா கேட் பகுதியிலும் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கவில்லை. கடுமையாகப் போராடி அனுமதி பெற்றோம். சண்டை காட்சிகள், குண்டு வெடிப்பு, விபத்து காட்சிகள் படமாக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதி கொடுத்தார்கள். பிறகு 4 நாட்கள் பாதுகாப்போடு படப்பிடிப்பை நடத்தினோம் ஜீவா, டாப்ஸி, சந்தானம் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டது. தீவிரவாத தாக்குதல் நடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு நாங்கள்தான் முதன் முதலில் படப்பிடிப்பு நடத்தினோம். இன்னும் இரு பாடல் காட்சிகள் மட்டுமே பாக்கி உள்ளது. இதற்காக படப்பிடிப்பு குழுவினர்  சுவிட்சர்லாந்து செல்கிறோம்.




 

அவன் இவன் படத்துக்கு யு/ஏ

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அவன் இவன் படத்துக்கு யு/ஏ

5/4/2011 10:19:29 AM

பாலா இயக்கியுள்ள 'அவன் இவன்' படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. ஆர்யா, விஷால், ஜனனி, மது ஷாலினி நடித்துள்ள படம் 'அவன் இவன்'. பாலா இயக்கியுள்ள இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதையடுத்து ஜூன் மாதம் படம் ரிலீஸ் ஆகும் என்று தெரிகிறது.




 

அரசியல் ஆர்வம் இல்லை

Tags: nbsp

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அரசியல் ஆர்வம் இல்லை

5/4/2011 10:20:19 AM

நடிகை காவ்யா மாதவன், கேரள சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்தார். அவர் அரசியல் கட்சி ஒன்றில் சேரப்போகிறார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது:
எனக்கு எப்போதுமே அரசியலில் ஈடுபாடு கிடையாது. இந்த முறை பத்தினாபுரம் தொகுதியில்  மலையாள நடிகர் சங்கத்தின் (அம்மா) துணை தலைவர் கணேஷ்குமார் போட்டியிட்டா£ர். எங்கள் சங்கத்தை சேர்ந்தவர் என்பதால் பிரசாரம் செய்தேன். அவருக்கு எதிரணியில் இருப்பவர்கள் அதற்குள் பல கதைகள் கட்டிவிட்டார்கள். மற்றபடி எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை.
சினிமாவில்தான் கவனம் செலுத்தி வருகிறேன். அடுத்து திலீப்புடன் ஒரு மலையாளப் படத்தில் நடிக்கிறேன். தமிழ்பட இயக்குனர்கள் எனக்கு கதை சொல்கிறார்கள். தமிழில் நடிக்க ஆசையும் இருக்கிறது. ஆனால் நல்ல கம்பெனி முக்கியம் என்பதால் அதற்காக காத்திருக்கிறேன்.




 

மரத்தைச் சுற்றி ஆடுவது போரடித்து விட்டது

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மரத்தைச் சுற்றி ஆடுவது போரடித்து விட்டது

5/4/2011 10:22:54 AM

மரத்தைச் சுற்றி பாடல்களுக்கு ஆடுவது, ஹீரோவை துரத்தி துரத்தி காதலிப்பது போன்ற கேரக்டர்களில் நடித்து போரடித்துவிட்டது என்றார் சதா. இதுபற்றி அவர் கூறியதாவது: கன்னடம், தெலுங்கு, தமிழில் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறேன். கன்னடத்தில் உபேந்திரா ஜோடியாக நடிக்கிறேன். தமிழில் ஆர்.கே. ஜோடியாக 'புலிவேஷம்' இருக்கிறது. ஏன் அதிகப்படங்களில் நடிக்கவில்லை என்று கேட்கிறார்கள். ஹீரோவை துரத்தி துரத்தி காதலிப்பது, 3 பாடலுக்கு மரத்தை சுற்றி டான்ஸ் ஆடிவிட்டு அடுத்த காட்சியில் இருந்து காணாமல் போவது போன்ற கதைகளில் நிறைய நடித்துவிட்டேன். இது எனக்கும் ரசிகர்களுக்கும் போரடித்துவிட்டது. இனி அதைவிடுத்து கதைக்கு முக்கியத்துவமுள்ள கேரக்டரை தேடுகிறேன். படத்தில் முக்கியமான கேரக்டர் என்றால் வெறும் 10 சீன்களில் கூட நடிக்க நான் ரெடி. அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து எல்லா நேரமும் நடித்துக்கொண்டே இருக்க விரும்பவில்லை. தோழிகளுடனும் குடும்பத்துடனும் அதிக நேரம் செலவழிப்பதையே விரும்புகிறேன். இவ்வாறு சதா கூறினார்.




 

இடைவெளி ஏன்?

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இடைவெளி ஏன்?

5/4/2011 10:16:07 AM

போட்டிகளை சமாளிக்க கவனமாக அடியெடுத்து வைக்கிறேன் என்று கரண் கூறினார். மேலும் அவர் கூறியதாவது: 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' எனது அடுத்த படமாக வெளிவருகிறது. நான் ரொம்பவே எதிர்பார்க்கும் படம். முதன் முதலாக ஒரு நிஜ கேரக்டரில் நடித்திருக்கிறேன். கன்னியாகுமரி வழக்கு, பாடி லேங்குவேஜ் என்று நிறைய மெனக்கெட்டிருக்கிறேன். எனது படங்கள் வெளிவருவதில் நிறைய இடைவெளி இருப்பது உண்மைதான். நான் ஒவ்வோரு கேரக்டரையும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று அதற்காக உழைக்கிறேன். காரணம் புதிய களம், புதிய சிந்தனையுடன் நிறைய இளம் இயக்குனர்கள், நடிகர்கள் வருகிறார்கள். போட்டி அதிகமாக இருக்கிறது. இதில் ஜெயிக்க வேண்டுமானால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சாதாரணமான கேரக்டர்களில் நடித்தால் சீக்கிரமே காணாமல் போய்விடுவேன். அதனால் எனக்கேற்ற கேரக்டர்களை தேர்வு செய்து அதில் அதிக அக்கறை எடுத்து நடிப்பதால், இடைவெளி தவிர்க்க முடியாததாக இருக்கிறது.




 

நடிகை அபர்ணாவுக்கு ஜூன் 29ம் தேதி கல்யாணம்

Tags: bharani, dancer, debut movie, June, june 29, Kannappan, malayalam movies, movie, son, sundar, tamil, theatre owner, wedlock

Aparna
நடிகை அபர்ணாவுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. ஜூன் 29ம் தேதி அவர் டாக்டர் மாப்பிள்ளையை மணக்கிறார். சென்னையில் திருமணம் நடைபெறவுள்ளது.

நடிகை அபர்ணா புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படம் மூலம் சினிமா நாயகியாக மாறியவர். அதைத் தொடர்ந்து ஏபிசிடி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கல்வி நிறுவனம் ஒன்றிலும் அவர் நிர்வாகியாக இருந்து வருகிறார். நடிகை அபர்ணா ஒரு பரதநாட்டியக் கலைஞரும் கூட.

இந்த நிலையில் இவருக்கு கல்யாணம் நிச்சயம் செய்துள்ளனர். சென்னை, பூந்தமல்லி சுந்தர் தியேட்டர் உரிமையாளர் கண்ணப்பனின் மகன் டாக்டர் பரணியை மணக்கவுள்ளார் அபர்ணா. பரணி, எம்.எஸ் டாக்டர் ஆவார். சென்னையில் எலும்பு முறிவு சிகிச்சை நிபுணராக இருக்கிறார்.

இவர்களது திருமண நிச்சயதார்த்தம் தி.நகரில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் ஜூன் 8ம் தேதி இரவு நடைபெறுகிறது. இதையடுத்து ஜூன் 29ம் தேதி வானகரம், ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் கல்யாணம் நடைபெறவுள்ளது.

அதற்கு அடுத்த நாள் ராஜா அண்ணாமலைபுரம், ராமநாதன் செட்டியார் ஹாலில் வரவேற்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
English summary
Actress Aparna set to enter the wedlock on June 29. She will marry Dr. Bharani. He is the son of Poonthamalli Sundar theatre owner Kannappan. Aparna's debut movie in Tamil is Pudukottayil Irunthu Saravanan. She has acted in some Tamil and Malayalam movies. She is a dancer too.
 

நடிகர் அலெக்ஸ் உடல் திருச்சியில் அடக்கம் செய்யப்பட்டது

Tags: alex, body, funerals, May, may 1, rajinikanth, summaryActor, Trichy

Alex
மறைந்த நடிகர் அலெக்ஸின் உடல் திருச்சியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

திருச்சியைச் சேர்ந்தவரான அலெக்ஸ், ரயில்வேயில் பணியாற்றியவர். மேஜிக் கலையில் நிபுணரான அவர் பின்னர் சினிமாவில் நுழைந்து பிரபலமானார். சினிமாவில் நடித்துக் கொண்டே, மேஜிக் கலையையும் தொடர்ந்து செய்து வந்தார்.

52 வயதான அலெக்ஸ், ரஜினிகாந்த் தயாரிப்பில் உருவான வள்ளி படத்தின் மூலம் நடிகரானவர். காமெடி, குணச்சித்திரம், வில்லன் என பல்வேறு விதமான பாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

தொடர்ந்து 24 மணி நேரம் மேஜிக் செய்து சாதனையும் படைத்துள்ளார். சமீப காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அலெக்ஸ் மே 1ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார்.

அவரது உடல் திருச்சிக்குக் கொண்டு வரப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அங்கு அவருக்கு பல்துறைப் பிரமுகர்கள், திமுக, அதிமுகவைச் சேர்ந்த எம்.பி, எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து அவரது வீட்டிலிருந்து நேற்று மாலை இறுதி ஊர்வலம் கிளம்பியது. இதில் பல ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பின்னர் ஆற்றுப்பாக்கம் அந்தோணியார் கோவிலில் உடல் வைக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.

அதன் பின்னர் உடலை மேலப்புதூர் வேர்ஹவுஸ் அருகில் உள்ள கல்லறைத் தோட்டத்திற்கு எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்தனர்.
English summary
Actor Alex's body buried in Trichy. He was dead on May 1 after a brief ill. He debuted as an actor through Rajinikanth's Valli. Nearly 15,000 people attended the funerals.