சன் டிவிக்கு எதிராக புகார் கொடுத்தவர்களில் மேலும் மூவர் வாபஸ் பெற முடிவு!


சென்னை: சன்டிவி முன்னாள் தலைமை அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனாவுக்கு எதிராக கிரிமினல் புகார்கள் கொடுத்த 3 பேர், இப்போது பிரச்னையை நீதிமன்றத்துக்கு வெளியே தீர்த்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் வாபஸ் பெறுவோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

சன் டிவி நெட்வொர்க் நிறுவனத்தின் ஓர் அங்கமாக சன் பிக்சர்ஸ் உள்ளது. இந்த நிறுவனம் திரைப்பட விநியோகம், தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வந்தது.

இந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி சக்சேனா மீது அடுத்தடுத்து மிரட்டல் புகார் கொடுத்தவர்கள் தற்போது அதை வாபஸ் பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். உயர்நீதிமன்றம் அதற்கு அனுமதி அளித்தால் வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று தெரிகிறது. இதனால் சிறையில் உள்ள சக்சேனா விடுதலையாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சக்சேனாவுக்கு எதிராக ஜூலை மாதம் 5 புகார்கள் கூறப்பட்டன. தீராத விளையாட்டுப் பிள்ளை, எந்திரன் மற்றும் மாப்பிள்ளை தொடர்பாக இந்த வழக்குகள் தொடரப்பட்டன. பின்னர் முத்துக்குமுத்தாக இயக்குர் ராசு மதுரவன் ஒரு வழக்கு தொடர்ந்தார். இவை தவிர வேறு சில வழக்குகளும் அவர் மீது போடப்பட்டன.

இதையடுத்து சச்சேனா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 2 வழக்குளை புகார் கூறியவர்கள் வாபஸ் சமீபத்தில் பெற்றனர். இதனால் அந்த வழக்குகளை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அடுத்து எந்திரன் தொடர்பாக புகார் கொடுத்தவர்கள், அந்த புகார்களை வாபஸ் பெற விரும்புவதாகவும், சுமூகமாக பிரச்சினையை தீர்த்துக் கொள்ளப் போவதாகவும் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.

இந்த மனுக்களை ஏற்று நீதிமன்றம் வழக்குகளைத் தள்ளுபடி செய்தால், சக்சேனா சிறையிலிருந்து வெளியில் வர வாய்ப்புள்ளது.
 

ரஜினி - த்ரிஷாவுக்கு சிறந்த 'ஸ்டைலிஷ்' நடிகர்கள் விருது!


சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு என்டிடிவி - ஹிந்துவின் மிகச் சிறந்த ஸ்டைல் ஹீரோ விருது வழங்கப்பட்டது!

என்டிடிவி - ஹிந்து தொலைக்காட்சி ஆண்டு தோறும் 5 வெவ்வேறு துறைகளில் 34 பிரிவுகளில் லைப் ஸ்டைல் விருதுகளை வழங்கி வருகிறது.

இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணா சாலையில் உள்ள ரெயின் ட்ரீ ஓட்டலில் நடந்தது.

விருதுக்குரியவர்களை என்டிடிவி - ஹிந்துவின் பார்வையாளர்களே ஆன்லைன் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் வாக்களித்து தேர்வு செய்திருந்தனர்.

அந்த வகையில் பல்வேறு கலைஞர்கள், சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. ஆனால் ஒரேயொரு விருது வழங்கப்பட்டபோது அரங்கமே அதிர்ந்தது. அது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வழங்கப்பட்ட மிகச் சிறந்த ஸ்டைலான நடிகர் என்ற விருதுதான்.

இந்த விருதினை ரஜினிக்கு அறிவித்த, நிகழ்ச்சி தொகுப்பாளர் அனைவரையும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பச் சொல்ல, அரங்கம் அதிர்ந்தது.

விருதினை ரஜினி சார்பில் பெற்றுக் கொண்ட ஐஸ்வர்யா ரஜினி, "இந்த விருதினை அறிவித்த என்டிடிவி - ஹிந்துவுக்கு அப்பா தனது மகிழ்ச்சியையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார். தனக்காக பிரார்த்தித்த அன்பு ரசிக உள்ளங்களுக்கு தனது வணக்கத்தை தெரிவித்துள்ளார்," என்றார்.

த்ரிஷா...

சிறந்த ஸ்டைலிஷான நடிகைக்கான விருது த்ரிஷாவுக்கு வழங்கப்பட்டது.

ஏற்கெனவே விஜய் டிவி விருது விழாவிலும் மக்கள் அபிமான நடிகர் விருது ரஜினிக்கு, மக்கள் விரும்பும் நடிகைக்கான விருது த்ரிஷாவுக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

ஆகஸ்டில் 13 படங்கள்... மங்காத்தா, வேலாயுதம் வெளியாகுமா?


இந்த ஆகஸ்ட் மாதம் மட்டுமே 13 புதிய தமிழ்ப் படங்கள் வெளியாக உள்ளன. இவற்றோடு வெளியாகவிருந்த மங்காத்தா, வேலாயுதம் படங்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.

கடந்த சில மாதங்களாக பெரிய அளவில் படங்கள் வெளியாகவில்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. இந்த்க குறையைப் போக்கும் விதத்தில், இந்த ஒரு மாதம் மட்டுமே 15 புதிய படங்கள் வெளியாகப் போவதாக கூறப்பட்டது.

இவற்றில் விஜய்யின் வேலாயுதம், அஜீத்தின் மங்காத்தா ஆகிய இரு பெரிய பட்ஜெட் படங்களும் அடங்கும்.

மங்காத்தா படம் ஆகஸ்ட் 19-ம் தேதி வரும் என்றார்கள். ஆனால் இன்னும் உறுதியான தகவல் இல்லை. வேலாயுதம் ஆகஸ்ட் 30-ம் தேதி என்கிறார்கள். ஆனால் இந்தப் படங்களின் ஆடியோ கூட இன்னும் வெளியாகவில்லை.

அதே நேரம், ஆகஸ்டு 15-ந்தேதி சுதந்திரதினம் என்பதால் 12-ந்தேதி வெள்ளிக்கிழமைக்கு பின் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்கள் தொடர்ந்து விடுமுறை தினங்களாக வருகின்றன.

எனவே அன்று முடிந்த வரை அதிக படங்களை வெளியிட தயாராகி வருகிறார்கள். மங்காத்தா, வேலாயுதம் தவிர, 13 படங்கள் வெளியாக உள்ளன. ஆகஸ்டு 5-ல் டூ, பட்டா பட்டி, ராமநாதபுரம், அர்ஜூன் நடித்த சிங்க கோட்டை ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

ஆகஸ்டு 12-ந்தேதி ஜீவாவின் ரௌத்திரம், சகாக்கள், சங்கரன்கோவில், யுவன் ஆகிய படங்கள் வருகின்றன.

ஆகஸ்டு 19-ல் ஏவிஎம்மின் முதல் இடம், ஆர்கேவின் புலிவேஷம், தேனி மாவட்டம் ஆகியவை ரிலீஸ் ஆகின்றன.

முதல் படத்தில் மைனா வித்தார்த் நாயகனாக நடித்துள்ளார். ஏவிஎம் நிறுவனம் தயாரித்துள்ளது. புலிவேஷம் படத்தை பி. வாசு இயக்கி உள்ளார். ஆர்.கே., சதா ஜோடியாக நடித்துள்ளனர்.

ஆகஸ்டு 26-ல் வாகை சூடவா, யுவன் யுவதி ஆகிய படங்கள் ரிலீசுக்கு வருகின்றன. யுவன் யுவதியில் பரத் நாயகனாக நடித்துள்ளார். புதிய களம், வித்தியாசமான படமாக்கம் போன்றவற்றால் வாகை சூடவா எதிர்ப்பார்ப்பை கிளப்பிவிட்டுள்ளது.
 

ஏலத்தில் விடப்பட்ட நிலம் போலி பத்திரம் மூலம் நடிகர் வடிவேலுக்கு விற்பனை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஏலத்தில் விடப்பட்ட நிலம் போலி பத்திரம் மூலம் நடிகர் வடிவேலுக்கு விற்பனை!

8/2/2011 12:17:56 PM

சென்னை அசோக் நகர் 7வது அவென்யூவை சேர்ந்தவர் பழனியப்பன். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உதவி பொதுமேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், சென்னை புறநகர் கமிஷனர் ராஜேஸ்தாசிடம் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: தாம்பரம் இரும்புலியூர் பகுதியை சேர்ந்தவர் டி.கே.ராமச்சந்திரன். இவருக்கு அதே பகுதியில் 32 சென்ட் இருந்தது. இவர், தனது நிலத்தின் பத்திரத்தை தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் அடமானம் வைத்து ஒரு துணி நிறுவனத்துக்கு கடனாக ரூ.5 லட்சம் பெற்று தந்தார். ஆனால், அந்த நிறுவனம் பணத்தை திருப்பி செலுத்தவில்லை. பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் பணத்தை செலுத்தாததால் ராமச்சந்திரனுக்கு சொந்தமான நிலத்தை தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் பொது ஏலத்தில் விட்டது. அந்த நிலத்தை ரூ.20 லட்சத்துக்கு ஏலத்துக்கு எடுத்து, எனது மகன் சொக்கலிங்கம் பெயரில் 2006ம் ஆண்டு தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தேன். நிலத்தை அடிக்கடி சென்று பார்த்து வந்தேன். கடந்த 2009ம் ஆண்டு நிலத்தை பார்க்க சென்றபோது, எனது நிலத்தில் காம்பவுண்ட் சுவர் கட்டியிருந்தனர். இதுகுறித்து விசாரித்தபோது, ஏலம் விடப்பட்ட நிலத்துக்கு போலி ஆவணம் தயாரித்து, நடிகர் சிங்கமுத்து மூலம் நடிகர் வடிவேலுக்கு விற்றுள்ளனர். இதுகுறித்து விசாரிக்க சென்றபோது என்னை தொலைத்து விடுவதாக மிரட்டனர். அப்போது, சென்னை புறநகர் கமிஷனரிடம் புகார் கொடுத்தேன். எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எனது நிலத்தை மீட்டுத்தர வேண்டும். நடிகர் வடிவேல் உட்பட 7 பேர் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார். இதுகுறித்து விசாரிக்கும்படி மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ராஜேந்திரனுக்கு புறநகர் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

 

முகமூடி சர்ப்ரைஸ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

முகமூடி சர்ப்ரைஸ்

8/2/2011 12:11:24 PM

யு டிவி தயா‌ரிப்பதாக இருந்த மிஷ்கினின் முகமூடி செப்டம்பர் மாதம் தொடங்கும் என‌த் தெ‌ரிகிறது. யு டிவியை வால்ட் டிஸ்னி வாங்கியிருப்பதால் தயா‌ரிப்பு என்னும் இடத்தில் வால்ட் டிஸ்னி பெயர் இடம்பெறும். சூப்பர் ஹீரோ சப்ஜெக்டான இதில் ‌ஜீவா சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார். சூப்பர் ஹீரோவுக்கு இணையான வில்லன் கதாபாத்திரம். இதில் நரேன் நடிக்கிறார். ஹீரோயின் அனேகமாக மும்பை மாடலாக இருக்கலாம். செப்டம்ப‌ரில் படப்பிடிப்பை தொடங்கும் போது டீஸர் ஒன்றை வெளியிடும் திட்டம் இருக்கிறது மிஷ்கினிடம். படத்தைக் குறித்த முதல் பிரமிப்பாக இந்த டீஸர் இருக்கும் என்று இப்போதே பொடி வைக்கிறது மிஷ்கின் வட்டாரம்.

 

நாளை முதல் மங்காத்தா ட்ரெய்லர்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நாளை முதல் மங்காத்தா ட்ரெய்லர்!

8/2/2011 12:09:44 PM

மங்காத்தா ஆடியோ ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகிறது. அன்று படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தனர். இப்போது முன்னதாக ஆகஸ்ட் 3ஆம் தேதியே ட்ரெய்லர் வெளியிடப்படுகிறது. வெங்கட்பிரபு இயக்கியிருக்கும் மங்காத்தாவின் ஒரு பாடல் ஏற்கனவே விளம்பரத்துக்காக வெளியிடப்பட்டது. இதன் டீஸரும் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. படத்தின் ட்ரெய்லரைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். ஆகஸ்ட் 3ஆம் தேதி அ‌ஜீத் திரையுலகுக்கு வந்து 20 ஆண்டுகள் நிறைவுறுகிறது. இதனையொட்டி 3 ஆம் தேதி மங்காத்தா ட்ரெய்லரை வெளியிடுகின்றனர்.

 

தாமதாகும் சீமான் படம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தாமதாகும் சீமான் படம்!

8/2/2011 12:10:26 PM

வேலாயுதம் படத்துக்குப் பிறகு இளைய தளபதி விஜய் சீமானின் பகலவன் படத்தில் நடிப்பதாக இருந்தது. எதிர்பாராத விதமாக நண்பன் பட வாய்ப்பு வந்தது. வேலாயுதத்தில் நடித்துக் கொண்டே நண்பனுக்கும் கால்ஷீட் தந்தார். வேலாயுதம் முடிந்துவிட்டது. நண்பன் முடியும் தறுவாயில் உ‌ள்ளது. அடுத்து பகலவன்தானே என்று தயாரான நேரம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக தகவல் வந்தது. அடுத்து கௌதம் வாசுதேவ் மேனன். இதில் கௌதம் யோஹன்: அத்தியாயம் ஒன்று என்று படத்துக்கு பெயர் வைத்து விளம்பரமே செய்துவிட்டார். பகலவன் குறித்து எந்தப் பேச்சும் இல்லை. விஜய் விளக்கம் தந்தால் மட்டுமே பகலவன் உதிக்குமா என்பது தெ‌ரியவரும்.

 

ஆர்யாவின் பாராட்டு!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஆர்யாவின் பாராட்டு!

8/2/2011 12:08:47 PM

தெய்வத்திருமகள் படத்தைப் பார்த்து தனது வியப்பை வெளிப்படையாக காட்டியிருக்கும் ஆர்யா. விக்ரம் பிரமாதமான நடிகர். அவரைப் போல் என்னால் நிச்சயம் நடிக்கவே முடியாது. வளர்ந்த நபர் ஐந்து வயசு குழந்தையின் மனநிலையில் நடிப்பதெல்லாம் பெ‌ரிய விஷயம் என்று பாராட்டியுள்ளார். ஆடுகளம் தனுஷ், அவன் இவன் விஷால் ஆகியோரையும் பாராட்டியுள்ள ஆர்யா உலகத்தரத்துக்கு இணையானது இவர்களின் நடிப்பு என்னை வியக்க வைக்கிறது என்று கூறினார்.

 

சர்வதேச திரைப்பட விழாவில் ஆடுகளம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சர்வதேச திரைப்பட விழாவில் ஆடுகளம்

8/2/2011 12:01:40 PM

டொரண்டோவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா உலகப் புகழ் பெற்றது. இந்த வருடம் செப்டம்பர் 8ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை விழா நடக்கிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான படங்கள் டொரண்டோவில் திரையிடப்படும். இந்தமுறை வெற்றிமாறனின் ஆடுகளம் படம் இந்தத் திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. திரைப்பட விழாக்களில் திரையிடுவதற்காக ஆடுகளத்தின் பாடல்கள் மற்றும் சில காட்சிகளை எடிட் செய்து புது காப்பி ஒன்றை ஏற்கனவே வெற்றிமாறன் தயார் செய்து வைத்துள்ளார். பாடல்கள் இல்லாத இந்தப் படம்தான் விழாவில் திரையிடப்பட உள்ளது.

 

சீனு ராமசாமி இயக்கத்தில் விமல்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

சீனு ராமசாமி இயக்கத்தில் விமல்

8/2/2011 12:00:16 PM

தேசிய விருது வாங்கிய தென் மேற்குப் பருவக்காற்று இயக்குனர் சீனு ராமசாமிக்கு நல்ல பெயரை தந்தது. ஆனால் படம்…? ஒருவழியாக புதிய படமொன்றை இயக்க சீனுவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தயா‌ரிப்பாளர் யார் என்பது இன்னும் மர்மமாக இருக்க ஹீரோ மட்டும் முடிவாகியிருக்கிறார். களவாணி, எத்தன் படங்களின் ஹீரோ விமல்.

 

கண்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கண்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி?

8/2/2011 11:58:07 AM

ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் அடுத்து ஜெயம் ரவியை இயக்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கண்ணன் இயக்கத்தில் நடிக்க முன்னணி ஹீரோக்கள் விருப்பமாகவே உள்ள நிலையில் வந்தான் வென்றான் ஆடியோ விழாவில் கண்ணன் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக ஜெயம் ரவி தெ‌ரிவித்தார். அவரது விருப்பம் உடனே நிறைவேறும் போல் தெ‌ரிகிறது. தற்போது ஆதிபகவான் படத்தில் நடித்து வரும் ஜெயம் ரவி அடுத்து பூலோகம் படத்தில் நடிக்கிறார். இவ்விரு படங்களுக்குப் பிறகு அவர் கண்ணன் இயக்கத்தில் நடிப்பார் என நம்பிக்கையான தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. கண்ணன் கூறிய ஒன் லைன் ஜெயம் ரவிக்குப் பிடித்திருப்பதே இந்த நம்பிக்கைக்கு காரணம்.

 

ரஹ்மானை இம்ப்ரஸ் செய்த கௌதம் மேனன்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ரஹ்மானை இம்ப்ரஸ் செய்த கௌதம் மேனன்!

8/2/2011 11:59:24 AM

இளைய தளபதி விஜய் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் படம் ‘யோஹன் முதல் அத்தியாயம்’ அடுத்த வருடம் படப்பிடிப்பு தொடங்குகிறது. கௌதமின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்குப் பிறகு கௌதம், ரஹ்மான் கூட்டணி வலுப்பட்டிருக்கிறது. பாடல்களை எடுக்கும் விதத்தில் ரஹ்மானை கௌதம் ரொம்பவே இம்ப்ரஸ் செய்திருக்கிறார். இதன் காரணமாக கௌதம் கேட்டதும் விஜய் படத்துக்கு இசையமைக்க ரஹ்மான் ஒப்புக் கொண்டிருக்கிறார். அழகிய தமிழ்மகனுக்குப் பிறகு விஜய் பட‌ம் எத‌ற்கு‌ம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்ததில்லை. இந்த நீண்ட் இடைவெளியை ச‌ரி செய்ய வருகிறது யோஹன் முதல் அத்தியாயம்.

 

என் பிள்ளைகள் 'கே கே'ன்னு வளரணும்- லேடி ககா!


பாப் தேவதை லேடி ககா, தனது பிள்ளைகள் ஓரினச்சேர்க்கையாளர்களாக வளர வேண்டும் என்று விரும்புவதாக அதிரடியாக கூறியுள்ளார்.

25 வயதாகும் லேடி ககா மிகவும் பாப்புரலான பாப் பாடகிகளில் ஒருவர். கவர்ச்சி ரசம் சொட்டச் சொட்ட வலம் வரும் லேடி ககா சர்ச்சைகளில் சிக்குவதும் சர்ச்சையாக பேசுவதிலும் வல்லவர்.

அந்த வகையில் இப்போது ஒரு சர்ச்சையான பேச்சைப் பேசியுள்ளார். லேடி ககாவின் பெயரில் ககா கூகூ என்ற பெயரில் குழந்தைகள் ஆடை உருவாக்கப்பட்டுள்ளது. இதை வெளியிட்டார் ககா. அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், எனக்குப் பிறக்கும் குழந்தைகள் ஓரினச் சேர்க்கையாளர்களாக மாற விரும்பினால், மாறினால் அதை நான் வரவேற்பேன், மகிழ்ச்சியுடன் ஏற்பேன்.

அதேசமயம், அவர்கள் ஓரினச்சேர்க்கையை வெறுத்தால், நான் அவர்களை வெறுப்பேன்.

எனக்கு எப்போது குழந்தை பிறக்கும் என்பது தெரியாது. இருப்பினும் எனது மார்க்கெட் சற்றே ஓய்வடையும் போது குழந்தைகள் குறித்து நான் சிந்திப்பேன் என்றார் ககா.

ககாவின் பேச்சு சர்ச்சையையும், சூடான விவாதத்தையும் கிளப்பி விட்டுள்ளது. ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு தனது பகிரங்க ஆதரவைத் தெரிவித்தவர் ககா. ரோம் நகரில் நடந்த ஐரோப்பிய ஓரினச்சேர்க்கையாளர்கள் உரி்மை பேரணியிலும் கலந்து கொண்டு ஆதரவைத் தெரிவித்தவர் ககா என்பது நினைவிருக்கலாம்.
 

அபார வசூல்.... ரூ 4500 கோடியை அள்ளிய ஹாரி பாட்டர்!!


ஹாரி பாட்டர் கதைகள் கடந்த பத்தாண்டுகளாக வசூலில் புதுப்புது சாதனைகளைப் படைத்து வருகின்றன.

இதற்கெல்லாம் சிகரம் வைக்கும் விதமாக, இந்த ஆண்டு வெளியான ஹாரிபாட்டரின் இறுதி பாகம் ரூ 4500 கோடியை அள்ளிக் குவித்துள்ளது.

முதல் ஹாரி பாட்டர் கதை 2001ல் வெளியானது. வசூலில் புதிய சரித்திரம் படைத்தது அந்தப் படம். பத்தாண்டுகளுக்கு முன்பே ரூ 4386 கோடியை குவித்தது அந்தப் படம்.

அதற்கடுத்து 7 பாகங்கள் வந்துவிட்டன. சிறுவர் முதல் பெரியவர் வரை அத்தனை ரசிகர்களையும் மயக்கி கட்டிப் போட்டது இந்த ஹாரிபாட்டர் என்றால் மிகையல்ல.

சமீபத்தில் இந்த வரிசையில் எட்டாவது படமாக ஹாரிபாட்டரும், உயிர் ரகசியமும் (“ஹாரி பாட்டர் அண்டு டெத்லி ஹாலோவ்ஸ்” பார்ட்-2) என்ற படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. அமெரிக்காவின் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்துள்ள இந்தப் படம் பரபரப்பாக ஓடி உலகெங்கும் வசூலில் சக்கை போடு போடுகிறது. இப்படம் இதுவரை ரூ.4500 கோடி வசூல் செய்து 'பாக்ஸ் ஆப் கிட்' பட்டியலில் இடம் பெற்றுவிட்டது.

சர்வதேச பாக்ஸ் ஆபீஸில், இந்த ஆண்டு வெளிவந்த பைரேட் ஆப் தி கரீபியன் - 3 என்ற படம் முதலிடம் வகிக்கிறது.

இது ரூ.4635 கோடி வசூல் செய்துள்ளது. அதற்கு அடுத்த படியாக ஹாரிபாட்டர் ரூ.4,500 கோடி வசூல் செய்து 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.

அவதார் இதைவிட அதிகமாக வசூலித்திருந்தாலும், இந்த ஆண்டில் மிக அதிக வசூலைப் பெற்றுள்ளது ஹாரிபாட்டர்.
 

வக்கீல்களை இழிவுபடுத்தியதாக கூறி நடிகர் சந்தானத்திற்கு எதிராக போராட்டம்


சென்னை : வக்கீல்களை இழிவுபடுத்தும் வகையில் தெய்வத்திருமகள் படத்தில் நடித்தததற்காக காமெடி நடிகர் சந்தானம் மன்னிப்பு கேட்க வேண்டும். அந்தக் காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று கோரி வக்கீல்கள் போராட்டம் நடத்தினர்.

விக்ரம், அனுஷ்கா, அமலா பால் நடித்துள்ள படம் தெய்வத்திருமகள். இப்படத்தில் வக்கீல்களாக சந்தானம், அனுஷ்கா ஆகியோர் நடித்துள்ளனர். அதில் சந்தானம் வக்கீல்களை இழிவுபடுத்தும் வகையில் நடித்துள்ளதாக கூறி சென்னை எழும்பூர் கோர்ட்டில் இன்று வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதுகுறித்து வக்கீல்கள் கூறுகையில், வக்கீல் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் சந்தானம் நடித்துள்ளார். அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் அவர் நடித்துள்ள காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர்.

இந்தப் போராட்டத்தால் எழும்பூர் கோர்ட்டில் பரபரப்பு நிலவியது.
 

சன் பிக்சர்ஸ் சக்சேனா வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம்


சென்னை: சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சக்சேனா மீதான வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா மீது 5 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் விநியோக உரிமை தொடர்பாக சக்சேனா மீது புகார் கொடுத்த சேலத்தைச் சேர்ந்த செல்வராஜ், சண்முக வேல் ஆகிய இருவரும் சமரசம் செய்து கொண்டதால் 2 வழக்குகள் ரத்து செய்யப்பட்டது.

மீதமுள்ள 3 வழக்குகளின் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

இது தவிர சக்சேனா மற்றும் அவரது உதவியாளர் அய்யப்பன் மீது மில் அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சக்சேனாவும், அய்யப்பனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சக்சேனா மீதான வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
 

ரஜினிக்காக பழனியில் 1008 பேர் மொட்டை போட்டு நேர்த்திக் கடன்!


நடிகர் ரஜினிகாந்த் பூரண நலம்பெற்று திரும்பியதால், அவருடைய ரசிகர்கள் 1008 பேர் பழனியில் மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருப்பூர் தொழிலாளர் சங்க உறுப்பினர்களான இவர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றிய பழனி முருகனுக்கு முடிகாணிக்கை செலுத்தி பழனி சண்முக நதியில் நீராடினர். பின்னர் வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்து கோயிலுக்கு பாதையாத்திரை மேற்கொண்டனர். சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட அவர்கள் 3000 பேருக்கு அன்னதானம் வழங்கினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி மன்ற நிர்வாகி திருப்பூர் முருகேஷ், "எங்கள் அன்புத் தலைவர் ரஜினி அவர்கள் சிகிச்சை முடிந்து நலமுடன் திரும்ப வேண்டும் என்பதற்காக 48 நாட்கள் விரதம் இருந்தோம். ரஜினி நலமுடன் திரும்பியதையடுத்து திருப்பூரில் இருந்து பழனி வந்த 1008 ரசிகர்களும் சண்முக நதியில் நீராடி முடி காணிக்கை செலுத்தி எங்களது வேண்டுதலை நிறைவேற்றியிருக்கிறோம். ரஜினி என்பவர் எங்கள் குடும்பத்தில் ஒருவர். அந்த உணர்வுதான் அவருக்காக எங்களை எதையும் செய்ய வைக்கிறது," என்றார்.
 

மிஸ் சின்னத்திரை அழகியாக லீலாவதி தேர்வு!


மிஸ் சின்னத்திரை அழகியாக டிவி நடிகையும் தொகுப்பாளருமான லீலாவதி தேர்வு பெற்றார்.

மிஸ் சின்னத்திரை என்ற பெயரில் ஆண்டுதோறும் டிவி நடிகைகளுக்கான அழகிப் போட்டி நடக்கிறது. விஷன் ப்ரோ ஈவன்ட் மேனேஜ்மெண்டும் காஸ்மிக் டவுனும் இணைந்து இந்தப் போட்டியை நடத்துகின்றன.

'விவெல் ஆக்டிவ் பேர் சின்னத்திரை விருது 2011' என்ற தலைப்பில் இந்த ஆண்டுக்கான போட்டி சென்னை சாந்தோம் பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் சின்னத்திரை நடிகைகள் சபர்ணா, ஸ்ரீதுர்கா, சபானா, ஜூலி, ஸ்ரவாணி, தரிஷினி, ஸ்ரீலட்சுமி, சக்தி, கவிபிரசாந்தினி, லீலாவதி என 10 சின்னத்திரை நடிகைகள், தொகுப்பாளினிகள் பங்கேற்றனர்.

ஆடல், பாடல், கேட் வாக்கிங், அறிவுத்திறன் போட்டி என பல சுற்றுகளாக நடந்த இந்த போட்டியில் முதலிடம் பிடித்து மிஸ் சின்னத்திரை 2011 ஆக தேர்வு பெற்றார் லீலாவதி.

அவருக்கு சென்ன ஆண்டின் சின்னத்திரை அழகி ஸ்வேதா கிரீடம் சூட்டினார். இரண்டாம் இடத்தை ஸ்ரவாணியும் மூன்றாம் இடத்தை சபர்ணாவும் பெற்றனர். விஜய் ஆனந்த் நிகழ்ச்சியை தொகுத்தளித்தார்.

இந்த நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி கேடிவியில் ஒளிபரப்பாகும்.
 

வடிவேலு தலைமறைவு? சிங்கமுத்துவிடம் விசாரணை!!


சென்னை: நிலமோசடி புகாரி வடிவேலுவிடம் விசாரணை நடத்த போலீசார் அவரை தேடி வருகிறார்கள். ஆனால் நேற்றே தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

எனவே அவருக்கு நிலம் வாங்கிக் கொடுத்த சக காமெடி நடிகர் சிங்கமுத்துவிடம் விசாரணையை ஆரம்பித்துள்ளனர் போலீசார்.

காமெடி நடிகர் வடிவேலு மீது சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ராஜேஷ்தாசிடம் ஓய்வு பெற்ற வங்கி உதவி பொது மேலாளரான அசோக் நகரைச் சேர்ந்த பழனியப்பன் நில மோசடி புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகார் தொடர்பாக வடிவேலுவையும் அவர் மனைவி விசாலாட்சியையும் விசாரிக்க முடிவு செய்த போலீஸ் அது தொடர்பான சம்மனை வழங்கச் சென்றபோது, வடிவேலு இல்லை.

ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்பதும் தெரியவில்லை. அவரது உறவினர்கள், உதவியாளர்கள் யாரும் எதுவும் சொல்ல மறுக்கிறார்களாம்.

வடிவேலுவின் மொபைல் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது.

சிங்கமுத்துவிடம்...

இதைத் தொடர்ந்து இந்த நிலத்தை வடிவேலுவுக்கு வாங்கிக் கொடுத்த சிங்கமுத்துவிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அவரும் விசாரணைக்கு வர சம்மதித்துள்ளார்.

இதுகுறித்து சிங்கமுத்து கூறுகையில், "வடிவேலுவும் நானும் சண்டை இல்லாமல் ஒற்றுமையாக இருந்தபோது எனது மேற்பார்வையில் நிறைய நிலங்களை வாங்கினார். இப்படி வாங்கும் நிலங்களை நேரடியாக அவரது பெயரில் பத்திரப்பதிவு செய்ய மாட்டார். வருமான வரி சிக்கல் வரும் என்பதால் என் பெயரிலும், வேண்டியவர்கள் பெயரிலும் பவர் வாங்கி வைத்துக் கொள்வார்.

பிறகு எங்களை அழைத்து அவர் குறிப்பிடும் நபர் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொள்வார். இது போல் வாங்கிய இடங்களில் இதுவும் ஒன்று. அதில் இப்படி வில்லங்கம் இருப்பது எனக்கு தெரியாது," என்றார்.

இதற்கிடையே வடிவேலுவைத் தேடி அவரது மதுரை வீட்டுக்கும் போலீசார் விரைந்துள்ளனர்.
 

லாரா தத்தா 3 மாதம் கர்ப்பம்: குஷியில் மகேஷ் பூபதி


முன்னாள் பிரபஞ்ச அழகியும், நடிகையுமான லாரா தத்தா விரைவில் தாயாகவிருக்கிறார்.

பாலிவுட் நடிகை லாரா தத்தா பிரபல டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியை கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி மணந்தார். இதையடுத்து கடந்த சில வாரங்களாகவே லாரா தத்தா கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை லாரா மறுத்து வந்தார்.

இறுதியாக தற்போது தான் தான் தாயாகப் போகும் விஷயத்தை உறுதிபடுத்தியுள்ளார். கர்ப்பமாக இருப்பதால் லாரா நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டிருப்பதாக அவரது நெருங்கிய நண்பர்கள் தெரிவித்தனர்.

அவர் தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ளார். இதனால் லாராவும், மகேஷ் பூபதியும் எல்லையில்லா ஆனந்தம் அடைந்துள்ளனர்.

லாராவுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்ததாவது,

தான் தாயாகப் போகிறோம் என்று லாரா குதூகலமாக உள்ளார். குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை அவர் எந்த படத்திற்கும் ஒப்பந்தம் போட மாட்டார். லாரா தற்போது டான் 2 மற்றும் அவரது சொந்த தயாரிப்பில் நடித்து வருகிறார் என்றார்.

இது குறித்து லாரா, பூபூதியை தொடர்புகொண்டபோது அவர்கள் கூறியதாவது,

நாங்கள் இருவரும் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளோம். புதிய வரவுக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் என்றனர்.

வாழ்த்துக்கள் லாரா...
 

ஆடையைக் குறைக்க வேண்டிய அவசியமில்லை! - அசின்


பாலிவுட்டில் வதந்திகள், பரபரப்புகளைக் கிளப்பியே ஒருவரால் தாக்குப் பிடிக்க முடியும் என்ற புதிய வித்தையை அறிமுகம் செய்த பெருமை அசினுக்கு உண்டு.

கஜினிக்குப் பிறகு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லாமல் இருந்த அசினுக்கு பெரிதாகக் கைகொடுத்தது சல்மான்கானின் சமீபத்திய ரிலீசான ரெடி.

இப்போது அமிதாப், அஜய் தேவ்கன் படங்களிலும் நடிக்கிறாராம் அசின்.

இதுகுறித்து அவர் சமீபத்தில் கூறுகையில், "ரெடி மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. ஆடையைக் குறைக்காமலேயே என்னால் ரசிகர்களை கவர முடியும் என்பதற்கு இன்னும் ஒரு உதாரணம் இந்தப் படம்.

என்னைப்பற்றி தொடர்ந்து வதந்திகள் பரவுவதாகக் கூறுகிறார்கள். இதை நானே உருவாக்குவதாகவும் சிலர் எழுதியுள்ளனர். இந்தி திரையுலகில் இதெல்லாம் சகஜம் என்று எனக்குத் தெரியும். அதனால் எதையும் நான் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை.

இன்னொரு முக்கியமான விஷயம்... நான் படங்களில் தலையிட்டு ஹீரோவை மாற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகக் கூறுவது. நான் அப்படி ஒருபோதும் சொன்னதில்லை. அந்த நிலையிலும் இல்லை.

ஷாரூக்கானுடன் நடிக்கவில்லை...

ஷாருக்கானுடன் நடிப்பதாக நான் சொல்லவில்லை. அவரது '2 ஸ்டேட்ஸ்' படம் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது. வேறு இரண்டு படங்களுக்கான வேலைகளில் பிசியாக இருக்கிறார். இப்போதைக்கு அபிஷேக்பச்சனுடனும், அஜய்தேவ்கனுடனும் நடிக்கிறேன்," என்றார்.

நீல்நிதின் முகேஷ்வுடனான காதலை எஸ்.எம்.எஸ். அனுப்பி நீங்கள் முறித்துக்கொண்டதாக கூறப்படுகிறதே? என்று கேட்டபோது கடுப்பான அசின், "அதுபற்றி பேசி என் நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. என்னைப் பற்றி இதுபோல் தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன," என்றார்.
 

வித்யாபாலனுக்கு கல்யாணமாகி விட்டதாக பாலிவுட்டில் பரபரப்பு


நடிகை வித்யா பாலனுக்கும் யுடிவி நிறுவனத்தின் சித்தார்த் ராய் கபூருக்கும் இடையே திருமணம் முடிந்து விட்டதாக ஒரு தகவல் பாலிவுட்டில் பரவியுள்ளது.

பாலிவுட்டில் நடித்து வரும் நடிகை வித்யா பாலன் தற்போது மறைந்த சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் டர்ட்டி பிக்சர்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவருக்கும், சித்தார்த் ராய் கபூருக்கும் இடையே திருமணம் முடிந்து விட்டதாக ஒரு தகவல் வேகமாகப் பரவி வருகிறது.

இருவரும் கல்யாணத்தை முடித்துக் கொண்டு தேனிலவுப் பயணத்தையும் தொடங்கியிருப்பதாகவும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன. கடந்த வாரம் இந்த ரகசிய திருமணம் நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே சித்தார்த்தும், வித்யாவும் நெருங்கிப் பழகி வந்தனர். இருப்பினும் இதை வெறும் நட்புதான் என்று வழக்கமான நடிகைகளின் பாணியில் மறுத்து வந்தார் வித்யா. ஆனால் இப்போது கல்யாணம் முடிந்து விட்டதாக உறுதியான தகவல் பரவியுள்ளது.

இதையும் வித்யா மறுப்பாரா அல்லது தான் திருமதியாகி விட்டதாக ஒப்புக் கொள்வரா என்பது தெரியவில்லை?