போட்டியை சமாளிக்க கிளாமர்
ரீமேக் படங்களிலேயே நடிப்பது ஏன்?
சர்வதேச திரைப்பட விழா...முதல்வருக்கு அழைப்பு!
சென்னையில் 7வது சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பில் நடத்தப்படும் இந்த விழாவில், 40 நாடுகளைச் சேர்ந்த 130 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
இவ்விழாவில் பங்கேற்குமாறு முதல்வர் கருணாநிதியை, திரைப்பட இயக்குநர் பி.வாசு, நடிகை குஷ்பு ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் பி.வாசு, கடந்த வருடம் இந்த விழாவை முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார். மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதேபோல் இந்த வருடமும் இந்த விழாவை துவங்கி வைக்க அவரை அழைத்துள்ளோம் என்றார்.
நடிகை குஷ்பு கூறுகையில், இந்த விழா முழுக்க முழுக்க திரைப்பட கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. இந்த விழாவைக் காண இவர்கள் கோவா போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. அதை சென்னையில் நடத்த முடிவு செய்து தற்போது விழா நடத்துகிறோம். இதை திரைப்பட கல்லூரி மாணவர்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க சம்மேளத்தின் புதிய நிர்வாகிகள், அபிராமி ராமநாதன் தலைமையில் முதல்வரைச் சந்தித்துப் பேசினர்.
சினிமா பாடல்களை புத்தகமாக்குகிறார்: நா.முத்துக்குமார்
வெள்ளிக்கிழமை 8 புதுப்படங்கள் ரிலீஸ்!
அடுத்த இருவாரங்கள் கழித்து, தீபாவளிக்கு உத்தமபுத்திரன், மைனா, வ குவார்ட்டர் கட்டிங், வல்லக்கோட்டை போன்ற படங்கள் வருவதால் முன்னதாகவே இந்த படங்களை வெளியிடுகின்றனர்.
வாடா படத்தில் சுந்தர் சி., கிரண், விவேக் நடித்துள்ளனர். வெங்கடேஷ் இயக்கி உள்ளார். ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது.
கௌரவர்கள் படத்தில் சத்யராஜ், மோனிகா நடித்துள்ளனர். சஞ்சய்ராம் இயக்கியுள்ளார். தாதாக் களுக்குள் நடக்கும் மோதலே இப்படத்தின் கதை.
நானே என்னுள் இல்லை படத்தை பழைய கதாநாயகி ஜெயசித்ரா இயக்கி உள்ளார். அவரது மகன் அம்ரேஷ் கணேஷ் நாயகனாக நடித்துள்ளார்.
தொட்டுப்பார் படத்தில் விதார்த், லக்ஷனா ஜோடி யாக நடித்துள்ளனர். கே.வி. நந்து இயக்கி உள்ளார். காதல் கலந்த ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளது.
ஒச்சாயி படத்தில் தயா, தாமரை, ராஜேஷ், பருத்தி வீரன் ஒமுரு ஆகியோர் நடித்துள்ளனர். ஓ. ஆசைத் தம்பி இயக்கி உள்ளார். திரவிய பாண்டியன் தயாரித் துள்ளார். காதல் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது.
ஆர்வம் படத்தில் புது முகங்கள் நடித்துள்ளனர். ஆதித்யன் இயக்கி உள்ளார்.
பாலமுருகன் இயக்கிய தங்க பாம்பு படமும் வருகிறது.
ஸ்பீடு ரிட்டர்ன்ஸ் என்ற ஆங்கில படமும் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு 15-ந் தேதி ரிலீசாகிறது. வருகிற 22-ம் தேதிதான் இந்தப் படங்களை வெளியிட முடிவு செய்திருந்தனர் திரையரங்க உரிமையாளர்கள். ஆனால் தயாரிப்பாளர்கள் நெருக்கடி தாங்காமல் ஒரு வாரம் முன்கூட்டியே வெளியிடுகின்றனர். பெரும்பாலான படங்கள் ஒரு காட்சிதான் திரையிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹீரோயின் ஆன சகோதரிகள்
'வால்மீகி'யில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தேன். இனி அப்படி நடிக்க மாட்டேன். ஒரே படத்தில் இரு ஹீரோயின்கள் இருந்தாலும், முதல்நிலை ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன். 'ஜெயமுண்டு பயமில்லை'யில், கலெக்டர் பானுசந்தரின் மகள் வேடம். 'நெல்லை சந்திப்பு' படத்தில், போலீஸ் அதிகாரி தேனப்பன் மகளாக வருகிறேன். 'ஒரு துளி புன்னகை' படத்திலும் நடிக்கிறேன். என் தங்கை சமர்த்தியா, சென்னை கலாஷேத்ராவில் நடனம் பயின்றவர். 'விராதம்' படத்துக்கு கேட்டபோது, என்னிடம் கால்ஷீட் இல்லை. உடனே சமர்த்தியாவை ஹீரோயினாக்கி விட்டனர். அம்பிகா, ராதா போல் சகோதரிகளான நாங்கள் சினிமாவில் புகழ்பெற ஆசை.
உதட்டை கிழித்தது தோட்டா மயங்கி சரிந்தார் நீது
நடிகர் குணால் தற்கொலை வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் தற்கொலை செய்து கொண்டார் குணால். அவர் தற்கொலை செய்த சமயத்தில் அவருடன் இந்தி நடிகை லோவினா பாடியா என்பவர் இருந்தார். குணாலுக்கு அனுராதா என்ற மனைவி இருக்கிறார். ஆனால், குணாலுக்கும், லோவினாவுக்கும் கள்ளக்காதல் இருந்ததாகவும், திருமணம் செய்யுமாறு லோவினா கொடுத்த நெருக்கடியாலேயே குணால் தற்கொலை செய்து கொண்டதாகவும் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து, நடிகை லோவினா மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு மும்பை உயர்நீதி மன்ற உத்தரவின் பேரில் சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், தன் மீதான குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்குமாறு மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நடிகை லோவினா வழக்கு தொடர்ந்தார்.
அவர் தனது மனுவில், “சம்பவம் நடந்த அன்று குணால் வீட்டுக்கு நானும், எனது ஆடை வடிவமைப்பாளரும் சென்றிருந்தோம். ஆடை வடிவமைப்பாளர் புறப்பட்ட பிறகு, இரவு 9 மணி அளவில் நான் பாத்ரூமுக்கு சென்றேன். பின்னர், 20 நிமிடங்கள் கழித்து வெளியே வந்தபோது, மேற்கூரையில் குணால் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்த மனு மீதான விசாரணை முடிவடைந்ததால், தீர்ப்பை செசன்ஸ் நீதிமன்றம் நேற்று ஒத்தி வைத்தது.
ரஜினி விருந்தும் அறிவிப்பும்… ‘கெட் ரெடி ஃபோக்ஸ்!’
சத்யா மூவீஸ் அலுவலகம் இப்போதே கல்யாண வீட்டு எஃபெக்டுடன் ரஜினி படத்துக்கான ஏற்பாடுகளில் பரபரத்துக் கொண்டிருக்கிறது. இப்போதே வடக்கிலிருந்து ஏகப்பட்ட விசாரணைகளாம்.
இமயமலைக்குச் சென்றிருக்கும் ரஜினி, இன்னும் மூன்று வாரங்கள் கழித்து சென்னைக்குத் திரும்புகிறார்.
வந்ததும் அவரது முதல் வேலை, சௌந்தர்யா கல்யாணம், எந்திரனின் மெகா வெற்றி ஆகியவற்றுக்கெல்லாம் வட்டியும் முதலுமாகச் சேர்த்து ரசிகர்களுக்கு விருந்து வைப்பதுதான் என்கிறார்கள். கூடவே, கஷ்டப்படும் சில ரசிகர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவி, திருமண உதவி என்று அவரது உதவிப் பட்டியல் நீள்கிறது.
“எதைச் செய்தாலும் மனசார, நிறைவாகச் செய்ய வேண்டும் என்று நினைப்பவர் ரஜினி. அரைகுறையாக ஒரு விஷயத்தைச் செய்யப் போய், அது தனக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். அவர் போட்டுக் கொடுத்த பிளான்படி விருந்து நிகழ்ச்சி நிறைவேறினால், இந்தியாவே மலைத்துப் போகும் அளவு சிறப்பான நிகழ்வாக அது அமையும்”, என்கிறார் மண்டபப் பிரமுகர் ஒருவர்.
இந்த விருந்தின் போதே, தனது அடுத்தபட அறிவிப்பு மற்றும் சில திட்டங்கள் குறித்தும் அறிவிக்கப் போகிறாராம்!
என் பெயரில் மோசடி வெப்சைட்! - அசின் புலம்பல்
விஜய் ஜோடியாக அசின் நடிக்கும் காவலன் படப்பிடிப்பும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில் அசின் பெயரில் இன்டர்நெட்டில் போலி வெப்சைட்கள் துவங்கி மோசடி நடக்கும் தகவல் அம்பலமாகியுள்ளது.
யாரோ சிலர் அசின் பெயரில் வெப்சைட்கள் துவக்கி, ரசிகர்களிடம் உரையாடி வருகின்றனராம். அதில் அசினின் கவர்ச்சிப் படங்களையும் போட்டு வைத்துள்ளனராம். மேலும் ‘என்னுடன் லைவாக சாட் பண்ணுங்கள்’ என்று அசினே கூறுவது போல் அறிவிப்பு வெளியிட்டுள்ளனராம். இதை நம்பி ஏராளமான ரசிகர்கள் தொடர்பு கொண்டு வருகிறார்களாம்.
மேலும் ட்விட்டரிலும் அசின் பெயரில் தளம் ஒன்று இயங்கி வருகிறதாம். இதற்கு ஏராளமான பாலோயர்கள் குவிந்துள்ளனராம்.
இந்த மோசடி அசினுக்கு தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்தார். ரசிகர்கள் போலியை உண்மை என்று நம்பி ஏமாற வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறிய தாவது:
டுவிட்டர் இணையதளத்தில் நான் இல்லை. ஆனால் எனது பெயரை போலியாக சிலர் அதில் உருவாக்கியுள்ளனர். ரசிகர்கள் அதை உண்மை என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அது நான் அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் டுவிட்டரிலோ, ஆர்குட்டிலோ அல்லது வேறு எந்த வெப்சைட்டிலும் இல்லை. எதிர்காலத்தில் ஒருவேளை துவங்கலாம். ஆனால் இப்போது இல்லை. இணைய தளங்களில் எனது பெயரை யாரும் பயன்படுத்த வேண்டாம்…” என்று கூறியுள்ளார்.
மனவளம் குறைந்த குழந்தைகளுடன் சினேகா ‘பர்த்டே’!
அப்படி என்ன செய்தார்…?
“பெரிய பிளானெல்லாம் போட்டு எதுவும் பண்ணலைங்க. காலைல அப்பா அம்மாகிட்ட ஆசீர்வாதம் வாங்கினேன். காளிகாம்பாள் கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டேன். அடுத்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள பாலவிகார் மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்துக்குப்போய் சில உதவிகள் செய்தேன்.
என்னுடைய ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி இது. அவர்களுடன் கேக் வெட்டி இந்த பிறந்தநாளைக் கொண்டாடினேன். மனசுக்கு நிறைவாகவும் சந்தோஷமாகவும் இருந்தது,..,” என்றார், தனது ‘பிராண்ட்’ புன்னகையுடன்.
பாலவிகார் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் இல்லத்துக்குத் தேவையான உணவுப் பொருள்கள், மளிகைப் பொருள்களை முழுவதுமாக தன் செலவில் வாங்கித் தந்தார்.
பாலவிஹாரின் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சினேகா, இனிப்புகள், எழுதுபொருள்கள் என அவர்கள் கேட்ட அத்தனை உதவிகளையும் செய்து கொடுத்தார்.
இன்று பிற்பகல் வரை அங்கேயே இருந்த சினேகா, பாலவிகார் குழந்தைகளுடன் சந்தோஷமாக ஆடிப் பாடினார். அவர்கள் மத்தியில் கேக் வெட்டியபோது 100 குழந்தைகளும் சினேகாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறினர்.
2007-ம் ஆண்டு 15000 ரசிகர்கள் தனக்கு ஒரு சேர பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னதை இது நினைவுபடுத்துவதாக இருந்தது என நெகிழ்ந்தார் சினேகா. பின்னர் குழந்தைகளுக்கு கேக் ஊட்டி விட்டார்.
பின்னர் சினேகாவே கைப்பட அவர்கள் அனைவருக்கும் உணவு பரிமாறினார்.
முன்னதாக பாலவிஹார் வந்த சினேகாவுக்கு செண்டை மேளம் முழங்க வரவேற்பளித்தனர் அவரது ரசிகர்கள். சினேகாவை மகிழ்விக்கும் வகையில் ரோபோ சங்கர் மற்றும் அவரது குழுவினர் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.
சூப்பர் ஸ்டார் ரஜினியும் கமலும் சினேகாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னால் எப்படி இருந்திருக்கும் என்று அவர்கள் நடித்துக் காட்டியதை ரசித்து மகிழ்ந்தார் சினேகா.
சினேகாவின் மக்கள் தொடர்பாளர் ஜான், சினேகா ரசிகர் மன்ற தலைவர் செல்வம் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
நானும் கவுதம் மேனனும் நண்பர்களாகப் பிரிகிறோம் :த்ரிஷா
நான் கொடுத்த கால்ஷீட்டைப் பயன்படுத்தாமல், வேறு நடிகையை ஒப்பந்தம் செய்துள்ளார் இயக்குநர் கவுதம் மேனன். இதனால் அவரும் நானும் நண்பர்களாகப் பிரிகிறோம், என்றார் நடிகை த்ரிஷா.
சிம்பு- திரிஷா ஜோடியாக நடித்து தமிழில் ஹிட்டான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் இயக்குனர் கவுதம்மேனன்.
கதாநாயகனாக பிரதீக் பப்பர் ஒப்பந்தமாகியுள்ளார். நாயகியாக திரிஷாவையே நடிக்க வைப்பதாக அறிவித்தார். படவேலைகள் விறுவிறுப்பாக நடந்தன.
இந்த நிலையில் திரிஷா திடீரென்று அப்படத்தில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளார். இதனை கவுதம் மேனன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க, ஆடிப்போய்விட்டார் த்ரிஷா. அதுமட்டுமல்ல, அவருக்கு பதிலாக மதராசபட்டணம் எமியை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பையும் துவங்கப் போகிறாராம்.
திரிஷாவை தூக்கியதற்குக் காரணம், அவரது ‘காட்டாமிட்டா’ இந்தி படம் படுதோல்வியடைந்ததுதான் என்கிறார்கள்.
“விண்ணைத்தாண்டி வருவாயா” படத்தின் கதையில் இந்திக்கு ஏற்றார்போல் சில மாற்றங்கள் செய்துள்ளாராம் கவுதம். காதலியைத் தேடி நாயகன் லண்டன் போவது போல் திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்கு எமி பொருத்தமாக இருப்பார் என அவரைத் தேர்வு செய்துள்ளதாக கவுதம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
படத்திலிருந்து நீக்கப்பட்டது குறித்து திரிஷாவிடம் கேட்டபோது, “கவுதமும் நானும் நண்பர்களாகப் பிரிய முடிவு செய்துள்ளோம். விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க அக்டோபர் 1-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை கவுதமுக்கு கால்ஷீட் கொடுத்திருந்தேன். ஆனால் அதை அவர் பயன்படுத்தவில்லை.
நவம்பர் அல்லது டிசம்பரில் படப்பிடிப்பை துவங்கப் போகிறாராம். ஆனால் என்னிடம் எதுவும் கூறவில்லை. அந்த நேரத்தில் நான் அஜீத்தின் மங்காத்தா படத்திலும், பவன் கல்யாணின் குஷிகா படத்திலும் பிசியாக இருப்பேன். எனவே என்னால் நடிக்க இயலாது,” என்றார்.
நமீதாவை 'சிபாரிசு' செய்த முதல்வர்!!
இளைஞன் படத்தில் வில்லத்தனமான ரோலில் நடிக்கிறார். இதில் யாரை நடிக்க வைக்கலாம் என்ற டிஸ்கஷன் வந்தபோது நமீதாவை நடிக்க வைக்கலாம் என முதல்வர் கருணாநிதிதான் சிபாரிசு செய்தாராம். இளைஞன் படத்தின் வசனத்தை முதல்வர்தான் எழுதுகிறார் என்பது நினைவிருக்கலாம்.
இதை தனது வாயால் கூறி பொங்கிப் பொங்கி மகிழ்கிறார் நமீதா. இதுகுறித்து அவர் கூறுகையில், முதல்வரே என்னைத்தேர்வு செய்திருப்பது பெரும் கெளரவமாக கருதுகிறேன். நிச்சயம் அவரது எதிர்பார்ப்புக்கேற்ப நடிப்பேன். என்னால் முடிந்தவரை சிறப்பாக செய்வேன்.
இப்படத்தில் நான் ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக வருகிறேன். 1940களில் கதை நடப்பது போல உள்ளது. படையப்பா படத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணனைப் போன்ற கேரக்டர் எனக்குக் கிடைத்துள்ளது.
இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா மிகவும் சிறந்த இயக்குநர். பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர். அவருடன் பணியாற்றுவது சந்தோஷமாக உள்ளது என்றார் நமீதா.
நயன்-பிரபுதேவா துபாய் ஓட்டம்?
இந்த சட்டவிரோத திருமணத்திற்குப் பின்னர் இருவரும் நாட்டை விட்டு வெளியேறி துபாயில் போய் குடித்தனம் நடத்தப் போவதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடலாம் என்பது அவர்களின் திட்டமாகும்.
நயன்தாராவும் பிரபு தேவாவும் கள்ளக் காதலர்களாக இருந்து கல்யாண ஜோடியாக மாறத் திட்டமிட்டனர். நாட்டின் சட்ட திட்டங்கள் எதையும் சற்றும் மதிக்காமல், இதனை வெளிப்படையாகவே அறிவித்தார் பிரபு தேவா. இப்போது குடும்ப நல நீதிமன்றத்தில் பிரபு தேவா, நயன்தாரா இருவர் மீதுமே வழக்குத் தொடர்ந்துள்ளார் பிரபு தேவாவின் சட்டப்பூர்வ மனைவியான ரம்லத்.
ஆரம்பத்தில் ரம்லத்தை சமாதானப்படுத்தி, நயன்தாராவை திருமணம் செய்து கொண்டு ஒரு வீட்டை சென்னையிலும் நயன்தாராவை ஹைதராபாதிலும் ‘மெயின்டெய்ன்’ பண்ணத் திட்டமிட்டார் பிரபு தேவா. ஆனால் அந்த நினைப்பில் மண் விழ, இப்போது துபாய்க்குப் போய்விடும் திட்டத்தில் உள்ளனராம் நயனும் பிரபு தேவாவும்.
இதற்கு வசதியாக அவர்களுக்கு துபாயில் வீடு பார்த்து வைத்திருக்கிறார் நயன்தாரா அண்ணன் என்றும் கூறப்படுகிறது.
இருந்தாலும் இந்திப் படங்கள் இயக்க நிறைய வாய்ப்புகள் வருவதால் மும்பையிலும் ஒரு வீடு பார்த்து துபாய்க்கும், மும்பைக்குமாக ஷன்டிங் அடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனராம்.
இந்த நிலையில் நயன்தாராவும், பிரபுதேவாவும் நடன பள்ளிக்கு இடம் பார்ப்பதற்காக ரகசியமாக துபாய் சென்று திரும்பிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சில நாட்கள் துபாயிலேயே தங்கி அங்குள்ள பிரபல புரோக்கர்கள் மூலம் இடத்தை அலசியுள்ளனர்.
பத்துக்கும் மேற்பட்ட இடங்களை பார்த்த பிறகு, துபாயின் மையப் பகுதியில் ஒரு இடத்தை தேர்வு செய்துள்ளார்களாம். இங்குதான் வீட்டுடன் கூடிய பிரமாண்ட நடனப் பள்ளியைக் கட்ட திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் இருவரும் துபாயில் குடியேற திட்டமிட்டுள்ளது உறுதியாகிவிட்டது என்கிறார்கள்.
முதல் மனைவி ரம்லத் குடும்ப நல கோர்ட்டில் நயன்தாரா, பிரபுதேவா திருமணத்துக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார். இருவரும் சேர்ந்து சுற்றுவதற்கும் தடை கோரியுள்ளார். இருந்தாலும் பிரபு தேவாவும் நயனும் அதை சட்டை செய்ததாகத் தெரியவில்லை.