நாட்டில் வறட்சி வந்ததற்கு நாம்தான் காரணம்! - விவேக்

Actor Vivek Blames Public Drought

கோவை: நாட்டில் வறட்சி வந்ததற்கு நாம்தான் காரணம். வறட்சியைப் போக்க உதவும் வகையில் வரும் ஆண்டுகளில் 1 கோடி மரக் கன்றுகளை நடப் போகிறேன், என்று நடிகர் விவேக் தெரிவித்தார்.

மேட்டுப்பாளையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா, பசுமை கலாம் சார்பில் சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த நாளையொட்டி சுவாமி விவேகானந்தர் ரத யாத்திரை மற்றும் மரம் நடும் விழா நடந்தது.

விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகர் விவேக் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, " டாக்டர் அப்துல் கலாம் இட்ட பணியான நாடு முழுவதும் மரம் வளர்தக்கும் திட்டத்தில், இதுவரை 18.5 லட்சம் மரக் கன்றுகள் நட்டுள்ளோம்.

ஆனால் எனது இலக்கு ஒரு கோடி என்பதை மனதில் எண்ணி அதனை செயல்படுத்தி ஈடுபட்டு வருகிறேன்.

மேட்டுப்பாளையம் நகரில் கம்பி வலையோடு பத்தாயிரம் மரக்கன்றுகள் நட சிறிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை பள்ளி, கல்லூரிகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை நடத்தி மாணவர்கள் மத்தியில் மரத்தை பற்றியும், மழையை பற்றியும் பேசி வந்தேன். தற்போது பொதுமக்கள் கூடுகிற இடங்களில், சாலைகளில் மரக்கன்றுகள் நட முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன்.

மேட்டுப்பாளையம் நகரில் பொது இடங்களில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப் போகிறோம். பொது இடத்தில் மரம் நடுவது என்பது இது தான் முதல் முறை. அதுவும் மேட்டுப்பாளையம் நகரில்தான் முதன் முறையாக தொடங்கப்பட்டுள்ளது. இன்று நாம் நடும் மரக்கன்றுகள் 5 ஆண்டுகளில் நிழல் தரும் மரங்களாக வளர்ந்து விடும். மாறி வரும் காலத்திற்கேற்பவும். வெயிலை தாங்கக்கூடிய வேம்பு, பூவனி, வாகை ஆகிய மரங்கன்றுகளை நட்டு வருகின்றோம்.

நாட்டில் வறட்சி வந்ததற்கு நாம்தான் காரணம். பூமித்தாயின் அழகிய முகம் கோரமாக ஏற்பட்டதற்கு காரணம் நாம்தான். தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் ஆற்று நீர், நிலத்தடி நீர் மாசு பட்டது. கொட்டிய பிளாஸ்டிக் கழிவுகளால் நிலம் மாசுபட்டது.

தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் காற்று மாசுபட்டது. மரத்தை வெட்டுவதால் மழை வளம் குறைந்து வருகிறது. ஒவ்வொரு மரமும் இயற்கையின் கரம். இப்போது நிலைமை ரொம்ப மோசமாக உள்ளது.

நாடு மிக மோசமான நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. விவசாயம் அழிந்து, விளை நிலங்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன.

இந்த நிலை மாற முதலில் மக்கள் மனப்பான்மை மாற வேண்டும். விவசாயத்தின் மீது மீண்டும் அக்கறை காட்ட வேண்டும். இளைஞர்களே, மாணவர்களே.. விவசாயத்துக்கு மீண்டும் திரும்புங்கள்," என்றார்.

 

சூர்யாவை சந்தியுங்கள்.. கை குலுக்குங்க.. கலந்துரையாடுங்க!

Meet Surya At Singam 2 Set   

சென்னை: சிங்கம் படத்துக்காக விரைவில் ரசிகர்களுக்கு போட்டியை அறிவிக்கப் போகிறேன் என்று நடிகர் சூர்யா சொல்லியிருந்தார் அல்லவா...

இதோ அந்தப் போட்டி:

சிங்கம் - 2 திரைப்படத்தின் சிறப்புத் தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ள அதிகாரப்பூர்வமாக ஒரு இணையதளம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் ஒரு போட்டி அறிவிக்கப்பட உள்ளது. போட்டியில் ஜெயிப்பவர், சிங்கம் - 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் சூர்யா மற்றும் படப்பிடிப்பு குழுவினருடன் ஒரு நாள் முழுவதும் உடனிருந்து கலந்துரையாடலாம் என்று சிங்கம் - 2 குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ரசிகர்களை நேரில் சந்திக்க முடியவில்லையே என்ற குறையை இந்த திட்டம் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார் சூர்யா,

மேலும் விவரங்களுக்கு www.singam2.in என்ற இணைய தள முகவரியிலும், https://www.facebook.com/SingamReturns என்ற ஃபேஸ்புக் ஐடியிலும், https://twitter.com/Singam2movie டிவிட்டர் தளத்திலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.

 

விஷாலின் இமயமலைப் பயண சர்ச்சை: ரஜினிகிட்ட விளக்கம் சொன்னேன்!

I Never Try Insult Rajini Sir Says Vishal

சென்னை: படங்கள் தோற்றதால் இமயமலைக்குப் பயணம் போவதாக வந்த தகவல்கள் என்னை அதிர்ச்சியடைய வைத்தன. இதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்து விளக்கம் சொன்னேன், என்று கூறியுள்ளார் நடிகர் விஷால்.

நேரம் நன்றாக இல்லாவிட்டால் விளக்கெண்ணெய் தடவிக் கொண்டு விழுந்து எழுந்தாலும் ஒட்டாது என்பார்கள். கிட்டத்தட்ட அப்படியொரு நேரம் விஷாலுக்கு.

அவர் என்ன சொன்னாலும் சர்ச்சையாகிவிடுகிறது. சமீபத்தில் விஸ்வரூபம் படம் குறித்து அவர் சொன்ன ஒரு கருத்தால், அவரை சங்கத்திலிருந்தே நீக்கப் போகிறோம் என நடிகர் சங்கம் அறிவிக்கும் அளவுக்குப் போய்விட்டது.

அடுத்து ரஜினி பாணியில் ஆண்டு தோறும் இமயமலைக்குப் போகிறார் விஷால் என்று வெளியான செய்திகளால் கொஞ்சம் டென்ஷனாகிவிட்டார். படங்கள் எதுவும் ஓடாததால் இப்படி அவர் இமயமலை போவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள விஷால், "என்னைப் பற்றி என்னென்னமோ வருகின்றன. நான் அதையெல்லாம் கவனிப்பதில்லை. ஆனால் நான் இமயமலை போவது குறித்து ரஜினி சாருடன் இணைத்து எழுதியிருப்பது அதிர்ச்சியைக் கொடுத்தது.

இதுகுறித்து சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்து விளக்கம் சொன்னேன். அவரைப் புண்படுத்தும்படி எதையும் நான் செய்யவில்லை என்று விளக்கினேன்.

இனி ஆண்டுதோறும் என்பதை விட, ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் இமயமலை போகப் போகிறேன்," என்றார்.

 

சூர்யா படத் தலைப்பு துருவ நட்சத்திரம்: மீண்டும் ரஹ்மானுடன் கை கோர்க்கும் கவுதம் மேனன்!

This Time Goutham Menon Join Hands Surya Rahman

விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்குப் பிறகு மீண்டும் ஏ ஆர் ரஹ்மானுடன் கை கோர்க்கிறார் கவுதம் மேனன். இந்தப் படத்துக்கு துருவ நட்சத்திரம் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. சூர்யாதான் நாயகன்!

பல சர்ச்சைகளில் சிக்கினாலும் கவுதம் மேனனின் புதுப்பட அறிவிப்பு வந்தாலே திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுவிடும்.

கவுதம் மேனன் இயக்கிய சமீபத்திய படங்கள் மூன்று வரிசையாக காலை வாரிவிட்டன. விடிவி நிறுவனத்திலிருந்து பிரிந்தது, பார்ட்னர்களுடன் பிரச்சினை, நீதிமன்ற வழக்கு என ஏக பிரச்சினைகள் இருந்தாலும், அடுத்த படம் குறித்து கவுதம் மேனன் அறிவித்ததுமே அவரது ரசிகர்கள் எதிர்ப்பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்தப் படத்துக்கு துருவ நட்சத்திரம் என தலைப்பிட்டுள்ளனர். கதை, திரைக்கதை அனைத்தையுமே சூர்யா முடிவு செய்துவிட்டாராம்.

இந்தப் படத்தில் மீண்டும் ரஹ்மானுடன் இணைகிறார் கவுதம் மேனன். இதுகுறித்து அவர் கூறுகையில், "அனைத்தையும் சூர்யா முடிவு செய்துவிட்டார். படத்தின் தலைபபுக்கும் ஓகே சொல்லிவிட்டார்.

இது ஒரு ஆக்ஷன் படம். ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்," என்றார்.

 

ஜூன் 27ல் ஜீவி பிரகாஷ்- சைந்தவி திருமணம்!

Gv Prakash Saindhavi Wedding On June 27

சென்னை: வரும் ஜூன் 27-ம் தேதி இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் - பாடகி சைந்தவி திருமணம் நடக்கிறது.

ஏஆர் ரஹ்மானின் உறவினரும் பிரபல இசையமைப்பாளருமான ஜீவி பிரகாஷ் குமார், பாடகி சைந்தவியை கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்தார். இருவருமே பள்ளி நாட்களிலிருந்து நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

25 படங்களுக்கு இசையமைத்துள்ள ஜீவி பிரகாஷ் குமார், திருமணத் தேதியை அறிவிக்காமல் ஒத்திப் போட்டு வந்தார்.

இப்போது பெற்றோர் சம்மதத்துடன் வரும் ஜூன் 27-ம் தேதி சைந்தவியைக் கைப்பிடிக்கப் போவதாக ஜீவி பிரகாஷ் அறிவித்துள்ளார்.

இவர்களின் திருமண உடையை அனுவர்தன் வடிவமைக்கிறார்.

இப்போது விஜய்யின் தலைவா, பாரதி ராஜாவின் அன்னக்கொடி உள்ளிட்ட முக்கிய படங்களுக்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

 

அதர்வாவை லவ்வும் அய்யர்?

Janani Ayyar An Affair With Atharva

எவ்வளவோ எதிர்ப்பு வந்தும் தன் பெயருக்குப் பின் போட்டுக் கொண்டிருக்கும் அய்யர் என்ற பட்டத்தை விட்டுத் தர முடியாது என்று மறுத்துவிட்ட ஜனனிக்கு இப்போது புதிதாக காதல் முளைத்துள்ளதாம்.

அவரது காதலுக்கு இலக்காகியிருப்பவர் 'பரதேசி' ஹீரோ அதர்வா.

‘அவன் இவன்' ‘பாகன்' படங்களில் நடித்துவிட்டு, ஓய்வாக இருப்பதால், அதர்வாவை லவ்வுகிறாராம் அம்மணி.

ஜனனி அய்யரும் அதர்வாவும் இணைந்து எந்தப் படத்திலும் நடிக்கவில்லை என்றாலும், நண்பர் ஒருவர் மூலம் இருவருக்கும் காதல் பற்றிக் கொண்டதாகச் சொல்கிறார்கள்.

‘முப்பொழுதும் உன் கற்பனைகள் படப்பிடிப்பிலிருந்தே இந்தக் காதல் தொடர்கிறதாம். இருவரும் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்குப் போய்விட்டதாம் நிலைமை.

விஷயம் தெரிந்ததும், "இப்போதான் பாலா எனும் உருப்படியான இயக்குநர் கையில் போய் பெரிய ஹீரோக்கள் வரிசைக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறார். இந்த மாதிரி சகவாசம் கேரியரை சாய்த்துவிடப் போகிறது,' என்று அட்வைஸ் பண்ணாராம் அதர்வாவின் அம்மா. கேட்கிற வயசா இது!

 

'மெல்லிசை மன்னர்' டிகே ராமமூர்த்தி மரணம்!

சென்னை: மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி என்றழைக்கப்பட்ட இரட்டை இசையமைப்பாளர்களில் ஒருவரான டிகே ராமமூர்த்தி இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 91.

1922-ம் ஆண்டு திருச்சியில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர் டி கே ராமமூர்த்தி. இவரது குடும்பத்தினரும் இசைக் கலைஞர்கள் என்பதால், பிறவியிலேயே இசையில் அதீத ஆர்வம் கொண்டவராக இருந்தார். சிறுவயதிலேயே பல மேடை கச்சேரிகளில் வயலின் வாசித்திருக்கிறார். இவரது திறமையைப் பார்த்து, தன்னிடம் உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார் அன்றைய முன்னணி இசையமைப்பாளர் சி ஆர் சுப்புராமன்.

legendary composer tk ramamurthy passes away

பின்னர் ஆர் சுதர்ஸனம் மற்றும் டிஜி லிங்கப்பா ஆகிய இசையமைப்பாளர்களிடம் உதவியாளராகப் பணியாற்றிய ராமமூர்த்தி, பின்னர் எம் எஸ் விஸ்வநாதனுடன் இணைந்தார்.

மெல்லிசை மன்னர்கள்

1950 மற்றும் 60களில் இருவரும் இணைந்து பணியாற்றிய படங்களில் பாடல்கள் சாகா வரம் பெற்றவையாக இன்றும் தமிழர் உதடுகளில் வீற்றிருக்கின்றன. கிட்டத்தட்ட 700 படங்களுக்கு இந்த இருவரும் இசையமைத்தனர்.

இருபது ஆண்டுகள் இணைந்து இசைக் கோலம் தீட்டிய இந்த இரட்டையர்கள் கடந்த 1965-ம் ஆண்டு பிரிந்தனர்.

எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவனுக்குப் பிறகு இருவரும் தனித்தனியாக இசையமைக்க ஆரம்பித்தனர். ஆனால் அதில் எம்எஸ்வி அடைந்த வெற்றியை ராமமூர்த்தியால் அடைய முடியவில்லை. எம்எஸ்வியைப் பிரிந்த பிறகு 19 படங்களுக்கு ராமமூர்த்தி இசையமைத்தார். இதில் முக்கியமான படம் 'மறக்க முடியுமா?'

கிட்டத்தட்ட 29 ஆண்டுகளுக்குப் பிறகு விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் மீண்டும் இணைந்தனர். சத்யராஜ் நடித்த எங்கிருந்தோ வந்தான் படத்துக்கு இசையமைத்தனர். ஆனால் படம் ஓடவில்லை. அதனால் இவர்களின் இசைக் கூட்டணியும் பெரிதாக எடுபடவில்லை.

ஆனாலும் எம்எஸ் விஸ்வநாதன் எந்த நிகழ்ச்சியில் அல்லது பாராட்டு விழாவில் கலந்து கொண்டாலும் தவறாமல் டி கே ராமமூர்த்தியையும் அழைத்துச் செலவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

2006-ம் ஆண்டு இருவருக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது சத்யபாமா பல்கலைக் கழகம்.

கடந்த ஆண்டு ஜெயா டிவி சார்பில் நடந்த பாராட்டு விழாவில் எம்எஸ் விஸ்வநாதன் - ராமமூர்த்தியை வெகுவாகப் பாராட்டிய முதல்வர் ஜெயலலிதா, இருவருக்கும் திரையிசை சக்கரவர்த்திகள் என்ற பட்டத்தைக் கொடுத்து, கார் மற்றும் தங்கக் காசுகளை பரிசாக அளித்தார்.

உடல் நலம் குன்றியிருந்த டி கே ராமமூர்த்தி, இன்று காலை அவரது இல்லத்தில் மரணமடைந்தார்.

அவரது மறைவுக்கு திரையுலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறது. இறுதி அஞ்சலி குறித்து இன்று பிற்பகல் அறிவிக்கப்படுகிறது.

 

சிங்கம் படத்துக்காக ரசிகர்களுக்கு போட்டி அறிவிக்கும் சூர்யா!

Surya Announce Contest Singam   

தனது சிங்கம் படத்தை வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு ஒரு போட்டி வைக்கத் திட்டமிட்டுள்ளார் நடிகர் சூர்யா. இதற்கான அறிவிப்பை இந்த வாரம் அறிவிக்கப் போகிறார்.

சூர்யா நடிக்க, ஹரி இயக்கும் ‘சிங்கம்-2' படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது.

இந்தப் படத்துக்குப் பிறகு கவுதம் மேனன் மற்றும் லிங்குசாமி படங்களில் நடிக்கிறார் சூர்யா.

இந்த நிலையில் சிங்கம் 2 படத்துக்கான விளம்பரங்களை ஆரம்பித்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக தான் முன்பு நடித்த சிங்கம் படத்தை வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கென்று ஒரு போட்டியை அறிவிக்கவிருக்கிறார்கள்.

இதுகுறித்து சூர்யா கூறுகையில், "சிங்கம்' படத்தை வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கு ஒரு போட்டி வைக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறோம். இந்த போட்டி பற்றிய விவரங்கள் இன்னும் ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும். அதில் பங்கேற்று வெற்றி பெறுபவர்கள் ஒரு நாள் முழுவதும் என்னுடன் படப்பிடிப்பில் இருக்கலாம். இதற்காக ஒரு ‘வெப்சைட்' தொடங்கப்படுகிறது," என்றார்.