கடும் காய்ச்சல்: மருத்துவமனையில் இலியானா அனுமதி!

Tags:


நண்பன் பட ஷூட்டிங்கில் ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாக கோவாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் நடிகை இலியானா.

தமிழில் கேடி படத்தில் அறிமுகமாகி, பின்னர் தெலுங்கில் நம்பர் ஒன் நாயகியாகத் திகழ்பவர் இலியானா.

இப்போது தமிழில் ஷங்கர் இயக்கு 3 இடியட்ஸ் ரீமேக்கில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு 20 நாட்கள் அந்தமானில் நடந்தது. தொடர்ந்து நெதர்லாந்திலுள்ள ஆம்ஸ்டர்டாம் நகரில் 10 நாட்கள் பாடல் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடந்தது. ஓய்வின்றி இந்த படப்பிடிப்புகளில் கலந்து கொண்டதால் இலியானாவுக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து ஆம்ஸ்டர்டாமில் இருந்து, கோவா திரும்பிய இலியானா அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 10 நாட்கள் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அவருக்கு பரிந்துரைத்துள்ளனர்.

இலியானா மீது தமிழ், தெலுங்கு பட உலகில் தடை விதிக்க தீவிர ஏற்பாடுகள் நடந்து வரும் சூழலில் அவர் மருத்துவமனையில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

மார்பு பகுதியில் சிறிய அறுவைச் சிகிச்சைக்குப் பின் ரிலாக்ஸான ரஜினி!

Tags: Fluid, ldquo, lsquo, rsquo



ரஜினிக்கு என்னதான் பிரச்சினை என்று நாடு முழுவதிலும் கேள்விகள் எழ ஆரம்பித்துவிட்டன.

ரஜினி ஆரம்பத்தில் அஜீரணக் கோளாறு, நீர்ச்சத்து குறைவு மற்றும் சோர்வு போன்றவற்றால் அவதிப்பட்டார். இது அவர் ராணாவுக்காக 15 கிலோ வரை எடை குறைத்து ஸ்லிம்மாக மேற்கொண்ட கடும் உடற்பயிற்சி மற்றும் டயட்டின் விளைவு.

அதன் தொடர்ச்சியான விளைவுகளாக, நுரையீரலில் நோய்த் தொற்று மற்றும் இரைப்பை அழற்சி போன்றவை அவரைச் சற்று கடுமையாக பாதித்துள்ளன.

நுரையீரலில் தேங்கும் திரவம்

ரஜினிக்கு நீண்ட காலமாக புகைப் பழக்கம் இருப்பதால், நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அவரது அண்ணன் சத்யநாராயணாராவ் கெய்க்வாடும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனை சரிசெய்ய ஆக்ஸிஜன் மூலம் நோய் எதிர்ப்புக்கான மருந்துகள் செலுத்தப்பட்டு, அந்தப் பகுதியில் உள்ள நோய்த் தொற்றை அடியோடு நீக்கி வருகின்றனர்.

இந்தப் பிரச்சினை காரணமாக அவருக்கு நுரையீரலுக்கும் இதயப் பகுதிக்கும் இடையே திரவம் (Fluid) அதிகளவு தேங்குகிறது. இந்த திரவம் நுரையீரல்களை அழுத்தி மூச்சு விட சிரமப்பட வைக்கும்.

மேலும் ஒரு சிறிய அறுவைச் சிகிச்சை மூலம் தேங்கும் திரவத்தை பெருமளவு அகற்ற முயன்று, அதில் நல்ல வெற்றியும் கிடைத்துள்ளது மருத்துவர்களுக்கு. இந்த சிறிய அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு ரஜினி தெம்பாகியுள்ளார்.

சிறுநீரகம் செயல்படுவதில் சிக்கல்

நுரையீரலில் இத்தனை பிரச்சினைகள் இருப்பதால் சிறுநீரகங்களின் செயல்பாட்டில் ஒழுங்கின்மை காணப்படுகிறதாம். காலில் வீக்கம் ஏற்பட முக்கிய காரணம் இதுவே.

ஆனால் இது மிக ஆரம்ப நிலை என்பதால் சீக்கிரமே சரிப்படுத்திவிட முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நுரையீரல் பிரச்சினை சரியாகிவிட்டாலே, சிறுநீரக ஒழுங்கின்மையும் ஓரளவு கட்டுக்குள் வந்துவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

புற்றுநோய் அறிகுறி இல்லை

இப்போது ரஜினியின் திசுக்கள் சோதனை முடிவும் வந்துவிட்டன. ரஜினிக்கு புற்று நோய்க்கான அறிகுறிகள் இருக்கிறதா என்பதைக் கண்டறிய நடத்தப்பட்ட சோதனை இது. ஆனால் அவருக்கு அப்படி எந்த அறிகுறியும் இல்லை என்பது உறுதியாகத் தெரிந்துள்ளது.

‘உற்சாகத்தில் ரஜினி’ – மருத்துவமனை அறிக்கை

ராமச்சந்திரா மருத்துவமனையின் இரண்டாவது செய்திக் குறிப்பில், “பொது மற்றும் சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் ரஜினிக்கு இப்போது கிசிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நலத்தை முழுமையாக கண்காணிப்பதற்காக தொடர்ந்து மருத்துவமனையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

நூரையீரலில் சிறு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட பிறகு ரஜினி உற்சாகமாக இருக்கிறார். அவருக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது முக்கிய உறுப்புகள் அனைத்தும் இயல்பாக செயல்படுகின்றன.

பார்வையாளர்களை சந்திப்பதை வெகுவாக குறைத்துக் கொள்ளும்படி ரஜினிக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவரை முழு ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவ நிபுணர்கள்,” என்று கூறப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்வது எப்போது?

நுரையீரல் பிரச்சினை முற்றாக சரியாகிவிட்டால் வெளிநாட்டுக்குச் செல்ல தேவையில்லை என்கிறார்கள். சிறுநீரகக் கோளாறுகளை இங்கேயே சரி செய்துவிட முடியும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

ராணா கைவிடப்பட்டதா? - கே எஸ் ரவிக்குமார் விளக்கம்

Tags:



சென்னை: ரஜினியின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் மூன்று வேடங்களில் நடிக்கும் ராணா கைவிடப்பட்டதாக வரும் செய்திகளில் உண்மையில்லை, என படத்தின் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் அறிவித்துள்ளார்.

ராணா பட பூஜை கடந்த ஏப்ரல் 29-ம்தேதி ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடந்தது. ரஜினியும் தீபிகா படுகோனேயும் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.

அப்போதுதான் ரஜினிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் ராணா படப்பிடிப்பு தொடர்ந்து நடக்குமா? என்று கேள்விக்குறி எழுந்தது.

படம் கைவிடப்பட்டதாக சில ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ரூ.100 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் ஈராஸ் நிறுவனம் உருவாக்கவிருந்த படம் இது. எனவே ராணா படம் கைவிடப்பட்டதா? என்று அப்படத்தின் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரிடம் கேட்டபோது, அதை உடனடியாக மறுத்தார்.

அவர் கூறுகையில், “ராணா படத்தை நிறுத்தவில்லை. தள்ளிப் போடவும் இல்லை. படத்தை கைவிட்டு விட்டதாக வெளியாகும் வதந்தியை நம்ப வேண்டாம். இதுவரை தீபிகா மற்றும் வேறு நடிகர்கள் தொடர்புடைய காட்சிகளை எடுத்து வந்தோம். ஜூலையில்தான் இதன் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டிருக்கிறோம். தற்போது அதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன.

தாய்லாந்து சென்று லொக்கேஷன் பார்த்து வந்துள்ளேன். அடுத்து லண்டன் செல்ல இருக்கிறேன். படத்தை கைவிட்டு விட்டதாக வெளியான செய்திகள் தவறானவை. அதை நம்ப வேண்டாம். குறிப்பிட்ட நாளில் திட்டமிட்டபடி படப்பிடிப்பு துவங்கும்,” என்றார்.

ரஜினி குடும்பத்தினர் இந்தப் படம் குறித்துக் கூறுகையில், “இப்போதைக்கு ரஜினி உடல்நிலைதான் முக்கியம். அது சரியானபிறகு ராணா தொடங்கும்”, என்றனர்.

ரஜினியின் அண்ணன் சத்யநாராயணாராவ் கெய்க்வாடும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

 

வீடு திரும்பியதும் அறிக்கை தருவார் ரஜினி! - தனுஷ்

Tags:



சென்னை: இன்னும் சில தினங்களில் ரஜினி வீடு திரும்பிவிடுவார். உடனே ரசிகர்களுக்காக அறிக்கை விடுவார். தொலைக்காட்சியிலும் தோன்றிப் பேசுவார் என்று நடிகர் தனுஷ் கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 13ந் தேதி, சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் மருமகன் நடிகர் தனுஷ், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார். அவருக்கு நுரையீரலில் மட்டுமே பிரச்சினை உள்ளது. அதன் காரணமாக அவருக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்படுகிறது. இப்போது அவர் குணம் அடைந்து வருகிறார். ரசிகர்கள் பதற்றப்பட தேவையில்லை.

ரஜினிகாந்த் பற்றிய வதந்திகளை நம்பாதீர்கள். அவருக்கு தனிமையும், ஓய்வும் தேவைப்படுகிறது. அதற்காகவே ஆஸ்பத்திரியில் இருக்கிறார். சிகிச்சைக்காக, அவர் அமெரிக்கா போவதாக வந்த வதந்தியை நம்ப வேண்டாம். ஒரு சில நாட்களில் அவர் வீடு திரும்பி விடுவார். வீடு திரும்பியதும் அவரே அறிக்கை வெளியிடுவார்..,” என்றார்.

அப்போது ஒருநிருபர், “ரஜினி தொலைக்காட்சியில் தோன்றிப் பேசலாமே”, என்றார்.

“நிச்சயம் பேசுவார். பொறுமையாக இருங்கள் ப்ளீஸ்”, என்றார் தனுஷ்.

குவிந்தனர் ரசிகர்கள்…

முன்னதாக, நடிகர் ரஜினிகாந்த் குறித்த வதந்திகளால் சோர்வடைந்த அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரைப் பார்க்க அனுமதிக்கக் கோரி அவர் சிகிச்சை பெற்றுவரும் ராமச்சந்திரா மருத்துவமனையின் பிரதான கட்டடத்தை நேற்று மாலை முற்றுகையிட்டனர். இதனால் அந்தப் பகுதியே பெரும் பரபரப்பிலிருந்தது.

“நாங்கள் மிகுந்த சோகத்தில் இருக்கிறோம். எனவே குறைந்தபட்சம் அவர் மருத்துவமனை அறையில் இருந்து வெளியே வந்து எங்களை நோக்கி கைகளை அசைத்தாலே போதும். அல்லது அவர் நன்றாக இருப்பது போன்ற விடியோ காட்சிகளையாவது வெளியிட வேண்டும்,” என வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் கூறினார்.

பின்னர் ரசிகர்களிடம் பேசிய ரஜினி மருமகன் நடிகர் தனுஷ், ரஜினி நலமாக உள்ளார். கவலைப்படும்படியாக எதுவும் இல்லை என்பதால் மருத்துவமனையில் இருந்து கலைந்துபோகும்படி ரசிகர்களை கேட்டுக்கொண்டார்.

 

மூன்று கன்னடப் படங்களில் நமீதா!

Tags:



தமிழில் வாய்ப்புகள் வந்தாலும் அவற்றை சுவாரஸ்யமில்லாமல் கேட்டு வருகிறாராம் நமீதா. ஆனால் நிறைய விளம்பரங்கள், கடை திறப்புகள் என கிடைக்கிற வாய்ப்புகளைப் பயன்படுத்தி வருகிறார்.

நடிப்பு அவ்வளவுதானா என்றால் அதேநேரம் நல்ல வாய்ப்புகள் வந்தால் மட்டும் இனி தமிழில் நடிப்பதில் உறுதியாக உள்ளாராம் நமீதா. “வெறும் செக்ஸ் சிம்பலாக என்னைப் பார்ப்பது பிடிக்கவில்லை. கதையோடு கூடிய கிளாமர்தான் எடுபடும்,” என்கிறார் நமீதா.

அதே நேரம் தெலுங்கு-கன்னட படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். புதிதாக மூன்று கன்னட படங்களிலும், இரண்டு தெலுங்கு படங்களிலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். தெலுங்கில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் ஹிட் என்பதால் நமீதாவுக்கு இப்போதும் நல்ல டிமாண்ட் உள்ளதாம்.

தமிழில் நல்ல கதையும், திறமையான இயக்குநரும் அமைந்தால் மட்டுமே நடிப்பாராம்!

 

சிம்புவுடன் இணைகிறார் மிஷ்கின்?

Tags:



விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் வானம் படங்களுக்குப் பிறகு, தனக்கேற்ற இயக்குநர் யார் என்று பார்க்காமல், தன்னை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் இயக்குநர்களாகப் பார்த்து கால்ஷீட் கொடுக்கிறார் சிம்பு.

தனது அடுத்த படமான ஒஸ்தியில் அதிரடி இயக்குநர் தரணியுடன் இணைந்த சிம்பு, அடுத்த படத்தை மிஷ்கினுக்கு கொடுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

இந்தப் படத்தை பிஎல் தேனப்பன் தயாரிக்கிறார். ஏற்கெனவே சிம்பு நடித்து இயக்கிய வல்லவன் படத்தைத் தயாரித்தவர் தேனப்பன்தான்.

சமீபத்தில் தேனப்பன் ஏற்பாட்டின்படி சிம்புவும் மிஷ்கினும் சந்தித்துப் பேசினர். அடுத்த படத்துக்கான பூர்வாங்க வேலைகளை ஆரம்பிக்க சிம்பு ஒப்புக் கொண்டுள்ளார். இரண்டு கதைகளை விவாதித்துள்ளனர். கதை முடிவானதும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திரைப்படத் துறைக்கு உயிர்கொடுங்கள்! - ஜெயலலிதாவுக்கு தங்கர் பச்சான் வேண்டுகோள்

Tags:


சென்னை: "தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் திரைப்படம் தயாரிக்கும் நிலையை உருவாக்கி, சினிமாவுக்கு உயிர் கொடுக்க வேண்டும்" என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு, இயக்குனர் தங்கர்பச்சான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக மக்கள் ஒருமித்த தீர்ப்பின் மூலம் முதல்வருக்கு மிகப்பெரிய பொறுப்பினை அளித்துள்ளனர். மக்கள் அளித்துள்ள தீர்ப்பு, ஆட்சியாளர்கள் நேர்மை தவறியதற்காகவும், இனி ஆளப்போகிறவர்கள் நேர்மை தவறாமல் இருப்பதற்காகவும் விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவும் இருக்கிறது.

தங்களின் வாக்குரிமை ஒன்றின் மூலம் மட்டுமே எதிர்ப்பினையும், தேவையையும் உணர்த்துகின்ற வகையில் வாக்களித்திருக்கின்ற தமிழ் மக்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் மட்டுமே. விளைவிக்கிற பொருளுக்கு உரிய விலையையும், நீர் ஆதாரத்தையும், இடுபொருள், பூச்சிக்கொல்லிகளையும், உரிய நேரத்தில் தந்து விவசாய தொழிலில் உள்ள பிரச்சினைகளை தீர்த்தால், கட்டுப்பாட்டையும் மீறி பல மடங்கு உயர்ந்து விட்ட உணவுப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்தலாம்.

அத்துடன் பெண்களுக்கு பாதுகாவலராக இருக்கிற நமது முதல்-அமைச்சர் மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தும் சாத்தியம் இல்லாமல் போனாலும், கட்டுப்பாடுகளை உடனடியாக விதித்து மதுக்கடைகள் அனைத்தையும் ஊருக்கு வெளியில் ஒதுக்குபுறமாக அமைக்க வேண்டும்.

ராஜபக்சேவுக்கு தண்டனை

ராஜபக்சேவிற்கு தண்டனை பெற்று தர தமிழக அரசு மத்திய அரசினை வற்புறுத்தும் எனச்சொல்லி நம்பிக்கையை விதைத்திருக்கிற முதல்வர் முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே இதற்கான ஆணையை நிறைவேற்றி உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

யார் வேண்டுமானாலும் திரைப்படங்கள் தயாரிக்க...

திரைப்படத் தொழில் தொடங்கிய காலந் தொட்டு திரைப்படங்களை தயாரித்து வந்த நிறுவனங்கள் கூட கடந்த ஆண்டுகளில் தயாரிப்பதை நிறுத்தி விட்டதோடு, புதியதாக படங்கள் தயாரித்தவர்களுக்கும், தயாரித்த படங்களை வெளியிட முடியாமல் கடனில் சிக்கி தவித்து மூழ்கி கொண்டிருக்கும் வேளையில் நான் சாந்திருக்கின்ற திரைப்படத்துறையை நம்பியிருக்கிற பல லட்சக்கணக்கான தொழிலாளர்களின் பிரச்சினையை முதல்வர் தீர்ந்து வைப்பார் என நம்புகிறேன்.

திறமையை மட்டுமே மூலதனமாக கொண்டிருக்கின்ற என்னைப்போன்ற கலைஞர்கள் சுதந்திரமாக செயல்படவும், யார் வேண்டுமானாலும், திரைப்படத்தை தயாரிக்கலாம், யார் வேண்டுமானாலும் வெளியிடலாம் என்கிற நிலையை உருவாக்கி தந்து மக்களுக்கான திரைப்பட கலைக்கு உயிர் கொடுக்க வேண்டும்.

தமிழக மக்களின் பேராதரவை பெற்ற முதல்வருக்கு ஒரு கலைஞன் என்ற முறையில், ஒரு வாக்காளன் என்ற முறையில் தங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை கூறி வேண்டுகோளை தமிழக மக்களின் சார்பில் வைக்கிறேன்."

-இவ்வாறு அறிக்கையில் தங்கர்பச்சான் கூறியுள்ளார்.
 

அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு

Tags:


சென்னை: சென்னையை அருகே உள்ள படப்பையில் நடிகர் வடிவேலுவின் பண்ணை வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் பொருள்கள் மர்ம நபர்களால் திங்கள்கிழமை அடித்து நொறுக்கப்பட்டது.

படப்பையை அடுத்த புஷ்பகிரி பகுதியில் நடிகர் வடிவேலுவுக்கு மாமர தோப்புடன் கூடிய பண்ணை வீடு உள்ளது. இங்கு வேலு என்பவர் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.

வேலு தனது குடும்பத்துடன் இந்த தோப்பில் தனி வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் திங்கள்கிழமை மாலை வடிவேலுவின் பண்ணைக்கு வந்த சுமார் 30 க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள், காவலாளி வேலுவிடம் வடிவேலுவின் தொலைபேசி எண்ணைக் கொடுக்குமாறு மிரட்டினராம். அதற்கு அவர், தொலைபேசி எண் தெரியாது என்று கூறினாராம்.

உடனே மர்ம நபர்கள் வேலுவுடைய செல்போனைப் பிடுங்கி அதில் வடிவேலுவின் நம்பர் இருக்கிறதா என பார்த்தனராம். அதில் நடிகர் வடிவேலுவின் எண் இல்லாததால் செல்போனை அவரிடம் கொடுத்த மர்ம நபர்கள், வீட்டின் 6 கண்ணாடி ஜன்னல்களை அடித்து நொறுக்கியுள்ளனர். சுற்றிலுமிருந்த பொருள்கள், பூந்தொட்டிகளையும் உடைத்துத் தள்ளினர்.

மேலும் வரும் சனிக்கிழமைக்குள் இந்த இடத்தை காலி செய்துவிடவேண்டும் என்றும் இல்லையென்றால் நாங்களே ஜேசிபி இயந்திரம் கொண்டு வந்து வீட்டை இடிப்போம் என்றும் மிரட்டிச் சென்றனராம்.

இதையடுத்து காவலாளி வேலு பண்ணை மேலாளர் சங்கருக்கு இந்தத் தகவலைத் தெரிவித்தார். மேலாளர் சங்கர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இது குறித்து மணிமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

வடிவேலுவின் சென்னை வீடு, மதுரை வீட்டையும் ஏற்கெனவே தேமுதிகவினர் தாக்க முயற்சித்து வருகின்றனர். இதனால் அவர் மதுரையிலேயே தங்கியிருக்கிறார்.
 

'நண்பர்களின் தொந்தரவை தவிர்க்கத்தான் ரஜினி மருத்துவமனையில் உள்ளார்' - சோ

Tags:


சென்னை: ரஜினிக்கு ஒன்றுமில்லை. அவர் வழக்கம்போல சுறுசுறுப்பாக இருக்கிறார். என்னைப்போன்ற நண்பர்களின் தொந்தரவை தவிர்க்கவே அவர் இங்கே உள்ளார், என்றார்.

ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினியை நேற்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். ரஜினியுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு சென்றனர்.

அவர்களுடன் ரஜினியின் நெருங்கிய நண்பரும் மூத்த பத்திரிகையாளருமான சோவும் சென்றிருந்தார்.

ரஜினியை சந்தித்துவிட்டு வெளியில் வந்த அவர் கூறுகையில், "என்னைப் போன்ற நண்பர்கள் தொந்தரவை தவிர்ப்பதற்காகவே ரஜினிகாந்த் இங்கே வந்திருக்கிறார். மற்றபடி அவருக்கு ஒன்றுமில்லை. ரசிகர்கள் கவலைப்பட்டு மருத்துவமனையை சூழ வேண்டாம். அவர் நலமாக இருக்கிறார். விரைவில் உங்கள் முன் பேசுவார்,'' என்றார்.

ரஜினிக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிப்பது குறித்து மருத்துவர்களிடம் கலந்து ஆலோசனை செய்யப்படும் என்றும், இப்போதைக்கு அவரது பிரச்சினைகள் இங்கேயே சரி செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் ரஜினியின் மருமகன் தனுஷ் தெரிவித்தார்.
 

ரஜினி நலமாக உள்ளார் டாக்டர்கள் தகவல்!

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ரஜினி நலமாக உள்ளார் டாக்டர்கள் தகவல்!

5/16/2011 10:34:56 AM

ரஜினிகாந்த் நலமாக உள்ளார் என்று போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 29ம் தேதி, ஜீரண கோளாறு காரணமாக மைலாப்பூர் இசபெல்லா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ரஜினி. அன்று மாலையே வீடு திரும்பினார். பின்னர் கடந்த 4ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், சுவாசப் பிரச்னை இருப்பதாக தெரிவித்தனர். ஆறு நாட்களாக மருத்துவமனையில் இருந்த ரஜினி, பின்னர் வீடு திரும்பினார். போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவர், நேற்று முன்தினம் காலை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் நேற்றும் வெளிவந்தன.

இதையடுத்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுவாசம் மற்றும் வயிறு சம்பந்தமான பிரச்னை காரணமாக, ரஜினிகாந்த் கடந்த சில வாரங்களாக பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் தங்கவில்லை. சாதாரண வார்டிலேயே தங்கியுள்ளார். தற்போது அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முழுமையான ஓய்வில் இருக்கும்படி டாக்டர்கள் அவரை அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி ஓய்வெடுத்து வருகிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

விக்ரமின் கரிகாலன்

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
விக்ரமின் கரிகாலன்

5/16/2011 10:47:08 AM

ஜீவா நடித்த 'சிங்கம்புலி' படத்தை சில்வர்லைன் பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்த பார்த்தி, வாசன் அடுத்து தயாரிக்கும் படம் 'கரிகாலன்'. இதில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக இந்தி நடிகை ஜரைன் கான் நடிக்கிறார். மேலும் பசுபதி, சண்முகராஜா உட்பட பலர் நடிக்கின்றனர். முன்னணி இயக்குனர்களோடு விஷுவல் எபெக்ட் துறையில் பணியாற்றிய கண்ணன், இதை இயக்குகிறார். இசை, ஹாரிஸ் ஜெயராஜ். ஒளிப்பதிவு கார்த்திக். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு தலக்கோணம் பகுதியில் அரங்கம் அமைத்து படமானது. அனிமேட்ரானிக்ஸ் உட்பட பல்வேறு நவீன தொழில்நுட்பங்களுடன் உருவாகும் இந்தப் படம், கரிகாலன் என்கிற மன்னனின் வாழ்க்கையை புனைவாக சொல்லப்போகிறது என்கிறது பட வட்டாரம்.




 

வில்லன் ஆனார் தினா

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வில்லன் ஆனார் தினா

5/16/2011 10:52:40 AM

சத்யா, பவீனா, நிழல்கள் ரவி நடிக்கும் படம், 'சூழ்நிலை'. செந்தூரன் தயாரித்து, இயக்குகிறார். வில்லனாக நடிக்கும் இசையமைப்பாளர் தினா கூறியதாவது: சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை. செந்தூரன் வற்புறுத்தியதால், மும்பை தாதா வேடத்தில் வில்லனாக வருகிறேன். இயல்பான வில்லன் வேடம். நான் நடித்த காட்சிகள் அந்தமான் மற்றும் சென்னையில் படமானது. 'தம்பி அர்ஜூனா'வில் நடித்தேன் என்றாலும், 'சூழ்நிலை'யில் நடிக்கும்போது பதற்றமாக இருந்தது. தற்போது இதன் ரீ-ரெக்கார்டிங் பணியில் ஈடுபட்டுள்ளேன். ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தால், தொடர்ந்து நடிப்பேன்.




 

இந்தியை விட தமிழ், தெலுங்குதான் பெஸ்ட்

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இந்தியை விட தமிழ், தெலுங்குதான் பெஸ்ட்

5/16/2011 10:53:37 AM

தமிழ், தெலுங்கு சினிமா துறையை ஒப்பிடும்போது, இந்தி ரசிகர்கள் நிலையானவர்கள் இல்லை என்றார் சமீரா ரெட்டி. இதுபற்றி அவர் கூறியதாவது: தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. மூன்றையும் ஒப்பிட்டால் ரசிகர்கள்தான் மாறுபடுகிறார்கள். தமிழ், தெலுங்கு ரசிகர்கள் நிலையானவர்கள். ஒரு முறை அவர்களுக்குப் பிடித்துவிட்டால் எப்போதும் கொண்டாடுவார்கள். இந்தி ரசிகர்கள் இன்று ரசிப்பார்கள், நாளை மறந்துவிடுவார்கள். நிலையான ரசிகர்கள் என்பது இல்லை. தென்னிந்திய நடிகைகள் இந்திக்கு செல்வது நல்ல விஷயம்தான். தங்களை நிலை நிறுத்திக்கொள்ள அவர்கள் கொஞ்சம் போராட வேண்டியிருக்கும். ஏனென்றால், 'அவர் தென்னிந்திய நடிகை' என்ற மனநிலை பாலிவுட்டில் இன்னும் இருக்கிறது. தமிழில் பிரபுதேவா இயக்கும் படத்தில் விஷால் ஜோடியாக நடித்து வருகிறேன். அடுத்து சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எப்போது திருமணம் என்கிறார்கள். எனக்கு அதற்கு நேரமில்லை. இன்னும் யாரையும் காதலிக்கவில்லை. நடிப்பில் பிசியாக இருப்பதால் இப்போதைக்கு நடிப்பைதான் காதலித்து வருகிறேன்.
இவ்வாறு சமீரா ரெட்டி கூறினார்.




 

கன்னடத்தில் ரம்யா நம்பீஸன்

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கன்னடத்தில் ரம்யா நம்பீஸன்

5/16/2011 10:54:31 AM

'ராமன் தேடிய சீதை', 'ஆட்டநாயகன்', 'இளைஞன்', 'குள்ளநரி கூட்டம்' ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தவர் மலையாள நடிகை ரம்யா நம்பீஸன். அவர் கூறியதாவது: பாவனா, பார்வதி, நயன்தாரா ஆகியோரைத் தொடர்ந்து நானும் கன்னடத்தில் அறிமுகமாகிறேன். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அஜய் ராவ் ஹீரோ. காமெடி படமான இதில் மலேசியாவில் இருந்து வரும் என்.ஆர்.ஐயாக நடிக்கிறேன். பாவனாவைத் தொடர்ந்து நானும் கன்னடத்துக்கு வருவதாக கூறுகிறார்கள். பாவனா எனது தோழி. தொழில்ரீதியாகவும் பர்சனலாகவும் வெளிப்படையாக நாங்கள் பேசிக்கொள்வோம். அவள் சிறந்த நடிகை. அவளைப் பின்பற்றி நானும் கன்னடத்துக்கு வருவதாக சொல்வது சரியானதல்ல. எனக்கு வாய்ப்பு வந்திருக்கிறது, வந்திருக்கிறேன். அவ்வளவுதான். பல கன்னடப் படங்களை பார்த்திருக்கிறேன். புனித் ராஜ்குமாரின் நடிப்பு எனக்குப் பிடிக்கும். கன்னடத்தில் நடிப்பதன் மூலம், அனைத்து தென்னிந்திய மொழிகளில் நானும் நடித்துவிட்டேன். தமிழில் நடித்துள்ள 'குள்ளநரி கூட்டம்', ஆர்ப்பாட்டமில்லாத ஹிட்டாகி இருக்கிறது. ஹிட்தான் நடிகர், நடிகைகளை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்கிறது. அதனால் அதிக ஹிட் படங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறேன். இவ்வாறு ரம்யா நம்பீஸன் கூறினார்.




 

தமிழ்நாட்டுக்கு வர பயம்

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழ்நாட்டுக்கு வர பயம்

5/16/2011 10:56:13 AM

கிரிக்கெட் சீசன்களில் பரபரப்பாகச் செய்திகளில் வலம் வருபவர் லட்சுமிராய். இம்முறை அதிகம் தலைகாட்டாமல் அமைதியாகிவிட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் நடுக்கடலில் தனது 23வது பிறந்த தினத்தைக் கொண்டாடியிருக்கிறார்.

ரகசியமாக பர்த் டே கொண்டாட்டம்?

ரகசியம் எதுவும் இல்லை. என் வயதையே தைரியத்தோடு சொல்பவள் நான். வித்தியாசமாக கொண்டாட முடிவு செய்தேன். அதனால் படகில் கடலுக்குள் சென்று கொண்டாடினேன். மோகன்லால், பிரியதர்ஷன் வந்தாங்க. மற்றவர்கள் என் பர்ஷனல் ஃபிரண்டுகள்.

தமிழில் நிறைய இடைவெளி விடுகிறீர்களே?

என் படம் வெளிவந்து ஒரு வருடமாகிவிட்டது. ஆனாலும் தொடர்ந்து நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். தமிழ், மலையாளத்தில் தலா இரண்டு படங்கள். தெலுங்கில் ஒரு படம் என்று பிசியாகத்தான் இருக்கிறேன். இந்த ஆண்டு இந்தியில் நடிக்கப்போகிறேன். அதற்கான பேச்சு வார்த்தை முடியும் தருவாயில் இருக்கிறது.

தமிழில் கிளாமர் இமேஜ்தானே இருக்கிறது?

அதெல்லாம் பழைய கதை. 'தாம் தூம்' படத்துக்கு பிறகு அந்த இமேஜ் மாறிவிட்டது. என் படத்துக்கு பெண்களே திரண்டு வருகிறார்கள். மலையாளத்தில் என்னை தங்கள் குடும்பத்தில் ஒருவராக பார்க்கிறார்கள். இன்றைய தேதியில் அங்கு நான்தான் நம்பர் ஒன். அதுக்காக கவர்ச்சியை கைவிட்டுவிட்டேன் என்று அர்த்தம் இல்லை. அதற்கான வாய்ப்பு வரும்போது நடிப்பேன்.

இந்த கிரிக்கெட் சீசனில் அதிகமாக ஆளைக் காணோமே?

இதுக்குத்தான் நான் தமிழ்நாட்டு பக்கம் வரப் பயப்படுகிறேன். ஒரு ரசிகையாக கிரிக்கெட் பார்க்கப்போனால் அதையும் சர்ச்சை ஆக்கிவிடுகிறார்கள். பிடித்த வீரர்களுடன் விருந்தில் கலந்துகொண்டால் அதையும் தவறென்கிறார்கள். அதனால்தான் நானே தவிர்த்து விட்டேன். ஆனாலும் மும்பை, கொச்சியில் நடந்த ஐபில் போட்டிகளுக்கு மீடியா கண்ணில் சிக்காமல் போய் வந்தேன். உலக கோப்பையை வென்றதும் டோனிக்கு வாழ்த்து சொன்னேன்.




 

ரஜினிக்காக ரசிகர்கள் அமைதியாக பிரார்த்தனை செய்ய வேண்டும்!

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ரஜினிக்காக ரசிகர்கள் அமைதியாக பிரார்த்தனை செய்ய வேண்டும்!

5/16/2011 5:27:13 PM

ரஜினிகாந்த் நலமாக உள்ளார் என்று போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை ரஜினி மருமகனும் நடிகருமான தனுஷ் கூறினார். கடந்த 29-ம் தேதி சென்னையில் நடந்த ராணா படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மயிலாப்பூரில் உள்ள இசபெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஒரூவார சிகிச்சை முடிந்து ஒரே நாளில் வீடு திரும்பியவர், தொடர்ந்து ஓய்வு எடுத்து வந்தார்.

மீண்டும் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. எனவே கடந்த 4-ம் தேதி அவர் மீண்டும் சிகிச்சைக்காக இசபெல் மருத்துவமனைக்குப் போனார். ஒரு வார காலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் வீடு திரும்பியவர் சில தினங்கள் ஓய்வெடுத்தார். ஆனால் கடந்த 13-ந் தேதி ரஜினிக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  இந்த நிலையில் அங்கு வந்த ரஜினி மருமகனும் நடிகருமான தனுஷ் ரசிகர்கள் மற்றும் மீடியாவிடம் பேசினார். ரஜினி நலமுடன் உள்ளார் என்றும் அவருக்காக ரசிகர்கள் அமைதியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

 

ரஜினியை அமெரிக்காவுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க முடிவு?

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ரஜினியை அமெரிக்காவுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க முடிவு?

5/16/2011 5:33:02 PM

ரஜினியை அமெரிக்காவுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிப்பதுபற்றி குடும்பத்தினர் பேசி வருவதாக கூறப்படுகிறது. இதுபற்றி லதா ரஜினியின் தங்கை மகள் மதுவந்தி கூறும்போது, ''இப்போதைக்கு ரஜினியை அமெரிக்கா அழைத்து செல்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை'' என்றார்.

 

நாகார்ஜுனுக்கு ஜோடியாகும் சினேகா!

Tags:


தெலுங்கில் தயாராகும் புதிய புராணப் படம் ஒன்றில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் சினேகா.

தெலுங்கிலும் முன்னணி நடிகையாகத் திகழ்பவர் சினேகா. இவர் நடித்த பல படங்கள் தெலுங்கில் நல்ல வெற்றி பெற்றன.

சினேகா ஏற்கனவே 'பக்த ராமதாஸ்' என்ற தெலுங்கு பக்திப் படத்தில், நாகார்ஜுனுடன் இணைந்து நடித்தார். அந்த படம் ஆந்திராவில் பெரும் வெற்றிபெற்றது.

இதைத் தொடர்ந்து சினேகா மேலும் ஒரு புராண படத்தில், நாகார்ஜுனுடன் ஜோடி சேர்ந்து நடிக்கப் போகிறார். இன்னும் தலைப்பு சூட்டப்படாத இந்தப் படத்தில் சினேகா தவிர மேலும் சில நடிகைகளும் நடிக்கவிருக்கிறார்கள்.