இவனுக்கு தண்ணீல கண்டம் - ஒரு முழு நீள காமெடி கலாட்டா

சின்ன திரை மூலம் எல்லோருடைய மனதிலும் நீங்கா இடம் பிடித்த தீபக் வெள்ளி திரையிலும் 'இவனுக்கு தண்ணீல கண்டம் ' படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

படம் குறித்து தீபக் கூறுகையில், "பல தலைப்புகள் ஆலோசித்த பிறகே இந்த தலைப்பை தேர்வு செய்தோம்.அது இந்த அளவுக்கு பிரபலமாகும் என்பதை நாங்கள் நினைக்கவே இல்லை.

இவனுக்கு தண்ணீல கண்டம் - ஒரு முழு நீள காமெடி கலாட்டா

இந்த படம் உலக வெப்பமயம் ஆவதையோ , தண்ணீர் பிரச்சனை பற்றியோ பேசவில்லை. இது குடியின் தீமைகளை பற்றி விவாதிக்கும் பிரசார படமும் அல்ல. நண்பர்கள் சந்தித்துக் கொள்ளும் ஒரு பார்ட்டி, அதன் பின்னோடியில் இருக்கும் மது கேளிக்கைகள் , அதனால் வரும் விளைவுகள் ஆகியவற்றை மிகவும் ஜனரஞ்சகமாக நகைசுவையோடு சொல்லி இருக்கிறார் இயக்குனர் சக்தி வேல். இந்த நகைச்சுவை ஒரு போதை போல, மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும்.

இவனுக்கு தண்ணீல கண்டம் - ஒரு முழு நீள காமெடி கலாட்டா

நடிப்பு என்று வந்த பிறகு பெரிய வேடமோ,சின்ன வேடமோ ....சின்ன திரையோ , பெரிய திரையோ நான் அதைப் பற்றிக் கவலை படுவதே இல்லை. இந்த படத்தில் கூட நான் ஒரு சின்ன திரை தொகுப்பாளனாகத்தான் நடிக்கிறேன். அந்தப் பாத்திரத்துக்கு நான் பொருத்தமாக இருப்பதால் மட்டுமே நான் நாயகனாக தேர்வு செய்ய பட்டுஉள்ளேன்.

இவனுக்கு தண்ணீல கண்டம் - ஒரு முழு நீள காமெடி கலாட்டா

சின்ன திரையில் இருந்து பெரிய திரைக்கு வரும் நடிகர்களுக்கு பெரும் வரவேற்ப்பு கிடைக்க முக்கிய காரணம் நாங்கள் அவர்கள் வீட்டு பிள்ளையாக கருதப்படுவதுதான்," என்றார்.

 

லேட்டஸ்ட் ஜேம்ஸ் பாண்ட் படத்தின் கதையை திருடிய ஹேக்கர்கள்

நியூயார்க்: புதிய ஜேம்ஸ் பாண்ட் படமான ஸ்பெக்டரின் கதை திருடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருக்கும் சோனி பிக்சர்ஸ் நிறுவன கம்ப்யூட்டர்கள் கடந்த மாதம் 24ம் தேதி கார்டியன்ஸ் ஆப் பீஸ் என்ற அமைப்பால் ஹேக் செய்யப்பட்டது. ஹேக்கர்கள் கம்ப்யூட்டர்களில் இருந்து நடிகர், நடிகைகளின் சம்பளம், பணியாளர்கள் விவரம் மற்றும் புதிய ஜேம்ஸ் பாண்ட் படமான ஸ்பெக்டரின் கதையை திருடியுள்ளனர்.

லேட்டஸ்ட் ஜேம்ஸ் பாண்ட் படத்தின் கதையை திருடிய ஹேக்கர்கள்

மேலும் சோனி நிறுவனத்தின் உயர் அதிகாரிகளின் இமெயில் முகவரிகளையும் அவர்கள் இணையதளத்தில் கசியவிட்டுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து படத்தின் தயாரிப்பாளர்களான மைக்கேல் ஜி.வில்சன், பார்பரா ஃபிராக்கோலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சோனி பிக்சர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவன கம்ப்யூட்டர்களிலிருந்து தகவல்களை திருடியவர்கள், அதிலிருந்த ஸ்பெக்டர் திரைப்படத்துக்கான திரைக்கதையையும் திருடியுள்ளனர். இந்த திரைக்கதையை அவர்கள் விரைவில் ஆன்-லைனில் வெளியிட வாய்ப்புள்ளதாக கருதுகிறோம். இத்திரைக்கதையை பிரிட்டன் பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளோம். எனவே, அதை வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறோம் என்று அதில் தெரிவித்துள்ளனர்.

ஸ்பெக்டர் படத்தில் டேனியல் கிரெய்க், மோனிகா பெலூச்சி உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். இந்த படம் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் 6ம் தேதி ரிலீஸாகும்.

 

பாலச்சந்தர் நல்லாருக்கார்.. என்னைப் பார்த்தார்.. சிரித்தார்! - ரஜினி பேட்டி

சென்னை: இயக்குநர் கே பாலச்சந்தர் நலமுடன் இருப்பதாகவும் தன்னைப் பார்த்து சிரித்ததாகவும் அவரை நேரில் சந்தித்த ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

100 படங்களை இயக்கியவரும் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரை அறிமுகப்படுத்தியவருமான கே பாஇயக்குநர் இன்று மிகவும் கவலைக்கிடமான நிலையில் காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பாலச்சந்தர் நல்லாருக்கார்.. என்னைப் பார்த்தார்.. சிரித்தார்! - ரஜினி பேட்டி

அவர் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வந்தவண்ணம் இருந்தன.

இதற்கிடையில் பாலச்சந்தர் உடல்நிலை குறித்து ரஜினிகாந்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் காவேரி மருத்துவமனைக்கு விரைந்தார்.

ஐசியுவில் இருந்த பாலச்சந்தரை அவர் பார்த்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு வெளியில் வந்த ரஜினி, செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் கூறுகையில், "கேபி சாரை நான் பார்த்தேன். அவர் நல்லாருக்கார். என்னைப் பார்த்துச் சிரித்தார். அவருக்கு ஒன்றும் ஆகாது. அவர் விரைவில் குணமடைந்து வர ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்," என்றார்.

 

திருநெல்வேலிக்கு விஜய் சொன்ன விளக்கம்

திருநெல்வேலி: திருநெல்வேலி என்ற பெயர் ஏன் வந்தது என விளக்கம் கூறினார் நடிகர் விஜய்.

நெல்லை பாளையங்கோட்டையில் நடந்த கத்தி படத்தின் 50 நாள் விழாவில் கலந்து கொண்டார் நடிகர் விஜய்.

கத்தி படம் திருநெல்வேலியைச் சேர்ந்த தன்னூத்து என்ற கிராமத்தை மையமாக வைத்து எடுத்திருந்தனர். விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.

திருநெல்வேலிக்கு விஜய் சொன்ன விளக்கம்

எனவே படத்தின் 50 நாள் விழாவை நெல்லையில் நடந்தினர்.

விழாவில் பங்கேற்ற விஜய், திருநெல்வேலி என்ற பெயருக்கான அர்த்தத்தைச் சொன்னார். அவர் பேசுகையில், "ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகள் மூன்று. ஊரின் பெயரிலேயே மூன்றும் அமைந்திருப்பது திருநெல்வேலியின் சிறப்பு.

அதாவது "திரு' என்றால் மரியாதை, 'நெல்' என்றால் உணவு, "வேலி' என்றால் பாதுகாப்பு. நெல்லையப்பர் அருள்பாலிக்கும் இந்த ஊரின் சிறப்பை இனிக்கச் செய்யும் "அல்வா' தனிச் சிறப்பு.

விவசாயத்துக்குப் பெயர்பெற்ற இந்த ஊரில், கத்தி திரைப்படத்தின் வெற்றி விழா நடப்பது பொருத்தமானது.

வெற்றி-தோல்வி இடையே மிகவும் சிறிய வித்தியாசம்தான் உள்ளது. கடமையைச் சரியாகச் செய்தால் வெற்றி. கடமைக்காகச் செய்தால் தோல்வி," என்றார்.

 

மூன்றே நாளில் ரூ 100 கோடிக்கு மேல் குவித்து சாதனைப் படைத்த ரஜினியின் லிங்கா!

சென்னை: வெளியான மூன்றே நாட்களில் ரஜினிகாந்தின் லிங்கா படம் ரூ 100 கோடிக்கு மேல் குவித்து சாதனைப் படைத்துள்ளது.

ரஜினி இரு வேடங்களில் நடிக்க, கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் டிசம்பர் 12-ம் தேதி ரஜினி பிறந்த நாளில் வெளியான படம் லிங்கா.

தமிழ், தெலுங்கில் உலகம் எங்கும் இந்தப் படம் வெளியானது. இந்தியில் இந்தப் படம் டிசம்பர் 25-ம் தேதி வெளியாகிறது.

மூன்றே நாளில் ரூ 100 கோடிக்கு மேல் குவித்து சாதனைப் படைத்த ரஜினியின் லிங்கா!

நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்த நேரடிப் படம் என்பதால் படத்துக்கு கூட்டம் அலைமோதியது. தமிழகத்தைப் போலவே, வெளிநாடுகளிலும் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர்.

அரங்குகள் டிக்கெட் முன்பதிவு செய்வதில் புதிய சாதனையே நிகழ்ந்தது.

முதல் நாள் மட்டும் ரூ 37 கோடியைக் குவித்தது லிங்கா படம். இது ரெகுலர் ஷோக்கள் மூலம் வந்த வசூல். அதிகாலை 1 மணி, 4 மணி மற்றும் 8 மணிக்கு நடந்த சிறப்புக் காட்சி வசூல் இதில் சேர்க்கப்படவில்லை.

இந்த நிலையில் முதல் மூன்று நாட்களுக்கான வசூல் தொகை எவ்வளவு என்ற விவரம் நேற்று இரவு வெளியானது.

உலகம் முழுவதும் மூன்றே நாட்களில் இந்தப் படம் ரூ 100 கோடிக்கு மேல் குவித்து சாதனைப் படைத்துவிட்டது.

இந்திப் பதிப்பும் வெளியாகியிருந்தால், இந்தத் தொகை மேலும் அதிகரித்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மட்டும் ரூ 55 கோடியும், ஆந்திரம், கர்நாடகம், கேரளா உள்ளிட்ட இந்தியாவின் பிற பகுதிகளில் ரூ 26 கோடியும், வெளிநாடுகளில் ரூ 21 கோடியும் வசூலாகியுள்ளது லிங்காவுக்கு.

இது ரஜினியின் முந்தைய படமான எந்திரனுக்கு நிகரான வசூலாகும். சமூக வலைத் தளங்கள் மற்றும் இணையத்தில் லிங்காவின் வசூல் சாதனை குறித்துதான் பலரும் கருத்துப் பரிமாறிக் கொண்டனர்.

 

இனி கதைத் திருட்டு என்று யாரைவது பிரச்சினை செய்தால்.... - சரத்குமார் எச்சரிக்கை

சென்னை: இனி கதைத் திருட்டு என்று பிரச்சினை செய்தால் சினிமா உலகம் ஒன்று திரண்டு போராடும் என்று நடிகர் சரத்குமார் கூறினார்.

சரத்குமார் கதாநாயகன்-வில்லன் ஆகிய 2 வேடங்களில் நடிக்கும் படம் ‘சண்டமாருதம்'. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா, தனுஷ் நடிக்கும் ‘மாரி', விக்ரம் பிரபு நடிக்கும் ‘இது என்ன மாயம்' படங்களின் தொடக்க விழாவும் சென்னையில் நேற்று காலை நடந்தது.

இனி கதைத் திருட்டு  என்று யாரைவது பிரச்சினை செய்தால்.... - சரத்குமார் எச்சரிக்கை

‘சண்டமாருதம்' படத்தில் பாடல்களை பட அதிபர் ஆர்.பி.சவுத்ரி வெளியிட்டார்.

விழாவில் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி பேசும்போது, ‘‘தமிழ் பட உலகில் இப்போதெல்லாம் கதைத் திருட்டு என்று அடிக்கடி பிரச்சினை செய்கிறார்கள். என் படத்தில் அம்மா-அப்பா என்று 2 கதாபாத்திரங்கள் வைத்திருந்தேன். அதேபோல் இன்னொரு படத்திலும் அம்மா-அப்பா கதாபாத்திரங்கள் உள்ளன. எனவே என் கதை திருடப்பட்டுள்ளது என்று புகார் செய்கிறார்கள், வழக்கு தொடருகிறார்கள். இதை இனியும் அனுமதிக்க முடியாது,'', என்றார்.

சரத்குமார்

இதைத்தொடர்ந்து, தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார் பேசுகையில், "சமீப காலமாக கதை திருட்டு என்று அடிக்கடி புகார்கள் வருவதாக ராதாரவி குறிப்பிட்டார். இனிமேல் அப்படி பிரச்சினை செய்தால், நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம், பெப்சி உள்பட ஒட்டுமொத்த சினிமா உலகமும் ஒன்று திரண்டு போராடும்.

ரசிகர்கள் திருட்டு வி.சி.டி.யில் படம் பார்க்க வேண்டாம். தியேட்டர்களுக்கு சென்று படம் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.

சமீபத்தில் வெளியான கத்தி, லிங்கா போன்றவை கதைத் திருட்டுப் புகார்களுக்கு உள்ளாகின.

 

பொங்கலுக்கு ஐ உறுதி... 9-ம் தேதி வெளியாகிறது!

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடித்துள்ள பொங்கலுக்கு ஐ உறுதி... 9-ம் தேதி வெளியாகிறது!

பொங்கலுக்கு 5 நாட்களுக்கு முன்பே இந்தப் படம் வருகிறது. 400 அரங்குகள் வரை ஐ படத்துக்கு ஒதுக்கப்படட்டுள்ளது.

பொங்கல் அன்று அஜீத்தின் ‘என்னை அறிந்தால்' படமும் ரிலீசாகவுள்ளது. இதனால் இவ்விரு படங்களுக்கும் மோதல் வரும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது ‘ஐ' படத்தை ஜனவரி 9-ம் தேதி வெளியிடுவதாக அறிவித்தனர்.

ஜனவரி 14-ம் தேதி என்னை அறிந்தால், ஆம்பள, காக்கிச்சட்டை மற்றும் கொம்பன் படங்களும் வெளியாகின்றன.

வெளியாகும் 5 படங்களுமே பெரிய படங்கள் என்பதால் இந்தப் பொங்கல் சினிமா ஸ்பெஷலாக அமைந்துவிட்டது.

Read in English: I Release Date Confirmed!
 

கவிஞர் முத்துக்குமாருக்கு டாக்டர் பட்டம்

தமிழ் சினிமாவில் கடந்த பத்தாண்டுகளாக அதிக பாடல்கள் எழுதி முதலிடத்தில் உள்ள கவிஞர் நா.முத்துக்குமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தங்கமீன்கள் படத்தில் இடம்பெற்ற ஆனந்த யாழை பாடலுக்காக நா முத்துக்குமார் தேசிய விருது பெற்றது நினைவிருக்கலாம்.

கவிஞர் முத்துக்குமாருக்கு டாக்டர் பட்டம்

தற்போது அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைகழகம் நா.முத்துக்குமார் அவர்களுக்கு டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்துள்ளது.

இந்த விழா தியாகராயநகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது.

கவிஞர் முத்துக்குமாருக்கு டாக்டர் பட்டம்

அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தலைவர், முனைவர் திரு.செல்வின்குமார் அவர்கள் நா.முத்துக்குமார் அவர்களுக்கு டாக்டர் பட்டத்தை வழங்கினார்.

ஏற்கெனவே 2006 ஆம் ஆண்டில் சென்னை பல்கலைகழகத்தில் தமிழ் பாடல்கள் குறித்து ஆய்வு செய்து நா முத்துக்குமார் டாக்டர் பட்டம் பெற்றார். இப்போது கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

 

தெலுங்கு இசையமைப்பாளர் சக்ரி மரணம்

ஹைதராபாத்: பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் சக்ரி இன்று திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 40.

1974-ம் ஆண்டு பிறந்த சக்ரியின் இயற்பெயர் சக்ரதார் கில்லா. வராங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மெஹ்பூப் நகரில் பிறந்தார்.

பூரி ஜெகன்னாத் இயக்கிய பச்சி படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு 85 படங்களில் இசையமைப்பாளராகவும் பாடகராகவும் புகழ்பெற்றார். பல புதிய பாடகர் பாடகிகளை அறிமுகப்படுத்தினார்.

தெலுங்கு இசையமைப்பாளர் சக்ரி மரணம்

சிறந்த இசையமைப்பாளருக்கான பல விருதுகளை வென்ற சக்ரி, சத்யம் படத்துக்காக சிறந்த பாடகர் விருதை வென்றார்.

இடியட், சிம்ஹா, அம்மா நன்னா ஓ தமில அம்மாயி, தேவதாசு, தேசமுத்துரு, கிருஷ்ணா, மஸ்கா போன்றவை அவரது இசையமைப்பில் வெளியாகி வெற்றி பெற்றவைகளுள் குறிப்பிடத்தக்கது.

எர்ர பஸ், யர்ரா, ரே போன்றவை இந்த ஆண்டு வெளிவந்த அவரது சில படங்கள்.

சக்ரியின் திடீர் மரணம் தெலுங்குப் பட உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

இசை வெளியீட்டுக்கு முன்பே மொத்தப் பாடல்களும் அவுட்... இயக்குநர் சீனுராமசாமி அதிர்ச்சி!

சென்னை: ‘இடம் பொருள் ஏவல்' படத்தின் பாடல்கள் இசை வெளியீட்டுக்கு முன்பே இணையதளங்களில் வெளிவந்து விட்டன. இதனால் இயக்குநர் சீனு ராமசாமி மற்றும் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பதி பிரதர்ஸ் சார்பில் டைரக்டர் என்.லிங்குசாமி, அவருடைய தம்பி சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய இருவரும் தயாரித்து, சீனு ராமசாமி இயக்கியுள்ள படம் ‘இடம் பொருள் ஏவல்'.

இசை வெளியீட்டுக்கு முன்பே மொத்தப் பாடல்களும் அவுட்... இயக்குநர் சீனுராமசாமி அதிர்ச்சி!

இந்த படத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் ‘இடம் பொருள் ஏவல்' படத்தின் பாடல்கள் அனுமதி இல்லாமல் இணையதளங்களில் வெளிவந்துள்ளன. இதனால் படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

இதுதொடர்பாக இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை:

முதல்முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், கவிஞர் வைரமுத்துவும் ‘இடம் பொருள் ஏவல்' படத்தில் இணைந்து பணிபுரிந்து இருக்கிறார்கள். அதனால் 2 பேரின் ரசிகர்கள் மத்தியிலும் படத்தில் பாடல்கள் குறித்த பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. பாடல்களை திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடலாம் என்று திட்டமிட்டு இருந்தோம்.

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு ‘இடம் பொருள் ஏவல்' படத்தின் பாடல்கள் இணையத் தளத்தில் வெளியானது கண்டு அதிர்ச்சி அடைந்தோம். திரைத் துறையில் இருக்கும் அளவுக்கு பாதுகாப்பற்ற தன்மை வேறு எந்த தொழிலும் இருக்குமா என்று தெரியவில்லை. யார் மூலம் எப்படி இந்த பாடல்கள் இணையதளத்தில் வெளியானது என்பது எங்களுக்கு தெரியவில்லை.

மிகுந்த சிரமத்தை எடுத்து உருவாக்கப்பட்ட ஒரு படைப்பு இப்படி திருட்டுத்தனமாக மக்களை சென்றடைந்தது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தையும், மன உளைச்சலையும் தருகிறது. இதனை தடுப்பதற்கான வலிமையான முறைகளை விரைந்து உருவாக்க வேண்டிய தேவையும் அவசரமும் உள்ளது. ஆனால் அனைவரும் இந்த நிலையை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது கவலை அளிக்கிறது.

-இவ்வாறு அந்த அறிக்கையில் சீனு ராமசாமி கூறியிருக்கிறார்.

 

ஆஸ்கர் விருதுப் பட்டியலில் மேலும் இரு இந்திய இசையமைப்பாளர்கள்!

87-வது ஆஸ்கார் விருதுகான பட்டியல் 2015 ஜனவரி மாதம் 15 ந்தேதி அறிவிக்கப்பட உள்ளது. விருது பிப்ரவரி மாதம் 22 ந்தேதி வழங்கப்படுகிறது.

இந்த விருது பட்டியலில் இசையமைப்பாளர் ஒரிஜினல் ஸ்கோர் பிரிவில் மொத்தம் உள்ள 114 படங்கள் தேர்வாகியுள்ளதும், அவற்றில் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்த கோச்சடையான் உள்பட 3 படங்கள் இடம்பெற்றுள்ளதும் நாம் ஏற்கெனவே அறிவித்ததுதான்.

ஆஸ்கர் விருதுப் பட்டியலில் மேலும் இரு இந்திய இசையமைப்பாளர்கள்!

இப்போது மேலும் இரு இந்திய இசையமைப்பாளர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ள தகவலும் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில் தாரான ஜால் படத்துக்காக சோனு நிகாம் மற்றும் பிக்ரம் கோஸ் பெயர்கள் ஆஸ்கர் விருதுப் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

கீது மோகன் தாஸ் இயக்கத்தில் உருவான 'லியர்ஸ் டிஸ்'என்ற படமும் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறும் எனத் தெரிகிறது.

 

இறுதிச் சுற்று ஃபர்ஸ்ட் லுக்: அமெரிக்காவில் பில்ட்அப் செய்த பாடி, தாடியுடன் அசத்தல் மேடி

சென்னை: மாதவன் நடித்து வரும் இறுதிச் சுற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்த சுதாகோங்கரா மாதவனை வைத்து இறுதிச் சுற்று என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் தமிழ் மற்றும் இந்தியில் ரிலீஸ் செய்யப்படும். இந்தியில் சாலா கடூஸ் என்ற பெயரில் ரிலீஸ் செய்யப்படும்.

இறுதிச் சுற்று ஃபர்ஸ்ட் லுக்: அமெரிக்காவில் பில்ட்அப் செய்த பாடி, தாடியுடன் மேடி

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் மாதவன் தாடி, மீசையுடன் சீரியஸாக உள்ளார். நம்ம சாக்லேட் பாய் மேடியா இது என்று கேட்கும் அளவுக்கு உள்ளார்.

படத்தில் மாதவன் குத்துச் சண்டை பயிற்சியாளராக நடிக்கிறார். இந்த படத்திற்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சில மாதங்கள் தங்கி உடலை கும்மென்று ஆக்கியுள்ளார் மாதவன். மேலும் தன்னை மனரீதியாகவும் தயார் செய்துள்ளார்.

இந்த படத்திற்காக மாதவன் குத்துச் சண்டை வகுப்புக்கும் சென்று வந்துள்ளார். படத்தில் ரித்திகா சிங், மும்தாஜ் சர்கார் என இரண்டு ஹீரோயின்கள். நாசர், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

 

பழம்பெரும் நடிகர் பி.ஜே.சர்மா காலமானார்... ஜெமினிக்கு குரல் கொடுத்தவர் !

ஹைதராபாத்: பழம்பெரும் நடிகரும், பின்னணிக் குரல் கலைஞருமான பி.ஜே.சர்மா மாரடைப்பால் ஹைதராபாத்தில் காலமானார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், அமிதாப்பச்சன், திலீப்குமார் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தவர் பழம் பெரும் நடிகர் பி.ஜே.சர்மா (82). தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் பி.ஜே.சர்மா பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். இவர் தொலைக்காட்சித் தொடர்கள் பலவற்றிலும் நடித்துள்ளார். ஜெமினி கணேசனுக்குப் பல படங்களில் பின்னணிக் குரல் கொடுத்தது பி.ஜே.சர்மா தான்.

பழம்பெரும் நடிகர் பி.ஜே.சர்மா காலமானார்... ஜெமினிக்கு குரல் கொடுத்தவர் !

இந்நிலையில், சமீபகாலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த சர்மா, நேற்று ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பால் காலமானார்.

சர்மாவின் மறைவிற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், பி.ஜே.சர்மாவின் உடலுக்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும், தெலுங்கு பட உலகினர் ஏராளமானோர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ள சாய்குமார் சர்மாவின் மூத்தமகன் என்பது குறிப்பிடத்தக்கது. சாய்குமாரின் மகன் ஆதியும் தற்போது நாயகனாக நடிக்கத் தொடங்கியுள்ளார்.

 

தெலுங்கு 'லிங்கா' மீது ஆந்திரத்து ரசிகர்கள் அதிருப்தி!

ஹைதராபாத்: லிங்கா தெலுங்குப் பதிப்புக்கு ரசிகர்களிடையே அதிருப்தி அதிகரித்துள்ளதால் படத்தின் தேவையற்ற நீளப் பகுதிகளை வெட்ட வேண்டிய கட்டாயம் லிங்கா தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ள லிங்கா படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இந்தப் படத்திற்கு முதல் நாள் கிடைத்த வரவேற்பு அடுத்த நாளே சற்று குறைந்து விட்டதாக செய்திகள் கூறுகின்றன.

தெலுங்கு 'லிங்கா' மீது ஆந்திரத்து ரசிகர்கள் அதிருப்தி!

முதல் நாளில் அரங்குகள் நிரம்பி வழிந்தன. முதல் நாள் மட்டும் ஆந்திரா, தெலுங்கானாவில் லிங்கா ரூ. 5 கோடியைத் தாண்டி வசூலித்ததாகவும் கூறப்பட்டது. இருப்பினும் 2வது நாள் வசூலில் பாதிப்பு காணப்பட்டதாம். இதற்குக் காரணம், படம் நீளமாக இருக்கிறது, பிளாஷ்பேக் காட்சிகள் நீளமாக உள்ளதாக எழுந்த அதிருப்தியே என்று சொல்கிறார்கள்.

டிசம்பர் 12ம் தேதி தமிழகத்தில் வெளியான அதே நாள்தான் ஆந்திரா, தெலுங்கானாவிலும் லிங்கா திரைக்கு வந்தது. முதல் நாள் நல்ல வசூல் கிடைத்தது. மேலும் அடுத்து வந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் தொய்வு விழுந்து விட்டதாம்.

படம் நீளமாக இருப்பதாக வந்த விமர்சனங்களும் இதற்கு முக்கியக் காரணம். குறிப்பாக பட இயக்குநரும், எடிட்டரும் படத்தின் 2ம் பாதியில் வரும் பிளாஷ்பேக் காட்சியை நீளமாக வைத்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முதல் நாளில் ரூ. 5 கோடிக்கு கிடைத்த வசூல், 2வது நாளான சனிக்கிழமை ரூ. 4 கோடியாக குறைந்து விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேசமயம் தமிழகத்தில் லிங்கா தொடர்ந்து பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பி வருகிறதாம். வெளிநாடுகளிலும் கூட வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. தமிழகத்தில் முதல் நாளில் ரூ. 37 கோடியும், 2வது நாள் ரூ. 33 கோடியும் வசூலாகியுள்ளது. 2 நாட்களிலேயே தோராயமாக ரூ. 70 கோடியை அது வசூலித்துள்ளதால், தயாரிப்பாளர் தரப்பு உற்சாகமடைந்துள்ளது.

அனேகமாக நேற்று இரவுக்குள் லிங்கா ஒட்டுமொத்தமாக ரூ. 100 கோடி இலக்கைத் தொட்டிருக்கும் என்றும் நம்பப்படுகிறது.

 

பணம் கொடுத்து படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகரும் எனக்கு முதலாளிதான்!- விஜய்

திருநெல்வேலி: பணம் கொடுத்து திரைப்படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு ரசிகரும் எனக்கு முதலாளி என்றார் நடிகர் விஜய்.

பாளையங்கோட்டை பெல் பள்ளி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற, "கத்தி' திரைப்படத்தின் 50ஆவது நாள் விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது:

கத்தி படத்தைப் பொருத்தவரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸூம், அவருடன் இணைந்து நானும் கடமையை மிகவும் சரியாகச் செய்ததால் படம் வெற்றியைத் தந்துள்ளது.

பணம் கொடுத்து படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகரும் எனக்கு முதலாளிதான்!- விஜய்

கால்பந்து விளையாட்டில் ஒருவர் கோல் போட வேண்டுமானால், 10 பேரின் உழைப்பும் அவசியம். அதே நேரத்தில் மேலும் 11 பேர் கோல் போடவிடாமல் தடுப்பார்கள். அதையெல்லாம் தாண்டி சாதிப்பதில்தான் மகிழ்ச்சி உள்ளது. எந்தச் செயலிலும் முயற்சியைவிட அதிகமாக எதிர்ப்பு இருக்கும். அதைக் கண்டு அஞ்சாமல் உறுதியோடு செயல்பட வேண்டும்.

உலகில் நல்லவர்கள் துன்பப்பட்டாலும் அனுபவத்தைக் கற்றுத் தருவார்கள். ஆனால், கெட்டவர்கள் நன்றாக வாழ்ந்து மறைந்தாலும் அவமானத்தைத் தாங்கிச் செல்வார்கள். அனுபவத்தைத் தருபவர்களாக ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்.

குடும்பத்தைக் கவனிக்காமல் எனக்கு ரசிகராக மட்டும் இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. குடும்பத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

பணம் கொடுத்து படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகரும் எனக்கு முதலாளிதான். கத்தி திரைப்படத்தை வெற்றிப் படமாக்கிய அனைத்து ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார் அவர்.

ஏழை விவசாயிகளுக்கு மருந்தடிக்கும் இயந்திரம் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் விஜய் வழங்கினார்.

விழாவில் படத் தயாரிப்பாளரும் நடிகருமான சதீஷ், விஜய் மக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் ஆனந்த், விஜய் ரசிகர் மன்றத்தின் மாநிலத் தலைவர் ரவிராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் கல்லூரி மாணவிகள் உள்பட ஏராளமான ரசிகர்கள் பங்கேற்றனர்.