அரசியலா... ம்ம்... அப்புறம் பதில் சொல்லட்டா? - சினேகா


அரசியலா... நானா... ம்ம்... நான் கருத்து சொல்லி என்ன ஆகப் போவுது... அப்புறமா இதைப்பத்தி பேசலாமா?

-அரசியல் பிரவேசம் செய்யும் திட்டமுள்ளதாமே என்ற நிருபர்களின் கேள்விக்கு புன்னகை இளவரசி சினேகா அளித்த பதில் இது.

மதுரை அண்ணாநகரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஒரு புதிய மருத்துவ மையத்தை நடிகை சினேகா இன்று, ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

அவர் இந்த விழாவுக்கு வருகிறார் என்பதை அறிந்து ஏராளமான ரசிகர்கள் குவிந்துவிட்டனர். வழக்கம் போல சினேகா இவர்கள் பிடியில் மாட்டிக் கொள்ளவிருந்தார். ஆனால் அதற்குள் போலீசார் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து அவரை அழைத்துச் சென்றனர்.

பின்னர் நடிகை சினேகா நிருபர்களிடம் கூறுகையில், "மருத்துவ உலகில் ஓமியோபதி மருத்துவம் ஒரு சிறந்த மருத்துவ முறையாகும். ஆபரேசன் இல்லாமல் ஓமியோபதி மருந்துகள் மூலம் நோயை குணப்படுத்தலாம். இந்தியாவில் தகுதி வாய்ந்த மருந்துகள் ஓமியோபதியில் உள்ளன. மனிதர்களுக்கு ஓமியோபதி மருத்துவம் ஒரு வரபிரசாதமாக அமைந்துள்ளது," என்று ஒரு லெக்சரே கொடுத்துவிட்டார்.

முரட்டுக் காளை படத்தில் நடிப்பதற்காக மதுரைக்கு வந்த அவரை, இந்த திறப்பு விழாவுக்கு கூப்பிட்டதும் உடனே ஒப்புக்கொண்டாராம்.

தமிழில் விடியல் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருவதாகச் சொன்னவரிடம், "நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் ஆகிறது. உங்களுக்குப் பின் வந்த சிலர் கூட அரசியல் பிரவேசத்துக்கு நாள் பார்க்கிறார்கள். உங்கள் ஐடியா என்ன? அரசியலில் குதிப்பீர்களா?" என்று கேட்க, அப்படியே 'ஷாக்' ஆகி நின்றுவிட்டார்!

உடனே சுதாரித்துக் கொண்டவர், "ஏங்க என்னை வம்புல மாட்டிவிடற ஐடியாவிலதான் வந்திருக்கீங்களா... படப்பிடிப்பு இடைவேளைல சும்மா வந்து போகலாமேன்னு வந்தேன். உண்மையில் எனக்கு அரசியல் பத்தி எந்த ஐடியாவும் இல்ல. இதில் நான் அரசியலுக்கு எங்கே வரப் போகிறேன். இருந்தாலும், இதுக்கு இப்போ பதில் சொல்வது சரியா இருக்காது. ம்ம்... கொஞ்ச நாள் போகட்டும்," என்றார்.

நீங்களுமா சினேகா!
 

'என்ஜாய் யுவர் லைப்' படத்துக்காக ஆடையிழக்க வித்யா பாலன் முடிவு?


ஏக்தா கபூரின் தி டர்டி பிக்சரி்ல் படுகவர்ச்சியாக நடிக்கும் வித்யா பாலன் தனது அடுத்த படத்தில் நிர்வாணமாக நடிக்கிறார் என்று சூடான தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில் நடிப்பில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள வித்யா பாலன் தற்போது சில்க் ஸ்மிதா வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் தி டர்டி பிக்சர் படத்தில் நடித்து வருகிறார். அதில் அவர் படுகவர்ச்சியாக தோன்றுகிறார். அவரது தூக்கலான கவர்ச்சிப் படங்கள் வெளியாகி பெரும் ரவுண்டு அடித்துக் கொண்டுள்ளன.

துஷார் கபூருடன் நெருக்கமான காட்சிகள், முத்தக் காட்சி என பல சூடேற்றும் விஷயங்கள் படத்தில் நிரம்பியுள்ளனவாம். இந்நிலையில் வித்யா தனது அடுத்து படமான என்ஜாய் யுவர் லைபில் முற்றும் துறந்து நிர்வாணமாக வரப் போகிறார் என்று கூறப்படுகிறது. மேலும் அந்த படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டமும் போடுகிறாராம். இந்த படத்தில் அமிதாப் பச்சனும் நடிக்கிறார்.

தி டர்டி பிக்சர் டிரெய்லரைப் பார்த்து அவருக்கு தென்னிந்தியாவில் இருந்து வாய்ப்புகள் குவிகிறதாம்.

வித்யா காட்டில் இப்போது 'கவர்ச்சிப் பேய் மழை'யாக காணப்படுவதால், மற்ற ஹீரோயின்கள் எல்லாம் சற்றே பீதியுடன் உள்ளனராம், எங்கே வித்யாவின் கவர்ச்சிக் காற்றில் தாங்கள் துரத்தப்பட்டு விடுவோமோ என்று...!
 

விஜய் படத்தில் அனுஷ்கா, எமி ஜாக்சன்!


விஜய் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க அனுஷ்கா மற்றும் எமி ஜாக்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெய்வத் திருமகள் படத்துக்குப் பிறகு இயக்குனர் விஜய் ஒரு ஆக்ஷன் திரில்லர் படம் எடுக்கிறார். இதில் கதாநாயகனாக நடிக்கவிருப்பவர் சீயான் விக்ரம். இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள். விஜய்யுடன் ஏற்கனவே பணிபுரிந்துள்ள அனுஷ்கா மற்றும் எமி ஜாக்சன் தான் அந்த நாயகிகள்.

அனுஷ்கா விஜய்யின் தெய்வத் திருமகளிலும், எமி ஜாக்சன் மதரசாபட்டினத்திலும் நடித்துள்ளனர். எமி ஜாக்சனை தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் விஜய்தான்.

இந்த படம் ஹாலிவுட் படமான 'பார்ன் ஐடென்டிட்டி'யைத் தழுவி எடுக்கப்படுவதாகத் தெரிகிறது. தெய்வத் திருமகளும் 'ஐயாம் சாம்' படத்தின் தழுவல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் பெரும்பாலான பகுதி வெளிநாட்டில் படமாக்கப்படவுள்ளது. எனவே லொகேஷன் பார்ப்பதற்காக விஜய் அமெரிக்கா சென்றுள்ளார்.

கமலுடன் விஸ்வரூபம் படத்தில் எமி நடிக்கப்போவதாக கூறப்படும் நிலையில், விக்ரம் படத்திலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

'என் மீது தவறில்லை...'- கமிஷனிரிடம் ராம நாராயணன் பதில் மனு


சென்னை: தயாரிப்பாளர் சங்கத்தில் ரூ 1.80 ஊழல் நடந்ததாக எழுந்துள்ள புகாருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர் என் பெயரை இழுக்கிறார்கள் என முன்னாள் தலைவர் இயக்குநர் ராம நாராயணன் போலீஸ் கமிஷனரிடம் பதில் மனு அளித்துள்ளார்.

கேபிள் டி.வி.களுக்கு சினிமா பாடல்கள், நகைச்சுவை காட்சிகள் ஒளிபரப்ப அனுமதி வழங்கியதில் தயாரிப்பாளர் சங்கத்தில் ரூ.1 கோடியே 80 லட்சம் ஊழல் நடந்துள்ளதாக போலீஸ் கமிஷனரிடம் 60 தயாரிப்பாளர்கள் நேற்று மனு கொடுத்தனர்.

இதற்கு பதில் அளித்து தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் தலைவர் ராமநாராயணன் போலீஸ் கமிஷனரிடம் அளித்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக கேபிள் தொலைக்காட்சிகளுக்கு திரைப்படப் பாடல்கள் மற்றும் காட்சிகள் விநியோக உரிமை கொடுப்பது குறித்து ஒரு புகார் மனு தங்களிடம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொறுப்புத் தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன் மற்றும் சில தயாரிப்பாளர்கள் அளித்ததாக தொலைக்காட்சி செய்தி வாயிலாக தெரிந்து கொண்டேன்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக கடந்த 2007 முதல் 2011 மே மாதம் வரை பொறுப்பிலிருந்தேன். அந்த சமயத்தில் எந்தவித முறைகேடும் எனக்கு தெரிந்த வரையில் நடைபெறவில்லை என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 11.09.2011 அன்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அண்ணா சாலை, பிலிம் சேம்பர் கட்டிடத்தில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் இந்த விவரம் குறித்து (கேபிள் டி.வி. விநியோக உரிமம்) உறுப்பினர்கள் விவாதித்தனர்.

அதற்கு பதில் அளித்து பேசிய எஸ்.ஏ. சந்திரசேகரன் என்னை குறிப்பிட்டு சொல்லும் போது இராம.நாராயணன் எந்தவித முறைகேடும் செய்யவில்லை. அவர் நல்லவர் என்று விளக்கம் அளித்துள்ளார். அது பதிவாகி உள்ளது. மேலும் நான் தலைவர் பொறுப்பில் இருந்த போது அவர் துணைத் தலைவராக இருந்தார்.

ஆகவே நான் எந்த முறைகேடும் செய்யவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது வேண்டுமென்றே பொய்ப் புகார்கள் தெரிவிப்பவர்கள் மீது நான் தகுந்த சட்டரீதியான நடவடிக்கைகளை மேற் கொண்டு என்னை சட்டத்தின் துணைக் கொண்டு தற்காத்துக் கொள்வேன் என்பதனை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

என் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர் என் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளனர். நான் குற்றமற்றவன் என்பதனை தாங்கள் தீர விசாரித்து முடிவு எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

-இவ்வாறு ராம நாராயணன் கூறியுள்ளார்.
 

ரஜினி கையால் அடி வாங்க வேண்டும்! - அஜீத்தின் ஆசை


தமிழ் சினிமாவின் துரோணாச்சாரியார் ரஜினி... ஒரு படத்திலாவது ரஜினிக்கு வில்லனாகி அவர் கையால் அடிவாங்க ஆசை! - அஜீத்

ஒரு படத்திலாவது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாகி, அவர் கையால் அடிவாங்க வேண்டும். அன்றுதான் என் சினிமா பயணம் பூர்த்தியடையும், என்று நடிகர் அஜீத் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் மிகப்பெரிய ரசிகர், ரஜினியை கடவுளாகவே போற்றுபவர் நடிகர் அஜீத். ரஜினியைப் போலவே சினிமாவில் தனக்கென தனித்த கொள்கைகளை வைத்திருப்பவர்.

அவரது இந்த அணுகுமுறை புதிதாக ஏராளமான ரசிகர்களை ஈர்த்துள்ளது, குறிப்பாக ரஜினி ரசிகர்களை. ரஜினிக்கு அடுத்து அஜீத்தை அவர்கள் அதிகம் விரும்புவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அஜீத் அளித்துள்ள பேட்டி, அவர் எந்த அளவு ரஜினியை நேசிக்கிறார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

உங்கள் அடுத்த ஆசை என்ன அஜீத்திடம் கேட்டதற்கு அவர் இப்படிக் கூறியுள்ளார்:

எனக்கு நம்பர் ஒன், நம்பர் டூவில் ஈடுபாடில்லை. அந்த எண்ணங்களும் இப்போது மனதில் இல்லை. தமிழ் சினிமாவின் துரோணாச்சாரியாராகத்தான் ரஜினி சாரைப் பார்க்கிறேன். அர்ஜுனனாக மக்கள் யாரை ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் கவலை இல்லை. நான் ஏகலைவன் போலவே இருக்க ஆசைப்படுகிறேன்.

சூப்பர் ஸ்டாரை நான் தூரத்திலிருந்து பார்த்து ரசித்தபடி படங்கள் பண்ண ஆசைப்படுகிறேன்.

ரஜினி சார் நடிக்க வேண்டும். அவர் படத்தில் நான் வில்லனாக நடிக்க வேண்டும். அவர் கையால் நான் அடி வாங்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இது என்றைக்கு நடக்கிறதோ, அன்று என் சினிமா பயணம் ஒரு முழுமையடைந்ததாக சந்தோஷப்படுவேன். இதுதான் என் லட்சியம். மங்காத்தாவின் மாபெரும் வெற்றியை ரஜினி சாருக்கு சமர்ப்பிக்கிறேன்!"
 

மங்காத்தா நடிகரை லவ்வும் டாப்ஸி?


மங்காத்தா படத்தில் அறிமுகமான நடிகர் மகத்தும் ஆடுகளம் நாயகி டாப்ஸியும் காதலில் விழுந்துள்ளதாக கோடம்பாக்கம் கிசுகிசுக்க ஆரம்பித்துள்ளது.

பொதுவாக கிசுகிசுக்கள் நடிகர்களாலேயே கிளப்பிவிடப்படுவது வழக்கம். அதுவும் வளரும் நடிகர்கள் என்றால், தாங்களே கிசுகிசுக்களை மீடியாவுக்கு 'எடுத்துக் கொடுப்பது' தமிழ் சினிமாவில் சமீப காலமாக அதிகரித்துள்ளது.

பிரபலமான ஹீரோயினுடன் இணைத்து இளம் நடிகர்கள் கிசு கிசு பரப்புவார்கள். அது கொஞ்ச நாளைக்கு மீடியாவில் அவர்களை உயிர்ப்புடன் காட்டும். சில நடிகைகளும் இதைச் செய்வது வழக்கம்.

ஆடுகளம் என்ற படத்தில் அறிமுகமாகி, இப்போது வந்தான் வென்றானில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்துள்ள டாப்ஸிக்கும், மங்காத்தாவில் ஒரு கேரக்டர் ரோலில் வந்துள்ள சிம்புவின் நண்பர் மகத்துக்கும் காதல் ஏற்பட்டுள்ளதாக கிசுகிசு பரவி வருகிறது.

தயாரிப்பாளர் தயாநிதி அழகிரிக்கும் நெருங்கிய நண்பர் மகத். தயாநிதிதான் இவரகை நடிகராக்க பலமாக சிபாரிசு செய்தவர்.

டாப்சியும் மகத்தும் ஓட்டல்களில் அடிக்கடி காணப்படுவதாகவும், டாப்ஸியின் படப்பிடிப்பில் மகத்தையும் பார்க்க முடிவதாகவும் கூறுகிறார்கள். டாப்ஸிக்கு மகத்தான் தமிழ் கற்றுக் கொடுக்கிறாராம்.

இந்தத் தகவல்கள் மீடியாவுக்கு கிடைத்தது யார் மூலம் என்புது தெரிந்தால், இந்த கிசுகிசு எந்த அளவுக்கு நிஜம் என்பது தெரிந்துவிடும் என்கிறார்கள் அனுபவம் வாய்ந்த நிருபர்கள்! தகவல் கொடுத்தது மகத்தா... டாப்ஸியா?
 

தடைக்கு கடும் எதிர்ப்பு: நிகிதாவுக்கு குவிகிறது ஆதரவு!


பெங்களூர்: தர்ஷன் குடும்பப் பிரச்சினையைக் காரணம் காட்டி கன்னட சினிமாவில் 3 ஆண்டுகள் நடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிகிதாவுக்கு கன்னட, தெலுங்கு சினிமா உலகில் ஆதரவு பெருகுகிறது.

நடிகர் தர்ஷனுடன் நிகிதா தகாத உறவு வைத்திருப்பதாக அவரது மனைவி விஜயலட்சுமி குற்றம் சாட்டினார்.

இதனால் தர்ஷன் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து நிகிதா மீத தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் தஷ்ஷனுடன் தவறான தொடர்பு இல்லை என்று நிகிதா மறுத்துள்ளார்.

தடை காரணமாக நிகிதாவுக்கு படங்களில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவர் கைவசம் தற்போது 3 கன்னட படங்கள் உள்ளன.

பெருகும் ஆதரவு

தயாரிப்பாளர்களின் இந்தத் தடையை கன்னடப் பட உலக இயக்குநர்கள், பிலிம்சேம்பர் நிர்வாகிகள் மற்றும் நடிகர்கள் எதிர்த்துள்ளனர்.

நிகிதாவுக்கு விதிக்கப்பட்ட தடை அநீதியானது, தேவையற்றது, சட்டவிரோதமானது என கூறியுள்ளனர்.

கன்னட திரையுலகின் மற்ற பல சங்கங்களும் இந்த முடிவைக் கண்டித்துள்ளன.

நடிகை தாரா

சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை தாரா கூறும் போது, "நிகிதா மீது கடும் நடவடிக்கை எடுத்து இருப்பது துரதிர்ஷ்டவசமானது. இப்பிரச்சினை குறித்து தீவிர ஆலோசனை நடத்தாமல் தடை விதித்துள்ளனர். இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்," என்றார்.

கன்னட இயக்குனர்கள் சங்கமும் நிகிதாவுக்கு தடை விதித்ததை எதிர்த்துள்ளது.

அச்சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.ரமேஷ் கூறுகையில், "நிகிதாவுக்கு அளிக்கப்பட்ட தண்டனை அநீதியானது, தேவையற்றது. தடை விதிக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படவில்லை. யாரோ சிலரின் தனிப்பட்ட விரோதம் இதில் தெரிகிறது," என்றார்.

நிகிதா நடிக்கும் 'காட்டான் பெட்' படத்தை இயக்கி வரும் ஓம்பிரகாஷ்ராவ் கூறும் போது, "தயாரிப்பாளர் சங்கத்தின் தடை உத்தரவுக்கு நான் அடிபணிய மாட்டேன். நிகிதாவை வைத்து படத்தை இயக்குவேன்," என்றார்.

ஜெயமாலா எதிர்ப்பு

தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர்கள் கிரிஷ்கேசர வல்லி, சுரேஷ், நடிகை ஜெயமாலா, கன்னட தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் சந்தேஷ் நாகராஜ் ஆகியோரும் நிகிதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தனிப்பட்ட குடும்பப் பிரச்சினைக்காக ஒரு பிரபல நடிகையின் திரைவாழ்க்கையை முடக்குவதை அனுமதிக்க முடியாது என நடிகை ஜெயமாலா தெரிவித்துள்ளார்.
 

ஷூட்டிங் இல்லைனா குளு, குளு இடங்களுக்கு ஓடிவிடுவேன்: விஜயலட்சுமி


படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஏதாவது குளிர்ச்சியான இடங்களுக்குச் சென்று விடுவேன் என்று நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

சென்னை 28 படம் மூலம் பிரபலமானவர் இயக்குனர் அகத்தியன் மகள் விஜயலட்சுமி. அவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சேர்ந்து சுல்தான் தி வாரியர் படத்தில் நடித்துள்ளார். ரஜினியுடன் நடித்துள்ளதால் அவர் தலை, கால் புரியாமல் உள்ளார்.

அட, இது கனவா, நனவா. நிஜமாகவே நான் தான் ரஜினியுடன் நடித்தேனா என்று வியக்கிறார். ரஜினியுடன் நடிப்பேன் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்தில்லை என்றும், இந்த அனுபவத்தை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் அவர் மனதைக் கொள்ளை கொண்ட நடிகர் ஐஸ்வர்யா ராய் கணவர் அபிஷேக் பச்சனாம்.

சரி படப்பிடிப்பு இல்லையென்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, உடனே மூட்டை, முடிச்சை கட்டிக்கிட்டு ஏதாவது குளிர்ச்சியான இடத்திற்கு சென்றுவிடுவேன் என்றார். கேரளா போட் ஹவுஸ் என்றால் அவருக்கு அவ்வளவு பிடிக்குமாம்.

மனதுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியான இடங்களுக்கு செல்வது என்றால் அவருக்கு ரொம்ப இஷ்டமாம்!
 

ஒஸ்தியில் சிம்புவுடன் மல்லிகா ஷெராவத் குத்தாட்டம்!


தபாங்கின் தமிழ் ரீமேக் ஒஸ்தியில் சிலம்பரசனுடன் குத்தாட்டம் போடுகிறார் நடிகை மல்லிகா ஷெராவத்.

தபாங் படத்தில் ரொம்பப் பிரபலமான குத்தாட்டப் பாட்டு 'முன்னி பத்னம்...' இந்தப் பாடலுக்கு யாரை ஆட வைக்கலாம் என்பதில் சிண்டைப் பிய்த்துக் கொண்டனர் இயக்குநர் தரணியும் சிம்புவும்.

நயன்தாராவை ஆட வைக்க எவ்வளவோ முயன்றனர். பெரும் தொகையை சம்பளமாகத் தர முன்வந்தும் அவர் இந்த ஆஃபரை ஒப்புக் கொள்ளவே இல்லை.

அடுத்து கத்ரீனா, ஸ்ரேயா, ரீமான உள்ளிட்ட பலரையும் முயற்சி செய்து பார்த்தனர். ஒன்றும் படியவில்லை. இந்த நிலையில் மல்லிகா ஷெராவத் இந்தப் பாடலுக்கு ஆட ஒப்புக் கொண்டுள்ளார்.

தமிழில் அவர் கடைசியாக நடித்தது கமல் ஹாஸனின் தசாவதாரம் படத்தில்தான். அதற்குப் பிறகு இந்த ஒற்றைப் பாடலுக்கு ஒப்புக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து சிம்பு கூறுகையில், "ஒஸ்தி படத்தில் வரும் அந்த முக்கியமான பாடலுக்கு மல்லிகா ஷெராவத் ஆட ஒப்புக் கொண்டுள்ளார். ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் அந்தப் பாடலை எடுக்கிறோம். படம் தீபாவளி ரிலீஸ்..." என்று தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
 

அஜீத் - சிம்பு - வெங்கட்பிரபு... அடுத்த 'ஆட்டத்துக்கு' ரெடி?



மங்காத்தா வெற்றி தந்த உற்சாகத்தில் சத்தமில்லாமல் அடுத்த ஆட்டத்துக்கு தயாராகிறார் அஜீத்.

தொடர்ந்து தோல்விகள் கொடுத்தாலும் துவளாத மார்க்கெட் அஜீத்துக்கு. ஏகன், அசல் என தொடர் தோல்விகள் கொடுத்த பிறகும் கூட அவரை இயக்க இயக்குநர்கள் மத்தியில் பெரும் போட்டி இருந்தது. இந்த நிலையில் மங்காத்தா வெற்றி பெற்றிருப்பதால், அஜீத்தின் வழக்கமான இயக்குநர்கள் தவிர, வேறு சிலரும் பக்கா ஸ்கிரிப்டோடு அஜீத்தின் அப்பாயின்ட்மெண்டுக்கு காத்திருக்கிறார்களாம்.

ஆனால் அஜீத்தின் இப்போதைய சாய்ஸ் மூன்று பேர். அவரது ஆஸ்தான இயக்குநர் எனப்படும் விஷ்ணு வர்தன், ஆஸ்தான இயக்குநர் பட்டியலில் புதிதாக சேர்ந்திருக்கும் வெங்கட் பிரபு, கிரீடம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஏ எல் விஜய்!

இந்த மூவருக்குமே அடுத்தடுத்து படம் செய்ய விருப்பம் உள்ளதாக நேற்று முன்தினம் ஒரு ஆங்கில தினசரிக்கு அளித்த பேட்டியில் விஜய் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில், ஏ எம் ரத்னம் தயாரிப்பில் அஜீத் ஒரு படம் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாகவும் இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்குவார் என்றும் முதல்கட்ட செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் விசேஷம், அஜீத்தின் தீவிர ரசிகன் என்று சொல்லிக் கொள்கிற சிம்பு முதல் முறையாக அவருடன் சேர்ந்து நடிக்கப் போவதுதானாம்.

பெரிய பட்ஜெட்டில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஏஎம் ரத்னத்துடன் இணைந்து மும்பை கார்ப்பொரேட் நிறுவனம் ஒன்று தயாரிக்கிறதாம்.

செய்தியை உறுதிப்படுத்துவது போல, இத்தனை நாள் சோம்பிக் கிடந்த ஏஎம் ரத்னத்தின் சூர்யா மூவீஸ் அலுவலகம் மகா சுறுசுறுப்படைந்துள்ளதாம்.

இதுகுறித்து விசாரிக்க ஏஎம் ரத்னத்தை நாம் தொடர்பு கொண்டோம். அவர் கூறுகையில், "எதுபற்றியும் இப்போது பேசுவது சரியாக இருக்காது. பேசிக் கொண்டிருக்கிறோம். உறுதியானதும் பின்னர் பேசுகிறேன். ஆனால் ஒன்று, இத்தனை நாளும் அமைதியாக இருந்ததற்கு வட்டியும் முதலுமாக சேர்த்து சூர்யா மூவீஸ் பேனரில் படங்கள் இனி வரும்," என்றார்.
 

ஜெனிலியாவா-ஹன்சிகாவா? - வோலாயுதம் படப்பிடிப்பில் மோதல்!


 

'முன்னிலும் வேகத்தோடு தயாராகிறார் ரஜினி' - தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர்


சென்னை: ராணா படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. இதற்காக முன்னிலும் வேகத்தோடு தயாராகிக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த், என்று தகவல் வெளியிட்டுள்ளார் படத்தின் இணை தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர்.

ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடிக்கும் ராணா படம் கடந்த ஏப்ரல் 29-ம் தேதி தொடங்கப்பட்டது. அன்றுதான் ரஜினிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

சுமார் ஒரு மாத காலம் சென்னை இசபெல்லா மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற அவர், பின்னர் சிங்கப்பூரில் உயர் சிகிச்சைப் பெற்று திரும்பியுள்ளார்.

போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டிலும், ஆழ்வார்பேட்டையில் உள்ள மகள் ஐஸ்வர்யா வீட்டிலும் ரஜினி இப்போது ஓய்வு எடுத்து வருகிறார். அவ்வப்போது ராணா் படம் தொடர்பான பணிகளில் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாருடன் இணைந்து கவனித்து வருகிறார்.

இந்தப் படத்துக்காக, கவிஞர் வைரமுத்து 3 பாடல்களை எழுதியிருக்கிறார். அந்த பாடல்கள், ஏ.ஆர்.ரகுமான் இசையில் பதிவு செய்யப்பட்டு விட்டன. ரஜினி இவற்றைக் கேட்டு ஒப்புதல் அளித்துவிட்டார். இப்போது அவை மாஸ்டரிங் செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், வரும் அக்டோபரில் ராணா தொடங்கும் என ரஜினியின் மகள் சௌந்தர்யா தெரிவித்திருந்தார்.

இப்போது நவம்பரில் தொடங்க இருக்கிறது என்று அதன் இணைத் தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "ரஜினி சார் எல்லா வகையிலும் முழுமையாக தயாரான பிறகுதான் படப்பிடிப்பு என்பதில் உறுதியாக உள்ளோம். இப்போது அவர் முன்பை விட ஆரோக்கியமாகவும் படப்பிடிப்புக்கேற்ற உடல் நலத்தோடும் உள்ளார். உடற்பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார். நவம்பரில் படப்பிடிப்பை வைத்துக் கொள்ள இப்போது முடிவு செய்யப்பட்டுள்ளது," என்றார்.
 

நடிகர் தர்ஷனின் ஜாமீன் மனு தள்ளுபடி


மனைவியை கொடுமைப்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ள கன்னட நடிகர் தர்ஷனின் ஜாமீன் மனுவை பெங்களூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கன்னட நடிகர் தர்ஷன் தனது மனைவி விஜயலக்ஷ்மியை சிகரெட்டால் சுட்டும், துப்பாகியின் கைபிடியால் தலையில் அடித்தும், கொலை செய்யப்போவதாக மிரட்டியும் கொடுமைப்படுத்தியதாக கூறப்பட்டது. இதையடுத்து விஜயலக்ஷ்மி போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின்பேரி்ல் விஜயநகர் போலீசார் தர்ஷனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறையில் தர்ஷனுக்கு மூச்சுத் திணறல், மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதையடுத்து ராஜீவ்காந்தி இருதய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பெங்களூர் 1-வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் தர்ஷன் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது தர்ஷன் மனைவி நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் தர்ஷன் தன்னைத் தாக்கவில்லை என்றும், பாத்ரூமில் வழுக்கி விழுந்து காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட் தர்ஷனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
 

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ரூ.1.80 கோடி ஊழல்... போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார்!


சென்னை: கேபிள் டி.வி.களுக்கு சினிமா பாடல்கள், நகைச்சுவை காட்சிகள் ஒளிபரப்ப அனுமதி வழங்கியதில், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ரூ.1 கோடியே 80 லட்சம் ஊழல் நடந்துள்ளதாக நேற்று போலீஸ் கமிஷனரிடம் 60 தயாரிப்பாளர்கள்

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொறுப்புத் தலைவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையில் நேற்று மாலை ஏராளமான சினிமா தயாரிப்பாளர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.தாணு உள்பட சிலர் கமிஷனர் திரிபாதியை சந்தித்து பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

புகார் மனு கொடுத்துவிட்டு வெளியே வந்தவுடன் எஸ்.ஏ.சந்திரசேகரன், நிருபர்களிடம் கூறுகையில், "கடந்த மே மாதம் 13-ந் தேதி அன்று தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ராம.நாராயணன், பொதுச்செயலாளர் சிவசக்தி பாண்டியன் ஆகியோர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்கள். துணைத்தலைவர்களாக இருந்த நானும், அன்பாலயா பிரபாகரனும் பதவி விலகினோம்.

பின்னர் அனைவரது ஆதரவோடும் நான் பொறுப்பு தலைவராக பதவி ஏற்றேன். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றவுடன் சங்கத்தில் பல முறைகேடுகளும், ஊழல்களும் நடந்துள்ளதாக எனக்கு கடிதம் வாயிலாகவும், வேறு தகவல்கள் மூலமும் புகார்கள் வந்தன.

எனவே அதன் அடிப்படையில் பொதுக்குழுவை கூட்ட விரும்பினேன். கூட்ட முடியாமல் பல தடங்கல்கள் வந்தன. இறுதியாக 11-ந் தேதி அன்று சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் 230 பேர் கலந்து கொண்டனர்.

அந்த கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. நான் அவற்றை எழுத்து மூலமாக கொடுக்குமாறு கேட்டேன். அதன்படி எழுத்து மூலமாக புகார் கொடுத்துள்ளனர். 60 பேர் இந்த புகாரை கொடுத்துள்ளனர். அந்த புகார் மனு இப்போது போலீஸ் கமிஷனரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டிலிருந்து கேபிள் டி.வி.களுக்கு சினிமா பாடல்களையும், நகைச்சுவை காட்சிகளையும் ஒளிபரப்புவதில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டது.

விண் மீடியா, ஜே.கே.மீடியா ஆகிய கேபிள் டி.வி. நிறுவனங்களோடு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அந்த கேபிள் டி.வி. நிறுவனங்களிடமிருந்து வசூலித்த தொகையில் ரூ.1.80 கோடி அளவுக்கு ஊழல் மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளது. அந்த பணத்தை திரும்பவும் வசூலித்து தரும்படி கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளோம். அந்த தொகை கிடைத்தால் ஏழை-எளிய தயாரிப்பாளர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும். இதில் குற்றம்புரிந்தவர்கள் யார் என்பதை போலீசார்தான் விசாரித்து கண்டுபிடிக்க வேண்டும்.

2007-லிருந்து 2010-ம் ஆண்டுவரை 4 ஒப்பந்தங்களை மாறி மாறி போட்டுள்ளனர். விண்மீடியா, ஜே.கே.மீடியா நிர்வாகிகளை அழைத்து விசாரித்தால் உண்மை தெரிந்துவிடும்," என்றார்.

யார் குற்றவாளி?

உடனே ஒரு நிருபர், "தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள பிரச்சினையை நீங்களே பேசி தீர்க்காமல் போலீஸ் வரை வந்து புகார் கொடுத்துள்ளீர்களே?" என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சந்திரசேகரன், "அதுதொடர்பாக பேசுவதற்கு அவர்கள் யாரும் வரவில்லை. பதவியை ராஜினாமா செய்துவிட்டு போய்விட்டார்கள்," என்றார்.

"ராம.நாராயணன் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளதா?", என்று கேட்கப்பட்டதற்கு, "யார் குற்றவாளி என்பதை போலீசார்தான் விசாரித்து முடிவு செய்யவேண்டும். இந்த மாதத்தோடு கேபிள் டி.வி. உரிமையாளர்களுக்கு வழங்கிய உரிமை முடிந்துவிட்டது. தற்போது கேபிள் டி.வி.யை அரசுடைமையாக்கி முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இனிமேல் ஒப்பந்தத்தை மீறி கேபிள் டி.வி.யில் சினிமா பாடல்களையோ, நகைச்சுவை காட்சிகளையோ ஒளிபரப்பக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்," என்றார் எஸ்.ஏ.சந்திரசேகரன்.
 

இளைஞர் காங். தலைவர் பதவிக்கு 'குத்து' ரம்யா குறி!


நடிகை ரம்யா கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் பதவி்ககு குறிவைத்துள்ளார். இந்நிலையில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

நடிகை ரம்யா கடந்த ஏப்ரல் மாதம் தான் இளைஞர் காங்கிரஸில் சேர்ந்தார். இந்நிலையில் அவர் கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனுவை நேற்று சாந்திநகரில் உள்ள பூத் 3-ல் தாக்கல் செய்தார்.

வரும் அக்டோபர் மாதம் 8 மற்றும் 9 தேதிகளில் கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது. இதிலும் அவர் போட்டியிடத் திட்டமிட்டுள்ளார்.

இது குறித்து அவர் இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

நான் பூத் அளவில் தேர்வானதும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவேன். இதன் மூலம் நான் மக்களுக்கு சேவை செய்வேன். என்னால் முடிந்த வரை நான் பிரச்சனைகளை முன்வைத்து நல்ல தீர்வு கிடைக்கச் செய்வேன். நான் சுயநலவாதியன்று. உண்மையாகவே மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறேன். ஒருவருக்கு உண்மையிலேயே நாட்டு நலனில் அக்கறை இருந்தால் பிரச்சனைகளைத் தீர்க்க பாடுபட வேண்டும். நாட்டின் எதிர்காலத்தை அப்படியே விட்டுவிட நான் விரும்பவில்லை.

அதே சமயம் நான் நடிப்பதை நிறுத்த மாட்டேன். இது வேறு, அது வேறு என்றார்.

தலைவர் பதவிக்கு ரம்யாவை எதிர்த்து அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கேயின் மகன் பிரியங்க் கார்கே நிற்கிறார். ரம்யாவுக்கும் அரசியல் பின்னணி இருப்பது அவருக்கு பிளஸ் பாயிண்டாக உள்ளது. அவரது தாத்தா தான் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா என்பது குறிப்பிடத்தக்கது.
 

நடிகை விசித்ராவின் தந்தை வெட்டி கொலை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நடிகை விசித்ராவின் தந்தை வெட்டி கொலை!

9/13/2011 4:46:33 PM

நடிகை விசித்ராவின் தந்தை, சென்னை அருகே பண்ணை வீட்டில் படுகொலை செய்யப்பட்டார்.  பிரபல கவர்ச்சி நடிகை விசித்ரா. வேளச்சேரியில் வசிக்கிறார். இவரது தந்தை வில்லியம் (70). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தாய் வசந்தா (65). விசித்ராவுக்கு சொந்தமான பண்ணை வீடு ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்லம்பட்டிடையில் உள்ளது. இது திருவள்ளூர் மற்றும் ஆந்திர மாநில எல்லையில் உள்ளது.

இந்த கிராமத்தில்தான் வில்லியம் சிறு வயது முதல் வசித்து வந்தார். விசித்ரா நடிகையான பிறகுதான் பெற்றோர்  சென்னைக்கு வந்தனர். வாரத்தின் இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாளின் போது வில்லியம், வசந்தா ஆகியோர் பண்ணை வீட்டில் ஓய்வெடுப்பார்கள். விசித்ராவும் வந்து செல்வதாக தெரிகிறது. அதேபோல இரு நாட்களுக்கு முன் கணவன், மனைவி இருவரும் பண்ணை வீட்டுக்கு சென்றனர். தோட்டத்தில் உள்ள வீட்டில் கணவன், மனைவி இருவரும் தங்கினர். நேற்று இரவு அவர்கள் இருவருமே மது அருந்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதிகாலையில் பண்ணை வீட்டுக்கு 2 பேர் சென்று, கதவை தட்டியுள்ளனர்.

வில்லியம் கதவை திறந்துள்ளார். முகமூடி அணிந்து இருந்த அவர்கள், Ôநீ மட்டும் நல்லா இருக்கணுமாÕ என்று கூறி வில்லியமை சரமாரியாக வெட்டினர். ரத்தவெள்ளத்தில் விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கணவரை மீட்க போராடிய வசந்தாவை மர்ம நபர்கள் பிடித்து தள்ளினர். அதில் அவருக்கும் காயம் ஏற்பட்டது. அதிர்ச்சியில் அவர் மயங்கி விழுந்தார். பின்னர் மர்ம நபர்கள், வசந்தா அணிந்திருந்த செயின், கம்மல், மோதிரம் உள்பட 30 பவுன் நகைகளை கொள்ளையடித்து தப்பினர்.

இதுபற்றி தகவல் பரவியதும் பண்ணை வீட்டில் மக்கள் கூடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் சுங்குவார்சத்திரம் போலீசார், பண்ணை வீட்டுக்கு விரைந்தனர். வசந்தாவை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். வில்லியம் உடலை பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். ரியல் எஸ்டேட் தொழில் தகராறு அல்லது ஆந்திராவை சேர்ந்த தெரிந்தவர்கள் இந்த கொள்ளை மற்றும் கொலைகளில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

 

கிசு கிசு - ஹீரோக்கள் மீது ஆக்ஷன் குற்றம் சொன்ன நடிகர்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

ஹீரோக்கள் மீது ஆக்ஷன் குற்றம் சொன்ன நடிகர்

9/13/2011 3:49:12 PM

நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…

முரணான படத்துல தன்னை வேண்டாம்னு சொன்னவங்க பட்டியல்ல, படத்தை தயாரிச்சவரும் அடக்கம்னு பிரசன்ன ஹீரோ, அவர் முன்னாடியே குத்தம் சொன்னாரு… சொன்னாரு… அதை கேட்டு அதிர்ச்சியான தயாரிப்பு, வாய்ப்பு கொடுத்தவர் பற்றியே இப்படி சொல்றாரேனு வருத்தப்படுறாராம்… வருத்தப்படுறாராம்…

ஆக்டருங்க சங்க கூட்டம் சமீபத்துல நடத்தினாங்க. கூட்டத்துக்கு வரணும்னு அத்தனை பிரபல ஸ்டார்களுக்கும் அழைப்பு விடுத்தாங்களாம்… விடுத்தாங்களாம்… ஆனாலும் அதை யாருமே காதுல வாங்கலயாம். நிர்வாகிங்க தவிர பிரபல ஸ்டாருங்க யாருமே வராததால சங்கம் கொதிச்சி போயிருக்காம்… போயிருக்காம்… கூட்டத்துக்கு வராதவங்க மேல ஆக்ஷன் எடுக்கணும்னு ஒரு தரப்பு பேசுறாங்களாம்… பேசுறாங்களாம்…

மதுவான நடிகை கல்யாணத்துக்கு பிறகு திரும்ப நடிக்க வந்துட்டாரு. இது கணவர்குலத்துக்கு பிடிக்கலையாம்… பிடிக்கலையாம்… நடிகையோட பிடிவாதத்தால வேற வழியில்லாம சம்மதிச்சாராம்… சம்மதிச்சாராம்…

 

ஆண்ட்ரியாவால் பிரச்னையா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஆண்ட்ரியாவால் பிரச்னையா?

9/13/2011 3:48:11 PM

நந்தா கூறியது: 'வந்தான் வென்றான் படத்தில் ஜீவா, நான், டாப்ஸி என 3 பேர் இருந்தாலும் காதல் கதை அல்ல. நானும் டாப்ஸியும் சந்திக்கும் காட்சிகளே படத்தில் கிடையாது. மூன்று பேருக்கும் தனித்தனி கதை உள்ளது. இதில் தாதா வேடம் ஏற்கிறேன். அடுத்து 'வேலூர் மாவட்டம்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். இதற்காக சிறப்பு பயிற்சி பெற்றேன்.

சாரதா  ராமநாதன் இயக்கும் 'திருப்பங்கள்Õ படத்தில் ஆண்ட்ரியாவுடன் நடிக்கிறேன். செல்வராகவன் படத்திலிருந்து சில பிரச்னையால் விலகிய ஆண்ட்ரியா, உங்கள் படத்துக்கும் பிரச்னை செய்கிறாரா? என்கிறார்கள். அப்படி எந்த பிரச்னையும் செய்யவில்லை. தொழில் ரீதியாக தனது பணியை அணுகுகிறார். அதைப் பார்க்கும்போது அவர் மீது கூறப்படும் புகார்களை நம்ப முடியவில்லை.

 

சம்பள பிரச்னையால் பார்த்திபனுக்கு டூப்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சம்பள பிரச்னையால் பார்த்திபனுக்கு டூப்!

9/13/2011 3:45:15 PM

3டி படமாக உருவாகும் 'அம்புலியில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் பார்த்திபன். இப்படத்தில் சம்பள பிரச்னை ஏற்பட்டதையடுத்து டப்பிங் பேச மறுத்ததுடன், சில காட்சிகளில் நடிக்க மறுத்துவிட்டாராம் பார்த்திபன். இதனால் அக்காட்சிகளை டூப் போட்டு படமாக்கிவிட்டனர். இதற்கிடையே பார்த்திபனுக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இது பற்றி பார்த்திபனிடம் கேட்டபோது , 'எனக்கும் இயக்குனருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. 'அம்புலி படத்தை இன்னும் நான் பார்க்கவில்லை. 'வித்தகன் படத்தில் பிஸியாக இருக்கிறேன். 'வித்தகன் படத்துக்கு பிறகுதான் 'அம்புலி ரிலீஸ் ஆகும் என்றனர். அதனால்தான் இன்னும் டப்பிங் பேசவில்லை என்றார்.

'சில நாளில் பார்த¢திபன் பார்க்க படத்தை திரையிடுவோம். இப்படத்தில் பார்த்திபன் நடிக்க வேண்டிய சண்டை காட்சி சிலவற்றுக்கு டூப் பயன்படுத்தி இருக்கிறோம். இது பார்த்திபனுக்கும் தெரியும் என இயக்குனர் ஹரிஸ் கூறினார்.

 

தமிழ் படம் ஒப்புக்கொள்ளாத ஸ்ரேயா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தமிழ் படம் ஒப்புக்கொள்ளாத ஸ்ரேயா

9/13/2011 3:46:29 PM

ரஜினி உள்பட முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து கோலிவுட்டில் வலம் வந்த ஸ்ரேயா 'ரவுத்திரம்’ படத்துக்கு பிறகு புதிய தமிழ் படம் எதுவும் ஒப்புக்கொள்ளவில்லை. இது பற்றி கேட்டபோது அவர் கூறியது:  நேற்றுமுன்தினம் எனது பிறந்தநாள். இதற்காக தாம்தூம் பார்ட்டி எதுவும் நடத்தவில்லை. எளிமையாக கொண்டாடினேன். மும்பையில் அப்பா, அம்மாவுடன் பொழுதை கழித்த பிறகு நான் நடத்தும் அழகு நிலையத்துக்கு சென்றேன்.

அங்கு பார்வையற்ற பெண்கள் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு இனிப்பு வழங்கி ஜாலியாக பேசிக்கொண்டிருந்தேன். பின்னர் 'கலி கலி மே சோர் ஹேÕ இந்தி பட ஷூட்டிங்கில் கலந்துகொண்டேன். 'ரவுத்திரம்’ ரிலீசுக்கு பிறகு தமிழில் புதுபடம் எதுவும் ஒப்புக்கொள்ளவில்லை. தீபா மேத்தாவின் 'மிட்நைட்ஸ் சில்ரன், மற்றும் 'ஹீரோ ஆகிய இந்தி படங்களில் பிஸியாக இருக்கிறேன்.